வியாழன், 1 நவம்பர், 2018

மோடிக்கு அமைதி விருதா ?


மோடிக்கு விருதளிக்காதே ! 

தென் கொரிய மக்கள் ஆர்ப்பாட்டம் !

சோல் அமைதி விருது” என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம். தற்போழுது தேர்வாகி உள்ள இந்திய பிரதமர் மோடி  இந்த விருதுக்கு எந்த விதத்திலும் தகுதி உடையவர் அல்ல’.  என்று தென் கொரிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகினறனர்.

மோடி2002 ல் குஜராத் முதல்வராக இருந்த பொழுது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் அவரது அரசின் பங்கு மோசமானது. 
அப்பொழுது நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாத காரணத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

மேலும் அவர்கள் பிரதமர் மோடி கொரியாவின் முன்னாள் அதிபர் சுன்-டூ-வான் அவர்களோடு ஒப்பிட்டு முழக்கமிட்டனர். 
அதிபர் சுன்-டூ-வான் என்பவர் 1980 ம் ஆண்டில் தான் அதிபராக இருந்த பொழுது நடந்த கொரிய இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மோடி அவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது கிட்டத்தட்ட அதிபர் சுன்-டூ-வான் அவர்களுக்கு வழங்கப்படும் விருதைப் போன்றதாகும் என எச்சரித்தனர். 
அதுமட்டுமில்லாமல் இந்த விருது மோடிக்கு வழங்கப்பட்டால் அது மற்ற சோல் அமைதி விருது பெற்றவர்களை அவமதிக்கும் செயலாகும், எனவே உடனடியாக இந்த முடிவைப் பரிசீலிக்க வேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.
===========================================================================================
தினகரனுக்கு ரூ. 2.5 கோடி பணம் கொடுத்த வி.வி .மினரல் வைகுண்டராஜன்.

வி.வி.மினரல் குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த குழுமம் ரூ. 800 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதில் குறிப்பாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரனுக்கு வைகுண்டராஜன் ரூ.2.5 கோடி நிதி அளித்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கி இருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 6 நாட்களாக வி.வி மினரல்ஸ் குழுமத்தில் நடந்து வந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்துள்ளது. வி.வி.குழுமத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த குழுமத்தின் நிறுவனர் வைகுண்டராஜன் மற்றும் அவரது மகனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.


6 நாட்கள் சோதனையில் வி.வி.மினரல்ஸ் குழுமம் ரூ. 800 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. 


இதே போன்று கணக்கில் காட்டப்படாத ரூ. 8 கோடி கட்டுக்கட்டான பணத்தையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

வி.வி.மினரல்ஸ் குழுமத்தினர் வெளிநாடுகளில் 8 சுரங்கங்களை நடத்தி வருவதும் அம்பலமாகியுள்ளது. மேலும் போலி நிறுவனங்கள் மூலம் பல கோடிகளை வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனையை இவர்கள் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் மற்றும் வைகுண்டராஜனின் மகன்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரனுக்கு வைகுண்டராஜன் ரூ.2.5 கோடி பணம் கொடுத்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

எப்போது , எப்படி இந்தப் பணப்பரிமாற்றம் நடந்தது என்று வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். தினகரனிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

எந்த நோக்கத்தில் டிடிவி. தினகரனுக்கு ரூ. 2.5 கோடி பணம் கொடுக்கப்பட்டது, அதற்கான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று வருமான வரித்துறையினர் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. 

சவுதி நாடுகளில் நடத்திய 8 குவாரிகள் மூலம் கிடைத்த வருமானத்திற்கு வரி கட்டப்பட்டுள்ளதா அந்த தொகை எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் இல்லாததால், வருமான வரி சோதனை முடிந்தாலும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
===========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...