வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபவளி வாழ்த்துகள்?

அதற்கு முன்
தீபாவளி என்றால் என்ன? 

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
1. பூமி தட்டையா? உருண்டையா?
2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
5. எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8. பூமி மனித உருவா? மிருக உருவமா?
9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.இவைகளைக் கொஞ்ச மாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
(பெரியார் எழுதிய "இந்து மதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து)
அனுப்பிய தோழர்: முத்து கணேஷ்
சனி, 22 அக்டோபர், 2016

காந்தி பெண்களுடன் உல்லாசம் ?

வருண் காந்தி பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து அதன் மூலம் ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்ற விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் விலைமாதர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தால் சிக்கிக் கொண்ட பாஜக எம்.பி., வருண் காந்தி, வேறு வழியில்லாமல், ராணுவ ரகசியங்களை வெளியிட்டார் என்று வெளியான தகவலை தற்போது அவரே மறுத்துள்ளார்.
பா.ஜ.க எம்பியும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி, வெளிநாடு சென்று இருந்தபோது தனது பெண் பாதுகாவலர்கள் மற்றும் விலைமாதர்களுடன் வருண் காந்தி மோசமாக நடந்து கொண்டதாகவும், அதுதொடர்பான புகைப்படங்கள், ஆயுதபேர இடைத்தரகர் அபிஷேக் வர்மாவிடம் சிக்கிக் கொண்டதாகவும், அதை வைத்து பிளேக்மெயில் செய்து ராணுவ ரகசியங்களை வருண் காந்தியிடம் அபிஷேக் வர்மா பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் நியூயார்க்கில் இருக்கும் எட்மண்ட்ஸ் ஆலென் தெரிவித்து இருப்பதாகவும், அந்தக் கடிதம் தங்களுக்கு கிடைத்து இருப்பதாகவும், சமீபத்தில் சுவராஜ் அபியான் தலைவர்கள் யோகேந்திர யாதவ் மற்றும் பிரஷாந்த் பூஷண் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை வருண் காந்தி மறுத்துள்ளார்.

வியாழன், 20 அக்டோபர், 2016

ஏ.டி.எம் கார்டு எண்கள் திருடப்படுகின்றன!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். 
உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்''  கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். 
ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?
இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது  வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. 
இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.  இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது. 
வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான  கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன. 
எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள். 
உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம்  பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.
1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள். 
2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.
3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்
5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.

வியாழன், 13 அக்டோபர், 2016

தேவையற்ற பழையதுணிமூட்டை

காங்கிரசு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது.
ஆனால் இன்றைய சூழலில் திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு போய் என்ன செய்யப் போகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும்.

ஜெயலலிதாவை ஆதரித்து பேசுவதால்,ராகுல் ஜெயலலிதாவை தனிவிமானத்தில் பறந்து வந்து சந்தித்ததால் அதிமுக தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்,உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று நம்பினால் அவர்களை விட தார்ப்பாயில் வடிகட்டிய ----- யாரும் இருக்கமுடியாது.

இன்றைக்கு மக்கள் நலக் கூட்டணியாக அரசியலில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பெட்டிக்கடைகாரர்கள் அதிமுக கூட்டணியில் இருந்து பிடறியை பிடித்து விரட்டப்பட்டவர்கள்.அரசியல் தரகர் வைகோ மூலம் திமுகவுக்கு எதிராக கடையை திறந்து வைத்து போனியாகமல் இருப்பவ்ர்கள்.

அவர்களுடன் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம்.ஆனால் அங்கிருந்து துண்டைக் காணோம்,துணியை காணோம் என்று ஓடியவர்கள்தான் முன்னாள்காங்கிரசு வாசன்கட்சி, நடிகர்விஜய்காந்த் கட்சிகள்.

நீங்கள் தப்பித்தவறி அதிமுகவுடன்கூட்டணி சேர்ந்தாலும் திமுகவிடம் வாதாடி பெற்றது போல் கவுரவமானஇடங்களிப்பெறமுடியாது.திருவோட்டில்போட்ட்டதை வாங்கிக்கொண்டுபோகவேண்டும்.

அத்துடன்உங்கள்கை சின்னத்துக்குஅங்குவேலை இல்லை.எல்லாமே இரட்டை இலை.அவர்கள்சின்னத்தில்கருணாஸ்போன்றுநின்றுசட்டமன்றத்துக்குஒருவேளை தப்பித்தவறிபோனாலும்அம்மா பரணியை பாடுவதும்,மேசையை தட்டுவதும்தான்உங்கள்மககள்தொண்டாகஇருக்கும்.

அங்குபோய் ஜெயலலிதாவுக்கு ஒத்து நாதஸ்வரம் ஊதமுடியாதுஎன்றெல்லாம் அடம்பிடிக்கமுடியாது.
பாடச் சொன்னால் பாடனும்,ஆடச் சொன்னால் ஆடணும், நாதஸ்வரம் ஊதச் சொன்னால் ஊதியே ஆகணும்.
இவை எல்லாம் நாங்கள் காங்கிரசுக்காரர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.தமிழ் நாட்டில் இருக்கும் சிறுகுழந்தைக்கும் தெரிந்த விசயம்.

அதுவும் காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் அனுபவம் ரொம்ப அதிகம்.

இவைகளை எல்லாம்தெரிந்தே திமுகஎதிர்ப்பை எடுத்துக்கொண்டு அரசியல் செய்ய எண்ணும் காங்கிரசுக்கு ஒரு உண்மையும் தெரிந்திருக்கும் அது திமுகவுக்கு காங்கிரசு தேவையற்ற பழையதுணிமூட்டைதான்.

அதை எப்போது தூக்கிஎறிவதுஎன்றநினைப்பில்தான்திமுகதொண்டன்ஒவ்வொருவரும் காத்திருக்கிறார்கள்.கலைஞரின் தேவையற்றபெருந்தன்மையால்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

கோபுரகலசத்தில்ஒட்டியிருக்கும் எச்சிலை தன்னால்தான்கோபுரம்அழகாயிருக்கிரதுஎன்றுஎண்ணினால்அதற்குஅடுத்துவரும்காற்றே புத்திபுகட்டிவிடும்.

கோபுரம்திமுகழகம் என்றஉண்மையை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது.
ராகுலை வைத்து வாக்குகளை குவிக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் துடைத்து எறியுங்கள்.

உங்கள் ராகுல் தமிழகத்துக்கு திமுககூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வந்தால் கிடைக்கிற வாக்குகளும் திமுகவுக்கு கிடைக்காமல்தான் போகும்.இதுதான் வடமாநிலங்கள் காட்டிய உண்மை.

"ராகுலை கட்சியை விட்டு விலகிப் போகச் சொல்லுங்கள்.அவர் இருந்தால் காங்கிரசு காணாமல் போய்விடும்"
இதை சொன்னது உ.பிரதேச காங்கிரசு தலைவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எச்சையும் பச்சையும்.........

திடீரெனஅரசியலில் புகுந்து  யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரும் உயரத்துக்குச் சென்றவர் சசிகலா புஷ்பா. 

இவர் சில மாதங்களுக்கு முன் திருச்சி சிவாவை விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார், இதனால் தனக்கு அ.தி.மு.க-வில் நல்ல பெயர் கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் கிடைத்ததோ கட்சிப் பதவி பறிப்பு.
ஜெயலலிதா, தன்னை அறைந்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே, அனைவர் முன்னிலையிலும் கூறினார். சசிகலா புஷ்பாவுக்கு அ.தி.மு.க-வால் போதாத காலம் ஆரம்பித்தது. சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த இளம்பெண் பானுமதி மற்றும் அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய 2 பேரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினரால் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது, பண மோசடி வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் சசிகலா புஷ்பா மீது பாய்ந்தன. அதேசமயம் சசிகலா புஷ்பாவும், 'ஜெயலலிதாவால் எனக்கு பெரிய ஆபத்து இருக்கிறது' என்று போலீஸில் பதிலுக்கு புகார் செய்தார். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
20 நாட்களுக்குப் பின்னரும்  எந்த தகவலும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. 
இதுவரை எந்த அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, அவ்வளவு ஏன் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாம் தளத்துக்கே யாரும் செல்ல முடியாத சூழல் உள்ளது.
கடந்த, இரண்டு தினங்களுக்கு முன் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலா புஷ்பா, "அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்கூட, முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. 
அப்படியானால் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பது யார்? முதல்வருடன் மருத்துவமனையிலேயே தங்கியுள்ள சசிகலாதான் அதிகாரிகளுக்கு கட்டளை இடுகிறாரா? 
எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் எப்படி அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியும்?. 
இங்கு நடப்பது ஒன்றும் மன்னராட்சி இல்லை. ஜனநாயக நாட்டில், தனி நபர்களால் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மேலும் ஜெயலலிதாவைச் சுற்றி மிகப்பெரும் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவை வெளிவராமல் பதுகாக்கப்படுகின்றன. 
இதுகுறித்து பிரதமர் உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணை நடத்துவதுடன், மக்களுக்கு உண்மை நிலையைச் சொல்லவேண்டும்" எனக் கூறினார்
இதையடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகையில் "சாக்கடை புஷ்பாவின் 'பூக்கடை' சமாச்சாரங்கள்!" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. 
அதில், "எச்சையே உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சையிட்டது யார்? 
ஆனால் பகையாளியோடு உறவாடி, கூர் தீட்டிய மரத்துக்குக் குந்தகம் செய்கிறது, நன்றி கெட்ட உன் நடத்தை. போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்... என்பதுதான் பொழுதெல்லாம் உன்கூலி பிழைப்பு..." என்று, ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரையில் உனது பழைய பூக்கடை சமாச்சாரங்களை நீயாகவே முன்வந்து தோண்டி எடுக்கச் சொல்கிறாய்" என்பது போன்ற ரீதியில் சசிகலா புஷ்பாவின் கடந்த கால வாழ்க்கை குறித்து, கடுமையாக தாக்கி எழுதப்பட்டுள்ளது.
'' 'நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகையில் இதுபோன்றதொரு  கட்டுரை வந்திருக்கிறது என்றால், அ.தி.மு.க-வினருக்கு சசிகலா புஷ்பாவின் பழைய பூக்கடை சமாச்சாரங்கள், அதாவது போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன், போன்றவை பற்றியெல்லாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். சசிகலா புஷ்பாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும், அவரை ஏன் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்? 
எதற்காக மேயர், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள்  கொடுக்கப்பட வேண்டும்?
தற்போது சசிகலா புஷ்பா யாரையோ பகைத்துக்கொண்டதால், அவருக்கு எதிராக வழக்குகள் போடுவதும், மிரட்டுவதும், பதிலுக்கு அவர் அறிக்கை விடுவதும், பேட்டி கொடுப்பதும் தேவைதானா? 
பழைய பூக்கடை சமாச்சாரங்கள், அதாவது போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன் " என்று இந்த குழாயடிச்சண்டையிலே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வரும் போலிருக்கிறது.
இந்த பூக்கடை வில்லங்கங்கள் தெரிந்துதானே அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார்.?
காபிபோசா கடத்தல் காரர் சரவணபெருமாளுக்கும் இப்படித்தானே பதவி வழங்கப்பட்டது.

விவாகரம் பெரிதாக பத்திரிகைகளில் வந்ததும் பறிக்கப்படது.

சசிகலா புஷ்பா விவகாரங்களை நமது எம்.ஜி.ஆர்.தோண்டினால் அது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை போட்டுக்கொள்வது போல்தான்.

காரணம் சசிகலா புஷ்பா சாமானியப்பட்டவர் அல்ல.அவரை பின்னிருந்து இயக்குபவர்கள் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள்.அவர்க கை வ்சமும் ஜெயலலிதா,சசிகலா விலலங்க ஆதாரங்கள் அனேகம் இருக்கிறது.

அப்படி இல்லாமல் ஜெயலலிதாவை வந்து பார் என்று சவால் விட முடியுமா?

அதற்கு இது வரை ஜெயலலிதா வாயை திறந்து பதிலளிக்காமல்  இருப்பதையும் கவனியுங்கள்.
அதிமுக ரத்ததின் ரத்தங்கள் தங்கள் ரத்தம் கொடிப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இவர்கள் பலான சண்டையில் இருவர் அந்தரங்கங்களும் மக்கள் மத்தியில் நாறி விடும்.

இன்றைய அதிமுக கட்சி,ஆட்சி இருக்கிற இக்கட்டான சூழலில் இது தேவையா?

புதன், 12 அக்டோபர், 2016

கார் டயருக்கும் கோவில்

தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டு களுக்கு முன் நடந்தவை மீண்டும் சுழற்சி முறையில் நடந்துள்ளது.

1984ல், தமிழக  முதல்வர், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு  இதே   அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசையில் இருந்தார்.
 மூன்று மாதங்கள் சிகிச்சை நடந்தது. 
அப்போது அரசு செயல்பாடுகள் முடங்கியது.
முக்கிய அரசு முடிவுகள் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
அப்போதும் திமுக தலைவர் கலைஞர் அரசுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய  குரல் எழுப்பினார் . 
'அரசின் செயல்பாடுகள் முழுமை யாக முடங்கியுள்ளன; மாநில நலன் கருதி, பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்' என ஆளுநர்  எஸ்.எல்.குரானாவுக்கு கோரிக்கை விடுத்தார் .
அதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த  ஆளுநர்  குரானா அப்போதைய  நிதியமைச்சர்  இருந்த நெடுஞ்செழியனை அழைத்து பேசினார். 
நெடுஞ்செழியன் அப்போதும் இரண்டாம் இடத்தில்தான் இருந்தார்.
அண்ணா மறைவின் போதும் இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியன்தான் தற்காலிக முதல்வர்.
'முதல்வர் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெறட்டும்.அதுவரை  ஆட்சி நிர்வாகம் செயல் இழந்து விடக் கூடாது. எனவே மாற்று ஏற்பாடுகளை செய்யுங்கள்' என உத்தர விட்டார்.
 'மூத்த அமைச்சர் என்ற வகையில், ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும்படி, என்னிடம், எம்.ஜி.ஆர்., கூறியுள்ளார்' என, கவர்னரிடம் நெடுஞ்செழியன் தெரிவித்தார். 
அதைஏற்று, 'முதல்வர் நலம் பெற்று திரும்பி வரும் வரை, அவரது பொறுப்புகளை, மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார்; அமைச்சரவை கூட்டங்களுக்கும், அவரே தலைமை வகிப்பார்' என்று, கவர்னர் குரானா அறிவித்தார்.

அதேநிலை இப்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., இடத்தில் ஜெயலலிதா வும், நெடுஞ்செழியன் இடத்தில், பன்னீர்செல்வமும் உள்ளனர். 

அன்று, எம்.ஜி.ஆர்., நலம் பெற்று, திரும்ப வந்ததும், நெடுஞ்செழியன் பொறுப்பை ஒப்படைத் தார்.பின் தனது வழக்கப்படி இரண்டாவதாக நிதி அமைச்சராக தொடர்ந்தார். 
அந்த வகையில் நெடுஞ்செழியன் முன்னாள் பன்னிர் செல்வம்தான்.
எம்.ஜி.ஆருக்கு நெடுஞ்செழியன் போல, ஜெயலலி தாவுக்கு பன்னீர்செல்வம்  இருக்கிறார். 
அதனால், இப்போது முதல்வர் இலாகாக்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.அறிவிக்கப்படாத முதல்வராக அவர் செயல்பட இருக்கி றார். முதல்வர் வசமிருந்த, உள்துறை, இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகிய துறைகளை, இனி பன்னீர்செல்வம் கவனிக்க வேண்டும். 
ஜெயலலிதாவை பொறுத்தவரை பொறுப்பில்லாத முதல்வர்தான்.
 பன்னீர்செல்வத்தை இந்த பொறுப்பில் வைக்காமல் தனக்கு கைக்குள் அடங்கிய எடப்பாடி அல்லது ஓ.எஸ் .மணியத்தை பொறுப்பில் வைக்க உடன் பிறவா சகோதரி செய்த முயற்சிகள் அனைத்தும் ஏற்கனவே இரு முறை இந்த டம்மி பதவி வகித்த  பன்னீர்செல்வம் தகுதியானவராக இருப்பார் என்று ஆளுநரும்,பாஜக மேலிடமும் கருதியதால் வீணானது.
மீண்டும் பழைய  பன்னீர்செல்வமாக  திரும்பி வந்து விட்டார்.ஆனால் இம்முறை வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கேற்பத்தான் ஆடுவார்.
அதை யாராலும் தடுக்க முடியாது.வேறு வழி ?
 பன்னீர்செல்வம் கார் டயரை கும்பிட்டாலும் கூட அதை நாம் கலாய்த்தாலும் கூட அது தற்போதைய முதல்வர்  பன்னீர்செல்வத்துக்கு  பலனை அள்ளி  கொடுக்கத்தான்  செய்துள்ளது .போகிற போக்கில் இருக்கிற சாமிகள் வரிசையில் கார் டயருக்கும் கோவில் வந்து விடும் அபாயம் உள்ளது.
================================================================================================

"தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியவரே..

மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றிவிட்டார்.!"

=====================================================================================

பொறுப்பில்லா முதல்வர் .....!

"களவானி" படத்தில் இன்றைய அதிமுக தொண்டர் கஞ்சா கருப்பு பாலிடால் குடித்ததாக கூறி "களவாணி"கும்பலால் பொய்யாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பார்.

அவரை விசாரிக்க வரும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆமாம் என்று தலையாட்டுவதாக கூறி களவாணி கும்பலில் ஒருத்தன் கருப்பு தலையை ஆட்டி கொண்டிருப்பார்.

"கட்டுன பொண்டாட்டி மேலயே  சந்தேகமாடா ?"
ஆமாம் தலையாட்டல் .

"உனக்கு வெட்கமா இல்லையா?"

இல்லை என்று தலையாட்டல்.

அவர் கருத்துப்பி விட்டு செல்வார்.

 இதை எதற்காக இங்கே சொல்லுகிறேன் என்று மண்டையை பிய்த்து வேறு விபரீதமான கற்பனைகளை ஓட விட வேண்டாம்.

நேற்று உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்த நகைச் சுவையை பகிர்ந்து கொள்கிறேன்.அவ்ளோதான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசு,வைகோ போன்ற பெருந்தலைவர்கள் எல்லோரும் ' திமுக சொல்வது போல்  பொறுப்பு முதல்வர் தேவை இல்லை.ஜெயலலிதாவே நீடிக்க வேண்டும் ' என்று சொல்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

தளபதி ஸ்டாலின் "தமிழ் நாடு நிர்வாகம் முடங்கிப்போய்விடக் கூடாது .
பொறுப்பான முதல்வர் தேவை" என்கிறார்.

ஆனால் திருநாவுக்கரசு,வைகோ போன்ற தமிழக பெருந்தலைவர்கள் "இதுவரை என்ன நிர்வாகம் ஜெயலலிதா ஆடசியில் தமிழ் நாட்டில் நடந்ததை திமுகவினர் கண்டனர்.

இனியும் என்ன நிர்வாக முடக்கத்தை கண்டு பிடிக்கப்போகிறார்கள்? "என்கிறார்கள்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள் .அதுவும் சரிதானே?

=    =   =    =    =    =   =   = = = = = = = = = = = = = = = = = = = = = = =  =  =  =  =  =  =  =  =  =  =  =

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் படுத்து செயல்படா நிலையில் இருக்கையில்
பொறுப்பு,அல்லது தற்காலிக முதல்வர் என்று ஒருவரை முறைப்படி அதிமுகவினர் தேர்ந்தெடுத்திருந்தால் ஆளுநர் கட்டுப்பாட்டில் தமிழக ஆடசி போயிருக்க வேண்டிய நிலை உருவாகியிராது.

உட்கட்சியில் தலைமை பொறுப்பை ஏற்க உண்டான மவுன யுத்தத்தால் ஆளுநர் கூப்பிட்டு மிரட்ட வேண்டிய நிலை உண்டாகி விட்டது.

இனி எந்த அரசு முடிவு கோப்புகளும் ஆளுநர் ஆணையில்லாமல் வெளியாகாது.
இதே நிலை ஒரு பொறுப்பு இருந்தால் ஆளுநர் வெறும் மேலொப்பம்போடுவதுடன் தனது அதிகாரத்தை அடக்கிக் கொண்டிருப்பார்.

ஆனால் அது  இனி நடவாது.

எல்லா முக்கிய முடிவு கோப்புகளும் ஆளுநர் கையசைவில்தான்.
கிட்டத்தட்ட ஆளுநர் ஆட்சிதான்.அதற்காகத்தான் மோடியும் ,ஆளுநரும் அதிமுகவை அப்போலோவாவுடன் முடக்கி விட்டார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

கையசைக்க முடியவில்லை. தற்போது ஒரு முறை கண்ணை திறந்து பார்த்தார் .செயற்கை சுவாசம்தான்.

இவை எல்லாம் இன்றைய  பொறுப்பில்லா முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையாக தலைமைச் சசெயலகம் அப்போலோவில் இருந்தும் ,மக்கள் தொடர்பு தொலைக்காட்சியுமான தந்தி யிலும்  வெளியான செய்திகள்.

ஆனால் இந்த நிலையிலும்  தன்னை பொறுப்பில்லா முதல்வராகி ஓ.பி.பன்னீர் செல்வத்தை பொறுப்பானவராக மூன்றாம்தர முதல்வராக மன்னிக்கவும் மூன்றாம் தரம் அதாவது முறை முதல்வராக்கியுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதா ஆலோசைனைப்படி ...அப்படித்தான் ஆளுநர் அறிக்கை சொல்லுகிறது.
என்னதான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் மாநில ஆளுநர் அல்லவா ஜெயலலிதா ஆணைப்படி என்று கூற கூட்சம் இருக்கத்தானே செய்யும்.

முன்பு 22 மணிநேரமும் மக்களுக்காக உழைத்தவரல்லவா ஜெயலலிதா.

ஆனாலும் ஒரு நண்பர் இப்படி ஜெயலலிதா ஆலோசனைகளை சொல்லுவதில் இருந்தும் பிரதமர் மோடி பொறுப்பில்லாத முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவருவதை தவிர்த்ததில் இருந்தும் சில உண்மைகளை கண்டு பிடித்ததாக சொன்னார்.

"ஜெயலலிதா நல்ல முறையில் இருக்கிறார்.எதற்காகவோ அது சொத்து குவிப்பு வழக்கு உட்ச நீதிமன்ற தீர்ப்பால் கூட இருக்கலாம்.சற்று உணர்ச்சி வசப்பட்டு அதற்காக மருத்துவமனை சென்றவர் தீர்ப்பு வரும் வரை ஓய்வெடுக்கலாம் என்றே இன்னமும் அப்போலோவில் இருக்கலாம் "
-என்கிறார்.

         'எப்பொருள் யார் வாய் கேட்கினும் -
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறள்   நினைவுக்கு வருகிறது,
அதற்கு கலைஞர் என்ன குறளோவியம் எழுதியுள்ளார் என்று பார்க்கப்போகிறேன்.

========================================================================================

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

5000000000000

கோடிகள் ஊழல்

செல்பேசித் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப வசதிக்கான அலைக்கற்றை தொலைத்தொடர்புத்துறை மூலம் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. 
இதுவரை இல்லாத அளவில் ஒரேமுறையாக 4ஜி அலைக்கற்றை ஐந்து லட்சத்து 63,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏல  விற்பனை செய்வதற்காக திட்டமிடப்பட்டு  ஏலம் கடந்த 1ம் தேதி தொடங்கி, ஐந்து நாட்கள் நடைபெற்றது. 

ஐந்து லட்சத்து 66,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு வெறும் 65,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாக தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதில் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஐடியா செல்லுலர், பார்தி ஏர்டெல், டாட்டா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஏர்செல் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன. 

தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. 

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 5 நாட்கள் நடைபெற்ற அலைக்கற்றை ஏலம் மூலம் 65,789 கோடி ரூபாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சேவை வரி போக மத்திய அரசுக்கு 32,000 கோடி ரூபாய் வரை முன்வைப்புத் தொகையாக கிடைக்கும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். 

இந்த வெகு எதிர்பார்க்கப்பட்ட முன்னேறிய 4ஜி அலைக்கற்றை ஏலத்திலேயே 5.66 லட்சம் கோடிகள் அரசுக்கு வருமானமாக மதிப்பிடப்பட்டு வெறும் 65789 கோடிகள் மட்டுமே கிடைத்துள்ளது.ஒரு லட்சம் கோடியை கூட தொடவில்லை.
ஆனால் பலஆண்டுகளுக்கு முன்னாள் வெறும் 2ஜி ஏலத்தில் 1.73 லட்சம் கோடி இழப்பீடு என்று இதைவைத்து வினோத்ராய் அறிக்கை வெளியிட்டு அதை பாஜக பூதாகரமாக்கியது. 
தற்போது 4ஜி வைத்து பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்தி வரும் நிலையிலேயே வெறும் 65 ஆயிரத்து 789 கோடிகள்தான் 4ஜி ஏலம் மூலம் கிடைத்தது என்றால் 2ஜி யில் ராஜா மீது குற்றம் சாட்டியது போல் பாஜக மோடி அரசு மீது 4ஜி ஏலத்தில் ஐந்து லட்சம் கோடிகள் அலைக்கற்றை முறைகேடு அல்லது அன்றைய  தினமணி மொழியில் பாஜக அமைச்சர் மனோஜ் சின்ஹா5000000000000கோடிகள் ஊழல் மோடிக்கு தொடர்பு? என்று செய்திகளை எதிர்பார்க்கலாமா?
======================================================================================

அரசு நிர்வாகம் ?

ரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.

ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்ப்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்ப்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.
கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது..
எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.
மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.
கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..
நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடித்த்ததையும் சேர்த்து
அனுப்பினார்.
தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.
கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..
கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.
கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.
அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..
ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.
கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.

அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.
=======================================================================================

"காலம் மாறிக்கொண்டே இருக்கும்.
கலைஞர் முதல்வராக இருந்தார் நாம் இன்று முதல்வர் பெருமை சரி.
கலைஞர் வயதால் உடல்நலமின்றி இருக்கிறார்.அதுவும் நாளை  நம்மக்கு வரலாம் என்ற எண்ணம்  ஜெயலலிதாவுக்கு இல்லாமல் போனது என்?
அப்போலோ வாசம் அவரை மாற்றுமா? 
ஆனால் முன்பு அவர் பல தண்டனைகளை அனுபவித்தும் தன்னை மாற்றிக்கொண்டதில்லை என்பதே வரலாறு.
காலத்தின் கட்டாயம் இது.
காலம்தான் பதிலைத் தரனும்."

========================================================================================உலக தமிழாராய்ச்சி கழகம் என்ன பணியை செய்கிறது என்று மண்டையை குடைந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் வாயை அடைக்கிறது இந்த உலக செந்தமிழ் வேள்வி.
இதன் மூலம்  இமயம் வரை தமிழ் தேன் பாயும்.செம்மொழியின் பெருமையை இவ்வுலகம் அறியும்.
வாழ்க இயக்குநர் முனைவர் கோ.விசய ராகவன் தமிழாராய்ச்சி தொண்டு...வளர்க  தமிழாராய்ச்சி நிறுவன மண்டு.

புதன், 5 அக்டோபர், 2016

வேண்டுதல்?

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டதைத் தொடர்ந்து மற்ற எல்லோரையும் விட  ஆளும்கட்சி அதிமுக  வேட்பாளர்கள்தான்  கடும் விரக்தியடைந்துள்ளனர்.
 மறுதேர்தலின்போது தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஒருபுறமும், இதுவரை செய்த, 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான செலவுகள் மறுபுறமும், அவர்களை கவலையடைய செய்துள்ளன.
தேர்தல், வரும், 19ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. 
இதற்கு சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளில் போட்டியிட, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என, 3,155 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் இந்த வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது.
இதில், பல்வேறு குளறுபடிகளால், சில முக்கிய கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் உட்பட, 25 
சதவீதம் வேட்புமனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது. 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருந்த நேரத்தில், தி.மு.க., தொடர்ந்த ஒரு வழக்கில், உள்ளாட்சி தேர்தலை தடை  செய்தும், முறையான அறிவிப்பு வெளியிட்டு  டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.
இந்த உத்தரவால், வேட்புமனுக்கள் பரிசீலனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட வில்லை. அதிமுகவுக்கு சாதகமாக இக்குளறுபடியான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு சொதப்பிய மாநில தேர்தல் ஆணையம்  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு  முன், மேல்முறையீடு செய்துள்ளது.
தேர்தல் நடக்குமா, தள்ளி போகுமா என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க நீதிமன்ற  உத்தரவால், கடந்த இரண்டு வாரங்களாக தேர்தல் களத்தில் பணத்தை தண்ணீராக செலவழித்து வந்த ஆளுங்கட்சி  வேட்பாளர்கள் கடும் விரக்திஅடைந்துள்ளனர்.
ஆளும்கட்சி வேட்பாளர்கள் அனை வரும் இந்த தீர்ப்பால், விரக்தியின் விளிம் பிற்கே சென்றுவிட்டனர். ஆளும்கட்சியைபொறுத்த வரையில், கவுன்சிலர் சீட் பெறுவதற்கே, வேட்பாளர்கள் மாவட்ட செயலர் களிடம், பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள் ளனர். 
போட்டி வேட்பாளர்கள், எதிர் தரப்பினரின் அதிருப்தியை சமாளிக்க, அவர்களுக் கும் கணிசமான தொகையை கொடுத்து விட்டு மீண்டும் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.இது தொகை லட்சங்களில்தான் உள்ளது.

வேட்பாளர் பட்டியலை கட்சி அறிவித்த நாள் முதல், அனைவரையும் சந்தித்து ஆதரவு 
திரட்டியது, பிரசாரம் செய்தது முதல், வேட்புமனு தாக்கல் செய்யபடை திரட்டியது வரை, தினமும் பல லட்சம் ரூபாயை, அவர்கள் செலவழித்துள் ளனர். 
எப்படியாவது வென்று  கவுன்சிலர் ஆகிவிட்டால்  முதலீடு செய்த பணத்தை பலமடங்காக பின்னர் சம்பாதித்துவிடலாம் என்ற நினைப்பில்தான் இப்படி பணத்தை செலவிட்டுள்ளனர்.
சில வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கும் வேலையைக்கூட துவக்கி விட்டாராம். 
மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட பரிசு பொருட்களுக்கு  மொத்தமாக ஆர்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு லட்சங்களில் முன்பணம் கொடுத்துள்ளனர்.அதையாவது தங்கமாக வாங்கிவைத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஆயிரக்கணக்கில் சால்வை, வேட்டி, சேலை உள்ளிட்டவை  மொத்தமாக கொள்முதல் செய்து வைத்தவற்றை வேட்பாளர்கள்தான் பிளாட்பாரத்தில் போட்டு விற்க வேண்டும்.?
 இதற்காகவும்  பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் தான், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள் ளது. 

மீண்டும் சில வாரங்கள், மாதங்கள் கழித்து, தேர்தலுக்கு முறையான அறிவிப்பு வெளியானா லும், இடைப்பட்ட நாட்களில், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், மீண்டும் தாங்களே அந்த வார்டின் வேட்பாளர்களாகஅறிவிக்கப்படுவோமோ இல்லையோ என்ற சந்தேகமும் வேட்பாளர்களிடம் எழுந்துள்ளது.

இதனால் வேட்பாளர்கள் மாவட்ட செயலர்களை சந்தித்து, 'எண்ணண்ணே இப்படி ஆகிடுச்சு' என்று இப்போதே தாங்கள் கொடுத்த பணத்திற்கு அடி போட்டு வைக்கின்றனர். இதற்கு, 'தேர்தல் ரத்தானாலும், மறு தேர்தல் வரும்போது, நீங்கள் தான் வேட்பாளர்கள்' என, அவர்களும் ஆறுதல் கூறி வருவதாககூறப்படுகிறது.ஆனால் அதிமுக கடசி தலைவி ஜெயலலிதா நல்ல முறையில் திரும்பி வந்து முன்போலவே செயல் பட ஆரம்பித்தால் இப்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் கவுன்சிலர்களுக்கு சீட்டு  கிடைப்பது பெருத்த சந்தேகம்.

எனவே உடனடியாக  'மேல்முறையீடு செய்து, எப்படி யும் தேர்தல் நடத்த முயற்சிக்க வேண்டும்' என, ஆளும்கட்சி வேட்பாளர்கள் விரும்புகின் றனர். 
ஒருவேளை கடந்த, 1991ம் ஆண்டு நடந்ததை போல, உள்ளாட்சி தேர்தல் வேண்டாம் என்று அறிவித்து, சிறப்பு அதிகாரிகளை நியமித்து, உள்ளாட்சிகளை நிர்வகிக்க அரசு முடிவெடுத்து விட்டால், தாங்கள் முதலீடு செய்த பணம்என்னவாகும் என்ற கவலையும் ஆளும்கட்சி வேட்பாளர்களை வாட்டி வதைக்கிறது.

கவுன்சிலர் வேட்பாளர்களிடம் பணம் வாங்கியது மாவட்ட செயலர்கள் தான். இதனால் அவர்களுக்கும், நீதிமன்ற  உத்தரவு பெரும் கவலையை அளித்துள்ளது. பணம் வாங்கியவர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை .
அரசு பெயருக்கு மேல் முறையீடு செய்து விட்டு அது தள்ளுபடியானால்  தேர்தலே வேண்டாம் என்றுமுடிவெடுக்க லாம். 
தற்போதைய சூழலில் முறையாக அரசு நிர்வாகம் நடக்காத,அப்போலோவில் முடங்கிப் போயுள்ளநிலையில்   எதுவும் நடக்கலாம் என்பதே உண்மை.
பல லட்சங்களை முதலீடு செய்து, தற்போது வேதனையில் ஆழ்ந்துள்ள வேட்பாளர்கள் 
ஒருபுறம் இருக்க, மறுபுறம் பகீரத பிரயத்தனம் செய்தும், 'சீட்' பெற முடியாமல், புகைச்சலில் இருந்த எதிர்கோஷ்டியினர் பெருத்த சந்தோஷத்தில் உள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின்  இந்த உத்தரவு எதிர்க்கட்சியினரையோ, சுயேச்சை வேட்பாளர்களையோ அதிகமாக பாதிக்க வில்லை என்பதும் கண்கூடு .அவர்கள் எப்போது தேர்தல் அறிவித்தாலும் தவிர்க்க முடியாத சூழல் உருவாகாத வரையில் நாங்கள்தான் வேட்பாளர் என்பது உறுதி என்று கூறுகின்றனர்.
எனவே இது ஆளும்கட்சி வேட்பாளர்களை மட்டுமே கடுமையாக பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நீதிமன்ற ஆணையை ரத்து செய்து, தேர்தல் நடைபெற வேண்டி, கோவில், கோவிலாக அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஏறி, இறங்க ஆரம்பித்துவிட்டனர். அப்போலோவில் இருக்கும் தங்கள் தலைவிக்காக என்று வெளியே அறிவித்து விட்டு வழிபாடுகளை தங்களுக்காக நடத்த ஆரம்பித்து விட்டனர்.

ஏற்கனவே வெற்றிக்காக கோவிலுக்கு சென்று வந்த இவர்கள் தற்போது அதிமுக தலைவி  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை சாக்காக வைத்து அவருக்காக வேண்டுதல் செய்ய கோவிலுக்குச் செல்வதாகக் கூறி, உள்ளாட்சி தேர்தல் நடை பெறவும், அதில் தாங்கள் வெற்றி பெறவும்  வேண்டுதல்களை  நடத்தி வருகின்றனர்.
இதை இன்றைய நிலையில் கோவில்களில் வழிபாடு செய்ப்பவர்களை கவனித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...