ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

‘கறை நல்லது தான்!’


suran




“... இன்னும் சொல்லப்போனால் ரூபாய் மதிப்பு சரிவதும் கூட பொருளாதாரத்திற்கு நல்லதுதான். அப்போது தான் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற போட்டி உணர்வு அதிகரிக்கும்.”
-நாடே பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிற ரூபாய் மதிப்பு சரிவை இப்படி பதற்றமே இல்லாமல் கையாளும் திறமை பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட்டால் வேறு யாருக்கு வாய்க்கும்?

உள்நாட்டுத் தொழில்களையெல்லாம் அழித்து, அனைத்தும் இறக்குமதி மயம்; அனைத்தும் அந்நிய மயம் என்று ஆக்கிவிட்டு, ஏற்றுமதியை அதிகரிக்க போட்டி உணர்வை உருவாக்கப் போகிறாராம்.
“சகதியில் விழுந்து புரளுங்கள்; கறையாகி விடும் என்று பயப்படுகிறீர்களா? கறை நல்லது தான், அப் போது தானே அதை நன்றாக துவைக்க வேண்டும் என்ற சிந்தனை பிறக்கும்!”“அப்புறம், நீங்கள் சகதியில் விழுந்ததற்கு நாங்களா பொறுப்பு? ரூபாய் மதிப்பு சரிவுக்கு பல உள்நாட்டு, வெளிநாட் டுக் காரணங்கள் இருக்கின்றன. நாங்களா பொறுப்பு?நிலக்கரித்துறையில் ஆவணங்கள் காணாமல் போ னதற்கு நானா பொறுப்பு? வெங்காயம் விலை உயர்ந்ததற்கு நானா பொறுப்பு?”-
ஆமாம் ஐயா, நீங்கள் பொறுப்பில்லை.
பொறுப்பில் லாதவரை பதவியில் அமர்த்தியதற்கு நாங்கள்தான் பொறுப்பு.

 பொறுப்பில்லாத உங்களைத் தூக்கி எறிவதற் கும் நாங்கள் தான் பொறுப்பு!

                                                                                                                          -சு.போ.அகத்தியலிங்கம் 
suran
suran


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் இந்தி திரைப்பட வரலாற்றில் ஒரு கரும்புள்ளி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் உலகத்தின் பார்வையில் பெரும் விஸ்வரூபமாக நின்று பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு மிகத் தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முப்பது வருடங்களாக உயரிய தியாகம் செய்து பல சாதனைகளை நிலைநாட்டி கட்டி வளர்க்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஒருபடி மேலே சென்று இந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மழுங்கடித்து போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ப்பட்டு வருகின்றன. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தமிழரின் போராட்டம் வீணானது என்றும் ஒன்றுபட்ட நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்றும் கடந்த காலத்தில் சிறீலங்கா அரசாங்கம் சித்தரித்தது. பிரபாகரன் என்ற தனி நபருக்கு மட்டுமே தனி ஈழம் தேவைப்படுவதாகவும் தமிழ் மக்கள் அது குறித்து அலட்டிக்கொள்ள வில்லையென்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரங்கள் பெரியளவில் வெற்றிபெறாததைத் தொடர்ந்து தற்போது புதிய உத்தி ஒன்று கையாளப்பட்டிருக்கின்றது. அதுதான் மக்களை ஆக்கிரமித்திருக்கின்ற திரைப்பட வடிவம். அந்த வடிவமே அண்மையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் வெளிவந்ததும் தமிழகத்தில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதுமான மெட்றாஸ் கபே என்ற திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் ஒரு இந்தித் திரைப்படமாகும். ஜோன் ஆபிரகாம் இந்தப் படத்தை இயக்கி நடிக்கிறார். 35 கோடி ரூபா செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முற்று முழுதாக இது தமிழ் மக்களின் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள போதிலும் இது விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கும் L.T.TE என்ற பதம் இதில் குறிப்பிடப்படவில்லை. மாறாக L.T.F என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று படத் தயாரிப்பாளர் கூறியிருக்கின்றார்.
suran
ஆனால், இந்தப் படம் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது முற்றுமுழுதாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிறீலங்கா – இந்திய அரசுகளின் கூட்டு முயற்சியாகவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்த போதிலும் மக்கள் மனங்களிலிருந்து புலிகளையும் போராட்டத்தையும் தோற்கடிக்க முடியவில்லை. இன்றுவரை தமிழக, தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகளையும் போராட்டத்தையும் நேசிக்கின்றனர். தலைவர் பிரபாகரனை தமது உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். அவரை மதிக்கின்றனர். இப்படிப்பட்ட தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று பிரபாகரன் பயங்கரவாதி, புலிகள் பயங்கரமானவர்கள், இந்தியப் பிரதமரையே கொன்றவர்கள். அவர்களை இனியும் ஆதரிக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொன்னால் மக்கள் திருப்பியடிப்பார்கள்.
ஆதலால், மக்கள் மத்தியில் இயல்பாக ஊடுருவக்கூடிய ஒரேயரு கருவி திரைப்படம் தான். எனவே, திரைப்படம் மூலமாக புலி எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என்று சிறீலங்கா- இந்திய அரசுகள் சிந்தித்தன் விளைவாகவே மெட்ராஸ் கபே என்ற இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் படத்தின் இயக்குநரான ஜோன் ஆபிரகாம் என்பவர் 2 தடவைகள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த பின்னரேயே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கதையைப் படமாகத் தயாரித்தால் அதன் மூலமாக வெளிநாடுகளிலுள்ள புலிகளையும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களின் கொட்டத்தையும் அடக்கலாம் என்று கனவு கண்ட மகிந்த தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த நெருக்கமானவர்கள் கூறியதற்கிணங்கவே ஜோன் ஆபிரகாம் என்பவர் மகிந்தவிடம் கொண்டுவரப்பட்டார். தனக்கு கிடைக்கின்ற பணத்துக்காக புலிகளின் தியாகங்களைக் கொச்சைப்டுத்த ஒப்புக்கொண்டார்.
சரி, தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்தப் படத்தை ஏன் இந்தி மொழியில் எடுப்பதற்கு மகிந்தவும் இந்தியாவும் விரும்பின. அதற்கும் காரணம் உண்டு. அண்மையில் தமிழகம் பூராக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில் முழு தமிழகமும் திரண்டிருந்தது.
suran
  திரைப்பட இயக்குநர்கள், திரைப்பட நடிகர்கள் போன்ற அனைவருமே ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவானவர்கள் என்பது மகிந்தவுக்கும் இந்திய அரசுக்கும் நன்றாக தெரியும். அதையும் மீறித் தமிழகத்தில் யாரையாவது கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான படத்தை தயாரித்தால் தமிழகத்தில் அதனை வெளியீடு செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவேதான் இந்தி மொழியில் மெட்ராஸ் கபே தயாரிக்கப்பட்டது.
மேலும், இந்தித் திரைப்படங்கள் பெரும்பாலும் இந்தி மொழியில் மாத்திரம் தயாரிக்கப்படுவதில்லை. அது இந்தி மொழியுடன் சேர்த்து மேலும் பல மொழிகளிலும் தயாரிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ் மொழியிலும் தயாரிக்கப்படும். அதனைவிட இந்தித் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உண்டு. இதனாலேயே இந்தி மொழியிலேயே திரைப்படத்தை தயாரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் முழுமையும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக அமைந்திருப்பதாக இதனைப் பார்வையிட்ட வை.கோ, சீமான் உள்ளிட்ட தமிழக உணர்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அவர்கள் தமிழக திரையரங்குகளின் உரிமையாளர்களைக் கோரியுள்ளனர்.
இந்த திரைப்படங்களை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும் என்ற எச்சரிக்கையுடன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டிருந்தன. தமிழக உணர்வாளர்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் இணைந்து தாயகத்திலிருந்து யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவையும் மெட்றாஸ் கபே திரைப்படத்தைக் கண்டித்திருந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வெளியிடப்படவேண்டிய மேற்படி திரைப்படம் வெளியிடப்படவில்லை.
ஆனால், ஏனைய மாநிலங்களில் வெளியீடு செய்யப்பட்டு ஒடிக்கொண்டிருக்கின்றன. அனைவரதும் எதிர்ப்புக்களைச் சம்பாதித்துள்ள இந்த திரைப்படத் தயாரிப்பானது ஒரு முட்டாள்தனமான செயற்பாடு. ஒரு இனத்தினுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதன் மூலம் பணம் பெற்று தாங்கள் வாழ நினைப்பவர்களை முட்டாள்கள் என்று கூறுவதை விட வேறு வழியில்லை. இந்த திரைப்படத்தை இயக்கிய ஜோன் ஆபிரகாம் என்பவர் மனிதநேயம் என்றால் என்னவென்று தெரியாதவர். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முற்றுமுழுதாக அவர் அறிந்திருந்தும் அந்தப் படுகொலையை அவர் நியாயப்படுத்த முனைந்திருப்பது கேவலமானது. இவருடைய கேவலமான இந்தச் செயலானது நீண்ட பாரம்பரியம் மிக்க இந்தி திரைப்பட வரலாற்றில் ஒரு கரும்புள்ளியைத் தோற்றுவித்துள்ளது.
உலகம் பூராகவுமுள்ள அன்புக்குரிய இந்தித் திரைப்பட இயக்குநர்களே,
suran
ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை புரிந்துகொள்ளுங்கள். சிங்களவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமென்று நாம் உங்களைக் கோரவில்லை. ஆனால், தமிழ் மக்களின் தியாகங்ளுக்கு மதிப்பளியுங்கள். தமிழ் மக்களை வேரோடு களையத் துடிக்கும் சிங்களத்தின் தமிழின விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகாதீர்கள். தமிழர்களுக்கும் புலிகளுக்கும் நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள்.
தமிழர்கள் புனிதமாகப் போராடியவர்கள். அகிம்சை வழியிலும் அற வழியிலும் போராடி நீதி கிடைக்காத காரணத்தாலேயே ஆயுத வழியில் போராடத் தள்ளப்பட்டவர்கள். ஆயினும் மனிதாபிமானம் இல்லாத மகிந்த அரசு தனது வெறித்தனமான படைகளை அனுப்பி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்று இந்தப் போராட்டத்தை அழித்தொழித்திருக்கின்றது.
எனவே, தமிழர்கள் இனிமேல் ஆயுத வழியில் போராடுவார்களோ இல்லையோ இதுவரை நடைபெற்ற போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். முப்பது வருட காலமாக ஊண், உறக்கமின்றி, நிம்மதியின்றி, சந்தோசமின்றி, உலகில் எவராலும் செய்ய முடியாத தியாகங்களைச் செய்து, உலகமே வியக்கும் சாதனைகளை நிலைநாட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கோ அல்லது தமிழ் மக்களின் விடுதலை வேட்கையை மழுங்கடிப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ யார் இந்தக் காரியங்களைச் செய்தாலும் தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில், தமிழர்கள் தேவையற்ற ஒன்றுக்காக தியாகம் செய்யவில்லை. இல்லாத ஒன்றுக்காக அடம்பிடிக்கவில்லை. இழந்ததை மீட்கவே போராடினார்கள். ஆண்ட நிலம் வேண்டாம். குந்தி இருக்க ஒரு குடி நிலம் தாருங்கள் என்றே கேட்டார்கள்.
தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஜோன் ஆபிரகாமே…
தமிழ் மக்கள் தமது நிலத்தில் தாங்கள் வாழ உரிமை கேட்டது தவறா? நீங்கள் சுகபோகமாக வாழ பணம் சம்பாதிக்க படம் தயாரிப்பதற்கு எங்கள் இறப்புகளும் வேதனைகளும் வலிகளுமா உங்களுக்கு கருப்பொருளாக கிடைத்தது. உங்களுக்கு சுகபோகத்திற்கு பணம் தேவையென்றால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையேந்தியிருக்கலாம். நீங்கள் சாகும் வரை வாழ்வதற்கு அவர்கள் அள்ளிக்கொடுத்திருப்பார்கள். 
எதற்காக மகிந்தவிடம் பிச்சையெடுத்து தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினீர்கள்?
தமிழின உறவுகளே,
suran
மெட்ராஸ் கபே திரைப்படம் போன்ற மேற்படி செயற்பாட்டை நாம் பேச்சளவில் விட்டுவிட முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் அனுமதிக்கவும் முடியாது.
 ஜோன் ஆபிரகாம் போன்றவர்கள் எதிரிகளை விடக் கொடுமையானவர்கள். தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போன்று எதிரிகளை நாம் நம்பலாம்.
 ஆனால், ஆபிரகாம் போன்ற துரோகிகளை நம்பக்கூடாது. 
இவ்வாறான திரைப்பட முயற்சிகள் இனிமேலும் நடைபெற்றால் எவ்வாறு தடுக்கலாம் என்றும் மீறி தயாரிப்பவர்களுக்கு எதிராக எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் 
என்றும் நாம் ஆராய வேண்டும்.
 இல்லாவிட்டால் நாம் முப்பது வருடங்களாக செய்த தியாகங்களுக்கு துரோகிகள் மாற்று வடிவம் கொடுத்துவிடுவார்கள். 
சிந்தியுங்கள்.
                                                                                                                                              -வீரமணி 
நன்றி: ஈழமுரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...