வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

இறந்தும் வாழ்வோம்...!


விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகர்கோவில் சிறுவன் அவினாஷ் இதயம் அகற்றப்பட்டு தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

நாகர்கோவில், கோட்டாறை சேர்ந்தவர் சுவாமிநாதன்; ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி லதா, தனியார் மருத்துவமனை நர்ஸ். 

இவர்களது மகன்தான்  அவினாஷ்.வயது - 12.

 கோட்டாறு அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தான். கடந்த, 18ம் தேதி மாலை, அவினாஷ், டியூஷனுக்கு சைக்கிளில் சென்றபோது, பைக் மோதி படுகாயமடைந்தான். 

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிசை பலனின்றி  மூளைச்சாவு அடைந்தான்.
 அவரது உடல் உறுப்புகளை  மற்றவர்களுக்கு  தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். 

25.08.16 அன்று  காலை, 10:30 மணிக்கு அவினாஷ் தானம் செய்யப்பட்ட உடல்  உறுப்புகள் அகற்றும் பணி  துவங்கியது.  பெற்றோர் ,மற்றோர்  இதயம் துடிக்க அழ அவினாஷ் இதயம் மதியம், 1:50 மணிக்கு, தனி ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு  தயாராக இருந்த தனி விமானம் மூலம் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு இதயத்தை பொறுத்த அனுப்பி வைத்தனர். 

அவினாஷின் கண்கள், நெல்லை அரவிந்தர் கண் மருத்துவமனைக்கும், இரு சிறுநீரகங்கள், நெல்லை மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இதுவரை தமிழகத்தில் எட்டு ஆண்டுகளில், அவினாஷ் போன்று மூளைச்சாவு அடைந்தவர்கள் 837 பேரின் உடல் உறுப்புகள் தானம் மூலம்  4,677 பேர் பயன் அடைந்துள்ளனர். 
இதனால், 4,000க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
 2008 அக்டோபரில் மூளைச்சாவு அடைந்த, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர், இதயேந்திரனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர். இது தமிழக  மக்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
தமிழக அரசு, உடல் உறுப்பு தான திட்டத்தை துவக்கியது. 

இதுவரை மூளைச்சாவு அடைந்த, 837 பேருடைய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 4,677 பேர் பயனடைந்துள்ளனர். 

இதுவரை, 837 பேரிடமிருந்து இதயம் - 236, நுரையீரல் - 125, கல்லீரல் - 787, சிறுநீரகம் - 1,529, கணையம் - 11, கண்கள் - 1,265, இதய வால்வு - 678 உட்பட மொத்தம், 4,677 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. 
2015 - 16ல் மட்டும், அதிகபட்சமாக, 156 பேரிடம் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து, உடல் உறுப்பு தான ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'வெளி மாநிலங்களில் இருந்தும் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்படுகின்றன. உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.

உண்மையிலேயே சிறந்தது உடல் உறுப்பு தானம்.  மண் தின்னும் உடல் உறுப்புகளை  தானம் செய்ய வேண்டும்.நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகரா மன்றங்கள் மூலம் ரத்த தானம் செய்வது பற்றி விழிப்புணர்வை உண்டாக்கினார்.தமிழ் நாட்டில் இன்று அதிக ரத்ததானம் செய்தவர்கள் கமல்ஹாசன் ரசிகர்கள்தான்.அவர்களைப்பார்த்து மற்ற நடிகர்களின்ரசிகர்களும் ரத்ததானம் செய்வதை இப்போது வழக்கமாக்கியுள்ளனர்.அடுத்த கட்டமாக கமல்ஹாசன் கண்தானம் மட்டுமின்றி தனது உடலையே இறந்த பின்னர் தானமாக மருத்துவக் கல்லுரிக்குவழங்கியுள்ளார்.அதையும் பலர் பின்பற்றி கண்தானம்,உடல் தானம் செய்கின்றனர்.

அது நல்ல காரியமாக இருந்தாலும் மூளை சாவு அடைந்தவர்களின் இயங்கக்  கூடிய இதயம்,கண்,சிறுநீரகங்கள்,கல்லிரல் போன்றவற்றை தானமாக கொடுப்பது அந்த உறுப்புகள் பழுதடைந்ததால் இறப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு மறு  வாழ்வு கொடுப்பதாக அமையும்.
ஆனால் அப்படி மூளை சாவு அடைந்தவர்களின் பெற்றோர்கள்,உறவினர்களுக்கு தங்கள் சொந்தம் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு கோர சடலமாக காட்சியளிப்பதை காண சகிக்க முடியாதநிலைதான்.அதையும் மீறி அவர்கள் தானம் வழங்குவது உண்மையிலேயே பலருக்கு வாழ்வளித்தவர்களாக ,வணக்கத்துக்குரியவர்களாக மாறி விடுகிறார்கள்.

அப்படி வழங்கப்படும் உறுப்பு தானம் மூலமாய் தங்கள் மகன் பல உருவங்களில் உயிர் வாழ்வதை எண்ணி கிடைக்கும் ஆறுதலும்,மகிழ்சசியும் கர்ப்பிணிக்கு எட்டாதது.

சரி .அப்படி உறுப்புகள்,உடல் தானம் செய்யாத நிலையில் புதைக்கப்படும் சடலங்கள் நிலை என்னவாகும்.
அதை பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டாள் நல்லதுதான்.


நீங்களோ அல்லது நானோ ஒருவர் இறந்த மறுநொடியே மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும். அதேபோல், உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய  ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு  செல்கிறது.
மேலும் ஆக்ஸிஜன் உடலுக்கு செல்லாததால், மெல்ல, மெல்ல உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும்.  

பிறகு அச் செல்கள் உடைய ஆரம்பித்து, சிதைய  ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக  ஆரம்பிக்கிறது. உடல் நாற்றமும் அடைகிறது.


அத்துடன் தசைகளில் கால்சியம் சேரத்  துவங்குவதால், தசை இறுக்கமாக, கடினமாக மாறும்.
சில சமயங்களில், தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும். 

அத்துடன், தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். 

இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும். 
இந்நிலையில் புவி ஈர்ப்பு விசை காரணமாக   இறந்தவர்களின் இரத்தம் உடல் மேல் பாகத்தில் இருந்து  கீழ் நோக்கி  சேர துவங்கும்.


 இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற அதாவது சவக்களை ஆரம்பிக்கும்.
உடல் உறுப்புகளில் இருக்கும் பாக்டிரியாக்கள்  என்ஸைம்களை  செரிக்க  ஆரம்பிக்கும். இறந்தவர்களின் உடலில் ஆங்காங்கே பச்சை நிற தடிப்புகள் தோன்றும். 


உடல் அழுகும் போது, காலரா போன்ற நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள்  வெளியேறும். இதன் காரணமாக   உடலில்  துர்நாற்றம் அதிகமாக  வீசுகிறது.

மேலும், இறந்தவரின் உடலை  புழுக்கள், வண்டுகள் உண்ண ஆரம்பிக்கும். 
புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும். 


அத்துடன் மெல்ல, மெல்ல இறந்தவரின் உடல், ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும்.  இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.
ஓரிரு வாரத்தில், இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும். 


நான்கு மாதங்களில்  இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி  வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும்.
நீங்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் மீண்டும் வாழுவீர்கள்.அல்லது உங்கள் உடல் இந்நிலையை அடைந்து மண்ணோடு,மண்ணாகும்.
                                     ஓருடலாய் அவதரித்து  நான்கு உடலில் உயிர் வாழும் அவினாஷ்.

புதன், 17 ஆகஸ்ட், 2016

ஜக்கி வாசுதேவன் என்ற போலி....

போலி பணக்கார சாமியார் ஜக்கி வாசுதேவனை தெரியாதவர்கள் என்று தமிழ்நாட்டில் அனேகமாக யாரும் இன்று இருக்க முடியாது. 
அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்தக் கருமம் பிடித்தவனின் புகழ் பரப்பும் சுவரொட்டிகளைக் காணமுடியும். இந்தக் கேடிப்பயலுக்குச் சாமானிய மக்கள் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்ட நபர்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 
இப்படி அதிகார வர்க்க பலமும், பணபலமும் பொருந்திய ஜக்கியின் மீது கொடுக்கப்படும் புகார்கள் ஆளும்வர்க்கத்தால் கண்டுகொள்ளப்படும் என்றா நினைக்கின்றீர்கள்?
jaggi vasudevகோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ் அவரது மனைவி சத்தியஜோதி ஆகியோர் தங்களது மகள்கள் இரண்டுபேரை ஈஷா யோகமையத்தினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தரக் கோரியும் கோவை ஆலந்தூர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்றவர்களிடமும் புகார் அளித்துள்ளனர். 
ஆனால் ஜக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலந்தூர் காவல் நிலையமும், மாவட்ட ஆட்சியரும் அந்தப் புகாரை கண்டுகொள்ளாமல் போனாதால் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் ஒரு மானங்கெட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தால் காவல்துறை சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்பதுதான் விதி. 
ஆனால் காவிமூளை நீதிபதிகளான எஸ். நாகமுத்து மற்றும் வி. பாரதிதாசன் ஆகியோர் ஈஷா யோகா மையத்தின் எடுபிடிகள் போன்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். அந்தத் தீர்ப்பில் “மாவட்ட முதன்மை நீதிபதிகள் தனது அறிக்கையில் அந்தப் பெண்கள் இருவரும் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகவும், அவர்களை யாரும் சட்ட விரோதமாக அங்கு அடைத்து வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அந்த இரண்டு பெண்களையும் பெற்றோர் நேரில் சென்று பார்க்க எந்தத் தடையும் இல்லை. 
ஆனால் அவர்கள் எப்போது அங்கு செல்கிறார்கள் என்பதை முன்கூட்டியே ஈஷா யோகா மையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும். அது போல அந்தப் பெண்களை பெற்றோர் தவிர வேறு யாரும் சென்று பார்க்கக்கூடாது” என்றும் லதா, கிதா ஆகியோர் இருவரும் விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
 கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்கள்.
இதற்குப் பெயர் தீர்ப்பாம்!. ஈஷா யோகா மையம் எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்த மாதிரி இருக்கின்றது. அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகள்களை கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது யாரோ முன்பின் தெரியாத நபருக்கு எதிராக அல்ல. 
அவர்கள் புகார் தெரிவிக்கும் ஜக்கிக்கு எதிராக கஞ்சா விற்ற வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, தன்னுடைய மனைவி விஜியைக் கொன்றதாக கொலை வழக்கு என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பொறுக்கியின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அந்தக் குற்றச்சாட்டை நீதி மன்றம் எப்படி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?
லதா மற்றும் கீதா ஆகியோர்களின் பெற்றோர்களான காமராஜ், சத்தியஜோதி தம்பதிகள் முன்வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள் தங்கள் மகள்களை ஜக்கி ஏமாற்றி வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருக்கின்றார் என்பது மட்டும் அல்ல. 
தங்கள் பெண்களுக்குக் கருப்பை நீக்கம் செய்திருக்கின்றார்கள் என்பது போன்ற பயங்கரமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இருக்கின்றார்கள். நேர்மையான நீதிபதிகளாக இருந்திருந்தால் இந்த இரண்டு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் சொன்னது உண்மையா பொய்யா என்பதை கண்டறிய உத்திரவிட்டிருக்க வேண்டும். 
ஆனால் அதை செய்யத் துப்பில்லாமல் ஒரு குழுவை ஈஷா யோகா மையத்திற்கே அனுப்பி விசாரணை செய்யச் சொல்வது என்ன வகையான நீதி? எந்தச் சட்டத்தில் அப்படி செய்ய சொல்லி இருக்கின்றது?
இந்தப் பொறுக்கியின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தப் பொறுக்கி தப்பித்துக்கொண்டே இருக்கின்றான். 
தன்னை மதம் சாராத ஆன்மீகவாதி என்று இத்தனை நாட்களாக சொல்லிக்கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் கடைவிரித்து பணம் கறந்துவந்த இந்தப் பரதேசியின் உண்மை முகம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. 
ஈஷா யோகமையத்திற்கு விசாரணைக்காக சென்ற அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்திருக்கின்றான் பார்ப்பன பொறுக்கி எச். ராஜா. அவன் சரியாகவே ஈஷா யோகாவை அம்பலப்படுத்தி இருக்கின்றான். ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றச் சாட்டுகளுக்குப் பின் மதமாற்ற சக்திகள் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றான். 
ஈஷா யோகா மையம் இந்துக்களை வேறுமதம் நோக்கி செல்வதை தடுப்பதாகவும் அதனாலேயே அதன் மீது புகார்கள் தரப்படுவதாகவும் சொல்கின்றான் இந்தப் பார்ப்பன பொறுக்கி.
அப்படி என்றால் ஈஷா யோகா ஒரு இந்துமத அடிப்படைவாத அமைப்பு என்பது உறுதி ஆகின்றது. சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு இந்த நாய் இத்தனை நாட்களாக தன்னை மதம் சாராதவனாக விட்டுக்கொண்டிருந்த ரீலை பார்ப்பன பொறுக்கி எச்.ராஜாவே அறுத்துவிட்டிருக்கின்றான். 
அதற்காக அந்த பொறுக்கி பயலுக்கு நாம் நன்றிகளை சொல்ல வேண்டும்.
தங்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பி நீதிமன்றத்திற்கு போன அந்தப் பெற்றோர்களுக்கு ஜக்கியின் நாக்குகளில் தீர்ப்பு சொல்லி தாங்கள் ஈஷா யோகாமையத்தின் கைக்கூலிகள் என்பதை நீதிபதிகள் நிரூபித்துவிட்டார்கள்.
 தன்னுடைய குழந்தைகளை பார்க்க போகும்போது கூட இனி அவர்கள் முன்கூட்டியே ஈஷா யோகா மையத்திற்கு தெரிவித்துவிட்டுத்தான் போகவேண்டும். அப்போதுதான் அவர்கள் பெற்றோர்களிடம் எப்படி, என்ன பேசவேண்டும் என அவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும். 
இதற்குப் பெயர்தான் நீதி என்று இந்த நீதிபதிகள் நம்மை நம்பச் சொல்கின்றார்கள்.
இந்தச் சம்பவத்தை ஒட்டி கருத்து தெரிவித்து இருக்கும் ஈஷா யோகா மையம் “ ஈஷாவில் இருக்கும் பெண்துறவிகளை மட்டும் பழிப்பது பெண் உரிமையை நசுக்குவதோடு மட்டுமில்லாமல் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செய்யப்படும் செயல்களாகவே பார்க்க முடிகிறது” என கூறி இருக்கின்றது.
எவ்வளவு சாதூர்யமாக இந்தப் பிரச்சினையை பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினையாக மாற்றப் பார்க்கின்றான் இந்தப் பரதேசி என்று பாருங்கள். இந்தப் பெண்கள் சமூக சேவை செய்கின்றார்களாம். யோகா கற்றுக் கொடுக்கின்றேன் என்று சொல்லி கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் இந்த நாயிடம் அந்தப் பெண்கள் சமூக சேவை செய்யப் போகின்றார்களாம். 
ஆசிரமத்துக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களிடம் ஆங்கிலத்தில் பேசி அவர்களை மூளைசலவை செய்து அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு விடுவதற்கு பெயர் சமூக சேவையாம்!.
நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்த இந்தப் பெண்களை இன்று மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தான் நடத்தும் கார்ப்ரேட் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்துக்குச் சேவை செய்ய வைத்துள்ளான். 
தன்னுடைய மகள் ராதேவுக்கு கர்நாடகாவை சேர்ந்த பாடகர் சந்தீப் நாராயணை மணம் முடித்து அழகு பார்த்த அந்த பொறுக்கி அடுத்தவன் வீட்டு பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தீட்சை கொடுக்கின்றான். 
இந்தப் பொறுக்கியின் யோக்கியதை என்னவென்று தெரியாமல் பலபேர் இவனை கடவுளுக்கு நிகராக வைத்து வழிபடுகின்றார்கள்.
இவனைப் போன்ற பரதேசிகள் இந்த ஆளும் வர்க்கத்திற்கு எப்போதுமே தேவைப்படுகின்றார்கள். தங்கள் மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்பை மட்டுப்படுத்தவும், அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையின் மையமான காரணத்தை யோசிக்கவிடாமல் தடுக்கவும் இது போன்ற கார்ப்ரேட் சாமியார்கள் திட்டமிட்ட முறையில் ஆளும் வர்க்கத்தால் வளர்த்துவிடப் படுகின்றார்கள். 
அதனால் அரசே முன்வந்து இவன் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்பிக் கொண்டிருந்தால் நம்மால் இவனை ஒன்றும் செய்யமுடியாது. 
இவனுக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதன் வாயிலாகவே இவனையும் இவனைப் போன்ற கார்ப்ரேட் சாமியார்களையும் நாம் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்க முடியும்.
- செ.கார்கி.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

'இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!'

 கலைச்செல்வி மரணம்...
தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் இளம்  பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து  தாழ்த்தப்பட்ட இன மக்கள்.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட  சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். மற்ற இனத்தவர்கள்  பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். 
கடந்த 31-ம் தேதி இரவு தாழ்த்தப்பட்ட  சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். 
படுகொலைக்கு முன்னதாகக் அவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்துக் கொலைக்குக் காரணமான மேற் சாதியை சார்ந்த ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். 
ஆனால் அவர்களை குற்றவாளிகளை வாசக்குப்பதிவு  செய்வதிலும் ,சிறையில் அடைப்பதிலும்  காவல்துறை வழக்கம் போல் கால தாமதம் செய்ய, மதுரையைசசேர்ந்த  எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு வழக்குப்பதிவு  செய்ய வைத்திருக்கிறது.
கலைச்செல்வியின் உறவினர்கள் 
 " ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது. 

சம்பவம் நடந்த அன்னைக்கு ராத்திரி  புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு. 
கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. 
குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க. 
தாழ்த்தப்பட்ட இன  பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அதை மற்ற  சமூகத்து பெரியவங்களும்  தட்டிக் கேட்க மாட்டாங்க." என வேதனைப்பட்டனர். 
கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, 
" என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்" 
எனக் கதறி அழுதார்.
கலைசெல்வி பிணத்தை பார்த்து அதிர்ந்து போயிருந்த எவிடென்ஸ் கதிர் , "
 "என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. 
நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி. 
அதை இந்த ஊடகங்கள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை.
ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் அதுவும் சொந்த காரணங்களால்  கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அரசாங்கமும் ,காவல்துறையும் பரபரப்பாக வேலை செய்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கிறது.
ஆனால் அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் அப்பாவி  பெண்கள்,தாழ்த்தப்பட்ட பெண்கள்  பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. 
மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். 
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொடூரமாகக் கொலை செய்த ஆதிக்க சாதி குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.
 சாலிய மங்கலத்தில் ஆதிக்கம் செய்யும் ,தாழ்த்தப்பட்ட இந பெண்களை பாலியல் துன்பப்படுத்தும்  ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தாழ்த்தப்பட்ட இன மக்கள் உள்ளனர்.அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் எதிர்ப்பை காட்டமுடியாததற்கு ஒரு காரணம்.
சாலிய மங்கலத்தில்ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். ' இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். 
அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா' என அந்த மக்கள் கதறுகின்றனர். 
இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம். ' பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள்' என அறிவுறுத்தியிருக்கிறோம். ' அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்' என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது."
- என்கிறார்  
எவிடென்ஸ் கதிர்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

அதிமுகவில் ஒரே ஆண்மகன்?"நேற்று கொஞ்சம் ஓவரா ஆயிடுச்சி.
எப்ப போன வைச்சேன்னு தெரியல"
-அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா, தன் ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவியது.   சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். இது அதிமுகவுக்கு சரிவை கொடுக்கும் என்று விமர்சனம் எழுந்தது. 

இதையடுத்து சசிகலா புஷ்பாவை மாநில மகளிரணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. அதன் பின் இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்தது. 

இந்தநிலையில் திருச்சி சிவாவுடன், சசிகலா புஷ்பா போஸ் கொடுத்த புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் பரவியது. 
அப்போது இது மார்பிங் என இருதரப்பும் கூறியது. 
சிறிது காலம் அமைதியாக இருந்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவின் கவனத்தை கவர்ந்து கட்சியில் மீண்டும் தன்னை நிலைநிறுத்த யோசித்தார். 
அந்த யோசனையின் விளைவுதான் டெல்லி ஏர்போர்ட்டில் திருச்சி சிவாவின் கன்னத்தில் 4 முறை பளார் விட்டார். அதிமுக ஆட்சியையும், ஜெ.வை தரக்குறைவாக பேசியதாலும் தாக்கியதாக கூறினார். அதிமுக, திமுக எம்பிக்கள் இடையேயான இந்த களேபரம் டெல்லி ஏர்ப்போட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பொதுஇடத்தில் எப்போதும் நாகரீகமாக நடந்து கொள்ளும் திருச்சி சிவா, இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார் என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
இந்த சம்பவம் நடந்த மறுநாள் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அங்கு என்ன நடந்தது என்பது மர்மமாக இருந்தது. போயஸ் கார்டனில் இருந்து நேராக பலத்த கண்காணிப்புடன் டெல்லிக்கு அனுப்பட்டார் சசிகலா புஷ்பா. 

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) காலை மாநிலங்களவை கூடியதும் யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில், ஆவேசத்துடன் மைக் முன் வந்தார் சசிகலா புஷ்பா. எனது எம்பி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி எனது சக எம்பிக்களும், கட்சி தலைமையும் வலியுறுத்துகிறது. எனது கட்சித் தலைவரே சென்னையில் என்னை பளார் என்று அறைந்தார். 
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு இந்த அவை உரிய பாதுகாப்பு தர வேண்டும் என பேசியவர், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். இவரது பேச்சுக்கு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சசிகலா புஷ்பாவின் ஆவேச பேச்சு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போதே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ஜெயலலிதா. 
பாராளுமன்றத்தில் இருந்து ஒருவித அச்ச உணர்வுடன் வெளியேறிய சசிகலா புஷ்பா, நேராக தனது இல்லத்திற்கு சென்றார். அங்கு ஊடகத்தினரை சந்தித்து, எனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய காங்கிரஸ் நண்பர்களுக்கும், திமுக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
குறிப்பாக சோனியாஜி, ராகுல்ஜி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி என்று சொல்லிவிட்டு, அடுத்து வீசியதுதான் அணுகுண்டு ரகம். 
விசாரணை என்ற பெயரில் ஒரு நாள் முழுக்க ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட அறையில் என்னை அடைத்து வைத்து மாறி மாறி அடித்தார் ஜெயலலிதா. 
ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி சசிகலாவும் சேர்ந்து கொண்டு என்னை கடுமையாக தாக்கினார். தரையில் உட்கார வைத்து கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார் ஜெயலலிதா. 

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் சேர்ந்துகொண்டு என்னை சரமாரியாக தாக்கினார். 

உவரியில் இருக்கும் என் கணவரின் வீடு தாக்கப்பட்டது. 
அவருடைய டிராக்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த தகவல்கள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. என்ன ஆனாலும் சரி நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். ராஜினாமா செய்தால் நான் பயந்து விட்டதாக நினைப்பார்கள் என கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.

ஜெ., சொன்னதை கேட்டு ராஜினாமா செய்யாமல், தில்லாக நின்று, ராஜினாமா செய்ய முடியாது என்று சசிகலா புஷ்பா விட்டுள்ள சவால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் சிறிது நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் ,நத்தம் விஸ்வநாதன் உட்பட சில தலைவர்கள் கூப்பிடப்பட்டு அறைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்னரும் பல அதிமுகவின் தலைகளுக்கு தோட்டத்தில் பூசைகள் நடத்தப்பட்டுள்ளன .  
ஆனால் யாரும் வெளியே வந்து முனங்க கூடவில்லை.அம்மா வாழ்க என்று கூறிவிட்டு கைத்தாங்கலாக சென்றுதான் உள்ளனர்.
ஆனால் இப்போது சசிகலா புஷ்பம் தோட்டத்தில் நடந்தது சொல்லி அதுவும் மாநிலங்களவையில் சொல்லி இந்தியா முழுக்க அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் அதிமுகவில் உள்ள ஒரே ஆண்மை மிக்கவராக தன்னை அடையாளப்படுத்தி யுள்ளார்.

ஏற்கனவே அதிமுகவில் இருந்த்து ஒதுக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை அறைந்து அம்மாவிடம் நல்ல பெயர் எடுத்து கடசியில் ஒட்டிக்கொள்ளலாம் என்று இருந்தவருக்கு அங்கு கிடைத்த பூசை கண்டு தனது அடுத்த திட்டமான வேறு கடசியில் பரபரப்பாக இணைய இன்றைய மாநிலங்களவை மேடையை பயன் படுத்தி தனது அரசியல் நாடகத்தை நிறைவேற்றி அதில் வெற்றியும் பெற்று விட்டார்.
ஆக இவரை அறைந்த ஜெயலலிதா மட்டுமல்ல  சசிகலா புஷ்பமும்  தங்கள் இலக்கை எட்டி விட்டார்கள்.
வாழ்த்துக்கள்.!
ஆனால் திருச்சி சிவாவின் கண்ணம்தான்தேவை இல்லாமல்  பழுத்து விட்டது.வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...