சனி, 6 டிசம்பர், 2014

அசரவைக்கும் தேர்தல் செலவுகள்!

    மக்கள் சேவை அல்லது தொண்டு செய்வதற்காக அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்.அதற்காக தங்கள் சொந்தப்பணத்தை தண்ணீராக செலவழிக்க அவர்கள் தயங்குவதில்லை.அவ்வளவு பொது நல பாசம்.
இதோ கடந்த மக்களவைத்தேர்தலில் அதிமுக செலவிட்ட தேர்தல் செலவினம்.இது தேர்தல் ஆனையத்திடம் கொடுக்கப்பட்ட பட்டியல்.இதற்கு மேலாகவே அவர்கள் மக்களுக்கு செலவிட்டிருக்கலாம்.இதில் அந்தந்த தொகுதியில் வேட்பாளர்கள் செலவிட்ட கணக்கு சேர்க்கப்படவில்லை.அந்த கணக்கை தேதல் ஆணையத்திடம் தனியெ கொடுத்துள்ளார்கள்.
மேலும் 144 தடை உத்திரவு அன்று மக்களுக்கு வாக்குச்சாவடி வந்து போகும் போக்குவரத்துப்படியாக அதிமுக தலைமை வழங்கிய ஒருவருக்கு குறைந்தது 200ரூபாய் என்று கொடுத்தது தடை உத்திரவு இருந்த காரணத்தால் இக்கணக்கில் சேர்க்க வில்லையாம்.
காலியான முதல்வர் இருக்கை.
டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஹைலைட் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரசாரம்தான். ''செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?'' என்ற ஜெயலலிதாவின் முழக்கத்துக்கு நிகராக பேசப்பட்டது, ஜெயலலிதாவின் ஏரியல் வியூ பிரசாரம். ஹெலிகாப்டரும் பிரசார பொதுக்கூட்டங்களும் ஷங்கர் பட பிரமாண்டம்.
 இதற்காகக் கொட்டப்பட்ட கரன்ஸிகள் பற்றிய ரிப்போர்ட் இது.
ஜெயலலிதா தவிர நாஞ்சில் சம்பத், பரிதி இளம்வழுதி, நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வையாபுரி, ஆர்த்தி, விந்தியா, டி.கே.கலா, சி.ஆர்.சரஸ்வதி, குயிலி, 'வெண்ணிற ஆடை’  நிர்மலா, நிர்மலா பெரியசாமி, ஃபாத்திமா பாபு என 33 பேர் அடங்கிய ஒரு நட்சத்திர பட்டாளமே நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சத்து 41 ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக லியாகத் அலிகான், 'வெண்ணிற ஆடை’ நிர்மலா, தியாகு, வையாபுரி, பாலு ஆனந்த், ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு மட்டும் தலா ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவழித்து இருக்கிறார்கள். இதில் நடிகை ஆர்த்திக்குத்தான் மிகக் குறைவாக 83 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 33 ஸ்டார் பேச்சாளர்களுக்கு மட்டும் ரூ.45.91 லட்சம் ஒதுக்கப்பட்டது.
அடுத்து, ஜெயலலிதாவின் ஆகாய செலவுகள். 
ஜெர்ரி ஜான் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்துதான் ஹெலிகாப்டரை ஜெயலலிதாவுக்காக வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த வகையில் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு ரூ.5.50 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.  
ஏரோ ஏர்கிராஃப்ட், நவயுகா இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களில் இருந்து விமானங்கள் ரூ.2.08 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. 
34 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் (ஹெலிபேடு) அமைக்கப்பட்ட வகையில் ரூ.5.80 கோடி ரூபாய் செலவானது. 
அதாவது, ஹெலிகாப்டர் விமானம் மற்றும் ஹெலிபேடு செலவுக்கு மட்டும் மொத்தமாக ரூ.13.39 கோடி செலவழித்து இருக்கிறது அ.தி.மு.க. 
இதுதவிர, ஹெலிபேடில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்காக ஜெயலலிதா பயன்படுத்திய டெம்போ வேனுக்கு ரூ.2.46 லட்சம் செலவு.    
தேர்தல் பிரசாரத்தை ஊடகங்கள் வழியாகவும் அ.தி.மு.க மேற்கொண்டது. டி.வி சேனல்களில் மேற்கொண்ட பிரசாரத்துக்கு ரூ.12.57 கோடியும் எஸ்.எம்.எஸ் மூலம் நடந்த பிரசாரத்துக்கு ரூ.1.26 கோடியும் மொபைல் வேன், ரேடியோ, இணையதளம் மற்றும் மின்னணு விளம்பரம் ஆகியவற்றுக்காக ரூபாய் ஒரு கோடியும் செலவழித்தார்கள்.
 ஊடகங்கள் வழியாகப் பிரசாரம் மேற்கொண்ட வகையில் மட்டும் மொத்தமாக 14.97 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. 
போஸ்டர்கள் 2.42 கோடி ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டன.
40 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இதற்காக பந்தல், மேடை, மைக்செட் ஆகியவை அமைக்கப்பட்டன. இதற்கான செலவுகளையும் பார்ப்போம். மொத்தமாக 35 இடங்களில் ஜெயலலிதா பேசினார். இந்த பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ஒரு லட்சம் வரை ஆடியோ சிஸ்டத்துக்கு செலவழித்து இருக்கிறார்கள். மொத்தமாக 35 கூட்டங்களுக்கும் ஆடியோ சிஸ்டத்துக்கு ரூ.36.30 லட்சம் செலவானது. மேடை அமைத்த வகையில் ரூ.47.14 லட்சமும் மேடையில் ஜெயலலிதாவுக்கு தற்காலிக ஏஸி வசதி செய்து கொடுப்பதற்காக ரூ.6.30 லட்சமும் செலவழிக்கப்பட்டன. ஒரு மேடை அமைக்க ஆன சராசரி செலவு ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்.
வேட்பாளர்கள் செய்த செலவுகள் சேர்க்காமல் அ.தி.மு.க தலைமை ஒட்டுமொத்தமாக செலவழித்த தொகை மொத்தம் ரூ.32,19,48,396.
இதுக்கே தலைசுத்துதா?  
இது கணக்கில் வந்தது மட்டும்தான்.தலா 200 முதல் 500 வரை சேர்க்கப்படவில்லை.அதையும் சேர்த்து பார்த்தால் ?வேண்டாம் உங்கள் ரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.

தேர்தல் செலவுகள் என்னென்ன?
ஸ்டார் பேச்சாளர்கள் - 45,91,000
ஹெலிகாப்டர் வாடகை - 5,50,01,344
விமானங்கள் வாடகை -  2,08,31,034
டெம்போ டிராவலர் - 2,46,088
டி.வி பிரசார விளம்பரங்கள் -  12,57,13,140
மொபைல் வேன் பிரசாரம் - 33,70,800
ரேடியோ விளம்பரம் -  46,26,929
இணையதள விளம்பரம் - 19,21,630
மின்னணு விளம்பரம் - 15,16,860
எஸ்.எம்.எஸ் விளம்பரம் - 1,26,34,880
தேர்தல் அறிக்கை - 2,26,800
போஸ்டர்கள் - 2,42,23,100
ஹெலிபேடு - 5,80,70,223
ஆடியோ சிஸ்டம் - 36,30,000
மேடை அமைத்தல் - 47,14,046
தற்காலிக ஏஸி வசதி - 6,30,522
மொத்தம் - ரூ. 32,19,48,396
                                                                                                 நன்றி:-எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...