திங்கள், 25 செப்டம்பர், 2017

நீலச் சாயம் வெளுத்துப்போச்சு

தற்போதைய கமல்ஹாசன் பேட்டிகளில் அவர் இதுவரை தென்பட்ட கருப்பு சட்டை,பகுத்தறிவு,பெரியாரை சிந்தனைகள்,இடதுசாரி முற்போக்கு எண்ணங்கள் மறைந்து முற்றிலுமாக வலதுசாரி காவித்தனம் மெருகேறுகிறது.

அறிமுகப்படுத்தும் போதே இடதுசாரிகள்,கா ங்கிரஸ்,திமுகவால் சரியான நடைமுறை இல்லை என்று சொல்லிய பணமதிப்பிழப்பை மோடி செய்தது சரி.ஆனால் நடைமுறையில் சரிவரவில்லை என்று பகிரங்கமாக ஆடிட்டர் குருமூர்த்தி போல் பேசுவதும்,மோடி சிறப்பாக செயல்படுகிறார் பயனுக்கு மக்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்பதும் மோடிவித்தை க்கு ஆதரவாகவே கமல் தெரிகிறார்.

இதுவரை மத்தியில் மோடி அறிவித்த எந்த திட்டங்களும் ,புதிய இந்தியாக்களும் பலனை தந்ததாக வரலாறே இல்லை.
மூன்றாண்டுகளில் செய்ய முடியாததை இன்னும் எத்தனை ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் மோடி செய்து சாதனை படைப்பார்.2099 வரை கொடுத்தால் சரிவருமா கமல்ஹாசன் அவர்களே ?அதற்குள் இந்தியா ஒழிந்து புதிய இந்தியா வந்து விடுமா?

தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது அதற்கு வழிகாட்டி பாஜக மத்திய அரசை பாராட்டுவது எந்தவகையில் சரியாகும்.

காவிரி மேலாண்மை ஆணையம்,ஜல்லிக்கட்டு,நீட் தேர்வில் ஏமாற்று என்று பாஜக மோடிஅரசு தொடர்சியாக தமிழ் நாட்டு மக்களை வஞ்சகம் செய்யும் மோடியை பாராட்டுவது இந்திய அரசியலில் மற்றோரு நிதிஷ் குமாராகத்தான் கமல்ஹாசனை வளர்க்கும்.

 அரசியல் குதிப்பு கமல்ஹாசனை முதலில் அறிவிப்பு வெளிவரும் போது பெருவாரியாக ஆதரித்தது அவரின் இடதுசாரி,பகுத்தறிவு எண்ணங்கள் வெளிப்பாடுகளுக்குத்தான்.அவரின் அரசுக்கு எதிரான,ஊழலுக்கு எதிரான கருத்துக்கள் வரவேற்பை பெற்றதும் அதற்குத்தான்.

ஆனால் அரசியல் சாக்கடையில் இறங்கும் முன்னரே அவரின் "நீலச் சாயம் வெளுத்துப்போச்சு டும் ,டும் ,டும் "

பாட்டு அவருக்கே சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
"அன்பே சிவம் "கமல்ஹாசனாக வருவார் என்று பார்த்தால் தசாவதார "விஷ்ணு தாச ரங்கராஜ நம்பியாக "வருவது நிச்சயம் ஏமாற்றம்தான்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...