வியாழன், 27 செப்டம்பர், 2018

கூவத்தூர் ரகசிய வீடியோ!

 டீல் பேசிய எடப்பாடி!
ரட்டை இலையில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸை கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. சென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல் துறையை மட்டுமல்லாமல், பிற சமூகத்தி னரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அச் சமூகத்தினர் கொந்தளித்தனர். தென் மாவட்டங்களில் கருணாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் நாடார் சமூகம் வரிந்துகட்டி வருவதாக அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியது மாநில உளவுத்துறை. இந்த நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் உயரதிகாரி களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி.


""முக்குலத்தோர் வாக்குகள் இனி சசிகலா-தினகரன் தரப்புக்குத்தான் போகும். அதனால் கருணாஸை கைது செய்வதால் அரசியல்ரீதியாக நமக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மாறாக, மாற்று சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் கருணாஸ் "டச்'சில் இருப்பதும் எடப்பாடியை சீண்டியது. ஆலோசனைக்குப் பின் சபாநாயகர் தனபாலுக்கு கைது தகவலை அனுப்பிய கையோடு, காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது'' என்றனர் கோட்டை அதிகாரிகள்.


கருணாஸ் தரப்பில் நாம் விசாரித்த போது, ""கடந்த ஒரு வருடமாகவே கரு ணாஸுக்கும் எடப்பாடிக்கும் மறைமுகமாக யுத்தம் நடந்துவருகிறது. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படையை அரசியல் ரீதியாக ஒடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார் எடப்பாடி. கருணாஸின் திருவாடானை தொகுதி ராமநாதபுர மாவட்டத் தில் இருக்கிறது. மாவட்டத்தின் உயரதிகாரிகளான கலெக்டர், போலீஸ் எஸ்.பி. தொடங்கி கீழ்நிலை அதிகாரிகள்வரை கருணாஸுக்கு ஒத்துழைக்கக் கூடாது என கோட்டையிலிருந்து உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இதனால், தொகுதி சார்ந்த எந்தப் பணிகளையும் கருணாஸால் செய்ய முடியவில்லை. இதனை எடப்பாடி யிடம் சொல்வதற்காக பலமுறை முயற்சி செய்தும் அப்பாயின்ட்மெண்ட் மறுக்கப்பட்டது.


சீனியர் அமைச்சர்கள் இரண்டு பேரை சந்தித்த கருணாஸ், "முதல்வர் என்னை எதிரியாக நினைத்தால் அவரை நானும் எதிரியாக நினைக்க வேண்டிய திருக்கும். என்னை அழிக்க நினைத்தால், கூவத்தூரில் நடந்தது சம்பந்த மான ஆதாரங் களை பொது வெளியில் வெளியிட்டு விடுவேன்' எனச் சொல்லி விட்டு வந்தார். இதனை எடப்பாடி யிடம் சீனியர் அமைச்சர்கள் தெரிவித்தும் பாசிடிவ்வான பதில் இல்லை என்பது கருணாஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளது. "உங்கள் மீது ரொம்பவும் காட்டமாகவே இருக்கிறார் முதல்வர். ஆதாரங் களைத் தந்தால் ஒரு வேளை அவர் சமாதான மாகலாம்' எனச் சொல்ல... ஆதாரங்களை தர மறுத்துவிட்டார் கருணாஸ்.


வீடியோ ஆதாரங்களைப் பறிப்பதற்காக கருணாஸுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டி, அவரைச் சுற்றியிருக்கும் வழக்கறிஞர்கள் தாமோதரகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீதும் வழக்கு களைப் புனைந்தது போலீஸ். இவர்களைத் தூக்கி குண்டாசில் போட்டால்தான் கருணாஸ் அடங்குவார் என கங்கணம் கட்டிக்கொண்டு எடப்பாடியின் காவல்துறை விளையாடியது. இதனை எதிர்த்து டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர் கருணாஸ் தரப்பினர். ஆனாலும், பொய் வழக்கு போடுவது நிற்கவில்லை.


அ.தி.மு.க. ஆட்சி கவிழாமல் இருப்பதற் காக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியபோது, சசிகலாவின் திட்டப்படி கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதிலும் டீலிங் பேசுவதிலும் கருணாஸுக்கு பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. தனது முக்குலத்தோர் புலிப்படையினரை வைத்து போயஸ் கார்டன் முதல் கூவத்தூர் ரிசார்ட் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் கருணாஸ். மேலும், கூவத்தூரிலும் கூவத்தூருக்கு வெளியே யும் எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாப்பதில் கருணாஸின் பங்களிப்பு நிறைய இருந்திருக்கி றது. குறிப்பாக யார், யாருக்கு என்ன செய்யப் பட்டது?, என்ன மாதிரியான பேச்சுவார்த்தை கள் நடந்தன, கொடுக்க வேண்டியதை யாரிடம் ஒப்படைக்க வேண்டும், கூவத்தூரில் எடப்பாடியின் செயல்பாடுகள் எப்படி இருந் தன? ரிசார்ட்டில் இரவு நேரத்தில் நடந்த விவாதங் கள் என பல விஷயங்களில் கருணாஸின் புலிப்படை யினர் சம்பந்தப்பட்டுள்ளனர். முழு விவரமும் அவர்களுக்குத் தெரியும்.


இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அந்த வீடியோக்கள் பொதுவெளியில் வெளி யானாலோ அல்லது தி.மு.க. தரப்பிடம் சிக்கி னாலோ முதல்வரான பின் சசிகலாவையே டபாய்த்த எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்த பயம்தான் எடப்பாடியை கருணாஸுக்கு எதிராகக் கோபப்பட வைக்கிறது. அந்த வீடியோக் களை பறிப்பதற்காகத்தான் முதலில் கருணாஸை சுற்றியிருக்கும் வழக்கறிஞர்களை வளைத்து உள்ளே தள்ளிவிட்டு, அதன்பிறகு கருணாஸை வளைப்பது என திட்டமிட்டிருந்தது எடப்பாடி யின் காவல்துறை. அதற்குள் உணர்ச்சிவயப்பட்டு கருணாஸே மாட்டிக்கொண்டு விட்டார். இப்போது, கூவத்தூர் வீடியோக்களை கேட்டு வேலூர் சிறையில் கருணாஸுக்கு டார்ச்சர் தரப் படுகிறது'' என பின்னணிகளை விவரிக்கின்றனர் கருணாஸை சுற்றியிருக்கும் வழக்கறிஞர்கள்.

======================================================================================
"தேச விரோதிகள்" ?
உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளில் வாழும் மக்களிடம் அவர்களின் மிகப்பெரிய கவலை எது என்று கோல்கீப்பர்ஸ் குளோபல் யூத் அவுட்லுக் எடுத்த ஆய்வில்  கேட்கப்பட்டது.

மொத்தம் 40 ஆயிரம் கேட்கப்பட்ட 40 ஆயிரம் பேரில் 2800 பேர் இந்தியர்கள். 
இந்த ஆய்வில் இந்தியர்களின் மிகப்பெரிய கவலை வேலையில்லாத் திண்டாட்டம்,ஆட்ச்சியாளர்களின் ஊழல்,நிர்வாகத்திறமையின்மை ,மதவாதம்  என்று தெரியவந்துள்ளது. 

இந்தியாவைப் போலவே நைஜீரியாவிலும் இதே பிரச்சனைதான் மிகப்பெரிய கவலை என்று கூறியிருக்கிறார்கள்.
 பல நாடுகளில் பாதுகாப்பின்மையும், பொருளாதார நிலையற்ற தன்மையும், சுற்றுச்சூழலும், ஊழலும் மிகப்பெரிய பிரச்சனையாக கூறியிருக்கிறார்கள்.


இந்தச் ஆய்வைப்  பார்த்ததும் மோடி என்ன சொல்வார்? 
"அவர் சொன்ன பக்கோடா விற்கும் தொழிலை வேலைவாய்ப்பாக கருதி, எல்லையில் படைவீரர்கள் படும் பாட்டை நினைத்தால்  இந்தக் கவலை இல்லாமல் போயிருக்கும்.,அப்படி செய்யாதவர்கள் தேச விரோதிகள்"  என்றுதான் சொல்வார்.!
==========================================================================================

ரபேல் விமான ஒப்பந்தம்
தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுப் புது தகவல்கள் வெளியாகி விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. 
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், எதற்காக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தோம் என்பது குறித்தான ரகசியத்தை உடைத்துள்ளார். 
8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலைன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான முறையற்றப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 
ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது.
v72mjkg
கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். 
இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பு, ‘எந்த வித ஆதாரமுமின்றி காங்கிரஸ் தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய்களை சொல்லி வருகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தை போடுவது குறித்து முதன் முதலில் பேச ஆரம்பித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான்’ என்று பதிலடி கொடுத்தது. 

இப்படி இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, ‘இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது. 
இது குறித்து எங்களுக்கு எந்த தேர்ந்தெடுக்கும் உரிமையும் தரப்படவில்லை’ என்று பகீர் தகவலை தெரிவித்தார்.  
n8ueplt
ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதியளவு நிதியான 30,000 கோடி ரூபாயை டசால்ட் நிறுவனம், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து விமானத்துக்குத் தேவையான பாகங்களை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதையடுத்து தான், இந்தியாவில் விமான பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் குழுமத்தை தேர்ந்தெடுத்தது டசால்ட். 

இது குறித்து டசால்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர் "‘ரிலையன்ஸ் குழுமத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தற்கு பல காரணங்கள் இருந்தது. எம்.சி.ஏ உடன் தங்களை பதிவு செய்திருந்தது ரிலையன்ஸ் குழுமம். மேலும் அவர்களுக்கு நாக்பூரில் நிலம் இருந்தது. அந்த நிலத்திலிருந்து ரன்வே-வுக்கு போவதும் சுலபம். 

முகேஷ் அம்பானியின் வசமிருந்து ரிலையன்ஸ் குழுமத்தின் விமானத் தயாரிப்பு பிரிவு அனில் அம்பானி வசம் சென்ற பிறகு, அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்’ என்று தெரிவித்துள்ளார். 
இது ஒருபுறமிருக்க ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் டசால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டேப்பியர், ‘ரஃபேல் ஒப்பந்தத்தை அடுத்து, ஹெச்.ஏ.எல் நிறுவனத்துடன் இணைந்து பணி செய்வது குறித்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்’ என்று பேசினார். 

அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. 
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய டசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நபர், ‘அப்போது எங்கள் நிறுவனத்தின் தலைவர் 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் குறித்து பேசினார். அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நினைத்து அவர் அப்படி பேசினார். 
அவருக்கு இந்திய ராணுவ அமைச்சகத்திற்குள் என்ன நடக்கிறது என்பது எப்படித் தெரியும்?’ என்றுள்ளார். 

இந்திய பொதுத் துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்-ஐ வேண்டுமென்றே ரஃபேல் ஒப்பந்தத்திலிருந்து மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

ஹாலண்டேவின் கருத்து குறித்து மத்திய அரசு தரப்போ, ‘அவர் மீது பிரான்ஸில் பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. எனவே தான் அவரை காப்பாற்றிக் கொள்ள இப்படி பேசியுள்ளார்’ என்று ஹாலண்டே மீதே குற்றம் சாட்டி பேசி மோடியை தப்புவிக்கப் பார்க்கிறது.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...