ஞாயிறு, 5 ஜனவரி, 2014

இனி இலவச மின் விசிறி ஓடுமா?

தமிழகத்தில், அ.தி.மு.க., இலவசமாக மின் விசிறி,மிக்சி,கிரைண்டர் ,வழங்குவதாக வாக்குகள் கொடுத்து வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
அரசு பொறுப்பேற்றது முதல், பொதுமக்களுக்கு இலவசமாக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி,வழங்கி வருகிறது.
suran
இவற்றை கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொண்டு வருகிறது.நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாய் செலவில், 35 லட்சம் மிக்சி, கிரைண்டர்; 34 லட்சம் மின் விசிறி; 56 ஆயிரம் மின் அடுப்பு கொள்முதல் செய்ய திட்டமிட்டுஉள்ளது.
இலவச பொருட்கள் கொள்முதலுக்கான அரசாணை வெளியீடு தாமதம், 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டு, மறு, 'டெண்டர்' நடத்தியது போன்ற காரணங்களால், குறித்த காலத்திற்குள் பொருட்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை.
இதையடுத்து, கொள்முதல் காலம், 210 நாட்களில் இருந்து, 150 நாட்களாக குறைக்கப்பட்டது. 'டெண்டர்' மூலம் தேர்வுசெய்யப்பட்ட நிறுவனங்கள், அக்., 15 முதல், பிப்., 13ம் தேதிக்குள், 100 சதவீத பொருட்களையும், படிப்படியாக சப்ளை செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதையநிலவரப்படி, 12 நிறுவனங்கள், 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 ல ட்சம் கிரைண்டர்களை  வழங்கி உள்ளன.
இதற்கு, அரசு , 100 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியு ள்ளது;
நிலுவை இன்னும், 300 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதேபோல், 175 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 லட்சம் மிக்சிகளை சப்ளை செய்த, ஆறு நிறுவனங்களுக்கு, 120 கோடி ரூபாய்; 10 லட்சம் மின் விசிறிகளை சப்ளை செய்த, 8 நிறுவனங்களுக்கு, 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதன்படி, 675 கோடி ரூபாய் மதிப்பிற்கு, இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, பாக்கி தொகையான, 450 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளதால், பல தயாரிப்புநிறுவனங்கள்,  அரசு மீது, கடும் அதிருப்தியில் உள்ளன.
suran
மின்சாரக் கட்டணம் செலுத்தியதற்கு கூட அரசு தந்த பணம் பத்தாது.இன்னமும் தொழிற்சாலை நடத்த ,தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்பதால்  மேற்கொண்டு பொருட்களை ஒப்பந்தப்படி வழங்க முடியாமல்  திணறுகின்றன,
மூலப் பொருட்கள் வாங்க வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்த இயலாமல் முழிக்கின்றன்வாம்.
இதனால், இலவச பொருட்கள்  செய்யும் பணிபாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த ஆண்டு இலவசங்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மக்களவை  தேர்தலுக்கு முன், பொதுமக்களுக்கு, இலவச பொருட்கள் வினியோகம்செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் ஜெயலலிதாவும்,அதிமுகவினரும் தேர்தல் வரை வழங்கினால்தான் வாக்குகளை அள்ள முடியும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

 
நுகர் பொருள் வாணிபக் கழகமோ நிதித்துறை மூலம் பணம் ஒதுக்காமல் -வழங்கப்படாமல் எப்படி பொருட்கள தயாரிப்பவர்களுக்கு பணம் கொடுத்து பொருட்களை வாங்குவது என்று திணறுகிறது.முதல்வர் கோப்பில் கையெழுத்திட்டால் மட்டுமே பணம் என்று நிதித் துறை கூறிவிட்டது.
சென்ற ஆட்சி காலத்தில் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க தேவையான நிதியாதாரம் கண்டு அதை ஒதுக்கி பின்னரே ஏலம் விடப்பட்டு இலவச தொலைக் காட்சிகள் வழங்கப்பட்டன.

ஆனால் இப்போது இலவச பொருட்கள் வழங்க நிதி ஒதுக்குவதில் தான் சிக்கலே.
இலவச மிக்சி, கிரைண்டர்,மின் விசிறி சப்ளை செய்தநிறுவனங்களுக்கு, தமிழக அரசு , பாக்கி தொகையான, 470 கோடி ரூபாயை வழங்காமல்,இழுத்தடித்து வருவதால்  பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் உள்ளது.
அதனால் இந்த ஆண்டு இலவச பொருட்கள் பொருட்கள் மக்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஆனால் மக்களவை தேர்தல் நெருங்குவதால் ஜெயலலிதா ஏதாவது செய்வார் என்று அரசு அலுவலர்கள் காத்திருக்கின்றனர்.இலவசங்களைப் பெறும் பயனாளிகளும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...