சனி, 29 டிசம்பர், 2012

தண்ணீர் வர்த்தகம்

நாட்டை கண்ணீரில் தள்ளிவிடும்....

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்படப் போகும் விளைவுகள்”
கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “வரலாற்றின் முதலாளித்துவ கால கட்டம் புதிய உலகத்திற்குரிய பொருளாயுத அடித்தளத்தைப் படைத்துருவாக்க வேண்டுமெனில்:ஒரு புறத்தில் மனிதகுலத்தின் பரஸ்பர சார்பு நிலை மீது தோற்றுவிக்கப்பட்ட சர்வவியாபகமான ஒட்டுறவையும் அந்த ஒட்டுறவுக்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்; மறுபுறத்தில் மனிதனின் உற்பத்தி ஆற்றல்களை வளப்படுத்துவதும்பொருள்வகை உற்பத்தியை இயற்கை காரணத்துவங்களை (Natural Agencies) விஞ்ஞான பூர்வமான மேலாண்மையாக உருமாற்றப்படுவதையும் வளர்த்துச் செல்ல வேண்டும்.
மண்ணியல் புரட்சிகள் பூமியின் மேல் பரப்பைப் படைத்துருவாக்கியிருப்பது போன்று அதே வழிகளில் முதலாளித்துவத் தொழில்துறையும் வாணிகமும் புதிய உலகத்துக்கான இந்தப் பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன.” மார்க்ஸின் கூற்றை உண்மையாக்கும் விதமாக உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளில் எல்லை கடந்த “சர்வவியாபகமான ஒட்டுறவு உடைய வர்த்தக” சமூக மாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்கை வளங்களை, “விஞ்ஞான பூர்வமான மேலாண்மை” மூலம் வர்த்தக பண்டங்களாக மாற்றி உள்ளது உலகமயத்தின் தத்துவமான சந்தை பொருளாதர வணிகம்.
அந்த வகையில் இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தப்படியாக நீர் இன்று மிக பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது.
 நீருக்கு தனி கடவுகளை கொண்டிருக்கும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. “தேசிய நீர்க் கொள்கை வரைவு - 2012” என்கிற திட்ட வரைவு ஒன்றை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பாக தனது இணைய தளத்தில் வெளியிட்டது.இந்த கொள்கை வரைவு குறித்தான பொது கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2002-ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிற நிலையில், எவ்வித காரணமும் முன்தேவையும் கூறாமல் புதிய தேசிய நீர்க்கொள்கை வரைவு தீட்டப்பட்டுள்ளது.
“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகமயம்- தண்ணீர் வர்த்தகம்: 
சந்தைப் பொருளாதரத்தை முன்னெடுத்து செல்லும் உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தக பண்டமாக வரையறுத்துள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது தடைச் செய்யக் கூடாது என்று கூறுகிறது காட் ஒப்பந்தம். இதன் பொருள் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் வர்த்தகத்தை சமூக நலன், சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் தடை செய்ய கூடாது என்பது தான்.
Farmers-7_380உலக வர்த்தகக் கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம், மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய் யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். கூடுதலாக, தண்ணீர் தொடர்பான வர்த்தகம் செயல்களை வரையறுத்து உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் வர்த்தக சேவை துறையில் தண்ணீ ரின் பங்காக, அதாவது நீர் வணிகம் செய்ய ஏற்ற செயல்களாக இவற்றை எல்லாம் கூறுகிறது: நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றல், நீர்க் குழாய்களை அமைத்தல், குடிநீர் தொட்டிகளை அமைத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை, விவாசயத்திற் கான நீர்ப்பாசனம், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து சேவை. இந்த பணிகளை மேற்கொள்ளும் பல பன்னாட்டு இன் னாட்டு நிறுவனங்களை நாம் அறிவோம். விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங் கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. உலக வங்கியும் கூறுகிறது. பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கொண்டு தண்ணீர் தனியார்மயமாகும் வழிவகைகளாக மூன்றை கூறலாம்: முதலாவது ஒட்டுமொத்தமாக தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இந்த முறை இங்கி லாந்து நாட்டில் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது, நீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடு வது. இந்த முறை பிரான்சு நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது முறை தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுவது.


----------மேலும் படிக்க --------------------------->>>>>>

நன்றி:கீற்று 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
கமலின் "விஸ்வரூபம்" 
--------------------------------
விஸ்வரூபம் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் , டிடிஎச் ஒளிபரப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
.
கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்திருக்கும் புதிய படம், விஸ்வரூபம். இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். ரூ.95 கோடி செலவில், மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தை டி.டி.எச். தொழில்நுட்பம் மூலம் டெலிவிஷ னில் ஒளிபரப்ப கமல்ஹாசன் ஏற்பாடு செய்து இருக்கிறார்.இதற்கு சில தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பினால், கமல்ஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டி.டி.எச். மூலம் படத்தை திரையிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று கூறுகிறார்கள். அதில் ஒரு சின்ன திருத்தம். உலகிலேயே இதுதான் முதல் முறை. உலகமே நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.சேட்லைட் தொலைக்காட்சி வந்தது போல், வேறு ஒரு பரிணாம வளர்ச்சி இது. டி.வி.யில் இலவசமாக படம் காட்டப்பட்டது. டி.டி.எச். மூலம் வருமானம் வருகிறது.
suran
இதன் மூலம் கள்ள வீடியோ தொழில் சிதைக்கப்பட்டு, வருமானம் எங்களுக்கு வந்து சேரும்.ஆனால் சிலர், திருடன் கொண்டு போனாலும் பரவாயில்லை. உடையவனுக்கு லாபம் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். டி.டி.எச். தொழில்நுட்பம், ஒரு கூட்டு முயற்சி வியாபாரம். இதில், யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. 6 மாதங்களாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு இது.
தமிழ்நாடு முழுவதும் “விஸ்வரூபம்’ படத்தை திரையிட, இதுவரை 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படத்தை திரையிட மாட்டோம் என்று சொல்பவர்களிடம், திரையிட சொல்லவில்லை.

படம், குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும்.ஏர்டெல், சன், டிஷ், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய 5 டி.டி.எச். நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளன.
.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

' நீண்ட காலமாக சினிமாவில் இருக்கிறீர்கள். ஆனாலும், உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறதே?’’ என்று கேட்கப்பட்டது.
அது பற்றி  கமல்ஹாசன் 
'"பொருளாதார நெருக்கடி என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை. எனக்கு எந்த குறையும் இல்லை. நெருக்கடி, எல்லோருக்கும் வரும். டாட்டா, பிர்லாவுக்கும் வந்திருக்கிறது.பஸ்சில் போய்க்கொண்டிருந்த என்னை, “ஆடி’ காரில் போக வைத்து இருக்கிறீர்கள். ரசிகர்கள், என்னை வசதியாகத்தான் வைத்து இருக்கிறார்கள்"
  பதில் கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


ஞாயிறு, 23 டிசம்பர், 2012

இளைஞர் புலி

இளைஞர் புலி அமைப்பு என்ற ஓர் பயங்கரவாத இயக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரபல சிங்கள நாளேடான ‘திவயின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
suran
அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. புதிய இளைஞர் புலி அமைப்பின் தலைவராகக் கருதப்படும் சுரேஸ் குமார் என்பவர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரேஸ் குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தயாரிப்புப் பிரிவில் கடயைமாற்றியுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சிகளை வழங்கி அவர்களை இலங்கைக்கு அனுப்பி நாச வேலைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களை அழைத்து அவர்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பில் தமிழகத்தில் வைத்து பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
suran
மக்களை அகதிகள் வாழ்விலிருந்து மாறுதல் கொடுக்க இயலாத இலங்கை அரசு தன்னை உலக நாடுகள் மத்தியில் பாதுகாத்துக்கொள்ளவே இந்த "புலி" வருது கதையை பரப்பி வருகிறதாக தெரிகிறது.இந்த கதைக்கு இந்தியாவும்  குறிப்பாக தமிழக அரசும் இலங்கைத்தமிழ் இளைஞர்களை கைது செய்து வழுவேற்றி  வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------
  "எம்.ஜி.ஆர்" நினைவு தினம்

'மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். 
suran
பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,

1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.
மு தல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பள்ளி மாணவி கற்பழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் - பேச்சியம்மாள் தம்பதியினரின் மூத்த மகள் புனிதா (13). கணவர் இறந்து விட்டதால் பேச்சியம்மாள் கிளாக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து அவர்களுடன் வசித்து வந்தார். 
தாதன்குளத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவாக வேலை பார்த்து வந்த பேச்சியம்மாள் தனது பிள்ளைகளை நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக மூத்த மகள் புனிதாவை நாசரேத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார். அங்குள்ள விடுதியில் தங்கி புனிதா 7ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் ரோகிணி (10) உள்ளுரில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
 தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் ஒரு வாரத்திற்கு முன் விடுதியில் இருந்து ஊருக்கு வந்த புனிதா தினமும் தாதன்குளத்தில் ரயில் ஏறி நாசரேத் சென்று பரீட்சை எழுதிவிட்டு மாலை ஊர் திரும்புவார். கடந்த 20ந் தேதி காலை பரீட்சை எழுத சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இது குறித்து சேரகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை புனிதா தாதன்குளம் அருகே முட்புதரில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை கொலையாளி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி.தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 
suran
தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை சடையநேரி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள பாறைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சுப்பையா (36) என்பவது தெரியவந்தது. அவன் மாணவி புனிதாவை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். கைதான சுப்பையாவின் உறவினர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தில் உறவினர் வீடு உள்ளது. அங்கு அடிக்கடி வந்து போவது வழக்கம். கடந்த 19ந் தேதி தாதன்குளம் வந்துள்ளான். மறுநாள் 20ந் தேதி (வியாழக்கிழமை) தாதன்குளம் ரோட்டில் மாணவி புனிதா தனியாக நடந்து வந்ததை பார்த்துள்ளான். காமம் தலைக்கேறிய அவன் மாணவியை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கிச் சென்றுள்ளான். அப்போது மாணவி அவனை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா மாணவியை கற்பழித்து அவள் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை முட்புதரில் வீசிவிட்டு பின்னர் அவன் சொந்த ஊருக்கு செல்லாமல் தாதன்குளம் பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளான். சடையநேரி பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.  மாணவி புனிதாவை கொடுரமாக கொலை செய்த சுப்பையா இது போன்று பல பெண்களை சீரழித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் தாதன்குளம் உறவினர் வீட்டிற்கு வந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதை பார்த்த உறவினர்கள் அவனை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இது போல் சொந்த ஊரான பாறைக்குட்டத்திலும் சித்தி மகளிடமும் சில்மிஷம் செய்துள்ளான். அவன் மீது மணியாச்சி போலீசில் புகார் செய்யப்பட்டதால் போலீசார் சுப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 அங்கிருந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளான். வந்தவன் தன் மீது போலீசில் புகார் கொடுத்த சித்தியை அரிவாளால் வெட்டி இருக்கிறான்.
 இது தொடர்பாக பிறகு தாதன்குளம் உறவினர் வீட்டிற்கு கடந்த 19ந் தேதி வந்திருக்கிறான். இங்கு மாணவியை கொடுரமாக கொலை செய்து தனது காமபசியை தீர்த்துள்ளான். இது போன்று பல பெண்களின் கற்பை அவன் சூறையாடியதாக தெரிகிறது. குறிப்பாக சிறுமிகளைத்தான் அவன் குறிவைத்து வேட்டையாடி இருக்கிறான். 
இவன் மீது நெல்லை தாலுகா போலீஸ், பாளை பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. போலீசார் அவனை தேடிவந்தநிலையில் தற்போது மாணவி கொலையில் சிக்கியுள்ளான். மாணவியை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
suran
 டிச. 17ம் தேதி இரவு புதுடெல்லியில் பஸ்சில் சென்ற மருத்துவக் கல் லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலி யல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்ட னை விதிக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை போல் செய்துங்கநல்லூர் அருகே மாணவி புனிதா பாலியல் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தையும் பார்க்க வேண்டும் என்று நாடார் சமுதாய தலைவர்கள் கூறியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி இந்த சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் வரும் 26ம்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், தேமுதிக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகராஜ், சமக மாவட்ட செயலாளர் சுந்தர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அப்துல்காதர் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------- 

சில பலாத்கார சிந்தனைகள்.டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம்தான் இன்றைய முக்கிய தலைப்பு செய்தி.அந்நிய சில்லறை வர்த்தக அனுமதி ,லோக்பால்,நிலக்கரி  முறைகேடு போன்றவை பின் வாங்கி பொய் விட்டது.
டெல்லியில்  கற்பழிப்புகள் இதற்கு முன் நடக்கவே இல்லாதது போலும் அல்லது அடிக்கடி நடப்பதை தடுக்ககோரியும் நடப்பது போல் போராட்டக்காரகள் கோரிக்கைகள் வைத்தது போல் தெரியவில்லை.
ஏதோ எல்லோரும் பரபரப்பாக போகிறார்கள் நாமும் போய் போராடுவோம் என்பது போல் இந்த போராட்டம் அமைந்துள்ளது.
இந்த போராட்டம் நடப்பதில் இருந்து ஒன்று மட்டும் நன்கு புரிகிறது.இன்றைய நடுத்தர வர்க்கம் ஆட்சியாளர்கள் மீது கடுங் கோபத்தில் இருக்கிறர்கள்.அவர்கள் பிரதமர்,குடியரசுத்தலைவர் நாட்டின் சீரழிவுக்கு துணை போவதாக எண்ணுகிறார்கள்.
அதற்கு இது பொன்ற போராட்டங்களை வடிகாலாக வைத்துக்கொள்கிறார்கள்.
suran
இல்லை என்றால் ஒரு கற்பழிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பிரதமர்,குடியரசுத்தலைவர் குடியிருப்புகளை முற்றுகையிட்டு அதுவும் குற்றவாளிகள் பிடிபட்டு கடுமையான தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க காரணம் வேறு என்னவாக இருக்கும்.அவர்களா கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

ஒட்டு மொத்த இளைய,நடுத்தர வர்க்கம் இன்றைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்களவையில் இரட்டை வேடம் பூட்டும் எதிர்கட்சிகள் மீதான கோபம் உள்ளூர கொதி நிலையில் இருப்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.
கற்பழிப்புக்கு பரிகாரம் என்பது அடுத்த கட்டம்தான்.
இந்த போராட்ட உணரவுகளை சில்லறை வணிகத்தில்  அனுமதி ,வங்கிகள்-பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பது,180000கோடிகள் தனியார் முதலாளிகளுக்கு வரி விலக்கு ,விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் காட்டியிருக்கலாம்.அப்படி நடந்திருந்தால் இந்த ஆளுங்கட்சியினர் தங்கள் நாட்டை சீரழிக்கும் திட்டங்களில்கொஞ்சம் தயக்கம் காட்டியிருப்பார்கள்.
suran
அன்னாகசாரே யின் ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவாக குவிந்தனர்.ஆனால் அவரோ தனது வழித்திட்டத்தை குழப்பத்தின் மொத்த வடிவாக உருவாக்கி இந்த வர்க்கத்தின் நம்பிக்கையை பொய்த்து விட்டார்.
மொத்தத்தில் டெல்லி போராட்டம் வெறும் கற்பழிப்பு சம்பவத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் என்று நம்பமுடியவில்லை.மக்களின் பல்வெறு விடயங்களில் அரசுக்கு எதிரான குமுறலின் வடிவம்தான் இது.
 மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது.இந்த போராட்டத்தை பார்த்து சில அரசியல்வாதிகள் கற்பழிப்பு வழக்குகளுக்கு தூக்கு உடனேயே வழங்க வெண்டும் என்கிறார்கள்.
டெல்லி கற்பழிப்பு குற்றவாளி கூறிய சில வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வெண்டும்.
suran
'இந்த குற்றத்துக்கு என்னை தூக்கில் போடுங்கள் .இந்த இரவில் வேறு ஆணுடன் தனியே சுற்றி வருவதுடன் நாங்கள் பேருந்தில் வர கூப்பிட்டதுடன் வரும் பெண் நல்லவளாக இருக்க மாட்டாள் என்றே நினைத்தோம்.மேலும் இந்த இரவில் எங்கே தனியே பொய்வருகிறீர்கள் என்று கேட்டதற்கு 'அதைப்பற்றி எதற்கு சொல்லவேண்டும்.என்று திமிராக பேசியதும்தான் எங்களுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டது."
-என்று அவன் கூறியுள்ளான்.இந்த் எண்ணம் உருவாக அந்த பெண்ணும் ஒருவகையில் காரணமாகி விட்டாள்.
ஆ னால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  பள்ளி மாணவி கற்பழிப்பு மிகக்கொடுரமானது.வழக்கமாக கூட்டமாக செல்லும் மாணவி தேர்வுக்காக தனியே ரெயில் நிலையம் போக ஒற்றையடி பாதையில் செல்லும் போது கொடுரனால் மிகக்கொடுரமாக கற்பழிக்கப்பட்டு அவளின் துப்பட்டாவினாலேயே கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளாள்.நிச்சயம் இந்த திட்டமிடப்பட்ட பலாத்தகாரத்துக்கு தூக்கு அவசியம்.
டெல்லி,தூத்துக்குடி சிறுமி கற்பழிப்புகளுக்கு வேண்டுமானால் விசாரித்து தூக்கு தண்டனை வழங்கலாம் .
ஆனால் கற்பழிப்பு என்ற புகார்களுக்கெல்லாம் வழங்குவது சரியாகாது.
காரணம் காதலித்து அல்லது கள்ளக்காதல் வைத்திருக்கும் சில பெண்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் ஆண் தன்னை கற்பழித்துவிட்டதாக திசையை திருப்பி தன்னை கண்ணகியாக்கிக் கொள்கிறார்கள்.
ஆண் மட்டுமே குற்றவாளியாகிவிடுகிறான்.இது போன்ற கூட்டு களவாணித்தனத்துக்கு ஆணுக்கு தூக்கு சரிவருமா?பெண் குற்றவாளிக்கு தண்டனை என்ன?
பாரதி கூறியதுபொல் கற்பென்பதை பொதுவில் வைப்போம்.
suran
ஆண்கள் எல்லோருமேசமயம் கிடைத்தால்  கற்பழிப்பு எண்ணத்துடன் இருப்பது போல் ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது அதை மாற்றிக்கொள்ள வேண்டும் .சமயம் கிடைத்தால் பெண்களிலும்  சிலர் அப்படித்தான் இருக்கிறா ர்கள்.ஆனால் மாட்டிக்கொள்வதெல்லாம் ஆண்கள் மட்டுமே.இங்கு பெண் பாவம் சட்டத்தின் கண்ணை மறைத்து விடுகிறது.
இப்போது காவல்துறையினர் நகர ரோந்து வராததினாலும்,ஆட்சியாளர்களின் ஏவல் வேலைகளை மட்டும் செய்து கொண்டிரூப்பதால்தான்  இது போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன.
இது போன்ற பாலியல்,கொலை,கொள்ளைகளுக்கு மூலக்காரணம் காவல்துறையின் செயல்பாடுகள் சரிவர இல்லாததுதான்.
suran
அவர்கள் குற்றம் வந்தபின் வந்து பார்க்கவந்தவர்களிடம் தங்கள் வீரத்தை காட்டாமல்.
அவ்வப்போது நகர ரோந்து,சிறிய ரவுடியாக உருவெடுக்கும் போதே தலையில் தட்டி வைப்பது கட்சிக்காரர்களின் சொல்படி கண்டு கொள்ளாமல் இருப்பதை விட்டு விட்டால் பாதிக்கு மேல் குற்றங்கள் குறைந்துவிடும்.
.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...