திங்கள், 26 மே, 2014

செம்புத்தமிழனுக்கு

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே வருவது தொடர்பாக பல குரல்கள் பலவிதங்களில் ஒழித்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் மூன்று ஈழ வியாபாரிகளில் வைகோ தவிர இருவர் குரல் ஒலிப்பது போல் தெரியவில்லையே.அல்லது நெடுமாறன்,சீமான் குரல்கள் ஒலிப்பது எனக்குத்தான் தெரியவில்லையா?கேட்கவில்லையா?
பாஜக என்றுமே ராஜபக்சேக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளது.
தமிழருக்கு ஆதவாக அல்ல.
suranமஹிந்தவும் மோடியும்
சுஷ்மா சுவராஜ் ராஜபக்சே வீட்டுக்கு இருமுறை விருந்து சென்றார்.எப்போது தமிழர் அழித்தொழிப்பு நடந்து முடிந்து தமிழர்கள் எல்லாம் கடும் சோகத்தில்-கோபத்தில்-இயலாமையில் இருந்த போது .
அப்போது கூட பாஜக காங்கிரசுக்கு எதிராக அரசியல் நடத்துவதற்காக தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை.காங்கிரசுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டது.
காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுக்க [பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட]பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
ஆக இன்று மோடி கூப்பிட்டதில் அதிசயம் இல்லை.
வைகோ நீலிக்கண்ணீர் வேண்டுகோள் விடுக்க வேண்டியதில்லை.
ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணுல் எதற்கு?
பாஜக எதிர்கட்சியாக இருந்த போதே தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து இல்லை.
இன்று மிருக பலத்தில் நாற்காலிகளை கைப்பற்றியபோது எப்படி நடந்து கொள்வார்கள்.
மேலும் ஈழத்தமிழருக்கும் இங்குள்ள தமிழருக்கும் மட்டுமல்ல சிங்களருக்கும் வடக்கே உள்ள வட மாநில மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது.
suran
சிங்களர்கள் இந்தியாவில் உள்ள பீகார்,ஓடிசா ,வங்கத்தில் இருந்து நாவலந்தீவுக்கு அதாங்க இலங்கைக்கு பிழைக்க  வந்தவர்கள்தான்.தமிழர்கள் இலங்கையை ஆண்ட போது உழைக்க வந்தவர்கள் பின் சிறுபான்மையினர் தமிழர்களை சிறுபான்மையாக்கி விட்டனர்.
ஆங்கிலேயன் வழக்கம் போல் பிரித்தாளும் சூட்சியில் சிங்களர் பொறுப்பில் விடுதலை பத்திரத்தை கொடுத்து தமிழனை இரண்டாம் குடிமக்களாக்கி தண்ணீர் தெளித்து விட்டு போய்விட்டான்.
நமக்கு கல் தோன்றி கடவுள் தோன்றா கால பெருமை மட்டும்தான் இன்றும் மிச்சம்.
பெரியார் தமிழனை ஏன் காட்டுமிராண்டி என்றார்.?நாம் கல்தோன்றி என்ற பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் தானே!
இன்று மோடி இலங்கை அதிபரை மட்டும் அழைக்க வில்லையே .
பாகிஸ்தான் உட்பட சார்க் நாட்டு அதிபர்களா அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்.
ராஜ பக்சே மட்டும் இந்தியா வராததால் ஈழத்தமிழர் பிரச்னை முடிந்து விடுமா?
வைகோ போ ய் கறுப்புக்கொடியை காட்டினால் பிரபாகரன் உயிரை திரும்பக் கொடுத்து விடுவாரா பக்சே?
நடந்து முடிந்த படுகொலையை வைத்தே ஈழ வியாபரிகள் பிழைப்பு நடத்துகின்றனர்.
இப்போது அங்கு உயிருடன் உள்ள தமிழன் பாதுகாப்புக்கும்,உயர்வுக்கும்,உரிமை பெறவும் இங்குள்ள வியாபாரிகள் செய்தவை என்ன?
சட்டமன்றத்தில் திடீர் ஈழத்தாய் ஜெயலலிதா தீர்மானங்கள் நிறைவேற்றியதால் மட்டும் போதுமா?அங்குள்ள ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு இதுவரை என்ன திட்டங்களை ஜெயலலிதா தந்துள்ளார்.இல்லை.இந்த பக்சே வரவேண்டாம் என்று சொல்லும் அரசியல்காரர்கள் என்ன தீர்வுகளை சொல்லியுள்ளார்கள்.
அப்போது கருணாநிதி ஆட்சியில் இருந்ததால்  அவருக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு பங்கு  என்பதாகவும் கருணாநிதி நினைத்திருந்தால் படுகொலைகளை நிறுத்தியிருக்கலாம் என்றும் முட்டாள் தனமாக இன்றும் பேசிவருபவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி '
suran
உங்களின் திடீர் ஈழத்தாய் ஜெயலலிதா இன்று தமிழக முதல்வர் .அதுமட்டுமல்ல மோடியின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்.அதுமட்டுமல்ல பாஜக ஆதரவை பெற்றவர்.
அவர் ராஜபகசெவை இந்தியாவிற்குள் வர விடாமல் ஏ ன் தடுக்க இயவில்லை.
அறிக்கை மட்டும் விடுகிறார்.?
ஈழப் படுகொலையை அதாவது அண்டை நாட்டு உள்நாட்டுப் போரை மத்திய அரசு மூலம் தடுப்பதை விட ராஜபக்சே அழைப்பை தடுப்பது மிக எளிதான வேலைதானே?

அதை ஏன் உங்கள் திடீர் ஈழத்தாய் செய்யவில்லை.
இக்கேள்வி ஜெயலலிதாவின் அடிமை செம்புத்தமிழன் சீமானுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.

suran

ஈழம் நோக்கிய பயணம்?வைகோ,நெடு,சீமான்?


 

வியாழன், 22 மே, 2014

தூக்கம் வரவில்லையா?
நீங்கள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பவர்களா?தூக்கமின்மை பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடலாம்.எப்பாடு பட்டாவது தூங்க்கி முழிக்கப் பாருங்கள்.

தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள்  எச்சரித்திருக்கிறார்கள்.

suran

ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹாவர்ட், மேன்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.


 
மனித உடலின் இயற்கையான செயற்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்க செயற்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ஆங்கிலத்தில் Body Clock, அதாவது உடல் கடிகாரம் என்கிற பெயரில் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் இந்த மனித உடல் கடிகாரம் என்பது சுமார் 400 கோடி ஆண்டுகளாக படிப்படியாக உருவான ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல.
அது இன்றைய மனித உடல் உருவாக காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்கு பழகிய ஒன்று என்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரஸ்ஸல் பாஸ்டர்.
இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகார செயற்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார் அவர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் குறைவாக தூங்குவதாக கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்.
suran

தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரத்யேக பிரச்சனை மட்டுமல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.


குறிப்பாக குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின் நீலநிறம் அதிகமாக இருக்கும் வெளிச்சமும், டேப்ளட் எனப்படும் தொடுதிரை கணினி மற்றும் ஸ்மார்ட் போன் எனப்படும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சம் மனிதக்கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது அதனால் கண்களின் தூக்கம் மிகப்பெரிய அளவில் இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

அதன் விளைவாக மேற்குலக நாடுகளில் பள்ளிக்கூடம் செல்லும் பதின்ம வயது மாணவர்கள் கூட தங்களின் தாத்தா பாட்டிகளின் தூக்க மாத்திரைகளை சாப்பிடும் சம்பவங்களெல்லாம் நடப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவலையுடன் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்கள்.


தூக்கத்தை கெடுப்பதில் தொழில்நுட்ப பங்கும் முக்கியம்
தூக்கத்தை கெடுப்பதில் செல்பேசி தொழில்நுட்ப பங்கும் முக்கியம்இப்படி முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல புற்றுநோய்கூட ஏற்படலாம் என்றும் இந்த விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

எனவே மாலை நேரத்தில் தொடுதிரை கணினி அல்லது தொடுதிரை செல்லிடபேசித்திரைகளில் மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், வீடுகளின் மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்குவெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும்படியும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமற்ற உணவைப்போலவே தூக்கமின்மையும் நோயை தோற்றுவிக்கும்


அதிகப்படியான சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் உப்பு போன்ற குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதன் காரணமாக மோசமான நோய்கள் உருவாகும் என்பது எந்த அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மையோ அதே அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மை என்பது போதுமான தூக்கமின்மையால் உங்களின் உடலின் ஆரோக்கியம் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.
suran

தூக்கமின்மையின் மோசமான பாதிப்புக்கள் உடனடியாக உடலுக்கும் உங்களுக்கும் உறைக்காது என்பதால், தற்காலத்தில் மனிதர்கள் தூக்கமின்மை என்கிற பிரச்சனையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் இந்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தூக்கமின்மை தொடர்பான மனிதர்களின் இந்த ஆணவமிக்க அலட்சியப்போக்கு மாறவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும் . சென்னையில் மட்டும் சுமார் 30 சதவீதமான இளம் தலைமுறையினர் ஏதோ ஒரு விதத்தில் தூக்கமின்மையால் வரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் .

==================================================================


ஏன் தூக்கம் வருகிறது?

இரவானதும் இயல்பாகவே தூக்கம் நம்மைத் தழுவிக் கொள்கிறது.கடுமையான உழைப்பு, பின் உணவுக்குப் பிறகும் தூக்கம் வருகிறது.உறக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.suranநமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.இன்னும் சில விஞ்ஞானிகள்,நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம் தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம் களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செவ்வாய், 20 மே, 2014

ஊடக தர்மங்களும்.

ஊடக {வியா] வாதிகளும் ......?


suran
-ஊடக தர்மங்களும்.

இப்போது ஊடகங்களால் அலசப்படும் முக்கிய செய்தி ஸ்டாலின் வீட்டின் முன் நிருபர்கள் தாக்கப்பட்டதுதான்.
இதற்கு முன் இவர்கள் தாக்கப்பட்டதே இல்லையா?
அப்போதெல்லாம் இவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தார்களா என்பது முக்கியமில்லை.இவர்கள் புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் யாராவது உண்டா?
சென்னை கடற்கரை சாலையில் அயோத்தியாகுப்பம் அருகில் அதிமுகவினரால் வீரமணி தலைமையில் அரிவாளால் வெட்டப்படும் , குத்தப்பட்டும் ராணிமேரி கல்லூரியில் பிணங்கள் போல் 
கிடத்தப்பட்டு கிடந்தார்களே அப்போது இந்த ஊடக விடுதலை வீரர்கள் எங்கே சொம்படித்துக்கொண்டிருந்தார்கள்.அப்போது இந்த ஊடகவாதிகளுக்காக பரிந்து போராடியது கருணாநிதியும்,திமுகவும்தான்.

இன்று திமுக என்றால் அதை செய்தி வெளியிடும் விதம்,அதிமுக என்றால் அதை செய்தி வெளியிடும் விதம் ஊடக தர்மம் இன்றுள்ள நிலையை நன்றாகவே காட்டுகிறது.
suran
சசிகலா.நடராசன்,இளவரசி தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்ட போது அதை முக்கிய செய்தியாக புலனாய்வு செய்தி இதழ்களை தவிர வேறு நடுநிலை நாளிதழ்கள் என்று திரியும் ஊடகங்கள் வெளியிட்டதா?
அப்போது ஜெயலலிதாவை சந்தித்து நீங்கள் நடத்துவது நாடகம் என்கிறார்களே என்று ஊடகவாதிகள் எவனாவது மிகை வாயருகே பிடித்தானா?
அல்லது சசிகலாவிடமாவது கேள்விக்கணைகளை தொடுதார்களா?
நக்கீரன் இதழை தாக்கும்போது இந்த ஊடக தளபதிகள் புகார் கொடுத்தார்களா?
நக்கீரனில் கொலை வெறித்தாக்குதலும்,அதன்பின் அப்பத்திரிக்கை இருக்கும் பகுதிக்கே ஒருவாரத்துக்கும்மேல் மின்சாரத்தையும்-,குடிநீர் வழங்கலையும் நிறுத்தினார்களே  அப்போது இந்த ஊடக புரட்சியாளர்கள் ஒளிந்திருந்த இடம் என்ன போயஸ் தோட்டமா?

இன்றைய தினத்தந்தி,இந்து,தினமணி தினகரன்,தினமலர் என்று எந்த ஊடகமுமே நடுநிலை இல்லை.அனைத்துமே அதிமுக ஆதரவு அப்படி சொல்லுவதை விட திமுக எதிர்ப்பு கண்மூடித்தனமான ஜெயலலிதா ஆதரவு .
.அதுதான் இன்றைய தமிழக ஊடக தர்மம்.
இந்த நிலை வரக்காரணம் .இன்றைய ஊடகவாதிகள் ஜெயலலிதாவின் அடக்கு முறைக்கு பயப்படுவதும்,அவர் கோடிக்கணக்கான ரூபாய்களில் அள்ளித்தரும்   விளம்பர வருமானத்துக்கு சோரம் போனதுதான்.
திமுகவை விட்டே விலக்கப்பட்ட அழகிரியை பற்றியும் அவர் திமுகவுக்கு எதிராக என்ன சொல்லுகிறார் என்று அவர் வாயை கிண்ட அவர் வீட்டின் முன்பே நாயை விடக்கேவலமாக காத்துக்கிடக்கும் இந்த ஊடகவியாதிகள் ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட அமைச்சர்கள்,அதிகாரிகள்,கட்சித்தலைவர்களை என்றாவது ஒரு சிறிய பேட்டியை எடுத்திருக்கிறார்களா?

இதிலேயே தெரிகிறதல்லவா இவர்களின் செய்தி சேகரிக்கும் புத்தி.வழி.
கருணாநிதி ஒரு பத்திரிக்கையாளர் என்பதாலேயே இந்த ஊடக வியாதிகளுக்கு அதிகம் இடம் கொடுத்து விட்டார்.
இன்றைய ஊடக தர்மம் என்பது அதிமுகவிடம் ஊடக உரிமையாளர்கள் வாங்கும் விளம்பரத் தர்மத்தை பிரதிபலிக்கிறது.
இனி மனுஷ்ய புத்திரன் இந்த ஊடக[வியாதியா]ளர்களைப்பற்றி எழுதியவை:

"ஸ்டாலின் அவர்கள் வீடு முன்னால் இரண்டு தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களின் கருவிகள் உடைக்கப்பட்டதும் இங்கே ஊடக சுதந்திரம் தொடர்பானா தார்மீக ஆவேசங்கள் உடைப்பெடுத்து ஓடுகின்றன. இந்த செயலை ஸ்டாலின் உடனடியாக கண்டித்தார். வருத்தமும் தெரிவித்தார். ஊடக சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவன் என்ற முறையில் இந்த செயலை நான் எதன் பொருட்டும் சகித்துக்கொள்ள மாட்டேன்

ஆனால் நமது ஊடகங்களுக்கு ஊடக சுதந்திரம் தொடர்பாக ஏதேனும் ஒரு தார்மீக நிலைப்பாடு இருக்கிறதா? அவதூறு வழக்குகள் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தை தமிழகத்தில் முற்றாக முடக்கியவர் ஜெயலலிதா. அதைப் பற்றி நீங்கள் எப்போதாவது இப்படி பொங்கி எழுந்ததுண்டா? கேப்டன் டிவியின் செய்தி வாசிப்பாளர் மீது வழக்குப் போடும் அளவிற்குக் கூட சென்றார்கள். நக்கீரன் அலுவலகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது இந்த தார்மீக ஆவேசம் எங்கே போனது? தேர்தல் பிரச்சாரத்தின்போது கலைஞர் டிவி செய்தியாளர்கள் அ.தி.மு.கவினரால் காஞ்சிபுரத்தில் தாக்கப்பட்டபோது ஏன் இதுபோன்ற தார்மீக ஆவேசங்கள் பீரிடவில்லை? அது ஒரு செய்தி என்பதற்கு மேல் எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை

தோல்வியை தாங்க முடியாமல் தி.மு.கவினர் இப்படி நடந்துகொள்வதாக தொடர்ந்து பிரச்சார மேற்கொள்ளப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அன்று அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சன் நியூஸ் செய்தியாளர் ராம செல்வராஜ் அ.தி.மு.கவினரால் அடித்துவிரட்டப்பட்டாரே அது ஏன்? அவர்கள் வெற்றிதானே பெற்றார்கள்?

இன்று தி.மு.கவிற்கு எதிரான பெரும்பாலான ஊடகங்கள் எவ்வளவு வன்மத்துடன் இயங்குகின்றன என்பது ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தெரியும்..சொத்துக் குவிப்பு வழக்கு விவரங்களை ஒரு செய்தியாகக் கூட வெளியிட இயலாத ஊடகங்கள் அழகிரியின் புலம்பல்களை கொண்டாடுகின்றன. தி.மு.கவை பலவீனமாகக் காட்ட எது கிடைத்தாலும் அதை ஆவேசமாக பற்றிக்கொள்கின்றன. ஒரு காலத்தில் ஜெயா டிவி மட்டுமே செய்யத் துணிகிற பலகாரியங்களை இன்று பெரும்பாலான ’ நடுநிலை’ ஊடகங்கள் எந்த தயக்கமும் இன்றி செய்கின்றன..ஸ்டாலின் ராஜினாமா விவகாரத்தில் காட்டப்படுகிற அக்கறையில் சிறு பகுதி தேர்தல் தினத்திற்கு முந்தைய தினம் அ.தி.மு.க 1000கோடி ரூபாய்க்கு மேல் ராணுவ ஒழுங்குடன் வின்யோகித்து மொத்த ஜனநாயகத்தைய்ம் கேலிக்கூத்தாக்கியபோது காட்டப்பட்டதா? எவ்வளவு நாசூக்காக பட்டும் படாமல் பெரும்பாலான ஊடகங்கள் நடந்துகொண்டன?

பிரச்சினை தெளிவானது. ஊடகங்கள் தங்கள் அரசியல் சார்பு நிலைகளை இன்று வெளிப்படையாக அனுஷ்டிக்கின்றன. ஊடக நிறுவனங்களின் இந்த திட்டவட்டமான நிலைபாடுகள்தான் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி. நியாயமாக பேச விரும்புகிற ஊடகவியலாளர்கள் பலர் எப்படி நிம்மதி இல்லாமல் ஒவ்வொரு நாளும் தூங்கப் போகிறார்க்ள் என்பதை நான் அவர்கள் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறேன். பத்திரிகை செய்திகள் அரசு விளம்பரங்களைவிட தீவிரமான குரலில் ஆளும் கட்சிக்கும் ஆதரவாக பேசுகின்றன. தொலைக் காட்சிகளில் செய்திகளும் விவாதங்களும் கட்டமைக்கப்படும் விதத்தின் நோக்கங்கள் பச்சையாக இருக்கின்றன. ஊடகங்களோடு மிக நெருக்கமான உறவு கொண்டவன் என்ற முறையில் எனக்கு இந்த நியாயமற்ற விளையாட்டின் ஒவ்வொரு தந்திரமும் தாங்கமுடியாத கசப்பை ஏற்படுத்துகிறது.
suran

ஊடகங்களின் மீதான தாக்குதல் என்பது கட்சிகளுக்கு இடையே நடக்கும் தெருமுனைச்சண்டை என்ற அளவிற்கு கீழே இறங்கிவிட்டது என்பதுதான் உண்மை. இதற்கு ஊடகங்களுக்கு எந்தப் பொறுப்புமே இல்லையா?

எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டாலும் நாம் பாரபட்சமின்றி அதற்காக குரல் கொடுப்போம். நேற்றும் இன்றும் என்றும் நம் நிலைபாடு அதுதான். ஆனால் ஊடவியலாளர்களே... உங்கள் சுதந்திரத்தை உங்கள் நிறுவனங்களிடமிருந்து நீங்கள் எப்படி பாதுகாத்துக்கொள்ளப் போகிறீர்கள்? அந்த நிறுவனங்கள் உங்களை யாருக்கு எதிராககவோ அரசியல் மற்றும் பிற ஆதாயங்களுக்காக அடியாட்களைபோல உபயோகிக்கும்போது உங்கள் தார்மீக நிலைப்பாடுகள் என்ன?

எமெர்ஜென்சியைவிட மிக மோசமாக ஊடக சுதந்திரம் இன்று பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதைச் செய்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டு காமிராக்களை உடைப்பவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்."

நன்றி: மனுஷ்யபுத்திரன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கண்ட தாக்குதல் நடந்த போது ஊடக வியாதிகள் செய்த சேவை என்ன?

சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினர் கடும் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பெரிய பெரிய கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து உடைத்தனர்.
100க்கும் அதிகமான அ.தி.மு.கவினர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினர்.  பாதுகாப்புக்காக வந்த போலீசார் எதையும் தடுக்க முயற்சிக்காமல் அமைதியாக நின்றதாக நக்கீரன் தரப்பு புகார் கூறியுள்ளது.
மேலும் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போய் அமர்ந்து கொண்டு, நக்கீரன் அலுவலகத்துக்கு எந்த பாதுகாப்பும் தரவேண்டாம் என வற்புறுத்தியதாகவும் பத்திரிகை அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.கவினரின் தாக்குதலைக் கண்டு பயந்து ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தாக்குதல் நடந்த போது நக்கீரன் ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் இருந்தனர்.
நக்கீரன் அலுவலகத்துக்குள்  செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டனர். பிற்பகலுக்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர்.
நக்கீரன் அலுவலகத்தைப் பூட்டிய எம்எல்ஏ
வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.
அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்


suran- உத்தம வில்லன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
suran


ஞாயிறு, 18 மே, 2014

வாக்கு பதிவு எந்திரத்தில் ஏமாற்று?


முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் செயற்கை கொள் மூலமாக நாம் வாக்களிக்கும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
suran

முன்பு இன்றைய முதல்வர் ஜெயலலிதா ,ராம்தாஸ் போன்றாவர்கள் கூட வாக்குப்பதிவு எந்திரம் ஒரு மோசடி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் தான் வென்ற பிறகு ஜெயலலிதா அப்படி பேச வில்லை.

இந்தியாவில் நடக்கும் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில்  ஏமாற்றுவேலை செய்வது மிக எளிது அப்படியும் நடக்கிறது.
அதற்கு ஆதாரம்
http://indiaevm.org

அமேரிக்கா போன்ற முன்னேறிய மேலை நாடுகளில் எல்லாம் இன்றுவரை வாக்குப்பதிவு எந்திரம் பயன் படுத்தப்படவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒரு முறை மட்டும் பயன்படுத்தியது பிரான்ஸ் மட்டும்.
suran
அதுவும் இப்போது பழைய காகித முறைக்கே மாறி விட்டது.காரணம் வாக்குப்பதிவு எந்திரம் தில்லு,முல்லுக்கு இலக்காகி விடும் என்பதுதான்.
அமெரிக்கா தீர்மானிக்கிறவங்கதான் இங்க பிரதமர்,நிதியமைச்சர்,உள்துறை அமைச்சராக முடியும்.
இன்றைய அமெரிக்க விருப்பம் மோடி மற்றும் பாஜக..அதனால்தான்  பாஜக தானும் புதிய பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்பதாகவும்,அந்நிய மூலதனத்தை இன்னமும் அதிகரிக்கப்போவதாகவும் ,சில்லறை வர்த்தகத்தில் அந்நியர்களை  வரவேற்பதாகவும் தேர்தல் வாக்குறுதிகளை தந்துள்ளது.
காங்கிரசு செய்ததையே இவர்களும் செய்யப்போகிறார்கள் என்றால்

மோடிக்கும்,மன்மோகனுக்கும் என்ன வித்தியாசம்.?
மக்கள் ஏன் மோடியை தேர்ந்தெடுக்க வெண்டும்? அமெரிக்க  கைவண்ணம் அங்குதான் ளிர்கிறது .
இந்த பத்தாண்டு காலம் மன்மோகன் அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடி செய்த வேலைகளால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து விட்டது.நடுத்தட்டு மக்கள் என்றிருந்த ஒரு பிரிவு கீழ்த்தட்டு நோக்கி பொய் கொண்டிருக்கிறது.
விலைவாசி எற்றம் ,அந்நிய வர்த்தகம் அனைவரையும் கோபப்படவைத்து விட்டது.
suran
அம்பானி போன்ற பணமுதலைகள் திமிங்க்களங்க்களாக மாறி விட்டன.
இது மக்களை மேலும் ஏழை-பணக்காரன் வேறுபாட்டை அதிகரித்து அல்லல்படவைத்துவிட்டது.
மன்மோகன் -காங்கிரசின் மீது மக்களுக்கு எற்பட்ட கோப அலையை கணித்த அமெரிக்கா தனது பிரதமர் நாற்காலி பொம்மையை மாற்ற தீர்மானித்து விட்டது.
அதற்கு மாற்று குஜராத்தில் அந்நிய மூலதனங்களுக்கு வாசலை முழுமையாக திறந்து விட்ட மோடி.
காங்கிரசுக்கும்,பாஜகவுக்கும் இந்துத்துவாவை தவிர வேறுபாடு ஒன்று மில்லை.இரண்டுமே முதலாளிகளுக்கு லாலி பாடும் வலது சாரிகள்.காங்கிரசை விட பாஜக தீவிர வலது சாரி.போதாதா.?அமேரிக்கா போட்டு தந்த அதி தொழில் நுட்ப விளம்பரம் மூலம் மோடி குஜராத்தை விட்டு வெளியேறி இந்தியாவை காப்பற்ற உருவெடுத்த பரமாத்மா வாக ஒரே நேரத்தில் அனைத்து ஊடகங்கள்,இணைய தளங்கள் ,சமுக வலைகள் அலற ஆரம்பித்தன.
suran
குஜராத்தில் பாலாரும்-தேனாறும் ஓடவைத்த மோடியே இந்தியாவை கடைத்தேற்ற வந்தவர் என்று காணும் இடமெல்லாம் விளம்பரங்கள்.
தங்களை படித்த நாளும் தெரிந்த மேதாவிகள் என்று எண்ணி திரிந்தவர்கள் கூட இந்த விளம்பர அலையில் மூழ்கி காணாமல் போய்விட்டனர்.
ஆக அமெரிக்கா தான் நினைத்ததை சாதித்து விட்டது.இந்தியா இறையாண்மையும்-வாக்களித்த மக்களும் மீண்டும் தோற்று விட்டனர்.
suran

தாங்கள் எண்ணியபடி வாக்குகளை பதிய வைக்கும் எந்திரம் மூலமெ  மின்னணு வாக்குபதிவை நடத்த வைகிறார்கள் .
வாக்குப்பதிவை அவ்வாறு செய்ய வைக்கமுடியுமா என்பவர்கள் இந்த தளத்துக்கு சென்று பார்க்கலாம். .
http://indiaevm.org
 suran

மோடியின் இந்த இமாலய வெற்றியின் பின்னால் இது போன்ற மோடி வித்தைகள் உள்ளன .
-------------------------------------------------------------------------------------------------------------------------


suran

வெள்ளி, 16 மே, 2014

வென்றவர்களைப் பற்றி ......!

முன்பு நடந்த தேர்தல் வாக்களிப்பு திருவிழாவுக்கு இப்போது வாக்கு எண்ணிக்கை முடிவுரை நடந்துள்ளது.
மோடி கார்ப்பரேட் சதியில் ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட பொம்மை என்று முன்பும் கூறினோம் .இப்போது இப்போதும் கூட நாம் நம்ப இயலா ஏன் மோடியே நம்பாத அளவிலான வெற்றியிலும் சொல்லுகிறோம்.அந்த கருத்தை திரும்ப வாங்கும் திட்டமோ.எதுவும் கிடையாது.
இந்தியா முழுக்க சோனியா கால மன்மோகன் சிங் ஆட்சியின் மீது மக்களுக்கு எற்பட்டுள்ள அதிருப்தியும்,கோபமுமே இப்படி வெடித்துள்ளது.சோனியாவின் காங்கிரசு அரசின் புதிய பொருளாதார கொள்கை இந்திய அடித்தட்டு மக்களுக்கு கொடுத்த இன்னல்களின் வெளிப்பாடுதான் இது.suran
சோனியாவின் காங்கிரசுக்கு பாடம் புகட்ட காத்திருந்தவர்களுக்கு ஊதி பெரிதாக்கப்பட்ட மோடி பலூன் சரியான ஆயுதமாக கிடைத்துள்ளது.
காங்கிரசுக்கு இப்போதைய எதிரி பாஜக .அதையே மக்கள் கையில் எடுத்துள்ளனர்.
மாதாமாதம் பெட்ரோல் விலை ஏற்றம்..அதனால் மறைமுகமாக உயரும் விலைவாசி.
அம்பானி வகையறாக்களுக்கு சலுகைகள்.ஏழை மக்களுக்கோ மானியங்கள் வெட்டு.உணவுப்பொருட்கள் , உரம் மானியம்,நிறுத்தம்.
சமையல் எரிவாயு விலை கடுமையான உயர்வு.போதாதற்கு வழங்கும் எரிபொருள் உருளை கள் எண்ணிக்கை குறைப்பு.
ஆனால் இப்படி விலை எல்லாம் அம்பானி எரிவாயு நிறுவனத்துக்கு லாபம் குவிக்கத்தான் என்ற உண்மை வெளியானது.லட்சக்கோடிகளில் 2ஜி,நிலக்கரி,கேஜி என்று ஊழல்கள் வரிசை.
ஆனால் இந்த ஊழல்கள் நடந்ததே தனது துறையாக இருந்தாலும் தெரியவே,தெரியாது என்று அடம் பிடிக்கும் ரோபோ பிரதமர் மன்மோகன் சிங்.
அடக்கி வைத்த காங்கிரசு பத்தாண்டு அரசின் அலங்கோலம் மீதான எதிர்ப்பு வாக்கு எந்திரம் மூலம் வெளியாகியுள்ளது.
இதில் மோடியின் மீதான மோகமோ காதலோ காரணம் அல்லவே அல்ல.
இந்தியாமுழுக்க அப்படி ஒரு நிலைதான்.
மோடியின் மீதான மோகம் ,அலை,என்றால் தென் மாநிலங்களில் பாஜக தாமரை ஏன் பூக்கவில்லை.
suran
மே.வங்கம்,தமிழகம்,கேரளா வில் பாஜக கணக்கு ஆரம்பமாகவே இல்லையே.
எப்போதும் காங்கிரசு இல்லையெனில் பாஜக என்று உள்ள வடமாநிலங்களிலும்,கர்நாடகாவிலும் தான் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவுக்கு அள்ளி வழங்கப் பட்டுள்ளது.
முன்பும் இப்படித்தான் வாஜ்பாய் பதவிக்கு வந்தார்.
அப்போதை விட காங்கிரசின் அந்நிய முதலீடு,புதுப் பொருளாதாரம் ,ஊழல்கள் அதிகம் மக்களிடையே கடுப்பை கிளப்பவே இன்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலை.
மேலும் இந்த மோடி அலை பாஜக -ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தால் சிறந்த முறையில் கோயபல்ஸ் கோட்பாட்டின் படி திட்டமிடப்பட்டு பல்லாயிரக்கணக்கான கோடிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல இணைய ,ஊடக,தொலைக்காட்சிகள் பணத்துக்கு அமர்த்தப்பட்டன.
காசுக்கு செய்தி என்ற ஏற்பாட்டில் காணும் இடமெல்லாம் ஊடகங்களிலும்,தொலைக்காட்சிகளிலும்,இணைய தளங்களிலும்,சமுக வலைத்தளங்களிலும் செய்திகள் மெது,மெதுவாக பரப்பப்பட்டன.
ஹிட்லரை கோயபல்ஸ் தனது பிரச்சார வலிமையால்  மக்களை காக்க வந்தவராக காட்டியது போலவே பாஜகவும் தனது நமோ மோடியை வடிவமைத்து இந்தியாவில் மோடி அலையை கானல் அலையாக உருவாக்கியது.
போலி கணக்கில் இணைய தளங்கள்,முகனூல்,கணக்குகள் லட்சக்கணக்கில் ஆரம்பிக்கப்பட்டு சுட்டியை வைக்கும் இடமெல்லாம் மோடி புகழ் பாடப்பட்டது.இது இணைய உபயோகிப்பாளர்கள் அறியாதது அல்ல.
மோடி பற்றிய புகழ் பரப்பும் துணுக்குகளை பரப்பி விட்டு போலி கணக்குகள் மூலம் ஆயிரக்கணக்கில் லைக்குகள் தரப்பட்டன.
இது தவிர பனியன்கள்,தி சர்ட்டுகள்,தொப்பிகள் மலிவு விலையில் கடைகளில் குவிக்கப்பட்டன.மோடி கூட்டங்க்களில் இலவசமாக வாரி இறைக்கப்பட்டன.
ஆக இந்தியர்கள் மனதில் காங்கிரசு அரசின் சீர்கேடுகளால் உருவான வெப்பத்தில் மோடி கானல் நீர் உருவாக்கப்பட்டது.ஆனால் அது உண்மையான உருவம் அல்ல என்பதை இன்னும் சில மாதங்களிலேயே மோடியின்-பாஜக ஆட்சி காட்டிக்கொடுத்து விடும்.
suran

ஆனால் இப்போதே ஒன்று சொல்ல வேண்டும் .
பாஜகவும் கொள்கையளவில் புதிய பொருளாதாரத்துக்கு ஆதரவான கட்சிதான்.அந்நிய முதலீட்டை சிகப்பு கம்பளம் வைத்து வரவேற்கும் கட்சிதான்.
சில்லறை வர்த்தகத்திலும் காங்கிரசின் வழியில்தான் செல்லப் போவதாக  சொல்லி .உள்ளது
அங்குதான் இவர்களின் இன்றைய வெற்றி காணாமல் போகும் புள்ளியும் உள்ளது.
காங்கிரசுடன் இந்த பொருளாதாரக் கொள்கைகளில் எந்த வேறுபாடும் இல்லாத பாஜக கொஞ்ச நாளிலேயே மக்கள் அதிருப்தியை வாங்கிக்கொள்ளும்.
மோடி பலூன் காற்று மக்கள் அதிருப்தி வெப்ப மூச்சில் உடைந்து போகும் அபாயம் அருகிலேயே இருக்கிறது.
இடது சாரிகள் மக்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பாததுதான் இன்றைய காங்கிரசு வெறுப்பு மோடி-ஆர்.எஸ் .எஸ். கூட்டத்துக்கு லாபமாகி விட்டது.மற்றபடி மோடி அலையும் இல்லை.அவர் வலையில் மக்கள் சிக்கவும் இல்லை.
பாம்பிடம் இருந்து தப்பிக்க முதலைஇடம் அடைக்கலம் புகுந்த கதைதான் இன்றைய இந்தியாவின் நிலை.
suran

-------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றியை[?] பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ஸ்டாலினுக்கு  தானாக திரண்ட மக்கள் கூட்டம் ,பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு இவைகளை வாக்கு ஆக்குவதை விட ,
அதிமுக -தேர்தல் ஆணைய கூட்டணி பண ஊர்வலம் மூலம் வாக்குகளை திரட்டி சாதனை செய்து விட்டது.இந்த வெற்றிக்கு ஜெயலலிதா மக்களுக்கு நன்றி சொல்லுவதை விட பணம் கொடுத்து வாக்குகளை வாங்க எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு தந்த ஒருபடி மேலேயே போ ய் 144 தடையை போட்டு சத்தியம் வாங்கி பணப்பட்டுவாடா செய்திட உதவிய தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லுவதுதான் சாலச் சிறந்தது.
suran
இவரும் எப்படிங்க ?ஒய்வு பெற்றதும்  ஒங்க கையாலே அதிமுகவில் அட்டை வாங்க்குவாருங்களா?
எப்படியோ பணம் கொடுக்காமல் திமுக மண்ணைக்கவ்வியதால் மீசையில் மண் ஒட்டவில்லை.திமுக பெற்ற வாக்குகள் எல்லாமே வெற்றிதான்.
அதிமுக?அங்கதான் மீசையே இல்லையே?
மேலும் பாஜக இழுபறியில் வென்றிருந்தால் அதிமுக வெற்றிக்கு பலன் கிடைத்திருக்கும்.
அறுதி பெரும்பான்மையில் பாஜக வெற்றி பெற்று விட்டதால் அதிமுக பெற்ற 37 வெறும் எண்ணிக்கயாகப் போய்விட்டது.அவையில் மூன்றாம் இடம் என்ற பேருதான்.திமுக முன்பு பாஜக,பின்பு காங்கிரசை ஆட்டி படித்தமாதிரி ஒன்றும் செய்ய இயலாதே?
அதிமுக இவ்வளவு வென்றும் தோல்விதான்.
suran

வியாழன், 15 மே, 2014

ஆயிரம் கனவுகள்


Photo: #Elections2014,#தேர்தல்2014சேலம் க.வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

சேலம்: சேலம் க.வடுகப்பட்டியில் உள்ள ஒரு வாக்குச் சவடியில் நாளை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்க்பட்டுள்ளது. ஊராட்சிப்பள்ளி வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தில் கோளாறால் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்க்பட்டடுள்ளது. 

மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=91789

ஆயிரம் கனவுகள் இங்குண்டு.
அனைத்துக்கும் பதில் உனக்குள்ளே யுண்டு!
நாறபதுக்கு நாற்பதுமா அல்லது  
நாற்காலி கனவுக்கு நாமம் மட்டுமா?
ஊடகங்களில் காட்டப்பட்ட
மோடி வித்தைகள் 
எல்லாம் வெறும் 
கண்கட்டி வித்தைகள்தான் என்று 
காட்டிவிடுவாயா?
அல்லது 
நாற்காலியில் எற்றி விடுவாயா?

suran

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...