ஞாயிறு, 13 அக்டோபர், 2013

"கம்யுனிசத்" தில் இருந்து "அண்ணாயிசம்".?


suran

நீங்கள் மூன்றாவது அணியை மையமாக வைத்து யோசிக்கிறீர்கள். ஆனால், மோடி பிரதமராக முடியாத சூழலில், "பா.ஜ.க. ஆதரவோடு ஜெயலலிதாவைப் பிரதமர் பதவியை நோக்கி நகர்த்தும் வியூகமும் தில்லியில் அடிபடுகிறதே?"
சந்தோஷம் என்று போட்டுக்கொள்ளுங்கள். 
ஜெயலலிதா எப்படிப் பிரதமரானாலும் சந்தோஷம்தான்!

இது தா.பாண்டியன் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் பேட்டி என்றால் நம்ப கொஞ்சம் கடினம்தான்.
பாஜகவுடன் ,காங்கிரசுடன் கூட்டணி என்றாலே அவர்களை தீண்டத்தகாத கட்சியாக பார்க்கும் பார்வை உள்ள கம்யுனிஸ்ட் இயக்கத்தில் இப்படி ஜெயலலிதா ஆதரவு அந்த இயக்கங்களின் அடிப்படை கொள்கைகளையே தரத்து வருகிறது.
ஏற்காட்டில் முன்பு காங்கிரசு ஆட்சியில் பங்கு கொண்டதால் திமுக வுக்கு ஆதரவு இல்லை என்று கொள்கை அடிப்படையில் அறிக்கை விட்ட தா.பா,&ஜி.ரா ,.க்கள் பாஜக வுடன் சேர்ந்து பிரதமாராக ஜெயா வந்தால் சந்தோசம் என்பது எப்படி பட்ட கேவலமான கொள்கை.
கருணாநிதி என்ன செய்தாலும் அது மக்கள் விரோதம் கம்யுனிசக் கொள்கைகளுக்கு விரோதம்.ஆனால் தனது ஆட்சிகள்தொறும் பேருந்து கட்டணம்,பால் விலை ,மின்கட்டணம் பொன்றவற்றை ஜெயா ஆட்சி கூட்டினால் அது மக்கள் நன்மை தரும் செயல் .
"இந்தியாவிலேயே பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் ஆட்சியாக இது இருக்கிறது. ரேஷன் கடைகளில் முதலில் இலவச அரிசி கொடுத்தது தமிழ்நாடு. ஏழைப் பெண்கள் திருமண உதவிக்கு நான்கு கிராம் தங்கம் - ரூ. 50 ஆயிரம் பணம் கொடுப்பது தமிழ்நாடு. எந்த ஊரில் ஒரு ரூபாய்க்கு இட்லியும் ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதமும் தருகிறார்கள்? 
வெளியில் 20 ரூபாய்க்குத் தண்ணீர் விற்கிறது; தமிழக அரசாங்கமோ 10 ரூபாய்க்குத் தருகிறது. இப்படிப் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன; பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட நீரைக் கொடுப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை அல்லவா? ஓர் அரசாங்கம் தண்ணீரை விற்பதை எப்படிச் சாதனையாகக் கொள்ள முடியும்? ஒரு கம்யூனிஸ்ட்டாக நீங்கள் எப்படி இதைப் பாராட்டுகிறீர்கள்?
ஜெ. ஆட்சியில் குறையே இல்லை என்கிறீர்கள்?
திட்டங்களை அமலாக்கும் இடத்தில் குறைகள் இருக்கலாம். அது நம் சமூகத்தைப் பிடித்த பீடை. திட்டங்களில் குறை இல்லை என்கிறேன்."
suran
தி ட்டங்களில் குறையே இல்லையாம்.தாது மணல் கொள்ளை அடித்தவனை விட்டு ,விட்டு அ தன் மீது நடவடிக்கை எடுத்த கலெகடர் மீது நடவடிக்கை எடுத்த ஜெயா அரசு ,இப்போது மணல் கொள்ளை 6லட்சம் கோ டிகளுக்கு மேல் என்று அறிக்கை வந்ததும் அக் கோ ள்ளைக்காரர்கள் மீது எடுத்த நடவடிக்கை ?தற்காலிக மணல் அள்ளத்தடைதானெ .அதை பற்றி கேட்டால் -மணல் கொள்ளைக்கு எதிராக நீங்கள் அறிக்கை கூட விடவில்லையே என்று கேட்டால் தா.பா.யாருமே போராட வில்லையே.மாண்ட-மயிலாட தானே பார்க்கிறார்கள் என்கிறார்.இதில் இருந்தே தமிழ் நாட்டில் உள்ள பொதுவுடமை கட்சிகள் இரண்டுமே ஜெயா வுடைமை ஆகி விட்டது. பகிரங்கமாகி விட்டதே.
ஜெயா மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதும்.நீதிமன்றம் அவர்களுக்கு பணி வழங்க ஆணை விடுத்தும் இன்னமும் அவர்களுக்கு பணி வழங்காததும்,ஊனமுற்றோர் பத்து நாட்களுக்கும் மேல் வேலை வாய்ப்ப்புக்கு சாலையில் இறங்கி மறியல் செய்து போராடியும் இன்றுஅரை அது தொடர்பாக ஜெயா அரசு ஒன்றும் செய்யாதது இந்த தொழிலாளர் வர்க்க கட்சியினருக்கு கண்ணில் படவே இல்லையா?
தா.பாண்டியந்தான் அப்படி என்றால் மார்க்சிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன் தா.பாவை  மிஞ்சி அதிமுக ஜால்றாவாகி விட்டார்.
தீக்கதிர்  பத்திரிக்கை ஜெயலலிதா படம்-செய்தி இல்லாமல் வருவதாக தெரிய வில்லை.
முன்பும் இக்கட்சிகள் திமுக,அதிமுக என மாறி கூடடணி வைத்துள்ளன.ஆனால் அப்போது காங்கிரசு ,பாஜக எதிர்ப்புதான் முக்கிய காரண மாக இருந்தது.ஆனால் அவை இப்போது ஜெயா ஆதரவு-கருணாநிதி எதிர்ப்பு என்று சுருங்கி விட்டது.
காங்கிரசுக்கு கருணாநிதி ஆதரவு கொடுத்தது மகா குற்றம் என்றால் சென்ற காங்கிரசின் ஆட்சியில் 63 மக்களவை உறுப்பினர்களாய் வைத்து காங்கிரசு ஆட்சியை நான்கரை ஆண்டுகள் தாங்கி பிடித்த கறை கம்யுனிஸ்ட் கட்சிகளின் கைகளில் உள்ளதே ?அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?கறை நல்லதுதான் என்கிறார்களா ?தா.பாவும்.ஜி.ராமகிருஷ்ணநும் ?
சந்திக்க மறுத்தாலும் ஒரு இடம்தான் என்றாலும் போயஸ் தோட்டம்தான் இன்று தோழர்களுக்கு மார்க்ஸ் காட்டிய பாதையில் உள்ளது.கோபாலபுரம் அதன் எதிர்புறத்தில் தான். 
"அண்ணாயிசம் "என்று எம்ஜியார் கண்டு பிடித்த தத்துவம்தான் இன்று அவர்களுக்கு "கம்யூனிசம்"[தாஸ் காப்பிடலை] விட முக்கிய வேதமாகி விட்டது. 
பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் தர வகையற்ற ஒரூ அரசு ஒரு ரூபாய்க்கு இட்லி அதுவும் ஆயிரம் இட்லி விற்பதும்,பாதுகாக்கப்பட்ட தண்ணிரை தடையின்றி மக்களுக்கு வழங்க வக்கற்ற அரசு 10 ரூபாய்க்கு அதை விற்பதும் சாதனை யாக தெரியும் இந்த காமாலை கண் காரர்களை விட்டு பொதுவுடமை தத்துவத்தின் பால் இன்னமும் பற்று கொண்டவர்கள் விலகுவதுதான் நாம் இடது சாரிகள் இயக்கத்துக்கு செய்யும் மரியாதை.இவர்கள் இன்னமும் கம்யுனிசம் என்ற  பெயரை பயன் படுத்துவது சரியானதல்ல.
suran

-------------------------------------------------------------------------------------------------
ஆந்திரா -ஓடிசா கலக்கும் புயலால் பாதிப்புக்குள்ளானோர் 
-------------------------------------------------------------------------------------------------
பயன் படுத்த சில தொலை பேசி எண்கள் :
-------------------------------------------------------------------------------------------------
Orrisa
Balasore: +91-6782-262674
Bhadrak: +91-6784-251881
Cuttack: +91-671-2507842
Dhenkanal: +91-6762-221376
Gajapati: +91-6815-222943
Ganjam: +91-6811-263978
Jagatsinghpur: +91-6724-220368
Jajpur: +91-6728-222648
Kendrapara: +91-6727-232803
Keonjhar: +91-6766-255437
Khurda: +91-6755-220002
Mayurbhanj: +91-6792-252759
Nayagarh: +91-6753-252978
Puri: +91-6752-223237

Andra Pradesh
Hyderabad: +91-4023-456005 / +91-4023-451043

Railway Helpline
Vizag-0891-2505793, 08935-249672
Vizianagaram-08922-225510
Srikakulam-08942- 28722
Naupada-08945-249728
Rayagada-06856-6222407
Koraput-06852-251802


Regards
Site2SMS.Com Team

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆயிரன் டன் தங்கம் 
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. 
அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு யிரிழந்தவர்.
suran
 தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். 
ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை.
ஆனால்  மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் மகத் கனவை நம்பியுள்ளார்.
அவர் கிடைத்தால் தங்கம் என்பதால் தொண்டி பார்க்க சொல்லியுள்ளார்.
 அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து தொல்லியல் துறை, ஆயிரம் டன் தங்கப் புதையலை தேடும் பணியை தொடங்க உள்ளது. 
------------------------------------------------------------------------------------------------------------
suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...