வியாழன், 4 ஜூன், 2015

பலமுகங்கள்.


முப்பாட்டன் முருகனுக்கு வேல் தூக்கியும் சைமனால் தமிழர்களை ஏமாற்ற முடியலையே?
பொய் சொல்ல அஞ்சாத இவர் இதுவரை பேசியவைகளில் 8.15 சதவிகிதம் மட்டுமே பொய்யாக இருக்கலாம் என்று இவரை விட்டு விடலாமா?

தீக்குளிக்கும் இனிய நாள் என்றோ?
============================================================================================= 

 மேகி நூடுல்ஸில் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் காரீயம் இருப்பதாக வந்த செய்திகளையடுத்து, தமிழகத்திலும் உணவுப் பொருள் மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆய்வுகளை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 65 மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 17 மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன. இவற்றில் 7 மாதிரிகளுக்கான சோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில், 6 மாதிரிகளில் காரீயத்தின் அளவு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.
4 பிராண்டுகளுக்குத் தடை
நெஸ்லே நிறுவனத்தின் மேகி, வை வை எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ்ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2006ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் படி இந்த நூடுல்ஸ்களை தமிழகத்தில் தயாரிக்க, சேமித்துவைக்க, விற்பனை செய்ய மூன்று மாதங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடைகளிலிருந்து இந்த நூடுல்ஸ்களைத் திரும்பப் பெறவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடைகளில் விற்கப்படும் உடனடி நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயமும் மோனோ சோடியம் க்ளூடோமேட் என்ற உப்பும் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, தில்லி, உத்தராகண்ட், காஷ்மீர், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே  மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடைவிதித்தன.
அசாமில் மேகி ஆய்வு.
========================================================================
அருண்ஜெட்லியின் பலமுகங்கள்.

மத்தியில்ஆளும் பாஜக அரசின் நிதி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறைகளின் அமைச்சராகவும், பா.ஜ.க.வின் முடி வெடுக்கும் அதிகாரம்கொண்ட மூவர்குழுவில் மோடி, அமித்ஷா வுடன் மூன்றாவது இடத்திலும் உள்ள அருண்ஜெட்லி தன்வாழ் நாள்முழுவதும் இரட்டைவேடதாரியாக விளங்கி வருபவர் என்பதை ‘தி கேரவன்’ ஆங்கில ஏடு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.

நிலக்கரி ஒதுக்கீட்டில்

2012ல் இவர் மாநிலங்களவையில் பாஜக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது மன்மோகன்சிங் அரசில், நிலக் கரி ஒதுக்கீடு பற்றிய புகார் எழுந்தது. மாநிலங் களவை எதிர்க்கட்சித்தலைவராக இருந்த இவர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜூடன் இணைந்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட் டார்.
 “நாங்கள் நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம். 
இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல. பொதுமக்களின் மகத் தான நன்மைக்காக நமது பொருளாதார ஆதாரவளங்களைப் பாதுகாக்கும் போராட் டம்” என்று முழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம், ‘தன்னிச்சையானது’, ‘பாரபட்சமானது’, ‘ஊழல்’ என்றெல்லாம் வர்ணித்தார். ‘தி இந்து’ நாளேட்டில் `பாதுகாக்கஇயலாதவற்றைப் பாதுகாக்க’ என்று கூறி அரசுக்கு இழப்பு ஏற்படுவதைச் சகித்துக் கொள்ளமுடியாது என்றார். இது அவரது ஒருமுகம்!
கார்ப்பரேட்களின் நண்பராக

ஆனால் இதற்குச் சில ஆண்டுகள்முன் ’ஸ்ட்ராஜெடிக் எனர்ஜி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற டாடா சன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க நிறுவனங்களின் மாபெரும் கூட்டு நிறுவனத்துக்கு அதன் வழக்கறிஞர் என்ற முறையில் அற்புதமான சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
 2008ல் அந்த நிறுவனம் நிலக்கரி ஒதுக் கீட்டுக்கு விண்ணப்பித்தபோது அதனால் மிகப்பெரும் லாபத்தைப் பெறவுள்ள அந்தநிறுவனம் தனது லாபத்தில் ஒருபகுதியை அரசுக்கு அளிக்கலாமா? 
எனச் சட்ட ஆலோசனை கேட்டது. ’பொதுமக்களின் மகத்தான நன்மைக்காக நமது பொருளாதார ஆதாரவளங்களைப் பாதுகாக்கும்’ இந்தப்புண்ணியவான் தனது 21பக்க ஆலோசனையில், ‘சட்டப்பூர்வமாகத் தனது லாபத்தை அந்த நிறுவனம் அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசிய மில்லை’ என்றார் -இது அவரது இன்னொரு முகம்!

பிரசார் பாரதியில்

இந்திய நாட்டில் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச்சுதந்திரமாகச் செயல்படும் அமைப் பாக நீதித்துறை உள்ளது. அதுபோலவே ‘தூர்தர்ஷன்’, ‘ஆல் இண்டியா ரேடியோ’ என்ற தகவல் ஒலி/ஒளிபரப்புத்துறை நிறுவனங்கள் இதுவரை செயல்பட்டு வந்தன. இவற்றின் சிறகுகளை வெட்டிக் கூண்டுப்பறவையாக்கும் முயற்சியில் இப்போது அருண்ஜெட்லி இறங்கியுள்ளார். 
பிர சார் பாரதியின் தலைவராக சூர்ய பிரகாஷூம், முதன்மைச் செயல் அலுவலராக ஜவஹர் சர்க்காரும் உள்ளார்கள் ‘பிரசார்பாரதி சட்டப் பிரிவின்படி தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடி யோ போன்றவற்றில் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் நியமனக்குழுவைக் கலந்து நியமிக்கும் அதிகாரம் பிரசார் பாரதியினுடையது.
 பிரசார் பாரதி யின் சுதந்திரமான செயல்பாட்டைப் பறித்துஅதன் சிறகுகளைவெட்டித் தனதுகருத்துக் களைமட்டுமே ஒளி/ஒலிபரப்பும் கூண்டுக் கிளியாக மாற்ற முனைந்துள்ளார் அருண் ஜெட்லி.

வீணாஜெயின் நியமனம்

தூர்தர்ஷன் செய்தித்துறையின் டைரக்டர் ஜெனரலாக வீணாஜெயின் என்பவரை அருண்ஜெட்லி தன்னிச்சையாக விதிகளை மீறி நேரடியாக நியமனம் செய்துள்ளார். 
இந்த நியமனத்துக்கான உத்தரவின் நகல் கூட பிரசார்பாரதியின் தலைவருக்கு அனுப் பப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 30 அன்று எல்லா வானொலிநிலையங் களுக்கும் `அந்த நிலையங்கள் ஒலிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளின் உள்ளடக்கங்களை யும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவேண்டும்’ என்றும் `அவற்றின்மீது அமைச்சகம் அளிக்கும் விளக்கங்களுக்கேற்பச் செயல்படவேண்டும்’ என்றும் ஓர் உத்தரவுசுற்றறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டுள் ளது. 
இது தனது அரசு, எதைப்பொதுமக்கள் கேட்கவேண்டும் என்று கருதுகிறதோ அதை மட்டுமே ஒலிபரப்பச் செய்யும் தந்திரமாக அருண்ஜெட்லி கையாண்டுள்ளார். இது அருண்ஜெட்லியின் ஒருமுகம்!
எல்லாம் சட்டப்படியே...! 
பிரசார் பாரதியின் தலைவர் சூர்யபிரகாஷ் பிரசார்பாரதி சட்டத்திற்கு முரணான இந்தநடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் தலைவராக ஒய்.சுதர்சன்ராவையும், பாடத்திட்டக் குழுவில் மாமேதை(!) தீனநாத் பாத்ராவையும் நியமித்ததுபோல பிரசார்பாரதிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் கையாள் ஒருவரைத் தலைவராகக் கொண்டுவர அருண்ஜெட்லி முயற்சிக்கக் கூடும். ஆனால் அவர் வெளியே என்ன கூறுகிறார்? 
`நாங்கள் ஊழலுக்கு அப்பாற் பட்டவர்கள். சட்டத்தின்படியே எங்கள் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. நீதி மன்றம் மற்றும் பிரசார்பாரதி உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்” 
இது ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ 
என்பதுபோன்ற அப்பாவித் தோற்றம் காட்டும்அருண்ஜெட்லியின்  இன்னொரு மதவெறி முகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...