புதன், 29 ஜூன், 2016

நம் உளவுத்துறை

இன்று தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மீண்டும் முழுசாக விட்டு திரும்புவோமா என்ற ஐயம் உண்டாகியுள்ளது.


காரணம் ஆங்காங்கே நடக்கும் கொலை,கொள்ளை .

ஆனால் அதை தடுக்க வேண்டிய காவல்துறை அதை சட்டை செய்யாமல் இருசக்கர வாகனங்களை இன்சுயூரன் ஸ் இருக்கிறதா ?
கெல்மட் இருக்கிறதா என்று சோதனை செய்து காலத்தைக்கழிக்கிறது .
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவோ இன்னும் ஒரு படி மேலே போய் சட்டசபையில் அமைதி பூங்கா தமிழ் நாடு என்று அறிக்கை வாசித்து   எதிர்க்கட்ச்சிகளின் வாயை அடைத்து விட்டதாக கருதி தனது கடமையை  முடித்துக் கொள்கிறார்.

காலையில் அலுவாக்கத்திற்கு செல்ல பேருந்துக்கு காத்திருக்கும் வேளையில் நம் பக்கத்தில் இருப்பவரை திடீரென வந்து போட்டுத்தள்ளி விட்டு சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் போய் விடும் அவலம்தான் இன்று தமிழகத்தில்.

அந்த பக்கத்தில் நிற்பவருக்குப் பதிலாக அடையாளம்  தவறி நம்மையும் போட்டு விடக்  கூடிய  அபாயத்தை  ஒவ்வொருவரும்  தினமும் சந்திக்கவேண்டியதுதான் இன்றைய உண்மை நிலை.
சுவாதிக்குப் பதில் தவறாக  சுகாசினியை வெட்டி விட மாட்டார்கள் என்பதற்கு அரசு உத்திரவாதம் இல்லை.

இந்த கூ லிப்படை,கொள்ளையர்கள்,உணர்சசி வசப்பட்ட கொலைகள் இவைகளை தடுக்க அரசால்,காவல் துறையால் முடியாதா என்ன?

முடியும்.அதற்காகத்தானே காவல் துறையில் உளவுப்பிரிவே அமைக்கப் பட்டது.
ஆனால் ஜெயலலிதா ஆடசியில் உளவுப்பிரிவின் வேலையே திமுக உ ட்டப்பட்ட கடசிகளுக்கு எதிராக  வியூகம் அமைப்பதாக மட்டுமே ஆகி விட்டது.

இதுவரை நடந்த தேர்தல்களில் ஆளுங்கட் சி பலகீணமான இடங்களை காண்பதும் அதில் வெல்ல கடசிக்காரர்களை விட ஓடியாடி வேலை செய்வதுமே முழு நேர பணியாகி விட்டது.

அதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை திமுக அமைத்து விட்டாள் கூடாது என்பதற்காக நம் உளவுத்துறை மேற்கொண்ட பணி பிரதமர் மோடியால் கூட பாராட்டப்பட்டது.அதை நம்பித்தான் வாக்கு எண்ணிக்கை பாதிக்கு  முன்னதாக  10.30க்கே ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இன்று காணாமல் போன அந்த தமிழ் நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு முந்தைய நிலையை பற்றி 
முகநூலில் வந்த ஒரு இடுகை இது. நமக்கு ஈக்கப் பெரும் மூசசை தான் தருகிறது.


"சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை நகர கால்துறையில் ஐ.எஸ். டிசியாக இருதயதாஸ் பணியில் இருந்தார். 
குற்றச்செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளாக இருப்பினும், ரவுடி, கோடி பட்டியலில் இருப்வர்கள், நக்சலைட், இந்து, முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் வாதிகள் என அனைத்து தரப்பினர் பற்றிய தகவல்களை கேட்டால் அடுத்த 5வது நிமிடத்தில், சம்பந்தப்பட்ட நபரின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ளமுடியும். 

அப்போது உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கும். உளவு துறையினரிடம் தொடர்பில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். 
ஒரு ஏரியாவை கவனிக்கும் உளவு துறை காவலராக இருந்தாலும், தகவல்களை மிகவும் துள்ளியமாக, விரல் நுணியில் வைத்திருப்பார்கள்.
இன்றைய நிலை அப்படியில்லை தலைகீழாக உள்ளது. 

உளவுத்துறையில் பணியாற்றும் பலரும் தங்களை வெளிப்படையாக நாங்கள் உளவுத்துறையில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறுவதை பார்க்க முடிகிறது. பத்திரிகையாளர்கள் பேட்டிக்காக வந்திருக்கிறோம் என்று கூறுவதைப்போல் வெளிப்படையாக கூறிக் கொண்டு திரிகிறார்கள். 
இவர்களில் பெரும்பான்மையினர் பத்திரிகையாளர்களிடம் தகவலை பெறுவதே மிகப்பெரிய பணியாக கருதுகிறார்கள். 
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை, உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் அறை, பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில், பத்திரிகையாளர்கள் கூடும் இடங்களில் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை ஆக்கிரமித்து, அவர்களின் பணிகளுக்கு இடையூறாக அமர்ந்து கொண்டு, உளவு பணியை மேற்கொள்கிறார்களாம்.

இதோடு நில்லாமல் பத்திரிகையாளர்களுக்காக நடத்தப்படும் சந்திப்புகளில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். இதற்கு பேர் உளவு துறையாம். இவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. கருமம்டா என தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

 காரணம் இந்த உளவுத்துறையினர் வாங்கிக் கொடுக்கும் டீ சிற்றுண்டி, உணவு மற்றும் இத்தியாதி இத்தியாதிகளுக்காக இவர்களுடனே ஐக்கியமாகிப்போன பத்திரிகையாளர்கள் பலர். பத்திரிகையாளர்களாக பணியைப்பற்றி இவர்களுக்கும் இவர்களுக்கான பணியின் தன்மை தெரியவில்லை. உளவுத்துறையில் பணியைபற்றி வரும் அவர்களுக்கும் அவர்களின் கடமைை என்ன என்பது தெரியவில்லை. 

இதனால்தான் இந்த இரண்டு துறையிலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நடைமுறையாக உள்ளது.
அண்ணாசாலையில், பாதுகாப்பு நிறைந்த, பாதுகாப்புக்காக 24 மணிநேரமும் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட போவதை கூட முன்கூட்டி இவர்களால் தெரிவிக்கமுடியாமல் போன சம்பவம் நினைவிருக்கலாம். 

இதுபோல் பல நிகழ்வுகள் இருக்கு பட்டியலிட நேரம் இல்லை. உதாரணத்துக்கு ஒன்று போதும்.
பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல், தங்களை ஊரறிய அடையாளப்படுத்திக் கொள்ளாமல், இருதய தாஸ் காலத்து உளவுத்துறையைப்போல் இவர்கள் மாறவேண்டும். 

20 ஆண்டுக்கு முன் இப்போது இருப்பதைப்போன்ற நவீன தகவல் தொழில் நுட்பங்கள் அன்று இல்லை. இன்று இருப்பதுபோல் வாட் அப், பேஸ்புக், செல்போன், இமெயில் போன்ற வசதிகள் இல்லை. வாகன வசதிகள் இல்லை. 
இவ்வளவு வசதிகளும் உளவுத்துறையிடம் இப்போது இருந்தும், ஒரு நொடியில் தகவல் பறிமாற்றம் செய்யும் வசதி இருந்தும். குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என்ன என்பதை காவல் துறையினரே தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

அண்ணாசாலையில் அதுவும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்கப்படுவதையே முன்கூட்டி சொல்ல முடியாத உளவுத்துறை, தெருக்கோடியில் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய தகவலை எப்படி உடனடியாக சொல்வார்கள். 
உளவுத்துறை ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி
அன்றைய உளவுத்துறையினரின் பணிகளையும், இன்றைய உளவுத்துறையினர் பணிகளையும் ஓப்பிட்டால். உண்மை தெரிய வரும்.
காவல்துறையினர் தலைமையும், உளவுத்துறையின் தலைமையும் இப்பிரச்சனையை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும். உளவுத்துறையினர் பத்திரிகையாளர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

உளவு துறையில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஆலோசனையை வழங்க வேண்டும். பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு இடையூறாக ஏதோ ஒரு சந்தர்பத்தில் அல்ல பல சந்தர்பங்களில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

இது பல வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளிலும் இடம் பெற்றுள்ளது.

இனி வரும் காலங்களிலாவது பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்யாமல் தங்கள் கடமைகளை செவ்வனே செய்திட வேண்டும்.

முகநூலில் 

ஞாயிறு, 26 ஜூன், 2016

முதலில் கவனிபோதை ஒழிப்புத்தினம் இன்று.

போதை என்ற இரண்டு எழுத்தால் இன்று உலகமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. 
சொல்லப் போனால் தமிழ்  நாட்டில் இந்த போதை வியாபாரத்தால்தான் அரசாங்கமே தள்ளாடாமல் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கைதான் எதிர்காலம் பற்றிய பயத்துடன் போதை ஏற்றாமலேயே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

அரசு தரும் போதையை தவிர மேலும் அதிகப்  போதைக்கென சிலர் சட்ட விரோதமான போதை பொருட்களைத் தேடி அலைவது இங்கு மட்டுமல்ல உலகமெங்கும் நடக்கத்தான் செய்கிறது.
உலகமெங்கும்  சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வியாபாரமும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

'இந்தாண்டு மையக்கருத்தாக்க வைக்கப்பட்டுள்ளது " முதலில் கவனி'  . 

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது முதலில் கவனம் செலுத்தி அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு உதவ வேண்டும் என்பது இதன் நோக்கம்.
 போதை என்றால் சிலர்  மது,பான்பராக் ,கஞ்சா  மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. 
இதன் வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, மது, ஊக்க மருந்து, ஒயிட்னர் உள்ளிட்ட போதைப்பொருட்கள்தான் பள்ளிசிறுவர்களில் ஆரம்பித்து இளைஞர்களின் வாழ்க்கை வரை  சீரழிக்கிறது .

ஆனால் போதை உலக விவகாரங்கள் சற்று அதிக பயத்தை தருகிறது.அந்த அளவு அது உலகை இறுக்கி பிடித்து வைத்துள்ளது.

உலகமே அந்த பிடியால் தள்ளாடத்தான் செய்கிறது.

:உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தை இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம்தான் பிடித்துள்ளது. 
ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது .
 இதை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கைவசம் உள்ள சட்டங்கள் மூலம்  முயற்சிகள் எடுக்கின்றன. 

இந்திய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985ன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ல் தொடங்கப்பட்டது. 
இது மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. 
இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

ஆனால் இதனால் ஒன்றும் போதை பொருட்கள் கடத்தல் குறையவில்லை.போதை வியாபாரம்  ஆண்டுக்கு,ஆண்டு இது அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. 
காரணமாக தமிழ் நாடு அரசு இன்று தேருக்கு இரண்டு கடைகளை டாஸ்மாக் மூலம் திறந்து சாதாரணமானவர்களுக்கும் போதை பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற பள்ளிகள்,கோயில்கள் அருகில் கூட மதுக்கடைகள் மக்களின் எதிப்பையும் மீறி திறந்துள்ளது.
கோயில் இருக்கிறதோ,பள்ளிக் குடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடை இல்லாத இடம் இல்லை தமிழ் நாட்டில்.இதில் ஆண்டுதோறும் விற்பனையை கூட்டும் குறியீடு கட்டாயம் வேறு.

பள்ளிசிறுவர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் முதலில் அரசு தரும் மதுவில் தங்கள் வாழ்வை ஆரம்பித்து அடுத்து அதை விட உச்ச போதையை தரும் இனங்களை தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

அதனால் அபின்,மர்ஜூனா ,எலெஸ்டி இன்னும் வாயில் நுழையா பெயர் போதை சாமான்கள் எல்லாம் நாட்டில் நுழைய ஆரம்பித்து விடுகின்றன.

 கணினி துறையில் மட்டுமல்ல இங்கேயும் புதிய,புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போதைப்பொருட்கள்  கடத்தல் நடக்கிறது. 

'போதை' சமூகத்தை அழிக்கும் ஒரு 'அரக்கன்'. போதைப்பொருளால்  அதை உபயோகிப்பவர் மட்டும் பாதிக்கப் படுவதோடு நின்று விடுவதில்லை. அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. 
மேலும் இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் மூலக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.. உலகில் பலர் அடிமையாகவே மாறிவிட்டனர். 

அப்போதைய பெற எந்த அளவுக்கும்,தரம் தாழ்ந்து போகவும்,சமுக விரோத செயல்களில் இறங்கவும் தயங்காநிலைக்கு சென்று விட்டனர்.

தமிழ் நாட்டில் நடக்கும் பைக் திருட்டு ,செயின் பறிப்பு செய்யும் இளைஞர்களில் பலர் அதை போதைக்காவும்,ஜாலியாக இருக்கவுமே தங்கள் செய்ததாக வாக்குமுக்குலம் கொடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க இதே கதைதான்.

போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட சட்டவிரோதமாக கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் நாடுகளின் பொருளாதாரப் பாதிப்பும்  ஏற்படுகிறது.
இதை தமிழ் நாடு அரசு கேள்விப்பட்டால் இவற்றையும் அரசுடைமையாக்கி  டாஸ்மாக் மூலம் விற்பனை செய்து அரசுக்கு பணம் திரட்டும் வேளையில் இறங்கி விடக் கூ டாது என்பதுதான் இப்போதைய கவலை.

ஆக போதை பழக்கம் உடல்நலம்,பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றை கெடுப்பதோடு நாட்டையும் சீரழிக்கிறது.

வெள்ளி, 24 ஜூன், 2016

"அமைதி பூங்கா " .

தமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக  கூறியுள்ளார்.


ஆனால் தமிழகத்தில் அதிகரித்திருக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலையும் மறுபுறம் பெரும் கவலையையும் தோற்றுவிக்கின்றன. 

ஜெயலலிதா கூறும் அமைதி பூங்காவின் அர்த்தம் விளங்க மாட்டேன் என்கிறது.

தலைநகர் சென்னையிலேயே அடுத்தடுத்து நடந்துவரும் கொலைகள் காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
அதை கட்டுக்குள் வைத்திருக்கும் உள்துறையும் அதனை கட்டுப்படுத்தும் முதல் அமைசர் ஜெயலலிதாவும் என்னதான் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கடசியினர் கருத்துக்களை மறைத்து  தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக என்று பதிவு செய்தால் மட்டும் போதுமா?

காவல்துறையினர் ஜெயலலிதா சிறைக்கு சென்றால் கறுப்புக்கொடி குத்திக்கொள்வதிலும்,வெளியே வந்தால் வாழ்த்து பதாகை வைப்பதிலும் தான் சுறு,சுறுசுறுப்பாக செயல் படுகிறார்கள்.

அதிமுகவில் சட்டமன்ற தொகுதி கேட்டு காவல் ஆய்வாளர்கள் விண்ணப்ப மனு கொடுக்கிறார்கள்.
ஜெயலலிதா தொகுதியில் கரை வேட்டியுடன் விடுப்பு போட்டு வாக்கு சேகரிக்கிறார்கள்.ஆனால் கொலை,கொள்ளை தடுக்க அவர்கள் செய்வது ?

ஒன்றும் இல்லை.
பைக்,இன்னோவா கார்களில் வந்து கொலை செய்து,கொள்ளையடித்து விட்டு செல்லும் குற்றவாளிகளை பிடிக்க காவலர்களுக்கு சைக்கிள் வழங்குகிறது அரசு.
இந்த சைக்கிள் வைத்து குற்றவாளிகளை என்றைக்கு பிடிப்பது.இதனால் ஒரே நன்மை.காவலர்களின் தொப்பை குறையும்.

சென்னையில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் நான்கு வழக்கறிஞர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதேபோல தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

ஓசூரில் தலைமைக் காவலர் ஒருவரே, கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்.
சென்னையில் ஜூன் 6-ம் தேதி கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் முருகன், 8-ம் தேதி வடபழநியில் வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ், 15-ம் தேதி புழலில் வழக்கறிஞர் அகில்நாத், 22-ம் தேதி வியாசர்பாடியில் ரவி என்று விழும் கொலைகள் ஒவ்வொன்றின் பின்னணியும் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஒரு விஷயம் பொதுவானது: 

கூலிப் படையினர் எந்தப் பயமும் இல்லாமல் அனாயாசமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர்.
பொதுவில், ஆத்திரத்தில் அவசரப்பட்டுத் தாக்கிவிடுவதையோ அல்லது விபத்தாகவே மரணம் நேர்ந்துவிடுவதையோதான் பெரும்பாலான கொலைகளின் பின்கதைகளாக நம்மூரில் பார்த்துவந்திருக்கிறோம். 

ஒருகாலத்தில் அரசியல்வாதிகளும் ரௌடிகளும் தமக்குள்ளான ‘தொழில் போட்டி’யில் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திவந்த, நிழல் உலகம் மட்டுமே அறிந்த கூலிப் படையினரை இப்போது சாதாரணர்களும் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது அபாயகரமானது.

சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் செயல்பாட்டாளர் ஒருவர் கூலிப்படையால் கொல்லப்பட்ட வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்தது. “
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம் இவற்றில் கூலிப்படையினரின் தொடர்பு பற்றி தமிழக உள்துறைச் செயலரும் காவல் துறைத் தலைவரும் அறிக்கை தர வேண்டும்” என்று சொன்ன நீதிமன்றம், “ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பொது அமைதி கெடும். 

கூலிப்படைகளை ஒடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏதேனும் உள்ளதா?” என்றும் அப்போது கேள்வி எழுப்பியது.

இதன் தொடர்ச்சியாக, கூலிப் படையினரைக் கண்காணிப்பதற்காக காவல் துறைத் தலைமை அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவும் அப்போது தொடங்கப்பட்டது. 
எனினும், இந்தப் பிரிவு உண்மையில் இப்போது எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, கூலிப் படையினரை ஒடுக்க அது தொடர்ந்து மேற்கொண்டுவரும் செயல்திட்டம் என்னவென்பது எல்லாம் பொதுச் சமூகத்துக்குத் தெரியாததாகவே இருக்கிறது.
கூலிப்படைகள் போன்ற நிழலுலகச் செயல்பாடுகள் காலம் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கக் கூடியவை. குற்றங்கள் நடக்கும்போது களம் இறங்கிச் செயல்படுவதில் அல்ல; 

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிப்பதும் உளவறிவதும் முன்கூட்டிச் செயல்படுவதும் குற்றங்களைத் தடுப்பதுமே நல்ல காவல் பணிக்கான இலக்கணம். ஆட்சியாளர்களையும் அரசியல் கட்சிகளையும் பொறுத்த அளவில் கொலை, கொள்ளைகள் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாக இருக்கலாம்; மக்களைப் பொறுத்த அளவில் இது உயிர்ப் பிரச்சினை. தமிழக முதல்வர் நேரடியாகவும் உடனடியாகவும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் இது. 

ஆனால் ஜெயலலிதாவோ அமைதி பூங்கா கனவில் அதை கண்டு கொள்வதில்லை.காவலர் ஒருவரை  குற்றவாளியே குத்தி கொலை செய்ததற்கு காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பது அமைதி பூங்காவில் நடக்கும் செயல்களோ?

காவல் துறை விரிவான திட்டமிடல்களுடன் களம் இறங்க வேண்டும். 

குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும்!

காவல்துறை அதிமுக கட் சியின் ஒரு கிளை அமைப்பாக செயல்படுவதை உடனே  வேண்டும்.

ஜெயலலிதாவின் புகழ் பாடுவதை,பன்னிர் செல்வம் அளவு குனிந்து மரியாதை செய்வதை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டு அவர்களுக்குண்டான பணிகளை செம்மையாக செய்தாலே போதும் தமிழ் நாடு அமைதி பூங்காதான் .

செவ்வாய், 21 ஜூன், 2016

கச்சத்தீவை மீட்பேன்.- ஜெயலலிதா

'இது மாநில அரசு அதிகாரம் இல்லை. இருநாடுகள் விவகாரம்.கச்சத்தீவை மீட்க போரா நடத்தமுடியும்" என்கிறார்ஜெயலலிதா.
ஈழஇறுதிப்போரில் மக்கள் கொலை செய்யப்பட்டபோது கலைஞர் கருணாநிதி மட்டும் எப்படி இன்னொரு நாட்டின் படுகொலையை நிறுத்தமுடியும்.ஈழ வியாபாரிகளுக்கு இந்த உண்மை ஜெயா சொல்லும்போது மட்டும் புரிகிறது.

அதைப்போல்தான் மத்தியஅரசும்,இலங்கை அரசும் செய்யும் கச்சத்தீவு அரசுமுறை ஒப்பந்தத்தில் வெறும் ஒரு மாநில முதல்வர் கலைஞர் என்னசெய்யமுடியும்.

வெறும் எதிர்ப்பை பதிவுசெய்வதை விட.அப்போது கலைஞர் இந்திரா காங்கிரசின் எதிர்கட்சி வேறு.

இந்திரா காங்கிரசின்கூட்டணி கட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அப்போதுகடுமையாக எதிர்த்து இந்திராவிடம் கூறி இருந்தால் கச்சத்தீவு தாரை வார்க்கப்ப்ட்டிருக்காது என்பதுதான் உண்மை வரலாறு.

ஆக கச்சத்தீவை தாரை வார்த்தவர் இந்திராகாந்தியின் கூட்டணி தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

அவர் ஆட்சியில்தான் கச்சத்தீவு இந்திய வரைபடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டஆட்சியர்(அதாவதுதமிழகஅரசு)ஆணைப்படி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது.


ட்டமன்றத்தில் பெருத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கச்சத்தீவு. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வழக்குத் தொடர்ந்தேன். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்?' எனக் கொந்தளித்தார் முதல்வர் ஜெயலலிதா. 

' மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காக கச்சத்தீவை மீட்பேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. 
இதுகுறித்து சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதம் எழுந்தது. தி.மு.க உறுப்பினர் பொன்முடியின் கேள்விகளுக்கு அதிரடியாக  பதில் அளித்தார் முதல்வர். 

ஜெயலலிதா  பேசும்போது, " கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1974-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? 
அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? 
அதை எதிர்த்து போராட்டம் நடத்தினாரா? 
மத்திய அரசு மூலமாக நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, ஒரு படையைத் திரட்டிக் கொண்டு, கச்சத் தீவை மீட்பேன் என்று பேசவில்லை. 

அன்றைய தி.மு.க. முதல்வர் ஏன் மவுனம் சாதித்தார்? 
ஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்? 
உச்ச நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான். 2008-ம் ஆண்டு,  மத்திய அரசை அணுகி எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட முறையில்,  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். 
அப்போது இங்கே முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. இன்று மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். அதை எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது" எனக் கொந்தளித்திருந்தார். 

 

தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டுகாலமாக கச்சத்தீவு என்ற பெயர் வலம் வந்து கொண்டிருக்கிறது. 
தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு அரசியலாக்கப்படுகிறது. 
அதன்பிறகு அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.
" உண்மையில், 1170-ம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சத்தீவு. அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சத்தீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளது. 
அப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு" என்றும் சொல்கின்றனர் ராமேஸ்வரம் கோவிலின் நிர்வாகிகள் சிலர்.
1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ' நமது மீனவர்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை' என்ற ஆவணம், இப்போதும் மீன்வளத்துறை வசம் உள்ளது. இதைப் பற்றி இப்போதைய  கலைஞரை தாரை வார்த்தார் என்று கூ றி வரும் ஜெயலலிதாவுக்கு  தெரியுமா?" 
என அதிர வைக்கிறார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன். 

தொடந்து அவர், "  'இலங்கை அதிபரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்படும்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது' என்கிறார் முதல்வர். 
உண்மைதான். ஆனால் உடனே எம்.ஜி.ஆர் -இந்திரா காங்கிரஸ் கூ ட்டணியால் கலைஞர் அரசு கலைக்கப்பட்டு நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். முதல்வராகி விட்டார்.
எம்.ஜி.ஆர்.ஆடசியில்தான் , இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர். 
இலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான். 
இதுபற்றி அன்றைக்கு சட்டசபையில் யாராவது பேசினார்களா? 
ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகத்து மக்கள் மீனவர்கள். இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கியதற்குப் பிறகுதான், ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 
அதற்கு முன்பு வரையில் இந்தளவுக்கு படகுகள் இருந்ததில்லை. இப்போது பெரிய படகுகளில் மீன் பிடிக்கும் முதலாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்களே அல்ல" என விவரித்தவர், 

" பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ராமநாதசுவாமிக்கு என கச்சத்தீவில் மிகப் பெரிய பூந்தோட்டம் இருந்தது. அதை அழித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 
அதன்பிறகு 1923-ம் ஆண்டில் ஓலைக்குடாவைச் சேர்ந்த ஒருவர்தான், கச்சத்தீவில் அந்தோணியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். 1170-ம் ஆண்டு முதல் 1197-ம் ஆண்டு வரையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பல சாசனங்களை எழுதி கொடுத்திருக்கிறார் இலங்கை மன்னர் நிசங்க மல்லன்.


ராமநாத சுவாமிக்கு அருகிலேயே விஸ்வநாதர் கோவிலைக் கட்டியது, கிழக்குப் பகுதியை எழுப்பியது என பல நல்ல காரியங்களை அவர்தான் செய்தார். 
ஏனென்றால், அப்போது ராமேஸ்வரம் பகுதி என்பது இலங்கை மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இலங்கை சிங்களவர்களும் பாண்டியர்களும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு சம்பந்திகளாகவும் இருந்தனர். பிற்காலத்தில், சேதுபதி மன்னராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி, கச்சத்தீவை குத்தகைக்கு விட முயற்சித்தபோது, ' அந்தப் பகுதி இலங்கைக்குக் சொந்தமானது. நீங்கள் உரிமை கொண்டாட முடியாது' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது" என்றவர், 

இறுதியாக, " நமது மாநிலத்தைப் பொறுத்தவரையில்,கச்சத் தீவு என்பது அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்து ட்ரம்ப் கார்டாக மட்டுமே பயன்படுகிறது. 
மத்திய அரசு நினைத்தால் மட்டுமே, இலங்கை அரசுடன் நல்லுறவு அடிப்படையில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்” என்கிறார் தீர்மானமாக. 

' மத்திய அரசுடன் சுமூகமான நட்பு பாராட்டும் தமிழக அரசு, கச்சத் தீவு தொடர்பாக கொடுக்கும் அழுத்தங்கள் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்' என்கின்றனர் நடுநிலையாளர்கள். இதுதொடர்பான ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறையும் மீன்வளத்துறையும் வெளிக் கொண்டு வருவது கூடுதல் நன்மைகளை உருவாக்கும் என்கின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள். 


திங்கள், 20 ஜூன், 2016

பாரிவேந்தர் மீது பாலியல் புகார்பாரிவேந்தர் மீது பாலியல் புகார் கூறும் திலகா..

இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 

2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். 
மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். 
பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. 
நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்....

‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன்.

2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது.

திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம்.நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். 

இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். 

அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். 
ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயேhttp://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1860%3A2013-07-31-18-39-25&catid=1%3A2010-07-12-16-58-06&Itemid=19வேந்தரை சந்தித்தேன்.
 என்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்? 
மதன் ஏதும் கூறவில்லையா?” என்று கேட்டார். 
அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.

நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.

நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். 

ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா? 
என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. 

எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி.

இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை.

என்னதான் நடக்குது நாட்டில்?


நன்றி ஏகவலைவன் வார இதழ்திங்கள், 13 ஜூன், 2016

மின் கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க,ஊழலே காரணம்!

ம்மாவின் கடந்த ஐந்தாண்டு பொற்கால ஆட்சியில் இரண்டு தவணைகளில் 60 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்பகற்கொள்ளைக்கு எதிராகத் தமிழக மக்கள் எதிர்ப்பையும் வெறுப்பையும் உமிழ்ந்தபோது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாகவும், தனது அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என விளக்கம் சொன்னார், ஜெயா. மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ, “மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கூடிவிட்டதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது” என எதிர்ப்பவர்களின் வாயை அடைக்கும்படியான பதிலை அளித்தது. ஆனால், இந்த விளக்கங்கள் அனைத்தும் பச்சைப் பொய், மோசடி என்பது தற்போது அம்பலமாகியுள்ள நிலக்கரி இறக்குமதி ஊழல் வழியாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இம்மின் நிலையங்களின் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியாவில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல், அத்தொழில் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் அனல் மின் நிலையங்கள் தமக்குத் தேவைப்படும் நிலக்கரியில் ஒரு பகுதியை வெளிநாடுகளிலிருந்து இடைத்தரகர்கள் மூலம் இறக்குமதி செய்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
மின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி,  டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
மின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
இந்த இறக்குமதியில், குறிப்பாக இந்தோனேஷியா நாட்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை நடந்துள்ள நிலக்கிரி இறக்குமதி வணிகத்தில் மட்டும் 29,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதையும், இந்தப் பணம் முழுவதும் வெளிநாடுகளில் கருப்புப் பணமாகப் பதுக்கப்பட்டுவிட்டதையும் கண்டுபிடித்திருக்கிறது, இந்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம். இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ஹாங்காங்கிலும், துபாயிலும் இறக்குமதி நிறுவனங்களை நடத்திவரும் இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் குமார் கார்க் என்பவர் மைய அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
50 டாலர் மதிப்புள்ள ஒரு டன் நிலக்கரியை 87 டாலருக்கு வாங்கியிருப்பதாகக் கணக்குக் காட்டி இந்த ஊழலை நடத்தியதோடு, செயற்கையாகவும் மோசடியாகவும் அதிகரிக்கப்பட்ட நிலக்கரியின் விலையைக் காட்டி மின்சார கட்டணத்தை உயர்த்தி, அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த ஊழல் காரணமாகத் தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 50 காசு முதல் ரூ.1.50 வரை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்.
இந்தியாவை வறுமையிலிருந்து மீட்டு வல்லரசாக்கும் இரட்சகர்களாக யாரெல்லாம் மக்கள் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்களோ, அவர்கள்தான் – அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அனில் அம்பானி, அதானி குழுமத்தைச் சேர்ந்த வினோத் சாந்திலால் அதானி, எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ரூயா குடும்பம், ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் இந்த ஊழலின் சூத்திரதாரிகள். தமிழ்நாடு, குஜராத், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த அரசு மின்சார வாரியங்கள் இந்த ஊழலில் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுள்ளன.
தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களும் அரசு மின் வாரியங்களும் இந்தோனேஷியாவிலிலிருந்து நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. அதற்குப் பதிலாக, சிங்கப்பூரிலும், ஹாங்ஹாங்கிலும், துபாயிலும், இந்தியாவிலும் உள்ள தரகு நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியைப் பெறுகின்றன. இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி கப்பலில் ஏற்றப்பட்டு, அந்தச் சரக்கு நேரடியாக இந்தியாவிற்கு வந்தாலும், அதற்குரிய ரசீதுகள் அப்படி வருவதில்லை. அது இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து துபாய்க்கோ போய், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல இந்தியாவை வந்தடைகிறது. அப்படி வருவதற்குள் இந்தோனேஷியாவில் 50 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை 87 டாலராக அதிகரித்து விடுகிறது.
ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு சரக்கு மாறும்போது விலை ஏறும்தானே என்று பொருளாதாரப் புலிகள் நியாயப்படுத்தலாம். ஆனால், இதில் அப்படியெல்லாம் வியாபாரம் நடக்கவில்லை. சரக்கு இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து ஹாங்ஹாங்கிற்கோ துபாய்க்கோ விற்கப்பட்டதாக செட்-அப் செய்யப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நிலக்கரியின் விலையை உயர்த்தி, போலியான இறக்குமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,500 கோடி ரூபாய் எனச் செய்திகள் கசிந்துள்ளன. எனினும், இதில் போயசு தோட்டத்திற்குப் போன பங்கு எவ்வளவு என்பது மர்மமாக உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தரகு நிறுவனங்கள், மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தரகு முதலாளிகளின் பினாமி நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் என்பது இந்த ஊழலின் இன்னொரு அம்சமாகும். குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மின் வாரியங்களுக்கு டாடா குழுமத்திற்குச் சொந்தமான கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனம் மின்சாரத்தை விற்று வருகிறது. இந்த நிறுவனம், புமி ரிசோர்சஸ் என்ற இந்தோனேஷிய நிறுவனத்திடமிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகக் கணக்கு காட்டுகிறது. இந்த புமி ரிசோர்சஸ் நிறுவனத்திலும், அதற்குச் சொந்தமான இந்தோனேஷியாவின் நிலக்கரி வயல்களிலும் 30 சதவீதப் பங்குகளை கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா பவர் நிறுவனம் வைத்திருக்கிறது.
அதானி குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது பினாமி நிறுவனத்தின் மூலம் தனது குஜராத் மின்நிலையத்திற்கு இயந்திரங்களை இறக்குமதி செய்ததில், அந்த இயந்திரங்களின் இறக்குமதி விலையைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக 6,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. மேலும், அக்குழுமம் நிலக்கரி இறக்குமதி கொள்ளையை நடத்துவதற்கு வசதியாக ஆஸ்திரேலியாவில் நிலக்கரி வயல்களை வாங்கிப்போட முயன்று வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயந்திரங்களின் விலைகளைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக மின் கட்டண உயர்வை இந்திய மக்களின் மீது ஏற்றியிருக்கும் இந்த ஊழல்-மோசடிகளின் மூலம் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாயைத் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன. மனோஜ் குமார் கார்க் என்ற சுண்டெலி கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த ஊழல் தொடர்பாக எந்தவொரு கார்ப்பரேட் பெருச்சாளிகள் மீதும் வழக்குப் பாயவில்லை.
கடந்த காங்கிரசு ஆட்சியில்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நடந்தது. அப்பொழுதுதான் நிலக்கரி இறக்குமதி ஊழலும் நடந்திருக்கிறது. நிலக்கரி சுரங்க ஊழலில் காங்கிரசைக் குறிவைத்துப் பலமாக சவுண்டுவிட்டு வரும் பா.ஜ.க., நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து அடக்கியே வாசிக்கிறது. காரணம், அம்பானியும் அதானியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குத்தகைக்கு எடுத்த ஆட்சியல்லவோ மோடியின் அரசு!
– திப்பு 
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016 
______________________________

ஞாயிறு, 12 ஜூன், 2016

வக்காளர் பட்டியல்?
தலைப்பில் எழுத்துப்பிழை இல்லை.
நம் தமிழகத்தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலில்தான் ஒட்டு மொத்த பிழைகளும்.
நம் தமிழ் நாடு 
தேர்தல் ஆணையம் 
2016 சட்டப்பேரவை 
தேர்தல் நடத்திய 
முறையும் ஆளுங்கட்சிஅதிமுக  மற்றும் அதிமுக அதிகாரிகள்-காவல்துறையினர்  முறைகேடுகளை ஊக்குவித்து தேர்தலை நடத்தி  ஜெயலலிதாவை முதல்வராக்கியதில் ஆணையம் எடுத்துக்கொண்ட ஊக்கத்தையும் எத்தனை முறை பாராட்டினாலும் மாளாது அதன் சேவை.
என்ன 2011 அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட  தமிழக தேர்தல் ஆணையர் பிரவின் குமார் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் வெற்றிச் சிரிப்புடன் அமர்ந்து புகைப்படங்களுக்கு அசைவு கொடுத்தது போல் ராஜேஷ் லக்கானி செய்யவில்லையே தவிர லக்கானி சேவை பிரவீன் குமார் பணிக்கு சற்றும் குறைந்தது அல்ல.
2016 சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன் வரை வரைவு வாக்களர் பட்டியல் தயாரிக்கப் பட்டது .பேர் சேர்க்கவும்,நீக்கமும் செய்யப்பட்டது.
திமுக தரப்பிலும் ,மற்ற எதிர்க்கட்சிகள் தரப்பிலும் 10 லட்சத்துக்கு அதிகமாக போலி வாக்களர்கள் சேர்க்கப்பட்டதாக மனுக்கள் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவை  கண்டு கொள்ளப்படவில்லை ராஜேஷ் லக்கனியால்.
பின்னர் திமுக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையம்,டெல்லியில் மனு போலி வாக்காளர் சேர்ப்பு ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டதால் வேறு  வழியின்றி 1.5 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டு பிடிக்கப் பட்டு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது.
அந்த நீக்கத்தில் பல திமுகவினர் பெயர்கள்தான் இருந்ததாகவும் கூட செய்திகள் வந்தன.இந்த நீக்கல் செயல் கூட தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அவசரமாக செய்யப்பட்டன.அப்படி என்றால் குளறுபடிக்கு குறைவு இல்லாமல் இருக்குமா?
அப்படியிருந்தாலும் கூட மீதி லட்சக்கணக்கான போலி வாக்களர்களுடனே 2016 தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து ஜெயாலலிதாவுக்கு தங்கள் எண்ணப்படியே பட்டமும் சூட்டி விட்டது.
லட்சக்கணக்கான போலி வாக்களர்களுடன் நடத்தப்பட்ட இத்தேர்தல் சட்டப்படி செல்லுபடியாகுமா?
இடி அமீனும்,முசோலினியும் தேர்தல்களை சந்திக்கையில் வாக்காளர் பட்டியல்கள் அவருக்கு வாக்களிப்பவர்கள் பெயர்களை மட்டும்தான் தாங்கியிருக்குமாம்.
அந்த வகையில் பார்த்தால் நம் வாக்களர் பட்டியல் சற்று மக்களாட்சி தன்மையுடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பெருமைபட்டுக்கொள்ளலாம். 
இத்துடன் தேர்தல் ஆணையம் வழமைப்படி சும்மாயிருந்தால் கூட பரவாயில்லாமல் இருந்திருக்கும்.தற்போது வாக்காளர்ப்பட்டியலை சரி செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வதாக அறிக்கை வந்துள்ளது.
அதற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பதில் தெரிவித்த அறிக்கை இனி.:

 "தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறது. 
அந்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைச் செம்மைப் படுத்த வேண்டும். அதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் இறந்தவர்கள் பட்டியலை எடுத்து, வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படி இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படா விட்டால், அவர்களது பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். 
அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் இருப்பதையும் கண்டறிய வேண்டும். ஒரே பெயரில் உள்ள வாக்காளர் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி ஆகிய ஆவணங்களை வைத்து சரி பார்க்க வேண்டும். 
இப்படி ஒரே பெயரில் அனைத்து தகவல்களும் ஒரே மாதிரி இருந்தால், அந்த நபர் எந்த முகவரியில் தன்னுடைய பெயர் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ, அந்த விலாசத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இது போன்ற எ, எஸ், டி (ஆப்சென்ட், ஷிப்ட், டெட்) லிஸ்ட் எடுத்து வீடு வீடாக வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று விசாரிக்க வேண்டும். அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அந்த விலாசத்தில் யாரும் இல்லாமல் இருப்பவர்கள், வீடு மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்” என்றெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தொடருகிறது.

இந்த உத்தரவைப் படிக்கும்போது, “குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. 
தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின், தற்போது தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த உத்தரவு பிறப்பித்து என்ன பயன்?

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் பற்றியும், முறைகேடுகள் பற்றியும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எத்தனை மனுக்கள் தரப் பட்டன? 
தமிழக வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய மோசடி இருக்கிறது என்றும், இந்தியத் தேர்தல் ஆணையம் தவறுகளைக் களையவேண்டும் என்றும் 23-1-2016 நானே நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.

வாக்காளர் பட்டியல் பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” (21-1-2016) - “2016இல் தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்” என்ற தலைப்பிலேயே ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. 
அதில் நான்காண்டுகளில் அதாவது 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, தற்போது 2016 ஜனவரியில் 22 சதவிகித வாக்காளர்கள் அதிகமாகியிருப்பதாகக் கூறப் பட்டிருந்தது. 

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில் 20-1-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி, அதாவது 75.56 சதவிகிதம் பேர். 
இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை.

2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 23.4 சதவிகிதம் பேர். 
15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 6 சதவிகிதம் பேர். 
எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள் 23.4 + 6 = 29.4 சதவிகிதம் பேர். 
மக்கள் தொகையில், மீதம் உள்ள 70.40 சதவிகிதத்தினரே, வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள வாக்காளர் பட்டியலில் 75.56 சதவிகிதம் பேர் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது. இதிலிருந்து 5.16 சதவிகிதம் பேர், 
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாதவர்கள் அதாவது போலி வாக்காளர்கள், வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 
இந்தக் கணக்கின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில், சுமார் 40 இலட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 
இது “டைம்ஸ் ஆப் இந்தியா”  வெளியிட்டிருந்த ஆதார பூர்வமான செய்தி.

“இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் தந்துள்ள விவரப்படி - தேர்தல் ஆணையம் மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 71.16 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிட்டிருந்தது. 
அந்தக் கணக்கை எடுத்துக் கொண்டால் கூட, தேர்தல் ஆணையம் அனுமானித்ததை விட 4 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின்படி பார்த்தால், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 31 இலட்சமாகும் என்று எழுதியிருந்தது. 

வாக்காளர் பட்டியல்படி பொதுவாக ஒரு தேர்தலுக்கும் அடுத்து வரும் தேர்தலுக்கும் இடையே 10 முதல் 12 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலை விட இப்போது 22 சதவிகிதம் அளவுக்கும் கூடுதலாக வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்த அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாகி இருப்பதற்கு என்ன காரணம் கூறப்படுகிறதென்றால், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கூடுதலான பேர் கட்டடத் தொழில் செய்து வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக, வருகை புரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. 
ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் கட்டிடத் தொழில் முன் எப்போதையும் விட வளர்ந்து விட்டதாகவோ, வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடத் தொழில் செய்து பிழைப்பதற்காக அதிகம் பேர் இங்கே வந்து விட்டதாகவோ செய்தி எதுவும் இல்லை, மாநிலத்தில் தொழிற் சாலைகளும் அதிகமாக உருவாகி, புதிய வேலை வாய்ப்புகள் பெருகிடவில்லை என்பது தான் உண்மை. இதிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திலே அதிகம் பேர் குடியேறி விட்டார்கள் என்பதால் வாக்காளர் எண்ணிக்கையும் அபரிமிதமாக உயர்ந்து விட்டது என்ற தகவலும் உண்மைக்குப் பெரிதும் மாறானது.

இந்த விவரங்களை யெல்லாம் எனது அறிக்கையில் குறிப்பிட்டு, ஆளும் அதிமுக வினரின் தலையீட்டில் ஏராளமாகப் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று தி.மு. கழகத்தின் சார்பில் தெரிவித்திருந்தேன். 

கழகத்தின் சார்பில் முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான போலி வாக்காளர் பற்றிய இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. நானே இதுகுறித்து உறுதியான புள்ளி விவரங்களுடன் மூன்று அறிக்கைகள் வெளியிட்டிருந்தேன். 
9-2-2016 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக சென்னையில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர், இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப் பட்டுள்ளார்கள். 
நாம் தந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு தற்போது போலி வாக்காளர்கள் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 1 இலட்சத்து 85 ஆயிரம் பேர் என்றால், இன்னமும் நீக்கப்படாமல் உள்ள போலி வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்பதைத் தீவிரமாக கண்டு பிடித்து உண்மையான ஜனநாயக அடிப்படையில் தேர்தலை நடத்த நுhறு சதவிகிதம் உறுதி செய்யப்பட வேண்டாமா? 
இதைப் போலவே மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலின் காரணமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 
குறிப்பாக சென்னையிலே எடுத்துக் கொண்டால் மைலாப்பூர் தொகுதியில் மட்டும் 16,798 வாக்குகள் -
 விருகம்பாக்கத்தில் 17,831 வாக்குகள் - 
அண்ணா நகரில் 14,830 வாக்குகள் - 
தியாகராயநகரில் 13,823 வாக்குகள் - 
பெரம்பூரில் 13,323 வாக்குகள் 
என்ற அளவுக்கு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காணத் திகைப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தாலேயே நாம் தந்த புகார்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தகுதியில்லாத அந்த வாக்காளர்களை நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 
இதே போல தமிழகத்திலே உள்ள மற்ற தொகுதிகளிலும் உள்ள போலி வாக்காளர்களும் முழுமையான சரி பார்த்தலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களை நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் உடனடியாக களையப்பட வேண்டும். தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்றும்; ஆங்காங்கே கழகத் தோழர்கள், தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன? 
கடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையமே சோதித்துப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன. 
மற்ற தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆவடியில் 19,723 -
 கொளத்துhரில் 5,588 - 
திருப்போரூரில் 13,404 -
 பாலக்கோட்டில் 20,199 -
 வானுhரில் 10,768 - 
விக்ரவாண்டியில் 11,592 - 
கள்ளக் குறிச்சியில் 21,247 - 
அவினாசியில் 23,270 - 
திருப்பூர் (வடக்கு) - 24,286 - 
திருப்பூர் தெற்கு 12,024 - 
பல்லடத்தில் 28,805 - 
உடுமலைப்பேட்டையில் 14,243 - 
குன்னம் 21,231 - 
சோளிங்கர் 22,227 - 
பெரம்பலுhர் 25,105 - 
காங்கேயம் 23,956 - 
கலசப்பாக்கம் 20,098 
என்று ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல்களில் போலி வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதைப் பார்த்துக் கொள்ளலாம். 
இவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள். இந்தப் பட்டியலின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் கடந்த மாதத்தில் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கையையும் அவசர அவசரமாக நடத்தி முடிவுகளை வெகுவேகமாக அறிவித்துள்ளது. 
மேலும் போலி வாக்காளர்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ள இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலே தான், 2014 நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி 37 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முடிவுகளை அறிவித்தார்கள்.

அவ்வாறு அறிவித்து விட்டு, தற்போது திடீரென்று விழித்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடந்து முடிந்த இமாலயத் தவறுக்கு யார் பொறுப்பு? 
எத்தனை முறை கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் தரப்பட்டன? 
அதன் கதி என்ன? 
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமே, தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் சரியாக இந்தப் பணியைச் செய்யவில்லை என்பதை இப்போது காலம் கடந்தாவது ஒப்புக் கொள்கிறதா? 
சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு, சரியான துhய்மையான வாக்காளர் பட்டியல் தானே அடிப்படை! 
முறையான வலிமையான அஸ்திவாரம் இல்லை என்றால், அதன் மீது எழுப்பப்படும் கட்டிடம், மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிடம் போல சரிந்து சாய்ந்து மண்ணுக்குள் தானே புதைந்து விடும்! 
பல இலட்சம் போலி வாக்காளர்கள் நிறைந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயகச் செயல் முறைகளையே கேலிக் கூத்தாக்கி விடாதா? 

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...