வெள்ளி, 21 ஜூன், 2013

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?



இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு.
அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.


இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு.
ஒரு பெரிய திடல்.
அங்கே ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். அங்கே இருக்கிற புல்வெளியில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில் கருப்பு ஆடுகளும் இருந்தன.
வெள்ளை ஆடுகளும் இருந்தன.
அங்கே ஆடு மேய்க்கிறவன் எதிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.
குழப்பப்படுவது - குழம்புவது இரண்டுமே அவனுக்கு பிடிக்காது.
அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார்.
தம்பி இங்கே ஆடு மேய்க்கிறீயா...?
ஆமாம்
உன்கிட்டே சில விவரம் கேட்டு தெரிஞ்சிக்கலாம். எதுவா இருந்தாலும் தெளிவாக கேளுங்க... பதில்ö சால்றேன்...!
இந்த மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள்....?
பார்த்தீங்களா? குழப்பமாக கேக்கறீங்க....!
வேற எப்படிக் கேட்கணும்ங்கறே?
நீங்க. கறுப்பு ஆட்டை கேக்கறீங்களா? வெள்ளை ஆட்டை கேக்கறீங்களா?
கறுப்பு ஆடு எத்தனை?
அப்படி கேளுங்க... கறுப்புஆடு ஐம்பது இருக்கு
வெள்ளை ஆடு?
அதுவும் ஐம்பது தான்!.
பெரியவர் அடுத்த கேள்வியை கேட்டார்.
இந்த ஆடெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் சாப்பிடும்?
மறுபடியும் குழப்புறீங்க!
என்ன சொல்றே?
கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?
கறுப்பு ஆடு...!
10 கிலோ சாப்பிடும்.
சரி வெள்ளை ஆடு....?
அதுவும் 10 கிலோ சாப்பிடும்?
பெரியவர் லேசாக குழம்ப ஆரம்பித்தார். அடுத்த கேள்வி...
இதெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கறக்கும்?
மறுபடியும் தெளிவாக கேளுங்க.... கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?
கறுப்பு ஆடு...!
ஐந்து லிட்டர் கறக்கும்
வெள்ளை ஆடு...?
அதுவும் ஐந்து லிட்டர் கறக்கும்.
பெரியவர் கொஞ்சம் குழப்பத்தோடு யோசிக்க ஆரம்பித்தார்.
அப்புறம் கேட்டார்
தம்பி எல்லாத்துக்கும் பதில் ஒண்ணாத்தானே இருக்கு.
ஆமாம்!
அப்படி இருக்கும்போது... எதுக்கு பிரிச்சி பிரிச்சி கேக்க சொல்றே...?
ஓ,.... அதை கேக்கறீங்களா... இதை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா தெளிவாக சொல்லியிருப்பேனே.. எதுக்காக அப்படி கேக்க சொல்றேன்னா....
இங்கே இருக்கிற அந்த கறுப்பு ஆடுகள் எல்லாம் எதிர்த்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானவை.
வெள்ளை ஆடுகள்....?
அதுவும் எதுத்த வீட்டுக்காரனுக்குத் தான் சொந்தம்
இதற்கு மேலும் இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு பைத்தியம் பிடித்து விடும் என்பதை உணர்ந்த அந்த பெரியவர்
சரி.. நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினார். 

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? என்பதை அந்த ஆடு மேய்க்கிறவனிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதை போலவே....
குழப்பமாய் பேசித் தெளிவு படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.
அந்த காலத்தில் சில சித்தர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள்.
சில புலவர்களம் அப்படி இருந்திருக்கிறார்கள்.
சித்தர்கள் பேசுவது குழப்பமாக தெரியும். அதன் உள்ளே பொருள் தெளிவாக இருக்கும்.
 =  +  = += 
அதற்கு ஒரு வேடிக்கையான உதாரணம் சொல்லலாம்.
ஓர் அரசன், அவனுக்கு ... காலில் அக்கி அது ஒரு வகை படை... தேமல் மாதிரி மன்னனுக்கே ஒ தொல்லை என்றால் மந்திரிகள் சும்மா இருப்பார்களா?
உடனே ஓடிப்போய் அரண்மனை வைத்தியரை கூப்பிட்டுகொண்டு வந்தார்கள்.
அவர் ஒரு சித்த வைத்தியர்.
சித்தர்களின் வைத்திய நூல்களையெல்லாம் கற்றவர்.
அவர் வந்தார்.
அரசனனின் காலை பார்த்தார்.
இதை குணப்படுத்துவது ரொம்ப சுலபம் என்றார். என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.
பொடுதலையை வச்சி கட்டினா சரியாயப்போயிடும். என்று சொன்னார். அது ஒரு வகை பச்சிலை. சொல்லிவிட்டு போய்விட்டார். அவசரமாக அடுத்த தேசத்துக்கு போக வேண்டியிருந்தது. அமைச்சர் உடனே அரண்மனை சேவகர்களை கூப்பிட்டார்.
பொடுதலை எங்கிருந்தாலும் உடனே கொண்டு வாருங்கள் என்றார்.
பொடுதலையா... அப்படின்னா... என்ன என்று தலையை சொறிய
அமைச்சருக்கு புரியவில்லை
அதனால் என்ன?
இருக்கவே இருக்கிறார்கள். அரசவை புலவர்கள். அவர்களை கூப்பிட்டு கேட்டார்.
அவரகள் உடனே அகராதியை எடுத்து புரட்டினார்கள். அதிலே அர்த்தம் போட்டிருந்தது.
அமைச்சர் யோசித்தார்.
உடனே கூப்பிட்டார் காவலாளிகளை
நம்ம தேசத்தில் முடியே இல்லாத தலை இருக்கிற ஒருத்தனைக் கண்டு பிடித்து கொண்டு வாருங்கள்.
காவலாளிகள் நாலாபக்கமும் ஓடினார்கள். ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபம். அங்கே அப்பாவியாக ஒருத்தன் உட்கார்ந்திருந்தான்.
இவன் தான் சரி என்றான் ஒருவன்.
அவனை வெருங்கினார்கள்.
புறப்படு என்றார்கள்
எங்கே? என்றான்.
அரண்மனைக்கு த
எதுக்கு..?
ராஜா கூப்பிட்டார் உன்னை
அவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏதோ ராஜ உபசாரம் நடக்கப்போகிறது என்று முடிவு செய்து கொண்டான்.
உடனே புறப்பட்டான்.
அரண்மனை மேல் பகுதிக்கு போனவுடன் இவன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டான். எதிரே வந்த அமைச்சரிடம்
இப்பவாவது சொல்லக்கூடாதா...?
எதுக்காக என்னை இவ்வளவு தூரம்...?
அமைச்சர் சொன்னார்.
ஓ.... அதுவா வேறே ஒண்ணுமில்லே நம்ம மன்னருக்கு கால்லே அக்கி. அரண்மனை வைத்தியர் வந்து பார்த்தார். பொடுதலையை வச்சிக் கட்டச் சொன்னார். பொடுதலையின்னா முடி இல்லாத தலை அதுக்கு உன் தலை தான் பொருத்தம்....
வந்தவன் அதிர்ச்சியடைந்தான்.
இப்போ... என்ன செய்யப்போறீங்க...?
உன்னோட தலையை ராஜா கால்லே வச்சி கட்டப்போறோம்.
அவன் கண்ணை மூடி எல்லா தெய்வங்களையும் வணங்கினான். கடைசியாக கேட்டான்...
சரிங்க... இந்த யோசனையை உங்களுக்கு சொன்ன அந்த அரண்மனை வைத்தியர் இப்போ எங்கே?
அவர் இப்போ இங்கே இல்லை... வெளி தேசம் போயிருக்கார்.
சரி பரவாயில்லை. அவரோட வீடு எங்கே இருக்கு... அதையாவது சொல்ல முடியுமா?
அதோ வடக்கே பார்... அங்கே தெரிகிறதே ஒரு குடிசை.. அது தான் அவர் குடி இருக்கிற இடம்.
வந்தவன் அந்த குடிசை இருக்கிற திசையை நோக்கி இரு கைகளையும் கூப்பியவாளே நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினான்.
அமைச்சர் குழம்பினார்.
எதுக்காக இப்படி செய்யறே?
இப்போதைக்கு எனக்கு கண்கண்ட தெய்வம் அந்த வைத்தியர் தான்.
என்ன சொல்றே?
உண்மையை தான் சொல்றேன்.
அந்த வைத்தியர் கருணையாகலே தான் இப்போநான் உயிரோடு உங்க முன்னாடி நின்னுக்கிட்டிருக்கேன். எனக்கு உயிர் பிச்சை போதெல்லாம் தெய்வம் அவர்.
ஒண்ணும் புரியலையே...?
ஐயா... நல்லவேளையாக அந்த வைத்தியர் பொடுதலையை வச்சிக்கட்டுக்கன்னு நசுக்கி வச்சு கட்டுங்கன்னு சொல்லியிருந்தா இந்நேரம் என் கதி என்னவாயிருக்கும்?
அர்த்தம் புரியாமல் போனால் எந்த அளவுக்கு ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள். சில குழப்பங்கள் தøமையை பிய்த்துக்கொள்கிற அளவுக்கு கூட கொண்டு போய் விட்டுடும்.

மார்க் ட்வைன் உங்களுக்கு தெரியும். புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். ஒரு நாள் ஒரு பத்திரிகை நிருபர் அவரை பேட்டி காணவந்தார்.
அந்த எழுத்தாளருக்கு பேட்டி என்றால் பிடிக்காது. எதையாவது சொல்லி தப்பித்து விடுவார். ஆனால் அவரை தேடி வந்த பத்திரிகை நிருபர் அவரை விட கில்லாடி. விடாக்கண்டன். எதையாவது பேசி எப்படியாவது ஆசாமிகளை கெட்டியாக பிடித்து கொள்வார். வேறு வழியில்லாமல் மார்க் ட்வைன் இவரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். தப்பிக்க வழியில்லை. வேறு என்ன செய்யலாம்? குழப்புவ9து தான் சரியான வழி என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.
சரி.. கேளுங்கள்...ö சால்கிறேன். என்று அவர் முன்னால் உட்கார்ந்தார். பத்திரிகை நிருபர் மெல்ல ஆரம்பித்தார்.
ஏன் சார்.... உங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாராவது இருக்காங்களா?
என்னகேக்கறீங்க...?
உதாரணத்துக்கு ஒரு சகோதரர்...?
ஆமாம்... ஆமாம்... ஒருத்தன் இருந்தான் என்று கூறி பெருமூச்சு விட்டார் எழுத்தாளர். நிருபர் அவரை கூர்ந்து கவனித்தார்.
ஏன் சார்... ஏதாவது கெட்ட செய்தியா...?
ஆமாம் அது ஒரு துயரம்
ஏங்க.... என்ன ஆச்சு அவருக்கு?
அதை ஏன் கேக்கறீங்க... அது ஒரு சோக கதை
அப்படின்னா...?
அவன் செத்துட்டான்..!
ஐயோ பாவம்...எப்படிச் செத்தார்?
அது தானே இன்னமும் எங்களுக்கு நிச்சயமாக தெரியலே...
என்ன சொல்றீங்க... எப்படி இறந்தார்ன்னு தெரியலையா...?
அப்படி இல்லே.. எங்களுக்கு சந்தேகம் என்ன... ன்னா அவர் இறந்துட்டாரா... அப்படிங்கறது தான்.
அப்படின்னா அவர் எங்காவது மறைஞ்சுட்டாரா....அல்லது அவரை இழந்துட்டீங்களா?
அப்படியும் அதை தீர்மானமாச் சொல்ல முடியாது. ஒரு வேளை அப்படியும் இருக்கலாம். ஏன்னா மரணம்ங்களதும் ஒரு“ இழப்பு தானே... அந்த வகையிலே பார்த்தா அது மரணம் தானே நிருபர் குழம்பினார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு பாக்கி இருந்து அவரிடம் ஆகவே தொடர்ந்துகேட்டார்.
நீங்க öன்ன சொல்றீங்க..? அவர் இறந்து போனதே நிச்சயமில்லலேங்கறீங்களா?
சரி.. அவ்வளவு தூரத்துக்கு ஏன்... நடந்தது என்னங்கறதை விவரமாவே சொல்லிப்புடறேன் கேட்டுக்குங்களேன்.
நிருபர் நம்பிக்கை யோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். கையில் இருந்த குறிப்பு புத்தகமும் பென்சிலும் சுறுசுறுப்பாக இயங்க காத்திருந்தன. அவுர் சொல்ல ஆரம்பித்தார்.
நாங்க ரெண்டுபேர்... இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஒருத்தர் பெயர் பில் இன்னொருத்தர் பெயர் ட்வைன் ஒரு நாள் குளித்து கொண்டிருக்கும்போது அந்த விபத்து நடந்தது. சின்னப்பையன் தொட்டியிலே மூழ்கி விட்டான்.
ஓ... அப்படியா? இப்பத்தான் எனக்கு புரியுது... உங்க சகோதரர் குழந்தையா இருக்கும்போதே செத்துட்டார். ங்கறீங்க
அப்படியும் சொல்ல முடியாது
என்ன சொல்றீங்க?
நாங்க இரட்டை குழந்தைங்க... எங்களில் யாரோ ஒருத்தர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். அது மார்க் ட்வைனா.... அல்லது பில்லாங்களது நிச்சயமாத் தெரியாது.
அப்படின்னா?
அதுதான் ஆரம்பத்துலேயே சொன்னேன்..
பில் இறந்து விட்டது சந்தேகம்..ன்னு
பேட்டி காண வந்த நிருபர் பேய் அறைந்தது போல் அதிர்ச்சிகுள்ளாகி.. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிப்போனாராம். அதன்பிறகு அவர் பத்திரிகை தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டதாக கேள்வி.

                                                                                                                                                  -தென்கச்சி கோ.சுவாமிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...