செவ்வாய், 20 நவம்பர், 2018

அமேசான் செய்த டுபாக்கூர்.

இணையதள வியாபார நிறுவங்களாகிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதாக பல குற்றசாட்டுகள் வருகின்றன.

அலைபேசி கேட்டவர்களுக்கு அமேசான் செங்கலை அனுப்பி வைப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டிருக்கிறது. 

அமேசான் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்.இந்தியர்கள் ஆரம்பித்த  பிளிப்கார்டை பன்னாட்டு அமெரிக்க நிறுவனமாகிய வால்மார்ட் கைப்பற்றியுள்ளது.
வால்மார்ட் இந்தியாவில் நுழைய  பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் 77% பங்குகளை வாங்கிக்குவித்ததால் பிளிப்கார்டை கைப்பற்றியுள்ளது.

வால்மார்ட் கையகப்படுத்திய பின்னர்தான் பிளிப்கார்ட் மீது மோசடி குற்றசாட்டுகள் அதிகரித்துள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இணையதளங்கள் ஆன்லைன் விற்பனையில் இந்திய அளவில் முன்னிலையில் உள்ளன. 


அலிபாபா இன்னமும் இந்தியாவில் கிளை உருவாக்கவில்லை.
ஆனால் சீனாவில் இருந்தே சில்லறை இணைய தள விற்பனையை "அலி எக்ஸ்பிரஸ் "என்ற தளம் மூலம் உலகம் முழுக்க செய்து வருகிறது.
"அலிபாபா'வும் மொத்தமாக பொருட்களை விற்கிறது.
உலக ளவில்  சீன அலிபாபா வும்,அமெரிக்க அமேசானும்தான் போட்டியாளர்கள்.

அமேசான்  போலி மொபைல் போன்களைத் தயாரிக்கும் டுபாக்கூர் கும்பலுடன் கைகோர்த்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது குறித்த பொதுநல மனு ஒன்றின் விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் இத்தகவல்  அளிக்கப்பட்டது. 

பிளிப்கார்ட் மீதும் மேற்கண்ட  குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெவே விசாரணையைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

========================================================================================
ஆதார் அட்டை நகல் இணையம் மூலம் பெற...,
ஆதார் அட்டையை  ஆதார் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து எளிதாக தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். 

https://eaadhaar.uidai.gov.in/ என்ற ஆதார் ஆணையத்தின் இ-ஆதார் பக்கத்திற்குச் செல்லவும். 

திறக்கும் பக்கத்தில் Aadhaar என்பதைத் தேர்வு செய்துவிட்டு, Regular Aadhaar என்பதைத் தேர்வு செய்யவும். 

ஆதார் எண், ஆதாரில் உள்ள பெயர், பின் கோடு ஆகியவற்றை அவற்றுக்கு உரிய இடத்தில் தட்டச்சு செய்யவும்.

பின், பாதுகாப்புக் குறியீட்டு எண்களை குறிப்பிடவும். 
அலைபேசியில்  mAadhaar செயலி  வைத்திருப்பவர்கள், அடுத்து உள்ள Do you have TOTP என்பதைத் 'டிக்' செய்யலாம். 
இதன் மூலம் அலைபேசிக்கு ஒரு முறை கடவு எண்  (OTP) அனுப்பப்படுவதைத் தவிர்க்கலாம். 
அதற்குப் பதில் mAadhaar செயலியில்  மின்னணு கடவு எண்(TOTP) கிடைக்கும். 
அதை Enter TOTP என்ற இடத்தில் குறிப்பிட்டு  Download Aadhaar என்பதை அழுத்தினால் செய்தால் ஆதார் அட்டை நகலை தரவிறக்கம்  செய்துவிடலாம். 
அலைபேசியில்  mAadhaar செயலி  இல்லாதவர்கள், Do you have TOTP என்பதைத் விட்டுவிட்டு Request OTP என்ற பட்டனை அழுத்த  வேண்டும். 
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் அலைபேசிக்கு ரகசிய கடவு எண்  அனுப்பப்படும். 
அதை Enter OTP என்ற இடத்தில் குறிப்பிட்டு  செய்து, Download Aadhaar என்பாதை அழுத்தினால்  ஆதார் அட்டையை இறக்கம்   செய்துவிடலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...