வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

மீண்டும் உண்ணாவிரதம்

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார்.

அன்னா ஹசாரே
திருத்தங்களுடன் கூடிய புதிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த மசோதா பயன் இல்லாதது என்றும், ஊழலை ஒழிக்க வகை செய்யாது என்றும் கூறி சமூக சேவகர் அன்னா ஹசாரே இதை ஏற்க மறுத்து உள்ளார்.டெல்லியில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
சி.பி.ஐ.
ஜன லோக்பால் மசோதாவை கொண்டு வரும் பிரச்சினையில் மக்களுக்கு மத்திய அரசு மீண்டும் நம்பிக்கை துரோகம் செய்து இருக்கிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து உண்மைக்கு மாறாக பேசி வருகிறது. மத்திய அரசு கொண்டுவர இருக்கும் லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்க உதவாது என்பதால் அதை ஏற்க முடியாது.சி.பி.ஐ., மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் போல் தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்ற வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். சி.பி.ஐ.யும், மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது.
நீதி கிடைக்காது
சி.பி.ஐ. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்திருக்குமானால் பல மந்திரிகள் சிறைக்கு போய் இருப்பார்கள். 1 முதல் 4–வது பிரிவு வரையிலான அதிகாரிகளையும் ஜன லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்
 வலுவான லோக்பால் மசோதா இல்லாவிட்டால் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியாது.நேர்மையானவர்கள் பாராளுமன்றத்துக்குள் செல்லும் வரை ஜன லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாது. வலுவான ஜன லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நான் தொடர்ந்து போராடுவேன். இந்த பிரச்சினையை நான் மக்களிடம் கொண்டு செல்வேன். மத்திய அரசு தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி விட்டதாக அவர்களிடம் எடுத்துக்கூறுவேன்.
மீண்டும் உண்ணாவிரதம்
லோக்பால் மசோதா அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எனக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருந்தார். நானும் அவருக்கு கடிதம் எழுதினேன். அதிகாரம் விஷத்தை போன்றது என்று சோனியா காந்தி கூறுகிறார். அதிகாரம் விஷம் என்றால் அதை கைப்பற்ற ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள்?அரசாங்கத்துடன் எனக்கு எந்த விரோதமும் கிடையாது. வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால் அரசாங்கத்தை நான் பாராட்டுவேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போகுமானால் நான் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன். தேவைப்பட்டால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
ராஜ்நாத் சிங்
சி.பி.ஐ.யை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற யோசனையை நிராகரித்ததன் மூலம், ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது என்று பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் மேற்கண்டவாறு கூறிய அவர், ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று பாரதீய ஜனதா தொடர்ந்து கூறி வருவதாகவும், சி.பி.ஐ.யை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்ற தங்கள் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------------
சில நேரங்களில் எதிர்பாராமல் வந்து சேரும் அதிர்ஷ்டம் ஒருவரை திக்குமுக்காட வைத்து விடும். அது போன்றதொரு சம்பவம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கென் வில்மேன் (50) என்பவருக்கு நேரிட்டது. அவர் தனது வளர்ப்பு செல்லப்பிராணியான நாயை அழைத்துக்கொண்டு கடற்கரையில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது இந்த நாய் திடீரென்று மோப்பம் பிடித்து கெட்டியான பாறைத்துண்டு போன்று கிடந்த பொருளை கண்டுபிடித்தது. அது மஞ்சள், கருப்பு நிறத்துடன் வித்தியாசமாக இருந்தது. அதோடு ஒருவகையான நாற்றமும் வீசியது.
அதை எடுத்து சென்று ஆய்வு செய்ததில் திமிங்கலத்தின் வாந்திப்பொருள் எனவும், அது மிகவும் அரிதானது என்றும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இது மருந்து மற்றும் வாசனைதிரவியம் தயாரிக்க உதவும் மூலப்பொருள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளைவு அதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுவிட்டது. அதற்கு ரூ.35 லட்சம் விலையை கென் வில்மேன் நிர்ணயித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...