சனி, 21 செப்டம்பர், 2013

"ஜெ " [‘இந்திய ] சினிமா 100’ விழா


suran

ஜெ தலைமையில் நடைபெறும் ‘இந்திய சினிமா 100’ விழா பற்றி தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர்- இயக்குநர் பீ.லெனின்.
“கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்கை யாராவது மறந்து விட முடியுமா? 
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவரவர் மொழிப் படங்களுக்கு மாநில விருது வழங்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்காக மாநில விருது வழங்கப்படவே இல்லை. 

அதை கருணாநிதிதான் தொடங்கிவைத்தார். 

ான், பாலு மகேந்திர உள்ளிட்டவர்கள், விருதுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க சொன்னபோது அதை உடனே அதிகரித்து கொடுக்கவும் செய்தார். தவிர, உலகில் இந்த வயதிலும் பேனா பிடித்து எழுதும், அதுவும் யார் கேட்டாலும் சினிமா என்றால், தன்னை மறந்து அதில் மூழ்கிப் போகும், ஒரு கலைஞன் இந்த சினிமாவிற்கு அளித்த கொடையை ஏன் தமிழ்சினிமா மறந்து போனது? சிவாஜி கணேசன் என்கிற ஆளுமையை அடையாளம் காண வைத்து, தமிழர்களின் பகுத்தறிவை உசுப்பிவிட்ட, திராவிட இயக்கத்தின் தொடக்க கால காவியமான “பராசக்தி”, திரைப்படம் எங்கே போனது? கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அவரை கொண்டாடிய கூட்டம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை. கலைஞரின் மூலமே சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்த வித்தக கவிஞர் என்கிற பா.விஜய் இந்நேரம் எங்கே போனார்? அப்துல் ரகுமான், வைரமுத்து, என்று ஒரு பெரிய பட்டாளமே கலைஞரால்தான் இங்கே நிலையான இடத்தை அடைந்தது. கலைஞரின் படத்தை திரையிடாதது கண்டு ஏன் இவர்கள் வெகுண்டெழவில்லை?”

திரை உலக நூற்றாண்டு விழா அம்மா புகழ் பாடும் விழாவாகத்தான் நடக்கிறது.சும்மாவா மக்கள் வரிப்பணத்தில் 10 கோடிகளை அன்பளிப்பாக [?]வழங்கியிருக்கிறாரே.

பராசக்தி மூலம் புராணப் படங்கள் ,பாடல்களுக்காகவே திரைப்படம் என்றிருந்ததை தனது வசனத்தின் மூலம் புதிய வழியை ஏற்படுத்திய கலைஞர் கருணாநிதி,கிராமத்து மின்னலை திரையில் கொணர்ந்து ஸ் டுடியோ க்களில் முடங்கிக் கிடந்த படப்பிடிப்புகளை கிராமங்களில் வர வைத்த பாரதிராஜா,பாலுமகேந்திரா ,பாக்கியராஜ்,விஜய்காந்த்,விஜய் போன்றோர்களின் பங்கேற்பை தவிர்த்த விழா நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படாத ஜெ ஆதரவு மாநாடுதான் .இந்த திரைப்பட நூற்றாண்டு விழா க் குழு நிச்சயம் அடிமைகளின் குழு வாகத்தான் உள்ளது.ஜெயலலிதாவுக்கு பிடித்தவர்,பிடிக்காதவர் என பாகுபடுத்தும் விழா திரையுலக நூற்றாண்டு விழாவாகவே கருத்தப்பட முடியாது.

முதல்வர் ஜெயலலிதா விழாவுக்கு வரும்  தவிர்த்து இவர்களை பெருமைப்படுத்தலாமே.இவர்களை அழைக்காமல் தவிர்க்கும் விழாக்குழுவினர் நிச்சயம் கொத்தடி மைகள்தான்.


கலைஞர்  வசனம் பேசித்தான் திரை உலகில் ஆர்வத்துடன் வந்ததாகக் கூறும் அல்லது கூறிய கமல்ஹாசன் போன்றோர் இது போன்ற சார்பு விழாவில் கலந்து கொள்வது இருக்கட்டும்.இது போன்ற மீறல்களை மேடையில் கூறுவார்களா?

கலைஞர் காலத்தில் நடந்த விழாவில் தகிரியமாக பேசிய அசி த் அதற்கு கைதட்டி பாராட்டிய ஆண்மை ரசினி இந்த விழாவில் இருக்குமிடம் தெரியும்படி இது போன்ற குறைகளை தகிரியமாக பேசுவார்களா?

[பேசினால் கருணாநிதி போல் ஜெயா சும்மா இருப்பாரா?ஆரம்பத்துக்கு கட்ட காலம் ஆரம்பமாகிவிடாதா?]
--------------------------------------------------------------------------------------------------------------
போபால் கொலைகாரனை கையூட்டு வாங்கிக்கொண்டு தப்பவிட்ட ராஜீவ் கட்சியினர் அமெரிக்க அணு உலை க்காரர்களிடமும் இழப்பீடை வாங்க இயலாதவாறு ஒப்பந்தம் போடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?
அவர்களுக்கு தேவை டாலர்களில் சுவிஸ் வங்கி கணக்கு அதிகரிப்பதுதானே ஒழிய இந்திய அப்பாவி வாக்களிக்கும் எந்திரங்களின் உயிர் பற்றிய கவலை அல்ல.!
அணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிவது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது .
இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, இந்தியாவில் அணு மின்னுற்பத்திக்காக அணு உலைகள் நிறுவும் விஷயத்தில்,நாட்டின் நலனுக்கு எதிராகவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக சர்ச்சை மூண்டுள்ளது.
அணுமின் உற்பத்திக்காக, அயல்நாட்டு நிறுவனங்களின் கூட்டுடன் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் மின் நிறுவனத்திடமிருந்து அணு உலைகள் மற்றும் உதிரிபாகங்களை வாங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அணுமின் வாரிய நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்.) ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது.
suran


இதுபோல் அயல்நாட்டு நிறுவனங்களின் அணு உலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டு, அவற்றில் விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய நஷ்டஈட்டை அணுஉலை மற்றும் உதிரிபாகங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதை, 2010-இல் கொண்டுவரப்பட்ட அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு உறுதி செய்கிறது.
இதனால், போபால் விஷவாயு சம்பவத்தைப்போல, இந்தியாவில் நிறுவப்படவிருக்கும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து நேர்ந்தால், அதற்குப் பெருமளவு நஷ்டஈட்டுத் தொகையைத் தர வேண்டுமே? என அமெரிக்க நிறுவனம் கவலைப்படுகிறது. அந்தக் கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.ஈ. வாஹன்வதி, அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவை செயல்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை அணுமின்நிலையத்தை நடத்தும் இந்திய நிறுவனத்தின் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின்போது அணு விபத்து பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும், அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையிலும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் என்.பி.சி.இ.எல். நிறுவனம் மேற்கொள்ளும் எந்தவோர் ஒப்பந்தமும், இந்தியச் சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என அணுசக்தித் துறை (டி.ஏ.இ.) வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக்குழு வரும் 24-ம் தேதி விவாதிக்கும் எனத் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மருதநாயகம்  கமல்?
 1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம்.

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல்.
suran
அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.

ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல்.
இந்த பாகத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.
அதனால் இந்த சூட்டோடு மருதநாயகம் படத்தையும் தூசு தட்டுமாறு கமலின் அபிமானிகள் அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். சிலர் பைனான்ஸ் உதவி செய்யவும் முன்வந்துள்ளார்களாம். அதனால் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு மருதநாயகம் வேலைகளில் கமல் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்கு! -விநோதம்!!-ஜெயலலிதா!!

கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங் அவர்களே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே திரும்பத் திரும்ப பல முயற்சிகளில் ஈடுபடுகிறாரே?

பதில் :- கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் 23-8-2013 அன்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், விசாரணையின்போது பின்பற்றப் பட வேண்டிய நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால், அவரை நீக்கிவிட்டு புதிய வழக்கறிஞரை, அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப் பட்டது.
suran
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, கர்நாடக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையில், அரசு வழக்கறிஞர் பதவி யிலிருந்து பவானி சிங்கை நீக்கிவிட்டதாக, கர்நாடக மாநிலச் சட்டத் துறைச் செயலாளர் நாகராஜா 25-8-2013 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் """"ரிட்"" மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் சவுஹான் மற்றும் போப்படே ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, நீதிபதிகள், புதிய வழக்கறிஞரை நியமனம் செய்ய அனுமதி வழங்கியதுடன், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து, 7-9-2013 அன்று உத்தரவிட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் அரசு சார்பாக ஆஜராக வலியுறுத்த வேண்டாம் என்று 10-9-2013 அன்று கர்நாடக அரசு கூறியது. 
அதை எதிர்த்து ஜெ. தரப்பில் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் 11ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 
 கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதி மன்றம் ஏற்று, பவானி சிங் விசாரணையில் ஆஜராகக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையில் கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், சொத்துக் குவிப்பு வழக்கி லிருந்து வக்கீல் பவானி சிங்கை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒப்புதலோடு முறைப்படி நீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இரண்டு மனுக்களை நேற்றையதினம் (18-9-2013) தாக்கல் செய்திருக்கிறார். 
அதாவது, தற்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென்றும், புதிய நீதிபதியை நியமிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்றும், பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டுமென்றும் ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிபதி பாலகிருஷ்ணா அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு திரு. மல்லிகார்ஜுனய்யா அவர்களும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும்
திரு. பாலகிருஷ்ணா அவர்களே தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்? அதுபோலவே அரசு வழக்கறிஞராக திரு. ஆச்சார்யா அவர்கள் பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டாமென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்?
எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டு மென்றும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூமி ‘உயிர் வாழும்’ காலம்  தெரியுமா?

 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது.

suran
 ஆன்ட்ரூ ரஷ்பி கூறியது:  பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்கள் பல வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பூமி பற்றிய ஆய்வுகள் முடிவில்லாதவை. ஆனால், எங்கள் கண்டுபிடிப்புகள் பல கட்டங்களில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன.

எங்கள் முந்தைய கணிப்பு படி, பூமி இன்னும் 325 கோடி ஆண்டுகள் வரை ‘உயிர் வாழும்’ தகுதி படைத்ததாக இருக்கும் என்று தான் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், வானிலை மாற்றங்கள் கடுமையாக மாறி வருகின்றன; கடல் மட்டம் மாறி வருகிறது; கடல் நீர் அதிவேகமாக நீராவி ஆகி வருகிறது. இப்படி பல வகையான வானிலையில் மிக மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், பூமி ‘உயிர் வாழும்’ காலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. அதாவது, எங்கள் இப்போதைய கணிப்பு 175 கோடி ஆண்டுகள் வரை பூமி ‘உயிர் வாழும்’ என்பது தான்.

ஆம், அதுவரை பூமியில், தண்ணீர் இருக்கும்; வெப்பம், மனிதர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். அதன் பின், வெப்பம் மிகவும் கொடூரமாக இருக்கும்.
; மனிதர்கள் பொசுங்கி போவர்; ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கோடிக்கணக்கில் மடிந்தும் மறைந்தும் விடும்.  அதனால் மாற்று இடம் தேடி தான் மக்கள் போக வேண்டியிருக்கும். சூரிய மண்டலத்துக்கு வெளியே கிட்டத்தட்ட ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உயிர் வாழ தகுதி இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

 செவ்வாய் உட்பட எட்டு கிரகங்கள் தான் உயிரினங்கள் உயிர் வாழ, வானிலை உட்பட  எல்லா வகையிலும் அருமையாக இருக்கும். அதில் மனிதர்கள் குடியேறலாம். மனிதர்களுக்கு ஏற்ற வகையில் செவ்வாய் உட்பட இந்த கிரகங்களில் இயற்கை வளங்கள், வசதிகள் இருக்கும். இவ்வாறு ஆன்ட்ரூ ரஷ்பி கூறினார்.
suran
* சூரியனின் காலம் இன்னும் 600 கோடி ஆண்டுகள்.
* சூரியனை வைத்து தான் மற்ற கிரகங்கள் உயிர் வாழுகின்றன. அதாவது, பல வகையிலும் உயிர் வாழும் தகுதிகளை படைத்துள்ளன.
* அப்படி பார்த்தால் செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்.
* மேலும், பூமிக்கு வெகு அருகாமையில் உள்ளதும் செவ்வாய் தான்.
* பூமி போலவே, வானிலை அருமையாக இருக்கும்; தண்ணீர் போன்ற வசதிகள் இருக்குமாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

புதன், 18 செப்டம்பர், 2013

"மண்ணில் புதைக்கப் படுகிறது."

மணற்கொள்ளையன் வைகுண்டராஜன்ஜெயா அரசு தாது மணற் கொள்ளை விவகாரத்தை கையாளும் விதம் மிக சூழ்ச்சி மிக்கதாய் -குற்றவாளிகளுக்கு பக்க பலமாய் இருக்கிறது.
லட்சம் கோடிகளில் மணற்கொள்ளை நடந்துள்ளது.விசாரணை குழுவும் மணற்கொள்ளை யை உறுதி செய்தே அறிக்கை அளித்துள்ளது.இதை 90%செய்த வைகுண்டராஜனை உள்ளே பி.ஆர்.பி.மாதிரி தள்ளாமல் வேறு இடங்களில் விசாரணை குழுவை ஆய்வு செய்ய சொல்லியும்-அதுவரை தாது மணற் சுரங்கங்களில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று மட்டுமே முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.இதில் இருந்தே மணற்கொள்ளை யை  அப்படி புதைமணலில் புதைத்து வைகுண்டராஜனை காப்பாற்றும் எண்ணம் பகிரங்கமாகியுள்ளது.
நில மோசடி வழக்குகளில் திமுகவினரை வெறும் ஆதாரமற்ற புகார்களை வாங்கிக்கொண்டே சிறையில் தள்ளியவர் கையும்-களவுமாக மாட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது கூட்டு களவாணித்தனத்தை தானே காட்டுகிறது.
"கார்னெட் என்பது கனசதுர உருவில் உள்ள உறுதியும் பளபளப்புமிக்க கனிமம்.  உறுதியான தரை அமைப்பதற்கும், கண்ணாடி – சலவைக்கல் முதலானவற்றைத் துண்டிப்பதற்கும், பளிங்குக் கற்களைப் பாலீஷ் செவதற்கும்,மோதிரம் முதலான அணிகலன்களில் முத்துக்களாகப் பதிக்கவும் கார்னெட் பயன்படுகிறது.
இல்மனைட் என்பது அரிதாகக் கிடைக்கும் கனிமம். பெயிண்ட், பிளாஸ்டிக் ஆலைகளிலும், உலைகளின் உள்கட்டமைப்பு, விளையாட்டு, மருந்து பொருட்கள் தயாரிப்பு ஆலைகளிலும் பயன்படுகின்றது.
ரூட்டைல் என்ற கனிமம் இலேசானதாக இருப்பினும் வைரத்தைவிட உறுதியானது. பெயிண்ட், பிளாஸ்டிக், அதிக உறுதி தேவைப்படும் கட்டுமானங்களில்வெல்டிங் செவதற்கான வெல்டிங் ராடுகள் தயாரிக்க, விண்வெளி உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் முதலானவற்றில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சிர்கான் என்பது கண்ணாடி போன்ற தோற்றம் கொண்ட உறுதியான கனிமம். வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் உறுதித் தன்மை காரணமாக பீங்கான் தரை ஓடுகள், பீங்கான் தட்டுகள் – கோப்பைகள் தயாரிப்பிலும், உருக்கு – வார்ப்பு தொழிற்சாலைகளிலும்  பயன்படுத்தப்படுகிறது."
suran
 தேரிக்காட்டு முதலைகள்
- அ.வ.பெல்லார்மின்

மணல் கொள்ளை நமக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசு நிர்வாகமும், மாவட்ட ஆட்சியர்களும், பல்வேறு அரசுத் துறைகளும் நிர்வாணப்பட்டு நிற்கின்றன.
லட்சம் கோடி அளவிற்கு கனிம மணலை ஒரு தனியார் நிறுவனம் அபகரிக்கும் வரை இந்த நிர்வாகங்கள் என்ன செய்து கொண் டிருந்தன என்ற கேள்வியை எழுப்பி, விடை தேடினால் நம்முடைய நிர்வாக அமைப்பின் லட்சணம் தெரியும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி கடற்கரைப் பகுதிகளை ஆக்டோப ஸாக வளைத்து, எங்கெல்லாம் மணல் இருக்கிறதோ அங்கெல்லாம் ராட்சச இயந்திரங்களோடு அலையும் விவிமின ரல்ஸ் எனும் தனியார் நிறுவனம் தனி ராஜாங்கமே நடத்தி வருகிறது. இந்த நிறு வனம் செய்யாத சட்ட விரோத செயல்கள் எதுவும் இல்லை. அரசு, தனியார் நிலங் களை வளைப்பது, தர மறுப்போரை அடித்து துவைப்பது, வெடிகுண்டுகளை வீசி கலைப்பது, ரவுடி கூட்டத்தை சேர்த்து கலவரங்களை ஏற்படுத்துவது, அச்சுறுத்தியும் கணிசமாக எலும்பு துண்டுகளை வாரி வீசியும், சுயமரியாதை யற்ற அரசியல்வாதிகளை, அதிகாரிகளை அடிமைகளாக்குவது, சாதி-மத உணர்வு களை பயன்படுத்துவது என ஆயக்கலை கள் அனைத்தையும் நடத்தி வரும் இந்த நிறுவனம் அசுர பலம் கொண்டது.
கண் அசைவுக்கு அனைத்து துறைகளையும் கட்டி இழுக்கும் இந்த சர்வ வல்லமை இந்த நிறுவனத்திற்கு எப்படி வந்தது. அது ஒரு அபூர்வ கதை.அபூர்வ மணல்களாக சொல்லப்படும் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட், சிலிமனைட், கார்னெட் மணல் வகைகள் இந்திய கடற்கரையில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் இல் மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோ சைட் ஆகியவை அணு ஆற்றலை உள்ளடக்கிய அதிமுக்கியமான மணல் வகைகள். இந்த அபூர்வப் பொருளை முத லில் கண்டுபிடித்து சொன்னவர் ஹெர்ஸ் கோம்பெர்க் என்ற ஜெர்மானியர்.

1900 காலக்கட்டத்தில் கன்னியாகுமரி, கேரள கடற்கரை பகுதிகளிலிருந்து ஏற்றுமதி யாகி போன கயிறு கட்டுகளோடு ஒட்டிக் கொண்டு போன பல நிற மணல் வகை களை ஆராய்ந்த அந்த வேதியியல் அறி ஞர் மோனோசைட் எனப்படும் அணு மூலப்பொருள் அதில் இருப்பதை கண்டு பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 1910ல் இம்மண லை பிரித்தெடுப்பதற்கான ஒரு ஆலை யை துவங்கினார்.
 1950 ஆகஸ்ட் 18ல் இந்திய அரசும், அன்றைய கேரள திருவாங்கூர் கொச்சி அரசும் இணைந்த கூட்டு ஆலையாக, இந்திய அரிமணல் ஆலை ஒன்று கேரள மாநிலம் ஆலுவாயில் துவங்கப்பட்டது. அணுசக்தி மூலப்பொருளான தோரியத் தை, மோனோசைட் மணலிலிருந்து பெரிய அளவில் பிரித்தெடுக்கும் ஆலை யாக அது அமைக்கப்பட்டது.
suran
1963ல் இந்த ஆலை முழுவதும் மத் திய அரசின் நிறுவனமாக்கப்பட்டு, பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள அணு சக்தி துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. தமிழ்நாட்டில் மணவாளக்குறிச்சி, கேரளாவில் சவரா, ஆலுவா, ஒரிஸாவில் பெர்காம்பூர் பகுதிகளில் ஆலைகள் துவங் கப்பட்டு மணல் வகைகளை பிரித்து, வகைப்படுத்தி ஏற்றுமதிக்கானவை களை ஏற்றுமதி செய்தும், பயன்படுத்த வேண்டியதை பயன்படுத்தியும் கோடி கோடியாக லாபமீட்டி இந்திய அரசாங்கத் தின் கஜானாவை நிறைத்தன இந்த ஆலைகள். மட்டுமின்றி, நேரடியாக, மறை முகமாக பல்லாயிரம் வேலை வாய்ப்பு களை உருவாக்கி அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வந்தன. அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஆலைகள் என்பதால், மாசுக்கட்டுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் அமலாக்கம், சுற்று வட்டார வளர்ச்சி திட் டங்கள் மணலை எடுத்த பகுதிகளில் கழிவு மணலை போட்டு நிரப்பி சமூக காடுகளை வளர்ப்பது என சமூக பொறுப்போடும், செயலாற்றி வருகின்றன.
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகளை வரைமுறை இல் லாமல், கண்மூடித்தனமாக பின்பற்றத் துவங்கிய மத்திய ஆட்சியாளர்கள் 1998 அக்டோபர் 6ல் ஒரு விபரீதமான, பொறுப் பற்ற கொள்கை முடிவை எடுத்தனர். அபூர்வ தாதுக்களையும், சுரங்கங்களை யும் சிலர் அபகரிப்பதற்கு ஏதுவாக, இந்த இயற்கை பொக்கிஷங்களை தனியாரும் கையாளலாம், அந்நிய நேரடி முதலீட்டை யும் அனுமதிக்கலாம் என முடிவெடுத் தார்கள். மோனோசைட் போன்ற அணு சக்தி மூலப்பொருள் தவறானவர்களின் கையில் போனால் உலகிற்கு அதனால் ஏற்படும் ஆபத்துக்களை கூட கணக்கிலெடுக் காமல் முடிவெடுத்தது மட்டுமின்றி தங்கள் கூட்டாளிகளுக்காக சட்டங் களையும், விதிமுறைகளையும் கூட வளைத்தார்கள். பாரத பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டி லுள்ள அணுசக்தி துறை 2006 ஜனவரி 18ம்தேதி ஒரு சட்டப்பூர்வமற்ற அறிவிக் கையை வெளியிட்டது.
S.G.61(E) என எண் கொண்ட இந்த அறிவிக்கை இரண்டே நாளில் அரசிதழி லும் வெளி யிட்டப் பட்டது. நாடாளுமன்றத்தின் ஒப் புதலின்றி, சுரங்கம் மற்றும் கனிமப் பொருட்களின் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் 1957ல் எந்த திருத்தமும், செய் யப்படாமலேயே கனிமங்கள் குறித்த, மறுவரையறையை செய்து தனியார் கம்பெனிகள் கொள்ளையடிக்க இதன் மூலம் வகை செய்யப்பட்டது. இது முற்றி லும் நாடாளுமன்ற அவமதிப்பு, ஆக்கிர மிப்பு நடவடிக்கையாகும். இந்த அறிவிக் கையை ரத்து செய்ய வேண்டும். நாடாளு மன்றத்தின் உரிமை மீது ஆக்கிரமிப்பு செய்தோரை தண்டிக்க வேண்டும் என நேரில் சென்று துறை தலைவர்களை, அன்றைய அமைச்சர்களை இடது சாரிகள் வலியுறுத்தினோம். என்றாலும் பாதாளம் வரை பாயும் பணமும் பொறுப் பான நாற்காலிகளில் இருந்த பொருத்த மற்ற நபர்களும் அவைகளை கண்டு கொள்ளவில்லை.
இப்படி கதவுகள் அகலத் திறக்கப் பட்டதும், வாய்ப்பை எதிர்பார்த்து காத் திருந்த முதலைகள் அசுர பாய்ச்சலில் கடற்கரையை ஆக்கிரமிக்க துவங்கின. குவாரி நிலங்களை பெறுவதில், அதில் தாதுவை எடுப்பதில் பல விதி முறைகள் உணடு. பல துறைகளின் அனுமதியும் வேண்டும். ஆனால் விவிஎம்-க்கு அவை ஒரு பொருட்டாக இருக்கவில்லை. தனது சாகசங்களால் அனைத்தையும் வளைத்து, அனைவரையும் கவிழ்த்து, வளைய மறுத்தவர்களை துரத்தியடித்து அனுமதிகளை பெற்றது.
 பண்டித நேரு சொன்ன நாட்டின் திருக்கோயிலாம் பொதுத்துறை ஆலைக்கு அனுமதிகள் கிடப்பில் கிடந்த போது விவிஎம் கோப்பு கள் வேகமாக நகர்ந்து அனுமதிகளைப் பெற்றது. அனுமதிக்கப்பட்ட நிலங்களுக் கும் அளவுகளுக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் கடற்கரைகள் தனியார் கம்பெனியால் மொட்டையடிக்கப்பட்டன.
தொலைபார்வையற்ற, பதவி சுகங் களை மட்டுமே அனுபவித்த ஐஆர்இ-ன் சில அதிகாரிகளும், உள்ளுக்குள்ளேயே இருந்து தனியார் கம்பெனிக்காக வேலை செய்த சில எட்டப்பன் வகை அதிகாரி களும் தேவையான நிலங்களை கையகப் படுத்தி, அரசு ஆலையின் சுரங்க இருப் பை ஏற்கனவே வலுப்படுத்த தவறியிருந் தார்கள்.
இந்த பலவீனத்தை பயன் படுத்திக் கொண்டு ஐஆர்இ ஆலையை ஒட்டிய நிலங்களைக் கூட ஆக்கிரமித்தது விவிஎம்.
suran
 ஒரு கட்டத்தில் “உனது நிலங் கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கிவிட்டன”. இருக்கும் இடமெல்லாம் எனது சுரங்கம் என ஐஆர்இ-யே கடலுக்குள் தள்ள முயற்சித்தது. தனது பணபலத்தை, அதிகார பலத்தை தவறான அதிகாரி களின் கூட்டை பயன்படுத்தி ஐஆர்இ-ன் தலைமையையே அச்சுறுத்தியது. என்ன வேடிக்கை பாருங்கள்… தனது நிலத்தில் உள்ள மணலை ஐஆர்இ-ன் தலைமை அதிகாரியும் மற்றும் அதிகாரி களும் திருடியதாக 03-01-2003 கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தது விவிஎம். அந்த நகைப்புக்குரிய புகாரின் மீது கருங்கல் காவல் நிலையம் அதி வேகமாக எப்ஐஆர் பதிவு செய்து குற்ற எண் 4-2003ன் படி பல பிரிவுகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
பெரும் முயற்சிகளுக்கு பின்னர் அந்த எப்ஐஆர் அரசால் திரும்பப் பெறப்பட்டது, என்றால் காவல்துறை எந்த அளவுக்கு அடிமையாகி கிடந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படி பொதுத்துறை நிறுவனத் தையே உண்டு இல்லை என்றாக்கி, சிதம் பரத்தின் நலிந்த ஆலைகள் பட்டியலில் தள்ளி, அடிமாட்டு விலைக்கு அதையும் வாங்கி விடலாம் என கனவு கண்டது வி.வி.எம். ஆனால் அதிர்ஷ்டவசமாக 2004-2009 ஆட்சி காலத்தில் மத்தியில் இடது சாரிகள் வலுவாக இருந்ததாலும், நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வசம் இருந்ததாலும் அது அன்று தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்டத்தின் ஒரே பொதுத்துறை ஆலை பாதுகாக்கப்பட்டது. மட்டுமன்றி ஆலை யை பலப்படுத்த புனரமைப்பு நிதி ரூபாய் 64 கோடி பெறப்பட்டு மத்திய இணை யமைச்சர் பிருதிவிராஜ்சவான் அவர் களால் 11-09-2006ல் புனரமைப்பு பணிக் கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. நாட்டின் நலனை விட நபர்களின் நலனே பெரிது எனக் கருதும் மத்திய ஆட்சி யாளர்கள் தற்போது அத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.
கடற்கரை பகுதி முழுவதும் இத் தாதுக்கள் இறைந்து கிடந்தாலும், கன்னி யாகுமரியின் மிடாலம் பகுதிகளில் அதன் தாது அடர்த்தி அதிகமாயிருந்தது.
இதை மோப்பம் பிடித்து விட்ட விவிஎம் அங்கே கடற்கரை நிலங்களை வாங்கி பிடித்தது. சிறு ஆலையும் அமைத்தது.
 இயல் பாகவே கடும் கடல் சீற்றமும் நில அரிப்பு களும் இருக்கும் இப்பகுதிகளில், இருக் கும் கரைகளையும் குடைந்து மணலை அள்ளி குவிக்க முயற்சியை துவங்கியது.
தங்கள் உயிரையும், வாழ்விடத்தையும் பாதுகாக்க முனைந்த மக்கள் இம்முயற் சியை எதித்தார்கள்.
எதிர்த்தவர்களை முறியடிக்க ஏராளமான வாகனங்களில் அடியாட்களையும், குண்டர்களையும் கொண்டு இறக்கி பலாத்காரமாக மண லை அள்ள முயற்சித்தபோது, மேற்படி கூலிப்படைகளுக்கும், பொதுமக்களுக் கும் இடையே ஒரு யுத்தமே நடந்து முடிந்தது.
ஓட்டுமொத்த கிராமங்களும் ஒன்றாக நின்று எதிர்த்ததால் விவிஎம் பின்வாங்கியது.
தோல்வி ஆவேசத்தில் காவல்துறையை பயன்படுத்தி அம்மக் களை பழிவாங்க துடித்தது. மேல் மிடாலம், கீழ்மிடாலம், குறும்பனை கிராம மக்கள் மீது அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் கருங்கல் காவல் நிலையத்தால் பதிவு செய்யப்பட்டன.
suran
ஆனால் இடதுசாரிகள் அம்மக்களோடு இணைந்து நின்றதால் அண்ணாச்சியின் முயற்சி வெற்றி பெற வில்லை.
நூறு விழுக்காடு கல்வியறிவும், போர்குணமும் மிக்க கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இப்படியெல்லாம் அண்ணாச்சி ஆட்டம் போட்டாரென்றால் மற்ற பகுதிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்?. புகுந்து விளையாடிவிட் டார்கள். வந்து கொண்டிருக்கும் புள்ளி விபரங்கள் வாயை பிளக்க வைக்கின்றன.
 லட்சம் கோடி வரை தாதுக்கள் கொள்ளை யிடப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் இல்மனைட் ரூ.11800, சிர்கான் ரூ.75000, ரூட்டைல் ரூ.80000, கார்னெட் ரூ.5600, மோனோசைட் ரூ.5லட்சம் என டன் னுக்கு விலை போகிறது.
இதில் மோனோ சைட் என்ற அணு மூலகத்தை தனியார் கையாளக் கூடாது, பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் மோனோசைட் மணலை அரசு துறை ஆலையிடம் தந்து விட வேண்டும் என விதி இருக்கிறது.
ஆனால் இன்றுவரை ஒரு பொடி மோனோசைட் மணலை கூட விவிஎம் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றால் ஆபத்து புரிகிறதா?
 ஆந்த அணு மூலகம் எங்கே போனது?
யாருக்கு போனது?
கண்காணிக்க வேண்டியவர்கள் எங்கே போனார்கள்?
 என்பதெல்லாம் அணு குண்டு கேள்விகள்.
இப்படியெல்லாம் ஏற்றுமதி செய்து தூத்துக்குடி துறை முகத்தில் பெரிய ஏற்றுமதியாளராகவும் வைகுண்டராஜன் விளங்கினார். இந்த பிரச்சனையில் இன்னொரு கோணமும் இருக்கிறது. விவிஎம் போன்ற மோசடி கம்பெனிகளுக்கு ஆஸ்தான ஆலோசகர்களாக, தொழில்நுட்ப, வியா பார உதவியாளர்களாக இருப்பவர்கள் ஐஆர்இ-ல் பணியாற்றி ஓய்வு பெற்ற சில நபர்கள்.

suran
 வாழ்நாள் முழுவதும் பொதுத் துறை நிறுவனமான ஐஆர்இ-ல் சம்பளம் பெற்று சுகவாழ்க்கை வாழ்ந்து விட்டு, தாதுக்களை கையாளுவது குறித்த அனைத்து பயிற்சிகளையும் அரசு சார்பில் பெற்று, அனைத்து தொழில்நுட்பங்களை யும், வியாபார ஏற்றுமதி ரகசியங்களையும் தெரிந்த இந்த அதிகாரிகள்; ஓய்வுக்கு பின்னர் (ஓய்வுக்கு முன்னரே இவர் களுக்கும் விவிஎம்-க்கும் உள்ள தொடர்பு கூட ஆராயப்பட வேண்டும்) விவிஎம்-மோடு சேர்ந்து, “உண்ட வீட்டுக்கு இரண் டகம் செய்பவர்களாக” மாறி சுய ஆதாயத் திற்காக ஆலையின் பலவீனம், தொழில் ரகசியங்களை, விலை விபரங்களை, வாடிக்கையாளர்கள் விபரங்களை எல் லாம் கொடுத்து பொதுத்துறை ஆலை யினை வீழ்த்தும் பாவச்செயலை செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் பொதுத் துறை ஆலையில் பணியிலிருக்கும் போதே, தாங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலமாக இது போன்ற தொழில் ரகசியங் களை பகிர்ந்து வருகின்றனர்.
இது மக் களுக்கும், நாட்டிற்கும் செய்யும் பெரும் துரோகமாகும். இப்படிப்பட்ட, காசுக்காக எதையும் செய்யும் நபர்களுக்கு வழங்கப் பட்ட சம்பளம், இதர சலுகைகள், தற் போது பெற்று வரும் சலுகைகள் எல்லா வற்றையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
                                                                                          கட்டுரையாளர் : நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தற்போது ஜெயா அரசு தூத்துக்குடியைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுக்க ‘தடை’ விதித்துள்ளது.

எனினும் துத்துக்குடி தவிர இதர மாவட்டங்களில் சிறப்புக் குழு ஆய்வு எடுக்கும் வரை தடை இருக்குமாம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் போட்ட இடைக்காலத் தடை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய் அந்த ஆலை தற்போது சுமூகமாக இயங்கி வருவது தெரிந்ததே.

மதுரை பிஆர்பி கிரானைட் ஊழலும் இத்தகைய தடை என்னும் நாடகத்தால் மறைக்கப்பட்டதை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வைகுண்டராஜன் கொள்ளை முழுவதும் அம்பலப்பட்ட பிறகு அவர் மீது தடை என்பது வேறு வழியின்றி செய்யப்படும் நாடகம்.

முக்கியமாக அதிமுகவின் தேர்தல் செலவு, ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற அளவில் அவரது முக்கியத்துவம் எவ்வாறு இருக்கும் என்பதை  அறியலாம்.!"
ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற, திறமையான, நேர்மையான நிர்வாகம் நடப்பதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் சித்திரம் எவ்வளவு மோசடியானது என்பதை கார்னெட் மணற்கொள்ளை விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டது.
வைகுண்டராஜனின் சூறையாடல்
வைகுண்டராஜன் கும்பலின் சூறையாடல் : இயற்கை அரணாக இருந்த மணற் குன்றுகளும், சவுக்கு மரங்களும் அழிக்கப்பட்டு தீவிரமாகி வரும் கடல் அரிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரை முழுவதையும் கையில் வைத்துக் கொண்டு கார்னெட் மணல் ஏற்றுமதி செய்யும் தொழிலில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் இருந்து வருகிறார், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன். ‘அம்மா’வின் ஆதரவோடு தொழில் நடத்திவரும் அவர், ஜெயா டி.வி.யின் பங்குதாரராக உள்ளதோடு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ‘அம்மா’வுக்குப் பெரிதும் உதவியாக நின்றதை அனைவரும் அறிவர். அப்பேர்ப்பட்ட கோடீசுவர வைகுண்டராஜனின் நிறுவனம், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டிச் சட்டவிரோதமாகத்  தாது மணலை அள்ளி ஏற்றுமதி செய்துள்ளதா என்று ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்தி வருகிறார் என்பது நாடறிந்த உண்மை. கடற்கரைப் பகுதியிலுள்ள செந்நிற மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் முதலான விலைமதிப்பற்ற அரிய கனிமங் கள் கிடைக்கின்றன. மணலிலிருந்து அவற்றைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் வைகுண்டராஜனின் தொழில். இந்திய சுரங்கக் கழகம் அனுமதி அளித்துள்ள 111 கார்னெட் மணல் குவாரிகளில் 96 அவருக்கும் அவரது பினாமிகளுக்கும் சோந்தமானது. மைய அரசால் அனுமதி தரப்பட்டுள்ள 44  இல்மனைட் குவாரிகள் அனைத்தும் அவருக்கே சொந்தமானது. மைய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம், வனத்துறை – எனப் பல்வேறு துறைகளின் விதிகள், கட்டுப்பாடுகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, கடற்கரையையும் அதையொட்டியுள்ள பகுதிகளையும்  தனது பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமித்து தாதுமணல் கொள்ளையை இக்கும்பல் நடத்தி வருகிறது.
தாது மணலிலுள்ள கனிமங்களைச் சேகரிக்கும், பிரிக்கும் நடவடிக்கைகளால் கதிரியக்கம் அதிகமாகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஏற்கெனவே குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அரசின் அருமணல் தொழிற்சாலைகளில் பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் இருந்த போதும், சுற்றுப்புற கிராமங்களில் ஏறத்தாழ 500 பேருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆனால் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல், விளைவுகளைப் பற்றிய அக்கறையும்  இல்லாமல், ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளனைப் போல வைகுண்டராஜன் கும்பல் இச்சூறையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது.
தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே அமைந்திருந்த மணல் குன்றுகள் இக்கும்பலின் சூறையாடலில் தரைமட்டமாகி விட்டன. இதனால் பல ஊர்களில் கடல் நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளால் நடப்பட்ட ஆயிரமாயிரம் சவுக்கு மரங்களும், இயற்கையின் கொடையாகக் கருதப்படும் கடலோர அடையாளச் சின்னங்களாக நின்றிருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. கடலோர மணலிலிருந்து தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்த பிறகு, கழிவு நீரையும் மணலையும் அதே பகுதியில் கொட்டுவதால், பல இடங்களில் கடல் நீரின் நிறமே சிவப்பாக மாறி விட்டது. கடலையொட்டி அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது.
கழிவுகளால் நாசமான கடலோரம்
தாது மணலிலிருந்து கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் வெளியேற்றப்படும் கழிவுகளால் நாசமாக்கப்பட்ட கடலோரப் பகுதி
தான் சார்ந்துள்ள நாடார் சாதியினரைச் சமூக அடித்தளமாகப் பயன்படுத்திக் கொண்டும், எல்லா ஊர்களிலும் பிழைப்புவாதிகளைக் கையாட்களாகக் கொண்டும் வைகுண்டராஜன் தனது மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். இச்சூறையாடலை யாராவது எதிர்த்தால் அடுத்த நிமிடமே வைகுண்டராஜனின் அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குவதோடு, வீடுகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவதும் நடந்துள்ளன. இதனால் உயிருக்கு அஞ்சி பல குடும்பங்கள் ஊரை விட்டே ஓடி விட்டன. பண பலம், சாதிய பலம், அதிகார பலத்தைக் கொண்டு சூறையாடலை நடத்தி வந்த கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி. கும்பலைப் போலவே,  அதையும் விஞ்சும் வகையில் தாது மணற் கொள்ளையன்  வைகுண்டராஜன் கும்பலின் ஆட்சி கேள்வி முறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தனி மாவட்டமாகப் பிரிக்கப்படாமல் நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடியும் இருந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனுக்குப் போட்டியாக கார்னெட் மணல் அள்ளும் தொழிலில் உள்ள தயா தேவதாஸ் என்பவரது நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். வைகுண்டராஜனின் கொள்ளைக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதைப் பற்றியும், சட்டவிரோதமாக அள்ளப்பட்டுள்ள கனிம வளமிக்க மணலின் மதிப்பு உத்தேசமாக ரூ. 96,120 கோடிகளாக இருக்கும் என்றும் கடந்த ஜனவரி 2013-ல் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தொழில் போட்டியின் காரணமாக வைகுண்டராஜனின் கொள்ளையையும் மோசடிகளையும் அவர் அம்பலப்படுத்தியுள்ள போதிலும், அவரது குற்றச்சாட்டுகள் மறுக்க முடியாதவை. மேலும், சமூக ஆர்வலர்களும் இப்பகுதிவாழ் மீனவர்களும் வைகுண்டராஜனின் சூறையாடலையும் அடாவடிகளையும் பற்றி அரசுக்குப் பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.
இத்தகைய புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டும் நோக்கத்தில் கண்துடைப்பு விசாரணை, ஆய்வு  நடத்துவதென்பது வழக்கமான அதிகார வர்க்கச் சடங்கு. அதன்படியே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஸ் குமார் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேம்பார் பகுதியில் ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்பியதோடு,  அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்த கணக்கீட்டிற்கு உத்தரவிட்டதும் அடுத்த நாளே அவர் பணிமாற்றம் செயப்பட்டுள்ளார்.
மணற்கொள்ளையால் வெடித்த நிலம்
தாது மணற்கொள்ளையால் நாசமாகி வெடித்துக் கிடக்கும் நிலம்
மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றப்பட்ட விவகாரம், தனது ஆட்சியின் மீதான அதிருப்தியாக மாறிவிடாதிருக்க,  தாது மணற்கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்துத் தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொள்கிறது ஜெயா கும்பல். ஆனால், வைகுண்டராஜனுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்துக் கொள்ளையடிக்கக் கற்றுக் கொடுத்தவர்களே இத்தகைய அதிகார வர்க்கக் கூட்டம்தான்.  கடந்த பல ஆண்டுகளாக இந்த ஊழல் கொள்ளையின் பங்காளிகளாக இருந்த அதிகார வர்க்கத்தைக் கொண்டே இப்போது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப் போவதாக நாடகமாடுகிறது ஜெயா கும்பல். ஜெயலலிதா அமைத்துள்ள அதிகாரிகளின் சிறப்புக் குழுவைப் பற்றி எழுதிய கருணாநிதி, ”அந்தக் குழுவுக்குத் தலைவராக வைகுண்டராஜன் என்பவரை நியமிக்கலாம் என்று நம்முடைய ஆபீஸ் பையன் சிபாரிசு செய்கிறான்” என்று எள்ளி நகையாடுகிறார். இருப்பினும், ”ஜெயா கண் சிவந்தார், அ.தி.மு.க.வினர் உடந்தையாக இருப்பதை அறிந்ததும் அதிர்ந்தார்” என்று ஏதோ ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் தாது மணற்கொள்ளை நடந்திருப்பதைப் போலவும், அவர் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதைப் போலவும் பார்ப்பன ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன.
தனியார்மயம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே அரசிடம் குறிப்பிட்ட இடத்தில் தாதுமணல் அள்ள உரிமம் பெற்றுக் கொண்டு, அதைக் காட்டியே வைகுண்டராஜனின் நிறுவனம் பல இடங்களில் சட்டவிரோதமாகத் தாதுமணலைச் சூறையாடி வந்தது. மறுபுறம், 2002-ஆம் ஆண்டிலேயே அன்றைய ஜெயா அரசாங்கத்துக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.
அதன்படி  சாத்தான்குளம், திசையன்விளை முதலான செந்நிற மணல் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என்பதற்கான சோதனைகளை செய்து முடித்திருந்த டாடா நிறுவனம், தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலைப் பிரித்தெடுத்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாரித்து, அதிலிருந்து டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஆலை தொடங்குவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருந்தது.
 ஆண்டுக்கு 2 லட்சம் டன் இல்மனைட் தாதுவைப் பிரித்து 50 ஆயிரம் டன் தாதுவை டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுத்திவிட்டு, மீதி 1.5 லட்சம் டன் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டாடா தீர்மானித்தது.
ஆனால், ஜெயா கும்பலுக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே திரைமறைவு பேரங்களில் உடன்பாடு ஏற்படாததால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
suran
 நாட்டின் அரிய கனிமங்கள் டாடா நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்வதைத் தடுக்க இத்திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவித்தார், அப்போதைய அமைச்சரான நயினார் நாகேந்திரன். வைகுண்டராஜன் கும்பலோ வழக்கம்போலவே தனது சூறையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
பின்னர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் டாடாவுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் 2007 ஜூன் மாதத்தில் போடப்பட்டது. இதன்படி, தாது மணல் நிறைந்த 10,500 ஏக்கர் நிலத்தை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்துக்கு வழங்குவதென்றும், நிலம் வழங்கியவர்களுக்கு டாடாவின் டைட்டானியம் ஆலையில் வேலை கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கெதிராக, தென்மாவட்ட கடலோரப் பகுதிவாழ் மக்களின் விவசாய நிலங்களைப் பறித்து டாடாவுக்குத் தாரை வார்க்கும் திட்டம்தான் இது என்று ஜெயா கும்பலும், அதன் கூட்டணிக் கட்சிகளும், வைகுண்டராஜன் வகையறாக்களும் போராட்டங்களை நடத்தத் தொடங்கின. இதனால், மக்களின் கருத்தறிந்த பின்னரே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று தி.மு.க. அரசு பின்வாங்கியது.
டாடா நிறுவனமும் இத்திட்டத்திலிருந்து விலகிக் கொண்டது.
 வைகுண்டராஜன் கும்பலோ கேள்வி முறையின்றி சூறையாடலைத் தொடர்ந்தது. ”கார்னெட் கனிமத்தைத் திருட்டுத்தனமாக எடுத்து, சட்டவிரோதமாக நாட்டு நலனுக்கு எதிராகக் கடத்தி விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் ஒரு‘தாதா’வுடன் ஜெயலலிதா செய்து கொண்ட ஒப்பந்தமே, இத்திட்டத்தை ஜெயலலிதா எதிர்ப்பதற்குக் காரணம்” என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி.
suran
ஆனாலும் அந்த தாதாவைக் கைது செய்து தண்டிக்கவோ, தாது மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்தவோ அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வளவுக்கும் பின்னர், கார்னெட் மணல் கொள்ளை பற்றி இப்போதுதான் தெரிய வந்துள்ளதைப் போல ஜெயா அரசு ஆய்வுக் குழுவை அமைத்து சோதனை நடத்துவதே அயோக்கியத்தனமானது.
இன்று நேற்றல்ல, பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இப்பகற்கொள்ளை பற்றி பல்வேறு தரப்பினரும் அரசிடம் முறையிட்டுள்ள போதிலும்,  தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நிறுவனங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கும் போது, வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு 72 நாட்களில் அனுமதி தரப்பட்டுள்ள முறைகேட்டையும், அந்நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும்  அம்பலப்படுத்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனை ”மணல் மாஃபியா” என்று வெளிப்படையாகச் சாடுவதோடு, அவரது அரசியல் சார்புதான் அவரைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார். 
பாபா அணு ஆராச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் சி.எஸ்.பி. அய்யர் என்பவர், ”இந்திய கனிமவளக் கழகம் மற்றும் அணுசக்தித் துறை உயரதிகாரிகள் இத்தகைய தனியார் நிறுவனங்களின் ஆலோசகர்களாக இருப்பதோடு, அரசாங்கம் தரும் சம்பளத்தைவிடப் பத்து மடங்கு அதிகமான சம்பளத்தை இந்நிறுவனங்களிடமிருந்து பெறுகிறார்கள்” என்கிறார்.
இப்பூமியிலுள்ள கனிம வளங்கள் அரசுக்கு – அதாவது சமுதாயத்துக்குச் சொந்தமானது என்பது நேற்று வரை இருந்த பொது நியதி. ஆனால் அரிய வகைக் கனிமங்கள் குறித்த விதிகள், தனியார்மயமாக்கலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன. கனிம வளமிக்க பகுதிகளை விலைக்கு வாங்கியோ, குத்தகைக்கு எடுத்தோ கார்னெட் மணலைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்வது தனியார்மயத்தின் கீழ் சட்டபூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. ஏற்கெனவே சட்டவிரோதமாக தாது மணற்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வைகுண்ட ராஜன் கும்பல், இதைச் சாதகமாக்கிக் கொண்டு இச்சூறையாடலைப் பல மடங்கு விரிவாக்கியுள்ளதோடு, திடீர் பணக்கார கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்து கொட்டமடிக்கிறது.
வைகுண்டராஜனின்  நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி தாதுமணலை அள்ளியுள்ளதா?
அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமாக அள்ளப்பட்டுள்ளதா? முறைகேடுகள் நடந்துள்ளதா – என்பதுதான் இப்போது நடக்கும் ஆய்வும் விசாரணையும். அனுமதி பெறாத இடத்தில் நடந்துள்ள சூறையாடல்களைப் பற்றியோ, சட்டவிரோத கடத்தல் பற்றியோ எவ்வித விசாரணையுமில்லை.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்தான் வைகுண்டராஜன் கும்பல் மிகப் பெரிய சூறையாடலை நடத்தியுள்ளது. ஆனாலும் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நடந்துவரும் சூறையாடலைப் பற்றி எந்த விசாரணையும் இல்லை.
இருப்பினும், தூத்துக்குடியில் இந்த சிறப்பு ஆய்வுக் குழு கறாராக விசாரணை நடத்துவதாகவும், பல பகுதிகளில் திடீரென ஆய்வு நடத்துவதாகவும் ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. கார்னெட் மணல் உள்ளிட்டு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டின் பொதுச் சோத்துக்களை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற மையமான கேள்வியை விட்டுவிட்டு, அதில் அம்பலமாகும் ஊழல் – முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டியும், அரசு நடவடிக்கை எடுப்பதாகப் பரபரப்பூட்டியும் மக்களைத் திசை திருப்பும் பணியைத்தான் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் எனும் மாஃபியா கும்பல் இரும்புக் கனிமங்களைச் சூறையாடியதைப் போலவே, மதுரையில் மலைக்கள்ளன் பி.ஆர். பி. கும்பல் கிரானைட் கொள்ளையை நடத்தியதைப் போலவே, மண்ணாதி மன்னன் வைகுண்டராஜன் கும்பல் தாதுமணற் கொள்ளையை நடத்தி வந்துள்ளது. பொதுச் சொத்தான கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் இத்தகைய மாஃபியாக்களின் – கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இத்தகைய ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.
தனியார்மயம்  என்பதே ஊழல்மயம்தான். ஊழலற்ற தனியார்மயம் என்பதே இல்லை. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டு போராடுவதன் மூலமே வைகுண்டராஜன் வகையறாக்களையும், இக்கிரிமினல் மாஃபியாக்களின் கூட்டாளிகளான ஆட்சியாளர்களையும் தண்டிக்க முடியும்; தனியார்மயக் கொள்ளையைத் தடுத்து நிறுத்திடவும் முடியும்.
                                                                                                                                             - -வினவு                                                                                                                             - மனோகரன். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
\

வியாழன், 12 செப்டம்பர், 2013

முடிஞ்ச வேலைக்கு டெண்டர்.

suran
கேள்வி :- செய்து முடிக்கப்பட்ட பணிக்கு டெண்டர் கோரும் அதிசயம் எங்கேயாவது நடந்திருக்கிறதா?

பதில் :- ஏன், இந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே நடைபெற்றதாக என் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அது தவறு என்றால், அரசு மறுக்கட்டும், ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
கடந்த மார்ச் திங்கள் 9ஆம் தேதியன்று தஞ்சையிலே மிகப் பெரிய விழா ஒன்றை
முதல் அமைச்சர் காவேரித் தண்ணீரைப் பெற்றுத் தந்து விட்டார் என்பதற்காக ஏற்பாடு செய்து பாராட்டோ பாராட்டு என்று பாராட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நிகழ்ச்சியின்போது தஞ்சை நகராட்சி சார்பில் மட்டும் முதல்வர் வருகைக்காக ஒன்றரைக் கோடி ரூபாய் அளவிற்குச் செலவு செய்திருக்கிறார்கள். அப்படி என்ன செலவு? எதற்கான செலவு?
ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்! வாகன நிறுத்துமிடம் சுத்தம் செய்ய 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். மைதானத்தில் வாகன நிறுத்த இடத்தைச் சுத்தம் செய்ய 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். மணிமண்டபம் சாலையைச் சுத்தம் செய்ய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். பேருந்து வளாகத் தடுப்பு வேலிக்கு வர்ணம் பூச 17 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். ஆணையர் அறைக்கு நாற்காலி வாங்க 70 ஆயிரம் ரூபாய். ஒருவேளை வெள்ளி நாற்காலியாக இருக்குமோ?
இதுபோன்ற பணிகளை, நகராட்சி சட்டப் பிரிவு 15ன் படி மன்றத்தின் அனுமதியின்றி செய்து முடிக்க நகராட்சி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. ஆனால் தஞ்சையில் நகராட்சி ஆணையர் இதனைத் தவிர்த்து விட்டார். முதலமைச்சர் தஞ்சைக்கு வந்தது 9-3-2013. அதற்காக
30 லட்சம் ரூபாயில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தார்கள். இதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை 5-4-2013 அன்றுதான் பெற்றிருக்கிறார்கள். ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு 9ஆம் தேதி முதலமைச்சரும் வந்து சென்ற பிறகு 26 நாட்கள் கழித்துத்தான் டெண்டர் பெற்று முடிவு செய்திருக் கிறார்கள். பணியை ஒருவரிடம் ஒப்படைத்து பணி முடிந்த பிறகு, அந்தப் பணிக்காக டெண்டர் கோரும் அதிசயம் அ.தி.மு.க. ஆட்சியிலேதான் நடந்துள்ளது.
இதிலே இன்னொரு வேடிக்கை. 9ஆம் தேதி முதலமைச்சர் வருவதற்கு முன்பு யார் ஹெலி காப்டர் தளம் அமைத்தாரோ, அதே நபர்தான் குறைந்த தொகையைக் குறிப்பிட்டதன் காரண மாக டெண்டர் பெற்றிருக்கிறார். மற்றவரைக் காட்டிலும், இவர் குறைந்த தொகையை எவ்வாறு ஒப்பந்தப் புள்ளியிலே குறிப்பிட்டார்? வேறு ஒப்பந்தக்காரர் ஒருவர், உண்மையாக ஹெலி காப்டர் தளம் அமைத்தவரைவிட மேலும் குறைவாகத் தொகை குறிப்பிட்டிருந்தால், அப்போது என்ன செய்திருப்பார்கள்?
அடுத்து இந்த முடிவு நகர்மன்றக் கூட்டத்திலே நிர்வாக அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. எப்போது தெரியுமா?
 மே 28ஆம் தேதி.
 முடிக்கப் பட்ட ஒரு பணிக்கான மதிப்பீட்டுத் தொகைக்கு நிர்வாக அனுமதி 79 நாட்களுக்குப் பிறகு கோருவது என்பதே சட்ட விதிகளுக்குப் புறம்பான தாகும். 
                                                                                                             -கலைஞர் கருணாநிதி
 -------------------------------------------------------------------------ஆப்பிள் வாங்க அலை.

ஆப்பிள் புதிய வகை 5 சி,5எஸ் வகை கைப்பேசிகள் வாங்கிட ஜப்பானில் இப்போதே ஆப்பிள் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோ துகிறதாம்.
suran


செப்டம்பர் 21ல் தான் விற்பனைக்கு வருகிறது.அதற்குள் கூட்டம் பதிவு செய்ய அலையடிக்கிறதாம்.
2013 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் என்று இதனைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% கூடுதலாகும்.
 முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.3% கூடுதலாக விற்பனை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.
 ஸ்மார்ட் போன்கள் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறி உள்ளது. 
2017 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மொபைல் போன்கள் என்றால், அவை ஸ்மார்ட் போன்களாக மட்டுமே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கும். 
2013ல் இதுவரை விற்பனையான ஸ்மார்ட் போன்களில், 75.3% போன்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் சென்றுள்ளன.
 இவற்றில் முதல் இடம் பிடித்துள்ள நிறுவனம் சாம்சங். 
இதே காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்., 16.9% இடத்தைப் பிடித்துள்ளன. விண்டோஸ் 3.9%, பிளாக்பெரி 2.7% பங்கினைக் கொண்டுள்ளன.
 மைக்ரோசாப்ட், நோக்கியாவின் சாதனங்கள் பிரிவினை முழுமை யாக காப்புரிமை உட்பட வாங்கியுள்ளதால், அடுத்த ஆண்டில், இந்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. 
Click Here

----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
டோபி=புடின்?
--------------------------------
ஹாரி பாட்டர் படங்களில் வரும் டோபி என்ற கதாபாத்திரத்தை வேண்டுமென்றே ரஷ்ய அதிபர் புடினை போல் உருவாக்கியுள்ளதாக ரஷ்யா புகார் தெரிவித்துள்ளது.
ஹாரி பாட்டர் படங்களில் டோபி என்ற அசிங்கமான ஒரு மாயஜால கதாபாத்திரம் இருக்கிறது. ஹாரி பாட்டருக்கு உதவும் இந்த கதாபாத்திரத்தின் தோற்றம், ரஷ்ய அதிபர் புடின் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது.
suran
புடினை கேவலப்படுத்துவதற்காகவே இதுபோல் செய்யப்பட்டுள்ளது. வழுக்கைத் தலை, பெரிய காதுகள், கூர்மையான மூக்கு, முட்டைக் கண்கள் என அனைத்துமே புடினை போலவே இருக்கிறது. இதற்காக ஹாரி பாட்டர் படத்தை தயாரித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப் போவதாக ரஷ்ய வக்கீல்கள் தெரிவித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ஜே.கே. ரவ்லிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவல்கள், உலகம் முழுவதும் 67 மொழிகளில் வெளிவந்துள்ளன. இதுவரை 45 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளன. நாவல்கள் அனைத்தும் திரைப்படமாக எடுக்கப்பட்டு கோடிகளை குவித்தன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரியண்ணனின் சின்னத்தனம்.
---------------------------------------------------------------------
 வெளிநாடுகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, ரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும், அதன் உளவு அமைப்பு, பிரேசில் நாட்டின் எரிவாயு கம்பெனிகளின் கம்ப்யூட்டர்களில் இருந்த ரகசிய ஆவணங்களை ‘திருடியிருப்பது’ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
   அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, வெளிநாடுகளுடன் ‘சைபர்’ போர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

பல ரகசிய ஆவணங்களை, அந்தந்த அரசுகளின் சீக்ரட் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ‘திருடுகிறது’ என்று எட்வர்ட் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.  அமெரிக்க உளவு ஏஜன்சியின் முன்னாள் அதிகாரியான இவர் இப்படி ரகசிய தகவல்களை வெளியிட்டதால், அவரை நாட்டை விட்டு துரத்தியது மட்டுமின்றி, அவரை கைது செய்ய துடித்தது அமெரிக்கா. ஆனால், அவர் பல நாடுகளில் அலைந்து கடைசியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.
suran
  அவர் இப்போது மீண்டும் ஒரு ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார். பிரேசில் நாட்டின் எண்ணெய் வளங்களை சாமர்த்தியமாக சுரண்டும் வகையில், கம்பெனிகள் ஏலம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை அந்த நாட்டு அரசின் ரகசிய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, அமெரிக்கா எடுத்து விட்டதாக ஸ்னோடென் கூறியிருந்தார்.

  லண்டனை சேர்ந்த குளோப் டிவியில் கடந்த ஞாயிறன்று,  கார்டியன் பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டு இந்த ரகசிய தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் பிரதமர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரின் அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பாக பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி,  ஏலம் தொடர்பான  ஆவணங்களை அமெரிக்க ஏஜென்சி ‘திருடி’யிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

   பிரேசில் நாடு, அமெரிக்காவுக்கு பிடிக்காத  நாடு. எண்ணெய் வளம் மிக்க நாடு. இதன் லிப்ரா எண்ணெய் வயலில் 1200 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் 2 ஆண்டுக்கான  எல்லா எண்ணெய் தேவைகளுக்கும் இது போதுமானது. இதுபோல, பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஏலம் விடப்பட உள்ளது. அதை தனக்கு வேண்டியவர்கள் கையில் பெற்றுத்தருவதே அமெரிக்க உளவு  அமைப்பின் எண்ணம். இதனால் தான் முக்கிய ஆவணங்களை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி  எடுத்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது.

பிரேசிலின் மொத்த எண்ணெய் வளம் 10 ஆயிரம் கோடி பேரல்கள். மேலும் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தன் வசம் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்று பிரேசில் குற்றம்சாட்டுகிறது. அதற்காக, தன் உளவு வேலை மூலம், பிரேசிலில் ஏலம் எடுக்க சிலரை தயார் செய்கிறது  என்றும் அது சந்தேகிக்கிறது.
suran
இது தொடர்பாக பிரேசில் பிரதமர் லுலா கூறுகையில், அமெரிக்கா  மறைமுக ‘சைபர் போர்’ துவங்கியுள்ளது. பிரேசில் மட்டுமின்றி, சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படி ‘சைபர்’ போரை துவங்கி உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு ஆவணங்களும் ரகசியமானவை என்று கூற முடியாத நிலை உள்ளது. இதை உடனே கூட்டாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
 அமெரிக்க உளவு  அமைப்பு மட்டும் இந்த வேலையில் இறங்கவில்லை. அதற்கு முழு துணை நிற்பது, பிரிட்டனின் ஜிசிஎச்கியூ என்ற உளவு அமைப்பு.
 அமெக்காவின் இந்த சைபர் உளவு வேலையில் இப்போது இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கு பெயர் பறக்கும் பன்றி.
இன்னொன்றின் பெயர் மவுன நாய்க்குட்டி.
இந்த திட்டங்களில் ஈடுபட சில தனியார் நிறுவனங்களையும் அமெரிக்க உளவு அமைப்பு நியமித்துள்ளது.

இந்த தனியார் நிறுவனங்களுக்கு ‘சைபர்’ தில்லுமுல்லுகளில் இறங்க முழு அதிகாரம் அளித்துள்ளது. எந்த நாட்டின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளில் ஊடுருவி தகவல்களை எடுக்க வேண்டும், எந்த தகவல்கள் வேண்டும் என்று அமெரிக்க அமைப்பு சொல்லி விடும். அவற்றை இந்த தனியார் நிறுவனங்கள் சேகரித்து தரும்.

  இந்த இரு திட்டங்கள் மூலம், 212 நாடுகளின் 10,000 வங்கிகளின் ரகசிய ஆவணங்களை சேகரிப்பது முக்கிய நடவடிக்கை. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் தகவல்கள் போன்றவையும் இதில் அடங்கும். இந்த நாடுகளில் இந்தியாவும் உண்டு. தனிநபர் ஏடிஎம் கணக்கு வழக்குகளும் கூட இந்த ரகசிய நடவடிக்கை மூலம் அமெரிக்க உளவு அமைப்புக்கு போகிறது என்கிறார் கிரீன்வால்டு.
suran
* அமெரிக்காவுக்கு ‘எண்ணெய் பசி’ உண்டு. அதனால், பல நாட்டு  எண்ணெய் வளங்களை தன் வசம் வைக்கவே அதில் உளவு வேலை பார்க்கிறது.
* அடுத்து, நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் இமெயில்கள், ரகசிய கணக்குகள். அதிலும் உளவு பார்க்கிறது.
* இன்னொரு பக்கம், நிதி நடவடிக்கைகளை முடக்கும் உளவு வேலை. பங்கு சந்தை, நிதி நடவடிக்கைகள் தொடர்பான எல்லாவற்றையும் கண்காணிக்கிறது.
* ஏடிஎம்களில் பணம் புழக்கம் போன்றவற்றையும் அமெரிக்க உளவு ஏஜென்சி கண்காணிக்கிறது.
* எண்ணெய் வளம், நிதி வளம் எல்லாவற்றிலும் தன் ‘கை’ இருந்தால் எந்த நாடும் தைரியமாக எதிர்க்காது  என்பதற்காகவே இப்படி ‘சைபர்’ போரில் இறங்கியிருக்கிறது  என்பது ஸ்னோடென் குற்றச்சாட்டு.
* பிரேசிலில் உளவு பார்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், அமெரிக்கா மவுனம் சாதிக்கிறது. ஐநா தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
-

வியாழன், 5 செப்டம்பர், 2013

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு- நிரந்தரத் தீர்வு!

15 நாட்களுக்கு ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு பெட்ரோல்-டீஸல் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் நெருப்பு வைக்கிறது.
மீண்டும் சமையல் கேஸ் விலை ரூ. 50 கூடப் போகிறதாம்.
இந்திய ருபாய் மதிப்பு இழந்து ஒரு டாலருக்கு ரூ. 68 ஆனதால் இப்போது விலை ஏற்றப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ. 80 ஐ தொட்டுவிடும் நிலை உள்ளது. இப்படி சந்தையின் விருப்பத்திற்கு பெட்ரோல் விலைகளை விட்டுவிடுகிற முடிவை எடுத்தது பி.ஜே.பி தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

suran
எனவே மோடிதான் மாற்று என்று சொல்லிக் கொள் ளும் அவர்களின் கொள்கை களும் இந்த விலை உயர்வைத் தீவிரமாக்கும் கொள்கைதான் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம் இந்த இரண்டு கட்சி களும் கடைப்பிடிக்கும் தாராள வாத பொருளாதாரப்பாதை ஒன்றுதான்.இதற்கு மாற்றாக 2013 ஜூலை 1 ல் இடதுசாரிகள் தில்லியில் நிறைவேற்றிய 11 அம்ச மாற்றுக் கொள்கை ஆவணத்தில்தான் நிரந்தரத் தீர்வு உள்ளது. அதில் இரண் டாவது அம்சமாக “வளர்ச் சிக்கு சுயசார்புப் பாதை, சர்வ தேச நிதிமூலதனப் பாய்ச்ச லுக்கு கடுமையான கட்டுப் பாடுகள், சுரங்கம் மற்றும் இயற்கை எண்ணெய் வளங் களை தேசியமயமாக்குவது, திட்டமிட்ட சமச்சீரான வளர்ச்சி” எனக் கூறப்பட்டுள்ளது.
 பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் புதையலை எடுத்து வைத்துக் கொண்டால் ஏழை விவசாயிக்கு சிறைத் தண்டனை கொடுக்கப்படு கிறது.
ஆனால் பூமிக்கு அடி யில் இருந்து கிடைக்கும் பெட் ரோல், டீசல், சமையல் எரி வாயுவை அரசாங்க அனுமதி யோடு அபகரித்து கொள்ளை யடிக்கும் பெரு முதலாளிக்கோ உச்சபட்ச இசட்+ பிளஸ் பாது காப்பு கொடுக்கப்படுகிறது.இடதுசாரிகளின் மாற்றுப் பாதையில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய், சுத்திகரிப் புத் தொழிலை தேசிய மய மாக்குவதுதான் உடனடி, நிரந் தரத்தீர்வு என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை தேசத்தின் சொத்து என்று கருதவேண்டும். மக்கள் சொத்து மக்களுக்கே என்ற கோட்பாட்டின்படி அவற்றை அரசாங்கமே உற்பத்தி செய்து விநியோகம் செய்தால் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 20க்கு விற்க முடியும். ஒரு சிலிண்டர் சமையல் எரி வாயுவை ரூ. 200க்கு விற்க முடியும். உதா ரணத்திற்கு பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரியை பயன் படுத்தி நெய்வேலியில் அரசாங் கமே மின்சாரம் உற்பத்தி செய் வதால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2.50க்கு இப்போது கூட விற்கப்படுகிறது. ஆனால் இதே உற்பத்தியை தனியா ருக்கு விடுவதால் ஒரு யூனிட் மின்சாரம் விலை ரூ. 8 லிருந்து 10 வரை விற்கப்படுகிறது.
நான்கு மடங்கு விலை அதி கம்.
suran
 ஐந்து வருடம் முன்பே ஈரான் நாட்டு அரசாங்கம் கச்சா எண்ணெய்யை மிகக் குறைந்த விலையில் ரூபாய் மதிப் பிலேயே விற்க வந்ததை ஏற் றுக் கொண்டிருந்தால் இன்று பெட்ரோல் இறக்குமதிக்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவ சியம் வந்திருக்காது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிக மாக ஏற்பட்டு நெருக்கடியும் வந்திருக்காது.
ரூபாய் மதிப்பும் இவ்வளவு வீழ்ச்சி அடைந் திருக்காது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர் பந்தங்களுக்கு இந்திய அர சாங்கம் அடிபணிவதால் ஏற் பட்ட நெருக்கடி இது என்பதை மறந்துவிடக் கூடாது.
வெனிசுலா அனுபவம் : இதற்கு மாற்றாக தென் அமெரிக்கா கண்டத்தில் வெனிசுலாவில் மறைந்த தலைவர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் அமெரிக்க பெட் ரோலிய கம்பெனியை அந்த நாட்டில் தேசியமயமாக்கினார்.
பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கை வளங்களை, கனிமப் பொருட்களை எல்லாம் தேசத் தின் சொத்து என்று அறிவித் தார். அப்படிச் செய்வதால் வரும் வருமானம் முழுவதை யும் அந்நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரத்திற்கு செல விட்டு மாற்றுப்பாதையை உரு வாக்கினார்.
வெனிசுலாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை சாதாரண ஏழை மக்கள் வாங்கக் கூடிய மலி வான விலையில் விற்க வழி வகுத்தார். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 10 தான்.எனவே,தான் பெட்ரோலிய தொழிலை அரசாங்கமே கையகப் படுத்தி முழுமையாக மக்களுக்கு எனத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்த இயற்கை வளம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான ரத்த நாளங்களாகும்.
எனவேதான் இடதுசாரிகள் பெட்ரோல் மக்க ளின் சொத்து, மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும், (அம்பானிக்கு அல்ல) எனக் கூறுகிறார்கள். இதற்காக தொழிலாளர் வர்க்கத்திடம், நடுத்தர வர்க்கத்திடம் இந்த 11 அம்ச மாற்றுக் கொள்கைகளை நோய்க்கான மாமருந்து.  இதுவே நிரந்தரத் தீர்வுக்கான வழியாகும்.

                                                                                                            -ஆர்,ராஜேந்திரன் [இன்சூரன்ஸ் ], தென் சென்னை 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“இந் தியாவின் ரூபாய் நெருக்கடி” 
சமாளிப்பது எப்படி?
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட நெருக் கடிக்கு அமெரிக்காவின் பணக்கொள்கையை மட் டும் குறை கூறுவது பொருத் தமற்றது.
இந்த நெருக்கடி வெகுகாலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.
விவசா யம் மற்றும் உற்பத்தித் துறை யில் வளர்ச்சியை உத்தர வாதம் செய்யத் தவறியதி லிருந்தே இந்த நெருக்கடி துவங்கிவிட்டது.
suran

1991ல் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகிய கொள்கைகள் அறி முகப்படுத்தப்பட்டதி லிருந்தே இப்போது ஏற்பட் டுள்ள நோயின் அறிகுறி துவங்கிவிட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக இந்தக் கொள்கைகளை இந்தியா பின்பற்றியதால் நெருக்கடி தற்போது தீவிரமாகியுள் ளது.
1991ஐவிட தற்போது நிலைமை மிகவும் மோச மாகவுள்ளது .
 ஏற்றுமதிக் கும் இடையிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அந்நிய முதலீட்டை ஈர்ப்ப தன் மூலம் மட்டும் சரி செய் துவிடலாம் என்று அரசு நம்புகிறது. ஆனால் சமீபத் திய அனுபவம் அவ்வாறு இல்லை.
அந்நிய முதலீட் டின் மூலம் நிகர அந்நியச் செலாவணியில் பெருமளவு ஏற்றம் இல்லை .
 சில துறைகளில் அந்நிய முதலீடு உதவக்கூடும். ஆனால் அனைத்துக்கும் அந்நிய முதலீடு ஒன்றே தீர்வு என்ற மனநிலை பிரச்சனைக்குத் தீர்வுகாண உதவாது.
அந்நியச் செலாவணி யில் தொடர்ச்சியான பரி மாற்றம் இருந்தாலும் செல் வத்தை உருவாக்க அது உத வவில்லை.
 பங்குச்சந்தையில் முதலீடு செய்வதும் அதை திடீரென அந்நிய முதலீட் டாளர்கள் திரும்பப் பெற் றுக் கொள்வதும் இப் போது ஏற்பட்டுள்ள நிலை குலைந்த தன்மைக்கு ஒரு காரணமாக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிக ராக மட்டும் வீழ்ச்சியடைய வில்லை. மாறாக பெரும் பாலான உலக நாடுகளின் பணத்திற்கு நிகரான மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அனைத்து நாடு களும் இத்தகைய நெருக்கடி யை சந்திக்கவில்லை.
சீனா வின் பொருளாதாரம் தற் போதும் வலுவாக உள்ளது.
இப்போதைய நெருக் கடிக்கான தீர்வு குறித்து குறித்த அவர் அத்தியாவசிய மல்லாத பொருட்களின் இறக்குமதியை நிறுத்த வேண்டும்.
 இறக்கு மதிக்கான மாற்றை உடனடி யாக கண்டறிய வேண்டும்.
இரண்டாவதாக பொது முதலீட்டின் மூலம் உள் நாட்டுத் தேவையை அதி கரித்து மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண் டும்.
suran

 உள்நாட்டு உற்பத்தி மற் றும் உள்கட்டுமானத் துறை களில் பெருமளவு முன் னேற்றம் வேண்டும்.
மூன்றாவதாக பொது முதலீட்டின் மூலம் வலிமை யான உள்கட்டுமானத்தை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் விவசாயத்துறை உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் . பொதுத் துறை மூலம் செய்யப்படும் இந்தப்பணியில் தனியார் துறையும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும்.
ரூபாய் மதிப்பு வீழ்ச் சிக்கு ஒரு காரணமாக உள்ள ஊகச்சந்தையை தடுப்ப தோடு பெரும் நிறுவனங் களின் அயல் வணிக துறை யில் பெருமளவு முதலீடு செய்வதை தடுக்க வேண்டும் . ரூபாய் மதிப்பைக் குறைப்பதன் மூலம் அந்நி யச் செலாவணி ஈட்டுவதில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூற முடியாது.
மாறாக ரூபாய் மதிப்பை குறைப்பது வளர்ந்த நாடு களுக்கே உதவும் என்றார்.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வளர்ச்சி மற்றும் அந்நியச் செலாவணி ஈட்டலில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் .
                                                                    -பொருளாதார அறிஞர் முனைவர். வெங்கடேஷ் ஆத்ரேயா,
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

‘கறை நல்லது தான்!’


suran
“... இன்னும் சொல்லப்போனால் ரூபாய் மதிப்பு சரிவதும் கூட பொருளாதாரத்திற்கு நல்லதுதான். அப்போது தான் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற போட்டி உணர்வு அதிகரிக்கும்.”
-நாடே பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிற ரூபாய் மதிப்பு சரிவை இப்படி பதற்றமே இல்லாமல் கையாளும் திறமை பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட்டால் வேறு யாருக்கு வாய்க்கும்?

உள்நாட்டுத் தொழில்களையெல்லாம் அழித்து, அனைத்தும் இறக்குமதி மயம்; அனைத்தும் அந்நிய மயம் என்று ஆக்கிவிட்டு, ஏற்றுமதியை அதிகரிக்க போட்டி உணர்வை உருவாக்கப் போகிறாராம்.
“சகதியில் விழுந்து புரளுங்கள்; கறையாகி விடும் என்று பயப்படுகிறீர்களா? கறை நல்லது தான், அப் போது தானே அதை நன்றாக துவைக்க வேண்டும் என்ற சிந்தனை பிறக்கும்!”“அப்புறம், நீங்கள் சகதியில் விழுந்ததற்கு நாங்களா பொறுப்பு? ரூபாய் மதிப்பு சரிவுக்கு பல உள்நாட்டு, வெளிநாட் டுக் காரணங்கள் இருக்கின்றன. நாங்களா பொறுப்பு?நிலக்கரித்துறையில் ஆவணங்கள் காணாமல் போ னதற்கு நானா பொறுப்பு? வெங்காயம் விலை உயர்ந்ததற்கு நானா பொறுப்பு?”-
ஆமாம் ஐயா, நீங்கள் பொறுப்பில்லை.
பொறுப்பில் லாதவரை பதவியில் அமர்த்தியதற்கு நாங்கள்தான் பொறுப்பு.

 பொறுப்பில்லாத உங்களைத் தூக்கி எறிவதற் கும் நாங்கள் தான் பொறுப்பு!

                                                                                                                          -சு.போ.அகத்தியலிங்கம் 
suran
suran


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் இந்தி திரைப்பட வரலாற்றில் ஒரு கரும்புள்ளி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் உலகத்தின் பார்வையில் பெரும் விஸ்வரூபமாக நின்று பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு மிகத் தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முப்பது வருடங்களாக உயரிய தியாகம் செய்து பல சாதனைகளை நிலைநாட்டி கட்டி வளர்க்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஒருபடி மேலே சென்று இந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மழுங்கடித்து போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ப்பட்டு வருகின்றன. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தமிழரின் போராட்டம் வீணானது என்றும் ஒன்றுபட்ட நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்றும் கடந்த காலத்தில் சிறீலங்கா அரசாங்கம் சித்தரித்தது. பிரபாகரன் என்ற தனி நபருக்கு மட்டுமே தனி ஈழம் தேவைப்படுவதாகவும் தமிழ் மக்கள் அது குறித்து அலட்டிக்கொள்ள வில்லையென்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரங்கள் பெரியளவில் வெற்றிபெறாததைத் தொடர்ந்து தற்போது புதிய உத்தி ஒன்று கையாளப்பட்டிருக்கின்றது. அதுதான் மக்களை ஆக்கிரமித்திருக்கின்ற திரைப்பட வடிவம். அந்த வடிவமே அண்மையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் வெளிவந்ததும் தமிழகத்தில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதுமான மெட்றாஸ் கபே என்ற திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் ஒரு இந்தித் திரைப்படமாகும். ஜோன் ஆபிரகாம் இந்தப் படத்தை இயக்கி நடிக்கிறார். 35 கோடி ரூபா செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முற்று முழுதாக இது தமிழ் மக்களின் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள போதிலும் இது விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கும் L.T.TE என்ற பதம் இதில் குறிப்பிடப்படவில்லை. மாறாக L.T.F என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று படத் தயாரிப்பாளர் கூறியிருக்கின்றார்.
suran
ஆனால், இந்தப் படம் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது முற்றுமுழுதாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிறீலங்கா – இந்திய அரசுகளின் கூட்டு முயற்சியாகவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்த போதிலும் மக்கள் மனங்களிலிருந்து புலிகளையும் போராட்டத்தையும் தோற்கடிக்க முடியவில்லை. இன்றுவரை தமிழக, தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகளையும் போராட்டத்தையும் நேசிக்கின்றனர். தலைவர் பிரபாகரனை தமது உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். அவரை மதிக்கின்றனர். இப்படிப்பட்ட தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று பிரபாகரன் பயங்கரவாதி, புலிகள் பயங்கரமானவர்கள், இந்தியப் பிரதமரையே கொன்றவர்கள். அவர்களை இனியும் ஆதரிக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொன்னால் மக்கள் திருப்பியடிப்பார்கள்.
ஆதலால், மக்கள் மத்தியில் இயல்பாக ஊடுருவக்கூடிய ஒரேயரு கருவி திரைப்படம் தான். எனவே, திரைப்படம் மூலமாக புலி எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என்று சிறீலங்கா- இந்திய அரசுகள் சிந்தித்தன் விளைவாகவே மெட்ராஸ் கபே என்ற இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் படத்தின் இயக்குநரான ஜோன் ஆபிரகாம் என்பவர் 2 தடவைகள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த பின்னரேயே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கதையைப் படமாகத் தயாரித்தால் அதன் மூலமாக வெளிநாடுகளிலுள்ள புலிகளையும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களின் கொட்டத்தையும் அடக்கலாம் என்று கனவு கண்ட மகிந்த தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த நெருக்கமானவர்கள் கூறியதற்கிணங்கவே ஜோன் ஆபிரகாம் என்பவர் மகிந்தவிடம் கொண்டுவரப்பட்டார். தனக்கு கிடைக்கின்ற பணத்துக்காக புலிகளின் தியாகங்களைக் கொச்சைப்டுத்த ஒப்புக்கொண்டார்.
சரி, தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்தப் படத்தை ஏன் இந்தி மொழியில் எடுப்பதற்கு மகிந்தவும் இந்தியாவும் விரும்பின. அதற்கும் காரணம் உண்டு. அண்மையில் தமிழகம் பூராக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில் முழு தமிழகமும் திரண்டிருந்தது.
suran
  திரைப்பட இயக்குநர்கள், திரைப்பட நடிகர்கள் போன்ற அனைவருமே ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவானவர்கள் என்பது மகிந்தவுக்கும் இந்திய அரசுக்கும் நன்றாக தெரியும். அதையும் மீறித் தமிழகத்தில் யாரையாவது கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான படத்தை தயாரித்தால் தமிழகத்தில் அதனை வெளியீடு செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவேதான் இந்தி மொழியில் மெட்ராஸ் கபே தயாரிக்கப்பட்டது.
மேலும், இந்தித் திரைப்படங்கள் பெரும்பாலும் இந்தி மொழியில் மாத்திரம் தயாரிக்கப்படுவதில்லை. அது இந்தி மொழியுடன் சேர்த்து மேலும் பல மொழிகளிலும் தயாரிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ் மொழியிலும் தயாரிக்கப்படும். அதனைவிட இந்தித் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உண்டு. இதனாலேயே இந்தி மொழியிலேயே திரைப்படத்தை தயாரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் முழுமையும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக அமைந்திருப்பதாக இதனைப் பார்வையிட்ட வை.கோ, சீமான் உள்ளிட்ட தமிழக உணர்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அவர்கள் தமிழக திரையரங்குகளின் உரிமையாளர்களைக் கோரியுள்ளனர்.
இந்த திரைப்படங்களை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும் என்ற எச்சரிக்கையுடன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டிருந்தன. தமிழக உணர்வாளர்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் இணைந்து தாயகத்திலிருந்து யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவையும் மெட்றாஸ் கபே திரைப்படத்தைக் கண்டித்திருந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வெளியிடப்படவேண்டிய மேற்படி திரைப்படம் வெளியிடப்படவில்லை.
ஆனால், ஏனைய மாநிலங்களில் வெளியீடு செய்யப்பட்டு ஒடிக்கொண்டிருக்கின்றன. அனைவரதும் எதிர்ப்புக்களைச் சம்பாதித்துள்ள இந்த திரைப்படத் தயாரிப்பானது ஒரு முட்டாள்தனமான செயற்பாடு. ஒரு இனத்தினுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதன் மூலம் பணம் பெற்று தாங்கள் வாழ நினைப்பவர்களை முட்டாள்கள் என்று கூறுவதை விட வேறு வழியில்லை. இந்த திரைப்படத்தை இயக்கிய ஜோன் ஆபிரகாம் என்பவர் மனிதநேயம் என்றால் என்னவென்று தெரியாதவர். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முற்றுமுழுதாக அவர் அறிந்திருந்தும் அந்தப் படுகொலையை அவர் நியாயப்படுத்த முனைந்திருப்பது கேவலமானது. இவருடைய கேவலமான இந்தச் செயலானது நீண்ட பாரம்பரியம் மிக்க இந்தி திரைப்பட வரலாற்றில் ஒரு கரும்புள்ளியைத் தோற்றுவித்துள்ளது.
உலகம் பூராகவுமுள்ள அன்புக்குரிய இந்தித் திரைப்பட இயக்குநர்களே,
suran
ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை புரிந்துகொள்ளுங்கள். சிங்களவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமென்று நாம் உங்களைக் கோரவில்லை. ஆனால், தமிழ் மக்களின் தியாகங்ளுக்கு மதிப்பளியுங்கள். தமிழ் மக்களை வேரோடு களையத் துடிக்கும் சிங்களத்தின் தமிழின விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகாதீர்கள். தமிழர்களுக்கும் புலிகளுக்கும் நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள்.
தமிழர்கள் புனிதமாகப் போராடியவர்கள். அகிம்சை வழியிலும் அற வழியிலும் போராடி நீதி கிடைக்காத காரணத்தாலேயே ஆயுத வழியில் போராடத் தள்ளப்பட்டவர்கள். ஆயினும் மனிதாபிமானம் இல்லாத மகிந்த அரசு தனது வெறித்தனமான படைகளை அனுப்பி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்று இந்தப் போராட்டத்தை அழித்தொழித்திருக்கின்றது.
எனவே, தமிழர்கள் இனிமேல் ஆயுத வழியில் போராடுவார்களோ இல்லையோ இதுவரை நடைபெற்ற போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள். முப்பது வருட காலமாக ஊண், உறக்கமின்றி, நிம்மதியின்றி, சந்தோசமின்றி, உலகில் எவராலும் செய்ய முடியாத தியாகங்களைச் செய்து, உலகமே வியக்கும் சாதனைகளை நிலைநாட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கோ அல்லது தமிழ் மக்களின் விடுதலை வேட்கையை மழுங்கடிப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ யார் இந்தக் காரியங்களைச் செய்தாலும் தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில், தமிழர்கள் தேவையற்ற ஒன்றுக்காக தியாகம் செய்யவில்லை. இல்லாத ஒன்றுக்காக அடம்பிடிக்கவில்லை. இழந்ததை மீட்கவே போராடினார்கள். ஆண்ட நிலம் வேண்டாம். குந்தி இருக்க ஒரு குடி நிலம் தாருங்கள் என்றே கேட்டார்கள்.
தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஜோன் ஆபிரகாமே…
தமிழ் மக்கள் தமது நிலத்தில் தாங்கள் வாழ உரிமை கேட்டது தவறா? நீங்கள் சுகபோகமாக வாழ பணம் சம்பாதிக்க படம் தயாரிப்பதற்கு எங்கள் இறப்புகளும் வேதனைகளும் வலிகளுமா உங்களுக்கு கருப்பொருளாக கிடைத்தது. உங்களுக்கு சுகபோகத்திற்கு பணம் தேவையென்றால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையேந்தியிருக்கலாம். நீங்கள் சாகும் வரை வாழ்வதற்கு அவர்கள் அள்ளிக்கொடுத்திருப்பார்கள். 
எதற்காக மகிந்தவிடம் பிச்சையெடுத்து தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினீர்கள்?
தமிழின உறவுகளே,
suran
மெட்ராஸ் கபே திரைப்படம் போன்ற மேற்படி செயற்பாட்டை நாம் பேச்சளவில் விட்டுவிட முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் அனுமதிக்கவும் முடியாது.
 ஜோன் ஆபிரகாம் போன்றவர்கள் எதிரிகளை விடக் கொடுமையானவர்கள். தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போன்று எதிரிகளை நாம் நம்பலாம்.
 ஆனால், ஆபிரகாம் போன்ற துரோகிகளை நம்பக்கூடாது. 
இவ்வாறான திரைப்பட முயற்சிகள் இனிமேலும் நடைபெற்றால் எவ்வாறு தடுக்கலாம் என்றும் மீறி தயாரிப்பவர்களுக்கு எதிராக எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் 
என்றும் நாம் ஆராய வேண்டும்.
 இல்லாவிட்டால் நாம் முப்பது வருடங்களாக செய்த தியாகங்களுக்கு துரோகிகள் மாற்று வடிவம் கொடுத்துவிடுவார்கள். 
சிந்தியுங்கள்.
                                                                                                                                              -வீரமணி 
நன்றி: ஈழமுரசு

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...