ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

உதவியாளரை காலிசெய்த ஓ.பி.எஸ்..!?


துணை முதலமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தன்னைப்பற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே தன்னுடன் நிழல் நிதியமைச்சரைப்போல இருந்த தனது உதவியாளர் ரமேஷை விலக்கியதாகக் கூறப்படுகிறது. 
ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் இடையே நடந்து வரும் பதவி மோதலால் வெளிப்படையாகச் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் குழிபறித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 21 ஆண்டுகளாக தனக்கு உதவியாளராக இருந்த தனது உறவினர் ரமேஷை வேலையை விட்டு அனுப்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். துரோகம் செய்ததால் ரமேஷை விலக்கியதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தனக்கு பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ரமேஷை திட்டமிட்டு ஓ.பி.எஸ் விலக்கி இருக்கிறார் எனக்கூறுகிறார்கள்.
 
ஓ.பி.எஸ் மனைவியின் உறவினர் ரமேஷ். கடந்த 21 ஆண்டுகாலமாக ஓ.பி.எஸ்-ன் நிழலாக வலம் வந்தவர். அவரைப்பற்றிய அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர். ஓ.பி.எஸ்-க்கு மேலும் சில உதவியாளர்கள் இருந்தபோதும் ரமேஷ்தான் மேல்மட்ட விவகாரங்களைக் கையாண்டவர். அமைச்சர்கள், உயரதிகாரிகள் எனப் பெரிய லிங்குகளில் தொடர்புடையவர். இன்னும் சொல்லப்போனால் ஓ.பி.எஸின் நிதியமைச்சராக இருந்தவர் ரமேஷ்.
ஜெயலலிதா இருக்கும்போது 2016ம் ஆண்டு ஐந்து சீனியர் அமைச்சர்களை மடக்கி வைத்திருந்தபோது சசிலகா, ரமேஷை வீட்டுச் சிறை பிடித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரமேஷ் வீட்டிலும் சோதனை நடத்தத் தீர்மானித்தனர். காரணம் சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்த பட்டியலில் பெரியவர்/ ரமேஷ் என எழுதப்பட்டிருந்தது. இப்படி பக்கபலமாக ரமேஷ் இருந்து வந்துள்ளார். 
தற்போது லஞ்ச ஒழிப்பு விசாரணையில் இருந்து வரும் ஓ.பி.எஸ், தன்னைப்பற்றி எல்லாம் அறிந்த ரமேஷ் அருகில் இருந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அப்படி நடந்தால் வசமாகச் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தன்னை பாதுகாத்துக் கொள்ள ரமேஷை வேலையை விட்டு நீக்கிவிட்டதாக நாடகமாடுகிறார் எனக்கூறப்படுகிறது. 
வேலையை விட்டு நீக்கினால் மட்டும் ரமேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்படாதா? என்கிற கேள்வி எழும். ‘’வேலையை விட்டு நீக்கி விட்ட ஆத்திரத்தில் தன்னைப்பற்றி ரமேஷ் தவறான தகவல்களைக் கொடுத்து வருகிறார்’’ எனச் சமாளித்துவிடலாம் எனக் கருதுகிறார் ஓ.பி.எஸ். ஆக உதவியாளரை நீக்கி விசாரணையில் இருந்து தப்புவதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் ஓ.பி.எஸ்’’ என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...