வெள்ளி, 27 ஜூன், 2014

பேரா சிறி யர் ?


suran

சென்னை எத்திராஜ்கல்லூரியில் இணைப்பேராசிரியராக இருந்த கல்யாணி மதிவாணன், 2011 ஏப்ரல்9 ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட் டார். 
இவர்  நியமனத்துக்கு ஒரே தகுதி முன்னாள் அதிமுகஅமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார்.
அவர் பதவியேற்ற நாளிலிருந்தே, ஆசிரியர், மாணவர், ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபட்டார். 

தன்னை எதிர்த்து பேசுபவர்களை அடியாட்கள் வைத்து மிரட்டினார்.இதனால் இவரை எதிர்த்து பல போராட்டங்கள் மாணவர்களாலும்,ஆசிரியர்களாலும்,அலுவலர்களாலும் நடத்தப்பட்டன.ஆனால் அதிமுக கட்சி தலைமை இவருக்கு ஆதரவாக இருந்ததால் இவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை.ஆனால்  பல்கலைக் கழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன
.இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)வகுத்துள்ள விதிமுறைகளின் படி, பத்தாண்டுகள் பேராசிரியர் பணியில் இருந்தவரே துணைவேந்தராக நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் எத்திராஜ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக மட்டுமே இருந்தவர்.
ஆனால் அவர், இணைப்பேராசிரியர் என்பதை மறைத்து, பேராசிரியராக இருந்ததாகத் தன்னுடைய விண்ணப்ப மனுவில் தவறான தகவலைக் கூறி, துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் ஓய்வு பெற்ற பேரா.ஜெயராஜ், பேரா.இஸ்மாயில், சந்திரன் பாபு ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர்.அந்த வழக்கு விசாரணைக்கு வரவிடாமல் கல்யாணிமதிவாணன் தரப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பலப்பல போராட்டங்கள், பலப்பல வழக்குகள் என்று காமராசர் பல்கலைக்கழக வரலாற்றிலேயே இந்த இரண்டு ஆண்டுகளில் தான் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன. பல முறைகேடான நியமனங்கள், முறைப்படி இடஒதுக்கீடு செய்யாத நியமனங்கள், அதை எதிர்த்த வழக்குகள் என்று இந்த காலகட்டத்தில்தான் பல்கலைக்கழகம் முழுக்க ‘பணக்கலைக்கழமாக’ மாற்றம் பெற்றுள்ளது.
முறைகேடுகளால் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகப் பல்வேறு மட்டங்களில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணமுள்ளன.அத்தோடு தனக்குப் பிடிக்காத, தனக்குப் பிடித்தவருக்குப் பிடிக்காத ஆசிரியர், அலுவலர், மாணவர் என்று சகல தரப்பினரையும் சஸ்பெண்டு, இடமாற்றம், பதவி இறக்கம் என்றுபல அராஜகங்களை துணைவேந்தர் பதவிகொண்டு கல்யாணி மதிவாணன் செய்தார். பேரா.கிருஷ்ணசாமி, பேரா.இரவிக்குமார், பேரா.வாசு, அலுவலர் பார்த்தசாரதி, ஆராய்ச்சி மாணவி ஈஸ்வரி, ஆராய்ச்சி மாணவர்கள் அருண், பாண்டியராஜன் என்று பலரும் அவரது தவறான நிர்வாகத்தால் கடுமையாகப் பழிவாங்கப்பட்டனர். இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் பலகட்டப் போராட்டங்களை நடத்தியது.
suran

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், கல்யாணி மதிவாணனைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ‘மதுரைப் பல்கலையைப் பாதுகாப்போம்’ இயக்கத்தின் சார்பில் போராடி வந்த பேராசிரியர் சீனிவாசன், ரவுடிகளால் தாக்கப்பட்டு கைகள் உடைக்கப்பட்டார். அவர் தந்த வாக்குமூலத்தின் படி அந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கல்யாணி மதிவாணன் சேர்க்கப்பட்டுள்ளார். அரசியல் செல்வாக்கினால் இன்னும் கைதாகாமல் இருக்கிறார்.இது தவிர பார்த்தசாரதி என்பவர் தொடுத்த வன்கொடுமை வழக்கிலும், முதல் குற்றவாளியாகக் கல்யாணி மதிவாணன் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது.
பரபரப்புத் தீர்ப்புஇந்த நிலையில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனறு பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இணைப் பேராசிரியரானஅவர் தன்னைப் பேராசிரியர் என்று கூறிப்பதவியை பெற்றார் என்பது இந்தத் தீர்ப்பின் மிக முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளது.மேலும் யு.ஜி.சி. விதிகள் இவர் நியமனத்தில் மீறப்பட்டுள்ளதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட டிவிசன்பெஞ்ச், மேற்கண்ட தீர்ப்பினைஅளித்தபோதிலும், துணைவேந்தரின் வழக்கறிஞரது வேண்டுகோளை ஏற்று, இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்தனர்
suran

.‘ஒருபல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகள் 2010ன் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ள தகுதிகள், காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒழுங்காற்று விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டியவை அல்ல என்ற வாய்ப்பினை பயன்படுத்தி இதுபோன்று தகுதிகள் தொடர்பான அம்சம் முற்றிலும் மறுக்கப்பட்டு பின்பற்றப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது. 
எனவே, மேற்கண்ட நியமனம் செல்லாது’ என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.
ஆளுநர்அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கல்யாணி மதிவாணனின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பமே, அதில் அவர் பேராசிரியர் என்று தன்னைக் குறிப்பிட்டிருப்பதே வழக்கின் மிக முக்கிய ஆவணமாக இருந்துள்ளது. 
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கல்யாணி மதிவாணன், துணைவேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது என ‘மதுரைப் பல்கலைக் கழகத்தைப் பாதுகாப்போம் இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர், அலுவலர் தரப்பினரும் இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்தியுள்ளன.
ஆளுநர் விரைந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு தலையிட்டு, கல்யாணி மதிவாணனை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக உயர்கல்வி வரலாற்றில், ஒரு துணைவேந்தரின் பதவி நியமனம் செல்லாது என்று நீதி மன்றத் தீர்ப்பு வந்துள்ளது 
இதுவே முதல்முறை .

=============================================================================================

தண்ணீர்...

ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும். 

1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.

suranஞாயிறு, 8 ஜூன், 2014

மின்வெ ட்டு இல் லை

ஜூன் ஒன்று முதல் தமிழ் நாட்டில் மின்தடை கிடையாது என்றுதான் ஜெயலலிதா சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதாக நினைக்கிறேன் .ஆனால் அதுவரை இருந்த மின்சாரம் அவர் அவ்வாறு ஏதோ சொல்லிய அடுத்த நாள் முதல் காணாமல் பொய் விட்டது.

தேர்தலை முன்னிட்டு வழங்கிய மி ன்சாரம் ஜுன் ஒன்று முதல் காணாமல் போனது .
தினசரி மின்வெட்டு முன்பைவிட அதிகம் இங்கு.
இரவை நினைத்தாலே அழுகைதான் வருகிறது.இடையிடையே மணிக்கணக்கில் மின்சாரம் வெட்டுபட தொடர் தூக்கம் வெட்டு பட்டு தொலைந்து துக்கம் மட்டுமே.
ஜெயலலிதா ஜூன் அறிவிப்புக்கு காரணமே தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் உற்பத்தியை துவக்கி 2000 மெகாவாட் மின்சாரத்தை தரும் என்பதுதான்.அந்த மின் நிலையம் கூட கருணாநிதி திட்டமிட்டு ஆட்சிகாலத்தில் உருவானதுதான்.இப்போது பலந்தருகிறது.
[சென்னையை கலக்க வரும் மெட்ரோ ரெயில் கூட கருணாநிதி திட்டம்தான்.அப்போது இந்த அம்மையார் அதை வேண்டாம் என்று போராடினார்.இன்று அதற்கு நிதி மோடியிடம் கேட்கிறார்.]
ஆனால் அம்மையாரோ தான் இரவுபகலாக திட்டமீட்டு மின்சாரத்தை வரவைத்ததாக அறிக்கையி கோடிகாட்டி இருந்தார்.
இது பக்கத்து வீட்டுக்காரன் குழந்தைக்கு தான் சொந்தம் கொண்டாடும் சின்னத்தனம்தான்.
ஆனால் இம்மாதம் மூன்றாண்டு சாதனை ஐந்து பக்க விளம்பர வருமானத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்த ஊடகங்கள் அதை பற்றி வாயை திறக்கவே இல்லை.
suran

அப்படி இல்லாவிட்டாலும் கூட நடுநிலை ஊடகங்களான அவைகளுக்கு அதை எழுத இடம் இருக்கவும் போவதில்லை.
ஜெயலலிதா காற்றாலை மின்சாரம்,கருணாநிதி மன்னிக்கவும் தூத்துக்குடி புதிய மின் நிலைய உற்பத்தி மின்சாரம் போன்றவற்றை கணக்கிட்டுத்தான் அந்த அறிக்கையையே வெளியிட்டார்.
அவை ஒன்றும் செல்லுபடியாகவில்லை.
முன்பைவிட மின் நிறுத்தம் அதிகரித்துதான் விட்டது.
மின்வாரிய ஊழியர்களுக்கு தொலைபேசியில் முதல்வர்  மின்வெ ட்டு இல் லை என்றார்.
நீங்கள் மின்னை வெட்டிக்கொண்டிருக்கிறீர்களெ என்றால்.
"நாங்கள் என்ன வைத்துக்கொண்டா தரமாட்டோம் என்கிறோம்.என்கிறார்கள்.
மீன்டும் கேட்டால் எரிச்சலில் நாங்களா மின்வெட்டு இல்லை என்றோம் சொன்னவரிடம் போய் மின்சாரம் கேளுங்கள் என்கிறார்கள்.
மின் சாரம் இல்லாமல் இரவில் நம் கூட இந்த ஆட்சியை கையாலாகா ஆட்சி என்று திட்டுபவர்கள் கூட பகலில் அவர்களுக்கே வாக்களிக்கும் நிலையில் நாம் தனியே தருமி மாதிரி புலம்புவதை தவிர என்ன செய்ய முடியும்.
நாங்கள் மாற்றிதான் போட்டோம் ஆனால் தேர்தல் ஆணையத்தின்  வாக்கு எந்திரம்தான் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்து விட்டது என்று சொல்லுகிறீர்களா ?
அதில் எனக்கு கூட சந்தேகம்தான்.ஏனென்றால் எங்கள்பகுதியில் 70%சூரியனுக்குதான் .சந்தேகமேயின்றி .ஆனால் எங்கள் பகுதியில் அதிமுகதான் எல்லாப் பகுதிகளையும் போல் அதிகம் வாக்குகளை குவித்திருக்கிறது.
suran
பாவ ஸ்டாரும்-பவர் ஸ்டாரும் 
------------------------------------------------------------------------------------------------------------
suran
ஜூன் 8

  உலக கடல்  தினம்
கடல் தான் நம் பூமியின் 
குளிர்சாதனப் 
பெட்டி, அழகிய
 நீலவண்ண வானம் தெரிவதற்குக் 
காரணமே கடல் தான். அதை விட
மூன்றில் ஒருபங்கு நிலத்திற்கு
மழைநீரைக்கொடுத்து வளமாக்குவதும் இந்த
கடல்தான் இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால்
 கடந்த 30 ஆண்டுகளாக நமது புவியின் குளிர்சாதனப்பெட்டி பல இடங்களில்
பழுதடைந்து வருகிறது.

கடல் நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான
 ஒன்றாகும். விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ
 அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும்
 முக்கியமானதாகும்.  1980 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த என்ரிக்
 ஜொர்மிலோ என்பவர் உலகத்திற்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறினார். 
அதாவது தெற்கில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன.
அதுவும் மிகவும் விரை வாக உருகி வருகின்றன. பொதுவாக புவி வெப்பமய
 மாதல் என்ற ஒரு ஆபத்து மனித குலத்தின் மீது படர்ந்து நிற்கிறது. இது
 அனைவரும் அறிந்ததே ஆனால் கடலில் உள்ளே இருந்தும் ஒரு ஆபத்து
 சூழ்ந்து கொண்டு வருகிறது. அது கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம்
. இதை முதல் முதலாக என்ரிக் ஜொர்மிலோ கூறியபோது, உலகம்
 நம்பவில்லை. ஆனால் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க கண்டம் முழு வதும்
 ஏற்பட்ட வெப்ப மாற்றம் , கடல்பாசி மற்றும் கிரில்ஸ், ஈரால்கள் மற்றும்
 பவளப்பாறைகள் பாதிக்கப் பட்டன.
இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை
 தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினமாகும். இந்த உயிரினத்தின்
பாதிப்பால் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் கரையோரப் பகுதிகள்
 மிகவும் அதிமாக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டது. விளைவு ஆசிய மற்றும்
 அமெரிக்க கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள்
 பெரிதும் பரவத் துவங்கிவிட்டது.     உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை விடும்
 அளவிற்கு நிலைமை மாறிவிட்டதால், கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
 உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியது.
இதன் விளைவாக 8 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி
 ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit)
 உலக கடல் தினம் (World Ocean Day) கடைபிடிப்பது என்று முடிவெடுக்கப்
 பட்டது.
அய்.நா. சபை கடல் பாதுகாப்பை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
 6 ஆம் தேதி நடைபெற்ற மால்டாவில் நடந்த உலக கடற்கரைப் பாதுகாப்பு
 மாநாட்டின்  கூட்டுக் கூட்டத்தில் முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள்
 தினமாக (World Ocean Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.  உலகின்
 வளர்ச்சியடைந்த நாடுகள் கடல் பாதுகாப்பில் தங்களுடைய பங்கை அதிகம்
 செலுத்தி வருகின்றனர்.
ஆறுகளை தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களை
 தூய்மைப்படுத்தவேண்டும்.  கடந்த சில ஆண்டுகளாக நமது சென்னைக்
 கடற்கரையில் குளிர்பிரதேச டால்பின்கள் வருவதற்கு காரணம் என்ன
 தெரியுமா, வங்காள விரிகுடாக்கடலில் வெப்ப நீரோட்டத்தில் மாற்றம் 
 ஏற்பட்டதால் ஆண்டார்டிக் கடற்பகுதியில் உள்ள டால்பின்கள் தடம் மாறத்
 துவங்கிவிட்டது. இது நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் பருவ
 நிலையை மாற்றிவிடும்.
வறட்சியை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும்.   இதுபோன்ற ஆபத்துகளை
 நாம் களைய வேண்டு மென்றால் கடலைப் பாதுகாக்கவேண்டும்.
  பாதுகாக்கத் தவறினால் நமது எதிர்காலத் தலை முறைக்கு நீலநிற கடலுக்கு
 மாற்றாக கருமையான அசுத்தங்கள் படர்ந்த அமில நீரையும் எப்போதும்
 இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் நாம் விட்டுச் 
செல்வோம்.
========================================================================
suran

சனி, 7 ஜூன், 2014

அரசியல் இல்லை

கலைஞரின்றி 

இன்று பிற்ந்த நாள் காண்பவர் கலைஞர் மு. கருணாநிதி, 
தமிழக -இந்திய அரசியல் இவர் பங்களிப்பு இல்லாமல் இதுவரை நகர்ந்ததில்லை.
நல்லதோ,கெட்டதோ இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழக அரசியல் இருந்ததில்லை.
சொல்லப்போனால் தமிழக அரசியலில் இவரைப்போல் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தலைவர் யாருமே இருந்ததில்லை.
தமிழ் நாட்டில் வளர்ச்சித்திட்டங்கள் எல்லாமும் காமராஜருக்கு பின்னர் இவரால்தான் நடந்துள்ளது.
suran

இன்று தமிழகத்தில் உள்ள பெரிய அரசு கட்டிடங்கள்,சாலைகள்,மேம்பாலங்கள் கல்லூரிகள் கருணாநிதியால் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பின்னால் ஆட்சிக்கு வந்த மாற்றுக்கட்சினரால் ஒன்று கூட உருவாக்கப்பட்டதல்ல .வேண்டுமானால் இவரால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் சிதைக்கப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
தலைமைச்செயலகம்.,அண்ணா நூற்றாண்டு நூலகம்,செம்மொழி பூங்கா,சமச்சீர் கல்வி திட்டம் என்று அடுக்கலாம்.
இனி இவரின் வாழ்க்கை விபரம்.
கருணாநிதியின்  இயற்பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) 
suran

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924-ல் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13-வது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார்.
suran


கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957-ல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.

இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார்.
suran


அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957-ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.
suran
1967-ல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர். தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.
1969-ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006-ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.    

1969-1971- அண்ணா மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி

1971-1976—இரண்டாவது முறையாக 1989- 1991- எம். ஜி.ஆர்., மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி 1996-2001—நான்காம் முறை ஆட்சி 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி.
ஆறாம் முறை கருணாநிதி முதல்வாராக ஆட்சி செய்யவும் - அதற்கான உடல் நலம் கிட்டிட வும் வாழ்த்துகிறோம்.
suran

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...