சனி, 13 டிசம்பர், 2014

ராஜ பக்சே : ஒரு வரலாற்றுப் பார்வை.

இன்சூரன்ஸ் மசோதா 

==========================================

இன்சூரன்ஸ் மசோதாவைப் பரிசீலித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அந்நிய முதலீடு உயர்வுக்கு ஆதரவாகப் பரிந்துரைத்துள்ளது. 
இக்குழுவின் உறுப்பினர்கள் பி.ராஜீவ்(சிபிஐ-எம்) பேரா.இராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி) கே.சி.தியாகி(ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் எதிர்க் குறிப்பினைப் பதிவு செய்துள்ளனர்.
அதிலிருந்து...எ சட்டக் கமிஷனோ, கே.பி.நரசிம்மன் குழுவோ அந்நிய முதலீட்டு உயர்வையும், அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனையையும் பரிந்துரைக்கவில்லை. 
ஆனால் மசோதாவின் முன்னிரையிலும், தெரிவுக்குழு அறிக்கையின் பத்திகள் 2, 3 களிலும் அப்படியொரு எண்ணம் ஏற்படுகிற வகையில் வார்த்தைகள் அமைந்துள்ளன.
 ஏற்கெனவே நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு டிசம்பர் 13, 2011 தேதியிட்ட தனது 41வது அறிக்கையில் அந்நிய முதலீட்டுஉயர்வு தேவையில்லை எனப் பரிந்துரைத்திருந்தது.
அப்பரிந் துரையை ஏற்காதது ஏன் என்பதற்கு மத்திய நிதியமைச்சகம் திருப்திகரமான விளக்கம் எதையும் தரவில்லை. 
நிலைக்குழு நிராகரித்த அதே கருத்துக்களையே மீண்டும் தெரிவுக்குழு முன்பும் வைத்துள்ளார்கள்.எ அந்நிய முதலீட்டு உயர்வால் இன்சூரன்ஸ் பரவலாக்கல் அதிகமாகும் என்கிற வாதத்திற்கான எந்தவொரு ஆதாரமும் நிதியமைச்சகத்தின் பதிலில் இல்லை.
 2007ல் அந்நிய முதலீடு ரூ.3315 கோடிகளாக இன்சூரன்ஸ் துறையில் இருந்த போது இன்சூரன்ஸ் பரவலாக்கல் 4.6 சதவீதமாக இருந்தது.
ஆனால் 2012ல் அந்நிய முதலீடு ரூ.7649 கோடிகளாக உயர்ந்த போது இன்சூரன்ஸ் பரவலாக்கலால் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. 
இவ்விவரங்கள் அவர்களின் பதிலிலேயே உள்ளன.எ இன்சூரன்ஸ் பரவலுக்கு வேறு பல காரணிகள் உள்ளன.
 இந்தியாவை விட அதிகமான தனிநபர் வருமானம் உள்ள நாடுகளில் கூட இன்சூரன்ஸ் பரவலாக்கல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைவாக உள்ளது.
2013ல் அமெரிக்காவில் 3.2 சதவீதம், கனடா 2.9சதவீதம், ஜெர்மனி 3.1 சதவீதம், ஆஸ்திரேலியா 3 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளன.
 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சமர்ப்பித்துள்ள தகவல்களின்படி பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட இந்தியப் பொது இன்சூரன்ஸ் துறையின் பரலாக்கல் விகிதம்அதிகம் உள்ளது. 
இந்தியப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும் பொது இன்சூரன்ஸ் பரவலாக்கலை பாதிக்கிறது. 
தில்லி உள்ளிட்ட தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இன்சூரன்ஸ் பரவலாக்கல் அதிகமாகவும், உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இப்பரவலாக்கல் குறைவாகவும் உள்ளது.
எ தெரிவுக்குழு அறிக்கையின் பத்தி 16.2.2 அடுத்த 5 ஆண்டு களில் இந்திய இன்சூரன்ஸ் துறைக்கு 55,000 கோடி முதலீடுகள் தேவைப்படுகிறது என்று கூறுகிறது. 
ஏற்கெனவே இதுபோன்ற மதிப்பீட்டை 2011 நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை, ‘ஐ.ஆர்.டி.ஏ. உள்ளிட்ட இன்சூரன்ஸ் தொடர்பான அமைப்புகளின் மதிப்பீடு வெறும் கணக்காகவும், பொதுவான எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இப்படிப்பட்ட மேம்போக்கான மதிப்பீடுகளை ஏற்கக்கூடாது’ என நிராகரித்துள்ளது.எ ஆயுள் இன்சூரன்ஸ் கவுன்சில் தெரிவுக்குழுவிற்கு அளித்துள்ள மகஜரின்படி இந்தியாவில் இன்சூரன்ஸ் சந்தை 60 கோடி பேர். 30 கோடி பேருக்கு தனிநபர் பாலிசிகளையும், மேலும்எல்ஐசி 12 கோடி பேரைக் குழு பாலிசிகள் மூலமும் இணைத் துள்ளன.
77 சதவீத மக்கள் தின நுகர்வை ரூ.20க்கும் குறைவாகக் கொண்டுள்ள ஒரு நாட்டில் எல்ஐசியின் பாலிசி எண் ணிக்கை இன்சூரன்ஸ் சந்தையில் 70சதவீதம் இருப்பது குறிப் பிடத்தக்கது.
 மூலதனத்திற்கும் இன்சூரன்ஸ் வணிகத்திற்கும் தொடர்பில்லை. 100 கோடி மூலதனம் கொண்ட எல்ஐசி மார்ச் 2013ல் திரட்டிய பிரீமியம் ரூ.2,08,000 கோடி. 
ரூ.4,844 கோடி மூலதனம் கொண்டபஜாஜ் அல்லயன்ஸ் திரட்டிய பிரீமியம் ரூ.6,893 கோடிகள்.
 கூடுதல் மூலதனம் கூடுதல் பிரீமியத்தை கொண்டுவரும் என்பது உண்மையல்ல.
 மேலும் இந்திய இன்சூரன்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள டாடா,பிர்லா, ரிலையன்ஸ், பஜாஜ் குழுமங்கள் பலமான நிதிபலத் தோடு அந்நிய நிறுவனங்களைக் கூடக் கைப்பற்றுகிற பெரியநிறுவனங்களாக உள்ளன.
எனவே அவர்களுக்கு நிதி பலம்போதாது, அந்நிய முதலீடுகள் தேவை என்பது ஏற்கத்தக்கதல்ல.
 முன்னாள் எல்ஐசி சேர்மன் சமர்ப்பித்துள்ள தகவலின்படி 2013 - 14ல் எல்ஐசியால் மறுக்கப்பட்ட உரிமங்கள் ஒரு சதவீதமாக உள்ளது. சில தனியார் நிறுவனங்களில் 20 சதவீத உரிமங் கள் (தொகையில் 28 சதவீதம்) மறுக்கப்பட்டுள்ளன.
 தனியார் களின் மறுக்கப்பட்ட உரிமங்களின் மொத்தச் சராசரி 8 சதவீதம் ஆகும். அந்நிய முதலீடுகள் வந்தால் தொழில்நுட்பம் மேம்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எல்ஐசி சேர்மன் தெரிவுக்குழு சாட்சியத்தில் உலகிலேயே மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை எல்ஐசி பயன்படுத்துகிறதெனக் குறிப்பிட்டுள்ளார்.
 தனியார் நிறுவனங்களின் வணிகத்தில் 85 சதவீதம் பங்குச் சந்தையில் பாலிசிகளாகவே உள்ளன. எனவே ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் இப்பணம்செல்லாது. 
ஆனால் எல்ஐசியோ ரூ.10,69,769 கோடிகளை (மார்ச் 2014 வரை) அரசுப் பத்திரங்கள், சமூகநலத்திட்டங்களில் முதலீடு செய்துள்ளன.
 அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போதுமான மூலதனத்தோடு உள்ளன.
மொத்த மூலதனம் ரூ.600 கோடி காப்பு மற்றும்உபரி ரூ. 20,524 கோடி, முதலீடுகள் ரூ.1,01,707 கோடி எனவலுவாக உள்ள இந்நிறுவனங்களுக்கு மூலதனம் தேவை யெனக் கூறி இம்மசோதாவின் பிரிவு 107, பங்கு விற்பனைக்கு வழிகோலுவது தேவையற்றது. 
மாறாக அரசும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைத்து ஒரே நிறுவன மாக மாற்றலாம். இத்தகைய ஆலோசனையை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. 
கூடுதல் மூலதனம் தேவையெனில் இரண்டாம் தட்டு மூலதனத்தை  அதாவது பத்திரம், கடன் பத்திரங்கள் வாயிலாகத் திரட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
 ஏற்கெனவே நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு ஒருமித்தக் குரலில் அந்நிய முதலீட்டு உயர்வை நிராகரித்திருப்பதை ஏற்று தெரிவுக்குழுவும் அந்நிய முதலீட்டு உயர்வை ஏற்கக்கூடாது.
=================================================================================
ராஜ பக்சே :
ஒரு வரலாற்றுப் பார்வை.
====================
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே ராஜபக்ச என்று அழைக்கப்படுகிறது.
 பிரித்தானிய அரசிற்கு போட்டுக்கொடுக்கும் பணியைச் செய்தவர்களை மரியாதை செலுத்தும் முகமாக இப்பெயர் வழங்கப்பட்டது.













டொன் அல்வின் ராஜபக்ச- குடும்பம் 

ராஜபக்சக்கள் மலாக்கன் க த்தோலிக்கர்கள்.
(அவர்களின் மங்கோலைட் முகச்சாயலுக்கான காரணம் இதுவே)
மகிந்த ராஜபக்சவின் தந்தையின் பெயர் டொன் அல்வின் ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவின் இயற்பெயர் பேர்சி மகிந்த ராஜபக்ச. அரசியலில் பிழைப்பதற்காக கத்தோலிக்கர்களான ராஜபக்சக்கள் பௌத்தர்களாக மதம் மாறிக்கொண்டனர்.
பிரேமதாசவைத் தவிர இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த அரச அதிபர்களாகப் பதவிவகித்த அனைவருமே கத்தோலிக்கர்கள் அல்லது கிறீஸ்தவர்கள். 
இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களத் தீவிரவாதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, ஜுலியட் ரிச்சார்ட் ஜெயவர்தன போன்றவர்கள் வலுவான கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்டவர்கள்.
 பேரினவாத்ததைத் தூண்டி மக்களைப் போதையூட்டி வைத்திருப்பதற்காகவே இவர்கள் பௌத்தத் தீவிரவாதத்தைப் பேசினர்.
பௌத்தத்தின் பேரால் நாட்டில் வன்முறையத் தூண்டிய கிறீஸ்தவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டனர்.
கத்தோலிக்கர்களான ராஜபக்ச குடும்பம் இன்று இலங்கையில் அதிக செல்வாக்குப் படைத்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. 
ராஜபக்சவின் குடும்பக் குழுமம் முழுவதுமே இலங்கையின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இலங்கையை ஒட்டச் சுரண்டிய ராஜபக்ச குடும்பமே வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொல செய்யப்படுவதற்குக் காரணமாகியது.
நீர்கொழும்பின் சீதுவப் பகுதியைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பம் தமது மலாக்கன் கத்தோலிக்க முன்னோர்களுடன் சேர்ந்து கம்பந்தோட்டம் என்ற பிரதேசத்திலுள்ள சிப்பிக்குளம் மற்றும் கிருவாபத்துவ ஆகிய கிராமங்களில் குடியேறினர். 
இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள கம்பந்தோட்டமே இப்போது ஹம்பாந்தோட்ட என்று அழைக்கப்படுகின்றது.
போத்துகீசர் மலாக்காவை ஆக்கிரமிக்க முற்பட்ட காலப்பகுதியான 16ம் நூற்றாண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருபகுதியினர் இலங்கையில் குடியேறினர். 
இலங்கையின் கரையோரப்பகுதியான நீர்கொழும்பில் மலாக்கா உட்படப் பல்வேறு மலேசிய நகரங்களிலிருந்த குடியேற்றங்கள் தொடர்பான வரலாறுகள் காணப்படுகின்றன.
ஹம்பாந்தோட்டையில் நிலப்பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராஜபக்சக்கள், அப்பகுதியில் அரசியல் செல்வாக்குச்செலுத்த ஆரம்பித்தனர்.
 தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட அப்பகுதியில் அரசியல் பிழைப்பிற்காக ராஜபக்சக்கள் பௌத்தர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டாலும் கத்தோலிக்கத்தையே கடைப்பிடித்தனர்.
கத்தோலிக்க-புத்த -இந்து வான பக்சே ?
டொன் டேவிட் ராஜபக்சவின் மகனான டொன் மத்தியூ ராஜபக்ச 1936 ஆம் ஆண்டு அரச சபைக்கு ஹம்பாந்தோட்டைப் பிரதிநியாத் தெரிவானார்.
1945 ஆம் ஆண்டு டொன் மத்தியூ ராஜபக்ச மரணமடைந்ததும், அவரின் சகோதரரான டொன் அல்வின் ராஜபக்ச இடைத்தேர்தல் ஒன்றின் வழியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிறார். 
டொன் அல்வின் ராஜபக்ச பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவானார்.
1967, தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு பெலியத்தவில் வயதில் இளைய பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த தெரிவுசெய்யப்படுகின்றார். 
தனது 25 ஆவது வயதில் பாராளுமன்றத்திற்குள் நுளைந்த ராஜபக்ச என்ற சிங்கள பௌத்தப் பேரினவாதியான கத்தோலிக்கரின் தலைமையில் நடைபெற்ற இனப்படுகொலையில் சாரிசாரியாக மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.
இலங்கையை ஆட்சிசெய்த கொடூரமான சர்வாதிகாரியாக ராஜபக்ச கணிக்கப்படுகிறார். 
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஏகப்பிரதிநிதியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜபக்சவிற்கு போட்டியாக முளைத்துள்ள மற்றய புதியவர் மைத்திரிபால சிரிசேன. 
தான்  ராஜபக்சவிற்கு இணையான இன வாதி என்பதைப் பல்வேறு வழிகளில் சிரிசேன நிருபித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...