ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மோடி அரசு இயந்திரமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து இந்து ராஷ்ட்ரா எனும் சமூக அமைப்பை உருவாக்க முயல்கிறது என்பது அனைவரும் அறிந்ததே! இந்து ராஷ்ட்ரா கோட்பாடு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்துக்களிடையேயும் கூட பிற்படுத்தப்பட்ட, தலித், ஆதிவாசி மக்களுக்கு எதிரானது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.
தனது இந்து ராஷ்ட்ரா கோட்பாடுகளை அமலாக்கிட ஆர்.எஸ்.எஸ். இரு முனைகளில் செயல்படுகிறது. ஒன்று, மக்களிடையே நேரடியாக செயல்பட்டு மத மோதல்களை உருவாக்குவது. இன்னொன்று, தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அரசு இயந்திரத்தை வலுவாக பயன்படுத்தி கொள்வது. தனது கருத்தியலை மக்கள் மீது திணிக்க அரசு இயந்திரத்தின் கட்டுப்பாடு தன் கைகளில் இருக்க வேண்டும் என்பதை சங்  புரிந்து வைத்துள்ளது. குறிப்பாக 1998-2004 வாஜ்பாய் ஆட்சியிலும் அதற்கும் மேலாக 2014 மோடி ஆட்சியிலும் அரசு இயந்திரத்தை தனது ஆளுமைக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயற்சிக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.
இந்திய அரசியல் சட்டம் உழைப்பாளி மக்களுக்கு ஆதரவானது என்று கூறிவிட முடியாது. பல குறைகளை கொண்டுள்ளது. எனினும் விடுதலைக்கு பின்பு அச்சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது பன்முகத்தன்மையை உயர்த்தி பிடித்தது. காந்திஜியின் படுகொலை பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தனிமைப்பட்டிருந்தது. அம்பேத்கார் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை நேரு தலைமையிலான காங்கிரஸ் மட்டுமல்லாது, பொதுவுடமை கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளும் ஆதரித்தன. எனவே பன்முகத்தன்மையை உயர்த்திபிடிக்கும் அரசியல் சட்டம் உருவானது. மக்கள் ஏற்றுக்கொண்டனர்
இந்த அரசியல் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அன்றைக்கே நிராகரித்தது. ஆர்.எஸ்.எஸ்.ன் பத்திரிக்கையான 30.11.1949 ஆர்கனைசர் இதழில் இந்திய அரசியல் சட்டத்தின் ஆவணமாக திகழ்வதற்கு தகுதி படைத்தது மனுஸ்மிருதிதான் என்ற வாதம் வலுவாக முன்வைக்கப்பட்டது. இந்த மனுஸ்மிருதி நால் வர்ண பேதங்களை உயர்த்தி பிடிக்கிறது. அதன் அடிப்படையில் உருவான சாதிய அமைப்பை ஆர்.எஸ்.எஸ். வலுவாக ஆதரிக்கிறது. சாதிய அமைப்பு குறித்து கோல்வால்கர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“நமது மகத்தான தேசிய (இந்துத்துவ) வாழ்வில் சாதியம் என்பது பன்னெடுங்காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது. சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் பிணைப்பாக சாதியம் செயல்படுகிறது.” (சிந்தனை கொத்து/பகுதி-2/ அத்தியாயம்10).
மூவர்ண கொடியையும் ஆர்.எஸ்.எஸ். ஏற்றுகொண்டதில்லை. காவிதான் அவர்களது கொடியின் நிறம். ஆர்.எஸ்.எஸ்.ன் தலைமையகமான நாக்பூரில் 2000ம் ஆண்டுதான் முதன் முதலாக மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. தனது நிகழ்ச்சி நிரலை அமலாக்க இந்திய அரசியல் சட்டத்தை சிதைக்க வேண்டிய தேவை ஆர்.எஸ்.எஸ்.க்கு உள்ளது. அதற்கு அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ். பிடியில் மோடி அரசாங்கம்
2014ம் ஆண்டிற்கு பிறகு அரசு இயந்திரத்தை வஞ்சகமாக பயன்படுத்தும் வாய்ப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வலுவாக கிடைத்துள்ளது. அதனை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தி கொள்கிறது எனில் மிகை அல்ல. இந்திய அரசு இயந்திரத்தின் உயர்ந்தபட்ச பொறுப்பு ஜனாதிபதி மற்றும் உதவி ஜனாதிபதி பதவிகள் ஆகும். இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஜனாதிபதியும் உதவி ஜனாதிபதியும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். இந்திய அரசு இயந்திரத்தின் இன்னொரு முக்கிய படிமம் ஆளுநர் பதவி!  இந்தியாவில் 35 ஆளுநர்கள் உள்ளனர். இவர்களில் 25 பேர் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள். இவர்கள்தான் இந்திய அரசியல் சட்டத்தை காக்க வேண்டிய கடமை படைத்தவர்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் என்ற முறையில் இவர்கள் இதே அரசியல் சட்டத்தை நிராகரிப்பவர்கள். எனவே அரசியல் சட்டத்துக்கு என்ன பாதுகாப்பு எனும் கேள்வி எழுகிறது.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் அவர் அமைச்சரவையில் பலரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். இந்தியாவில் 29 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 29-ல் நான்கு மாநிலங்களில்தான் பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகள் ஆட்சியில் உள்ளன. தெலுகு தேசம் தற்பொழுதுதான் பா.ஜ.க.வை எதிர்க்க தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் பா.ஜ.க. தனியாக அல்லது கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி செய்கிறது. எனவே, மத்தியிலும், பல மாநிலங்களிலும் அரசு இயந்திரத்தின் கடிவாளம் பா.ஜ.க. மூலமாக ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.
ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கைகளை மோடி அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து சுனில் பையா ஜோஷி, சுரேஷ் சோனி, தத்தராய்யா ஹோஸ்பேல், கிருஷ்ண கோபால், ராம்மாதவ் ஆகியோரும் பா.ஜ.க. தரப்பிலிருந்து ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா, ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். பல முக்கியமான அமைச்சகங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் இணைக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுகளை கிருஷ்ண கோபால் ஒருங்கிணைக்கிறார். இந்த ஏற்பாடுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். தனது ஆளுமையை அரசு இயந்திரத்தில் நிலைநாட்ட முயல்கிறது.
அரசு இயந்திரம் மூலம் திருத்தப்படும் இந்திய வரலாறு
2017ம் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் வரலாற்று ஆசிரியர்களின் கூட்டத்தை பா.ஜ.க. கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா கூட்டினார். இந்த கூட்டத்தின் நோக்கம்: “இந்திய வரலாறை திருத்தி எழுதுவது”. தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க ஊழியர் என பெருமையுடன் அழைத்து கொள்கிறார் இவர். “நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்துதான் வழிகாட்டுதல் பெறுகிறேன்” என இவர் சொல்லிக்கொள்வதில் என்ன ஆச்சர்யம்?
ஏன் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும்? ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் வைத்யா கூறுகிறார்:
“இந்திய வரலாற்றின் உண்மையான வண்ணம் காவிதான். இதனை நிலைநாட்ட கலாச்சார மாற்றம் உருவாக்கவேண்டியுள்ளது. இதற்கு இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது அவசியம்.”
இதற்காக 14 பேர் கொண்ட குழு போடப்பட்டுள்ளது. இதன் தலைவர் கே.என். தீட்சீத் தொல்லியல் துறையின் முன்னாள் மூத்த அதிகாரி. மற்றவர்களும் இந்துத்துவா ஆதரவாளர்கள் என்பதை கூறத் தேவையில்லை. இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் நாடு முழுதும் உள்ள பாடப்புத்தகங்களில் இணைக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர். “இராமாயணம் கற்பனை அல்ல; அது ஒரு வரலாற்று ஆவணம்; இந்து ஆன்மீக நூல்கள் அனைத்தும் வரலாற்று பெட்டகங்கள்தான்.” என்கிறார் மகேஷ் சர்மா. இவர் தலைமை தாங்கும் கலாச்சார அமைச்சகத்திற்கு ஆண்டுக்கு ரூ3,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. வரலாற்றை திருத்தி எழுத இந்த நிதி போதாதா என்ன?
வரலாறு திருத்தி எழுதும் முயற்சி ஏன்?
இதுவரை உள்ள அறிவியல் ஆதாரங்கள் இந்தியா எனும் தேசம் உருவானதில் இடப் பெயர்வுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என நிலைநாட்டுகின்றன. ஆரியர்கள் இங்கே புலம் பெயர்ந்தவர்கள்தான் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் முடிவு. அதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் மேலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்துள்ளன. ஆனால் இந்துத்துவ வாதிகள் இதனை மறுக்கின்றனர். ஆரியர்கள்தான் பூர்வகுடி மக்கள் என வலுவாக நிலைநாட்ட முயல்கின்றனர். இதற்காகவே வரலாற்றை திருத்தி எழுதும் வஞ்சக செயல்.
தொடக்க கால வரலாறு மட்டுமல்ல; இந்துத்துவவாதிகளுக்கு மத்திய கால வரலாறும் மாற்றப்பட வேண்டும். மத்திய காலம் மிகவும் சிக்கல் நிறைந்த கால கட்டம். சமணம், பவுத்தம், சைவம் , வைணவம், இஸ்லாம் ஆகிய பெரும் மதங்கள் தமது மேலாண்மையை நிலைநாட்ட கடுமையாக போராடின. இந்த முரண்பாடு பல மோதல்களை உருவாக்கின. அதே சமயத்தில் பல ஒற்றுமைகளையும் உருவாக்கியது. மதத்தின் அடிப்படையிலும் கொள்ளைக்காகவும் கோவில்களை அழித்த கஜனி முகம்மதுவின் வரலாறும் உண்டு. கோவில்களை பாதுகாத்த இப்ராகிம் லோடி, துக்ளக், அக்பர், திப்பு சுல்தான் ஆகியோரின் வரலாறும் உண்டு. மறுபுறத்தில் மசூதிகளை கட்டிகொடுத்த விஜயநகர மன்னர்கள் மற்றும் மராட்டிய வீரர் சிவாஜி ஆகியோரின் வரலாறும் உண்டு.
மத்திய காலகட்டத்தில்தான் மதத்தின் பெயரால் சைவ மற்றும் வைணவ மதங்கள் ஏராளமான சமண மற்றும் பவுத்த கோவில்களை அழித்தன. சங்பரிவாரத்திற்கு வரலாற்றின் இந்த பக்கங்களை அழிக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. எனவே, வரலாற்றை மாற்றி எழுத அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. அதற்கு மோடி அரசாங்கம் ஒத்துழைக்கிறது. இந்துத்துவ தேசியத்தை இந்திய தேசியமாக நிலைநாட்டுவதற்கு இத்தகைய வஞ்சக முயற்சிகள் தேவைப்படுகின்றன.
இந்த கருத்தியலுக்கு எதிராக மாற்று கருத்தியலை முன்வைக்கும் நேரு பல்கலை கழகம். முடக்கப்படுகிறது. நேரு ஆராய்ச்சி மையம், இந்திய வரலாற்று ஆய்வு மையம் போன்ற பல ஆய்வு மையங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். சமஸ்கிருதத்தை முன்னெடுக்க “சான்ஸ்கிரீட் பாரதி”” எனும் அமைப்பு தீவிரமாக செயல்படுகிறது. 2016-ம் ஆண்டு அனைத்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்கள் சமஸ்கிருதத்தில் பாடங்களை தொடங்க வேண்டும் என கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. 2018ம் ஆண்டு ஜனவரியில் கான்பூர் ஐ.ஐ.டி. சமஸ்கிருதம், இந்து ஆன்மிக ஆவணங்கள் குறித்து ஆடியோக்களை வெளியிட்டது.
நீதி மற்றும் நிர்வாகத் துறைகளில்!
அரசு இயந்திரத்தின் இன்னொரு முக்கிய பகுதி அதிகாரிகள் அடங்கிய நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகும். நீதித் துறையில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலையீடுதான் மூத்த நான்கு நீதிபதிகளை பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டியது. இந்துத்துவ ஆதரவாளர்களாக உள்ள பலர் உச்ச நீதிமன்றத்தில் கூட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி ஜோசப் போன்றவர்கள் வாய்ப்பு மறுக்கப்படுகின்றனர். உயர் அதிகாரிகள் மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ரிசர்வ் வங்கியில் ரகுராம் ராஜனின் பதவிகாலம் நீட்டிக்கப்படாததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று சங் பரிவாரத்தின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர் எதிர்த்ததும் ஒன்று.
பாஜக அரசு இயந்திரம் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக செயல்பட்டதற்கு சில ஆதாரங்கள்:
 • அந்தமான் விமான நிலையத்திற்கு சவார்க்கர் பெயரை சூட்டியது.
 • சண்டிகார் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயரை சூட்ட பஞ்சாப் அரசாங்கம் முடிவு செய்த பொழுது, அதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பெயரை சூட்ட ஹரியானா அரசாங்கத்தின் முயற்சி.
 • ஹெட்கேவர் வீட்டை அதிகார பூர்வ சுற்றுலாத் தலமாக ஆக்கியது.
 • தீனதயாள் உபாத்யா உட்பட பல இந்துத்துவா தலைவர்களின் பெயரில் மத்திய அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
 • அரசு இயந்திரத்தின் உதவியுடன் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 50 வெளிநாடுகளின் தூதுவர்களை ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் பகவத் சந்தித்தது.
 • மும்பை பங்குச் சந்தை கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் உதவியுடன் மோகன் பகவத் பேசியது.
 • 2014ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைகாட்சியில் தனது தசரா உரையை மோகன் பகவத் பேச அனுமதித்தது.
 • ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை நடத்த உடற்பயிற்சி மையங்களை ஹரியானா அரசாங்கம் உருவாக்கியது.
 • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பா.ஜ.க. மூலமாக ஆர்.எஸ்.எஸ். தலையிடுவது.
சுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட  அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. 
அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது. 
அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல! 
மதச்சார்பின்மை சக்திகள் இந்த சவாலை முறியடிக்க வேண்டும். மக்கள் ஒன்றுதிரளும்போது அது சாத்தியமான ஒன்றுதான்!
                                                                                                                               அன்வர் உசேன்

அன்னிய முதலீடு...?

அன்னிய முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த குவைத் குழுவில் இடம்பெற்ற அதிகாரியின் பர்சை பாக்., செயலாளர் திருடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குவைத்தை சேர்ந்த குழு ஒன்று, பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து இஸ்லாமாபாத்தில், அந்நாட்டு நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இது முடிந்த சிறிது நேரத்தில், குழுவில் இடம்பெற்ற ஒரவரின் பர்ஸ் காணவில்லை என புகார் கூறப்பட்டது. 

இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடந்த அறையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர சோதனை நடத்தினர். 
இதில் பர்ஸ் கிடைக்காத காரணத்தினால், அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது,கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பின்னர், நிதி அமைச்சகத்தில் செயலர் அளவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், மேஜையில் இருந்த அந்த பர்சை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. 

விசாரணையில், பாகிஸ்தான் முதலீடு துறை செயலராக பணியாற்றும் ஜரார் ஹைதர் கான் என தெரியவந்தது. 

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 
==========================================================================================
 • இன்றுடன் ஆண்ட்ராய்ட் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. 
 • பின்லாந்து சிறுவன் குளிராமல் இருப்பதற்காக தனது பேண்டில் சிறுநீர் கழித்தானாம் அந்தக்கதைதான் ஆண்ட்ராய்டின் கதை என்று 2010ம் ஆண்டில், அப்போதைய நோக்கியாவின் சி.இ.ஓ.வாக இருந்த அன்ஸ்ஸி வன்ஜோகி கூறினார். ஆனால் அதையெல்லாம் உடைத்து ஆண்ட்ராய்ட் வளர்ந்து நிற்கிறது.

ஆண்ட்ராய்ட் இன்றைய நவீன உலகின் தவிர்க்கமுடியாத ஒன்று. 
ஒன்றுக்கும் உதவாது, தோல்வியடைந்துவிடும் என பத்து ஆண்டுகளுக்குமுன் சொல்லப்பட்டது. 
ஆனால் இன்று ஆண்ட்ராய்ட் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.


ஆண்ட்ராய்ட் பற்றிய சில குறிப்புகள்            

 • ஆண்ட்ராய்டை பலர் கூகுள் நிறுவனம் தயாரித்ததாக நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் 2005ல் ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கினர்.
   
 • பயன்பாட்டிலுள்ள மொபைல்களில் 88 சதவீத மொபைல் ஃபோன்கள் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஐ சார்ந்தவை.
   
 • ஆண்ட்ராய்ட் உண்மையில் டிஜிட்டல் கேமிராக்களுக்கான ஓ.எஸ். ஆகதான் தயாரிக்கப்பட்டது. 
   
 • லினக்ஸ் என்ற ஓ.எஸ். ஐ அடிப்படையாக வைத்துதான் ஆண்ட்ராய்ட் உருவானது.
   
 • முதல் ஐந்து ஓ.எஸ்.கள் பிளாக்பெர்ரி போன்று இருக்கும்.
   
 • முதன்முதலில் ஹெச்.டி.சி (HTC) ஜி1 மொபைலில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
   
 • ஆண்ட்ராய்டின் அடையாளமான பச்சை பொம்மையின் பெயர் பக்டிராய்ட் 
   
 • 2 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயன்பாட்டாளர்கள் ஆண்ட்ராய்டை பயன்படுத்துகின்றனர்.

   
 • ஆண்ட்ராய்ட் 1.0                  (குறிப்பிட்ட பெயர் இல்லை)                           23.09.2008
   
 •                   1.1                               பெடிட்ஃபோர்                                                         09.02.2009  
   
 •                   1.5                              கப்கேக்                                                                      27.04.2009 
   
 •                   1.6                              டோனட்                                                                      15.09.2009
   
 •               2.0 - 2.1                          எக்லைர்                                                                     26.10.2009
   
 •                   2.2                              ஃப்ரோயோ                                                               20.05.2010
   
 •              2.3 - 2.3.7                       ஜிஞ்சர் பிரட்                                                             06.12.2010
   
 •             3.0 - 3.2.6                       ஹனிகாம்ப்                                                               22.02.2011 
   
 •             4.0 - 4.0.4.                      ஐஸ்க்ரீம் சேண்ட்விச்                                            18.10.2011
   
 •             4.1-4.3.1                        ஜெல்லிபீன்                                                                  09.07.2011 
   
 •            4.4-4.4.4                         கிட்கேட்                                                                         31.10.2013 
   
 •           5.0-5.1.1                          லாலிபாப்                                                                      12.11.2014
   
 •           6.0-6.0.1                          மார்ஸ்மல்லோ                                                           05.10.2015 
   
 •           7.0-7.1                            நோகட்                                                                             22.08.2016 
   
 •           8.0-8.1                            ஓரியோ                                                                           02.08.2017 
   
 •           9.0                                            பீ                                                                                06.082018 
  வியாழன், 27 செப்டம்பர், 2018

  கூவத்தூர் ரகசிய வீடியோ!

   டீல் பேசிய எடப்பாடி!
  ரட்டை இலையில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸை கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. சென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல் துறையை மட்டுமல்லாமல், பிற சமூகத்தி னரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அச் சமூகத்தினர் கொந்தளித்தனர். தென் மாவட்டங்களில் கருணாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் நாடார் சமூகம் வரிந்துகட்டி வருவதாக அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியது மாநில உளவுத்துறை. இந்த நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் உயரதிகாரி களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி.


  ""முக்குலத்தோர் வாக்குகள் இனி சசிகலா-தினகரன் தரப்புக்குத்தான் போகும். அதனால் கருணாஸை கைது செய்வதால் அரசியல்ரீதியாக நமக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மாறாக, மாற்று சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் கருணாஸ் "டச்'சில் இருப்பதும் எடப்பாடியை சீண்டியது. ஆலோசனைக்குப் பின் சபாநாயகர் தனபாலுக்கு கைது தகவலை அனுப்பிய கையோடு, காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது'' என்றனர் கோட்டை அதிகாரிகள்.


  கருணாஸ் தரப்பில் நாம் விசாரித்த போது, ""கடந்த ஒரு வருடமாகவே கரு ணாஸுக்கும் எடப்பாடிக்கும் மறைமுகமாக யுத்தம் நடந்துவருகிறது. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படையை அரசியல் ரீதியாக ஒடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார் எடப்பாடி. கருணாஸின் திருவாடானை தொகுதி ராமநாதபுர மாவட்டத் தில் இருக்கிறது. மாவட்டத்தின் உயரதிகாரிகளான கலெக்டர், போலீஸ் எஸ்.பி. தொடங்கி கீழ்நிலை அதிகாரிகள்வரை கருணாஸுக்கு ஒத்துழைக்கக் கூடாது என கோட்டையிலிருந்து உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இதனால், தொகுதி சார்ந்த எந்தப் பணிகளையும் கருணாஸால் செய்ய முடியவில்லை. இதனை எடப்பாடி யிடம் சொல்வதற்காக பலமுறை முயற்சி செய்தும் அப்பாயின்ட்மெண்ட் மறுக்கப்பட்டது.


  சீனியர் அமைச்சர்கள் இரண்டு பேரை சந்தித்த கருணாஸ், "முதல்வர் என்னை எதிரியாக நினைத்தால் அவரை நானும் எதிரியாக நினைக்க வேண்டிய திருக்கும். என்னை அழிக்க நினைத்தால், கூவத்தூரில் நடந்தது சம்பந்த மான ஆதாரங் களை பொது வெளியில் வெளியிட்டு விடுவேன்' எனச் சொல்லி விட்டு வந்தார். இதனை எடப்பாடி யிடம் சீனியர் அமைச்சர்கள் தெரிவித்தும் பாசிடிவ்வான பதில் இல்லை என்பது கருணாஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளது. "உங்கள் மீது ரொம்பவும் காட்டமாகவே இருக்கிறார் முதல்வர். ஆதாரங் களைத் தந்தால் ஒரு வேளை அவர் சமாதான மாகலாம்' எனச் சொல்ல... ஆதாரங்களை தர மறுத்துவிட்டார் கருணாஸ்.


  வீடியோ ஆதாரங்களைப் பறிப்பதற்காக கருணாஸுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டி, அவரைச் சுற்றியிருக்கும் வழக்கறிஞர்கள் தாமோதரகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீதும் வழக்கு களைப் புனைந்தது போலீஸ். இவர்களைத் தூக்கி குண்டாசில் போட்டால்தான் கருணாஸ் அடங்குவார் என கங்கணம் கட்டிக்கொண்டு எடப்பாடியின் காவல்துறை விளையாடியது. இதனை எதிர்த்து டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர் கருணாஸ் தரப்பினர். ஆனாலும், பொய் வழக்கு போடுவது நிற்கவில்லை.


  அ.தி.மு.க. ஆட்சி கவிழாமல் இருப்பதற் காக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியபோது, சசிகலாவின் திட்டப்படி கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதிலும் டீலிங் பேசுவதிலும் கருணாஸுக்கு பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. தனது முக்குலத்தோர் புலிப்படையினரை வைத்து போயஸ் கார்டன் முதல் கூவத்தூர் ரிசார்ட் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் கருணாஸ். மேலும், கூவத்தூரிலும் கூவத்தூருக்கு வெளியே யும் எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாப்பதில் கருணாஸின் பங்களிப்பு நிறைய இருந்திருக்கி றது. குறிப்பாக யார், யாருக்கு என்ன செய்யப் பட்டது?, என்ன மாதிரியான பேச்சுவார்த்தை கள் நடந்தன, கொடுக்க வேண்டியதை யாரிடம் ஒப்படைக்க வேண்டும், கூவத்தூரில் எடப்பாடியின் செயல்பாடுகள் எப்படி இருந் தன? ரிசார்ட்டில் இரவு நேரத்தில் நடந்த விவாதங் கள் என பல விஷயங்களில் கருணாஸின் புலிப்படை யினர் சம்பந்தப்பட்டுள்ளனர். முழு விவரமும் அவர்களுக்குத் தெரியும்.


  இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அந்த வீடியோக்கள் பொதுவெளியில் வெளி யானாலோ அல்லது தி.மு.க. தரப்பிடம் சிக்கி னாலோ முதல்வரான பின் சசிகலாவையே டபாய்த்த எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்த பயம்தான் எடப்பாடியை கருணாஸுக்கு எதிராகக் கோபப்பட வைக்கிறது. அந்த வீடியோக் களை பறிப்பதற்காகத்தான் முதலில் கருணாஸை சுற்றியிருக்கும் வழக்கறிஞர்களை வளைத்து உள்ளே தள்ளிவிட்டு, அதன்பிறகு கருணாஸை வளைப்பது என திட்டமிட்டிருந்தது எடப்பாடி யின் காவல்துறை. அதற்குள் உணர்ச்சிவயப்பட்டு கருணாஸே மாட்டிக்கொண்டு விட்டார். இப்போது, கூவத்தூர் வீடியோக்களை கேட்டு வேலூர் சிறையில் கருணாஸுக்கு டார்ச்சர் தரப் படுகிறது'' என பின்னணிகளை விவரிக்கின்றனர் கருணாஸை சுற்றியிருக்கும் வழக்கறிஞர்கள்.

  ======================================================================================
  "தேச விரோதிகள்" ?
  உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளில் வாழும் மக்களிடம் அவர்களின் மிகப்பெரிய கவலை எது என்று கோல்கீப்பர்ஸ் குளோபல் யூத் அவுட்லுக் எடுத்த ஆய்வில்  கேட்கப்பட்டது.

  மொத்தம் 40 ஆயிரம் கேட்கப்பட்ட 40 ஆயிரம் பேரில் 2800 பேர் இந்தியர்கள். 
  இந்த ஆய்வில் இந்தியர்களின் மிகப்பெரிய கவலை வேலையில்லாத் திண்டாட்டம்,ஆட்ச்சியாளர்களின் ஊழல்,நிர்வாகத்திறமையின்மை ,மதவாதம்  என்று தெரியவந்துள்ளது. 

  இந்தியாவைப் போலவே நைஜீரியாவிலும் இதே பிரச்சனைதான் மிகப்பெரிய கவலை என்று கூறியிருக்கிறார்கள்.
   பல நாடுகளில் பாதுகாப்பின்மையும், பொருளாதார நிலையற்ற தன்மையும், சுற்றுச்சூழலும், ஊழலும் மிகப்பெரிய பிரச்சனையாக கூறியிருக்கிறார்கள்.


  இந்தச் ஆய்வைப்  பார்த்ததும் மோடி என்ன சொல்வார்? 
  "அவர் சொன்ன பக்கோடா விற்கும் தொழிலை வேலைவாய்ப்பாக கருதி, எல்லையில் படைவீரர்கள் படும் பாட்டை நினைத்தால்  இந்தக் கவலை இல்லாமல் போயிருக்கும்.,அப்படி செய்யாதவர்கள் தேச விரோதிகள்"  என்றுதான் சொல்வார்.!
  ==========================================================================================

  ரபேல் விமான ஒப்பந்தம்
  தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுப் புது தகவல்கள் வெளியாகி விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. 
  இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், எதற்காக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தோம் என்பது குறித்தான ரகசியத்தை உடைத்துள்ளார். 
  8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலைன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான முறையற்றப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 
  ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது.
  v72mjkg
  கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். 
  இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டியது.

  இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பு, ‘எந்த வித ஆதாரமுமின்றி காங்கிரஸ் தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய்களை சொல்லி வருகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தை போடுவது குறித்து முதன் முதலில் பேச ஆரம்பித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான்’ என்று பதிலடி கொடுத்தது. 

  இப்படி இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, ‘இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது. 
  இது குறித்து எங்களுக்கு எந்த தேர்ந்தெடுக்கும் உரிமையும் தரப்படவில்லை’ என்று பகீர் தகவலை தெரிவித்தார்.  
  n8ueplt
  ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதியளவு நிதியான 30,000 கோடி ரூபாயை டசால்ட் நிறுவனம், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து விமானத்துக்குத் தேவையான பாகங்களை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  இதையடுத்து தான், இந்தியாவில் விமான பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் குழுமத்தை தேர்ந்தெடுத்தது டசால்ட். 

  இது குறித்து டசால்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர் "‘ரிலையன்ஸ் குழுமத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தற்கு பல காரணங்கள் இருந்தது. எம்.சி.ஏ உடன் தங்களை பதிவு செய்திருந்தது ரிலையன்ஸ் குழுமம். மேலும் அவர்களுக்கு நாக்பூரில் நிலம் இருந்தது. அந்த நிலத்திலிருந்து ரன்வே-வுக்கு போவதும் சுலபம். 

  முகேஷ் அம்பானியின் வசமிருந்து ரிலையன்ஸ் குழுமத்தின் விமானத் தயாரிப்பு பிரிவு அனில் அம்பானி வசம் சென்ற பிறகு, அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்’ என்று தெரிவித்துள்ளார். 
  இது ஒருபுறமிருக்க ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் டசால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டேப்பியர், ‘ரஃபேல் ஒப்பந்தத்தை அடுத்து, ஹெச்.ஏ.எல் நிறுவனத்துடன் இணைந்து பணி செய்வது குறித்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்’ என்று பேசினார். 

  அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. 
  இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய டசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நபர், ‘அப்போது எங்கள் நிறுவனத்தின் தலைவர் 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் குறித்து பேசினார். அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நினைத்து அவர் அப்படி பேசினார். 
  அவருக்கு இந்திய ராணுவ அமைச்சகத்திற்குள் என்ன நடக்கிறது என்பது எப்படித் தெரியும்?’ என்றுள்ளார். 

  இந்திய பொதுத் துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்-ஐ வேண்டுமென்றே ரஃபேல் ஒப்பந்தத்திலிருந்து மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

  ஹாலண்டேவின் கருத்து குறித்து மத்திய அரசு தரப்போ, ‘அவர் மீது பிரான்ஸில் பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. எனவே தான் அவரை காப்பாற்றிக் கொள்ள இப்படி பேசியுள்ளார்’ என்று ஹாலண்டே மீதே குற்றம் சாட்டி பேசி மோடியை தப்புவிக்கப் பார்க்கிறது.. 

  புதன், 26 செப்டம்பர், 2018

  மோடி & அம்பானி 1.40 லட்சம் கோடி ஊழல்

  பிஜேபி மோடி & அம்பானி தொடர்புடைய 1.40 லட்சம் கோடி ரஃபேல் விமான ஊழல்

  எளிய விளக்கம் 


  இந்தியா கடைசியாக வாங்கிய போர் விமானம் Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. 

  உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது. 

  2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன. 

  பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை. 

  HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. 

  2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது. 

  புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார். 

  பின் கதை : 

  2015 ஏப்ரலில் உலகம் சுற்றும் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார். 

  126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் மனோகர் பரிக்கர். 

  பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 

  இதில் ஊழல் எங்கிருந்து வந்தது ? விவரமாகப் பார்க்கலாம். 
  1. விலை 
  — முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில். 
  — மோ(ச)டி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்! 

  2. உற்பத்தி 
  — முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் 
  — மோ(ச)டி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பி!

  3. தொழில்நுட்பம் 
  — மேலே குறிப்பிட்டதுபோல, காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும் 
  — மோடி அரசு ஒப்பந்தப்படி, “சிலதனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் ரிலையன்ஸ். 

  4. ஏன் தனியாருக்கு? 
  — காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை நிறுவனம்தான் கூட்டாளி. 
  — மோசடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் கூட்டாளி 

  5. அனுபவம் 
  — எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ளது. ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது. 
  — ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை. 

  6. மோடியின் ஊழல் 
  — 2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம்கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது. 

  — பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை. 

  — ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா. ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா! விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம் 

  — ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும் 

  — ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர். 

  — மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொத்துதுறை நிறுவனம் அல்ல, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லி விட்டார் மோடி. 

  — 2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்? எச்ஏஎல்தானே இருந்திருக்க வேண்டும்? 

  — எச்ஏஎல் நிறுவனத்துக்கு தகுதி கிடையாது, அது சீரழிந்து விட்டது என்று திருவாய் மலர்ந்தார் நிர்மலா சீதாராமன். அதே எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து விமானப்படைக்கு அளித்தபோது பிரதமர் வாழ்த்தியது இப்படி - Induction of indigenously made Tejas fighter jet into the Air Force fills our hearts with unparalleled pride and happiness. I laud HAL & ADA on the induction of Tejas fighter jet. This illustrates our skills & strengths to enhance indigenous defence manufacturing. (1 July 2016) 

  — 2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல் 2018இல் சீரழிந்து விட்டதா? அப்படியானால் அதற்குக் காரணம் இதே சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்? 

  — இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது? மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். 

  — வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோ(ச)டி சர்க்காரில் மட்டுமே சாத்தியம். 

  கடைசியாக ஒரு முக்கியமான விஷயம் : 

  2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோசடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அனில் அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது. ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அனில் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி. (குறிப்பு : 2012 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நிறுவனத்துக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது என பிஜேபியினர் பரப்பி விடுகிறார்கள் ஆனால் அந்த ஒப்பந்தத்தின் ரபேல் விமான ஒப்பந்ததிற்கும் சம்பந்தம் இல்லை, இது அனில் அம்பானி நிறுவனம்) 

  வழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு மாமா வேலை பார்த்திருக்கிறார். 

   WhatsAppல் வரவு...

  செவ்வாய், 25 செப்டம்பர், 2018

  ஐயா'னு கூப்பிட்டா கோச்சுக்குவாரு!’’

   - மறைந்த ADSP சம்பிரிய குமார் குறித்து நெகிழும் காவலர்கள்

  காவல்துறைக்குள் இருந்துகொண்டு ஐயா என்று யாராவது அழைத்தால், சம்பிரிய குமார் கொந்தளித்து விடுவார்.

  ``அவரை 'ஐயா'னு கூப்பிட்டா கோச்சுக்குவாரு!’’ - மறைந்த ADSP சம்பிரிய குமார் குறித்து நெகிழும் காவலர்கள்
  `நான் ஒரு மளிகைக்கடையில் பொருள்கள் வாங்குவேன். அங்கே, ஒரு பையன் வேலை பார்த்துவந்தான். நான் போலீஸ் அதிகாரி என்று அவனிடத்தில் நான் சொன்னதில்லை. `கொஞ்சம் சீக்கிரமா கொடுப்பா!' என்றால் திட்ட ஆரம்பித்துவிடுவான். `வரிசையில வாயா' என்று ஒருமையில்கூட திட்டுவான். காக்கிச்சட்டைக்குள் ஒளிந்திருக்கும் ஆணவமும் அதிகாரமும் சில சமயம் எட்டிப்பார்க்கும். `நான் யார் தெரியுமா?' என்று கேட்டால் `நீ யாரா இருந்தா எனக்கு என்ன?' என்று அவனிடமிருந்து தெனாவட்டாக பதில் வரும்.
  இருப்பினும், அந்தச் சிறுவன்தான் எனக்கு போதிமரம். எனக்குள் ஆணவமும் பெருமையும் எட்டிப்பார்க்கும்போது, அவன்தான் எனக்கு நினைவுக்குவருவான். இப்போது அவன் வளர்ந்து இளைஞன் ஆகிவிட்டான். இப்போதும் நான் அவனிடத்தில்தான் பொருள்கள் வாங்குகிறேன். நமது படிப்போ, பதவியோ, நம்முடன் வராது. அன்பு செலுத்துவோம், அனைவரையும் நேசிப்போம்' என்று ஒருமுறை சம்பிரிய குமார் ஃபேஸ்புக் பதிவு சொன்னது.
  ஆணவமும் அதிகாரச் செருக்கும் நிறைந்த போலீஸ் துறையில், ஈரம் நிறைந்த மனதுடன் வாழ்ந்தவர் ஏடிஎஸ்பி சம்பிரிய குமார். இன்று உயிருடன் இல்லை. புற்றுநோய் அவரை காவுகொண்டுவிட்டது. கடந்த 5 மாதமாகப் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த சம்பிரிய குமார், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று இரவு மரணமடைந்தார்.
  போலீஸ் அதிகாரி சம்பிரியககுமார்
  லஞ்சம் தலைவிரித்தாடும் துறையில் இருந்தாலும், `நான் எவன்கிட்டயும் அஞ்சு பைசா வாங்கினதில்ல'னு நெஞ்சை நிமிர்த்திச் சொன்னவர். தன் பணிக்காலத்தில் 6 வருடத்தில் 23 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர். நேர்மையற்ற எந்த விஷயத்துக்கும் துணை போனதில்லை. பணிக்காலத்தில் பலமுறை பழிவாங்கப்பட்டவர். அவருக்குக் கொடுக்கப்படவேண்டிய பதவி உயர்வைக்கூட வழங்காமல் இழுத்தடித்தனர். இருந்தாலும் மக்கள் பணியாற்ற சம்பிரிய குமார் சளைத்ததில்லை. ஏழை மக்களுடன் கலந்துரையாடி, முடிந்தவரை அவர்களின் துயரத்தைப் போக்க முயன்றவர். சில மாதங்களுக்கு முன்னர்தான் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
  போலீஸ் துறைக்குள்ளேயே இருந்தாலும் தவறிழைக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். தூத்துக்குடி சம்பவத்துக்கு போலீஸ் துறையிலிருந்து ஓர் எதிர்ப்புக்குரல் கிளம்பியது என்றால், அது சம்பிரிய குமாரின் குரல்தான். மக்களுக்கு எதிராக எந்தத் திட்டம் இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைரியமாக தன் கருத்தை வெளியிடுவது இவரின் வழக்கம். இதனால், காவல்துறைக்குள்ளேயே சம்பிரிய குமாருக்கு எதிரிகள் அதிகம். 
  `தீங்கு இழைத்தவனுக்கும் நன்மை செய்!' என்பதுதான் இவரின் தாரகமந்திரம். சப்-இன்ஸ்பெக்டராக சிறைத் துறையில் பணிபுரிந்த சமயத்தில்தான் அவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. புதிதாக திருமணம் ஆனவருக்கு விடுமுறை அளிக்காமல் இவரின் உயரதிகாரி வேலைவாங்கியுள்ளார். இதனால், சில சமயங்களில் இவரின் மனைவியே சம்பிரிய குமாரைக் காண வருவது உண்டு. சக ஊழியரின் மனைவி என்றுகூட பார்க்காமல் உயர் அதிகாரிகள் இவர் காதுபடவே தவறாகப் பேசுவார்கள். 
  அதே உயரதிகாரி, ஓய்வுக்குப் பிறகு மகன்களால் துரத்தப்பட்டு ஊறுகாய் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒருநாள் இவரிடத்தில் வந்து `ஊறுகாய் வாங்குங்கள்' என்று கேட்டிருக்கிறார். பிள்ளைகள் செய்த `துரோகமும் வறுமையும் அவரை ஆளையே மாற்றியிருந்தன. அவரிடத்தில் இருந்த அத்தனை ஊறுகாய் பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார் சம்பிரிய குமார். அவ்வளவு இளகிய மனம் படைத்தவரைத்தான் புற்றுநோய் பறித்துவிட்டது. 
  போலீஸ் அதிகாரி சம்பிரியக்குமார்
  ``போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தால்கூட `ஐயா' என்கிற வார்த்தையை எதிர்பார்ப்பார்கள். ஆனால், தன்னை யாராவது `ஐயா' என்று அழைத்தால் சம்பிரிய குமாருக்குக் கோபம் தாறுமாறாக வந்துவிடும். `அண்ணேனு கூப்பிடுப்பா' எனத் தனக்குக்கீழ் பணிபுரிபவர்களை அன்புடன் கடிந்துகொள்வார்'' என்று அவருக்குக் கீழ் பணிபுரிந்த போலீஸ் ஒருவர் நெகிழ்கிறார்.
  தனக்குக்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் முகத்தை வைத்தே அவர்களிடத்தில் உள்ள பிரச்னைகளைக் கண்டுபிடித்துவிடுவார்.
  சம்பிரிய குமாருக்குக் கீழே பணிபுரிந்த போலீஸ் ஒருவர், கலப்புத் திருமணம் செய்தவர். இவரிடத்தில் பயிற்சிக்கு வந்துள்ளார். ஆனால், எதையோ தொலைத்தவர்போல இருந்தார். `என்னப்பா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கியே?' என்று அந்தக் காவலரிடத்தில்  கேட்டுள்ளார். அவரோ,  `நான் கலப்புத் திருமணம் செய்தவன். மனைவி 8 மாதக் கர்ப்பிணி. அவருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அதுதான் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறேன்'' என்று பதில் அளித்துள்ளார்.  
  உடனடியாக மேலதிகாரிகளிடம் பேசி, சாதாரண கான்ஸ்டபிள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்தார். பயிற்சியில் இருக்கும்போதே  வாரத்துக்கு 3 நாள் வீட்டுக்குச் செல்லவும் அவருக்குச் சிறப்பு அனுமதி வாங்கிக்கொடுத்துள்ளார். ``எந்த உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் இவரிடத்தில் கேட்கலாம்'' என்று போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். சம்பிரிய குமார் ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பார். உதவி வேண்டுமென்று ஃபேஸ்புக்கில் கேட்டாலும் சம்பிரிய குமாரின் கரங்கள் உடனே நீளும். 
  அன்பு நிறைந்த மனிதர்கள் உலகில் நீண்டகாலம் தங்குவதில்லை. அந்த வரிசையில் சம்பிரிய குமாரை காலன் வெகுசீக்கிரமே அழைத்துக்கொண்டான். சம்பிரிய குமார் அமைதியாகிவிட்டார். அவரின் ஃபேஸ்புக் பக்கம் கண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
  நன்றி:விகடன்.

  .“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

    டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...