சனி, 13 டிசம்பர், 2014

கொலையே நிம்மதி தரும்?

சைல்சான் ஜோஸ் தாஸ் க்ரசாஸ்.

பிரேசிலில் பொழுதுபோக்குக்காக 41 பேரைக் கொலை செய்த சைக்கோ கொலைகாரனை போலீ ஸார் கைது செய்துள்ளனர். 

அந்த கொலைகாரனுக்கு வயது 26.


பிரேசிலில் வசித்து வருபவன் சைல்சான் ஜோஸ் தாஸ் க்ரசாஸ்.
இவன் ஒரு சைக்கோ.
 இவன் ரியோ நகரத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதி யில் ஒரு பெண்ணைக் கொலை செய்தான். 
அதைத் தொடர்ந்து போலீஸார் அவனைக் கைது செய்தனர். அவர்களின் விசாரணை யின்போது, தான் இதுவரை 41 பேரை ஜாலிக்காகக் கொலை செய்திருப்பதாகக் கூறியுள்ளான்.
அவர்களில் 37 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் அடங்குவர்.
 இவ‌ன் கொலை செய்த பெண்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை அழுது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் அதைக் கொலை செய்தேன் என்று விசாரணையில் க்ரசாஸ் கூறியுள்ளான். 
போலீஸாரின் விசாரணையில் அவன் மேலும் கூறியதாவது: "ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து வந்தேன். என்னுடைய 17 வயதில் முதல்முறையாக ஒரு பெண்ணைக் கொலை செய்தேன். 
அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதனால் தொடர்ந்து பெண்களைக் கொலை செய்ய ஆரம்பித்தேன்.
கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எங்கே வசிக்கிறார்கள், குடும்பம் எப்படிப்பட்டது போன்ற விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வேன். 
இதற்கு ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ ஆகும். பின்னர் ஒரு நாள் அதிகாலையில் அவர்களின் வீட்டுக்குச் செல்வேன். 
சரியான நேரம் பார்த்து கொன்று விடுவேன்.
என்னை ஒரு தம்பதி அடியாளாக நியமித்தனர். அவர்கள் தரும் காசுக்காகச் சில கொலைகளைச் செய்து வந்தேன். 
அப்போது மட்டும் நான் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி கழுத்தை நெரித்து கொலை செய்வேன்.
கொலை செய்யாதபோது நான் மிகவும் கஷ்டப்படுவேன்.
 கொலை செய்வது எனக்கு நிம்மதியைத் . நான் ஒருவரைக் கொன்ற பிறகு அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பேன். 
பிறகு அடுத்த கொலைக்குத் தயாராகி விடுவேன்.
என்னுடைய செயலுக்காக வருந்தவில்லை. 
எனக்கு 10, 15 அல்லது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தாலும், விடுதலையான பிறகு மீண்டும் கொலை செய்வேன்" என்று கூறியுள்ளான்.
பிரேசிலில் கொலைக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை 30 ஆண்டு சிறை. அங்கு மரண தண்டனை இல்லை. 
என்னுடைய செயலுக்காக வருந்தவில்லை. 
எனக்கு 10, 15 அல்லது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தாலும், விடுதலையான பிறகு மீண்டும் கொலை செய்வேன்"
==================================================================
பிடல்காஸ்ட்ரோவுக்கு 
கன்பூசியஸ் 
அமைதி விருது,

நோபல் பரிசுக்கு இணையான சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருது, கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூப புரட்சியின் நாயகனுமான பிடல்காஸ்ட்ரோவுக்கு வழங்கப்படுகிறது.
பி டல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ந்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். 
குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு குழுக்களுடன் அணு ஆயுத போரினை இந்த பூமியில் நடைபெறவிடாமல் தடுப்பது குறித்து தொடர்ந்து பேசியும்,ஆலோசித்தும் வருகிறார்.
அணு ஆயுதபோருக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்து வருகிறார். 88 வயதான நிலையில் அணு ஆயுத போருக்கு எதிரான தனது பணியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இதனடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசிற்கு இணையான சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது 20 பேர் கொண்ட தேர்வு குழுவில் பெரும்பான்மை ஆதரவோடு பிடல்காஸ்ட்ரோ பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
2010ம் ஆண்டு முதல் சீனாவில் கான்பூசியஸ் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. 
நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் இந்த விருதை ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனான், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின் உள்ளிட்டோர் பெற்றிருக்கின்றனர். 
இந்தாண்டிற்கான (2014) கன்பூசியஸ் அமைதி விருதிற்கு 20 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
 இதில் தென்கொரியா ஜனாதிபதி பார்க் ஜென் ஹாய், ஐ.நா பொதுச்செயலாளர் பான்- கீ- மூன், ஹாங்காய் கூட்டுறவு அமைப்பு, சைனீஸ் ரிலிஜியன் தாய்ஸ்ம் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
 இவர்களிலிருந்து ஒருவரின் பெயரை தேர்ந்தெடுக்க கன்பூசியஸ் அமைதி விருது தேர்வு குழு தேர்ந்தெடுக்க வேண்டும்.
மொத்தம் 12 பேர் கொண்ட தேர்வு குழுவில் பிடல்காஸ்ட்ரோவின் பெயரை 9 பேர் முன்மொழிந்தனர்.
 இந்த பெரும்பான்மையின் அடிப்படையில் பிடல்காஸ்ட்ரோவுக்கு கன்பூசியஸ் அமைதி விருது வழங்குவது என முடிவு செய்யப்பட்டது என்று இந்த விருதுக்கான தேர்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் லியூ தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோ வயது மூப்பின் காரணமாக 2008ம் ஆண்டு கியூப ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார்.
 அதன் பின்னர் உடல் நிலையின் காரணமாக வெளியில் அதிகமாக பயணிப்பதில்லை.
 இந்நிலையில் அவர் நேரடியாக இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருதை பெற முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் கியூபாவை சேர்ந்த மாணவர் ஒருவரிடம் பிடல் காஸ்ட்ரோவுக்கான விருது வழங்கப்படும். 
இந்த விருது 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புடையது. 
இதனை அந்த மாணவர் பிடல் காஸ்ட்ரோவிடம் முறையாக கொண்டு சேர்ப்பார் என்று விருதிற்கான ஒருங்கிணைப்பாளர் லியூ தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...