செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அன்னா கசாரே-ஒரு மாய பிம்பம்.


 “நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே”  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)
கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில் ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண் கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, “நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்” என்று அவ்வப்போது  அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, “அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக்கொடி, அரசியலையே வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!
ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், “உணவைத் துறப்பேன்” என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, “மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்” என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, “ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்” என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
ஆகஸ்டு 16  ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக  ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது  ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.
                       
என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்”  அதாவது பட்டினிப் போர்  என்று அறிவித்தார் ஹசாரே.
தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன்,  ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.
“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்”  என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.
குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக  வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே  பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து  அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.
இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின்நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.
தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.
ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும்  இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள்.  இன்று தனியார்மயக் கொள்கைகள்,  ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன.  எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.
ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை  உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.
கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.
நன்றி:வினவு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
             

சனி, 24 செப்டம்பர், 2011


உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் பொய்யான பிரசாரங்களை நம்ப வேண்டாம் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு




    உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என தூத்துக்குடியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன் னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. நகர அவைத்தலைவர் சுசீரவீந்திரன் தலைமை வகித்தார். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பொன்இனிதாவை மாவட்ட செயலாளர் பெரியசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் மனம் தளர வேண்டாம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண் டிய தருணம் இது. இதனை திமுகவினர் மானப்பிரச்னையாக கருத வேண்டும்‘ என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன் னிலை வகித்து பேசுகையில், அதிமுகவினரின் பொய் யான பிரசாரங்களை நம்ப வேண்டாம். நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள் என அதிமுகவினர் கூறலாம். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திமுக ஆட்சி காலத்தில்தான் பல அரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிக நிதி மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது‘ என்றார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜமன்னார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், இளைஞரணி அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், வக்கீல் அணி செயலாள மோகன்தாஸ்சாமுவேல், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், நகர இளைஞரணி பில்லாஜெகன், முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கனகராஜ், செந்தில்குமார், பிஎஸ்கே மாரியப்பன், சுரேஷ்குமார், வக்கீல் ஆனந்தகேபிரியேல்ராஜ், சங்கரபேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆறு முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு 
அதிமுக வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டு முடித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதில் பல வேட்பாளர்கள் குறித்து கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
ஈரோடு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மல்லிகா பரமசிவம், விபச்சார வழக்கில் சிக்கியவர் என்று கூறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி நகராட்சித் தலைவர் மற்றும் சிலவார்டு வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் வீடு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கட்சித் தலைமை அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி மாறி வந்தவர்களுக்கே கட்சியில் சீட் தரப்படுகிறது. இது அநியாயமானது என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதேபோல சென்னை பட்டினப்பாக்கம், 173வது வார்டு வேட்பாளரையும் மாற்றக் கோரி அந்த வார்டைச் சேர்ந்த அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருக்கும், 37வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூருக்கு தொடர்பே இல்லாத சுரேஷ் என்பவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய அப்போது அசோக்குமார் என்கிற இளைஞர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தியதால் விபரீதம் தடுக்கப்பட்டது.
பணம் வாங்கிக் கொண்டு சீட்-பெண் அழுகை: சென்னை புழல் ஒன்றிய அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள சாமூண்டீஸ்வரி போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் முன் அழுது கொண்டே கூறுகையில், 18 வயதில் அதிமுகவில் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 24 மணி நேரமும் அதிமுகவுக்காக உழைத்துக் கொண்டிருந்ததால் என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. புரட்சி பாரதம் கட்சியில் இருந்து பார்த்திபன் என்பவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அவரிடம் 10 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றுக் கொண்டு லோக்கலில் இருக்கும் அதிமுகவின் நிர்வாகிகள் அவருக்கு சீட் கொடுத்து விட்டனர்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பாகவதர்.


கிருஷ்ணன் பாகவதர்


                           
நகைச்சுவை அரசு கிருஷ்ணனும், இசை உலக ஜோதி பாகவதரும் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் உயிர் இப்போது எப்படி துடித்துக் கொண்டும், உள்ளம் எவ்வளவு துயரத்தில் மூழ்கி வேதனைப்பட்டுக் கொண்டும் இருக்கும் என்பதை உள்ளபடி எடுத்துக்காட்ட எவராலும் முடியாது என்றாலும், அவ்விருமணிகளுக்கும் மறுமணிகள் இனி யார்? என தமிழ் மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்டு இருப்பதை சரியானபடி விளக்கிக் காட்டுவது அதனிலும் முடியாத காரியமேயாகும்.

சரி இவை நடந்துவிட்ட காரியம். இனி நடக்கும் காரியத்தை அதாவது இத்துயரத்தையும்  துன்பத்தையும் தீர்த்துக் கொள்ள அவ்விரு மணிகளையும் வெளியாக்கிக் கொண்டு வர வேண்டிய காரியத்தைப்பற்றி யோசித்து ஆவன செய்ய வேண்டியதே அறிவுடையோருடையவும் அவர்களைப்பற்றிய ஆவலுடையோரு டையவும் தவிர்க்கவொண்ணாக் கடமையாகும்.

பாகவதர், கிருஷ்ணன் தனித்தனி மனிதர்களானாலும் அவர்கள், அவர்களுடைய, அல்லது அவர்கள் மக்கள் மனைவிகள் சுற்றம் உறவினர், அவர்களால் பிழைக்க வாழும் மக்களின் மனிதர்களல்லாத தமிழ் மக்களின் - தமிழ் மக்களுக்கே சொந்தமான மணிகளாவார்கள். இதை ஒவ்வொரு தமிழனும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழ்நாட்டில் இணையில்லா பேறு பெற்ற தமிழர்களின் செல்வங்களாவார்கள்.

ஆதலால் இவர்களை விடுதலை செய்யும் முயற்சியை அவர்கள் (கிருஷ்ணன் - பாகவதர்) சொந்த சுயநல முயற்சியாய்க் கருதாமல் தமிழர்களின் பொதுநல முயற்சியாகக் கருத வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இதற்கு ஆக ஒரு பொதுக் கூட்டம் சடுதியில் கூட்டப்பட வேண்டும். அதில் ஒரு செல்வாக்கான கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்.

நிதி திரட்ட வேண்டும். முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு, யூனியன் போர்ட் ஆகியவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். கலைவாணர்கள் கூட்டம் உறங்கிக் கிடக்காமல் தக்க முயற்சி செய்து தக்கதொரு நிதி திரட்ட வேண்டும். திருச்சியில் 11ஆம் தேதி தோழர் வேதாசலம் அவர்களால் தோழர் சங்கரன் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு பலர் ஆதரவு அளித்திருப்பது குறித்து மகிழ்ச்சி எய்துகிறோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 17.11.1945
=====================================================================================
 
[தங்கச்] சுரங்க [ஊழல்]மன்னன்.
                   .
சட்டவிரோத சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கருநாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் வைரம் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனமும், வைர நெக்லஸ் உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு சிக்கிய நகை குவியலை பார்த்து அதிகாரிகள் திகைத்து போனார்கள்.
கருநாடக முன்னாள் அமைச்சர் ஜி.ஜனார்த்தன ரெட்டி. இவர் `ஓபுலாபுரம் மைனிங் கம்பெனி' என்ற சுரங்க நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், சட்டவிரோதமாக சுரங்கங்களில் இரும்பு தாது வெட்டி எடுத்து கடத்தி வருவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சி.பி.அய். அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி ஜனார்த்தன ரெட்டியையும், அவருடைய மைத்துனர் சீனிவாச ரெட்டியையும் கைது செய்தனர். இருவரும் விசாரணைக்காக, 19ஆம் தேதிவரை சி.பி.அய். காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.
அதிகாரிகள் திகைப்பு
இந்நிலையில், பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சி.பி.அய். அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தங்க நகை குவியலே இருப்பதை பார்த்து அவர்கள் திகைத்து விட்டனர்.
அரச சிம்மாசனம் போன்ற தங்க சிம்மாசனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதில் வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாற்காலியின் 4 கால் களிலும், இதர பகுதிகளிலும் தங்கம் தாராளமாக உபயோகிக்கப்பட்டு இருந்தது. நாற்காலியில், `ஜி.ஜே.ஆர்.' என்ற ஆங்கில எழுத்துகள் தங்கத்தில் பொறிக்கப்பட்டு இருந்தன. அது, `காளி ஜனார்த்தன ரெட்டி' என்று ரெட்டியின் முழுப்பெயரை குறிக்கும். நாற்காலியில் சிவப்பு நிற குஷன் வசதி செய்யப்பட்டு இருந்தது.
அங்கிருந்த வைர நெக்லஸ் ஒன்றும் சி.பி.அய். அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் மற்றும் பத்மாவதியின் தங்க விக்ரகங்கள், தங்கத்தட்டு, தங்கத்தால் செய்யப்பட்ட பூஜை சாமான்கள், பிளாட்டினம் நகைகள் மற்றும் எண்ணற்ற தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலான நகைகள், பெல்லாரியில் வாங்கப்பட்டவை.
இந்த தங்க நகைகளை மதிப்பிடும் பணியையும் உடனடியாக சி.பி.அய். அதிகாரிகள் தொடங்கினர். அவர்கள் நகைகளை மதிப்பிட்டு முடிப்பதற்கு அதிகாலை 1.30 மணி ஆகிவிட்டது.
மேலும், ரொக்கப்பணம் ரூ.3 கோடி கைப்பற்றப்பட்டது. அதை நோட்டு எண்ணும் எந்திரத்தின் உதவியால் அதிகாரிகள் எண்ணி முடித்தனர்.
சோதனையின்போது, ஒரு உறவினரின் திருமண விழாவுக்கு அணிந்து செல்வதற்கு சில நகைகளை விட்டு தருமாறு ஜனார்த்தன ரெட்டியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். அதனால் அந்த நகைகளை மட்டும் அதிகாரிகள் விட்டுவிட்டு சென்று விட்டனர்.
இதற்கிடையே, ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனர் சீனிவாச ரெட்டி, தனியார் வங்கி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்ததால் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பினாமி பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை அவர் தொடங்கி இருக்கிறார். சட்டவிரோத சுரங்க தொழிலில் சம்பாதித்த பணத்தை அந்த வங்கி கணக்குகள் மூலம் அவர் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.  சீனிவாச ரெட்டிக்கு  வங்கியில் சொந்தமாக 6 லாக்கர்கள் உள்ளன. அவற்றில் 4 லாக்கர்களை சி.பி.அய். அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தினர். அந்த லாக்கர்களில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தன. அவற்றையும், சில ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும், பெல்லாரியில், ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய கூட்டாளிக்கு சொந்தமான அரிசி ஆலையிலும் ஒரு சி.பி.அய். அதிகாரிகளின் குழு சோதனை நடத்தியது. மற்றொரு குழு அனந்தப்பூரில் உள்ள ரெட்டியின் ஓட்டுநர் உள்ளிட்ட இதர கூட் டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தியது. அதில் ரூ.20 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இன் னொரு சி.பி.அய். அதிகாரிகள் குழு, ஆந்திர-கரு நாடக எல்லையில் உள்ள ரெட்டியின் சுரங்கங்களில் ஆய்வு செய்தது.

இது அழகா-ஆபாசமா?

  

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஓய்ந்த அலை......,


ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
படம் - www.thehindu.com
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.  நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை  எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை  ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை  ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.
பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.
ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.
ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.
மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் ‘மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.
அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.
ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய  ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக்  குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.
முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.
ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.
இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ஜனார்த்தன ரெட்டி-ராஜ வாழ்வு.


ஜனார்த்தன ரெட்டி 44 வயதான தனது வீட்டருகே 3 அடுக்கு பிரம்மாண்ட வளாகம் ஒன்றை தனது குழந்தைகள் விளையாட மட்டும் அமைத்திருந்தார்.  ரெட்டியின் குழந்தைகள் பாதுகாப்பு கருதி வெளியில் செல்வதில்லை.  மாறாக தங்கள் நண்பர்களை அழைத்து வந்து தமது வளாகத்தில் தான் விளையாடுவார்கள். ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை.
                     
                         
ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 40 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை நன்கொடையாக கொடுத்ததோடு, அதே போல் மற்றொன்றை தனது பெல்லாரி வீட்டிலும் வைத்திருக்கிறார்.  அவர் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்தால் சந்தனத்தால் வேலைப்பாடு செய்த அச்சு ஒன்றில் மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு அந்த வைர கிரீடம் சுழன்று நம்மீது ஒளிக்கதிர்களை வீசும். பெங்களூருவில் உள்ள நிரந்தர அறை ஒன்று அவருக்காக ஒதுக்கப்பட்ட டாஜ் நட்சத்திர விடுதியின் மேற்கு எல்லைக்கு அருகில் ரெட்டிக்கு பாரிஜாதா என்ற பெயரில் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.  அதிகமான சொகுசுக் கார்கள் ரெட்டியின் வீட்டில். பென்ட்லே, மெர்சிடீஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் என பல இதில் அடங்கும்.  விடுமுறைகளை உலகின் பல பகுதியிலுள்ள உல்லாச இடங்களில் பொழுதை கழிப்பவர் ரெட்டி
                     .
சுரங்க தொழில் உச்சத்தை அடைந்து சில வருடங்களுக்கு முன் சுறுசுறுப்பானபோது, பெல்லாரிக்கும், பெங்களூருவிற்கும் சிற்றுண்டிக்கு, மதிய அல்லது இரவு உணவிற்கு ஹெலிகாப்டரில் பறப்பார் ரெட்டி.
ஆனால் சூழல் எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக காரில்தான் அதிக அளவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  3 ஹெலிகாப்டர் வைத்திருந்த ரெட்டியிடம் தற்போது ஒன்றுதான் உள்ளது.  1990களின் இறுதியில் கோடிக்கணக்கில் கடனில் இருந்த ரெட்டி கடந்த 12 ஆண்டு காலத்திற்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டபடி பார்த்தாலே அவரது மனைவி பெயரில் மட்டும் 150 கோடி சொத்து. இந்த கொழுத்தலுக்கு நன்றி சொல்ல வேண்டியது சுரங்கத் தொழிலுக்கு.  பெல்லாரியில் அவர் வீட்டருகே உள்ள மலைகுன்றை விளக்குகளால் அலங்கரிக்க மட்டும் ஆன செலவு 30 லட்சம்.
அவரது அரசியல் கலந்தாய்விற்காக உள்ள அறையின் பெயர் குட்டீரா.  அங்கு நுழைந்தால் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி, மூத்த பா ஜ க தலைவர் எல் கே அத்வானி, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரபபா ஆகியோரின் பிரும்மாண்ட உருவப்படங்கள் நம்மை வரவேற்கும்.
ரெட்டியின் வீடு ஒரு கோட்டையை போன்றது. ஒரு பார்வையாளர் உள்ளே செல்ல வேண்டுமெனில் 3 செக்போஸ்ட், ஸ்கேனர்கள், வெடிகுண்டு சோதனைகள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்ற அடுக்குகளை கடந்து தான் செல்ல வேண்டும்.
பணங்களின் சுரங்கம்
தங்கம், வெள்ளி, பண்ணை வீடுகள், கட்டிடங்கள், முன்னோர் சொத்துக்கள், என முன்னாள் அமைச்சரான ரெட்டியின் சொத்துக்கள் 153.49 கோடிகள்

மலை போல் நகை
ள்
2.2 கோடி மதிப்புள்ள தங்க இருக்கை (சேர்)
2.58 கோடி மதிப்பில் தங்க சிலைகள்
13.15 லட்சம் மதிப்பில் தங்க பெல்ட்
20.87 லட்சம் மதிப்பில் தங்க சாப்பாட்டு தட்டு, ஸ்பூன், சிறு பாத்திரங்கள்
இவை தவிர வைர, வைடூரிய, கோமேதக கற்கள், கழுத்து நகைகள், ஆண்கள் அணியும் கங்கணங்கள், மோதிரங்கள், வளையல்கள் என ஒரு நகைக் குவியலே காணப்பட்டதாம்.

வருமானமும் முதலீடுகளும்-
கர்நாடக லோக்யுக்தா முன் அவர் சமா்ப்பித்த விபரங்களின்படி
பணம் ரொக்க கையிருப்பு
1.11 லட்சம்
கார் – லேன்சர்
ஆண்டுச் சம்பளம் – 31.5 கோடி
வியாபார வருவாய் – 18 கோடி
வட்டிகளின் மூலம் வருவாய் – 1.8 கோடி
காப்பீடு (இன்சூரன்ஸ்) – 18.91 கோடி
பரஸ்பர நிதி முதலீடு – 4.2 கோடி
பத்திரங்கள் – 14.4 கோடி
பங்கு முதலீடுகள் – 47.31 கோடி
மக்களுக்கு கடன் முன்பணம் – 8.6 கோடி
வியாபார நிறுவனங்களில் முதலீடு – 2.9 கோடி
வங்கி முதலீடுகள் – 14.51 கோடி
வங்கி சேமிப்பு கணக்குகள் – 60.79 லட்சங்கள்
அஞ்சலக முதலீடு – 24 லட்சங்கள்

பண்ணை வீட்டு சொத்துக்கள்-
பண்ணை வீடு 19.71 ஏக்கர்
4.4 கோடி மதிப்பில் 7800 சதுர அடி இடம்
ஆர் எம் வி விரிவாகத்தில் பெங்களூருவிலும், பெல்லாரியிலும் இரண்டு கட்டிடங்கள்
பெல்லாரியில் மூதாதையர் சொத்து 40 லட்சம்
பொறுப்புகள் – 16.82 கோடி

 குடும்ப வருவாய்-
மனைவி அருணா ரெட்டியின் சொத்துக்களை கணக்கிட்டால் அது ரெட்டியின் கணக்கிற்கு மேல் செல்லும்
ஆண்டுச் சம்பளம் – 16.5 கோடி
வியாபார வருவாய் 22.69 கோடி
நகைகள், இன்சூரன்ஸ், பங்கு வர்த்தகம், முதலீடுகள் என கணக்கிட்டால் கோடிகளில் வரும்
இவை தவிர இவரது குழந்தைகள் பிராமணி மற்றும் கிரீத்தியின்  வருடாந்திர வியாபார வருவாய் 3.7 கோடி
__________________________________________________________

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...