வியாழன், 4 ஜனவரி, 2018

மோடி வழியில் ரஜினி ஓவர் பில்டப்…!

அம்பலமான ரஜினி  அலப்பறை.

பாஜக எப்படி மோடியை ஒரு பிராண்டாக மாற்றியதோ, அதே வழியில் தற்போது நடிகர் ரஜினியும் திட்டமிட்டு தமிழகத்தில் பிராண்டாக மாற்றப்படுகிறாரா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் மோடியை போன்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஓவர் பில்டப் செய்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மோடி தன்னை முன்னிலை படுத்த  பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற  சமூக வலைத்தளங்களில் தன்னை  கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.
 நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 32 கோடி 7 லட்சத்து 87 ஆயிரத்து 69 பேர் பின்தொடர்வதாக பாஜக பிரமுகர்கள் பெருமை பேசி வந்தனர். இந்நிலையில் இதனை ஆய்வு செய்த டுவிட்டர் கணக்கு தணிக்கை குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
 காரணம் மோடியை பின்தொடரும் 32 கோடி பேரில் 45 சதவிகிதம் பேர் போலிகள் என்பது தெரிய வந்தது. 
அதாவது 14 கோடியே 4 லட்சத்து 91 ஆயிரத்து 884 பேர் போலிகள் என்பதை கணக்கு தணிக்கை குழு உறுதி செய்தது. இது தவிர்த்து பல்வேறு கார்ப்பரேட் ஐடி நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை மோடிக்காக உருவாக்கி அவர்களே அந்த வேலையையும் செய்து வந்தனர் என்பதும் அம்பலமானது.

அதே போன்று நடிகர் ரஜினியும் தன்னை முன்னிலை படுத்த போலி தகவல்களை பரப்புவது தெரிய வந்திருக்கிறது. வரும் சட்டமன்ற தொகுதியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். 
தனி கட்சி, தனி கொடி என அரசியல் எண்ரி தந்திருக்கிறார். 
இந்நிலையில் இவரை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
இதற்கிடையில் ரஜினி தனது அரசியல் செயல்பாடுகளுக்காக புதிய இணையதளத்தை தொடங்கினார். அதேபோல் ரஜினி மன்றம் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் வெளியிட்டார். இதில் அவரது ரசிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வருகிறார்கள்.
 ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அவரது தீவிர தொண்டர்களும் இந்த இணையத்தில் தங்களை இணைத்து வருவதாக தகவல்கள் திட்டமிட்டு கசியவிடப்பட்டது. 
இதனை தொடர்ந்து நான்கே நாட்களில் 50 லட்சம் பேர் ரஜினி இணையதளத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதாக செய்தியை பரப்பினர்.
இதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு- தகவல்கள் வெளியாகியிருக்கிறது.  முதலில் இந்த அப்ளிகேஷன் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. பின் பலர் அதை டவுன்லோட் செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். 
உண்மையில் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷனை நேற்று இரவு கணக்குப்படி 1 லட்சம் பேர் மட்டுமே டவுண் லோட் செய்து உள்ளனர். மேலும் கூகுள் டிராபிக் மற்றும் அமேசான் டிராபிக் படி ரஜினியின் இணையதளம் இந்திய அளவில் 4,648வது இடத்தை மட்டுமே பிடித்து இருக்கிறது. 
ஒருநாளைக்கு 5 லட்சத்திற்கும் குறைவான பார்வையாளர்கள் இருந்தால் மட்டுமே இவ்வளவு பின்தங்க முடியும்.
50 லட்சமா?
எனவே ஒருநாளைக்கு 3-5 லட்சம் பேர் தங்களை பதிவு செய்தார்கள் என்று வைத்தால் கூட 20 லட்சம் பேர்தான் கண்டிப்பாக பதிவு செய்து இருக்க முடியும். 
ஆனால் உண்மையில் இன்னும் 10 லட்சம் பேர் கூட பதிவு செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் எடுபட்ட மோடி வித்தை தமிழகத்தில் ஏற்கனவே எடுபடவில்லை. 
இந்நிலையில் அதே வழியில் ரஜினியின் பயணம் ஆரம்பத்திலேயே சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...