செவ்வாய், 11 செப்டம்பர், 2018

இண்டர்போல் பிடியில் மோடி சகோதரி!

பற்றாக்குறை 
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், அறிவிக்கப்படாத மின் தடை குறித்து அறிக்கை வெளியிட்டார்..

 உடனே, ஆப் பாயில்கள், பாஜக தொலைக்காட்சியான தந்தி டிவி போன்ற செய்தி ஊடகங்களின் பேஸ்புக் பேஜ்களில், மின்வெட்டு குறித்து திமுக பேசலாமா?? என காமடி செய்கிறார்கள்..

 அவர்களின் புரிதலுக்காக.. 2006-11 திமுக ஆட்சியில் மின்தடைக்கான காரணம் கீழே..

2006-11 திமுக ஆட்சிக்கு முன்னால் இருந்த 2001-06 ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சில் வழக்கம் போல எந்த ஒரு புதிய மின்திட்டங்களையும் ஆரம்பிக்கவில்லை. அதன் விளைவு அடுத்து வந்த 2006-11 திமுக ஆட்சில் மின் பற்றாக்குறையாக எதிரொலித்தது....


இடைப்பட்ட பத்தாண்டுகளில் மின்சார உபயோகமும், தேவையும் அதிகரித்தது.. பல புதிய பெரிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன.. எனவே மின்சார தேவை அதிகரித்து.. ஆனால், அதை ஈடு செய்ய, , புதிய மின் உற்பத்தி இல்லாதலால், மின் பற்றாகுறை ஏற்ப்பட்டு மின்வெட்டுகள் ஆரம்பித்தன....

இது முழுக்க முழுக்க 2001-06 அதிமுக ஆட்சில் எந்த புதிய மின் உற்பத்திக்கான முயற்சிகளை எடுக்காததினால் ஏற்பட்ட விளைவு. மின்நிலையங்கள் எல்லாம் ஓரிரு வருடத்தில் கட்ட முடியாது, அதில் மின் உற்பத்தி துவங்க நான்கு அல்லது ஐந்தாண்டுகள் வரை ஆகலாம்.

அப்படி, புதிய மின் நிலையங்களை 2001-06 அதிமுக ஆட்சில் நிர்மாணித்து இருந்தால், அதின் உற்பத்தி அடுத்து வந்த 2006-11 ஆண்டுகளில் துவங்கியிருக்கும்.... ஆனால், அப்படி எந்த ஒரு புதிய மின் உற்பத்தி நிலையத்தையும் 2001-06 ஜெயா ஆட்சி துவக்கவில்லை, எனவேதான் திமுக ஆண்ட 2006-11 ஆண்டுகளில் மின் பற்றாகுறை ஏற்ப்பட்டது....

அடுத்து வந்த 2006-11 திமுக ஆட்சியில், சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டு, வேலைகள் நடைபெற்றுவந்தன.. திமுக ஆட்சியில், திட்டமிட்டு கட்டப்பட்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களான - வல்லூர், எண்ணூர் - யூனிட் 2, மேட்டூர் - யூனிட் 2 போன்றவை.

இந்த புதிய மின் நிலையங்களின் மின் உற்பத்தி 2012-13 ஆண்டுகளில் கிடைத்ததால் தான் மின்வெட்டு குறைந்தது......

இப்போது கூட, 2011 ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, எந்த ஒரு புதிய மின் திட்டத்தையும் அறிவிக்கவில்லை..திமுக அறிவித்த உடன்குடி,உட்பட்ட 3 மின் உற்பத்தி நிலையங்களையும் ஜெயலலிதா .நிறுத்தி விட்டார்.வேலைகளை துவக்கவில்லை. அதினால்தான் ஐந்து வருடங்களுக்கு பின் மின் தட்டுபாடு ஏற்படுகிறது..

இந்தியப் பணமதிப்பு கடும் வீழ்ச்சி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இண்டர்போல் பிடியில் மோடியின் சகோதரி!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடிக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடிக்கு இண்டர்போல் (சர்வதேச குற்றவியல் காவல் துறை அமைப்பு) ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இவருக்கும் இந்தக் குற்ற வழக்கில் தொடர்பு உள்ளது. 44 வயதான இவர் பெல்ஜியம் நாட்டில் தற்போது இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.


அமலாக்கத் துறையின் பரிந்துரையின் பேரில் இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பூர்வி மோடியின் பெயர் இந்த வழக்கில் முதன்முதலாக மார்ச் மாதத்தில் இணைக்கப்பட்டது. 
இவருக்கு ஆங்கிலம், குஜராத்தி மற்றும் இந்தி ஆகிய மொழிகள் தெரியுமென்றும் ரெட் கார்னர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நோட்டீஸ் உத்தரவானது சர்வதேச அளவிலான பிடிவாரண்டாகும். 
இதன்படி எந்த நாட்டில் இருந்தாலும் அவரைக் கைது செய்ய இண்டர்போல் அமைப்புக்கு அதிகாரம் உண்டு. 

சுமார் 192 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

முன்னதாக நீரவ் மோடியின் முன்னணி நிர்வாகி மிஹிர்.ஆர்.பன்சாலிக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...