சனி, 10 டிசம்பர், 2016

அயோக்கிய சிகாமணிகள்!500,1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார் மோடி.அதற்காக 6 மாதங்கள் திட்டமிட்டதாகவும்.அதை மிகப்பிரம ரகசியமாக வைத்திருந்ததாகவும் மோடி,ராஜ்நாத் சிங் போன்றவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.
ஆனால் நாட்டில் நடப்பதைப்பார்த்தால் அவர்கள் ரகசியம் என்ன லட்சணம் என்பதும்,அவர்கள் அப்பாவி மக்களிடம் மட்டும்தான் அதை ரகசியமாக வைத்து சொந்தப பணத்தை எடுத்து செலவிடவே முடியாதபடி ஆப்பு வைத்திருப்பது தெரிகிறது.
பாஜகவினர் இந்தியா முழுக்க ஆடிய திரு விளையாட்டல் இதோ:-
 8ந்தேதி ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பு வெளியாகி சரியாக ஒரு மாதகாலம் ஆகியுள்ளது. நாடே ஏடிஎம் முன் நிற்கிறது.

 ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களும், அவற்றின் பிரமுகர்களும் தான் இந்த ஒரு மாதத்திலும் அதற்கு முன்பும் தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை பல்வேறு வழிகளை கையாண்டு வெள்ளையாக மாற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பீகார்

கடந்த நவம்பர் 25ம்தேதி பீகார் மாநில பாஜகவின் சார்பாக நிலம் வாங்கப்பட்டது குறித்த சர்ச்சை எழுந்தது. அம்மாநில பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுசில் மோடி, பாஜக வாங்கியுள்ள நிலம் குறித்த சர்ச்சை தேவையற்றது என்றும், நாங்கள் கடன் பெற்று நிலங்களை வாங்கியுள்ளோம் என்றும் கூறியிருந்தார். 

ஆனால் அடுத்த நாள் (நவம்பர் 26) முழு விவரமும் வெளிவந்தது. சுசில் மோடி சொன்ன கூற்றுகள் அனைத்தும் பொய் என்பது அம்பலமானது. பிரதமர் நரேந்திர மோடியின் நவம்பர் 8ந்தேதி அறிவிப்புக்கு முன்னரே ரூ.2 கோடிக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனையாக பாஜக நிலம் வாங்கியதாக பீகார் மாநில வருவாய்த்துறையிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. 
அதன்படி பீகார் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ரூ.2.07 கோடிக்கு 5 இடங்களில் நிலங்களை பாஜக வாங்கியுள்ளது.

இந்நிலங்களை வாங்குவதற்காக அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட ஒப்புதல் கடித நகலும் ஆதாரமாக வெளிவந்துள்ளது. 
• பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திகா சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவருமான சஞ்சீவ் சார்ஜிஸ்ஷா, மாநில துணைத் தலைவர் லால் பாபு பிரசாத், மாநில பொருளாளர் திலீப் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.

பாஜகவின் மேற்குவங்க மாநில கிளையின் சார்பாக நவம்பர் 1 முதல் 8ம்தேதிக்குள் ரூ.3 கோடி ரூபாய் பாஜகவின் வங்கி சேமிப்பு கணக்கில் க/கு எண் (554510034) இந்தியன் வங்கி மத்திய கொல்கத்தா கிளையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சஞ்சீவ் காம்போஜ் நவம்பர் 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்பாகவே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ.2000 கரன்சி நோட்டுகளோடு தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கு முன்பாக பாஜகவின் மூத்த தலைவருக்கு புதிய ரூ.2000 நோட்டு எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்தது.

கர்நாடகா

நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்கையில் பாஜகவின் கர்நாடக மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி 650 கோடி செலவில் திருமணத்தை நடத்தினார். 
பாஜகவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தலைவர்கள் சப்தமில்லாமல் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை புரோக்கர்களை வைத்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தின.

தமிழ்நாடு

கடந்த நவ. 26ஆம் தேதி தமிழகத்தில் சேலத்தை அடுத்துள்ள அஸ்தம்பட்டியில் காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள் (கணக்கில் வராத பணம்) பிடிபட்டது. 

பிடிபட்டவர் சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஜே.வி.ஆர். அருண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் மீதான மக்களின் விமர்சனத்திற்கு தனது முகநூல் பக்கத்தில் மிக கடுமையான பதில் பதிவை வெளியிட்டவர்.

. ‘தேசத்தைக் காப்பாற்ற 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கடா’ என்று மக்களை வசைபாடிய தேசபக்தர் இவர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.2 கோடி பெறுமான நிலங்களை பாஜக வாங்கியுள்ளது. இந்த நிலங்கள் கட்சியின் அலுவலக செயல்பாட்டுக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2 கோடிக்கு திடீரென நிலங்களை வாங்கி குவித்திருப்பது ஏன் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

ஒடிசா

ஒடிசா மாநிலத்தில் எப்போதுமில்லாத வகையில் கடந்த ஐந்து மாத காலத்திற்குள் 18 மாவட்டங்களில் பாஜகவின் மாவட்ட அலுவலக செயல்பாட்டிற்காக ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆ.எஸ்.சுர்ஜேவாலா அம்பலப்படுத்தியுள்ளார். 
பாஜக தலைமையிடம் இருந்த கறுப்புப் பணம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதன்படி பாஜகவின் பொறுப்பாளர் சுரேந்திர நாத் லத் என்பவரது பெயரில் கேந்திர பாரா மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாங்கப்பட்டுள்ளது. 
கடந்த செப்டம்பர் மாதத்தில் சுரேந்திர நாத் லத் 0.23 ஏக்கர் ஜகத் சிங்பூரில் ரூ.8.25 லட்சத்திற்கும் நிலம் வாங்கியுள்ளார். அக்டோபர் மாதத்தில் பெர்ஹாம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே 10,000 சதுர அடியிலான நிலம் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளது.

உ.பி., 
ஹரியானா

உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்திலும் பாஜக நிலங்களை வாங்கி குவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக மத்திய அமைச்சர் 300 ஏக்கர் நிலங்களை ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் வாங்கி, கறுப்புப் பணங்களை வெள்ளையாக மாற்றியுள்ளார்.
கேரள மாநிலத்தில் , மக்கள் ஊழல் தொடர்பான் புகார்களை தெரிவிக்க புதிதாக இரண்டு அலைபேசி  செயலிகளை கேரள அரசு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 
சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர்  பினராய் விஜயன் , ’அரைசிங்கேரளா’ மற்றும் ’விசில் நவ்’ என்ற இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தினார். 
பின்னர் இது குறித்து அவர் , "இந்தஇரு  செயலிகளை கொண்டு மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் ஊழல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் . இவை இரண்டும் கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் வடிவமைத்துள்ளனர்.ஊழல் தொடர்பான தகவல்களை கொடுப்பவர்களுக்கும் , குற்றவாளிகளை பிடிக்க உதவுபவர்களுக்கும் விசில்ப்ளோவர் விருது வழங்கப்படும் "என அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக(கொடி)?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...