சனி, 16 நவம்பர், 2013

த[நெ ]டு மாறன்

முள்ளி வாய்க்கால் முற்றம் இன்று பரபர பிரச்னையாக உள்ளது.
இதுவரை கருணாநிதியின் ஈழப்பாசத்தை வேசம் என்றும் ஜெயலலிதாதான் ஈழத்தாய் என்று கொண்டாடியவர்கள் முகத்தில் ஒரு டன் கரி.
ஜெயா அரசு முற்றத்தின் சுற்று சுவரை இடித்ததை கூட மத்திய அரசின் கட்டாயத்தால் தமிழக அரசு செய்து விட்டதாக தன்னை மாவீரன் என்று கூறிக் கொள்ளும் ப.நெடுமாறன் வகையறாக்கள் சொல்லிக்கொண்டு சிறையில் புலம்புகிறார்கள்.suran
இலங்கைத் தமிழர் பிரச்னையில் இருமுறை பதவி இழந்த கருணாநிதி திட்டமிட்ட ஈழத் துரோகி பட்டத்தால் இம்முறையும் பதவியை இழந்தார்.ஈழப்பிரச்னை மட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை முறைகேடும் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
ஆனால் எவ்வளவு காலம்தான் நானும்  நல்லவராக நடிப்பது என்று இப்போது தனது ஈழப் பாசத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.
இது கொஞ்சம் தான் இன்னமும் நெடுமாறன்,சீமான் போன்றோர் பார்க்க வேண்டிய வை இருக்கிறது.அது ஏற்கனவே வைகோ பார்த்து அதிர்ந்த பக்கம்தான்.ஆனால் வைகோ ரோசம்,மானம் இழந்து அவரை இடையில் சிறிது காலம் அன்பு சகோதரியாக்கி அழகு பார்த்து இப்போது மீண்டும் பாசிஸ்டாக பிரகடனம் செய்து வருகிறார்.
நெடுமாறன் திரையில் வடிவேலு செய்ததை முற்றத்தில் செய்து வருகிறார்.தன்னை ஜெயா அரசு சிறையிலிட்டாலும் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டார் என்று புளகாங்கிதமடைந்துள்ளார் .
செந்தமிழன் சீமானோ பிழைக்கத்தெரிந்த புரட்சியாளர்.
முற்றம் பிரச்னையில் நாம் தமிழர் தொண்டர்கள் அடி பட்டு ரத்தம் சிந்தினாலும் தான் மட்டும் வாயை திறக்க மாட்டேன் என்று சஷ்டி விரதம் இருக்கிறார்.
அவருக்கு கருணாநிதி ஆட்சிக்கும் -ஜெயலலிதா ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியும்.
அதை விட முக்கியமாக இருவரில் யார்  ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்ற உண்மையும் தெரியும்.அதனால் அடக்கி வாசிக்கிறார் .அடங்கிப் போயுள்ளார்.
கருணாநிதி ஒருநாளில் புழலில் இருந்து வெளியெ விட்டு விட்டார்.
ஆனால் திடீர் ஈழத்தாய் ??
வைகோ முன்னுதாரணம் இருக்கிறதே?
ஒன்றை மட்டும் இன்னமும் இந்த நெடு மாவீரனையும்.செந்தமிழனையும் நம்பி ஈழப்பிரச்னையை நம்புகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
முள்ளி வாய்க்கால் முற்றம் சுற்று சுவர் -பூங் காவுக்கு ஒப்பந்தம் போட்டு இடம் கொடுத்தவர் கருணாநிதி.
அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இடித்து தூள் கிளப்பியவர் ஜெயலலிதா,
சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு கண்டனத்தீர்மானம் நிறைவெற்றிக்கொண்டே முற்றத்தில் அவர் கரசேவை நடந்துள்ளது.
அது மட்டுமல்ல வேதனை  நெடுமாறன் இன்னமும்  மாவீரன் பிரபாகரனுடன் தான் கதைப்பதாக கதை விட்டு தன்னை முன்னி லை ப்படுத்துவதுதான்.
மாவீரன் பிரபாகரன் நிச்சயம் இன்னமும் வாய் மூடி ஒளிந்திருக்கும் தன்மை கொண்டவர் அல்ல.அதாவது இந்த நெடு,சீமான் போன்ற அடக்குமுறைக்கும்,சிறைக்கும் அஞ்சும்  கோழை அல்ல.தான் இருப்பதை எவ்வாறாவது -எவ்வகையிலாவது.இதற்குள் தெரிவித்தித்திருப்பார்.
ஆனால் அதற்கு இயலா உடல் நிலையில் இருப்பாரானால் இங்கு நடக்கும் ஈழ வியாபரத்தை கண்டு கொதி நிலையில் தான் இருப்பார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------- 

திங்கள், 4 நவம்பர், 2013

"ஆல் இன் ஆல் " வரி விலக்கு பெற ...!suran

     
 கார்த்தி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
 இந்த படம் வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
 தமிழக அரசு தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கும்[?] வரி விலக்கு அளித்து வருகிறது.
பத்திரிகை, டி.வி.களில் வெளியாகும் விளம்பரங்களிலும், சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்தி ற்கு தமிழக அரசு கேளிக்கை வரி வில க்கு கொடுத்துள்ளது.
ஒரு கல் ,ஒரு கண்ணாடி படத்தின் பெயராக வைத்தும் ஒகே,ஒகே என்று சுவரொட்டிகளில் இருந்ததால் வரி விலக்கு இல்லாமல் போனது.
அதை கூட சரி எனலாம்.
நீர்ப்பறவை,நேரம்,கும்கி,மைனா ,மன்மதன் அம்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களுக்கு வரி விலக்கில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.
காரணம் அவைகளை தயாரித்தது,வெளியிட்டது உதயநிதி ஸ்டாலின் .அவரின் அப்பா ஸ்டாலின்.தாத்தா கருணாநிதி என்ற காரணத்தால் தான்..
தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலம் -மற்ற மொழிகளில் கண்டபடி தமிழ் படங்களுக்கு பெயர் வைக்கப்பட்ட போது அதை தடுக்கும் நோக்கில்தான் தமிழில் பெயர்வைத்தால் வரி விலக்கு என்ற அரசாணை வெளியிடப்பட்டது.அதனால் அரசு வருவாய்தான் இழப்பு.ஆனால் திரைப்படங்களுக்கு தேவை இல்லாமல் ஆங்கில தலைப்பு வைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.
கருணாநிதி கொண்டுவந்த அரசாணை இப்போது அவருக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படூகிறது .
கருணாநிதி குடும்பத்தினர் தாயாரிக்கும்-வெளியிடும் படங்கள் அனைத்துக்கும் வரி விலக்கு இல்லை.ஆனால் மற்றவர்கள் தயாரிக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜாக்களுக்கு கூட இந்த ஆணையின் கீழ் வரி விலக்கு தரப்படுகிறது.
ஜெயலலிதா அரசு இதற்கென அமைத்துள்ள குழு ஆங்கிலம்-தமிழ் வேறுபாடு அறியாத [சங்கர் ]கணேஷ் போன்றவர்களை உறுப்பினர்களை கொண்டதால் வந்த குழப்பமா?அல்லது அரசியல் காழ்ப்புணர்வா?
அமைச்சர் ஒருவர் தனது ஊதவியாளர் மூலம் வரி விலக்கு தர 7 லட்சம் வரை கையூட்டு “அங்குசம் “படத் தயாரிப்பாளர்களிடம் கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அங்குசம் படமே இது போன்ற கையூட்டுகளை எதிர்த்து எடுக்கப்பட்ட படம் என்பது இங்கு வருத்தமான் விடயம்.
மொத்தத்தில் இப்போது “ஆல் இன் ஆல் “பட விலக்கு விவகாரம் நீதிமன்றம் போயுள்ளது.ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் இருக்கிறார் .
அரசும் அது உருவாக்கிய சிங்கி குழுவும் பதில் சொல்ல வெண்டிய நிலை.
இரட்டை இலை சின்னங்களையே  பறக்கும் குதிரையின் இறகு,பசுமையின் வெளிப்பாடு என்று சொல்லி வரும் கும்பலுக்கு பதில் ஒன்றும் கடினமானதல்ல .
பேசாமல் கருணாநிதி குடும்பத்தயாரிப்புகள் தவிர்த்து அனைத்துப் படங்களுக்கும் வரி விலக்கு என அரசாணையை வெளியிட்டு விட்டால் என்ன?
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
“அம்மாவும் நீயே “என்று அப்போதே பாடி சினிமாவுக்கு வந்தவர் கமல் ஹாசன் ".
                                             -இது பேரா.ஞானசம்பந்தம்.
suran
“பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுமா என்று இங்கு கேட்டார்கள்.
இப்போது “சூரிய ஒளி"யைத்தான் ‘நம்பியிருக்கிறோம்.பெட்ரோல் கை கொடுக்காது.சோலார் சக்தியில் வண்டியை ஓட்டலாமே?”
   
                                                         -இது கமல்ஹாசன் .
இரண்டும் ஜெயா டிவி புதுமை பட்டிமன்றத்தில் கேட்டு,சுட்டது.
ஜெயா டிவியில் சூரிய சக்தியைப்பற்றி பேச எப்படி விட்டார்கள்.
மூலிகை அல்லது "பசுமை இலை" பெட்ரோல் பற்றி கமல் சொல்லியிருக்கலாமே ?.
ஏன் “சூரிய ஒளி”க்கு போனார்.?
[போட்டுக் கொடுக்காமல் இருக்க முடியலைங்க.!] 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லிம்கா சாதனை!
===============

‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தை குரு ரமேஷ் இயக்குகிறார். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பிலோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார.
ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி. அனுப் தயாரிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா முதன் முறையாக நடிகராகவும் அறிமுகமாகிறார். "காதல் மன்னன்" படத்தில் நாயகியாக நடித்த பாணு பதினைந்து வருடங்களுக்கு பின் இதில் நடிக்கிறார். 
suran
இவர்களுடன் உலக சினிமாவில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து ஒரே தோற்றம் கொண்ட எட்டு வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோரும் நடிக்கின்றனர். 
‘லிம்கா சாதனை புத்தகம்’ குழுவினர் இந்த முயற்சிக்கு  "லிம்கா சாதனை"சான்றிதழ் வழங்கினார்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வழுக்கைக்கு “முடி” வு
-----------------------------------------------
ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.

தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது.
suran
ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில். இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.
மொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார்.
ஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் .
----------------------------------------------------------------------------------------------------------------------------

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...