வியாழன், 24 ஜனவரி, 2013

அரசு கேபிள் கைமாறிய பெரும் தொகை

தொலைக்காட்சி வணிகத்தில் சன் குழுமம் ,கலைஞர் குடும்பம் கோலாட்சி பணம் சம்பாதித்ததை கண்டும்,தனது ஜெயா டி .வி.யை போணியாக்கவும் ஜெயாவால் கொண்டூவரப்பட்டது அரசு கேபிள்.ஆனால் அதன் பெயர்தான் அரசு கேபிள் டி வி ஆனால் உண்மையில் அதிமுக கட்சியினர் பணம் சம்பாதிக்க ஒரு வழியாக அமைந்துள்ளது.
முன்பே கலைஞர்  தயா -கலா சகோதரர்களுடனான கோபத்தில் ஆரம்பித்து இடையிலேயே சரிவராமல் கைவிடப்பட்டதுதான் இந்த அரசு கேபிள்.
இப்போதோ ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன் படுகிறது.அரசு விதிகள் எதுவும் எங்கேயும் கடை பிடிக்கப்படுவதில்லை.
ஏலம் எடுத்துதான் உள் ளூர் சானல்கள் ஒளிபரப்ப பட வேண்டும் .ஆனால் அதிமுகவினர் எல்லா இடங்களிலும் ஏலம் எடுக்காமலும்-அரசுக்கு பணம் கட்டாமலும் பல சானல்கள நடத்தி வரூகின்றனர்.அரசு அறிவித்த தொகையான மாதக்கட்டணம் ரூ70/-க்கு பதிலாக 100/- ரூபாய் முதல் 130 /-ரூபாய் வரை வசூலி க்கப்படுகிறது.
இதை பற்றி கூறினால் எந்த மாவட்ட ஆட்சியரும்,கேபிள் டிவி வட்டாட்சியரும் கண்டு கொள்வதில்லை .[அரிவாள் வெட்டு வாங்கும் பயம்?] 
இந்த முறைகேடுகளையும் தாண்டி உள்ளூர் கேபிள் "டிவி'கள் ஏலம், இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இதனால், பெரும் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது.
செயற்கைக்கோள் சேனல்கள் தவிர, அனைத்து நகரங்களிலும், தனியார் நடத்தும் உள்ளூர் சேனல்கள், கேபிள் "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், எவ்வித விதிகளும் இதுவரை வகுக்கப்படவில்லை.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு ஒன்று, செயற்கைக்கோள், "டிவி'களுக்கு வகுக்கப்பட்டுள்ள, அடிப்படை விதிகளை, உள்ளூர் சேனல்களும் பின்பற்றவேண்டும் என, உத்தரவிட்டு, கண்காணித்தும் வருகிறது.

ஆனால், இம்முறையை ஏற்றுக்கொள்ளாத, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், உள்ளூர் கேபிள் "டிவி'களை ஒழுங்குபடுத்த, தனி விதிகளை வகுக்குமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை கேட்டுள்ளது. இதற்கான, பணிகள் தனியாக நடந்து வருகின்றன.இதற்கிடையே, உள்ளூர் கேபிள் "டிவி' களை நடத்த ஏல முறையை, தமிழக அரசு கேபிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. வட்டம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களை, ஒரு மையமாகக் கொண்டு, உள்ளூர் கேபிள் "டிவி' களை இயக்க அனுமதி அளிக்கிறது.
தமிழகத்தில், 220 வட்ட தலைநகரங்கள், 32 மாவட்ட தலைநகரங்கள் உள்ளன. ஒரு தலைகநகருக்கு அதிகபட்சம், 10 உள்ளூர் கேபிள் "டிவி' என நிர்ணயித்து, ஏல முறையில் அனுமதியை, அரசு கேபிள் நிறுவனம் அளிக்கிறது.
உள்ளூர் கேபிள் "டிவி' ஏலம், 2011 டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு, 2012 ஜனவரி மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டுக்கு அளிக்கப்படும் இந்த அனுமதி, 2012 டிசம்பர் மாதத்தோடு முடிகிறது. 2013 ஜனவரி மாதம் முதல் கேபிள் "டிவி'யை தொடர்ந்து நடத்த, ஏலம் நடத்தியிருக்க வேண்டும். இல்லையேல், அனுமதி அளிக்கப்பட்ட கேபிள் "டிவி'களுக்கு, அனுமதியை புதுப்பித்திருக்க வேண்டும்.

ஆனால், உரிமம்காலம்  முடிந்த பின்னும் , ஏலமும் நடத்தப்படவில்லை.யாரும் உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை.
 கேபிள் "டிவி'களை தொடர்ந்து நடத்த, பெரும் தொகை கைமாறியதால், ஏலம் நடத்தப்படவில்லை  என்று தெரிகிறது..
வட்டங்களின்  தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் தொழில் நிலையை அடிப்படையாகக் கொண்டு, ஏலத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், 40 ஆயிரம் ரூபாய் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை, உள்ளூர் கேபிள் "டிவி'கள் கடந்த ஆண்டு ஏலம் போனது . 
தற்பொது  ஏலம் நடந்திருந்தால் கூடுதல் தொகைக்கு ஏலம் சென்றிருக்கும்.
 இதனால், அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என, தனியார் கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏலம் நடத்தப்படாததால், போட்டியைத் தவிர்த்து, கூடுதல் தொகை செலுத்தாமல், ஏற்கனவே இருப்பவர்கள், தொடர்ந்து கேபிள் "டிவி'யை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இதற்காகத்தான் பல கோ டிகள் வரை கைமாறியுள்ளதாம்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...