திங்கள், 19 நவம்பர், 2018

எதுவும் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்காது!

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கிய வழக்கில் தலையிட்டு அவரை காப்பாற்றுவதற்கு ஓர் அமைச்சருக்கு சில கோடி ரூபாய் அளித்தோம் என சிபிஐயின் அதிகாரி மனிஷ்குமார் சின்ஹா என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.

சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா மொய்ன் குரோஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரிடமிருந்து (அவரை ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க) 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். 

இதைத்தொடர்ந்து இவரின் வழக்கை விசாரித்துவந்த சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். அஸ்தானாவின் வழக்கை விசாரித்து வந்த அலோக் வர்மாவின் ஆதரவு அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். 

அந்த ஆதரவு அதிகாரிகளில் ஒருவர்தான் மனிஷ்குமார் சின்ஹா. இவர் நாக்பூருக்கு மாற்றப்பட்டார்.

தற்போது சின்ஹா தனது மாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய வழக்கின் விசாரணையானது நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பாக ஆஜரான மனிஷ், தான் மாற்றப்பட்டது அஸ்தானா மீதான வழக்கின் போக்கை மாற்றுவதற்குத்தான் என்றும் தன்னிடம் உள்ள ஆவணங்கள் நீதமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று தெரிவித்தார். 

மேலும் இந்த வழக்கில் அஸ்தானாவுக்கு ஆதரவாக வழக்கில் தலையிட்டு அவரைக் காப்பாற்றுவதற்கு ஒரு மத்திய அமைச்சருக்கு சில கோடி ரூபாய் அளித்ததாகக் குறிப்பிட்டு, வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு கோரினார். 

அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி எதுவும் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்காது என்று கூறி அவசரமாக வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை நிராகரித்தார்.
அதானே .மோடி கட்டளைப்படி நடப்பவர்களை எதுவுமே அதிற்சிக்குள்ளாக்காது தான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தலை நடத்திருவோம்.

20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பே நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கலைஞர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. 
சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புடன் இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படிப்பட்ட அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. 


இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், தாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை என்று தினகரன் தரப்பு தெரிவித்துவிட்டது.
இதனால் 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. 

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுடனேயே இடைத் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்தச் சூழ்நிலையில் தனியார் ஊடகங்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், “திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். 

மேலும் புயலின் காரணமாக இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால், புயல் வந்திருக்கும் இந்த நேரத்தில்தான் தேர்தல் நடந்திருக்கும். 
இதன் மூலம் பல சிரமங்களைத் தவிர்த்துள்ளோம். திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால், நிச்சயமாகக் குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தல் நடத்தப்படாது என்று தெரிவித்த ராவத், “தொகுதி காலியான அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 
திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு தொடர்பாக யாரும் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே 20 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத் தேர்தல் நடத்தப்படும்” என்றும் கூறினார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கள்ளச்சாராயம் 

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணியின் சொந்த தொகுதியான வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் கள்ளச்சாரய விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாலும் அமைச்சருக்கு வேண்டியவர்கள் தலையீட்டால் உடனே வழக்கு பதிவு செய்யப்படாமல் வெளியே வந்து விடுகிறார்கள்.
வந்தவுடன் குற்றம் சுமத்தியவரை கண்டு பிடித்து பாராட்டி (?) விட்டு சொல்கிறார்களாம்.


ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ரஹாரம் மலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. 

இதன் அடர்ந்த வனப்பகுதியில் அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சமூக விரோதிகள் சிலர் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், இங்கு காய்ச்சப்படும் சாராயம் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் தங்கு தடையின்றி விற்பனைச் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்பனை அமோக நடைபெறுவது, பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை நீக்கம் செய்யப்பட ஊடகங்கள்.
இந்த விடுதலை செய்தியை இன்று வெளியிட்ட ஊடகங்கள் அனைத்துமே "தர்மபுரி பேருந்து எரிப்பு.
குற்றவாளிகள் விடுதலை என்றுதான் தலைப்பே போட்டுள்ளனர்.
கதறி அழுதபடி எரிந்து சாம்பலான மூன்று மாணவிகளை பெட்ரோல் ஊத்தி கொலை செய்த கொலைகாரர்கள் என்பதை மறைத்தே தலைப்பை வெளியிட்டுள்ளன.

மேலும் தமிழகத்தின் கஜா புயலின் தஞ்சை,நாகை,கடலூர் மாவட்டங்களில் செய்த பேரழிவை இன்றுவரை சரியாக மக்கள் பார்வைக்கு இந்த ஊடகங்கள் கொண்டு போகவில்லை.

காரணம் அங்கிருந்து வரும் செய்திகள் மிகவும் அதிற்சியாக்வும்,வேதனை தரக்கூடியதாவுமே உள்ளன.

 கஜா புயலின் பேரழிவில் இருந்து மீண்டுவர இன்னும் 10 ,15 ஆண்டுகளாகிவிடுமாம்.
வாழ்வாதாரமான 2லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன.
குடியிருந்த வீடுகள் பல ஆயிரம் தரைமட்டமாகி வேற்று வெளி,சாலைகளில் சோறு பொங்கி சாப்பிடும் நிலை.புயல் கடந்து போய் 7நாட்களான பின்னரும் குடிநீர்,மின்சாரம் கிடையாது.
சரிந்த மின்கம்பங்களை சரி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் கிடையாது.

அமைச்சர்கள் மரிக்கப்படுவதும்,விரட்டப்படுவதும் மக்கள் எவ்வளவு துயரத்தில்,கோபத்தில் உள்ளார்கள் என்று காண்பிக்கிறது.
ஆனால் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று வந்த பின்னரும் தமிழ் நாட்டின் முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவே இல்லை.

மாறாக தனது தொகுதியில் மலர் பாதையில் நடந்து சென்று அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்.அதை இந்த ஊடகங்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

பாதிப்பு பணிகளை செய்யாமல் ஊர்வலம் வந்த ஓ.எஸ். மணியனை  மக்கள் விரட்டியதால் காரை நொறுக்கியதால் தப்பித்து சுவரேறி குதித்து ஓடியதை ,எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் காரை சுற்றி நின்று மக்கள் தங்கள் குறைகளை சொல்லி கதறி முழுவதையும் தந்தி தொலைக்காட்சி செய்தியாக திரித்து வெளியிட்டதுதான் ஊடகங்களின் மொள்ளமாரித்தனத்தின் உச்சக்கட்டம்.

"சுரேறி குதித்து நிவாரணப்பணி செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன். ஸ்டாலின் காரை மறித்து கோஷமிட்ட  பொதுமக்கள். "

தமிழ் நாட்டின் ஊடகங்கள்  ஆண்மை நீக்கம் செய்யப்பட ஊடகங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...