திங்கள், 15 அக்டோபர், 2018

திருட்டுத் திரையங்குகளுக்குத் தடை.

திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


ஒரு திரைப்படத்தை அதன் தயாரிப்பார் மிகுந்த பொருட்செலவில், பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த படத்தை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார்.

ஆனால் அந்த திரைப்படம் வெளியான தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்துவிடுகிறது. இது திரையரங்குகள் மூலம்தான் திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் 10 திரையரங்குகள் திருட்டுத்தனமாக படம்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரையரங்குகளின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றன.திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்கள் (ஊர், தியேட்டர், படத்தின் பெயர்)

  1. கிருஷ்ணகிரி முருகன் - மனுசனா நீ
  2. கிருஷ்ணகிரி நயன்தாரா - கோலிசோடா டூ
  3. மயிலாடுதுறை கோமதி - ஒரு குப்பைக் கதை
  4. கரூர் எல்லோரா - ஒரு குப்பைக் கதை
  5. ஆரணி சேத்பட் பத்மாவதி - மிஸ்டர் சந்திரமௌலி
  6. கரூர் கவிதாலயா - தொட்ரா
  7. கரூர் கவிதாலயா - ராஜா ரங்குஸ்கி
  8. பெங்களூரு சத்யம் - இமைக்கா நொடிகள்
  9. விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் - சீமராஜா
  10. மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா

மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும்  வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை கியூப் (qube) நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் வெளியாகும் புதிய  திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

எனவே சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

அம்பானிக்கு மோடி கொடுத்த முப்பதாயிரம் கோடிகள்.

ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய், ரிலையன்ஸ் குழுமக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல் ரக’ போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது.
ரபேல் விமானங்களை வாங்குவது காங்கிரஸ் அரசின் முடிவுதான் என்றாலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அதில் ஏராளமான மாற்றங்களை செய்தது.முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவு செய்து- அதில் 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் பெற்றுக் கொள்வது, ஏனைய 108 விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொள்வது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், மோடி அரசோ மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவதென்றும், அவற்றையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்வதென்றும் ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது.
போர் விமானங்களைத் தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இருந்த ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்’ நிறுவனத்தை கழற்றிவிட்டு, அந்த இடத்தில், திடீரென அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைத் திணித்தது.
காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரக விமானத்திற்கு, 1670 கோடி ரூபாயை அள்ளி இறைத்தும் மோடி அரசு தாராளம் காட்டியது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தின.
526 கோடியாக இருந்த, ஒரு விமானத்தின் விலை, 1670 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி? 
அதேபோல எச்ஏஎல் நிறுவனம் இடம்பெற்றிருந்த இடத்தில் ரிலையன்ஸ் எப்படி வந்தது? 

75 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, ஆரம்பித்து 12 நாட்களே ஆன ரிலையன்ஸை, ‘டஸ்ஸால்ட்’ தனது கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டிய தேவை என்ன? 
போர் விமான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 108 விமானங்களை இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று முன்பு ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவது; அவற்றையும் பறக்கும் நிலையிலேயே வாங்கிக் கொள்வது; என்று ஒப்பந்தத்தை மாற்றியது ஏன்? 
இந்தியாவில் ஒரு விமானமும் தயாரிக்கப்படாது எனும்போது, ‘மேக் இன் இந்தியா திட்டம்’ எதற்காக? அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்தது எதற்காக? 
என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.
ஆனால், ஒன்றுக்கும் மோடி அரசு உருப்படியான பதில் அளிப்பதாக இல்லை. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று தப்பிக்கப் பார்த்தது.
ஆனால், இந்திய அரசு கூறியதன் பேரிலேயே ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்தார். 
அவரைத் தொடர்ந்து ‘அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற இந்தியப் பிரதமரின் முன்நிபந்தனையின் பேரில்தான் ரபேல் ஒப்பந்தமே கையெழுத்தானது ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லோய்க் சிகாலன் என்பவரும் உறுதிப்படுத்தினார். 
இதுதொடர்பாக பிரான்சின் ‘மீடியாபார்ட்’ என்ற புலனாய்வு செய்தி நிறுவனம் விரிவான செய்தியை வெளியிட்டது.
அந்தச் செய்தியை வழிமொழிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி வைத்த முன்நிபந்தனை அடிப்படையில், 30 ஆயிரம் கோடி ரூபாயும் ‘டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ்’ கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

உள்ளுக்குள் அதிர்ச்சி இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம்போல அதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார். ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவிகிதம் (ரூ. 3 ஆயிரம் கோடி) மட்டுமே டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினார். 

டஸ்ஸால்ட் நிறுவனமும் அதற்கு ‘ஆமாம்’ போட்டது.
ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6 ஆயிரத்து 600 கோடி முதலீடு பெறப்பட்டதாக அறிவித்தது.
 இது, நிர்மலா சீத்தாராமன் மற்றும் டஸ்ஸால்ட் நிறுவனம் கூறியதைவிட 2 மடங்கு அதிகத் தொகை என்பதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த குழப்பம் தீர்வதற்கு உள்ளாக, ரிலையன்ஸ் நிறுவனனே தனது குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடியை முதலீட்டு பங்காக பெற்றிருப்பதாக கணக்கில் காட்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரபேல் விமானக் கொள்முதல் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி என்ற நிலையில், அதில், 50 சதவிகிதத் தொகையை, அதாவது ரூ. 30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். 
இதன்படி ரூ. 30 ஆயிரம் கோடி நாட்டின் பிற பாதுகாப்பு தளவாட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால், இந்த தொகை முழுவதும் அப்படியே ரிலையன்ஸ் குழுமத்திற்கு போயிருப்பது அவர்கள் அளித்த அறிக்கை மூலமே அம்பலமாகி இருக்கிறது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஸ்டெர்லைட் படுகொலைகளும் சி.பி.ஐ யும்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. 

இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் முதல் தனது விசாரணையை நடத்திவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. 
தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையிலான போலீஸார் விசாரணையையும் நடத்தினர். 
இந்நிலையில், 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட 173 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 15-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 இவற்றை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.
இந்தச் சூழ்நிலையில், சி.பி.ஐ துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கினர்.
கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த துப்பாக்கி சூடும்,அதில் 13 பேர் இறந்ததும் தெரியாமல் தொலைக்காட்சியில் அது.இது,எது பார்த்துக்கொண்டிருந்ததாக கூறும்  எடப்பாடி எடுபிடி அரசோ  ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது அவசியம் இல்லாத ஒன்று. 

இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்; மீண்டும் தமிழக அரசே விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்” என்று  உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
காரணம் துப்பாக்கி சூடு நடத்த ஆணையிடும் அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியர் .அருகில் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இருக்கையில் 13 கிமீ தூரத்தில் உள்ள துணை வட்டாசியர் சுட ஆணை கொடுத்த அசிங்கம் தெரியுமே?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு காமிரா மக்கள் வரும் முன்னரே கீழ்நோக்கி தொங்கிக்கொண்டிருந்த்தும்,வாயில் கண்ணாடிகள் உள்ளிருந்து உடைக்கப்பட்டதும் தெரிந்து விடும்.

நல்ல காவல் அலுவலர்களும் இருந்தனர்  

மக்கள் திரள் வரும் முன்னரே அரசு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதும்,கழிக்கப்பட்ட கோப்புகள் தீவைக்கப்பட்டதும் தெரிந்து விடுமே?
ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்பதும்,அதற்கு அன்று 144 தடை விதிக்கப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷுக்கு நன்கு தெரியும் .144 தடை போட்டதே அவர்தான்.
பின் இவ்வளவு சட்டம் ஒழுங்கு பத்தாஹ்ட்டம் உள்ள நிலையில் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்காமல் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தலைமையிடத்தை விட்டு ஓட்டப்பிடாரம்,விளாத்திகுளம் என்று திடீர் முகாம் சென்றது ஏன்?
அப்படியே இருந்தாலும் காவல்துறை கூறியபடியே வரும் வழியெல்லாம் கலவரம் செய்து சமூக விரோதிகள்,நக்சலைட்டுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்க வரும் போது அருகில் உள்ள அலுவலகத்திற்கு ஏன் அவசரமாகத்திரும்பி வரவில்லை.

அருகிலேயே மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர் இருக்கையில், பேக்ஸ், அலைபேசி ,நேரடி காணொளி (வீடியோ கான்பரன்ஸ் வசதிகள் முதல்வர்,தலைமைச்செயலாளர் போன்ற அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நிலையை விளக்கி ஆணைகள் பெறாமல் சான்றுகள் வழங்கும் அதிகாரம் மட்டுமே உள்ள அதாவது சிறப்பு காவல் சார் ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ )நிலையில் உள்ள  துணை வட்டாட்சியரிடம் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணை பெற்றது ஏன்?
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதைவிட மர்மம்  மஞ்சள் பனியனுடன் வேனில் ஏறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்ட காவலர் தான் குறிமட்டுமே பார்த்ததாகவும் சுடவில்லை,அதற்குள் வேறு நபர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் அருகில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு சுட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன் "காலையிலேயே எங்களை சீருடை இல்லாமல் மஞ்சள் பணியந்தான் வரக்கூறினார்கள் .நாங்கள் முன்பு பயிற்சி முடித்து மஞ்சள் பனியனுடன் மாவட்ட ஆட்சியருடன் எடுத்த புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்ததம் யார் எனத்தெரியவில்லை.அப்படம் மக்கள் தொடர்பு அலுவலகத்தாரால்தான் எடுக்கப்பட்டது "என்றும் கூறியுள்ளார். 
சி.பி.ஐ தோண்டினால் கீழடி,ஆதிச்சநல்லூரை விட பல உண்மைகள் வெளிவரலாம்.ஆனால் கீழடி,ஆதிச்சநல்லூரை ஆட்சியாளர்கள் 13 பேர்கள் கொலை ,ஸ்டெர்லைட் விவகாரத்தை தோண்டவிடுவார்களா?
அல்லது தோண்டியபின் அறிக்கையை எப்படி விட வேண்டும் என்று அனில் அகர்வால்தான் அறிவுரை வழங்காமல் இருப்பாரா?
=======================================================================================

அவிழும் கோவணங்கள்....?

ஜெயா  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இளம் வயதில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து மனம் திறந்துபேசி, பார்வையாளர்கள் அனைவரையும் கதிகலங்கவைத்தார் நடிகை வரலட்சுமி.
தற்போது படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்று (ஞாயிறு) முதல் துவங்கியிருக்கிறார் வரலட்சுமி.
‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பில் வெளியாகும் அந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில்  நடைபெறும் அநீதிகள் குறித்து விவாதிக்கப்படுமென்று தெரிகிறது.

அதன் முதல் எபிசோடில் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்துவரும் பாலியல் பலாத்காரம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில்  குற்றவாளிகளுக்கு நீதிமன்றத் தண்டனையை  விட தெருவில் நிற்கவைத்து தரும் தண்டனைகளே பயத்தைக்கொடுக்கும் என்று பார்வையாளர்கள் பலர் கருத்து தெரிவித்தார்கள். 
ஒருவர் சம்பந்தப்பட்ட நபர்களை நடுத்தெருவில் நிற்கவைத்து அவர்களது ஆண்குறியில் ஆசிட் அடிக்கவேண்டும் என்று உச்சக்கட்ட அதிர்ச்சி அளித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் தான் ஏன் இந்த நிகழ்ழ்சியை நடத்த ஒப்புக்கொண்டேன் என்று விளக்கமளித்தார்  வரலட்சுமி.
 " நானே பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைதான். என்னுடைய13 வயதில் ஒரு டிரைவர், இரண்டு மேனேஜர்கள், ஒரு செக்ரட்டரி மற்றும் ஒரு தாத்தாவில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டேன்’ என்று ஒரு பகீர் உண்மையை உடைத்தார்.
இதைக்கேட்ட பார்வையாளர்கள்  அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவிழும் கோவணங்கள் 
அப்போதைய குஜராத் முதல்வரும்... குஜராத் கல்லூரி பெண்ணும் தொடர்புடைய இந்த metoo எப்பொழுது வெளியே வரும்??

‘ஒருவன் பத்ம பூஷன் கனவில் இருந்தபோது, அவன் கட்டியிருந்த கோவணமும் களவு போனது’ 
                                                                                                                                                                      -வைரமுத்து 

சின்மயியைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படக்கலைஞரும் பாடகியுமான சிந்துஜா ராஜாராம், கவிஞர் காதலராக மாறி தனக்குக் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்களைப் புட்டுப்புட்டு வைக்கிறார். இவர் கலிஃபோரினியாவில் வசித்துவரும் தமிழராவார்.
’முதலில் சின்மயிக்கு ஆதரவாக குரல்கொடுக்கமட்டுமே எனது பெயரை சொல்லாமல் வைரமுத்து மூலம் எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பதிவிட்டேன்.

 பின்னர் அவரால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்களை ஓப்பனாக பேசு என்றதால் சொல்கிறேன். 
அவரால் செக்ஸ் தொல்லை கொடுக்கப்பட்ட பெண்களின் பெரிய பட்டியல் இன்றும் என்னிடம் உள்ளது.
அப்போது எனக்கு 18 வயதுதான் இருக்கும் தமிழ்சினிமாவில் பாடவும் நடிக்கவும், வாய்ப்பு கிடைத்தால் இசையமைக்கவும் முயற்சித்துக் கொண்டிருந்தேன். 
என் தாய் தந்தையர் பெங்களூருவில் இருந்ததால் சென்னையில் தங்குவதற்கு சரியான லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்தபோது பேப்பர் விளம்பரம் பார்த்துவிட்டு, வைரமுத்துவின் ஹாஸ்டலுக்கு வந்தேன்.
அங்கு சேர்த்துவிட்டு என் தாய் தந்தையர் பெங்களூரு திரும்பிவிட்டார்கள் என்று தெரிந்த்தும் தனது மன்மத வேலையைக் காட்ட ஆரம்பித்தார் வைரமுத்து. 
’வா ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்பார். உன்னை நினைத்து காதல் கவிதை எழுதியிருக்கிறேன். பெசண்ட் நகர் வீட்டுக்கு தனியே வா என்பார். 
ஒரு கட்டத்தில் தலையே வெடித்துவிடும் அளவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் மெல்ல அவரது போன்கால்களைத் தவிர்க்க ஆரம்பித்தேன். 
என்னிடம் தவறாக நடக்கவில்லை என்று வைரமுத்து மறுப்பு தெரிவிப்பாரேயானால், என்னால் அவரது ஆபாச நடவடிக்கை குறித்து நிறைய ஆதாரங்களை வெளியிடமுடியும்’ என்கிறார் சிந்துஜா.
அப்படி என்ன ஆதாரம் வைத்திருப்பார் சிந்து?
இது என்னடா  நம்ம வைரமுத்துக்கு வந்த சோதனை.
====================================================================

சனி, 13 அக்டோபர், 2018

நாக்கை என் வாய்க்குள்......!

மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் அக்பருக்கு எதிராக பாலியல் புகார் வெளியான நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் நிருபர் ஒருவர் பகீரங்கமாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளர்.
மீடூ பஞ்சாயத்துக்களில் சினிமா பிரபலங்களைத் தாண்டி தற்போது பத்திரிகை ஆசிரியர்களின் பெயர்களும் அடிபட ஆரம்பித்துள்ளன. 
தற்போது, மத்திய அமைச்சராக இருக்கும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பல முக்கிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து வந்துள்ளார். 

மீடூ ஹாஷ்டாக் மூலம் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், எம்.ஜே.அக்பர் மீது, பாலியல் புகாரை இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 இணை அமைச்ச்ர அக்பர் மீதான இந்த புகாரால், பிரதமர் மோடிக்கு கடும் நெருக்கடியைத் தெரிவித்துள்ளது. 
தற்போது, முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளர் ஒருவரும் அவர் மீது புகார் தெரிவித்துள்ளார். 
சிஎன்என் தொலைக்காட்சியின் பெண் பத்திரிக்கையாளர் மஜ்லியே புவே கம்ப் என்பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு, 18 வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கையில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார் மஜ்லியே. 
ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே.அக்பர். 
அப்போதுதான் இந்த துரதிர்ஷ்டவசமான  சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு அந்த பெண் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள ஈமெயில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகும் புகைப்படம் ஒன்றை தேர்வு செய்வது எடிட்டர் பணி என்பதால் அக்பரிடம், எந்த படங்களை முதல் பக்கத்தில் பிரசுரிக்கலாம் என்பது குறித்து, சில படங்களை காட்டி முடிவை அறிய மஜ்லி, அக்பர் அறைக்கு சென்றாராம். 
அறைக்குள்ளே சென்ற "தன்னை அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை என்றும், தன் இருக்கைக்கு வந்து, தோள்பட்டையின்கீழ் கையை வைத்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தது... 
அவரது நாக்கை என் வாய்க்குள் செலுத்திநார்.என்னால் அவரை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலவில்லை . 
அப்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. எனது பெற்றோர் வெளிநாட்டு நிருபர்கள் என்ற வகையில், அக்பரிடம் தன்னை சேர்த்ததாகவும், அவரது இந்த செயலால் எனது நம்பிக்கை மட்டுமின்றி எனது பெற்றோரின் நம்பிக்கையையும் அக்பர் கெடுத்துக் கொண்டார்" 
என்று மஜ்லி, இமெயிலில் தெரிவித்துள்ளார். 
எல்லாப்பெண்களும் சம்பவம் நடந்த பின் சும்மா இருந்துவிட்டு பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் இது போன்ற குற்றசாட்டுகளை அவிழ்த்து விடுவதன் கரணம் என்னவாக இருக்கும்.?
அதுவரை தங்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததுதான் காரணமாக இருக்குமா?
அப்படி எனில் அதுவரை ஆந்த குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்துக்கு இவர்களும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகத்தானே அர்த்தமாகிறது.

காரியம் நிறைவேறாமல் போனால் மட்டுமே அவர் மீது குற்றம்சாட்டுவதாகத்தெரிகிறது.
தெலுங்கு நடிகை முன்னர் வரிசையாக பலர் மீது குற்றம் சாட்டினார்.கடைசியில் "நீங்கள் அப்போது கூறிய வாய்ப்பைத்தரவில்லையே என்றுதான் அவர் முடித்தார்.
வாய்ப்புக்காக படுத்ததை எந்தவகையில்சேர்க்கலாம் ?
அது பலனை எதிர்பார்த்து அவரும் இணங்கி செய்த செயல் .பணத்துக்காக செயல்படும் பெண்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.?
இக்கேள்வியை அந்த நடிகையிடம் எழுப்பியதும்தான் இப்போது அடங்கியிருக்கிறார்.
அதற்கும் 13 ஆண்டுகள் வாளாவிருந்து விட்டு.மணவிழாவுக்கு அழைத்து காலில் வீழ்ந்து படமும் எடுத்துவிட்டு இப்போது குற்றம்சாட்டுவததற்கும் என்ன வித்தியாசம் காணமுடியும் ?.
முன்பெல்லாம் திரையுலகைச் சேர்ந்த பெண்களை ஆண்கள் மணமுடிக்காமல் தவிர்த்ததற்கு இதுபோன்ற வில்லங்கங்கள் அங்கு நடக்கிறது என்ற ஐயப்பாடுதானே காரணம்.


வெள்ளி, 12 அக்டோபர், 2018

*மோடி(கேர்)" என்ற மோசடிக்காரன்"

*
கொஞ்ச நாள் முன்னாடி சங்கிகள் மோடியின் *ஆயுஷ்மான் பாரத் - மோடிகேர்* திட்டத்தை ரொம்ப பெருமிதமாக பகிர்ந்திருந்தது உங்களுக்கெல்லாம் ஞாபகமிருக்கும்.

அதுக்கு நாம இதையெல்லாம் போய் வடநாட்டில் சொல்லுங்கடா...
இங்கே நாங்க தமிழ்நாட்டில் கலைஞர் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து 12 வருசமாகுது.

மோடியின் திட்டம் இலவசமல்ல, பயன்பெற விரும்பும் மக்கள் பிரிமீயம் கட்டணம் என்று பதில் சொல்லியிருந்தோம்.

இப்போ என்ன ஆச்சு?

திமுக கொண்டு வந்த ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்த இலவச காப்பீடு திட்டத்தை ரத்து செய்து எடப்பாடி உத்தரவு போட்டு...தமிழ்நாடு மத்தியரசின் மோடி கேர் திட்டத்தில் இணைவதாக அறிவிச்சிருக்கார்.

அப்படியென்ன அந்த மோடி கேர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என்ற ஆராயப்போனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

பிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யாருக்குமே உதவாத, ஒரு மோசடி திட்டம் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஓராண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக மோடி பெருமையாக அறிவிச்சிருக்கார். திட்டத்தை வெளிப்படையாக...டாம்பீகமாக அறிவிச்சவர்...அந்த திட்டத்தில் மக்கள் இணைவதற்கு ரகசியமாக விதித்திருக்கும் நிபந்தனைகளை படிங்க...

 குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.!

 ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக்கூடாது.!

 லேண்ட்லைன் போன் வைத்திருக்கூடாது.!

 வீட்டில் 3 அறைகள் இருக்கக்கூடாது.!

 வீட்டில் சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருக்கக்கூடாது.!

 மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம் இருக்கக்கூடாது.!

 விவசாயிகள் கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வைத்திருக்கக்கூடாது.!

 அரசு ஊழியராக இருக்கக்கூடாது.!

 வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர், விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர் திட்டத்தில் பங்கேற்க முடியாது.!

 2.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம், பாசன உபகரணங்கள்
 5 ஏக்கர் அல்லது அதிகமான பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர் பருவங்களில் வைத்திருப்போர்,
 குறைந்தபட்சம் 7.5 ஏக்கர் நிலம்
 பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்.!

அப்புறம் யாருக்குதான் இந்தத் திட்டத்தினால் பலன் கிடைக்கும் என்றால், ஒருவருக்கும் இல்லை என்பதே பதில்.

இதற்கெல்லாம் பக்தர்களிடம் நேரடி பதிலிருக்காது. 

2019ல் எங்களை வென்றுகாட்டுங்கள் என்ற வாய்சவடால் தான் வரும். எதற்கு? 
இவர்கள் செய்த எல்லா அலங்கோலங்களையும் சரி செய்யவா?

வடக்கு முட்டாப்புண்ணாக்குகள் மதவெறியின் காரணமாக தூக்கிப்பிடிக்கும் பாஜகவை தெற்கு சுமக்காது என்பது நமக்கு நல்லா தெரியும்.

அதனால வடக்கில் அவனவன் இந்த அரசாங்கத்தை நம்பி நடுரோட்டுக்கு வரட்டும். 
நாம அமைதியா ஓரம் உட்கார்ந்து பார்த்து ரசிப்போம்.

                                                                                                                                                                                             ஆ.சிவகுமார்,
முகநூலில் -
புதன், 10 அக்டோபர், 2018

மீட்டு

அநாகரீகம் இப்போது நாகரீகமாகிவிட்டது

கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வைரமுத்து பதில் :

ஒரு முறை சுவிட்ஸர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எனது அறையில் நானும், எனது தாயும் மட்டுமே இருந்தோம். அப்போது, நிகழ்ச்சி அமைப்பாளர் என்னிடம் வந்து வைரமுத்து அவரின் அறையில் எனக்காக காத்திருப்பதாக கூறினார்.
இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என ஒரு பதிவிலும், வைரமுத்து பற்றி அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். வைரமுத்து சார் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை” என ஒரு டிவிட்டிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
வைரமுத்து
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
1,613 RETWEETS 6,872 LIKES
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”என பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட திரைமறைவு சதிகள் உள்ளது.அதன் பின்னால் சாதிகள் உள்ளதும் தெரிகிறது.
திராவிட இனம் வைரமுத்துமேல் குற்றம் சுமத்தியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட இனத்தவர்கள்தான்.ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை அசிங்கமாகப்பேசி போராடியும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போனவர்களும் உண்ணாவிரதம்,ஆர்ப்பாட்டம் என்று நடத்தியும் தோற்றவர்களும் தான் இதன் பின்னால் உள்ளது தெரிகிறது.
உண்மை இருந்தாலும் 18 ஆண்டுகள் கழித்து இவ்விவகாரம் கிளப்பப்பட்ட காரணம் ஏன்ன?
இடையில் பாடகி  சின்மயி திருமணத்தில் வைரமுத்து அழைக்கப்பட்டு மனமக்களுடன் புகைப்படமும் எடுத்து வெளியிடப்பட்டது.அசிங்கம் நடந்திருந்தால் அவ்வாறு நடக்குமா என்ன?
தற்போது அமைசசர் அஃபர் மீது மீட்டு வில் பாலியல் குற்றம் சாட்டியவர் அவர் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதாகத் தெரிகிறது என்றே இடுகையிட்டுள்ளார்.
ஆக மொத்தம் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கவே மீட்டு போன்றவைகள் பயன்படுத்தப்படுவதாக ஐயம் எழுகிறது. 

திருட்டுத் திரையங்குகளுக்குத் தடை.

திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வ...