புதன், 10 ஜூலை, 2013

ஏழை விவசாயிகள்; தற்கொலை!!

அமிதாப்- அம்பானிக்கு விவசாயக் கடன் !


இந்தியாவில் புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்திய பின்பு விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது.
 குற்ற ஆய்வு கழகம் வழங்கிய புள்ளி விவரப்படி, கடந்த 18 ஆண்டுகளில் 2லட்சத்து 84 ஆயிரத்து 694 விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடைசி 9 ஆண்டுகளில் தான் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும், 2001-2009 க்குள் 18ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
சராசரியாக வருடத்திற்கு ஆயிரத்து 800 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 ஆனால், அந்த மாநில அரசு, விவ சாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லையென செய்தி வெளி யிட்டது. 2013 ல் 4 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக அறி வித்தது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டில் (2012) ஒரு விவசாயி கூட தற் கொலை செய்து கொள்ளவில்லையென மம்தா அரசு தவறான தகவலை கூறியது. உண்மையென்னவெனில் கடந்த 2012ல் 14 விவசாயிகள் தற் கொலை செய்துள்ளனர். நாட்டில், கடந்த 9 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.
 1990 வரை விவசாயிகள் தற்கொலை இல்லை.
suran
தற்போது 21 ம் நூற்றாண்டில் ஏன் இந்தக் கொடூரம் நடக்கிறது? 1960-70 காலகட்டத்தில் விவசாயிகளின் எழுச்சிமிக்க, வீரம் செறிந்த மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன.குறிப்பாக நிலத்தை மீட்கும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. 1940 ல் நடைபெற்ற வீரத் தெலுங்கானா போராட்டத்தால் ஏழை விவசாயிகள் ஏராளமான நிலங்களைப் பெற்றனர். தற்போது விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறு வதில்லை. தற்கொலைச்சாவில் முதல் மாநிலம் மகாராஷ்டிரா. இங்கு, 11.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ள, வசதி படைத்த மாநிலமாகும்.
 ஆனால், அங்கு விவசாயிகளின் தற்கொலைச் சாவு அதிக மாக நடைபெறுகிறது. காரணம் என்ன வெனில், சமத்துவமான வளர்ச்சி இல்லை.
பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களுக்கு சரியாக பணம் கிடைப்பதில்லை. ஒளரங்கா பாத் மாநிலத்தில் 115 வங்கிகள் உள்ளன. இங்கு கடன்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இங்குள்ள வணிகக்குழுவில் உள்ள 120 பேர், விலைமதிப்பு மிக்க மெர்சிடெஸ் பென்ஸ் ரகக் கார்களை வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ளனர்.
 ஆனால், விதர்பா விவசாயிகள் யாருக்குமே வங்கி கணக்கு இல்லை. பிறகு எப்படி அவர்கள் விவசாய கடன் பெற முடியும்?
 பாரத ஸ்டேட் வங்கி, சொகுசுக் கார் வாங்கும் பணக்காரர்களுக்கு 7 சதவீத வட்டியில் கடன் தருகிறது. ஆனால், விவசாயிகள் டிராக்டர் வாங்கினால், 14 சதவீத வட்டி என்கின்றனர். இந்த விவசாயக் கொள்கை யாருக்காக உள்ளது.சிறு,குறு விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படு கின்றனர். ‘விவசாயக் கடன்’ வாங்குபவர்கள் எல்லாம் விவசாயிகள் தானா? எனப் பார்க்க வேண்டியுள்ளது. விவசாயக் கடன் யாரிடம் போய்ச் சேர்கிறது? இதனை பேராசிரியர் ராம்குமார் என்பவர் ஆய்வு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மெட்ரோ வங்கியில் 53 சதவீதம் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
 நகர்ப்புறத்தில் வாழக்கூடிய பணக்காரர்களுக்கு இந்தக் கடன் போய்ச் சேர்ந்துள்ளது. உதாரணமாக நடிகர் அமிதாப்பச்சன் பெயரில் பட்டா உள்ளதால் அவர் விவசாயக் கடன் பெற்றுள்ளார்.
 இதைவிடக் கொடுமை முகேஷ் அம்பானியும் விவசாயக் கடன் பெற்றுள்ளார்.

வெறும் 43 சதவீதம் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி போய், ப.சிதம்பரம் வந்தாலும் கொள்கை மாறவில்லை.
 இவர்களால் கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடைந்துள் ளன.
முகேஷ் அம்பானி குளிர்பதன கிட்டங்கி அமைக்க வெறும் 4 சதவீத வட்டியில் வங்கி மூலம் விவசாய கடன் பெறமுடியும். 
 அவர் விவசாய பொருட்களை அதில் சேமித்து வைக்கிறாராம். 
 ஆனால், ஏழை விவசாயிக்குத் தர மாட்டார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும், அரசாங்கம் அவர்கள் விவசாயி கிடையாது என அறிவிக்கும்.
suran
இறந்து போன ஒருவரின் நிலத்தில் அவரது உறவினர்கள், வாரிசுகள் வேலை செய்தால் அவர்கள் விவசாயி கணக்கில் வரமாட்டார்கள். ஏனெனில், இறந்தவரின் பெயரில் பட்டா இருக்காது. இறந்தவரை காவல்துறை கணக்கு எடுக்கும். அப்போது பட்டா இருக்க வேண்டும். அதேபோல், குத்தகை விவசாயி தற்கொலை செய்தாலும் அவர் கணக்கில் வரமாட்டார்.
பிரபாகர் கட்டாரி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பட்டா அவரது தந்தை பெயரில் இருந்தது. எனவே, அவருக்கு இழப்பீடு தர முடியாது என மாநில அமைச்சரே அறிவித்தார்.
 அதேபோல் 3 ல் 2 பங்கு விவசாயப் பணியில் ஈடுபடும் பெண்கள் அரசாங்கக் கணக்குப்படி விவசாயிகள் கிடையாது.
அப்படியென்றால், விவசாயப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன?
ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் பட்டியலிலும் பெண்கள் கிடையாது.
மழை இல்லாத காரணத்தாலோ, போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தாலோ, பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்தியதாலோ விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கவில்லை. மாறாக, அதிக மகசூல் கிடைத்தும்.
 கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தாலேயே 45 சதமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உணவு உற்பத்தியைக் கைவிட்டு பணப் பயிருக்கு மாறுங்கள் என அரசாங்கம் சொல்கிறது. அதற்காக கடனும் வழங்குகிறது. பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, கரும்பு, வெண்ணிலா பயிரிட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர். 2002-03 ல் விதர்பாவில் ஒரு கிலோ பருத்தி விதை 9 ரூபாய் 2003 கடைசி யில் அரசாங்கம் அதிக மகசூல் பெறும் விதைகளை அறிமுகப்படுத்தியது. அதன் விலை 450 கிராம் 320 ரூபாய் 2004 ல் பி.டி காட்டன் விதை 450 கிராம் விலை ரூ.1600 என உயர்ந்தது.
மான்சாண்டோ விதைகளை அறிமுகப்படுத்தியதால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
 2003 ல் இருந்து விவசாய இடு பொருட்களின் விலையை ஆய்வு செய்துள்ளேன்.
மானாவாரியில் பயிரிட ஏக்கருக்கு ரூ.2500 ம், பாசன விவசாயத்திற்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவாகிறது.
 2010ல் மானவாரி யில் பருத்தி பயிரிட ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரமும். பாசனத்தில் 45 ஆயிரமும் செலவாகிறது. மகாராஷ்டிராவில் பருத்தி ஒரு குவிண்டால் பயிரிட ரூ.4500 செலவாகிறது என அரசாங்கமே கூறுகிறது.
உற்பத்தி செலவு 5 மடங்கு உயர்ந்துள்ளது.
ஆனால், விவசாயிகளின் வருமானம் 5 மடங்கு உயரவில்லை.
மத்திய அரசின் தவறான விவசாயக் கொள்கையால் தற்கொலைகள் அதிகரித்தன. தற்கொலைப் பாதை தீர்வல்ல என்பதை விவசாயிகள் உணரவேண்டும். 
போராட வேண்டும்.
                                                                                                                                                                                          -பி.சாய்நாத் 


suran
                                                                                                                                                                                      -------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிப்பாய்க்கலகம்:

 இந்திய விடுதலைப் போர், 1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திலிருந்து துவங்கியது. இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என இதை அழைக்கின்றனர்.
suran
முதல் இந்திய சுதந்திரப்போர் என அழைக்கப்படும் சிப்பாய்க்கலகம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரப்போக்கை கண்டித்து மே 10, 1857 ல் ஏற்பட்டது.
இக்கிளர்ச்சியில் பலர் பங்குபெற்றனர்.
 சிப்பாய்க் கலக கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் படைக்கு பெரும் சவாலாக இருந்தனர். ஜூன் 20 1858 குவாலியர் நகர் வீழ்ச்சியோடு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவு பெற்று, விக்டோரியாமகாராணியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா வந்தது.
இந்திய மன்னர்களின்ஒற்றுமையின்மை, 1757 ல் பிளாசிப்போர் வெற்றி போன்றவற்றால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வங்காளம் வரை பரவியது.
 பக்சார் போர் வெற்றியால் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.
பின் பல மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமையும் பெற்றது. தொடர்ந்துஇந்நிறுவனம் சென்னை, மும்பை போன்ற பிரதேசங்களிலும் தனது கம்பெனியை விரிவுபடுத்தியது.
1806 ஜூலை 10 -ல் வேலூர் சிறையில் பணியாற்றிய இந்து, முஸ்லீம் சிப்பாய்களுக்கிடையே பிரிட்டிஷார் உருவாக்கிய சீருடை விதிமுறைகள் காரணமாக கிளர்ச்சி வெடித்தது.
இக்கிளர்ச்சியே பிரிட்டிஷாருக்கு எதிராகஏற்பட்ட முதல் கிளர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

திங்கள், 8 ஜூலை, 2013

சரித்திரம் படைத்த

"இந்தியத் தொழிற்சங்க மையத்தின் 14ஆவது மாநாடு, அதன் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்தியப் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசுவின் நூற்றாண்டை 2013 ஜூலை 8 முதல் 2014 ஜூலை 8 வரை கொண்டாடுமாறு அனைத்து சிஐடியு சங்கங்களுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. அதனையொட்டி சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் எழுதியுள்ள கட்டுரை இங்கு தரப்படுகிறது."
இந்தியத் தொழிற்சங்க மையத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசியல்வானின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசு, 1914 ஜூலை 8 அன்று பிறந் தார். அவரது பெற்றோர்கள் இன்றைய வங்க தேசத்தின் டாக்கா மாவட்டத்திலிருந்து வந்தவர்களாவார்கள்.
அவரது தாயார் ஓர் உயர் மத்திய வர்க்க நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை டாக்ட ராக பணிபுரிந்தவர். தோழர் ஜோதிபாசுவே தன் நினைவுக் குறிப்புகளில் கூறியிருப்பதைப்போல, ‘‘அவருடைய குடும்பத்தில் அரசியல் வாடை வீசியதாகத் தெரியவில்லை.’’ ஆயினும், ‘‘தங்களுடைய குடும்பத்தார் மத்தியில் அரசியல் ஒரு மையப் பொரு ளாக இல்லாதிருந்த போதிலும்கூட, அந் தக்காலத்தில் செயல்பட்டு வந்த புரட்சி யாளர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அவர் கள் வைத்திருந்ததை உணர முடிந்தது”.புரட்சிகர இயக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருந்த சூழ்நிலை, சிட்டகாங் ஆயுதக்கிடங்கு புரட்சியாளர்களால் சூறை யாடப்பட்டது, காந்திஜியின் உண்ணாவிர தம், மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய உரைகள் போன்ற வற்றின் மூலமாக அவர் அரசியலின்பால் ஈர்க்கப்பட்டார்.
தன்னுடைய நினைவுக்குறிப்புகளில் ஜோதிபாசு, நேதாஜியின் பொதுக்கூட்டங் களில் அவரும் அவரது சகோதரரின் மக னும் போலீசாரிடம் அடிவாங்கியது குறித் துக் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘பொதுக்கூட் டம் நடைபெற்ற இடம் முழுவதும் ஒரு போர்க்களம் போலவே காட்சி அளித்தது. குதிரைப்படையினர், சாதாரண போலீஸ் காரர்கள், போலீஸ் சார்ஜண்டுகள் என அனைத்துவிதமான போலீசாரும் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். சார்ஜண்டுகள் எங்களைத் தடிகளால் தாக்கத் தொடங்கிய போது, பாதுகாப்புக்காக ஓடக் கூடாது என்று தீர்மானித்தோம். அவ்வாறு எங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதும், சில குண்டாந்தடிகள் எங்கள் முதுகைப் பதம்பார்த்த போதும்கூட, நாங்கள் நடந்தே சென்றோம், ஆனால், நாங்கள் பயந்து ஓடவில்லை, நாங்கள் வேகமாக எங்கள் தந்தையின் அறையை நோக்கி சுறுசுறுப் பாக நடந்து சென்றோம்,’’ என்று ஜோதி பாசு கூறுகிறார். பிற்காலத்தில் அனைத்து சவால் களையும் எதிர்கொள்ளக்கூடிய அளவிற் குத் தலைமைப்பண்பை வளர்த்துக் கொண்ட தோழர் ஜோதிபாசு, இவ்வாறு தான் 16 வயது இளம் மாணவனாக இருந்த போதே, விடுதலை இயக்கத்தின்பால் ஆதரவு மனநிலையுடன் இருந்திருக்கிறார்.
லண்டனில் : 1935இல் ஜோதிபாசு தன்னுடைய பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்றார். லண்டனில் நான்காண்டு காலம் அவர் சட்டம் பயின்ற காலத்தின்போதுதான் வி.கே. கிருஷ்ணமேனன் தலைமையில் அங்கு மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிவந்த இந்தியன் லீக் அமைப்பானது அவரை நன்கு வார்த்தெடுத்தது. இந்த கிருஷ்ண மேனன்தான் பிற்காலத்தில் நேரு அமைச் சரவையில் கேபினட் அமைச்சராக இருந் தவர். பின்னர், ‘லண்டன் மஜ்லிஸ்’ என் னும் ஓர் அமைப்பு உருவானது, ஜோதிபாசு அதன் முதல் செயலாளராக இருந்தார். இந்த அமைப்பானது இந்திய விடுதலை இயக்கத்திற்காக ஆதரவினைத் திரட்டி வந்ததோடு, இந்தியாவிலிருந்து வரும் தேசியத் தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தது. இதன் மூலம் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பல தலைவர் களுடன் அவருக்குத் தொடர்பு கிடைத்தது. ஜோதிபாசு உட்பட இந்திய மாணவர்கள் பலர் அப்போது லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மற்றும் மார்க்சிய சிந்தனை யாளர்களின் கூட்டங்களாலும் கவரப்பட் டார்கள். ஜோதிபாசு லண்டனில் செயல் பட்டுக் கொண்டிருந்த கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார்.
அவரது தேர்வுகள் முடிந்தவுடனேயே, அதன் முடிவுகள் வெளியாவது வரை காத் துக் கொண்டிருக்காமலேயே, 1940களின் முற்பகுதியில் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார், இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக (பாரிஸ்டராக)த் தன்னைப் பதிவுசெய்து கொண்டபோதிலும், கம்யூ னிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக முனைப்புடன் செயல்படவும் தொடங்கி னார்.1944இல் வங்கம் - நாக்பூர் ரயில்வேத் தொழிலாளர் சங்கத்தை அவர் உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவ்வாறு அவர் தொழிற் சங்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட தானது, அவர்தம் இறுதி நாட்கள் வரை யிலும் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில்தான் ஜோதி பாசு தேர்தல் களத்திலும் நுழைந்தார், 1946இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் போது, அவர் ரயில்வேத் தொழிலாளர்கள் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பாக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து நின்றவர், ஹுமாயூன் கபீர். அவரும் ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைவராவார். இவரை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரித்தது.அவரது நீண்டகால சட்டமன்றப் பணி கள் இத்தேர்தலிலிருந்து தொடங்கியது. இத்தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தபோதும் அவரால் இதில் வெற்றி பெற முடிந்தது. 1946இல் நடந்த தேர்தல் அனுபவங்கள் குறித்து அவர் கூறியது மிகவும் இனிய ஒன்றாகும்.‘‘முதலாளித்துவ தேர்தல்கள் எப்படி இருக்கும் என்பதை நான் பங்கேற்ற முதல் தேர்தலிலேயே நன்கு தெரிந்துகொண் டேன். தேர்தல் களத்தில் எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் இது. ஒரு பக்கத்தில் வாக்குகளை எவ்விலை கொடுத்தேனும் வாங்கிட வேண்டும் என்று கடுமையான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன.
ஆனால் அதே சமயத்தில் மறுபக்கத் தில் நேர்மை என்றால் என்ன, கொள் கைக்காக அர்ப்பணித்துக் கொள்வது என் றால் என்ன என்பதையும் நான் பார்த்தேன். வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த ரயில் வேத் தொழிலாளர் எவரும் என்னை ஏமாற்றி விடவில்லை. நம் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, விடாமுயற்சி மற் றும் நேர்மை ஆகிய அனைத்தும் சேர்ந்து என் வெற்றியை உத்தரவாதப்படுத்தின. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக இது ரயில்வேத் தொழிலாளர்களின் வெற்றியாகும்.’’ 1946 தேர்தலின் படிப்பினைகள் மற்றும் வெற்றி பின்னர் அவர் போட்டியிட்ட சட்டமன்றத் திற்கான அனைத்துத் தேர்தல்களின் போதும் அவருக்கு உதவியது.1962 முதல் 1967 வரையிலான காலம் இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கி யத்துவம் உடையதாகும். இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி பிளவுண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. ஜோதி பாசு, கட்சியின் ஒன்பது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தான் இறக்கும் வரையிலும் கட்சியின் உயர்ந்த அமைப் பான அதில் இடம் பெற்றிருந்தார்.
suran
மக்கள் நல அரசாங்கங்கள் : 1967ஆம் ஆண்டு பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைப் பார்த்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தோல்விக் குப்பின் அமைந்த புதிய அமைப்பின் சிற்பி யாக ஜோதிபாசு திகழ்ந்தார். அங்கு நடை பெற்ற மும்முனைப் போட்டியில், காங் கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. மற்ற இரு முன்னணிகள் என்பவை ஒன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை யிலும், மற்றொன்று வங்காள காங்கிரஸ் தலைமையிலும் அமைந்தவைகளாகும். பின்னர் இவ்விரு முன்னணிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி அரசாங்கம் என்று அமைத்து, வங்காள காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி முதல்வராகவும், ஜோதிபாசு துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்கள். இவ்வாறு வங்கத்தில் நீண்ட நெடிய கூட்டணி அரசாங்கத்தின் வரலாறு தொடங்கியது.இந்த அரசாங்கம் எட்டு மாதங்களே நீடித்தது. ஆயினும், டிராம் கம்பெனி தேசிய மயம், மக்கள் இயக்கங்களை நசுக்கு வதற்காக மிகவும் அரக்கத்தனமாகப் பயன்பட்டு வந்த மேற்குவங்க பாதுகாப்புச் சட்டம் ரத்து போன்ற மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வரலாறு படைத்தது. மேலும் இந்த அர சாங்கமானது தொழில் தகராறுகளின் போது மேனேஜ்மெண்ட்டிற்கு ஆதரவாக ஒருசார்பு நிலை எடுக்கக்கூடிய விதத்தில் காவல்துறை பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் பிரகடனம் செய்தது.
1969இல் நடைபெற்ற அடுத்த தேர்தல்களின்போது இரண்டு முன்னணி களும் இணைந்து காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்டன. ஜோதிபாசு தன்னுடன் உள்துறை மற்றும் காவல்துறையை வைத்துக்கொண்டு மீண்டும் துணை முதல்வரானார். இந்த அரசாங்கம் மாநிலத் தில் நிலச் சீர்திருத்தங்களுக்கான அடிப் படையை விதைத்தது. மக்கள்நலன் சார்ந்த பல்வேறு முடிவுகளையும் மேற்கொண் டது. இந்த அரசாங்கமும் 13 மாதங்கள் அளவிற்கே நீடித்தது. 1970 மார்ச் 29 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இக்காலகட்டம் மேற்கு வங்க வரலாற் றில் மிகவும் கொந்தளிப்பான ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராகவும் அதன் ஊழியர்கள் மற்றும் ஆதர வாளர்களுக்கு எதிராகவும் நக்சலைட் இயக்கம் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுத்தது. 1970 மார்ச் 31 அன்று பாட்னா ரயில்நிலையத்தில் அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒருவன் சுட்டான், ஆயினும் அக்குண்டு அவரை அழைத்துச் செல்ல வந்த தோழர் ஒருவர் மீது பட்டு அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப் பட்டார். ஜோதிபாசு தன் கையில் சிறிய காயங்களுடன் தப்பினார்.

சிஐடியு உதயம் : தொழிற்சங்க அரங்கிலும், புதிய நிகழ்ச் சிப் போக்குகள் ஏற்பட்டன. பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்ட பிரம்மாண்டமான போராட்டங்கள் அந்தச் சமயத்தில் ஏஐடியுசி-இன் தலை மைப்பொறுப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களின் அணுகுமுறை குறித்து எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக மத்தியத் தொழிற்சங்கம் ஒன்றை அமைப் பது குறித்து விவாதிப்பதற்காக அகில இந்திய தொழிற்சங்க மாநாடு ஒன்றிற்கு அறைகூவல் விடுப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. தோழர்கள் பி.டி. ரணதிவே, பி.ராமமூர்த்தி, போன்றவர் களுடன் ஜோதிபாசுவும் முன்னின்று இதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் இயங்கி வந்த மேற்கு வங்க மாகாண தொழிற்சங்க கவுன்சில் இந்நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தது. கல்கத்தாவில் இதற்காக நடைபெற்ற மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக ஜோதி பாசு இருந்தார். 1970 மே 28 அன்று நடைபெற்ற மாநாட் டில் வரவேற்புரையாற்றுகையில், மேற்கு வங்கத்தில் உள்ள நிலைமைகள் குறித்து மிகவும் விரிவாகவும், இரண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கங்களும் குறுகிய காலத்தில் ஏற்படுத்திய சாதனைகள் குறித்தும் விவரித்தார். ஸ்தாபக மாநாட்டில் ஜோதிபாசு சங் கத்தின் செயற்குழு உறுப்பினராக வும், இரண்டாவது மாநாட்டில் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலை வர் பொறுப்பில் இருந்து அவர் தன் இறுதி நாட்கள் வரை சிஐடியு-விற்கு வழிகாட் டினார். ஜோதிபாசு 1970க்குப்பின் மிகவும் கொந்தளிப்பாக இருந்த காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக் குத் தலைமை வகித்தும், நாட்டிலும் மேற்குவங்க மாநிலத்திலும் சிஐடியு-வை ஒரு வலுவான அமைப்பாக உருவாக்கு வதற்கு வழிகாட்டியும் செயல்பட்டார்.மேற்குவங்க மக்களின் போராட்டங்
கள், 1970-77க்கு இடைப்பட்ட ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற் றும் இதர வெகுஜன அமைப்புகளின் எண் ணற்ற தலைவர்களும் ஊழியர்களும் கொல் லப்படுதல் ஆகியவை வரலாற்றின் பகுதி களாகும். இவ்வளவு கொடுமைகளையும் மேற்குவங்க உழைக்கும் மக்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று போராடி ஜனநாயகத்தை மீட் டெடுத்து இறுதியில் வெற்றிவாகை சூடினர்.
இடது முன்னணி அரசாங்கங்கள்
1977இல் முதல் இடது முன்னணி அரசாங்கம் அமைந்தது, தோழர் ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். ஒரு முதலாளித்துவ அமைப்புமுறையில் இடது முன்னணி அரசாங்கம் ஒன்று மொத்தத் தில் 34 ஆண்டுகள் ஆட்சியி லிருந்தது என் பது உலகில் வேறெங்கும் நடக்காத வரலாறா கும். ஜோதிபாசு இந்தியாவில் மிகவும் நீண்ட காலம் தொடர்ந்து முதல்வராகப் பணியாற்றி மகத்தான வரலாற்றை உருவாக்கினார்.மேற்கு வங்க இடது முன்னணி அரசாங் கங்களின் சாதனைகள் என்பவை ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல் என்பதிலிருந்து துவங்கியது என்பதை அனை வரும் அறிவார்கள். 1977இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே ஜோதிபாசு, ‘‘இந்த அர சாங்கம் தலைமைச் செயலகத்தி லிருந்து (Writers Building) மட்டும் இயங்கி டாது’’ என்று பிரகடனம் செய்தார். மாநில அரசுகளுக்கு உள்ள வரையறை கள்(limitations) குறித்தும் மேற்குவங்க மக் களுக்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட்டது. ஒரு நேர் காணலில் இடது முன்னணி அர சாங்கத்தின் அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில், ‘‘இது ஒன்றும் சோசலிஸ்ட் பொருளாதார அமைப்பு அல்ல. எங்களால் வானளாவிய உறுதிமொழிகளை மக்க ளுக்கு அளித்திட முடியாது. எங்களால் என்ன செய்ய முடியுமோ, அவற்றைத்தான் நாங்கள் அவர்களிடம் சொன் னோம். ஒரு விஷயத்தை எங்களால் செய்ய முடியாது. அது என்னவெனில் அடிப்படை மாற்றங்களை எங்களால் கொண்டுவர முடி யாது. ஏனெனில், நாங்கள் ஒன்றும் மேற்கு வங்க குடியரசை நடத்திடவில்லை. நாங்கள் இந்தியாவில் ஓர் அங்கம்.’’ மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடது முன்னணி அர சாங்கம் நாட்டில் இடது மற்றும் ஜனநாயக இயக்கத்தைக் கட்டுவதில், மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்களை, குறிப் பாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர் களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதில், அளப்பரிய பங்களிப்பினைச் செய்திருக்கிறது.
மக்கள் நலனுக்காக
2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் இடது முன்னணிக்குப் பின்ன டைவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர், ‘‘வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அவர் களில் சிலர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும், அது தற்காலிகமானதுதான். ஆனாலும் நாம் திரும்பத் திரும்ப மக்களிடம் போய்க்கொண்டே இருப்போமானால், அவர் களின் அன்புக்குப் பொருத்தம் உடையவர் களாக உண்மையிலேயே நாம் மாறுவோமே யானால், நிச்சயமாக அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள். சென்ற பஞ் சாயத்துத் தேர்தல் களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் நம்மைத் தோற்கடித்த வர்கள், மீண்டும் நம் பக்கம் வருவார்கள்,’’ என்று கூறினார்.மேற்குவங்கத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பணி யாற்றிக்கொண்டிருந்த தலைவர்களுக்கு ஜோதிபாசு கோடிட்டுக் காட்டிய உடனடிப் பணி இதுவேயாகும். எழுதாண்டுகளுக்கும் மேலாக அவர் தன் பொதுவாழ்க்கையில் எத்தகைய உன்னத லட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி நம் முன்னே உள்ளது.
தோழர் ஜோதிபாசு 2010 ஜனவரி 17 அன்று நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார் என்ற போதிலும்,
 நாம் நம்முடைய லட்சியங்களை எய்திட அவரது வாழ்வும் போதனைகளும் நமக்கு நிச்சயமாக என்றென்றும் வழிகாட்டும். ‘‘மக்களை நேசிப்பதைவிட வாழ்வில் மதிப்பிடற்கரிய செயல் வேறெதுவு மில்லை. மாபெரும் லட்சியங்களுக்காக நம் வாழ்வைத் தியாகப்படுத்திக் கொள்ள எப்போதுமே நாம் தயாராக இருக்கிறோம்... காலம் எல்லாம் எவ்விதக்குறிக்கோளும் இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேனே என்ற வருத்தம் வதைப்பதற்கு நாம் இடம் அளித்திடக் கூடாது.
 இத்தகைய எண்ணம் எப்போதும் நம் அடிமனதில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கவேண்டும்’’ 
என்று கூறிய அவரது உயர்ந்த சிந்தனையை எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது. மாபெரும் புரட்சி யாளர் தோழர் ஜோதிபாசு விடுத்துச் சென் றுள்ள உயரிய சிந்தனைகள் என்றென்றும் நமக்கு வழிகாட் டட்டும்.

தோழர் ஜோதிபாசு புகழ் நீடூழி வாழ்க!

நன்றி :தீக்கதிர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

புதன், 3 ஜூலை, 2013

ரயில் மூலம் 250 கோடி ரூபாய்,

மும்பையிலிருந்து ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த கோடிக்கணக்கான ரூபாயையும், நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்தனர்.
பைகளில் வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு, 250 கோடி ரூபாய் இருக்கலாம் என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவை யாருக்கு சொந்தமானவை என்ற மர்மம் விலகவில்லை.
மும்பையிலிருந்து, ஆமதாபாத்திற்கு, ரயில் மூலம், கோடிக்கணக்கான மதிப்புள்ள, ரூபாய் நோட்டுக்களும், நகைகளும், விலை உயர்ந்த கற்களும் கடத்தப்பட உள்ளதாக, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது.

உடன், அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளை உஷார்படுத்தினர்.வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த, நான்கு லாரிகளை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, ஒவ்வொரு லாரியிலும், 25க்கும் மேற்பட்ட பைகள் இருந்ததை கண்டனர். நான்கு லாரிகளிலும் சேர்த்து மொத்தம், 102 பைகள் இருந்தன. பைகளைப் பரிசோதித்ததில், அவை
ஒவ்வொன்றிலும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களும், நகைகளும், விலை மதிப்புமிக்க கற்களும் இருந்தன.
பைகளுக்கு பாதுகாப்பாக இருந்த, 45 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பாதிக்கும் மேற்பட்டோர், பைகளில் என்ன இருக்கிறது என்பதை அறியாதவர்களாகவே இருந்தனர்.
நான்கு லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களும் பிடிக்கப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். டிரைவர்களிடம் விசாரணை நடத்திய போது, பைகளில் இருந்த பணம் மற்றும் நகைகள், ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
ரயில் மூலம் ஏராளமான பணத்தை கடத்த திட்டமிட்டவர்கள், ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள்.
இவர்கள், குஜராத் மாநிலம், ஆமதாபாத் மற்றும் ராஜ்கோட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், அவர்கள் யார் என்பது, இன்னும் கண்டறியப்படவில்லை. லாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், தெற்கு மும்பையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நோட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை, ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி தொடர்ந்தது.
பிடிபட்ட பணம் மற்றும் நகைகளின் மதிப்பு, 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என, முதல்கட்டமாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், அந்தத் தகவல் மறுக்கப்பட்ட, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என, கூறப்பட்டது.
இதற்கிடையில், பணத்தை எடுத்து வர பயன்படுத்தப்பட்ட லாரிகளுக்கு, தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றின் இன்ஸ்பெக்டர், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததாக, தகவல்கள் கிடைத்துள்ளன.
 அதனால்,போலீசாருக்கும், பணத்தை அனுப்பிய ஹவாலா கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 குஜராத்தில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, பணம் மற்றும் வெள்ளி கட்டிகளுடன், நேற்று முன் தினம் கடத்தப்பட்ட லாரி, நேற்று மீட்கப்பட்டது.பாவ்லா - பகோதரா நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, லாரி கடத்தப்பட்டதும், மாநிலம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை, போயான் என்ற கிராமத்தில், அந்த லாரி மீட்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

-

செவ்வாய், 2 ஜூலை, 2013

'நிதாகத்' ---"நெய்வேலி"

இன்று "நிதாகத் "என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல குடும்பங்களின் வயிற்றில் கலக்கத்தை கொண்டு வந்துள்ளது.
துபாயில் பணம் சம்பாதிக்கும் கனவை சிதறடித்த இந்த நிதாகத் சட்டம்.70000 இந்தியர்களை மூட்டை கட்டி நாடு திரும்ப  வைத்து விட்டது.இந்த ஒற்றைவரி சட்டம் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் 75 ஆயிரம் இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

 எண்ணை வளத்தால் செல்வசெழிப்பில் மிதக்கும் சவுதிஅரபியாவுக்கு இப்போது போதாத நேரம். வேளா வேளைக்கு சாப்பாடு... சொகுசான வாழ்க்கை என்று அலைந்த அரேபிய ஷேக்குகள் வாழ்க்கையிலும் ஒரு சின்ன 'ஷேக்'.
வேலையில்லா திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது.

எனவே நாட்டு மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம்தான் நிதாகத். 
இந்த சட்டப்படி சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்து இருந்தால் கண்டிப்பாக 10 சதவீதம் உள்நாட்டு அரபுக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

நாளை முதல் அந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சவுதியில் 17 லட்சத்து 89 ஆயிரம் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
சவுதி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தினால் அங்குள்ள இந்தியர்களில் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலையை தக்கவைத்து கொள்ள முடியாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த கால அவகாசம் நாளை முடிகிறது. அதன் பிறகு முறையான ஒர்க்பெர்மிட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்து தண்டனை வழங்குவதுடன், கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒரு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலம் அவசர சான்றிதழ் பெற்று சவுதி அரசு மூலம் விசா வாங்கி உடனடியாக நாடு திரும்பலாம். இந்த கெடுபிடிகளால் 75 ஆயிரம் இந்தியர்கள் அவசர சான்றிதழ் கேட்டு இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏராளமான தொழிலாளர் குவிகிறார்கள். இதையடுத்து 4-ந்தேதி வரை இந்திய தூதரகம் விடுமுறை இல்லாமல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. பூகோள வரை படத்தில் இந்தியாவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறு நாடுதான் சவுதி. 5 மாதம் கடும் குளிர், 5 மாதம் கடும் வெயில், 2 மாதம் நம் நாட்டு சீதோஷ்ண நிலையையும் கொண்டுள்ளது.
நேரப்படி அந்த நாட்டுக்கும் நமக்கும் சுமார் 2 1/2 மணி நேரம்தான் வித்தியாசம். சவுதிக்கு சென்றால் சீக்கிரம் லட்சாதிபதிகளாகி விடலாம் என்ற நப்பாசையில் படையெடுக்கிறார்கள். குறிப்பாக கட்டிட வேலை, தச்சு வேலை, கடைகளில் வேலை பார்க்க என்று ஏராளமானோர் செல்கிறார்கள். சவுதிக்கு ஆட்களை அனுப்புவதற்காக ஏராளமான ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அம்மா அல்லது மனைவியின் தாலியை கூட விற்று பணம் கட்டி சவுதி செல்கிறார்கள். அங்கு அரபு ஷேக்குகளிடம் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள். எத்தனையோ கனவுகளுடன் விமானத்தில் பறந்து சவுதியில் கால்பதிக்கும் நம்மவர்கள் அங்கு சந்திப்பது பேரதிர்ச்சி.

ஒட்டகம், ஆடு மேய்த்தல், தோட்ட வேலை செய்தல், ரோடுகளை பெருக்குவது, நிறுவனங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகள்தான் வழங்குகிறார்கள். அவர்களை தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கிறார்கள். வெயிலில் காய்ந்தும், குளிரில் நடுங்கியும் வேறு வழியில்லாமல் அந்த வேலையையும் பார்க்கிறார்கள். மாத சம்பளமும் ரூ. 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான். ஊரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டுமே, குடும்பமே நம்மை நம்பி இருக்கிறதே என்ற வேதனையோடு சுமை தாங்கிகளாக கண்ணுக்கு தெரியாத நாட்டில் உடலை வருத்தி உழைக்கிறார்கள்.
ஊருக்கு திரும்பினால் பாரின்ல இருந்து என்னடா வாங்கி வந்தே? என்று உற்றார் உறவினர் முதல் ஊரார் வரை மொய்த்து விடுகிறார்கள்.
 தனது சோகத்தை சொல்லி அவர்களது அன்பையும், எதிர்பார்ப்பையும் ஒரு நொடியில் தகர்க்க மனமில்லாமல், ஸ்பிரே, சோப்பு, துணிமணிகள் என்று ஏதாவது ஒரு பொருளை கொடுத்து மகிழ்விக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பல இளைஞர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் நல்ல ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில்லை. சிறு சிறு ஏஜெண்டுகள் மூலம் சவுதிக்கு சென்றால் போதும் என்ற அவசரத்தில் சென்று விடுகிறார்கள். அங்கு தனி நபர்களிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் ஒர்க்பர்மிட் வழங்க வேண்டும்.
ஆனால் 6 மாதம் வரை அரபு ஷேக்குகள் பர்மிட் கொடுப்பதில்லை. இதனால் போலீஸ் கையில் சிக்குகிறார்கள். அதன் பிறகு ஒளிந்து ஒளிந்து வேலை பார்க்கிறார்கள்.

20 சதவீதம் பேர் இப்படி இருக்கிறார்கள். இன்னொரு 20 சதவீதம் பேர் அரபுக்களின் தொல்லை தாங்காமல், சரியான சம்பளம் கிடைக்காமல் வேறு வேறு இடங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள். இவர்களிடம் முறையான ஒர்க் பர்மிட் இருக்காது. பெரிய பெரிய நிறுவனங்கள் மூலம் சென்று அங்குள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்பவர்களுக்கும், சட்டப்படி உரிய அனுமதியுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
பொதுவாக அரேபியர்கள் கடினமான வேலை செய்யமாட்டார்கள். கொத்தனார், தச்சர், முடி திருத்துதல், காய்கறி கடைகளில் வேலை பார்ப்பது, சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை பார்ப்பது போன்ற வேலைக்கு செல்கிறார்கள்.
கொத்தனார்கள் எல்லாம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்கள். 
அங்கு வேலை பார்ப்பது போல் நம் நாட்டில் வேலை பார்த்தால் போதும் பல மடங்கு சம்பாதிக்க முடியும்.
ஆனால் வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் செல்கிறார்கள்.
இனிமேல் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவுதான்.
நுணுக்கமான வேலை தெரிந்தவர்கள், டாக்டர்கள், கப்பல் என்ஜினீயர்கள் போன்றவர்களுக்கு பிரச்சினை இல்லை.
சட்டப்படி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை இல்லை.
இதையடுத்து, 90 ஆயிரம்  இந்தியர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 65 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் சட்டப்பூர்வமாக சவுதியில் தங்கவும், கம்பெனிகளில் வேலை தேடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரம் இந்தியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் சவுதி அரசு விதித்துள்ள காலக்கெடு நாளையுடன் முடிவதால் தொடர்ந்து அங்கேயே அவர்கள் தங்கினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கால கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், இதுகுறித்து சவுதி அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி 
                                                                                                                                                                                      - ஜி.சுகுமாறன்
நிறு வனத்தின் 5 சதமானம் பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சர வை ஒப்புதல் வழங்கி விட்டது. நெய்வேலி நிறுவன அதிபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் 5 சதமானம் பங்கு விற்பனை மூலம் ரூ. 700 கோடி க்கு மேல் பணம் வரும் என்றார்.
 தற்போது ரூ.466 கோடி மட்டுமே வரும் என்கிறார்.
 மத்தி ஆட்சிபொதுத்துறைகளை சீரழிக்கவே முயற்சிக் கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பி.ஜே.பி. ஆட்சிகாலத்தில் நெய்வேலியின் 10 சதமானம் பங்குகளை விற்கவேண்டும் என முயற்சித்தது. பின் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் தற்போதைய அரசு நெய்வேலி யின் 10 சதமானம் பங்குகளை விற்க முயற் சித்தது.
ஆனால் இந்த இரண்டு முயற்சி களும் நெய்வேலி தொழிலாளர்களின் ஒன்று பட்ட போராட்டத்தால் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் மத்திய அரசு 5 சதமானம் பங்கு களை விற்க முயற்சிக்கின்றன. இதையும் நெய்வேலி தொழிலாளர்கள் ஊழியர்கள், மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைந்து போராடி முறியடிப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.
மத்திய ஆட்சியாளர்கள் இம் முடிவை தொழிற்சங்கங்களோடு பேசித்தான் எடுத்தது என பொய்யைப் பரப்பி வருகின்றனர்.
அங் குள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், அதி காரிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து மாவட்ட மக்களை திரட்டி தமிழக தொழிலாளி வர்க்கத்தின் துணையோடு வலுவான போராட்டங்களுக்குச் செல்வது என முடிவு செய்துள்ளனர். தேவை ஏற்படின் காலவரை யற்ற வேலை நிறுத்தத்திற்கும் தயாராகிவிட் டனர்.
 அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் மத்திய அரசின் இம்முடிவை வன்மையாக கண்டித்துள்ளன.
நெய்வேலி உருவான வரலாறு :
நெய்வேலி நிறுவனம் உருவாகியிருக்கும் இடம் முன்காலத்தில் சிறுசிறு கிராமங் களைக்கொண்டது.
 இங்கு ஜெம்புலிங்க முத லியார் என்கிற நிலக்கிழாருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது கறுப்பாக வித்தி யாசமாக வரும் மண்ணைக் கண்டறிந்த முத லியார் இதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத் தார்.
 தமிழக அரசு இது பழுப்பு நிலக்கரி என கண்டறிந்தது. அதன் உபயோகங்களையும் ஆய்வு செய்தது. பின் மத்திய அரசும் தமிழக அரசும் பல ஆய்வுகள் செய்து மிக ஆழத்திலிருக்கும் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வது இலாபகரமாக இருக் காது என இத்திட்டத்தை கைவிடப்பட்டது.
அக்காலத்தில் பழுப்பு நிலக்கரியை பயன் படுத்தி மின் உற்பத்தியில் மிகப்பெரிய முன் னேற்றத்தை கண்ட நாடு கிழக்கு ஜெர்மன்.
வேறு சில பணிகளுக்காக கிழக்கு ஜெர்மன் செல்லவேண்டியிருந்த தோழர் பி. ராமமூர்த்தி அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சிறப்பு அனுமதிபெற்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி கட்டியை கிழக்கு ஜெர்மன் எடுத்து சென்று அங்குள்ள நிபுணர்களுடன் விவாதித் ததில் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற் பத்தி செய்யலாம் எனவும் இத்திட்டம் இலாபகரமாக இயங்க வாய்ப்புள்ளது எனவும் கண்டறிந்து அதை அன்றைய காங்கிரஸ் அரசை ஏற்கவைத்தார்.
 இத்திட்ட முதலீட்டிற்கு பெரும் நிதி தேவைப்பட்டது. இன்று நான் நீ என்று முந்திக் கொண்டு கபளீகரம் செய்யத் துடிக்கும் முதலாளிகளோ அல்லது நாடுகளோ இத் திட்ட உருவாக்கத்திற்கு நிதி வழங்க மறுத் தனர்.
நேரு அரசு முதலில் அமெரிக்காவை நாடியது.அமெரிக்கா இத்திட்டத்திற்கு நிதி வழங்க மறுத்தது.
பின் அன்றைய கம்யூனிஸ்ட்  சோவியத் யூனியனை நாடியது.
சோவியத் யூனியன் முக மலர்ச்சி யுடன் முன் வந்து நிதி உதவி அளித்தது மட்டு மல்ல மின் உற்பத்தி நிலையத்தை தானே முன்வந்து நிர்மாணித்துத் தருவதற்கும் முன் வந்தது. அந்த அடிப்படையில்தான் நெய் வேலி நிறுவனம் உருவானது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1467 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. ஆண்டுதோறும் இலாபம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 600 மெகாவாட் உற்பத்தியில் துவங்கி தற்போது இங்கு மட்டும் 2470 மெகாவாட் உற்பத்தி செய்யும் வல்லமை பெற்றுள்ளது.
 இதுமட்டுமல்ல குஜராத், உத்தரப்பிரதேசம், போன்ற மாநிலங்களில் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி துவங்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தூத்துக்குடியில் தமிழக மின் திட்டத்தோடு இணைந்து மின் உற்பத்தி துவங்கவும், சீர்காழி போன்ற இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் திட்டங்கள் உள்ளன. மேலும் தென் இந்தியா வின் மின்சார தேவையின் பெரும் பகுதியை இந் நிறுவனம் செய்துவருகிறது.
 வளர்ந்து வருகின்ற இந்நிறுவனத்தின் 5 சதமானம் பங்குகளை விற்க ஏன் மத்திய அரசு துடிக் கிறது. இதன்மூலம் வெறும் ரூ.466/- கோடியே கிடைக்க வாய்ப்புள்ளது.
 பொதுத்துறை பங்கு விற்பனை என்பது இந்திய நாட்டின் இறையான்மையை விற்ப தாக மாறிவிடும். அண்மைக்காலமாக உலக பொருளாதார மீட்சியில் வளர்ந்த/வளரும் நாடுகள் தத்தளிக்கின்ற நிலையில் இந்தியா சற்று தாக்கு பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் இங்குள்ள உற்பத்தி முறையில் உள்ள விகிதாச்சாரமே.
தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், வங்கி கள், மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்கங்கள் இன் னும் மக்கள் சொத்தாகவே உள்ளதால் இந்திய பொருளாதாரம் இதர நாடுகளைப்போல் பெரும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
 கடந்த பட்ஜெட்டில் ரூ.30,000 கோடிக்கு மேல் பொதுத்துறை பங்குகளை விற்கவேண் டும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இப்படி விற்றுவரும் பணத்தை வைத்து பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையை சரி செய்ய போகிறார்களாம்.பற்றாக்குறை ஏன் வந்தது? கடந்த பட் ஜெட்டில் பற்றாக்குறை ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 5 சதவீதம். இது தொகையாக பார்த்தால் ரூ.5,20,000 கோடி. இதே பட்ஜெட் டில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு பெரும் பண முதலைகளுக்கு வரி இனங்களில், வட்டி சலுகைகளில், வராக்கடன் தள்ளுபடி என, ஏற்றுமதி/ இறக்குமதி சலுகைகள் என பல்வேறு இனங்களில் இவர்களுக்கு ரூ.5,73,000 கோடி வழங்கியுள்ளனர்.
உண் மையிலேயே மத்திய அரசு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு இச்சலுகை வழங்கவில்லை எனில் ரூ.53,000 கோடி உபரி பட்ஜெட்டாக மாறியிருக்கும்.
முதலாளிகளுக்கு மீண்டும் பணக்குவியல் : பங்குவிற்பனையை ஊக்குவிப்பதற்கு இரண்டுகாரணங்கள் உள்ளன.
ஒன்று இலா பத்தில் இயங்கும் பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி பெரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்பதும், பங்கு விற்பனை மூலம் வரும் பணம் முத லாளிகளுக்கு சலுகைகள் என்கிற பெயரில் மீண்டும் முதலாளிகள் கைகளுக்கே இப் பணம் சென்று விடுகின்ற ஒரு செப்படி வித்தையும் இதற்குள் மறைந்திருக்கிறது.
எனவே பங்கு விற்பனை எந்த விதத்திலும் நாட்டுக்கு உகந்ததல்ல.
 பொதுத்துறைகள் நாட்டு பொருளா தாரத்தை பாதுகாப்பது மட்டுமல்ல, பேரிடர் கள் ஏற்படும் போது அவைகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும் இந்நிறுவனங்கள் முன் வருகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மை. தமிழகத்தை தானே புயல் தாக்கிய போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொடர்பு கொள்ள பிஎஸ்என்எல் சேவை மட்டுமே இயங்கியதே தவிர வேறு எந்த தனியார் செல் சேவையும் இயங்கவில்லை.
 காரணம் பிஎஸ்என்எல் செல் சேவையை தவிற மற்ற அனைத்து தனியார் செல் சேவை களும் தங்களது செல் சேவை இயந்திரங்கள் பழுதாகிவிடக்கூடாது என்பதால் அனைத் தையும் நிறுத்திவிட்டன.
 இவர்களுக்கு இலாபம் தான் குறிக்கோள் மக்கள் சேவை அல்ல.
 அண்மையில் உத்தரகாண்டில் ஏற் பட்ட நிலச்சரிவு வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை பாதுகாக்க அங்கு மாட்டிக் கொண்ட மக்களை அங்கிருந்து வெளியே கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனம் தனது டிக்கெட் கட்டணத்தை 50 சதவீதமாக குறைத்து சேவை செய்கிறது. மற்ற அனைத்து விமான சேவை நிறுவனங்களும் தங்களது இலாபம் மட்டுமே குறிக்கோள். மக்கள் உயிர் அல்ல என்பதை சொல்லாமல் சொல்லிவிட் டனர். இப்படி மக்கள் சேவை யில், பேரிடரின் போது மக்களைப் பாதுகாக்க, கிடைக்கும் இலாபம் அனைத்து நாட்டு நலனுக்காக பயன்படுத்தும் பொதுத்துறையை பாதுகாக்க முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையை பேணுவோம்.
 அரசின் கொள்கைகளை முறியடிப்போம். தேச நலனை பாதுகாப்போம்.

கட்டுரையாளர் : சிஐடியு தமிழ் மாநிலக்குழு பொதுச்செயலாளர்

திங்கள், 1 ஜூலை, 2013

எல்லோரும் சமமே.

"வக்கீல்களையும், நீதிபதி யும் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றம்  தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், 2–ந்தேதி அனைத்து நீதிமன்றம்கள், தீர்ப்பாயங்களில் வக்கீல்கள் ஆஜராகமாட்டார்கள். இதுவரை கைது செய்யப்பட்ட வக்கீல்கள் விடுவிக்கப்பட வேண்டும். பொய் வழக்குகளின் அடிப்படையில் வக்கீல்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். "
suran
இவையாவும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பிணியாக்கி கைதான நீதிபதி [?]என்பவருக்கு ஆதரவாக நாளைய நீதிபதிகளாகும் இன்றைய வக்கீல்கள் சங்க தீர்மானம்.

நீதியை வழங்க வேண்டிய வர் குற்றம் செய்தால் அதை கண்டு கொள்ளகூடாதாம்.வழக்குரைஞர்கள் என்னதான் அடாவடி செய்தாலும் அதையும் கண்டு கொள்ள கூடாதாம்.
அதைத்தான் நீதிபதி கைதை கண்டித்து இவர்கள் நடத்தும் போராட்டம் சொல்லுகிறது.
தமிழ் நாடு முழுக்க வழக்குரைஞர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை தகர்ந்து வருவதை இவர்கள் அறியாமல் மேலும் அட்டகாசம் செய்வதும்,சட்டத்தின் வலிமையை காட்ட வேண்டிய இவர்களே சட்டத்தை துச்சமாக மதித்து விதி மீறல்கள் செய்வதும் வழக்குரைஞர்கள் மீது உள்ள மதிப்பையே மக்களிடம் குறைத்து விட்டது.ஆனால் அதை இவர்கள் உணராமல் இன்னமும் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் எந்த தவறு செய்தாலும் யாரும்,காவல்துறையும் தங்களை தட்டிக்கேட்கக் கூடாது என்ற எண்ணம் சட்டம் படித்த ஒரே காரணத்தால் இவர்கள் மனதில் உள்ளது.அதற்கு காரணம் நீதிபதிகளும் இவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதுதான்.காவல்துறையும் இவர்களிடம் அடங்கிப் போவதுதான்.
அந்த காரணமே இவர்களை சட்டவிதிமுறைகளை மீறியே எல்லாவற்றையும் செய்ய வைக்கிறது.காவல் நிலையத்துக்குள் நுழைந்தே கலவரம் செய்யவும் இவர்களுக்கு தைரியத்தை தந்துள்ளது.
இன்று வரை உயர்நீதிமன்ற காவல் நிலையத்தினுள் நுழைந்து காவலர்களைத் தாக்கி வாகனங்களையும்,காவல்நிலைய கோப்புகளையும் தீவைத்து எரித்ததற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததும் இவர்களுக்கு தைரியம் வரக் காரணம்.
பெண்ணை ஏமாற்றி பாலியல் மோசடி செய்த மனிதருக்கு என்ன தண்டனையோ அ தைத்தான் கைது செய்யப்பட நீதிபதிக்கும் தர வேண்டும் .
இல்லை இவருக்கு வக்கீல்கள் போராட்டத்தினால் விதி விலக்கு என்றால் இனி யாருக்கும் இதே குற்றத்துக்கு தண்டனை விதிக்க இது போன்ற நீதிபதிகளுக்கு அருகதையே கிடையாமல் போய்விடும்.
நீதிபதிகள் இங்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் தீர்ப்புகள் வழங்குகிறார்கள்.வக்கீல்களும் தனது வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் வாதாடுகிறார்கள்.யாரும் மக்களுக்காக ,சமூகத்தின் சட்டம் ஒழங்கை பாதுகாக்க பிறப்பெடுத்து வரவில்லை.அவர்களுக்கு தனி சட்டதிட்டங்களும் இல்லை.எல்லோருக்குமான விதிகள்தான் அவர்களுக்கும் .
வக்கீல்கள் போராட்டம் என்றாலும் தனிப்பட்ட அமைப்பின் போராட்டம் நடத்தினால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் படுமோ அதையே காவல்துறையும், அரசும் எடுக்க வேண்டும் .
கட்சிக்காரரிடம் காசை வாங்கிக்கொண்டு வழக்கிற்கு செல்லாமல் நீதிமன்ற புறக்கணிப்பில் அடிக்கடி வேடிக்கையாக செல்லும் இவர்களை நுகர்வோர் நீதிமன்றத்தில் சென்று தண்டிக்கும் உரிமை நுகர்வோர் என்ற அடிப்படையில் இவர்களிடம் வழக்கை ஒப்படைத்து விட்டு அல்லல் படுவோருக்கு வேண்டும் .சட்டத்தின் முன் எல்லோரும் சமமே.
அது நீதிபதியோ,வக்கீலோ எல்லோரும் சமமே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சின்ன ,சின்ன மருத்துவம்.
-------------------------------------------- 


* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.
ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
 சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
  திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் பறந்துபோய்விடும், கண்களின் சிவப்பு.

* சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.

* வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

* ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், ( அதாவது நினைத்தபோதெல்லாம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ) உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில்வெடிப்பைப் பார்க்க முடியாது.* சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

* முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

* வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

* அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.

* மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நெல்லி காய்.
----- --------- -----------
நெல்லிக்கா அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் மூகூன்றுநோய்களையும் போக்கவல்லது. ெஇதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத நுல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.
நமது முன்னோர்கள் இதனை இரசாயனம் என்றே அழைத்துள்ளனர்  தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூயிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.
ஐந்து சுவை
ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.
உயிர்சத்துக்கள்

உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்சு தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

பித்தம் தணிக்கும்

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் யீரணமாகும்.

நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புச்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

நினைவாற்றல்

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது.

பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 29 ஜூன், 2013

மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.

மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள்.
இப்போது அழகிரி அமுங்கி விட்டார்.
சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும்
வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார்.
கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார்.
2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக 3 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், 15 விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தார். பொதுமக்களின்  மனுக்களை பெற்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பேஸ்புக் மூலம் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றார். இவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டார்.ஊரக பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்தார்.

சரியில்லாத பணிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்தார். அரசு கட்டிடங்களைக் கட்ட ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு கமிஷன் கொடுத்து தரமற்ற பணிகளை செய்ததாக புகார் எழுந்தது. இதில், விசாரணை நடத்தி, கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் முறையற்ற பரிந்துரைகளை கலெக்டர் ஏற்பதில்லை எனக் கூறப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து  கூட்டம் போட்டு கலெக்டரை மாற்ற வேண்டும் என மூத்த அமைச்சர்கள் குழுவிடம் மனு கொடுத்தனர். ஆனால், அமைச்சர்கள் குழு கலெக்டரை பகைத்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர். மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்கள் தொடர்பாக அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தார். மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினார். இதில் மேயருக்கும், கலெக்டருக்கும் மோதல் ஏற்பட்டது.ரிங் ரோட்டில் பில் இல்லாமல் டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் மூலம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வைத்தார்.

 முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிர்வாகத்தில் கலெக்டர் தலையீடுவதாக கூறி, கவுன்சில் கூட்டத்தில் கலெக்டரை கண்டித்து தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் இரவு கலெக்டர் முன்னிலையில் மேயர், மாநகராட்சி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் பணியேற்று ஒரு வருடம், ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக கடலூரில் சப் கலெக்டராக பணியாற்றும் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்சுல் மிஸ்ராவுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் விசாரணை நிலை என்ன?
கிரானைட் குவாரியில் யி16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என முன்னால் கலெக்டர் சகாயம் கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அன்சுல்மிஸ்ரா முறையாக விசாரணை நடத்தி 86 குவாரிகளில் முறைகேடு என கண்டுபிடித்தார். உரிய விசாரணைக்கு பிறகு போலீசார் 50க்கு மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 40க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.ஏற்கனவே கிரானைட் விசாரணை அதிகாரியான ஜான்லூயிஸ் மாற்றப்பட்டார். தற்போது கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் மாற்றப்பட்டதால் இதன் விசாரணை எப்படி போகும் என தெரியவில்லை. தற்போது இதில் இருக்கும் ஒரே அதிகாரி மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 கலெக்டர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மேலூர் பகுதியில் 20 ஆண்டுகளாக முறைகேடாக நடந்த கிரானைட் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். குவாரிகள் மூலம் மாவட்டத்தில் தனிராஜ்யம் நடத்தியவர்களை கைது செய்ததுடன், நிலஅபகரிப்பு, கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும் வருவாய்த் துறையினரை கொண்டு ஆய்வு நடத்தினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை, அளந்து, மதிப்பீடு செய்து, ஏலமிட ஏற்பாடுகள் செய்தார். குறைதீர் நாள் கூட்ட நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மாற்றுத் திறனாளிகள், முதியோரிடம் தனி அக்கறை செலுத்தினார். லஞ்சம், முறைகேடு புகாரிகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 இதனால் வருவாய்த் துறையினர் போராட்டமே நடத்தினர்.
சமீபத்தில் முறைகேடு செய்த துணை தாசில்தார் ஒருவரை கலெக்டர் பணி நீக்கமே செய்தார். நாள்தோறும் கலெக்டரிடன் பேஸ்புக்கில் பலர் புகார் அனுப்பினர். அவற்றின் மீது கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். யூனியன்களிலும், பிர்க்கா அளவிலும், நகராட்சிகளிலும் நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டார்.
 3 நாட்கள் பெண்களுக்கான முகாம் நடத்தி, மனுக்கள் பெற்றது, கவுன்சிலிங், மருத்துவ முகாம் நடத்தியதும் பெண்களிடம் வரவேற்பை பெற்றது. விதிகளை மீறிய பல கட்டடங்களுக்கு சீல் வைத்தார். இப்பிரச்னையில் மாநகராட்சியுடன் உரசல் ஏற்பட்டது. வளர்ச்சித் திட்டப் பணிகள் தரம் குறித்தும், "கட்டிங்' தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதிருப்தியான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் முன்னிலையில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், "கலெக்டர், எஸ்.பி., திட்ட இயக்குனர் இருக்கும் வரை சம்பாதிக்க முடியாது. இவர்கள் மூவரையும் மாற்ற வேண்டும்,' என வெளிப்படையாக பேசினர். ரிங்ரோட்டில் முறைகேடாக கட்டணம் வசூலித்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
 பணவசூலில் மாநகராட்சியில் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டது.
 போலீசாரின் நடவடிக்கைக்கு, கலெக்டரின் பின்னணி இருக்கலாம் எனக் கருதிய மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேயர் ராஜன்செல்லப்பா, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
"கிரானைட்' கற்களை "இ-டெண்டர்' விட முயற்சியையும் அன்சுல் மிஸ்ரா மேற்கொண்டார். ஆளும் கட்சியினர் மேலிடத்தில் முட்டி மோதினர். மாநகராட்சி நிர்வாகத்திலும் தேவையில்லாமல் கலெக்டர் தலையிடுகிறார் என, 2 நாட்களுக்கு முன் தலைமை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
நேற்று திடீரென சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
என்னதான் ஆள்வோர் எண்ணப்படி நடந்து கொண்டாலும் கட்சிக்காரர்கள் வரவு-செலவுக்கு இடைஞ்சலாக இருந்தால் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.இது இன்னொரு முறை நிருபணமாகியுள்ளது.

வெள்ளி, 28 ஜூன், 2013

"மோடி"யின் "மந்திரம் "?

"குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது."
ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.
"இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?"
மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
 அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?
மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும்.
 15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.
டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.
அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.
உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன.
வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.
எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த "ஆப்கோ வேர்ல்ட்வைட்" என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம்.
 துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது.
 ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.
கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது.
அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது.
அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.
அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.
அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.
துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான். 
மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.
ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.
மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.
இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.
அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.
ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது.
ஆனால் "மோடியின் சமீபத்திய இமாலய ஜாலம் "அப்பட்டமான  கலப்படமற்ற பொய்.

நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...