புதன், 19 ஏப்ரல், 2017

பன்னீர்+ பழனி=சசிகலா +தினகரன்

 தினகரன் வெளிநாடு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதாக டில்லி காவல்துறை எண்ணுகிறது.

 கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் வெளிநாடு தப்பிச் செல்ல தினகரன் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர் மூலம் டில்லி தெரிந்து கொண்டுள்ளது. 
இதனால் அவர் தப்பிச் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தும்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் டில்லி போலீஸ் குறிப்பு  அனுப்பி உள்ளது. 
தினகரன் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் உடனடியாக தகவல் அளிக்கும்படி நோட்டீசில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினகரன் சென்னையில் ஆலோசனை நடத்தி வரும் காலத்தில் டெல்லி காவல்துறையினர் கைது செய்யாமல் தாமதித்துக்கொண்டிருப்பது ஏன்?
திருமண மண்டபங்களில் போலீசாரை தயார் நிலையில் வைக்க வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. 
ஆயுதப்படை போலீசார் தங்களின் பணி இடங்களுக்கு திரும்புமாறு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா நிறுத்தி வைத்துள்ளார். 
இன்று காலை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் தினகரன் கைதுக்காக மட்டும் இப்படி தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை 
சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது  சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு உட்பட்ட ஆயுதப்படை போலீசாரை தயார் நிலையில் வைக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஆனால் தினகரன் அணியில் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ச.ம.உறுப்பினர்களுக்கு கிலியை உருவாக்கவே இப்படி மத்திய அரசு மூலம் தடாலடி நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தினகரன் கைது செய்தால் அதிக கட்சி தொண்டர்கள் யாரேனும் போராடப்போவதில்லை.தமிழகத்தில் கொந்தளிப்பு உருவாகப் போவதும் இல்லை.
வேண்டுமானால் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படலாம்.
தினகரனை காலி  செய்யவே இரட்டை இலைக்கு லஞ்சம் குற்றசாட்டு கிளப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதா சசிகலா வழிகாட்டலின் பேரில் சுதீப் ஜெயின் ,சந்திப் சக்சேனா,பிரவின் குமார் என்று மூவரணி உள்ளது.
இவர்கள் ஜெயலலிதாவால் தேர்தல் ஆணையம் கேட்டதின் பேரில் அனுப்பப்பட்ட இ.ஆ .ப.அலுவலர்கள்.
இவர்களின் ஜெயலலிதா,சசிகலா விசுவாசம் இந்தியா அறிந்தது.
2011,2016 தேர்தல்களில் அது உலகமே கண்டுகொள்ளும்படி அமைந்தது.
இத்தேர்தல்களில் தமிழக எதிர்க்கட்சிகள்,திமுக குற்றசாட்டுகள் அனைத்தும் தலைமைத்தேர்தல் ஆணையர் கவனத்துக்கு கொண்டுபோகாமலே தமிழக தேர்தல்பணிகள் பொறுப்பு என்ற ரீதியில் அனைத்தின் மீது நடவடிக்கை எடுத்து (குப்பைக் கூடைக்கு )அனுப்பியவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் இரட்டை இலை மீது எடுக்கும் முடிவு நிசசயம் சசிகலா குடும்பத்துக்குத்தான் ஆதரவாக இருக்கும்.
ஆனால் பாஜக அரசு தலையீட்டால்தான் குழப்பம் இன்னமும் நீடிக்கிறது.அதை சரிக்கட்ட போன 50 கோடிகள்தான் தினகரன் குழுமத்தை நாட்டை விட்டே ஓடிட செய்யுமளவு அம்பாகி விட்டது.

இரு நாட்களுக்கு முன்னரே குற்றப்பத்திரிக்கை,வழக்கு பதிவு செய்யப்பட பின்னரும் தினகரன் சென்னை வந்த பின்கூட  கைது செய்யாமல் இன்னமும் பூச்சி காட்டிக்கொண்டிருப்பது அதிமுக அணியினர் தங்கள் ஆதரவாளர் ஓ.பி.எஸ் .தலைமையில் ஒன்று சேர பயத்தை உண்டாக்கத்தான்.

சசிகலா  அணியிலிருந்தவர்கள், பன்னீர்செல்வத்துடன்  இணைந்து சசிகலா  குடும்பத்தை ஒதுக்கிவிட முடிவெடுத்து அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர். 
தற்போது தினகரனுக்கு ஆதரவாக தற்போது 9 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.  பழனிசாமியின் அரசை கவிழ்க்க தினகரனுக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.
சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு சபாநாயகர் உட்பட மொத்தம் 135 எம்.எல்.ஏ.,க்கள்  உள்ளனர். 
நம்பிக்கை ஓட்டெடுப்பில் சசி தரப்பிற்கு 122 பேரும், பன்னீர் அணிக்கு 11 பேரும் ஓட்டளித்தனர். அதனால் பழனிசாமி அரசு அப்போது தப்பியது. 
தற்பதைய  கூவத்தூர்  அணி 122 எம்.எல்.ஏ.,க்களிலிருந்து 6 பேர் விலகினால் போதும், அது  பழனிசாமி ஆட்சி கவிழும் சூழல் உருவாகும். 
ஆனால் பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைந்தால், பன்னீர் அணியிலுள்ள 11 பேரும் தோள் கொடுத்து ஆட்சியை காப்பாற்றி கொள்வர். 
ஆகவே எடப்பாடி  ஆட்சியை கவிழ்க்க தினகரனுக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் தேவை .
தற்போது தினகரன் பக்கம் 9 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இன்னும் 8 பேரை தினகரன் இழுத்தால்   எடப்பாடி அரசு கவிழும். ஆனால் பதவியை காப்பாற்ற எண்ணமும் செய்யும் ,செய்யத்தயாராக உள்ள கூவத்தூர் அணியினர்  தினகரன் பக்கம்  தாவுவது சந்தேகம் .
அதிலும் டெல்லியால் தினகரன் கைதாகும் நிலை இருக்கையில் தாவ நினைப்பவர் இன்னுமொரு தேர்தலுக்கு அடிக்கல் நட்டியவராகத்தான் இருப்பார்கள்.  • ============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...