திங்கள், 28 ஆகஸ்ட், 2017

மைனர்குஞ்சு சாமியார்கள்


Gurmeet Ram Rahim Singh

உலகில் எல்லா வேலைக்கும் ஒரு தகுதி தேவைப்படுகின்றது. பொறியாளராக ஆகவேண்டும் என்றால் பொறியியல் படித்திருக்க வேண்டும்; மருத்துவராக ஆகவேண்டும் என்றால் மருத்துவம் படித்திருக்க வேண்டும். இப்படி ஓவ்வொன்றைப் பற்றியும் படித்தவர்கள் மட்டுமே அது சார்ந்த துறைகளில் மேதமை நிறைந்தவர்களாக வருவதற்கு வாய்ப்பு அதிகம். 
அதே போலத்தான் சாமியார் வேலைக்கும். நம்மில் சில பேர் சாமியார் வேலை பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை, நாலு மயிரை தலையிலும், முகத்திலும் நீளமாக வளர்த்துக்கொண்டு ஒரு காவி வேட்டியும் ஒரு திருவோடும் இருந்தால் போதும், சாமியாராகி விடலாம் என்று தப்பாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 
இப்படி எல்லாம் இருந்தால் கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் அன்னக்காவடி பிச்சைக்காரனாகத்தான் ஆகமுடியுமே ஒழிய, ஒரு நித்தியானந்தாகவோ, ஆசாரம்பாபுவாகவோ, சங்கராச்சாரியாராகவோ, இல்லை இப்போது ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களை நெருப்புக்காடாக மாற்றிக் கொண்டிருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் போன்றோ நிச்சயம் ஆக முடியாது.
அதற்கு மேற்குறிப்பட்ட தகுதிகள் மட்டும் போதுமானவை அல்ல. அதற்குக் கொலை, கொள்ளை, மோசடி, யாருக்கும் புரியாமல் பேசும் சாதூர்யம், அப்புறம் இவற்றிக்கு அப்பால் எல்லாவற்றிக்கும் மேல் பெண்களை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதில் பல ஆண்டுகள் எடுத்த கடுமையான பயிற்சி, அப்புறம் தம்முடைய ஆசிரமத்தை அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் அந்தப்புரமாக மாற்றத் தெரிந்த கலை இவை எல்லாம் ஒருங்கே எவன் கற்றிருக்கின்றானோ, அவன் தான் பாரத தேசத்தில் இந்து மதத்தின் மகோத்மியங்களை பரப்பப் பிறந்த அவதாரம். 
அப்படிப்பட்ட அவதாரங்கள் முன்னால் ஒரு உண்மையான இந்து நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு மண்டியிட வேண்டியது கடமை.
அப்படிப்பட்ட ஒரு நல்ல சாமியாரைக் கடைபிடிக்கும் மானமரியாதை உள்ள அறிவுபெற்ற பக்தர்கள் கூட்டம் என்ன செய்யுமோ, அதைத்தான் இப்போது ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற இடங்களில் வாழும் பக்தர்கள் கூட்டம் செய்து கொண்டிருக்கின்றார்கள். 
32 பேரை பலியாக்கி 250 பேரை காயப்படுத்தி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாசம் செய்து, தங்களின் ஆன்மீகக் கடமையை ஆற்றியிருக்கின்றார்கள். மதமும், அது சார்ந்த நம்பிக்கையும் ஒருவனை எங்கு கொண்டு நிறுத்தும் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. இரண்டு மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கின்றது, பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது, இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன, பாதுகாப்புக்கு இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்றது. 
ஒரு ஜனநாயக நாட்டில் கேவலம் ஒரு பரதேசிப் பயலுக்காக நாடே அஞ்சுகின்றது என்றால் அந்த நாட்டை ஆளும் பிற்போக்குவாதிகள் என்ன நிலைமையில் நாட்டை வைத்திருப்பார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
35க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, அதுவும் என்ன சொல்லி மிரட்டியிருக்கின்றான் என்றால் “பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தார்கள். அவர்களோடு கிருஷ்ணன் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?" என்று சொல்லி அழைத்திருக்கின்றான். 

ஒரு பொறுக்கி தன்னுடைய பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்த இன்னொரு பெரும் பொறுக்கியை உதாரணமாகக் காட்டியிருக்கின்றான். அப்போதும் வழிக்கு வராத பெண்களை துப்பாக்கி காட்டி மிரட்டி கிருஷ்ணலீலையைக் கற்றுக் கொடுத்திருக்கின்றான். 
ஆனால் அப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட பொறுக்கிப்பயலை கோடிக்கணக்கான மக்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கின்றார்கள் என்றால், அவனுக்காக 32 பேரை கொலை செய்யவும் துணிவார்கள் என்றால், அந்த நாட்டை ஆளும் பிரதமர் எப்பேர்பட்ட மதவெறியனாகவும், பிற்போக்குச் சாக்கடையில் படுத்துருளும் பாதகனாகவும் இருக்க முடியும்.
இது போன்ற பொறுக்கி சாமியார்கள் எல்லாம் எங்கிருந்து முளைத்து கிளைத்து வேர்பரப்பி வளர்வதற்கான உயிர்சத்தை பெறுகின்றார்கள் என்றால் அது சங்பரிவார கூட்டத்தில் இருந்தே பெறுகின்றார்கள். சாய்பாபாவையும், பிரேமானந்தாவையும், சங்கராச்சாரியையும், நித்தியானந்தாவையும், ஆசாரம்பாபுவையும் பார்த்து அவர்களின் அடித்தொழுது பின்தொடரும் சாமியார் கூட்டம் அப்படித்தான் உருவாகும், அடுத்த தலைமுறை பொறுக்கி சாமியார்களையும் உருவாக்கும். 
இவன் 32 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தான் என்றால், அடுத்து மாட்டப்போகும் சாமியார் குறைந்தது 50 பெண்களையாவது பாலியல் பலாத்காரம் செய்தவனாக இருப்பான். இது எல்லாம் பொறுக்கி சாமியார்களிடம் இருக்கும் ஒரு தொழிற்போட்டி. 
யார் அதிகமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றானோ அவன் தான் இந்து மத தர்மப்படியும், சங்பரிவாரத்தின் தர்மப்படியும் மோடியைக் கட்டிப்பிடித்துப் பாசமழை பொழியத் தகுதியானவர்கள்.
சாமியார்களில் நல்ல சாமியார், கெட்ட சாமியார் என்ற பாகுபாடெல்லாம் எப்போதுமே இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. மாட்டிக்கொண்டவன், மாட்டாதவன் என்ற வித்தியாசம் மட்டுமே உள்ளது. இன்று இருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் அன்றே இருந்திருந்தால் சங்கரனில் இருந்து ராமானுஜரில் இருந்து அனைத்து முண்டகலப்பை சாமியார்களின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறியிருக்கும். தப்பிவிட்டான்கள்!. 
அவன் எல்லாம் அன்றே மாட்டி செருப்படி வாங்கியிருந்தால் இன்று இவனைப் போன்ற மைனர்குஞ்சுகள் எல்லாம் வெளிப்படையாக கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் ஆக்கி நாட்டை கொளுத்தியிருக்க மாட்டார்கள்.
மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி முட்டாள்கள் ஆக்குவது என்பதை இன்றைய நவீன சாமியார் பொறுக்கிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நுனி நாக்கு ஆங்கிலமும், நவீன ரக மேற்கத்திய பாணி உடைகளும், குத்து நடனங்களும், பாகுபாடு அற்ற பாலியல் உறவுக்கான உபதேசங்களும் கலந்து அதை ஒரு நவீன ரக அமெரிக்க பாணி சில்லரை கலாச்சாரத்தோடு கலந்து தருகின்றார்கள். 

அதனால்தான் ஜக்கி வாசுதேவன் போன்ற மாமா பயல்கள் எல்லாம் இன்று பெரும்பான்மை மேட்டுக்குடி கழிசடைகளால் விரும்பப்படுகின்றார்கள். இந்தக் குர்மீத் ராம் ரஹீம் சிங்கும் அப்படிப்பட்ட ஊரை ஏமாற்றும் டேக்குமாறி சாமியார்தான். இவனே இவனைப் பற்றி ஐந்து படங்களை இவனை வைத்தே எடுத்திருக்கின்றான் என்றான் பார்த்துக் கொள்ளுங்கள். நிஜவாழ்க்கையில் இவனைப் பற்றி ஊருக்குள் பரப்பப்பட்டிருக்கும் அற்புதக் கதைகளை எல்லாம் கிராபிக்ஸ் தொழிற்நுட்பத்தோடு உண்மையாக்கி மக்களை நம்ப வைத்திருக்கின்றான். 
அம்மன் படம் பார்த்துவிட்டு திரையரங்கத்திலேயே குத்தாட்டம் போடும் நம்ம ஊர் மக்களைப் போன்றவர்கள் தான் வட மாநிலங்களில் இருக்கும் மக்களும். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் நம்ம ஊர் மக்களாவது அருள்வந்தால் ஆடையோடு ஆடுவார்கள் என்றால், வடமாநில பக்தர்கள் அம்மணமாகவே ஆடுவார்கள், அந்த அளவிற்கு பிற்போக்குக் கும்பல்.
அந்தப் பிற்போக்குதான் இத்தனை உயிர்களை பலிவாங்கியிருக்கின்றது, இன்னும் பலிவாங்கும். இப்படி ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தக் கழிசடைகள் அதைத் தமது சொந்த வாழ்க்கையில் எப்போதுமே கடைபிடிப்பதில்லை. தன் பெண்ணிற்குத் திருமணம் செய்துவைத்துவிட்டு, ஊரார்வீட்டு பெண்களுக்கு துறவரம் ஏற்க தீட்சை வழங்கும் ஜக்கி வாசுதேவன் ஆகட்டும், இல்லை இப்போது குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருக்கும் குர்மீத் ராம் ராஹீம் சிங் ஆகட்டும், எல்லாமே அப்படித்தான். 
இவனுக்குத் திருமணம் ஆகி ‘ஒரு’ பொண்டாட்டியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளார்களாம். ஆனால் அன்னார் அவர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்த 400க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளார். காரணம் அவர்கள் பெண்பக்தர்களிடம் தவறாக நடந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவாம். 
ஒருவேலை இந்த வேலையை பார்ப்பதற்குத்தான் நாம் இருக்கின்றோம், மற்றவர்கள் யாரும் தனக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருக்கலாம். என்ன இருந்தாலும் மைனர்குஞ்சுகளின் மூளையோ மூளைதான்.
இரண்டு மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்து, அஞ்சா நெஞ்சன் இந்து மதத்தை காக்க வந்த புஷ்யமித்ர சுங்கன் மோடியையே கண்டனம் செய்ய வைத்திருக்கின்றான் என்றால் நிலைமை மிக மோசமாக இருக்கின்றது என்றுதான் அர்த்தம். மோடி demonetisation கொண்டு வந்ததற்குப் பதிலாக சாமியார்களுக்கு எல்லாம் ஆண்மைநீக்கம் செய்திருந்தால் மக்களுக்குப் பாதுகாப்பாகவாவது இருந்திருக்கும். 

குறிப்பாக குழந்தை முதல் முதியவர்கள் வரை உள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் முதல் முதிர்ந்த கிழவிகள் வரை உள்ள பெண்களுக்கும். அப்படி என்றால் இந்தச் சாமியார் பயல்களால் யாருக்குமே பாதுகாப்பில்லையா என்று நீங்கள் கேட்கலாம். புட்டபர்த்தி சாய்பாபா கதையில் இருந்து சங்கராச்சாரி கதைவரை முன்கதைச் சுருக்கம் தெரிந்தவர்களுக்கு இது எவ்வளவு உண்மை என்று தெரியும். அதனால் வேறு வழியே இல்லை. ஒன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் மைனர்’குஞ்சை’ சுட வேண்டும், இல்லை ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். 
இது மட்டும்தான் பொறுக்கி சாமியார்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற ஒரு தற்காலிகத் தீர்வாக இருக்க முடியும். நிரந்தரத் தீர்வு என்னவென்றால் மதத்தின் பேரைச் சொல்லி கூட்டம் சேர்க்கும் அயோக்கியர்களை மக்கள் தங்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதும், அவர்களை முளையிலேயே கிள்ளி எறிவதும் தாம். 
ஆனால் அதற்கு நம் நாட்டு மக்கள் அப்படியான ஒரு உயர்ந்த அறிவு நிலைக்கு வர வேண்டும். இங்கிருக்கும் அனைத்து முற்போக்குச் சக்திகளும் அவர்களை அந்த நிலையை நோக்கி உயர்த்த தொடர்ந்து பாடுபடவேண்டும். பாடுபட்டால் நிச்சயம் ஒரு நாள் மைனர்குஞ்சுகள் ஒழிக்கப்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- செ.கார்கி                                                                                                                                                     - ரா.குமாரவேல் ,

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

"சாமி" யாரு?

அரியானா,பஞ்சாப்,டெல்லி என மூன்று மாநிலங்களை அக்கினி தழல்களால் முட்டவைத்திருக்கும் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பற்றி சில தகவல்கள்.
இந்தியாவின் வட மாநிலமான ஹரியானாவில் உள்ள சிர்ஸாவில் தேரா சச்சா செளதா என்ற அமைப்பு உள்ளது. 1948-ஆம் ஆண்டு பலூசிஸ்தானில் இந்த அமைப்பு மஸ்தானி பலூசிஸ்தானி என்பவரால் தொடங்கப்பட்டது.
1960-ஆம் ஆண்டில் அவர் மரணம் அடைந்த பிறகு அவரது சீடரான சத்னம் சிங் தேரா சச்சா செளதா தலைவரானார்.
1991-ஆம் ஆண்டில் அவர் உயிரிழந்த பிறகு, குர்மீத் ராம் ரஹீம் சிங் டிஎஸ்எஸ் அமைப்பின் தலைவரானார்.

மதசார்பற்ற நிலை, சமமான வாய்ப்பு, உண்மை, நம்பிக்கை, கருவியான செல்வத்தை நிராகரிப்பது ஆகியவை தனது கொள்கையாக குர்மீத் சிங் அறிவித்தார்.
படத்தின் காப்புரிமை
அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றில் சுமார் ஆறு கோடி பக்தர்கள் உள்ளதாக தேரா சச்சா செளதா அமைப்பு கூறுகிறது.
பேரிடர் மீட்பு காலங்களில் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக மருத்துவர்கள், பொறியாளர்கள், வர்த்தர்கள், மீட்புக் குழுவினர் உள்பட சுமார் 70 ஆயிரம் பேரை தன்னார்வலர்களாகக் கொண்ட ஷா சத்னம் ஜி பசுமை படையை குர்மீத் சிங் நிறுவியுள்ளார்.
பாலியலுக்கு எதிராகவும், அடிமைப்படுத்தப்படும் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராகவும் இவரது அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 2009-ஆம் ஆண்டில் குரல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அவரது அமைப்பைச் சேர்ந்த ஏராமான தன்னார்வலர்கள் முன்வந்தனர்.
Twitterபடத்தின் காப்புரிமைTWITTER
இதனால் அவரது அமைப்பு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள சமூக அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது.
யோகா குரு பாபா ராம்தேவ் "பதாஞ்சலி" நிறுவனம் மூலம் ஆயுர்வேத மருந்து பொருட்களை விற்பனை செய்வது போல, குர்மீத் சிங்கின் அமைப்பும் சிர்ஸாவில் இருந்தபடி ஆயுர்வேத பொருட்கள் விற்பனையை செய்து வருகிறது.
ராஜஸ்தானின் மோடியா பகுதியில் 1967-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி குர்மீத் சிங் பிறந்தார்.
ஆன்மிக பணிகள் மட்டுமின்றி, திரைக்கதை வசனம், இயக்கம், இசை அமைப்பு, பாடல்கள் பாடுவது ஆகியவற்றிலும் குர்மீத் சிங்குக்கு ஆர்வம் உள்ளது.
websiteபடத்தின் காப்புரிமைWEBSITE
அதனால், "எம்எஸ்ஜி: மெசேஞ்சர் ஆஃப் காட்" என்ற படத்துக்கு அவரே வசனம் எழுதி, பாடல்களைப் பாடி நடித்துப் படத்தை வெளியிட்டார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் அவரது புகழ் பரவியது.
2015-ஆம் ஆண்டில் அவரது படம் வெளியானபோது, அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தணிக்கை குழு உறுப்பினர் லீலா சாம்சன் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
2001-ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் ஆறு ஆல்பங்களை வெளியிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
2007-ஆம் ஆண்டில் தன்னை சீக்கிய வழியில் வந்த மத குருவாக அவர் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சீக்கியர்களின் அதிருப்திக்கு ஆளானார்.
இதன் விளைவாக அவரது அமைப்பு கிளைகளுக்கு எதிராக சீக்கியர்கள் போராட்டங்கள் நடத்தி மிகவும் தீவிரமானது.
Getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடந்தபோது, பாரதிய ஜனதா கட்சி - அகாலி தளம் கூட்டணிக்கு வெளிப்படையாக தனது ஆதரவை அளித்தார்.
அதற்கு முன்னதாக, 2007-ஆம் ஆண்டில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸுக்கு குர்மீத் சிங் ஆதரவு தெரிவித்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான ஹர்மிந்தர் சிங் ஜஸ்ஸியின் மகளை தனது மகனுக்கு இவர் திருமணம் செய்து வைத்தார்.
குர்மீத் சிங் மீது இரு பாலியல் வழக்குகள், தனது ஆண் ஆதரவாளர்களுக்கு ஆண்மை நீக்க பரிசோதனை செய்ய தூண்டியதாக வழக்கு, ஆயுத பயிற்சி வழங்கியது, ஒரு கொலை வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன.
சர்ச்சைகள் நிறைந்த இவரது வாழ்வில், பல கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் உயர் ரக லெக்சஸ் சொகுசு காரை குண்டு துளைக்காத வாகனமாக இவர் வடிவமைத்தார்.
ஒரே நேரத்தில் ஆன்மிகம், அரசியல், கலை, சினிமா, இசை, ஆயுர்வேத மருத்துவம் என பல துறைகளில் ஆர்வம் காட்சியதால் குர்மீத் சிங் வெகு சீக்கிரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிரபலமானார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
"அபிஷேக் பட்டேல்" எனும் மரியாதைக்குரிய காவலர்.
சாமியார் மக்களிடம் தனக்கு உள்ள பக்தி வெறியினால் பலர் உயிரை குடித்த அதே நேரம் தன உயிரைப்பற்றி கவலை படாமல் 400 பேர்கள் உயிரை காப்பாற்றிய காவலரை பற்றியும் அறிவோம்.
இவர் தியாகம் சாமியார் கலவரத்தால் ஊடகங்கள் கண்டு கொள்ளப்படவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்களால் வெடிகுண்டு வைக்கப்பட்டது, இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது பள்ளி நிர்வாகம்.

உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர், அச்சமயம் வெடிகுண்டு வைக்கப்பட்ட பள்ளியில் 400 மாணவர்கள் இருந்தனர். 

10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு எப்போது வெடிக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலையில் அங்கிருந்த தலைமைக் காவலரான அபிஷேக் பட்டேல் என்பவர் சிறிதும் தயங்காமல் அந்த வெடிகுண்டை தன் தோலில் தூக்கிக்கொண்டு சுமார் 1 கிமீ தூரம் ஓடிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று வைத்தார்.

சினிமாக்களில் வரும் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில்  அமைந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒரு செய்தித் தொலைக்காட்சியின் நிருபர் எடுத்த 12 நொடிகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் வாழும் பகுதியில் இருந்து காட்டுப்பகுதி வழியே தோலில் வெடிகுண்டுடன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காவலர் படு வேகத்தில் ஓடிச் சென்றது  வலைத்தளவாசிகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக தலைமைக் காவலர் பட்டேல் கூறியபோது, சில மாதங்களுக்கு முன்னர் இதே போன்று வெடிகுண்டு வைப்பு சம்பவம் ஒன்றின் நிகழ்விடத்திற்கு சென்ற போது அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் 500 மீட்டர் சுற்றளவில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் கூறினர்.

400 குழந்தைகளின் உயிரும் கண்முன்னே இருக்கும் போது முன்னர் நடந்த சம்பவம் மனதில் தோன்றியதாகவும் இதன் காரணமாகவே எதைப்பற்றியும் யோசிக்காமல் ஓடோடிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வெடிகுண்டை எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

வீரதீரத்துடன், தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பொதுநலனுடன் செயல்பட்ட தலைமைக்காவலர் பட்டேலிற்கு மத்திய பிரதேச காவல்துறை பாராட்டுடன், பரிசுத் தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

சனி, 26 ஆகஸ்ட், 2017

சாமியாரின் இன்ப வெறியும்

பக்தாளின் கொலை வெறியும்.

2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 

பெயர் குறிப்பிடப் படாத அந்தக் கடிதத்தில், ராம் ரஹீம், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பல பெண் துறவிகளை அவன் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண் துறவி குறிப்பிட்டிருந்தார் கடித அடிப்படையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், தானாகவே வழக்கை பதிவு செய்தது. ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக விசாரணை செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது* ஆசிரமத்தை சேர்ந்த, 18 பெண் துறவி களிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. 

அதில், இரண்டு பேர், பாலியல் பலாத்காரம் நடந்ததை ஒப்புக் கொண்டனர். ஆனால் மொத்தம் 35 பேர்களுக்கும் மேல் இந்த சாமியார் இச்சைக்கு பலியாகி உள்ளனர்.ஆனால் அனைவரும் புகார் தர ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால், 'புனிதமாக்கு வதாக' கூறி, பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் துறவிகள் கூறினர்*இரண்டு பெண் துறவிகளும், நீதிமன்றத் திலும் நடந்த சம்பவத்தை பதிவு செய்தனர். 
அதன் அடிப்படையில், 2007, ஜூலை, 30ல், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்தது* ராம் ரஹீம் மீதான வழக்கு விசாரணை, 2008ல் துவங்கியது.
பஞ்ச்குலாவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்தாண்டு, ஜூலை முதல் தினமும் விசாரிக்கப்பட்டு, ஆக., 17ல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என, நேற்று, தீர்ப்பு வழங்கப்பட்டது.
 வரும், 28ல், தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
அரசு சாரா தொண்டு மற்றும் மத அமைப்பான, 'தேரா சச்சாசவுதா'வின் தலைமையகம், ஹரியானா மாநிலம் சிர்சாவில்உள்ளது. 
மஸ்தானா பலுசிஸ் தானி என்பவர், மத கோட்பாடுகளை பரப்புவதற் காக, 1948ல் இந்த அமைப்பை துவக்கினார். இந்த அமைப்புக்கு, நம் நாட்டில், 46 ஆசிரமங்கள் உள்ளன. 
அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டனிலும்  6கோடி பேர், இந்த அமைப்பின் ஆதரவாளர்க ளாக இருப்பதாக கூறப்படுகிறது. மஸ்தானா பலுசிஸ்தானி, 1960ல் மரணமடைந்தார். அதன் பிறகு, ஷா சத்னம் சிங் என்பவர், அதன் தலை வரானார். 

1990ல்,அவர் மரணம டைந்தபோது, குர்மீத் ராம் ரஹீம் சிங், தலைவராக பொறுப்பேற்றார்.

ராம் ரஹீம், மதத் தலைவராக இருந்தபோதும், நடிகராகவும்,பாடகராகவும் திகழ்ந்தான்.3
 ஹிந்தி படங்களை தானே தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்து வெளியிட்டுள்ளார். .
அதிக ஆதரவாளர்களை கொண்டுள்ள, ராம் ரஹீமுக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பை, ஹரி யானா அரசு அளித்து வருகிறது. 

நாட்டில்,36 வி.ஐ.பி.களுக்கு மட்டுமே இசட்பிரிவு பாதுகாப்பு வழங்கப்படு கிறது. இதைத் தவிர, தனது தனிப் பட்ட பாதுகாப்பு படையையும் அவர் வைத்துள் ளார்.திருமண மாகி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ராம் ரஹீம், அதிக அளவு சாதனைகள் புரிந்த தற்காக, பிரிட்டனைச் சேர்ந்த உலக சாதனை பல்கலையால், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு துறை களில், 17 கின்னஸ் சாதனைகள், 27 ஆசிய சாதனைகள், 7 இந்திய சாதனைகள், 2 லிம்கா சாதனைகள் புரிந்துள்ளதாக, ராம் ரஹீமின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியானா, பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், 31 பேர் உயிரிழந்தனர்.
 பலர் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் உட்பட பொது சொத்து கள் சேதப்படுத்தப்பட்டன. ஹரியானாவில், முதல்வர், மனோகர் லால் கட்டார் தலைமை யிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சிர்சாவை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு. இதன் தலைவரான, குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது, இரண்டு பெண் துறவி களை பாலியல் பலாத் காரம் செய்ததாக, வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா வில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதை யடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன. உள்ளூர் போலீசாருடன், ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறிய நகரான பஞ்ச்குலாவில், ராம் ரஹீமின் ஆதர வாளர்கள்,2 லட்சம் பேர் குவிந்திருந்தனர்.

கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பாலியல் பலாத்கார வழக்கில்,'ராம் ரஹீம் குற்றவாளிஎன்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை விபரம், வரும், 28ல் அறிவிக்கப் படும்' என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றநீதிபதி, ஜக்தீப் சிங் தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில், ராம் ரஹீமுக்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டு கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். அதிகபட்சமாக ஆயுள் தண்ட னையும் விதிக்க முடியும். 
இந்த பலாத்கார வழக்கு களைத் தவிர, 2கொலை வழக்குகளும் அவர் மீது உள்ளன.தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு, கதறினர். 

சிலர் ஆத்திரத்தில், வன்முறையில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் வாகனங் கள், தீர்ப்பு செய்தியை நேரடியாக ஒளிபரப்ப வந்திருந்த, 'டிவி' சேனல்களின் வாகனங்கள் ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை கலைப் பதற்காக பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். ஆனால், வன்முறையாளர்கள், அவர்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப் பட்டன.

இந்த திடீர் வன்முறை, மிக வேகமாக, ஹரியானா மாநிலம் முழுவதும் பரவியது. அருகில் உள்ள பஞ்சாப் மற்றும் டில்லி மாநிலங்களில் பல இடங்க ளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
 டில்லி யில், ரயில் ஒன்று, தீயிட்டு கொளுத்தப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைப்பது, மின்சார டிரான்ஸ் பார்மர்கள் என, கண்ணில்பட்ட பொது சொத்து களுக்கு தீ வைத்தனர்.இந்த வன்முறையில், ஹரியானாவில், 17 பேர் உட்பட, 31 பேர் உயிரிழந்த தாகதகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர்காயமடைந்து உள்ளனர்.
வன்முறையை தடுக்க, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள் ளன. தொடர்ந்து, அந்த மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், ராம் ரஹீம் உடனடி யாக கைது செய்யப்பட்டான். 
நீதிமன்ற வளாகத்தில், அவனுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடு பட்டதால், ஹெலிகாப்டர் மூலம் ரோத்தக் கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.
இப்படி பணம் மோசடி,காம விளையாட்டுகளில் ஊறிய சாமியாருக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கியவர்களைப்பார்த்தால் இப்படி போலிகள் பெருக இன்னும் இந்த முட்டாள் பக்தர்களே காரணம் என தெரிகிறது.
ஆனால் இந்த ராம் ரஹீம் காம சாமியாரோ கொஞ்சமும் வெட்கம்,மானம் இல்லாமல்  நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு,பக்த மடையர்களுக்கு ஆசி வழங்கியபடி செல்வதை பார்க்கையில் இந்த போலி சாமியார் மீது கோபம் வரவில்லை இவனைப்போன்றவர்களை கொண்டாடும் பக்தி என்று திரியும்  மடையர்கள் மீதுதான் கோபம்,வெறுப்பு வருகிறது.

இதில் அரசியல்  பொறுக்கி சுப்பிரமணியசாமி "சாமியார்கள் மீது சதி வலை பின்னப்படுகிறது"என்று வேறு டுவிட்டுகிறான்.இந்தியாவை  காவியில் மூழ்கடிக்கத்தான் சதி வலை பின்னப்படுகிறது.
ராம் ரஹிமிற்கு ஆதரவான  கலவரம் நடக்கும் வேளையில்  ஹரியான மாநிலத்தில் பூரா சச் எனும் பத்திரிகையை நடத்தவரும் அன்ஷுல் சத்ரபதி என்பவர் இந்த தீர்பினை மகிழ்ச்சியுடன் வரவேற்று உயிருக்கு ஆபத்தான நிலையில், நீதிக்காக போராடிவருகிறார்.  
‘குர்மீத் ராம் ரஹிம் சிங்’ தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார் என்று  15 வருடங்களுக்கு முன்பு பூரா சச் பத்திரிகைக்கு ஒரு பெயரில்லா கடிதம் வந்துள்ளது. அப்போது பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அன்ஷுல் சத்ரபதியின் தந்தை ராம்சந்தர் சத்திரபதி அதை மறுநாளே பத்திரிக்கையில் பிரசுரித்துள்ளார் 

இதையடுத்து ராம்சந்தர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய மரணத்திற்கு காரணம் என்று ராம் ரகிமின் பெயரை எழுதி வைத்துவிட்டு அவர் உயிரிழந்துள்ளார். 
இந்த கொடூர கொலைக்கு காரணமான ராம் ரகிம் மீதும் FIR கூட அப்போது போலீசாரால் பதிவு செய்யப்படவில்லை. நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு அந்த வழக்கில் ராம் ரகீமை வழக்கில் இணைத்தார் அன்ஷூல் சத்திரபதி. 

பாலியல் வன்புணர்வில் ராம் ரகிமை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள அதே பஞ்சகுலா நீதிமன்றத்தில்தான் ராம்சந்தர் சத்திரபதியின் கொலை வழக்கும் தற்போது இறுதிகட்ட விசாரணையில் உள்ளது. பாலியல் வன்புணர்வு தீர்ப்பினைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கும் ராம் ரஹிமுக்கு கழத்தின் மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
 இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் உள்ள அன்ஷூல் சத்திரபதியின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ரஜ்சித் என்பவரின் கொலை வழக்கில்லும் ராம் ரகிமிற்கு தொடர்பு இருப்பதாக வழக்கு நடைபெற்றுவருகிறது. 

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட ஒரு காம வெறி பிடித்த  நபருக்கு ஆதரவாக லட்சக்கணக்கானோர் கலவரத்தில் ஈடுபடுவது இந்த பக்தி வெறி சமூகத்தின் கோரமான அவலநிலையையே எடுத்துக்காட்டுகிறது.
=====================================================================================

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தப்பி விடக் கூடாது

அதிமுகவின் இரு பிரிவுகள் இணைந்துள்ள நிலையில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலை மினி கூவத்தூராக மாற்றியுள்ளது தினகரன் தரப்பு. 

பலத்த கண்காணிப்பு இங்குதான் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தினகரன் தரப்பு தங்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள்., பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனராம். 

யாரும் தப்பி விடக் கூடாது என்று கண்காணிக்கப்படுகின்றனராம். 
மொத்தமாக ராஜ்பவனுக்கு வந்தனர் அங்கிருந்துதான் இவர்களை பத்திரமாக ராஜ்பவனுக்குக் கூட்டி வந்துள்ளனர். 

மீண்டும் ஒரு கூவத்தூர் காலத்தை நோக்கி தமிழகம் போகுமா அல்லது புதுத் தேர்தலுக்குத் தயாராகுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். 

கூவத்தூருக்குப் பிறகு சசிகலா கதி கூவத்தூர் கேம்ப்பின்போதுதான் சசிகலா சிறைக்குப் போக நேரிட்டது. 
தற்போது தினகரன் தரப்பு அதேபோன்ற பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. 


இது அந்தத் தரப்புக்கு சற்றே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் நிதானம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். 
ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று தனித்தனியே கடிதம் தந்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
"முதல்வர் பழனிச்சாமி மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; முதல்வர் பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ.வாகிய நானும் நம்பிக்கை இழந்துவிட்டேன்.

ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் ஏற்கனவே அளித்த ஆதரவை இக்கடிதம் மூலம் திரும்பப் பெறுகிறேன். 

என்னுடைய இக்கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலை ஊக்குவிக்கிறார் முதல்வர் நேர்மையற்றவராகவும் பாரபட்சம் காட்டக் கூடியவராகவும் இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழலை ஊக்குவிப்பதால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 
அதிகார துஷ்பிரயோகத்தை... எடப்பாடி பழனிச்சாக்கான ஆதரவை வாபஸ் பெற்றாலும்கூட நான் அதிமுகவின் உறுப்பினரே. அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தும் வகையில்தான் ஆதரவை வாபஸ் பெறுகிறேன். 
ஓபிஎஸ் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் அதிகரித்துள்ளது. ஊழலை மறைக்கவே ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிமுக எம்.எல்.ஏக்கள் 22 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 


இது தொடர்பாக ஸ்டாலின் அனுப்பியுள்ள கடித விவரம்: 

"முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என 22 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் இன்று கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.

கர்நாடகாவை போல... இதேபோல் ஒரு சூழல் கர்நாடகாவில் ஏற்பட்ட போது அம்மாநில ஆளுநர், முதல்வராக இருந்த எடியூரப்பா பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிட்டிருந்தார்.

 முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் எந்த ஒரு காலதாமமும் காட்ட கூடாது. குதிரைபேரம் அப்படியான காலதாமதமானது அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு அரசு தொடர வழிவகை செய்யும். 

ஜனநாயக மாண்புகளை சீர்குலையச் செய்துவிடும். 
முந்தைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்ததைப் போன்ற குதிரை பேரங்களுக்கு வழிவகுத்துவிடும். 

பொம்மை வழக்கின் அடிப்படையில்... எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை உடனே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தின் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். "

 இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பன்னிர் -எடப்பாடி போன்ற ஒருகட்சியில் இரு அணிகளை வைத்து விளையாடி இணைவதை உலகநாயகன் கமல்ஹாசன் தனது "சத்யா"படத்திலேயே காட்டிக்கொடுத்து விட்டார்.சனி, 19 ஆகஸ்ட், 2017

எடப்பாடி எசப்பாட்டு

எட்டு மாதங்களுக்கு முன்னால் இறந்துபோன தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த 'மர்மத்தை' அறிவதற்காக, இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு நபர் விசாரனைக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

"எங்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது, இனிமேல் இரு அணிகளின் இணைப்புப் பேச்சு வார்த்தைக்குத் தடையில்லை" என்கிறார். 
ஓ.பி.எஸ் அணியின் இயக்குனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான மாபா பாண்டியராஜன்.
உண்மையில் எடப்பாடியும், பாண்டிய ராஜனும் வாயசைக்கின்றனர். 
பின்னாலிருந்து மோடிதான் பேசுகின்றார். கதை, உரையாடல், இயக்கம் எல்லாம் பா.ஜ.க.தான்!

'பாய்ஸ் கம்பெனி' வைத்து நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர்கள் இங்குள்ள அ.தி.மு.க.வினர். இந்த மேடையில் அந்த நாடகம் இன்னும் எத்தனை நாளென்று தெரியவில்லை.
தினகரன், சசிகலா குழுவினரையும், அவர்கள் குடும்பத்தினரையும் கழற்றி விட்டு விட்டு, ஓ.பி.எஸ் & ஈ.பி.எஸ். அணிகளை ஒன்றாக இணைத்து, இரட்டை இலைச் சின்னத்தை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தபின், அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வைத் தங்களுக்குள் 'அடக்கமாக' வைத்துக் கொள்வது, பா.ஜ.க.வின் திட்டம். 
பதுக்கி வைத்துள்ள பணத்தையும், பதவியையும் கட்டிப்பிடித்துக் காப்பாற்றிக் கொள்வது, பாய்ஸ் கம்பெனி நாடக நடிகர்களின் நோக்கம். 
இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான எண்ணத்தில்தான் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அந்தப் பரிந்துரையையும் அரசு  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தேவையில்லை. 
உண்மையாகவே விசாரணை நடத்த விரும்பி இருந்தால், அதனை 6 மாதங்களுக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து ஆய்வுகள் செய்திருந்தால் உண்மைகள் வெளிவந்திருக்கும்.
காலம் கடந்து, ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பே அன்றி வேறொன்றும் இல்லை. 
என்ன செய்வது, மோடி பேசுவதற்கு வாயசைக்க வேண்டும் என்பதுதானே எடப்பாடிக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை!
                                                                                                                                        -   சுப.வீரபாண்டியன்
உளவாளி @withkaran 
ஓபிஎஸ் ஈபிஎஸ் இனைவதால் தமிழக மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?


வியாழன், 17 ஆகஸ்ட், 2017

நீல திமிங்கலம்.('புளூ வேல்')

தற்கொலைக்கு தூண்டும், 'புளூ வேல்' என்ற இணைய விளையாட்டுக்கு இந்தியாவில் தற்போது மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
ஆனால், உண்மையில் இந்த தடை செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

'புளூ வேல்' என்பதன் அர்த்தம் நீல திமிங்கலம். 
இதன் பெயரில் ஒரு விளையாட்டு, ரஷ்யாவில் 2015ல் துவங்கியது.
 'புளூ வேல் சேலஞ்ச்' என்று அழைக்கப்பட்ட இந்த விளையாட்டை விளையாட வரும்படி அந்த நாட்டு இளம் தலைமுறையினருக்கு இணையம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. 
அழைப்பு விடுப்பவை, மரண குழுக்கள் என அழைக்கப்பட்டன. 

மன அழுத்தத்துடன் இருந்த இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த குழுக்களில் சேர்ந்தனர். 
2015ம் ஆண்டு முதல், 2016 ஆண்டு வரை, ரஷ்யாவில், 130 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 

அதன் பிறகே, 'புளூ வேல்' விளையாட்டு குறித்து ரஷ்ய அரசுக்கு தெரிய வந்தது. 
அந்த நாட்டு போலீசார், பிலீப் புதிகின் என்பவனை கைது செய்தனர். 

இவனது  'புளூ வேல்' விளையாட்டு மூலம், 16 பெண்கள் தற்கொலைக்கு காரணமானவன் என கண்டுபிடிக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி போல இந்த விளையாட்டின் போதும் , நாள் ஒன்றுக்கு என தொடர்ச்சியாக, 50 நாட்களுக்கு பிக்பாசை விட  கொடூரமான,கடினமான பணிகள் கொடுக்கப்படும். 

படுபயங்கரமான பேய் படங்களை பார்க்க வேண்டும்; 
ஒரு நாள் முழுக்க இருட்டு அறையில் இருக்க வேண்டும்; 
ஒரு நாள் முழுக்க யாரிடமும், எதையும் பேச கூடாது; 
நள்ளிரவில் சுடுகாட்டுக்கு தனியாக செல்ல வேண்டும்; 
நள்ளிரவில் தன்னிந்தனியாக நகரை வலம் வர வேண்டும்; 
உடலில் காயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என பல பணிகள் கொடுக்கப்படும். 
இறுதி நாளில், தற்கொலை செய்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படும். 

ஒரு பணியை முடித்த பிறகு அதற்கு ஆதாரமான புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படி தான் இந்த விளையாட்டு பரவி வருகிறது. 


ஆனால், 'புளூ வேல் சேலஞ்ச்' என்ற பெயரில் இது இணையத்தில் இல்லை. 
இதை நடத்துபவர், விளையாடுபவர் என நிரந்தரமாக யாரும் கிடையாது. 

பல்வேறு பெயர்களில், பல்வேறு நபர்களால் நடத்தப்படுகிறது. 
நீல திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கி இறக்கும் தன்மை கொண்டவை.
எனவே, தான் இந்த விளையாட்டிற்கு, 'புளூ வேல்' என்று பெயரிடப்பட்டது என்று கூறுகின்றனர். 

சில தனிப்பட்ட குழுக்கள் தான் இதை விளையாடுகின்றன. இந்த குழுக்கள், இணைய தளங்கள் மூலமாகவும், தனிப்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமும் செயல்படுகின்றன. 

இந்த விளையாட்டை விளையாட விரும்புபவர்களை, இந்த குழுக்கள், சமூக வலை தளங்களில் தொடர்ச்சியாக வெளியிடப்படும், 'ஹாஷ்டேக்' மூலம் தேர்வு செய்கின்றன. மும்பை, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இந்த விளையாட்டு பரவி, இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் பிறகே மத்திய அரசு விழித்து கொண்டு தடை விதித்துள்ளது.
ஆனால், தடை செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூகுள் தேடுதல் தளத்தில், 'புளூ வேல் சேலஞ்ச்' என்ற வார்த்தையை முழுமையாக நீக்கி விடலாம். 

பேஸ்புக் நிர்வாகம், தன் இணைய தளத்தில் தனியாக செயல்படும் குழுக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். இதேபோல், டுவிட்டர் நிர்வாகமும் செயல்படலாம். 

ஆனால், இதையெல்லாம் செய்தால் கூட, இந்த விளையாட்டை நிறுத்த முடியாது என்ற சூழ்நிலையே காணப்படுகிறது. இந்த விளையாட்டு வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற,' மெசேஜ் ஆப்'கள் மூலமும் விளையாடப்படுகிறது. தினசரி உத்தரவுகள் இந்த,' ஆப்'கள் மூலமே பரவுகின்றன. 

இந்த,' ஆப்'களை உருவாக்கியவர்கள் கூட, யார் யாருடன் தொடர்பில் உள்ளனர், என்ன தகவல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது என்பதை கண்டுபிடிப்பது கடினம். 

மத்திய அரசு தடை விதித்தது ஒரு புறம் இருக்க, ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 
பிள்ளைகளின் தினசரி செயல்பாடுகளை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். 
அப்போது தான் இந்த கொலை வெறி விளையாட்டு  பரவல் இல்லாமல்  நிரந்தர தீர்வு கிடைக்கும் . 
                                                                                                                                          -ரா.குமரவேல் 

========================================================================================

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

ரக்பூர் சபிக்கப்பட்ட குழந்தைகளும் , நவீன கம்சனும் *
ரப்தி நதிக்கரையில் நேபாள எல்லையோரம் இருப்பதுதான் கோரக்பூர் , பேரு பெத்த பேரு தாவு நீலேது என்பதின் மிகச் சிறந்த உதாரணம் தான் இந்த ஊர்.. தீன் தயாள் உபாத்யாயா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி , உலகின் நீளமான ரயில்வே பிளாட்பாரம் என்று அடிக்கடி கேள்விப்படும் ஊர் என்றாலும் மிகவும் மோசமான மர்ம பிரதேசம்தான் இந்த ஊர் ...
கடந்த 20 வருடங்களாக யோகி தான் எம்பி ஒரு இன்ஜினியரிங் கல்லூரி , தவிர ஒரு மண்ணாங்கட்டி முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாத ஊர் ..
இவர் வைத்தது தான் சட்டம் மொத்த கன்ட்ரோல் இவர் தான் காரணம் கோரக்நாத் கோவிலும் அதன் மடம்+ அறக்கட்டளைகள் இவர் கையில் தான் .. அறக்கட்டளைகள் மூலமாக அவ்வப்போது சில உதவிகளை தவிர்த்து கோயில் விழாக்களில் மக்களை ஈடுபடுத்தி ஒரு மயக்கத்திலே வைத்திருக்கும் உத்தி அலாதியானது ... அதன் மறுமுகம் கோரமானவை ...
சரியான சாலைகிடையாது , மருத்துவமனையோ பள்ளியோ யாரும் இவர் அனுமதி இல்லாமல் கட்ட முடியாது கட்டவும் இல்லை , கல்லூரிகள் கிடையாது , யுவ வாகினி அமைப்பு இவர் ஆரம்பித்தது இந்த அமைப்பில் கத்தி முதல் துப்பாக்கி சுடும் பயிற்சி வரை கொடுத்து கிருத்துவர்கள், முஸ்லிம்கள், காதலர்கள் , மாடு கொண்டு செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளாக்கி வைத்திருக்கிறார் .. துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக வைத்திருப்பார்கள் ... பெண்கள் கல்வியே சுத்தமாக கிடையாது ஆண்களுக்கும் பெரிதாக கல்லூரி வாசம் கிடையாது ... மதவெறியை ஊட்டி வைத்திருப்பதை தவிர ஒரு புண்ணாக்கும் கிடையாது ... அதை மக்கள் உணராமல் இருப்பது கேவலமான நிகழ்வு ... தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் அளிக்கப்படும் சதவீதம் 90% கோரக்பூரில் 29% மட்டுமே
பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பு தமிழநாட்டில் 21, அங்கே அது 50 ( 1000 பிரசவங்களில் )
பிரசவத்தின் போது தாய் இறப்பு தமிழ்நாட்டில் 79 , அங்கே 285 ..
அவர் 20 வருடங்களாக செய்தது மதவெறியை ஊட்டி வளர்த்தது மட்டுமே கல்வி இல்லை , சுகாதாரம் இல்லை, சாலை இல்லை அறியாமை மட்டுமே மிக அதிகம் சுவச்பாரத் திட்டத்தின் கீழ் நாட்டிலியே மிகவும் அசுத்தமான ஊர் என்று கண்டறியப்பட்டது இவரின் தொகுதியில் தான் ..
இப்ப நிகழ்வுக்கு வருவோம்
************""*******""**** 


80 களில் பிறந்த தமிழர்களுக்கு நினைவில் இருக்கலாம் மூளைக்காய்ச்சல் நோய் 90 களில் மிக அச்சமூட்டும் நோயாக இருந்தது அப்போது பன்றியை சுட்டுத்தள்ள எல்லா மாவட்டங்களில் நடவடிக்கை எடுத்தது அரசு மூளைக்காய்ச்சல் நோய் பற்றிய விழிப்புணர்வு , (எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு போல ) தடுப்பூசி எல்லா பள்ளிகளிலும் போடும் நிகழ்வு என்று பரபரப்பாக இருந்தது ... ஆனால் இப்போது அப்படி ஒரு நோய் பற்றிய எந்த பயமும் தமிழகத்தில் இல்லை
ஆனால் கோரக்பூர் மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் நோய்க்கு தனி வார்டே பல வருடங்களாக இருக்கிறது என்றால் அந்த பகுதியில் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்று நினைத்து பாருங்கள் தமிழகத்தில் அப்படி எந்த மருத்துவமனையிலும் தனி வார்டே கிடையாது ... ஜப்பனீஸ் என்சஃபளைட்டீஸ் என்னும் மூளைக்காய்ச்சல் முழுக்க முழுக்க சுகாதார சீர்கேட்டால் வருவது ..
அந்த நோய் வராமல் தடுப்பூசி மூலம் தடுக்க தவறியது ஏன் ?? 29% குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி கொடுக்கப்பட்டது ஏன் ? இறந்தவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுபான்மை ஏழைகளின் குழந்தைகள் தான் ஏன் ??
1995 லிருந்து கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் இதே நோயால் இறந்து போயிருக்கிறார்கள் ஆனால் 20 வருடங்களாக தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு எதுவும் செய்யாமல் நவீன கம்சனாக வேடிக்கை மட்டும் பார்த்திருக்கிறார்
ஆக்சிஜன் சிலிண்டரின் விவகாரத்தில் கடந்த 15 வருடங்களாக சப்ளை செய்த மோதி என்ற நிறுவனத்தை காரணமே இல்லாமல் நிறுத்திவிட்டு யோகி வந்த பிறகு புஷ்பா என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கி வருகிறார்கள் அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் இந்த நிறுவனத்திற்க்கும் 63 லட்சரூவா பாக்கி அதனால் அவர்கள் கொடுக்கவில்லை ... ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை இல்லை என்பதற்கு ஆதாரமாக ஊழியர்கள் கடிதம் கீழே கமெண்டில் உள்ளது அதுதான் ஒரே நேரத்தில் குழந்தைகள் இறந்ததிற்க்கு காரணம் ... இறப்புக்கு முழு காரணம் ஆளும் பிஜேபி அரசு தான் ஆக்சிஜனுக்கு 63 லட்சரூவா கொடுக்க முடியவில்லை ஆனால் மாட்டுக்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
ஊடக நடுநிலை (வாதம்)

70 குழந்தைகள் இறப்பு பற்றி ஆங்கிலம் முதல் தமிழ் சேனல்கள் வரை சொல்லி வைத்தது போல எந்த விவாதமும் இல்லை ஏன் ?? புதிய தலைமுறை மூளை அலர்ஜியால் இறந்தனர் என பொய் சொல்ல என்ன காரணம் ?? செய்தி தாள்களில் தலைப்பு செய்தியாக ஏன் வரவில்லை ??
டைம்ஸ் நவ் சேனலில் அன்று வந்தேமாதரம் விவாதத்தில் , குழந்தைகள் இறப்பு பற்றி பேசாமல் இதுபற்றி பேசுவது முக்கியமா என ஒருவர் கேட்டதற்கு , பெண் ( பேய் ) நெறியாளர் முக்கியமான விவாதத்தில் இதை சொல்லி விவாதத்தை திசை திருப்பி ஓடாதீர்கள் என்று மனசாட்சியே இல்லாமல் பேசுகிறாள்
டெல்லியில் டெங்கு சிக்குன்குனியா வந்தபோது நேரடியாக ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டி கில்லர்ஸ் என்றெல்லாம் ஹேஷ் டேக் போட்ட பாடுங்க இப்ப யோகியையோ பீஜேபீயையோ பற்றி ஒரே ஒரு ஹேஷ் டேக் கூட போடவில்லை ஏன் .. ??
இரண்டு நாட்களாக டாக்டர் கஃபீல் பற்றிய மனித நேயம் சேவை பற்றி செய்திகள் இணையத்தில் வெளியாகின அதுவரைக்கும் மூடிக்கொண்டு இருந்த ஊடக புரோக்கர்கள் இன்று அந்த டாக்டர் கஃபீலையே வில்லனாக்கி நீக்கிய பிறகு விவாதங்கள் முன்னெடுக்கும் ரகசியம் என்ன ... ??
யோகியை தப்பிக்க வைக்க காரணம் தேடிக் கண்டுபிடித்த பிறகு விவாதங்களை நடத்துவதற்கு பதில் ஊடக நாய்கள் ஹேவிளம்பி காசு பார்க்கலாம் ...

ரா.குமரவேல்.
Courtesy :Devi Somasundaram.
இதுதான் மருத்துவர் கபீல் கான் செய்த தவறு ?


மருத்துவமனை 69 லட்சத்துக்கு மேல் கடன் பாக்கி வைத்திருந்ததால் தனியார் ஆக்சிஜன் சப்ளை நிறுவனம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தர மறுத்துவிட்டது. எல்லா வகையிலும் முயன்று பயன் கிடைக்காததால் தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிவருமாறு தன்னுடைய மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்து உள்ளார் மருத்துவர் காஃபீல் கான்.

இதற்காக செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் ஏற்று முன்நின்று கடைசி நேரத்தில் போராடி கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த திரிபாதி பேசுகையில், “மற்ற டாக்டர்கள் நம்பிக்கையை இழந்த போது கான் மட்டும் போராடி தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிலிண்டர்களை வாங்கிவந்தார். அவர் பல்வேறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார், அவர் எப்போதும் எல்லோருடைய மனதிலும் நிற்பார்,” என கண்ணீர் மல்க கூறினார்.


==========================================================================================
"கடந்து செல்லும் பேருந்தில்

யாரோ காரித்துப்பிய சிதறல் போல்

முகத்தில் ஒரு துளி.


நாளிதழில் கனமழை எச்சரிக்கை.

முகத்தில் பட்ட துளியின் உண்மை புரிந்தது.


வானிலை அறிக்கை 

இன்றுதான் உண்மையானது

ஸ்டெர்லைட் புகழ்
தூத்துக்குடியில்."
================================================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...