புதன், 22 மார்ச், 2017

ஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா மற்றும் ஓ.பன்னிர்செல்வம்  தரப்புகள்  விவாதம் தேர்தல் ஆணையத்தில் நடந்தது. 
இரட்டைஇலை முடக்கத்துக்கு முன்னர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நடந்த இந்த விவாதத்தின் போது நடந்த முக்கிய நிகழ்வுகள்.

தேர்தல் கமிஷனில்(22-ம் தேதி) காலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வாதம் நடந்தது. 
இதில் சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம் , மோகன் பராசரன் ஆகியோர் வாதாடினர். ஓ.பி.எஸ்., தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடினர். 
ஏற்கனவே ஓ.பி.எஸ்., தரப்பில் வாதாடிய  ஹாரீஸ் சால்வே சசிகலா தரப்பு கவனிப்பால்  வரவில்லை.

இந்த விவாதத்தில்,இடைத்தேர்தல் நடப்பதால் அவசரமாக  இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி மட்டுமே விசாரணை நடத்துவதாகவும்  பொது செயலாளர் பற்றி தனியாக  விசாரிப்பதாகவும்  தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
 முதலில் ஓ.பி.எஸ்., தரப்பினர் விவாதத்தை துவக்கினர். இதற்கு சசிகலா தரப்பினர் பதிலளித்தனர். அதற்கு  ஓ.பி.எஸ்., தரப்பினர் விளக்கமளித்தனர்.

ஓ.பி.எஸ்., தரப்பில் தற்காலிக பொது செயலாளர் பதவி என்பதே கிடையாது. மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர் என விளக்கமளிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ்., தரப்பில் மேலும், சசி
அறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டத்திற்கு புறம்பானது . 
இரட்டை இலை சின்னத்தை அளிப்பது, சசிகலாவை பொது செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம். 
சசிகலாவே போட்டியிட தகுதி இல்லாத போது அவர் எப்படி வேட்பாளரை அங்கீகரிக்க முடியும். சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளி. கட்சியின் பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
சசிகலா  தரப்பில் ஆஜரான அரிமா சுந்தரம் வாதிடுகையில். 
"1912 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். பன்னீர் செல்வம் அணியில் 65 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சசிகலா பொது செயலாளராக தொடர சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. அதிமுகவிற்குள் எந்த பிளவும்இல்லை.

எம்.பி.,க்கள், எம்எல்.ஏ.,க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பெரும்பாலான செயற்குழு பொதுக் குழு ஆதரவு தருகின்றனர். சட்டப்படி சசி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளதால், எங்களுக்கேஇரடடை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். உ.பி.,யில் அகிலேஷ்க்கு சைக்கிள் ஒதுக்கப்பட்டது போல், எங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என வாதாடினார்.
அதற்கு ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் இரட்டை இலையை ஒதுக்க கட்சி தலைவர் மதுசூதனனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எங்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும் " என்றார்.
ஓ.பி.எஸ்., ஆதரவு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் கூறுகையில்"தற்காலிக பொது செயலாளர் சின்னத்தை ஒதுக்க முடியாது. பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும்.பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் அவைத்தலைவர் சின்னத்துக்கு கடிதம் கொடுக்கலாம்." என்றார்.
சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து முடிவடைந்த நிலையில் வாதங்களைவைத்து இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி  ஆலோசனை செய்தார்.
இதையடுத்து நஜிம் ஜைதி (மார்ச், 22)  இரவு 11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 
" இரட்டை இலை யாருக்கும் இல்லை எனவும்,அச்சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாகவும் அஇஅதிமுக கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும்,எந்தவழியிலும்  பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால ஆணைதான். கடசிக்கு உரிமைகோரும் இருத்தரப்பினரும்,பொதுவாக  நடந்து கொள்ளவே இப்படியான ஆணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. "என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்தார். 
இதனால் இரட்டை இலையில் ஒரு இலைகூட ஒருவருக்கும்   இல்லை என்றாகிவிட்டது.
                                 இரட்டை இலை முடங்கினால் என்ன?
               இந்த "இரட்டை நாரை"சின்னமாக கேட்கலாமே? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...