புதன், 14 நவம்பர், 2018

விஜய் சர்காரும் , எடப்பாடி அரசும்.

 தன்னை எதிர்த்து போராடிய அதிமுகவை கடுப்பேற்றவே  கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வைத்து பட வெற்றி விருந்து  கொண்டாடியது, மற்றும் தனது ஆதரவாளர்கள் மூலம் அடுத்து ‘சர்கார் 2’ படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று வெறுப்பேற்றியதற்கு உடனடி பதிலடி தர  விஜய்யின் கல்யாண மண்டபங்கள், சென்னையிலுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை  சட்டரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. அரசு. 
தனது படங்களில் நீதி, நேர்மை குறித்து ஆவேசமாக வசனம் பேசி நடிக்கும் விஜய் பொது வாழ்வில் நேர்மையற்றவர். முறைகேடா கருப்பு-வெள்ளைகளில் கோடிகளை சம்பளமாகப்பெறுபவர்.
நடிகர் விஜய்
 திருமண மண்டபங்களில் ஒன்று.

படங்களுக்கு வாங்கும் சம்பளங்களில் முக்கால்வாசியை கருப்புப் பணமாகத்தான் வாங்குகிறார் என்று மேடைகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் ஏற்கனவே முழங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக அவரை ஆதாரபூர்வமாக தோலுரிக்க வேண்டும் என்று அமைச்சர்களுடன் கூடி முடிவெடுத்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி. 
‘சர்கார்’ பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது என்று தாங்களே இறங்கிவந்து அறிவித்த பிறகும் விஜய் தரப்பு அடங்கவில்லை என்று அ.தி.மு.க. தரப்பு கடுப்பானதை ஒட்டியே இந்த நடவடிக்கை துவங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன்படி முதல் சிக்கலுக்கு ஆளாகியிருப்பவை விஜய்யின் திருமண மண்டபங்கள். விஜய் வெளிப்படையாக சென்னையில் முறையே வடபழனி குமரன் காலனி, அருணாச்சலம் சாலை மற்றும் போரூர் பகுதிகளில் மூன்று திருமண மண்டபங்கள் வைத்திருக்கிறார். 
இவை விஜய், அவரது அம்மா ஷோபா மற்றும் அவரது மனைவி சங்கீதா பெயர்களில் உள்ளன. 
இவற்றுக்கு முறையான பத்திரப்பதிவுகள் உள்ளதா, மாநகராட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா வேறென்ன வில்லங்கங்கள் உள்ளன என்று முதல் குடைச்சலைத் துவங்கியிருக்கிறார்கள். 
ஷோபா                                                            சங்கீதா 

அடுத்த கட்டமாக வடபழனி சாலிகிராமம் பகுதியில் உள்ள 24 மாடி குடிருப்பு ஒன்றின் முதல் 12 மாடிகள் விஜய் பெயரிலும் மீதி 12 மாடிகள் அவரது தந்தை எஸ்.ஏ.சி.பெயரிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 
இக்கட்டிடத்திற்கு முறையான மாநகராட்சி அனுமதி பெறப்படவில்லை என்று தெரிகிறது. 
இக்கட்டிடம் தொடர்பான முறைகேடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தோண்டி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோக படங்களுக்கு விஜய் வாங்கும் சம்பளம். அதில் வாங்கும் கருப்புப் பணங்களை எப்படி முதலீடு செய்கிறார். 
இன்று வரை பிரிடிஷ் குடியுரிமை வைத்துக்கொண்டுள்ள விஜய் மனைவி சங்கீதா வெளிநாடுகளில்  என்னென்ன தொழில் செய்கிறார், அவற்றுக்கு ரிசர்வ வங்கி அனுமதி உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விஜயை நெருக்கி அவரது இமேஜை மக்கள் மத்தியில் காலி பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். 
கமல்ஹாசன் தனது கணக்கு வழக்குகளை சரியாக வைத்துள்ளார்.கருப்புப்பணத்தில் சம்பளத்தை அவர் பெற  மறுப்பதினாலேயே  அவரது ஊதியம் நடிகர்கள் ரஜினிகாந்த் ,விஜய்,அஜித்குமார் ஆகியோரை விட குறைவாகவே உள்ளது .அதனால் அவரை மத்திய பாஜக,மாநில அதிமுக அரசுகள் கமல்ஹாசன் மீது வருமானம்,சொத்து தொடர்பாக மிரட்டி அடக்கி வைக்க முடியவில்லை.
ஆனால் நடிகர் விஜய் மற்ற பிரபல நடிகர்கள் போலவே கருப்பு,வெள்ளை கலவையில் பல கோடிகள் சம்பளம் பெறுகிறார்.அவரை மிரட்டி ஒடுக்குவது எளிது என்பதே எடப்பாடி பழனிச்சாமி என்னாமாம்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் விஜய் படங்களில் மட்டுமல்ல கனவிலும் கூட அவருக்கு அரசியல் ஆசை வரக்கூடாது என்று கொக்கரிக்கிறது  அ.தி.மு.க. வட்டாரம்.
இன்று கலைஞர் மறைந்த நூறாவது நாள் நினைவு நிகழ்வு.

பங்குத்தகராறு.
திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்கள் பணி நியமனத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளின் பரிந்துரை நிராகரிக்கப்பட்ட விவகாரம் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று மாத காலமாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடு ஜரூராக நடைபெற்று வருகிறது. 3 லட்சம் ரூபாய் 5 லட்சம் ரூபாய் வரை ஒரு பணியிடத்திற்கு வசூல் செய்யப்படுகிறது. 
இதில் ஒரு லட்சம் ரூபாய் கட்சிக்கு என்றும் எஞ்சிய தொகையை அமைச்சர் முதல் பரிந்துரைத்த கிளைச் செயலாளர் வரை பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா இருந்தவரை இதே முறையில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணிநியமனம் நடைபெற்று வந்துள்ளது. அப்போது கட்சிக்கும்-ஜெயலலிதா-சசிகலாவுக்கும் முக்கால் பங்கு.மீதியில் முக்கால் வாசி அமைச்சருக்கு மிச்சம் மீதி வாடிக்கையாளரை கொண்டுவந்த கட்சிக்காரருக்கு என்று இருந்தது.
இப்போது ஜெயா-சசி பங்கு கொடுக்கவேண்டியது கிடையாது. 
5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டால் அதில் ஒரு லட்சம் ரூபாய் கட்சி நிதியாக செலுத்தப்பட வேண்டும். எஞ்சிய 4 லட்சம் ரூபாயில் அமைச்சருக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றும் மேலும் சில கட்சி நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட தொகை என்றும் ஒரு விதி பின்பற்றப்பட்டு வருக்கிறது.
இதன் மூலம்தான் சசிகலா தரப்பை எதிர்த்து அதிமுகவை நடத்த முடிகிறது.
இதனை நம்பி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகள் அங்கன் வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் வசூல் செய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு பிரமுகரும் தங்களுக்கு வேண்டிய நபரை பரிந்துரை செய்து பணி வழங்குமாறு அமைச்சருக்கு கடிதமும் கொடுத்துள்ளனர். 

ஆனால் கட்சி நிர்வாகி பரிந்துரைத்த எவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. 
சென்னையில் நேரடியாக அமைச்சர் தொடர்புடைய ஆட்கள் பணத்தை பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். 
இந்த நிலையில் தான் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பழனி அருகே திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று இருந்தார். 
அப்போது அங்கு வந்த கட்சி நிர்வாகி ஒருவர் அங்கன்வாடி மைய பணியாளர் நியமனத்தில் அ.தி.மு.கவினரின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் அமைச்சருடன் அந்த நிர்வாகி வாக்குவாதமும் செய்தார். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. 
இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திலும் அங்கன்வாடி பணிநியமன பிரச்சனை வெடித்தது. பணிக்கு பரிந்துரை செய்து வேலை ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் சிலர் மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் நேருக்கு நேராக சென்று வாக்குவாதம் செய்தனர். 
இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அமைச்சர் ஆதரவாளர்கள் கோபத்துடன் வாக்குவாதம் செய்தவர்கள் மீது நாற்காலிகளைத்தூக்கி எறிந்து தாக்க ஆரம்பித்தனர்.
அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த கட்சி நிர்வாகிகளை அவர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். நாற்காலிகள் வீசப்பட்டன. சில நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆதரவாளர்கள் தர்ம அடி கொடுத்து அனுப்பி வைத்தனர்.
 வலி தாங்க முடியாமல் வெளியே ஓடியவர்கள் நேராக தலைமை கழகத்திற்கு புகார்களை பேக்ஸ் செய்துள்ளனர். தற்போது இந்த பிரச்சனை எடப்பாடி பழனிசாமி பஞ்சாயத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...