சனி, 30 ஜனவரி, 2016

அடி,உதை பட்டியல்


அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா வீட்டை, சிலர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஏற்கனவே, அ.தி.மு.க.,வினரால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் பழிவாங்கப்பட்டவர்களை பட்டியலிட்டு உள்ளார்.
அப்பட்டியல் வருமாறு:-
* முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி, திண்டிவனம் அருகே தாக்கப்பட்டார் -
* தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன், சென்னை விமான நிலையத்தில், பல மணி நேரம் சிறை வைக்கப்பட்டார். பின், அவர் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்டது
* பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கப்பட்டார்
* முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திருச்சி 
விமான நிலையத்திலிருந்து, காரைக்குடி செல்லும் வழியில் தாக்கப்பட்டார்
* எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல பொறுப்பாளராக பணியாற்றிய முத்து மீது, கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது
* முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி,சந்திரலேகா மீது, 'ஆசிட்' வீசப்பட்டு, அவரது முகம் சிதைக்கப்பட்டது
* எம்.ஜி.ஆர்., மன்ற மாநில தலைவராக இருந்த, எம்.ஜி.சுகுமார் மற்றும் சிலர், ராமநாதபுரம் மாவட்டத்தில் தாக்கப்பட்டனர்
* முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா தாக்கப்பட்டார்.
* அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் வீட்டில் புகுந்து, அவரை தாக்கினர்
* மூத்த வழக்கறிஞர் விஜயன், வழக்கிற்காக டில்லி புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோடம்பாக்கம் வீட்டில் தாக்கப்பட்டார்
* தி.மு.க., மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உடல் முழுவதும் அரிவாளால்வெட்டப்பட்டு, பிழைப்பாரோ... மாட்டாரோ... என்ற அளவில், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
* வளர்ப்பு மகன் சுதாகரன் மீதே, 'ஹெராயின்' வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது.
* அ.தி.மு.க., ஆட்சியிலேயே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த துாத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

* த.மா.கா., மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், சட்டசபை உறுப்பினர் விடுதிக்கு வெளியில் தாக்கப்பட்டார்
* ஜெயலலிதாவுக்கு எதிராக, நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர், கல்விச் சுற்றுலா சென்ற நேரத்தில், அவர்கள் சென்ற பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டு, மூன்று மாணவியர் இறந்தனர்.
=இவைத்தவிர காவல்துறையை ஏவி அதன்  மூலம் தாக்கப்பட்டவர்கள் பட்டியல் தனி.
இவ்வாளவு ஏன் ?
இந்தப்பட்டியலை போட்ட கலைஞரே  நள்ளிரவில் எந்த வித காரணமுமின்றி வீட்டின் கதவை உடைத்து காவல் துறையால் தாக்கி சிறையில் அடைக்கப்பட்டவர்தானே ?
அதை தட்டிக்கேட்ட முரசொலி மாறன் ,டி .ஆர்.பாலு ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் தமிழக காவல்துறையால் தாக்கப்பட்டவர்கள்தானே?அந்த தாக்குதலால்தானே சில நாட்களில் முரசொலி மாறன் இறந்தார்.
அதை கொண்டாட சிறிதும் மனிததன்மையின்றி அதிமுகவினர் அவர் வீட்டருகே பட்டாசு வெடித்து  கூச்சல் போட்டதையும்இந்த  தமிழ் நாடு பார்க்கத்தானே செய்தது.

இது அன்று 
இது இன்று.
"நான் சிறையில் இருக்கும் போது கலைஞர் தான் என்னை பாத்தார். நானாக  போய்  பார்க்க வில்லை"
 ‪=‎வைகோ‬
{வைகோ நீங்கள்தான் உங்கள் அன்பு சகோதரியால் உள்ளே வைக்கப்படிருந்தீர்களே ,பின்னே எப்படி போய் பார்ப்பீர்கள்?]
===============================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...