வியாழன், 13 செப்டம்பர், 2018

எத்தனை புதிய இந்தியாக்கள் ?



"டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானம் ஆகும். இந்த வரியிலிருந்து ஒன்றே ஒன்று நமக்கு புரிகிறது. 
அப்போ இதுவரை புதிய இந்தியா உருவாகவில்லை என்பது!! "

ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இதைத்தானே சொல்லிக் கொண்டு வந்தார்? இதுநாள் வரை என்ன செய்து கொண்டு இருந்தார்? 
இப்போது 2022-ல் புதிய இந்தியா என்கிறாரே?!!


மூழ்கடித்து கொள்கிறது "காவி கட்சியை தோற்கடித்துவிட முடியும் என எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன" என பாஜகவின் அந்த அரசியல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

பாஜகவை தோற்கடிக்க மற்றவர்கள் முயலுகிறார்களோ இல்லையோ, ஆனால் பாஜகவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்து கொண்டுதான் இருக்கிறது.

அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பிரதமர் மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளில் எதையாவது இதுவரை நிறைவேற்றினாரா? 

இப்போது அடுத்த தேர்தல் முழக்கத்துக்கு தயாரானால் நாட்டு மக்கள் காதில் ரத்தம்தான் வடியும். 

கறுப்புப் பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்வோம் என்றாரே, செய்து முடித்து விட்டாரா? 
இந்த தேர்தல் வாக்குறுதியை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வந்ததுதான் மிச்சம்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைதருவோம் என்றாரே. செய்தாரா? 


வேலை கிடைக்கவில்லையென்றால் பக்கோடா விற்கலாமே என்ற ஐடியா மட்டுமே கொடுக்க முடிந்தது. விவசாய விளைப் பொருளுக்கு உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை தருவோம் என்றாரே? 
செய்தாரா? 

விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையை முற்றிலுமாக கொடுக்க முடிந்ததா?

2014-ல் அச்சே தின் என்ற கோஷம் முழங்கப்பட்டது. 

அதாவது "நல்ல காலம் பொறந்தாச்சு" என்று அர்த்தம். ஆனால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறதா? 
இதற்கு ஆசிபா படுகொலையே சாட்சி!! 

பசுமாட்டு பாதுகாப்பு முக்கியம் என்று மத்தியிலிருந்து தமிழக மாநில ஆளுநர் சொல்லி வருகிறார்கள். பசுமாட்டு பாதுகாப்பு நன்றாகத்தான் இருக்கிறது. 


ஆனால் பெண்கள் பாதுகாப்பு நன்றாக இல்லையே? 
கத்துவா சம்பவத்துக்கு பதிலளிக்க தயங்கி, கடைசியில் வேறு வழியில்லாமல்தானே அவசர சட்டம் இயற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது?

பாஜக கூட்டத்தில் மோடி பேசும்போது, "48 ஆண்டுகள் ஒரு குடும்பம் நடத்திய ஆட்சிக்கும் 48 மாதங்கள் நாங்கள் செய்த ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் அறிவார்கள். 
வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை வெல்ல முடியாத இந்தியா, அடிபணியாத பாஜக என்ற முழக்கத்தோடு எதிர்கொள்வோம். 
நாம் அதிகாரத்தின் மீது பேராசை கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார். சரி, 2014 தேர்தலின்போது, உண்மையிலேயே மக்கள் மோடி மீது அதிக நம்பிக்கை வைத்தார்கள்.

அதற்கு பல காரணங்கள் இருந்தன. 

முக்கியமாக மோடி ஆட்சியில் ஊழல் இருக்காது என்பது முதன்மையானதாக இருந்தது. ஆனால் 2014-க்கும் இப்போதுள்ள காலகட்டத்துக்கும் மோடி ஆட்சியில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

ஊழல் கட்சிகளை ஆதரிக்க மாட்டோம், ஊழலுக்கு துணை போக மாட்டோம் என்று சொல்லும் மோடி, அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்லப் போகிறார்? 

2014-க்கு முன்பு ஜெய் ஷாவுக்கு இருந்த சொத்து மதிப்பு எவ்வளவு? 2018-ம் ஆண்டில் அவருக்கு இருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு?

அமித் ஷாதான் இப்படி என்றால், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மீது குற்றச்சட்டுகள் இல்லையா? ரஃபேர் போல் விமானங்கள் வாங்குவதில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் இல்லையே? 

ஏன்? 

20 சதவீதம் குறைந்த விலையில்தான் வாங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி சொல்கிறாரே, ஒரு விமானம் ரூ.448 கோடிக்கு வாங்கப்படுகிறதா? 
குறைத்து தான் வாங்குகிறோம் என்று சொல்கிறார்களே, அதை வெளிப்படையாக ஏன் இதுவரை சொல்லாமல் ஏன் மூடி மறைக்கிறார்கள்?


எனவே 2014-ல் பாஜக இருந்த இமேஜ் வேறு. தற்போது உள்ள இமேஜ் வேறு. ஆனால் அப்போதுக்கும் இப்போதுக்கும் ஒன்று தெளிவாகி உள்ளது. 

அதாவது எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர ஆரம்பித்து விட்டனர். 

தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வசை பாடி தூற்றிக் கொண்டிருந்தால், நிலைமை இன்னும் மோசமலாகி விடும் என்பதை மாயாவதி, முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் தற்போது நன்றாகவே மனதார உணர்ந்து விட்டார்கள்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும்வரை இவ்வளவு அக்கப்போர் நடந்ததில்லை. ஆளில்லா வீட்டில் கிடைச்சதெல்லாம் லாபம் என்பதுபோல தமிழகத்தை குறி வைத்து வேட்டையாடுகிறார்க
ள். 

ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய், நியூட்ரினோ ஆய்வக திட்டம் என நுழைந்து விவசாயிகள், பொதுமக்களின் வாயில் வயிற்றில் அடித்து கொண்டிருப்பதுதான் மிச்சம்!!

இதெல்லாம் போக யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக அன்றிலிருந்து இன்று வரை பெட்ரோல்-டீசல் விலை நின்று அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கிறது. 


ஒரு புறம் கார்ப்பரேட் ஆதரவாளர்களுக்கு கை கொடுத்துக் கொண்டும், மறுபக்கம் விவசாயிகள், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு குறி வைத்துக் கொண்டும் இருந்தால் எப்படி 2022-ல் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிக்கும்? 

இது போன்ற குறைகளையெல்லாம் வைத்துக் கொண்டு 2022-ல் ஜெயிப்போம் என உறுதியாக தெரிவித்து தீர்மானம் இயற்றுவது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைதான் காட்டுகிறது!!
                                                                                                                                    நன்றி:ஒன்னிந்தியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...