செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

அழிவு வரும் வழி?


கேரள மாநிலம், கொச்சி யில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு  எரிவாய்வு எடுத்து செல்லும் திட்டம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் என்னும்  இந்திய  அரசு நிறுவனம்  திட்டமிட்டது.  
இத்திட்டத்தை  செயல்படுத்த 310 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 20 மீட்டர் அகலத்திற்கும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதற்காக  5,842  நபர்களுக்கு சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தினை கையகபடுத்த  கெயில் நிறுவனம் நடவடிக்கை  எடுத்தது.
இதனை ஏழு மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் சமுக இயக்கங்கள் தமிழகமெங்கும் உள்ள  சூழலில், அரசியல் இயக்கங்கள் எதிர்த்தனர்.  
நிலத்தில் விவசாயம் செய்யமுடியாததும் மற்றும் அருகில் உள்ள நிலங்களை மேம்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்பதாலும் விபத்துக்கள் ஏற்படும் போது ஒட்டுமொத்த நிலமும் பயனற்று போவதாலும் மக்கள் இதனை எதிர்த்தனர்.
விவசாயிகளின் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் பகுதியில் ஆழமாக வேரூன்றும் மரங்கள் வளர்க்கக் கூடாது என கெயில் நிறுவனம் தடை செய்வதால்  மரங்களை சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அஞ்சினர். இந்த குழாய்களுக்கு வேரேதும் பாதிப்புகள் ஏற்ப்பட்டாலும் அது விவாசயிகளுக்கு மரண தண்டனை வழங்கும் அளவிற்காண ஆபத்துள்ள சட்டங்களை கொண்டுருப்பதாலும் இதனை ஆராம்பத்திலேயே அனுமதிக்கக் கூடாது என்பதில் மக்களும் இயக்கங்களும் தெளிவாக இருந்தது.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். குழாய்ப் பதிபதை நேரடியாக சென்று தடுக்க முற்பட்டனர்.
     எரிவாயுக் குழாய்களை அமைக்க காவல்துறை பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கெயில் நிறுவனம்   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை பதிப்பதற்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்கக் கூடாது என்று தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கெயில் நிறுவனம். 
மேல் முறையீட்டு மனுவில் விவசாய சங்கங்களும் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நீதிமன்றத்தில் விவசாயிகளுடைய கோரக்கை எரிவாயு குழாயகளை மாற்றுப் பாதையாக தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லலாம் என்பதே. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
மேலும் தலைமை நீதிபதி கொண்ட அமர்வு  எரிவாயு குழாய்களை அமைக்க மாற்றுப் பாதையை தேர்வு செய்ய “பொதுக் கருத்துக் கேட்பு கூட்டம்” நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 
ஆனால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தபடவில்லை மாற்றுப் பாதையை கணக்கில் கொள்ளாமல் குழாய் அமைக்கும் பணியை தொடர்ந்து செய்தது இதனால் விவசாயிகள் மீண்டும் நீதிமன்றம் சென்றனர். அதனை  தொடர்ந்தே கருத்து கேட்க்கும் கூட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்த கூட்டத்தில்  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு மாற்று பாதையில் செயல்படுத்த சொன்னது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் எரிவாயு குழாய்களை கெயில் நிறுவனம் பதிக்கலாம் என்று 2013-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  
சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. இவ் வழக்கில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி ஏ.கே. சிக்ரி, நீதிபதி பானுமதி  அடங்கிய  அமர்வு  செவ்வாய்க்கிழமை  தீர்ப்பு  வழங்கியது.
தமிழகத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில் கெயில் நிறுவனம் எரிவாயு  குழாய்களை  பதிக்கலாம்  என்று  நீதிபதிகள்  தீர்ப்பளித்தனர். எரிவாயு  குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கெயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
எனினும் தற்போதைய சந்தை மதிப்பை கருத்தில் கொண்டு விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை  உயர்த்தி  வழங்க  வேண்டும்  என்றும்  நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் நெடுஞாலை வழியாக எடுத்து செல்ல சாத்தியமில்லை என  கெயில் நிறுவனம் சொல்லுகிறது ஆனால்
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;
மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர் – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;
உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
தமிழகத்தில் நெடுஞ்சாலலையில் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்காது என்று கெயில் நிறுவனம் சொல்லுகிறது இந்த மாநிலங்கலில் சாதியமானது இங்கு மட்டும் ஏன் முடியாது  என்று மக்கள் கேட்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் நெடுஞ்சாலையில்  குழாய்கள் அமைக்க குழி எடுக்கும் போது பாறைகள் இருந்தால்  வெடி வைக்க நேரிடும் இதனால்  இரண்டு கிலோ மீட்டர் போக்ககுவரத்து பாதிக்கும் என்று சொல்ல பட்டுள்ளது அப்படியான் விவசாய நிலங்களில் பாறை இருக்குமானால் இரண்டு சதுர கி.மீ  அளவு விவசாய வேலைகள் குடியிருப்புகள் பாதிக்க படுமே என்றும் மக்கள் அச்சம் தெரிவிகின்றனர்.

2011 இல் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் பதிக்கும் சட்டத் திருத்தத்தில், (P & MP Act 1962 Amendment), எரிவாயு குழாய்கள் சேதம் அடைந்தால் அவை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், இதற்காகக் மரண தண்டனை வழங்க இடம் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் நெடுஞ்சாலையில் கொண்டு செல்வது விரிவான பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும் என்று கெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை  கொடுத்துள்ளது. இது மீத்தேன் திட்டத்தை  செயல்படுத்தும் போது அதனை எடுத்து செல்வதற்க்காகதான் என்றும் சொல்லப்படுகிறது
sethupathi
ஆந்திராவில், கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்ததில்  21 பேர் பலியானதை நாம் கண்கூடாக பார்த்தோம்.
திருவாரூர் மாவட்டம் ஊச்சி மேடுவை  சேர்ந்த ஆனந்தராஜ் ஒ. என் ஜி சி எண்ணைக்குழாய் வெடித்து இறந்துள்ளார் அவர் நண்பர் சேதுபதி உடல் முழுவதும் தீக்காயத்தோடு உயிர் தப்பியுள்ளார்.
கண் முன்னால்  உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது கண்ணை மூடி கொண்டு  அழிவுத்திட்டங்களை ஆதரிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
நீதிபதிகள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா?
கொச்சியில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழ்நாட்டுக்கு வராமலேயே எரிவாயு கொண்டு செல்ல வழி இருந்தும் தமிழ் நாட்டின் வழியாகத்தான் கொண்டு செல்வேன் என்று கெய்ல் அடம் பிடிப்பது எதற்காக?
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மனித  உயிர்களை ,விவசாய நிலங்க்களை கணக்கில் கொள்ளாமல்,விவசாயிகள் பற்றி எண்ணாமல் மொத்தத்தில் மனிதநேயம் இல்லாமல் ஒரு தீர்ப்பு.இது மனித வாழ்க்கைக்கு வைக்கப்பட்ட நெருப்பு.
============================================================================================
இன்று,
பிப்ரவரி-10.

1355 – இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1763 – பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.
1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.
1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1846 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1863 – அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
1931 – புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1954 – வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
1964 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.

எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன்

எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன்  மறைந்த தினம் இன்று  . இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் . ஜெர்மனியில் பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார் .
பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை,மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார் . அதற்கு காரணமான கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார் . அந்த கதிரின் பண்புகள் புரியாததால் அவர் அப்படி அழைத்தார். அவரின் பெயரையே அதற்கு சூட்டவேண்டும் என்று பிறர் சொன்ன பொழுது ,"எத்தனையோ பேர் கடந்து வந்த பாதையை பின்பற்றி இந்த கதிர்களை கண்டிருக்கிறேன் நான். அதற்கு என் பெயரை வைப்பது சரியல்ல !" என்று அழுத்தமாக மறுத்தார்.
அவை புத்தகங்கள் ,வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை கண்டார் ;நடுவில் இந்த கதிர்களின் மீது மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே பதிவான பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு  குண்டுகள் ,ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின்  கண்டறிய பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார் . பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர்
காப்புரிமை செய்யவில்லை .மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார் .
அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது ;அதில் கிடைத்த பணத்தை தான் வேலை பார்த்த பல்கலைகழகத்திற்கே கொடுத்து விட்டார் . உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு அவரும் பசியால் பல நாட்கள் வாட நேர்ந்தது. அவரின்  நிலையறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய்  கட்டிகளை அனுப்பிவைத்தார். அதை உடனிருந்த எண்ணற்ற சகாக்கள் மற்றும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டே இவர் நிறைவடைந்தார்.  பல்வேறு அயனிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்த இவர் இதே நாளில் மறைந்தார் .அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது.

============================================================================================

போலிகளை காலி செய்திட...!

போலி வாக்காளர்கள் தொடர்பான புகாருக்கான ஆதாரத்தை திமுக அளித்தது. ராஜேஷ் லக்கானியிடம் திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் ஆவணங்களை அளித்தார். 
இதில் இரட்டைப் பதிவு, இறந்தவர் பெயர் இடம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. 
மாவட்டங்களில் இருந்து இன்னும் பெறப்படும் ஆவணங்களும் ஆணையத்திடம் சமர்பிப்போம் இரட்டைப் பதிவு, இறந்தவர் பெயர் இடம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் இருந்து இன்னும் பெறப்படும் ஆவணங்களும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ள 45 லட்சம் போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திமுக தலைவர் கலைஞரின் புகாருக்கு தீர்வுக்காண வேண்டும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.
இன்றைக்கு 2016 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் அனைத்துக்கும் ஜெயலலிதா மக்கள் ஆதரவுடன் மீன்டும் வருவார் என்றோ தனது கட்சிக்கு மக்கள் அதரவு தருவார்களா என்ற பயம் இல்லை.

அவர்கள் பயம் எல்லாம் தமிழ் நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள,அல்லது சேர்க்கப்பட்டுள்ள  40 லட்சம் போலி வாக்காலர்களைக் கண்டுதான்.
அனைத்தும் ஆளுங்கட்சி,தேர்தல் ஆணையம்,அரசு அதிகாரிகள் கடும் உழைப்பினால் சேர்க்கப்பட்டவர்கள்.

அதானால்தான் திமுக உடப்பட்ட எதிர்கட்சிகள் எவ்வளவுதான் குற்றச்சாட்டை கூறி நடவடிக்கை எடுக்க கூறினாலும்.அதை கண்டு கொள்ளாமல் வாக்காளர் பட்டியலை  மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கினர்.

தில்லி தலைமை ஆணையத்தில் முறையிட்டும் பெரிய அளவு பயன் உண்டானதாக தெரியவில்லை.
இப்போதுள்ள நிலையில் இந்த வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை சந்தித்தால் நிலைமை சென்ற மக்களவைத் தேர்தலைப் போல்தான் அதிமுகவுக்கு 100/100 .

அதிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி இடங்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.
இரண்டு கட்டம் என்றால் 100 சதவிகிதம் வெற்றிதான்.

சேர்க்கப்பட்ட வாக்காளர் ஒரே நேரம் பல தொகுதிகளில் வாக்களிப்பது சற்று சிரமம் என்பதால்தான் இடங்கள் எண்ணிக்கை மாறுதல்.

இதனால் பல கட்டத்தேர்தலை நடத்திட ஜெயலலிதா விரும்புகிறார்.அவர் விருப்பப்படி நடத்த தேர்தல் ஆணையம் தயார்.காரணம் காட்ட சமீபத்திய மழை,வெள்ள சேதம் அகப்பட்டுள்ளதே?

திமுக உட்பட்ட எதிர் கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்.
வெள்ள சேதம் காரணம் என்றால் அவசரமில்லை அப்பகுதிகளுக்கு என்று தேர்தலோ அன்றே எல்லாத் தொகுதிகளுக்கும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்துடன் ஒத்துப்போனால் சில இடங்கள் அதிகம் கிடைக்க எதிர்கட்சிகளுக்கு வாய்ப்புண்டு.

இந்த கள்ள வாக்குகளை ஒழிக்கவும்,ஆண்டாண்டு புதிய வாக்காளர் சேர்ப்பு என்ற தேவையற்ற கடும்பணியை தேர்தல் ஆணையம் கை விடவும் மிகச்சிறந்த வழி உள்ளது.

அதை நடைமுறை படுத்தினால் கள்ள வாக்கு என்பதே இல்லாமல் போய்  விடும்.

பிழைப்புதேடி வந்த ராஸ்தான்,உ.பி,அசாம் போன்ற வட மாநில தொழிலாளர்களுக்கு ரகசியமாக குடும்ப அட்டைஅடித்து அதன் மூலம் அவர்களை வேறு ,வேறு பெயர்களில்  போலி வாக்காளர்களாக ஒருவரையே பல இடங்களில் சேர்த்து வாக்குகளாக மாற்றும் பணச்செலவு அவர்களுக்கான கூலி செலவுகள் அதிமுகவினருக்கு குறையவும் செய்யும்.

மனசாட்சிக்கு விரோதமாக வாக்காளர் பட்டியல் வெளியிடும் சுமையும் அரசு அலுவலர்களுக்கு குறையும்.

சுலப வழி. 
இப்போது ஆதார் அட்டை இல்லாதவர்களே இல்லை.மேலும் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் அனைவரும் சேர்த்தும் விட்டனர். 
வாக்குப்பதிவு அன்று வாக்காளர்கள் ஆதார் அட்டையுடன் மட்டும் வாக்குப்பதிவுக்கு வந்தால் போதும்.வாக்குப்பதிவு எந்திரத்தில் ஆதார் அட்டை  பார் கோடை ஏ.டி .எம்.மில்  தேய்த்து எடுப்பது போல் எடுத்தால் அவரின் விபரங்கள் படத்துடன் கணினியில் விரியும் அதை வாக்குப்பதிவு  அதிகாரி படத்தில் உள்ளவர் அவர்தானா  சரி பார்க்க வேண்டும். 
பின் வாக்காளர் தன கைவிரல் ரேகையை வாக்களிக்கும் எந்திரத்தில் பதிய வாக்களிக்கும் எந்திரம் அவரின் வாக்கை பெற தயாராகக் காத்திருக்கும். 
அவர் தனக்கு வேண்டிய சின்னத்தில் பட்டனை அழுத்த வாக்கு பதிவாகி அவருக்கான தொடர்பு அணைய அடுத்தவர் வாக்குக்காக எந்திரம் காத்திருக்கும்.
எப்படி?
இதற்காக தற்போதைய வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் மென்பொருளை சிறிது மாற்றம் செய்தாலே போதும்.பலன் போலிகள் ஆட்டம் செல்லாது.

இதன் மூலம் யார் வாக்கையும்,யாரும் அளிக்க முடியாது.

ஒரே ஆள் பல இடங்களில் வாக்காளர் என்ற பெயரில் இருக்கவும் முடியாது.
ஆனால் இதை செய்ய நம் அரசியல்வாதிகள் ஒத்துக்கொள்வார்களா?

அவர்கள் அடிமடியிலேயே கையை வைக்கும் இதை அவர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்.
சில ஆண்டுக்கு முன்னர் வாக்குப்பதிவு எந்திரம் மோசடி என்று சொன்னவரே சென்ற சில தேர்தலில் அதற்கு ஆயுத பூசை கொண்டாடும் அளவு மாறி விட்டாரே?

தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் போலி வாக்காளர்களை ஒழிக்க கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு திரு,திரு என்று முழிக்கலாமா?

வேண்டுமானால் இந்த முறையிலான வாக்குப்பதிவுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆரம்பித்து வைக்கலாம்.

ஆனால் நிரந்தர முதல்வர் கனவு காணமட்டும் முடியும்.


சென்னையில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர் இறந்தவர்கள் என்றும் இவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இதனை களைய தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 தமிழ்நாட்டில்  வாக்காளர்  பட்டியலில்  போலி வாக்காளர்களை எந்த அளவுக்குச் சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றிக் கடந்த சில மாதங்களாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விபரங்களோடு எடுத்துச் சொல்லி வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளன. கடந்த 24.1.2016 அன்று நான் விடுத்த விளக்கமான அறிக்கையிலும், எந்த அளவுக்குத் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைப் பெருவாரியாகச் சேர்த்து மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
தகுதியில்லாத  வாக்காளர்களைப் பெருமளவில் சேர்த்த  மோசடிகள் பற்றி நாளேடுகளில் வந்த செய்திகளையும் எடுத்துக்காட்டியிருந்தேன். குறிப்பாக ஒரு நாளேடு 21.1.2016 தேதியன்று "2016ல்  தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்” என்ற தலைப்பிலே வெளியிட்ட செய்தியில், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில், தற்போது 20.1.2016 அன்று வெளியிடப்பட்டுள்ள  இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி - அதாவது மொத்த மக்கள் தொகையில் 75.56 சதவிகிதம் பேர். மிகையான இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை. மக்கள் தொகையில் 70.40 சதவிகிதத்தினரே வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 75.56 சதவிகிதம் பேர் அதாவது 5.16 சதவிகிதம் பேர் மிகை வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது. சுமார் 40 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்” என்றே புள்ளி விவரத்தோடு அந்த ஏடு எழுதியிருந்தது.

நான் விடுத்த அறிக்கையின் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும்  கழகத் தோழர்கள் வாக்காளர் பட்டியலை நேரடியாகப் பரிசீலித்து கள விசாரணைகளைத் தொடங்கினர். மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் கனிமொழியும் டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார். அதனையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு சில இடங்களில் நேரில் சோதனையிட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி தி.மு.கழகத்தின் சார்பில் எடுத்துக் கூறப்பட்ட  புகார்கள் உண்மையே  என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர்,  இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர்  பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளார்கள். நாம் தந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு தற்போது போலி வாக்காளர்கள்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் என்றால், இன்னமும் நீக்கப்படாமல் உள்ள போலி வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்பதைத்  தீவிரமாக கண்டுபிடித்து உண்மையான ஜனநாயக அடிப்படையில் தேர்தலை நடத்த நூறு சதவிகிதம் உறுதி செய்யப்பட  வேண்டாமா?

இதைப் போலவே மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலின் காரணமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சென்னையிலே எடுத்துக் கொண்டால் மைலாப்பூர் தொகுதியில் மட்டும் 16,798 வாக்குகள்- விருகம்பாக்கத்தில் 17,831 வாக்குகள் -  அண்ணா நகரில் 14,830 வாக்குகள் - தியாகராயநகரில் 13,823 வாக்குகள்- பெரம்பூரில்  13,323 வாக்குகள் என்ற அளவுக்கு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காணத் திகைப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தாலேயே நாம் தந்த புகார்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அந்த வாக்குகளை நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதே போல தமிழகத்திலே உள்ள மற்ற தொகுதிகளிலும்  உள்ள போலி வாக்காளர்களும் முழுமையான சரி பார்த்தலின் மூலம்  கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களை  நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில்  உடனடியாக களையப்பட வேண்டும்.

தேர்தல் வருவதற்கு இன்னும்  இரண்டு மாதங்களே  உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம்  இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய  கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபட  வேண்டும் .
                                                          -என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்..
============================================================================================
இன்று,
பிரவரி-09.
  • வில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)
  • அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)
  • பொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)
============================================================================================





திங்கள், 8 பிப்ரவரி, 2016

கருத்துச் சுதந்திரம்



ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசனின் உரை

“கருத்துச் சுதந்திரம்” என்ற தலைப்பை நான்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னை இங்கு அழைத்தவர்களுக்கும் அதில் நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு இந்தச் சுதந்திரத்தை அளித்தவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் ஏன் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்? அதுவும், ஏன் இப்போது? திரைத்துறையைச் சேர்ந்தவனாக, என் கருத்துகளைச் அச்சமின்றி வெளிப்படுத்துபவனாக, அத்தனை நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் சிந்திப்பவனாக இருப்பதால்தான் திடீரென்று என் கருத்துச் சுதந்திரம் பறிபோவது பற்றி பயப்படுகிறேனா? அரசியல் அல்லது சமய சக்திகள் எதுவும் என் பேச்சுரிமையை முடக்கும் வகையில் அசம்பாவிதமாகவோ அச்சுறுத்தும் வகையிலோ அண்மையில் எந்த முயற்சியாவது மேற்கொண்டிருக்கிறதா? இல்லை, அரசியல்வாதிகளும் சமய நம்பிக்கை உள்ளவர்களும், இருவருமே அப்படி நடந்து கொண்டிருக்கிறார்களா?
 
உண்மையைச் சொல்வதானால், அப்படியெல்லாம் இல்லை. துல்லியமாகச் சொல்வதானால், அது போல் எதுவுமில்லை. பரம்பரை பரம்பரையாக என் முன்னோர்கள் வழி வந்த அக்கறையில்தான் நான் குரல் கொடுக்கிறேன். என் முன்னோர்கள் தங்கள் நிலை குறித்து தங்களுக்கு இருந்த ஆழ்ந்த அக்கறையைப் பறைசாற்றிய தலைமுறையினர். கமல் ஹாசனின் பிரச்சினைதான் என்ன? தான் அச்சுறுத்தப்பட்டது போல் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசத் தேர்ந்தெடுக்க அவனுக்கு என்ன குறை இருக்கிறது? அதிலும் சுதந்திரங்கள் தழைக்கும், குறிப்பாக, பேச்சுச் சுதந்திரம் சிறப்பிக்கப்படும் ஜனநாயகத்தின் கோட்டை, அமெரிக்காவில் அதைப் பேச வேண்டிய அவசியம் என்ன? இங்கு நீங்கள் நினைத்ததைச் சொல்ல முடியும், ராப் பாட முடியும், கெட்ட வார்த்தை பேச முடியும், உங்கள் கல்வியைக் காட்டிக் கொள்ள கௌரவமான மொழியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட சுதந்திரம் இங்கு இருக்கிறது. இதுவா கருத்துச் சுதந்திரம்? இந்தச் சுதந்திரம் போதுமா?
இது போன்ற ஒரு சுதந்திரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லண்டனில் ஹைட் பார்க் வழங்கியிருக்கிறது. உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கிய அது சோப் பாக்ஸ் பேருரை என்று அழைக்கப்பட்டது. வரலாற்றினூடே எத்தனை கள்ளத்தனமாக நகர்ந்தாலும் சரி, மக்களை ஒடுக்கும் சந்தர்ப்பவாத அரசியலின் கரங்களைப் பலரும் தெளிவாக, பல நூற்றாண்டுகளாய் தெளிவாகக் கண்டு வந்திருக்கின்றனர். ரோமின் செனேட் முதல் இந்நாளைய செனேட் வரை.
 
கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் அரண் ஜனநாயகம் மட்டும்தான் என்று கொண்டாடப்படுகிறது. ஆனால், ஜனநாயகம் அப்படியொன்றும் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பு அல்ல என்று சொல்லும்போது என் கருத்து கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கொதிக்கிறார்கள், ஆத்திரப்படுகிறார்கள்.. சிவப்பு என் அரசியலின் நிறம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை நான் இங்கு சொல்ல வேண்டும். இதுதான் என் மதம் என்பதுபோல் ஒரே உணவு உண்பவர்கள் போலில்லாமல் நான் அரசியல் சித்தாந்தங்கள் நிறைந்த இந்த சர்வதேச பஃப்பே விருந்தில் திளைக்கிறேன். உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருக்க வேண்டுமென்றால் மனிதனும் உணவுப் பழக்கத்தைப் போலவே எல்லாம் உண்டு செரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனக்கு மதம் கிடையாது. ஆனாலும் மேன்மையான, இணக்கமான வாழ்வு வாழ நான் சில அபூர்வமான, நுட்பமான விஷயங்களை மதத்தில் இருந்தும் வெட்கமில்லாமல் பயன்படுத்திக் கொள்கிறேன்.
 
சமூகத்தில் நிலவும் அத்தனை நோய்களுக்கும் இறுதி தீர்வு, ஒரே தீர்வு என்று ஜனநாயகமோ, கம்யூனிசமோ, பாசிசமோ அல்லது எந்த ஒரு இசமுமோ இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். கடந்த பத்தாயிரம் ஆண்டு காலமாக நாம் வெவ்வேறு கலவைகளை முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் முன்னேற்றப் பாதையைக் கண்டறிந்தபடிதான் இருக்கிறோம். நம் சமூக அமைப்பே முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் முயற்சிதான். மனித மனமே முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வருகிறது என்று சில விஞ்ஞானிகளும்கூட சொல்கிறார்கள். எனவே, எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் நம் துன்பங்கள் அத்தனைக்கும் தீர்வு கண்டு விட்டது என்று நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
 
ஜனநாயகத்தில் மட்டுமே கருத்துச் சுதந்திரம் இருக்க முடியும் என்ற உண்மையை நீ மறுக்க முடியுமா என்று என்னிடம் கடுமையாகக் கேட்கப்பட்டது உண்டு. ஆனால் வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட பணம் போல் சுதந்திரத்தைப் பொத்திப் பாதுகாக்க முடியாது. ஆபத்து காலத்தில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை வட்டி போட்டு வளரட்டும் என்று அதைப் பூட்டி வைக்க முடியாது.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். நுட்பமான முறையில் நம்மைக் கட்டுப்படுத்தும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக எப்போதும் காவல் நிற்கும் மிகப்பெரிய ஒரு சமூகத்தின் உறுப்பினன் நான். அதனால்தான் கலாசாரத்தின் பெயராலும் அரசின் பெயராலும் பிற குரல்களையும் திரைப்படங்களையும் பிறர் அறியாத வகையில் தணிக்கை செய்யும் திரைப்பட தணிக்கை அமைப்பின் செயல்பாட்டைச் சீர்திருத்தும் வகையில் பரிந்துரைகள் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியில் பணியாற்றும் வாய்ப்பை நான் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
 
நான் இங்கே ஜனநாயகத்தை விமரிசிக்கவோ கம்யூனிசத்தையோ சோஷலிசத்தையோ போற்றிப் புகழவோ வரவில்லை. ஊடகங்களின் வழியாகவும் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் உள்ள திறந்த உள்ளங்களின் மூலமாகவும் கருத்துச் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நாம் ஜனநாயகம் என்றால் தானாகவே அது கருத்துச் சுதந்திரம் என்று பொருள்படுகிறது என்ற நினைப்பில் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது என்று பதிவு செய்யவே நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஜனநாயக அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டுதான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். அது உலகம் வெகுளியாய் இருந்த காலம், இனி அதுவெல்லாம் சாத்தியமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். நாம் வரலாற்றில் சற்றே முன்னோக்கிச் சென்றால், இந்திய அரசியல் வரலாற்றில்கூட அவசர நிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு உலகறிய எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டதைப் பார்க்கிறோம்.
 
இங்கு நான் என் தேசத்தைக் குறை சொல்வதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அதிகார துஷ்பிரயோகம் செய்ய எத்தனையோ முயற்சிகள் செய்யப்பட்டபோதும் நடைமுறையில் வெற்றி கண்டிருக்கும் நம் ஜனநாயகம் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்பதுதான் உண்மை. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நூற்றாண்டுகளாய் நிலவும் ஜனநாயகத்துடன் ஒப்பிடும்போது இந்திய ஜனநாயகம் மிகவும் இளையது. ஆனாலும்கூட அமெரிக்க ஜனநாயக அமைப்பில் நடைமுறைக்கு வருவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அத்தனை குடிமக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு விட்டது.
 
சுதந்திரமோ கருத்துச் சுதந்திரமோ, அது ஜனநாயகத்தால் வழங்கப்படவில்லை. மாறாய், கருத்துச் சுதந்திரமும் பிற சுதந்திரங்களுமே ஜனநாயகத்தை சாத்தியப்படுத்தி இருக்கின்றன. ஜனநாயகத்தின் இயல்பை வடிவமைத்து அதற்கு கலாசார பலம் அளித்தது கருத்துச் சுதந்திரம்தான். அதுவரை ஒடுக்கப்பட்டிருந்த குரல்கள் மார்டின் லூதர் கிங்கின் சிறப்பான தலைமையில் இணைந்து ஓங்கி ஒலித்தன. அவரது குருதியை மையாய்க் கொண்டு இந்த மண்ணின் சட்டம் திருத்தி எழுதப்பட்டது. அதன் பின்னரே அமெரிக்காவில் மாற்றம் ஏற்பட்ட காலம் பிறந்தது.
 
இந்தியா மட்டுமில்லை, உலகமே மாறிக் கொண்டிருக்கிறது. இனி வரும் உலகம் புதிய சவால்களை எதிர்கொண்டு புதிய வாய்ப்புகளை காணப் போகிறது. என் வாழ்நாளில் எல்லைக் கோடுகள் மங்கி மறையும் என்றுகூட என்னால் நம்பிக்கை கொள்ள முடிகிறது. நம்மைக் கட்டுப்படுத்தும் குட்டிச்சுவர்களைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர்களாக இல்லாமல் நாம் அனைவரும் மெல்ல, ஆனால் உண்மையாகவே உலகக் குடிமகன்களாய் ஆவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அது நடப்பதற்கு முன் பற்பல விசில்கள் அடிக்கப்படும். கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலித்து பாதுகாக்கும் ஊடகத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது, அது குறித்து நான் பெருமைப்படுகிறேன். கருத்துக் சுதந்திரத்தைக் காக்க மறைமுகமாய் போராடும் ஊடகம் இது, தேவைப்பட்டால் இந்த ஊடகத்தைக் கொண்டு நேருக்கு நேர் மோதவும் முடியும்.
 
இதை எல்லாம் ஹார்வர்டில் பேசப் போகிறீர்களா, என்று என் நண்பர்கள் சிலர் திகைப்புடன் கேட்டார்கள், சிலரால் நம்ப முடியவில்லை. கல்விக் கட்டிட வளாகத்துக்குள் அளிக்கப்படும் பயிற்சிக் குறைவு எனக்கிருப்பது தொடர்ந்து நினைவுபடுத்தப்படுகிறது. நான் உயர்நிலைப்பள்ளிக்கு மேல் படிக்காதவன் என்பதை இங்கு தன்னடக்கத்துடன் நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு காலத்தில் படிப்பை நிறுத்தியது பற்றி பெருமைப்பட்டுக் கொண்டே நான் கல்வி பெற்றவர்கள் வட்டத்தில் என் குறைகள் குறித்து யாரும் குற்றம் சொல்ல முடியாதபடி பழகிக் கொண்டிருந்தேன், என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். என்ன இருந்தாலும் நான் ஒரு நடிகன், என்னிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தக்க வசனங்களை நான் அறிந்திருந்தேன்.
 
இப்போது, காலப்போக்கில் நான் கல்வியின் மதிப்பையும் கல்வி நிறுவனங்களின் மதிப்பையும் அறிந்து கொண்டிருக்கிறேன். மகத்தான இந்த அமைப்புகளும் தொடர்ந்து சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது உண்மையாக இருக்கலாம். மாற்றமே நிலையானது, தேக்கம் செயலின்மைக்கும் பின்னடைவுக்கும் கொண்டு செல்லும் என்ற சாதாரண புரிதலை ஏற்றுக் கொள்கிறேன். அறிவியல்பூர்வமாய் முறைப்படி கற்றுக் கொடுக்கும் அமைப்புகளில், நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறையில் செய்திறனையும் அறிவையும் நோக்கி தொடர்ந்து முயற்சி செய்து வரும் உங்களைப் பார்த்து எப்போதும் பொறாமைப்படுகிறேன்.
 
மீண்டும் திரைப்படக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற என் கனவை நான் சொல்வது ஒரு தன்னடக்கம் என்று குழப்பிக் கொள்கிறார்கள், அதுவும் பொய்யான தன்னடக்கம் என்று நினைக்கிறார்கள். நம்புங்கள், உண்மையாகவே அது தன்னடக்கம் தான், காலமும் அனுபவமும் கற்றுத்தந்த தன்னடக்கம் அது. அதுவும், இரக்கமின்றி எனக்குப் புகட்டப்பட்ட பாடம். நான் திரைத் துறையில் கழித்த காலத்தில் சின்னச் சின்ன உத்திகள் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஐம்பத்து சொச்சம் ஆண்டுகள். இருபத்து ஐந்து ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்டதை நல்ல ஒரு திரைக் கல்லூரி ஐந்து, அல்லது ஏழு ஆண்டுகளில் கற்றுக் கொடுத்திருக்கும். இதில் ஒரே வித்தியாசம், நல்ல ஒரு ஆறுதல் என்னவென்றால், நான் என் கல்விக்கு செலவு செய்யாமல் பணம் சம்பாதித்தேன். அது நல்ல கொடுக்கல் வாங்கல்தான் என்று நினைக்கிறேன்.
 
பல துறைகளிலும் இந்தியா பெரும்பாய்ச்சல் நிகழ்த்தப் போகிறது. நான் செயல்படும் துறையில், உண்மையாகவே உலகளாவிய சந்தையில் சர்வதேச அளவில் போட்டியிட இந்தியாவைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம். நூற்று இருபது கோடி மக்கள் கொண்ட ஒரு உள்ளூர் சந்தையே போதும் என்று அதன் குறுகிய எல்லைகளுக்குள் மகிழ்ச்சியாய் சிறைப்பட்டிருக்கக் கூடாது, இந்தியா விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியா உலகளாவிய தரங்களை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். முன்னர் இதைச் செய்திருக்கிறோம். 

சத்தியாகிரகத்தின் முன்னோடிகளும் செயல்வீரர்களும் நாம்தான். ஹென்றி டேவிட் தோரோ உருவாக்கிய கோட்பாடு. நாம் அதை நடைமுறைப்படுத்தினோம். ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாசாரிக்கும் நமக்கேயுரிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்குமே இதற்கான பெருமை உரித்தாகும். மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா முதலான மகத்தான மனிதர்களுக்கு வழிகாட்டும் முன்னோடியானது இந்தியா. எப்போதும் சோர்விலன் என்று சொல்லத்தக்க அந்த மாமனிதர்களின் விழிப்புணர்வு நான் அச்சமின்றி, ஆனால் பொறுப்புணர்வுடன் பேசக் காரணமாகியிருக்கிறது.
 அவர்களின் சுதந்திரப் போராட்ட வழிமுறையை மதிக்கிறேன். அபூர்வமான சில நிகழ்வுகளில், வன்முறையை அகிம்சையால் எதிர்கொண்டு கருத்துச் சுதந்திரம் வென்றடையப்பட்டது. அனைவர்க்கும் சாத்தியமான விஷயமில்லை இது. வன்முறையை அகிம்சை கொண்டு எதிர்கொள்வதற்கு அசாதாரண வீரம் வேண்டும். பொதுவாகவே தன்னடக்கம் கொண்டவராக திகழும் காந்தி, அகிம்சையே மிகவும் உயர்ந்த தீரம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் காரணம் உண்டு. அதனால்தான் இருபத்து நான்காம் தீர்த்தங்கரர், ஜைன முனிவர், அகிம்சையை போதித்தவர், மகாவீரர் என்று அழைக்கப்பட்டிருக்க வ்நேடும். மகத்தான வீரர்.
 
அகிம்சை மிகக் கடினமான லட்சியம், புலால் மறுப்பு மூலம் மட்டும் அடையப்படுவது அல்ல அது. புலால் தவிர்க்கும் ஒருவன் சக மனிதனின் துயரங்களைக் கண்டு கொள்ளாதபோது அகிம்சையின் நோக்கம் தோல்வியடைகிறது. என் மனதில் எப்போதும் டார்வினின் கோட்பாட்டுக்கும் அகிம்சையின் வசீகரச் சித்தாந்தத்துக்கும் போராட்டம் நிகழ்ந்தபடியே இருக்கும். இது வேறொரு மேடையில் பேசப்பட வேண்டிய விஷயம்.
 
மீண்டும் நான் உங்களையும் என்னையும் தொடர்ந்து விழித்திருக்கும்படி நினைவுபடுத்திக் கொள்கிறேன். தன்னைக் காட்டிலும் பரந்த சமூகத்தைப் பொருட்படுத்தாமல் எந்த ஒரு அரசு அமைப்பும் மதமும் வெளிப்படையாகவோ மறைமுகமாவோ உங்கள் மனதைக் குறுகிய ஒரு தன்னலம் மிகுந்த நோக்கத்தின் பொருட்டு கட்டாயப்படுத்தும்போது, நாம் அது குறித்து எச்சரிகையோடு இருந்தாக வேண்டும்.

புதன், 3 பிப்ரவரி, 2016

ஜெயலலிதா முதல்வராவது

காலத்தின் கட்டாயம்?
மார்ச்  -1ல் ,தமிழ் நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
அன்று  முதலே தேர்தல் விதிகள் நடமுறைக்கு வந்தும் விடும்.

அது நடை முறை என்றாலும்  தேர்தல் ஆணையத்தை மத்தியிலும்,மாநிலத்திலும் தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அந்த நடை முறைகளை கண்டு கொள்ளப்போவதில்லை.அவர் எடுக்கும் நடவடிக்கைகள்தான் ஆணையத்தின் நடை முறைகளாகி விடுகின்றன.
இதை கடந்த பிரவீன் குமார் காலம் முதல் காட்டிவருகிறது .இந்திய தேர்தல் ஆணையம் இவர் காலத்தில் இருந்துதான் தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் போல் மாறி யது.மத்தியிலோ சேசன் காலத்துடன் நடு  நிலை மாறி விட்டது.
 கடந்த சட்டமன்ற ,பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக முறைகேடுகளை பற்றி ஆதாரத்துடன்,படங்களுடன் எதிர்கட்சிகள் கொடுத்த குற்றசாட்டுகளுக்கு இன்றுவரை எந்த வித நடவடிக்கைகளும் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்ததாக தெரியவில்லை.
பதட்டமே இல்லாத சட்டமன்ற தேர்தலில் 144 தடை சட்டம் தேர்தல் ஆணையர்  பிரவின்குமார் கொண்டுவந்தது இந்தியாவிலேயே முதல்முறை.
கலவரமும்,பதட்டமும் நிறைந்த காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட 144 தடை சட்டம் இதுவரை பிறப்பிக்கப்பட்டத்தில்லை.
ஆனால் பிரவின் குமார் பிறப்பித்த தடை சட்டம் எதிர் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தியது.பொருந்த வைக்கப்பட்டது.திமுக உட்பட்ட கட்சியினர் பிரசாரம் செய்ய தடை வந்தது.
ஆனால் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் பணம் கொடுக்க உதவியது.
அதை தடுக்க வந்த மாற்றுக்கட்சியினர் 144 ஐ பயன் படுத்தி கைது செய்த அவலங்கள்தான் நடந்தேறியது.
இதை அனைத்துக் கட்சியனரும் கடுமையாகக் கண்டித்தும் இன்றுவரை நடவடிக்கை ஒன்றும் இல்லை.
மாறாக முறைகேடுகள் அனைத்துக்கும் காரணமான பிரவின் குமார்  தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பதவி மாறுதலில் அழைக்கப்பட்டுள்ளார்.

தற்பொதைய 2016 சட்ட மன்ற பொதுத்தேர்தலில் அவர் தனது பணியை மத்தியில் இருந்தே செவ்வனே நடத்துவார்.

தொகுதி வாக்காளர் எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் தற்போதைய ஆர் .கே.நகர் இடைத்தேர்தலில் பதிவாகிய கொடுமையும் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் நடந்துள்ளது.
அனைத்து வாக்குகளும் இரட்டை இலைக்குத்தான்.
அதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை?
தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலேயும் கண்கானிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.அதை சோதித்தாலே கள்ள வாக்காளர்கள் மாட்டிக்கொள்வார்கள்.
அது கூட வேண்டாம் அந்த தொகுதிக்கே சம்பந்தமில்லாத அதிமுக வட்ட செயலார்கள் ,கவுன்சிலர்கள்,கட்சி நிரவாகிகள் பலர் கூட்டம்,கூட்டமாக வந்து மீண்டும் ,மீண்டும் வந்து வாக்குகளை போட்டுத்தள்ளியதையும்,கைகளில் பல முறை அடையாள மையிருப்பதை காமிராக்களில் பெருமையாக காட்டி பேட்டி கொடுத்ததையும் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகள் படத்துடன் செய்தி வெளியானதே அதை வைத்து எதிர்கட்சிகள் மனு கொடுத்ததே அதற்காவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே ?
அல்லது நடவடிக்கை எடுப்பதாக நடித்தாவது இருக்கலாமே?
எதுவும் இல்லை.ஆனால் அந்த வாக்கு சாவடியில் மிரட்டப்பட்டு உயிருக்கு பயந்து பணி புரிந்த அலுவர்கள் மீது விசாரணை என்று கதையை மூட்டைக்கட்டி வைத்து விட்டார்கள்.
இப்போது கூட 40 லட்சத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் பல லட்சம் வாக்களர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.உயிருடன் இருப்பவர்கள் பலர் இறந்ததாக நீக்கப்பட்டுள்ளார்கள்.அனைவரும் திமுக உட்பட்ட கட்சியினர்.
அது தொடர்பாக திமுக ஆதாரங்களுடன்சென்னையிலும்,டெல்லியிலும்  மனு கொடுத்தும்  நடவடிக்கை.???
ஜெயலலிதா கூட்டணியில்லை என்று கூறினாலும் அவர் மறைமுகமாக தேர்தல் ஆணையம்,காவல்துறையினர் கூட்டணியை அமைத்துக்கொண்டுள்ளார்.
நடக்கவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலை பலகட்டமாக குறைந்த பட்சம் இரு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.
பாதுகாப்பு,வெள்ளம்,காரணங்களைக்காட்டி இருகட்ட தேர்தல் நடத்த சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரே நேரம் ஒருகட்டமாக தேர்தல் நடந்தால் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்[?]பல தொகுதிகளில் ஒருவரே ஒரே நேரத்தில் எப்படி இரட்டை இலைக்கு வாக்களிக்க இயலும்?
அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒத்துப்போகக்கூடிய இணக்கம் உருவாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து பல கட்ட தேர்தலை எதிர்த்து ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்த வேண்டும் .
வெள்ள சேத பாதிப்பை காரணம் காட்டினால் வெள்ள பாதிப்பில் இருந்து அந்த மக்கள் மீள்வதாக எண்ணி ஆணையம் என்று தேர்தல் நடத்த உத்தேசித்துள்ளதோ அன்றே எல்லா தொகுதிகளுக்கும் ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் பொதுத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை மற்றகட்சியினர் வையுறுத்த வேண்டும்.
இல்லையெனில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அமைவது காலத்தின் கட்டாயமாகி விடும்.
எதிர்கட்சியில் அமர கூட திமுக,தேமுதிமுக,பாமக,ம.ந.கூ ,வினருக்கு நாற்காலிகள் கிடைப்பது அரிது.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

'ஹாட்’ யோகா ,வியாபாரி.

‘ஹாட்’ யோகா குரு விக்ரம் சவுத்ரி என்ற 69 வயதாகும்  போலி குரு இந்திய வேதக் கலாச்சாரத்தை உலக அறியச் செய்யும் பொருட்டு பாலியல் வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.


விக்ரம் சவுத்ரி
2013-ல் இவரது யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்த ஆறு மாணவிகள் தாங்கள் சவுத்ரியால் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
இது தொடர்பான வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு ‘ஹாட்’ யோகா குரு குற்றவாளி என தீர்ப்பளித்து 6.25 கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.
இனி விக்ரம் சவுத்ரியின் பின்னணியைப் பார்ப்போம். 
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசரான அரவிந்த நீலகண்டன் போன்றவர்கள் கூட பெந்தகொஸ்தே கிறித்தவர்கள் ஜெபிப்பதே வேதக் கலாச்சாரம் வழங்கிய யோக முறைகளில் ஒன்றுதான் என்று பீராய்ந்திருக்கிற பொழுது சவுத்ரி ஹாட் யோகாவைக் கண்டுபிடித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.
இப்படி செய்து தான் 1971-ல் அமெரிக்காவில் செட்டிலாகிற விக்ரம் சவுத்ரி உலகம் முழுவதும் பிரபலமான யோகா மாஸ்டர் ஆனார்! 
சுவாமியின் யோகக் கலைக்கு மடோனா, பில் கிளிண்டன், டேவிட் பெக்காம், ஆண்டி முர்ரே, லூக் பெர்ரி போன்ற விதேசிகள் கூட்டமே அடிமை. 
இந்தியாவில் வாழும் தேசத் துரோகிகள் தான் யோகாவின் அருமை தெரியாமல் இருந்துவிட்டார்கள்!
சாமியார் சவுத்ரி தன்னுடைய யோகா பிரண்டை வைத்து மாதம் ஒன்றிற்கு 7 மில்லியன் பவுண்டுகளை கல்லா கட்டியிருக்கிறார். அமெரிக்காவிலும் மனநெருக்கடி, மனஅழுத்தம், மெண்டல் ஹீலிங், கேன்சரை குணமாக்குவது என்று வேத பாரம்பரியம் அவ்வளவு கைகொடுத்திருக்கிறது.
இந்தியாவில் பிரம்ம முஹுர்தத்த்தில் அதாவது தேவர்கள் கலவி கொள்ளும் அதிகாலை நேரத்தில் சுத்தமான ஓசோன் கிடைக்கிறது, சுவாசப் பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று என்னதான் கரடியாய் கத்தினாலும் அமெரிக்க அளவிற்கு கல்லா கட்ட முடிவதில்லை.
பீளமேடு கஞ்சா கேசு, மனைவியை கொன்ற வழக்கு நில ஆக்ரமிப்பு என எத்துணை வழக்குகளையும் சந்திக்கும் ஜக்கி போன்ற சாமியர்களே வாழும் கலை என்று பெயர் வைத்து, அதிர்வுக்கு இன்னர் இன்ஜினிரியங், காஸ்மிக் அலைகள் என்று சொன்னாலும் ஹெலிகாப்டர் வாங்கும் அளவிற்குத்தான் காணிக்கை சேர்க்க முடிகிறது. 
ஆனால் பாருங்கள் சவுத்ரியின் பங்களாவில் மட்டும் 40 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருக்கின்றனவாம்! மாதம் ஒன்றிற்கு 67.4 கோடி ரூபாய் என்றால் சும்மாவா? 
பார்ப்பன ரிசிகளும் முனிகளும் கடல் கடந்து போவது தோசம் என்று தெரிந்தாலும் அமெரிக்காவை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரிகிறதா?
சரி விசயத்திற்கு வருவோம். மன்மதக் கலையின்றி ஆயகலையும் கற்றுத் தேரமுடியாது என்று சங்கராச்சாரி, நித்தியானந்தா, அயோத்தி சாமியார்கள் என்று வரிசைக்கிரமமாக எடுத்துக்காட்டுகள் இருக்கும் பொழுது சாமியார் சவுத்ரி மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா?
குற்றப்பத்திரிக்கையில் சாமியார் ஆண் உறுப்பைப் பிடித்துக்கொண்டு நான் பெங்கால் டைகர் என்று கூறுகிறார்; பாலிவுட் படம் பார்த்துக்கொண்டே மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார் என சாமியாரின் லீலைகளை பல பெண்கள் அடுக்கியிருக்கிறார்கள்.
நித்யானந்தா காமக்கலையில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று அருளாசி வழங்கியதைப் போன்று கனடா மாணவியிடம் சாமியார் 
“நான் செத்துக் கொண்டிருக்கிறேன்; என்னக் காப்பாற்றுவதற்கு உனது உதவி எனக்கு தேவைப்படுகிறது; செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லையென்றால் நான் இறந்துவிடுவேன்; நீ எனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய்; நீ எனக்கு உதவிக் கொண்டிருக்கிறாய்” 
என வசனம் பேசி மாணவியைச் சீரழித்திருக்கிறார். 
அந்தக் கனடா மாணவியிடமிருந்து ஒன்பது வார யோகா வகுப்புகளுக்கு அவரது கல்லூரி படிப்புக்காக வைத்திருந்த $10,000-ஐ  (சுமார் ரூ 6.5 லட்சம்) கட்டணமாக பறித்திருக்கிறார் சாமியார்.
விக்ரம் சவுத்ரி
அடுக்கடுக்கான பாலியல் குற்றங்களுக்கு சவுத்ரி பதில் சொல்லிய விதம் இப்படி இருக்கிறது “என்னிடம் யோகா கற்ற பெண்கள் அப்பாவிகள். அவர்கைள யாரோ தூண்டி விடுகின்றனர். 
நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை. 
அவர்களாக விரும்பி கேட்டுக் கொண்டதால், உறவு வைத்துக் கொண்டேன்” 
என்று சொல்லி தண்டனையை பணமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.
சவுத்ரி சாமியின் இந்த நுணுக்கமான பதில் மனுசாஸ்திரத்தில் சட்டமாகவே இருக்கிறது. 
இந்துப் பார்ப்பனியத்தில் உயர் சாதி ஆண் தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்புணர்விற்கு உள்ளாக்கினாலும் அதற்கு தண்டனை கிடையாது. டாலரில் கட்டிய கப்பத்தை தீக்சையாக கொடுத்துவிடலாம். 
''நான் எந்தப் பெண்ணையும் கற்பழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை பெண்கள் ஏராளமானோர் காதலிக்கின்றனர்; என்னுடன் இருக்க விரும்புகின்றனர். நான் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக பலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர். என் மீது கூறப்படும் புகார்கள் பொய்யானவை,
என் அழகில் மயங்கி, ஏராளமான பெண்கள், என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். என்னை பெண்கள் விரும்புகின்றனர். அவர்களுடன் பழகக் கூட எனக்கு நேரம் இல்லாமல், 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் கிடைக்கவில்லை என்பதற்காக பல பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 
நிலைமை இவ்வாறு இருக்க, நான் போய், இந்தப் பெண்களை வலுக்கட்டாயமாக கற்பழித்தேன் என கூறப்படுவதில் உண்மையில்லை. அந்தப் பெண்களின் வழக்கறிஞர்கள் கூறுவதைக் கேட்டு, நிறைய பணம் கறந்து விடலாம் என்பதற்காக, அந்தப் பெண்கள் இவ்வாறு புகார் அளித்துள்ளனர். 
என் மீது வழக்கு தொடரப்பட்டதுமே நான் உடைந்து போய் விட்டேன். என் மனைவி, என்னை இனி ஏறெடுத்துப் பார்க்க மாட்டாள். எங்களுக்கு திருமணமாகி, 39 ஆண்டுகள் ஆகிறது. 
இதுவரை எந்த புகாரிலும் சிக்கியதில்லை. வேண்டுமென்றே என் மீது கூறப்படும் புகார்கள், பொய் என்பது உறுதியாகும், ''என்கிறார் இந்த காம யோகா குரு .

 இவர் வித்தியாசமான ஆபாச முறையில்  யோகக்கலையை . 104 டிகிரி சென்டிகிரேடுக்கு வெப்பம் ஏற்றப்பட்ட அறைகளில், நூற்றுக்கணக்கான பெண்கள், தங்கள் உடல்களை வில்லாக வளைத்து யோகப் பயிற்சி செய்வர். 
அவர்கள் முன், வெறும் ஜட்டியுடன் நிற்கும் விக்ரம், மைக்கில் பேசியபடி, ஒவ்வொருவரிடமும் சென்று, தொட்டு, தழுவி, கட்டிப்பிடித்து, பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார். 
சில நேரங்களில், அந்தப் பெண்கள் மீது ஏறி நின்று கொள்வது, படுத்துக் கொள்வது என, வித்தியாசமான முறையில், யோகாசனத்தை சொல்லிக் கொடுப்பார். 
இவரின் பயிற்சி மையத்திற்கு, 99 சதவீதம் பெண்கள் தான் வருகின்றனர். 
69 வயதான போதிலும் கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்டவர். 
பயிற்சியின் போது, 'டைட்'டான ஜட்டி மட்டும் அணியும் இவர், வெளியே வரும்போது, கல்லூரி மாணவன் போல, 'டிப்டாப்'பாக உடையணிவார்.

 இந்த மனுஸ்மிருதியால் தான் இந்தியாவில் பார்ப்பனியம் கெட்டிபடுத்தப்பட்டு இன்றளவிற்கும் தேவநாதன், சங்கராச்சாரி என்று பல ஞானிகளைப் பார்த்துவிட்டோம்.

 அதனால் தான் ஜெகத்குரு மீது எழுத்தாளர் கொடுத்த பாலியல் வழக்கு புஸ்வானமாகி பாதிக்கப்பட்ட பெண்ணே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று புகாரை முடித்தார்கள். இந்த லோகத்துக்கே பார்ப்பனர்கள் குரு என்கிற பொழுது வேதக் கலாச்சாரம் கனடா பெண்ணுக்கு பொருந்தாதா என்ன?

ஞானியர்களின் நடவடிக்கை இந்த இலட்சணத்தில் இருக்கிற பொழுது, இந்திய நாட்டின் உழைக்கும் மக்களை பார்ப்பனியம் எப்படி நடத்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
மிகச் சமீபத்தில் திணமணியின் வைத்தியநாத ஐயர் சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதற்கு கீழ்க்காணும் விளக்கம் ஒன்றைத் தந்திருந்தார்.
“ஐயப்ப பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து சபரிமைலக்கு வருகிறார்கள். அனைவரும் முற்றிலும் புலனடக்கிய முனிவர்கள் அல்லர். லட்சக்கணக்கான ஆண்கள் கூடுமிடத்தில், அதிலும் கானகத்தில் பெண்களும் வருவது என்பது இயல்பாகேவ அசம்பாவிதத்திற்கு வழிகோலக்கூடும். அதைத் தடுப்பேதா, கண்காணிப்பேதா பாதுகாப்புத் தருவேதா இயலாத ஒன்று. “தவறு நேர்ந்தால்’ என்கிற கேள்விக்கு யார் பதிலளிப்பது?” என்று கேட்டிருக்கிறார்.
ஐயப்ப பக்தர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் அவர்கள் புலனடக்கிய முனிவர்கள் அல்லர் என்று வைத்தி அடித்துக் கூறுகிறார். 
சனாதன இந்துமதமே உழைக்கும் மக்களை திருடனாகவும் கற்பழிப்பவனாகவும் பார்ப்பதற்கு இது ஒரு தெளிவான சான்று.
ஆனால் இங்கு வைத்தி கூறுகிற புலனடக்கிய முனிவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாங்கள் காட்டிவிட்டோம். 
உழைக்கும் மக்களின் பக்தியையும் ஒழுக்கத்தையும் கொச்சைப்படுத்துகிற பார்ப்பனியத்தை என்ன செய்யலாம்  என்பதை நீங்கள் சொல்லுங்கள்.                                                                                                                                        

இலவசங்களால் தற்கொலை ?

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 1,200 கோடி ரூபாயை தராமல், தமிழ்நாடு அரசும் நுகர்பொருள் வாணிபக் கழகமும் இழுத்தடித்து வருவதால், இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், கடும் விரக்தியில் உள்ளனர். 
அவர்களுக்கு  கடன் வழங்கிய வட்டிக்காரர்கள் மிரட்டல் விடுத்து வருவதால், தற்கொலை முடிவில் இருப்பதாகவும், அவர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். 
 கருணாநிதியின் தி.மு.க., ஆட்சியில், ஏழை மக்களுக்கு இலவச கலர், 'டிவி' வழங்கப்பட்டது. 
அதை பின்பற்றி,ஜெயலலிதா  அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அல்லது மின் அடுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது; வருவாய் துறை வினியோகம் செய்கிறது. 
35 லட்சம் பொருட்கள்:கடந்த, 2011 - 12ல், 1,200 கோடி ரூபாய்க்கு, 25 லட்சம் இலவச பொருட்கள் வாங்கப்பட்டன. 2012 - 13, 2013 - 14ல், தலா, 35 லட்சம் பொருட்கள் வாங்கப்பட்டன. 
இவற்றின் மதிப்பு, 3,000 கோடி ரூபாய். இதன்பின், 80 லட்சம் இலவச பொருட்களை, 3,200 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்யப் பட்டது. 
அதன்படி, 27நிறுவனங்களிடம் இருந்து, 80 லட்சம்பொருட்கள் வாங்கும் பணி, 2015 பிப்ரவரியில் துவங்கியது. தற்போது, கொள்முதல் முழுவதும் முடிந்து விட்டது. 
ஆனால், 1,200 கோடி ரூபாயை, இலவச பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு தராமல், தமிழ்நாடு அரசு  இழுத்தடித்து வருவதாகவும் , கொள் முதல் செய்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பணம் வழங்கும் என்று கூறு வதாகவும் ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  பணம் வழங்குவதை கண்டு கொள்ளாமல் இழத்தடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாணிபக் கழகம் இறுதிகட்டமாக, 80 லட்சம் பொருட்களை மட்டும் சப்ளை செய்யும்படி கூறியது. அவை, 2015 இறுதியில், சப்ளை செய்யப்பட்டு விட்டன. 
பொருட்கள் சப்ளை செய்ததற்கு, 1,200 கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், அதை தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும், 10 ஆயிரம் ஊழியர்களுக்கு, சம்பளம் தர முடியவில்லை; வங்கிக் கடனை கட்ட முடியவில்லை; உதிரிபாகங்கள் சப்ளை செய்தநிறுவனங்களுக்கு, பணம் தர முடியவில்லை.
வட்டிக்காரர்கள், 'பணம் தரவில்லை என்றால், கொலை செய்து விடுவேன்' என, மிரட்டி வருகின்றனர். இதனால், தற்கொலை முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 300 கோடி ரூபாய் வழங்கும்படி, வாணிபக் கழகத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது; 
ஆனாலும், பணம் தரவில்லை. 
தேர்தல் தேதியை அறிவித்து விட்டால், பணம் பெறுவது சிரமம். 
அதை மனதில் வைத்தே, நிலுவைத்தொகையை தராமல், வாணிபக் கழகம் இழுத்தடித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக அரசு, ரேஷன் கடைகளில் அரிசி பெற தகுதியுடைய, 1.85 கோடி நலிந்த குடும்பங்களுக்கு, இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவித்தது. 
ஆனால், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் என, அதிக வருவாய் ஈட்டும், 10 லட்சம் பேர், அரிசி கார்டு வைத்து உள்ளனர். 
இதனால், 1.75 கோடி இலவச பொருட்கள் மட்டுமே வாங்கப்பட்டு, அவற்றின் வினியோகம் முடியும் தருவாயில் உள்ளது.அவைகளை எல்லாம் வாக்குகளாக மாற்ற ஜெயலலிதா அரசு முயற்சிக்கிறது.
ஆனால் அடிமாட்டு விலை ஒப்பந்தத்தில் இலவச பொருட்களை கந்து வட்டியில் மூலப்பொருட்கள் வாங்கி தயாரித்து கொடுத்தவர்கள் நலிந்த நிலைக்கு சென்று தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் நிலையில் உள்ளனர்.
==========================================================================================================




.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...