வியாழன், 17 நவம்பர், 2016

மோடி ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.?

இன்று உலக சகிப்புத்தன்மை தினமாம்.

அதைவிட இந்திய மக்கள் தினம் என்று வைத்து விடலாம்.யார் ஆட்ச்சிக்கு வந்தாலும்  ஒன்றும் செய்யாமல் பணமுதலைகளுக்கு மட்டுமே ஆட்சி ,அதிகாரத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளை மீண்டும்,மீண்டும் வாக்களித்து  ஆடசியில் அமர்த்தும் சகிப்புத்தன்மை ஆப்ரிக்க நாடுகளில் கூட இருப்பதாக தெரியவில்லை.

அங்கு கூட சிறு குழுக்களாக பிரிந்து ஆயுதம் தாங்கி போராடியே வருகிறார்கள்.
இந்திய மக்களின் சகிப்புத்தன்மையை இன்று உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார் மோடி.அவரது ஆலோசகர்களான ஆர்.எஸ்.எஸ் ,கூறுகிற ஆடசி முறையை கவுடில்யரின் அர்த்த சாஸ்திரப்படி ஆடசி நடக்கிறது.

500,1000 செல்லாது என்பது கள்ள,கருப்புப்பணத்தை ஒழித்து விடுமாம்.இது அகல மார்பு பிரதமர் மோடியின் முலையில் உதித்து ஆறு மாதம் வியூகம் அமைத்து கள்ள,கருப்புப்பணத்துக்கு  நடத்தப்பட்ட தாக்குதலால்.

இதை செய்ததால்கள்ள,கருப்புப்பணம்  பலர் மோடியை கொல்லும் எண்ணத்தில் கையில் கத்தியுடன் அலைகிறார்களாம்.

இன்று 4000 மாற்ற வரிசையில் ஊழல் செய்தவர்கள்தான் நிற்கிறார்களாம்.
எவ்வளவு ஏமாற்றுத்தனம்.இதை செய்தியாக வெளியிட ,பரபரக்க வைக்க ஒரு ஊடக கும்பலும்,அறிவுஜீவிகள் (?)கும்பலும்,சமூக ஆர்வலர் கும்பலும்,பொருளாதார நிபுணர்களும் களமிறங்கி மோடியின் செயற்கரிய செயலை தொலைக்காட்ச்சிகள்,நாளிதழ்களில் பாராட்டி,ஆராதித்து வருகிறார்கள்.

500,1000 செல்லாது என்று அறிவித்தால் 1946 இல் அன்றைய அரசு அறிவித்தது.
அதன் பின்னர் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போய் விட்டதா?
அதன் பின்னரும் அப்படி ஒரு முறை அறிவித்தனர் பின்னரும் கள்ள ,கறுப்புப்பணம் இல்லாமல் போகவில்லையே.
ஏன்?
முதலில் கள்ள ,கறுப்புப்பணம் எப்படி வருகிறது என்பதை அறிந்து அதை அரசு தடுக்க வேண்டும்.அதற்கான எல்லா அதிகாரமும் அதனிடம் மட்டும்தான் உள்ளது.
500,1000 வைத்திருக்கு அப்பாவிகளிடம் அல்ல.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யார் என்று பார்த்தால் மோடி போன்று அரசியல் செய்யும்  அரசியல்வாதிகள்,பெரும் வணிகர்கள்,கார்பரேட்கள்  ஆனால் அவர்கள் யாரும் ஆட்ச்சியாளர்களாய் அருகில் இருக்கிறார்கள்.அதிலும் இதுவரையில் இருந்த அரசியல் தலைவர்களை விட மோடிதான் பகிரங்கமாக பணமுதலைகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்,திட்டங்கள் தீட்டுகிறார்,ஆட்சியையே நடத்துகிறார்.
அதானிக்கு 2000கோடிகள் வங்கிகளில் கடன் கொடுக்க சொன்னது முதல் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கம் குத்தகைக்காக நேரடியாக ஆஸ்திரேலியா சென்று பேசியது,பயந்த திட்டத்திலேயே இல்லா பாகிஸ்தானில் இறங்கி அதானி தொழிலுக்கு தரகு வேலை பார்த்தது என்பது முதல்,அம்பானி ஜியோவுக்கு விளம்பர தூதராக போஸ் கொடுத்தது வரை பட்டியல் உள்ளது.
பின் எப்படி அயல்நாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணத்தை எடுத்து இந்திய மக்கள்தலைக்கு 12 லட்சம் வாங்கிக்கணக்கில்போடுவார்?
அமிதாப் உட்ப்பட்ட பெருந்தலைகள் பனாமா வங்கிகளில் குவித்த கோடிகள் ஆதாரத்துடன் வெளிவந்ததற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?அமிதாப்புக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆலோசனைதான் நடத்தப்பட்டது.
இந்த கருப்புப்பணம் ,கள்ளப்பணம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எதிர்ப்பான கருத்து கிடையாது.
பொது மக்களை பொறுத்தவரை அவை இரண்டுமே அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் .ஆனால் அரசியல்வாதிகளுக்கும்,ஆள்வோருக்கும் அது தேர்தல்தோறும் வைக்கப்படும் பரப்புரை வாக்குறுதி மட்டுமே.
மோடி அரசு தற்போதைய கருப்புப்பணம்,கள்ளப்பணம் ஒழிப்பு ,500,1000ரூபாய்த்தாள்கள் ஒழிப்பு எல்லாம் சரிதான்.தேவையானதும் கூட.
ஆனால் அதை அவர் நடைமுறை படுத்திய விதம்தான் துக்ளக் ஆட்ச்சியை விட முட்டாள்தான் நிறைந்தது.அதைவிட கேவலம் அதை குறிப்பிட்ட சிலர் வானளா வ  புகழ்வது.   குமுதம் ரிப்போர்ட்டர் மெகா ஆ த்மா என்கிறது.கல்கி உலகநாயகன் மோடி என்கிறது.(கமல் பட்டத்தை களவாடி)தினமலர் தினசரி வாழ்த்துப்பா பாடுகிறது. 
முதலில் செல்லாது என்று அறிவிக்கப்படும் பணத்துக்கு பதிலாக புதிய பணத்தை அச்சிட்டு தயாராக வைத்திருக்க வேண்டும்.அவைகளை புழக்கத்தில் விடப்போவதாக கூறி எல்லா வங்கி கிளைகளுக்கும் அனுப்பி தயாராக வைத்திருக்க வேண்டும் .இன்றைய அன்றாடம் காய்ச்சிகளுக்கு  பணம் காய்க்கும் மரம் ஏ.டி .எம்,கலீல் அப்பணம் அடுக்கி வைக்கும் விதமாக இடம்,மென்பொருள் எல்லாமே தயாரித்து வங்கிகளுக்கு அவற்றை பொறுத்த கூறியிருக்க வேண்டும்.
ஆனால் இவை எதுவுமே மோடி அரசால் செய்யப்படவில்லை.இதற்கு 6 மாதம் ஆலோசனை,திட்டமிடல் செய்தார்களாம்.அப்படி என்ன திட்டமிட்டார்கள்?

பெரும் பணமுதலைகள்,கன்டெய்னரில் பணம் கடத்துபவர்களுக் பணம் மாற்றிக்கொள்ளும்  கால அவகாசம்தானா 6 மாதம்.?
மக்களை வங்கிகளில் வரிசையில் நிற்கவைத்து விட்டு மெதுவாக பணம் அச்சிட்டு அனுப்பப்படுகிறது.ஏ.டி .எம் கள் இன்றுவரை புதிய பணம் வைக்க மென்பொருள்,இடம் மாற்றம் செய்யப்படவில்லை.

ரூ.14.18 லட்சம் கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30க்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டும். இது சாதாரண பணி அல்ல. 

இதனை நன்கு புரிந்து கொள்ள  சில உண்மை விபரங்களை அறிந்து கொள்ளவ்து அவசியம்.
 இன்று வங்கிகளிடம் உள்ள தொகை ரூ.76,000 கோடிகள் மட்டும்தான்.வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.9 லட்சம்கோடிகள். 

ஆனால் வங்கிகள் சில வாரங் களில் ரூ.14.18 லட்சம் கோடி மதிப்புள்ள பழையநோட்டுகளை வாங்க வேண்டும். 
அதே சமயத்தில் இதே அளவு உள்ள புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும். 
இந்த இமாலய பணியை செய்வதற்கு ஊழியர்கள் உட்பட வசதிகள் வங்கிகளிடம் உண்டா என்றால் இல்லை.

புதிய தாள்கள் அறிமுகம் செய்ய வேண்டும் எனில் சுமார் 2400 கோடி அளவிற்கு 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் தேவை. அதாவது 24 கோடி பண்டல்கள் தேவை. இவை ரிசர்வ் வங்கியிலிருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக திட்டமிட்டதாக கூறப்படும் இந்த திட்டத்துக்கு இதுவரை போதிய அளவு ரூபாய் தாட்கள் அச்சிட்டு  வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை.
இந்தியாவில் சுமார் 2,01,861 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன.  69 கோடி ஏ.டி.எம். அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம்ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.7305கோடி பணம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனினும் இன்றைய நிலையில் சுமார் 10,000 (50ரூ) ஏ.டி.எம். இயந்திரங் கள்தான் செயல்படுகின்றன.  ரூ100ரூபாய் தாள்கள் மட்டுமே பயன் படுத்தப்படுவதால் ஒரு இயந்திரத்திற்கு 2,20,000 ரூபாய் மட்டுமே வைக்கப்படுகிறது.
அதாவது 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ரூ 2200 கோடி ரூபாய்நிரப்பப்படுகிறது. ஆனால் சராசரி தேவையோ ரூ 7305 கோடி!
எனவேதான் 1,00,000 ஏ.டி.எம். இயந்திரங்கள் விரைவில் காலியாகிவிடுகின்றன. ட ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் 20 லட்சம் ரூபாய் நிரப்ப முடியும். 
ஆனால்2,20,000 தான் நிரப்பப்படுகிறது. 
ஏன்?
இயந்திரத்தில் ரூ1000,ரூ500 மற்றும் ரூ.100 ரூபாய் தாள்கள் நிரப்ப முடியும்.ஆனால் தற்பொழுது ரூ100 தாள் மட்டுமே வைக்கப்படுவதால் இயந்திரத்தில் நிரப்பப்படும் தொகை மிகப் பெரிய சரிவை காண்கிறது.  புதியதாக வெளியிடப்பட்ட ரூ.2000 தாளை இயந்திரத்தில் வைக்க முடியவில்லை.


நாட்டின் மொத்த பணத்தில் சுமார் 86% உள்ள இரண்டு நோட்டுகளை வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் 99.8% பயன்பாட்டிலிருந்து செல்லாதது என்று அறிவிக்கும்போதே அதை ஈடு செய்யும் மற்ற நோட்டுகளை அதிகமாக புழக்கத்தில் விடாமல் ஏதுமறியா அப்பாவி மக்களை அலைக்கழித்தது அவரின் திட்டமிடலில் உள்ள அறியாமையை காட்டுகிறது.

இரண்டு நாட்களில் நிலமை சீரடைந்துவிடும் என்று பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து இன்னும் 50 நாட்களில் நிலமை சீராகிவிடும் என்று இன்னொரு குருட்டு பொய்யை சொல்லியிருப்பது அவரின் திட்டம் குறித்து அவருக்கே தெளிவான பார்வை இல்லாததை காட்டுகிறது.

  வாரத்திற்கு வெறும் ரூ 20000 என்று அறிவித்து பின்னர் அதை ரூ 24000 என்று அதிகரித்தது. மற்றும் இரண்டு நாட்கள் கழித்து மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பின்பு மூன்று நாட்கள் சுங்கசாவடிகளில் கட்டணம் கட்ட தேவையில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் அதை ஒருவாரம் என்று மாற்றியது.
இவை, மக்களின் அவசியங்கள் / தேவைகள் குறித்த சரியான புரிதல் இல்லாமல் களத்தில் இறங்கியதை காட்டுகிறது.
இன்னமும் பல கோடி மக்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்குகள் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் 90% மையமாக கொண்டு ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தியதும், அதற்கு சரியான மாற்று வழிகளை கொடுக்காததும் அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பிரதமருக்கு இருக்கவேண்டிய சாதாரண அக்கறையை கூட கேள்விக்குறி ஆக்குகிறது.
இத்தனை குளறுபடிகளையும் செய்துவிட்டுஇத்திட்டம் கொண்டுவந்ததற்காக தன்னைத்தானே செல்பி எடுத்து புகழ்ந்து கொள்ளும்  மோடி பொது கூட்டங்களில் மூன்றாம்தர அரசியல்வாதியை போல கண்ணீர்விடுவதும், தன்னுடைய பாதுகாப்பையே உலக அரங்கில் கேள்விக்குறியாக்கி ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு திறனையே வலிமையற்றதாக கருத வைப்பதும்.

மீண்டும் மீண்டும் தன் கட்சிகாரர்களை வைத்து நாட்டில் எல்லாரும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று பொய் சொள்வதும்.அதை வியா அவர் கடசியினர் பணம் செல்லாது அறிவிப்பால் உயிரிழந்த ஏழை மக்களை பார்த்து  130 கோடி மக்களில் 16 பேர் செத்தால் என்ன குறைந்துவிட போகிறது என்று வக்கிரமாக பேட்டி கொடுப்பதும் எவ்வளவு பெரிய அசிங்கம்.அவமானசெயல்.
வெறுமனே திட்டங்கள் மட்டுமே ஒருமக்கள் தலைவரை  உருவாக்கிவிடாது.  அத்திட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்துவதில்தான் திறமை இருக்கிறது.
அதில் மோடி பட்டவர்த்தனமாக தோற்றுபோய்விட்டார் என்பது மட்டும் தான் உண்மை.
இந்திரா காந்தி வங்கிகளை தேசவுடமையாக்கினார் .கலைஞர்  கருணாநிதி போக்குவரத்தை அரசுடமையாக்கினார்.அவை மக்களுக்கு பெரும் நன்மையாக முடிந்தது.

கருப்புப்பணம் பதுக்குபவர்கள் 500,1000 மாகவா கட்டி வைத்திருப்பார்கள்?ஹவாலா மூலம் வெளிநாட்டில் டாலர்களாக வங்கிகளிலும்,உல்லாச தீவுகளாகவும்,ஆடமபர ஓட்டல்களாகவும் அல்லவா இருக்கிறது.சிலருக்கு இந்தியாவிலேயே நிலம்,பங்களாக்கள்,நகைகள் மேலும் பினாமி பெயர்களிலும் சொத்துக்களாக இருக்கிறது.

கள்ளப்பணம் பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்றால் அது வரும் வழியில் கண்காணிப்பை பெருக்கி தடுப்பதுதானே கள்ளப்பணத்தை தடுக்கும் முறையான வழியாக இருக்கும்.

இவை எல்லாம் தெரியாமலா அரசு இருக்கிறது.தெரிந்தும் பொது மக்களை வதைத்து தான் உத்தம புத்திரன் என்று மோடி காட்டுகிறார்.

நமது ஊர் நத்தம் விசுவநாதன்,அன்பு நாதன் வகையறாக்களே இப்படி முதலீடு செய்யும் போது பகாசுர முதலாளிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.

ஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கலாம் என்று சொல்லி விட்டு  ஒரு வாரம் கழித்து தேர்தல்  "மை" வைக்கும் நிலைக்கு கொண்டு வந்தது.

ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதை  தடுக்க விரலில் மை என்றால், கடந்த 7 நாட்களாக அவ்வாறு செய்யாமல் திடீர் புத்தி வரக்காரணம்.?

போதுமான பணம் புழக்கத்தில் விட வங்கிகள் ,அரசு கைவசம் இல்லாததுதானே ?
சென்ற வருடம் வாராக் கடன் இனி வசூலிக்க முடியாது என்று பெரும் தொழிலதிபர்களிடம்,கார்பரெட்களிடம் வாங்காமல்  வங்கிகள் கைகழுவிய  பணம் 1.14 லட்சம் கோடி..
  
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?

செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத அடையாள மை வைப்பதற்கான முயற்சியில் மோடியின் பாஜக அரசு இறங்கியுள்ளது. இது, பொதுமக்களை கருப்புப்பணம் வைத்திருப்பவர்களாகவும் ,ஊழல்வாதிகளாகவும் காட்டி அவர்களிடமிருந்து நாட்டை மீட்டியதாகவும் மோடி அரசு வைக்கும் உழைக்கும்,ஒழுங்காக வருமானவரி கட்டியவர்கள் வருமானமே இல்லா ஏழைகள் மீது கரும் புள்ளி.
ஆனால் மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு என்பதை அவருக்கு வாக்களித்த மக்களுக்கு  காட்ட்டிக்கொடுக்கும் அவமானப் புள்ளி.
மொத்தத்தில் இப்போது மோடி அரசு ஒரு( கரும்)புள்ளி ராஜா. 
ஒரு 120 கோடிகளுக்கு மேல் மக்களை கொண்ட இந்தியாவின் பிரதமர் மோடி தனது வீரத்தை காட்ட தொலைக்காட்ச்சியில் தோன்றியவுடனே 500.1000 தாள்கள் செல்லாது என்றும்,அவை இனி குப்பை காகிதங்கள் என்றும் பொறுப்பின்றி கூறியதால் விபரம் தெரியாமல் கந்து வட்டிக்கு விவசாயம்,மக்கள் திருமணம்  கடன் வாங்கி 500,1000 தாள்களாக வைத்திருந்தவர்கள் இதுவரை 18 பேர்கள் மாரடைப்பால் , தற்கொலை செய்தும் இந்த மத்திய பாஜக அரசால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...