வெள்ளி, 16 நவம்பர், 2018

தினகரனின் திட்டங்கள்.அல்லது சூழ்ச்சிகள்.

தமிழ்­நாட்டு அர­சி­ய­லில் அம­முகதின­க­ரன் தவிர்க்க முடி­யாத சக்­தி­யாக உரு­வாகி வரு­வது போன்ற தோற்­றம் அவரால் உருவாக்கப்­பட்டு வரு­கி­றது. 
இது மாயத்­தோற்­றம்­தான் .

சென்னை ஆர்.கே.நகர் இடைத்­தேர்­தல் வெற்­றியை மட்­டுமே உதா­ர­ண­மாக காட்டி, அதி­முக, திமு­கவை.விட­வும், அம­முக பலம் மிகுந்த கட்சி என்­பது போன்ற பிரச்­சா­ரத்தை அக்­கட்­சி­யி­னர் செய்து வரு­கி­றார்­கள்.

ஆர்.கே.நகர் இடைத்­தேர்­த­லில் தின­க­ர­னின் ஆத­ர­வா­ளர்­கள் உழைத்த கடு­மை­யான உழைப்பு அவர்­கள் ஆற்­றிய அசாத்­திய தேர்­தல் பணியை எவ­ரும் குறை சொல்ல முடி­யாது. தமிழ்­நாட்­டின் பல்­வேறு மாவட்­டங்­க­ளில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கான களப்­ப­ணி­யா­ளர்­கள் வீதி வீதி­யாக, வீடு வீடா­கச் சென்று ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும்  தத்து எடுத்­த­னர்.

குடும்­பத்­தில் ஒரு­வ­ரா­கவே மாறி தின­க­ர­னின் ஆற்­றலை (!) அருமை, பெருமை (?)களை பல­ப­டச் சொல்லி தொப்­பிச் சின்­னத்­திற்­காக விநி­யோ­கித்த பணத்­து­டன் கூடு­தல் தொகை­க­ளும், ஒரு சில இடங்­க­ளில் 20 ரூபாய் டோக்­க­னும் கொடுத்து அதி­மு­கவை இரண்­டாம் இடத்­திற்­குத் தள்ளி திமு­கவை டெபா­சிட் இழக்­கச் செய்து மாபெ­ரும்(!) வெற்­றியை ஈட்­டி­னார் தின­க­ரன்.

அதி­மு­க­வைப் பொறுத்­த­வரை கட்சி, கொடி, இரட்டை இலைச் சின்­னம் திரும்­பக் கிடைத்த மெத்­த­னத்­தி­லும், ஆளும் கட்­சி­யாக இருக்­கி­றோம் என்­கிற மிதப்­பி­லும், அந்த தேர்­த­லில் கோட்டை விட்­டு­விட்­ட­னர்.
89 எம்.எல்.ஏக்­கள் இருக்­கி­றோம், கூடு­த­லாக ஒரு எம்.எல்.ஏ.நமக்கு கிடைத்து என்ன ஆகப்­போ­கி­றது? 

தின­க­ரன் வெற்றி பெற்­றால், இ.பி.எஸ். தலை­மை­யி­லான ஆட்­சியை கவிழ்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வார் என திமு­க­வி­னர் கருதி இருப்­பார்­கள்  போலும். தலை­மை­யின் இந்த எண்­ணம் திமுக தொண்­டர்­கள் மட்­டு­மல்ல, பொது­மக்­க­ளி­ட­மும் எதி­ரொ­லித்­தன் விளை­வு­தான் திமுக படு­தோல்வி அடைந்­தது.

திமுக நினைத்­தது போலவோ, தின­க­ரன் கரு­தி­யது போலவோ எது­வுமே நடக்­க­வில்லை. இ.பி.எஸ், வெகு சாமர்­த­தி­ய­மாக சற்­றே­றக்­கு­றைய இரண்டு ஆண்டு ஆட்­சியை கொண்டு சென்று விட்­டார். காரணம் டெல்லியின் ஆசி.
அதிமுக வை கையில் வைத்துக்கொண்டு தமிழகத்தில் கால் பாதிக்க எண்ணுகிறது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி யை பொம்மை முதல்வராக வைத்துக்கொண்டு மோடி,அமித் ஷா தமிழ்நாட்டை ஆள்வதாக கூறுவது உண்மை என்றே ஆகிறது.அடிக்கடி முதல்வர் டெல்லி சென்று மோடியை ஆலோசித்து விட்டு வருவது தெரிகிறது.

மோடி ஆசியுடன் தொடர்ந்து 2021 என்ற ஆட்­சி­யின் நிறை­வுக்­கா­லம் வரை கொண்டு சென்று விடு­வார் என்­று­தான் தெரி­கி­றது.
முதல்வர் முதல் அதிமுகவினர் ஊழல்கள்,முறைகேடுகள் தொடர்பாக எதிர் கட்சிகள் ஆளுநர்,பிரதமரிடம் தரும் ஆதாரங்கள் குப்பைக்கூடைக்கே செல்கிறது.நீதிமன்றமும் சரிவர தீர்ப்பைத்தருவதில்லை.கேட்டால் சட்டப்படி எப்படியோ ,மனசாட்சிபடியே தீர்ப்பு என்று வசனம் பேசுகிறார்கள்.

தகுதி நீக்­கம் செய்­யப்­பட்ட தமது ஆத­ர­வா­ளர்­க­ளான 18 எம்.எல்.ஏக்­கள் வழக்­கில் சென்னை உயர்­நீ­தி­மன்­றத் தீர்ப்பு தமக்கு சாத­க­மாக வரும் ஆட்­சியை எப்­ப­டி­யா­வது அகற்றி விட­லாம் என தின­க­ர­னும், அவ­ரது ஆத­ரவு, எம்.எல்.ஏக்­க­ளும் நம்­பி­னர். 

ஆனால், உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­ப­தி­யும், மூன்­றா­வது நீதி­ப­தி­யும், சபா­நா­ய­கர் எடுத்த முடிவு சரி­யா­ன­து­தான் என்று தீர்ப்­ப­ளித்து விட்­ட­னர். இத­னால் 18 எம்.எல்.ஏக்­க­ளின் நிலை ‘இலவு காத்த கிளி­யாக’ ஆகி­விட்­டது.

எப்­ப­டி­யும் சபா­நா­ய­கர் எடுத்த முடிவு தவ­றா­னது என்­பதை நிரூ­பிக்க உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­ய­லாம் என்று தகுதி இழந்த எம்.எல்.ஏக்­கள் பலர் விருப்­பம் தெரி­வித்­த­னர். ஆனா­லும் கட்­சி­யின் துணைப் பொதுச் செய­லா­ள­ரான தின­க­ரன் அவர்­க­ளின் எண்­ணத்­திற்கு கருத்­திற்கு முட்­டுக்­கட்டை போட்­டு­விட்­டார்.

ஏற்­க­னவே, தலைமை நீதி­ப­தி­யின் தீர்ப்­புக்கு எதி­ராக, மூன்­றாம் நீதி­ப­திக்கு வழக்கை கொண்டு சென்று இ.பி.எஸ். தலை­மை­யி­லான ஆட்சி மேலும் ஓராண்டு தொடர வழி­வகை செய்­து­விட்­டோம். 
உச்­ச­நீ­தி­மன்­றம் சென்­றால் அங்கு வழக்­கின் தீர்ப்பு வெளி­வர இரண்­டாண்­டு­களோ, மூன்­றாண்­டு­களோ கூட ஆக­லாம். அது­வரை இவர்­கள் எளி­தாக ஆட்­சியை கொண்டு சென்­று­வி­டு­வார்­கள்.
எனவே ஆட்­சிக்கு நெருக்­கடி ஏற்­ப­டுத்­தத்­தான் இடைத்­தேர்­தல் முடிவை எடுத்­தேன் என்று தின­க­ரன், 18 எம்.எல்.ஏக்­கள் மற்­றும் கட்­சி­யின் நிர்­வா­கி­க­ளி­டம் கூறி சமா­தா­னப்­ப­டுத்தி தேர்­த­லைச் சந்­திக்க நினைக்­கி­றார்.

தின­க­ர­னின் முடிவை எட்­டி­லி­ருந்து சுமார் பத்து எம்.எல்.ஏக்­கள் ஏற்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது. இவர்­கள் முன்­ன­தா­கவே இ.பி.எஸ்–ஓ.பி.எஸ். அணி­யி­ன­ரு­டன் பேசி, தீர்ப்பு தின­க­ர­னுக்கு சாத­க­மாக வந்­தால் அர­சுக்கு ஆத­ரவு நிலை எடுத்து வந்து விடு­வது, அதி­மு­க­வில் மீண்­டும் சேர்ந்து விடு­வது என முடி­வெ­டுத்­த­தாக தெரிய வரு­கி­றது. 
அத­னால்­தான் ஐகோர்ட் தீர்ப்பு வரு­வ­தற்கு நான்கு நாட்­கள் முன்­ன­தாக 18 எம்.எல்.ஏக்­க­ளை­யும் குற்­றா­லம் ரிசார்ட்­டில் தங்க வைத்­தார் தின­க­ரன் என்­றும் பேசப்­பட்­டது. கோர்ட் முடிவு எதிர்­பார்த்­த­படி வரா­த­தால் தின­க­ரன் அப்­செட்­டில் இருக்­கி­றார்.

20 தொகு­தி­க­ளில் இடைத்­தேர்­தல் நடை­பெற்­றால், இதில் எத்­தனை தொகு­தி­க­ளில் வெற்­றி­பெற முடி­யும் என்­பது கேள்­விக்­கு­றி­யாக இருப்­ப­தால், தனித்து தேர்­தலை சந்­திக்க முடி­யாது எனக் கருதி காங்­கி­ரஸ், சி.பி.எம் – சி.பி.ஐ. மற்­றும் தலித் கட்­சி­களை முக்­கு­லத்­தோர் கட்­சி­களை ஒருங்­கி­ணைத்து தேர்­த­லைச் சந்­திக்க காய் நகர்­ததி வரு­கி­ற­ராம்.

இன்­னொரு பக்­கம் இபி­எஸ் – ஓபி­எஸ், தங்­க­மணி, வேலு­மணி, ஜெயக்­கு­மார்,  திண்­டுக்­கல் சீனி­வா­சன் ஆகிய ஆறு அமைச்­சர்­களை நீக்­கி­விட்டு, செங்­கோட்­டை­யன் தலை­மை­யில் ஆட்சி நடக்­கட்­டும், அம­மு­கவை அதி­மு­க­வில் இணைத்து ஒன்­று­பட்ட கட்­சி­யின் நிர்­வா­கத்தை நாங்­கள் (தின­க­ரன் – சசி­கலா) கவ­னிக்­கி­றோம். செங்­கோட்­டை­யன் தலை­மை­யில் ஆட்சி நடக்­கட்­டும் என டில்லி பா.ஜ. தலை­மை­யின் உத­வி­யோடு ரக­சிய பேச்­சுக்­கள் நடக்­கி­ற­தாம். 

அர­சி­ய­லில் பல அதி­ர­டி­களை அவ்­வப்­போது நிகழ்த்தி வரும், பா.ஜ.கவின் மூத்த தலை­வர்­க­ளில்  ஒரு­வ­ரும் ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ரு­மான முக்­கிய பிர­மு­கர்­தான் மீடி­யேட்­ட­ராக இருந்து இந்­தப் பணி­களை செய்­கி­றா­ராம். தின­க­ரன் திட்­டம் நிறை­வே­றுமா?     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...