வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

மோடி அரசின் முன்மொழிவு வெளியீடு1

விவசாயத்தை முற்றிலும் கார்ப்பரேட் தொழிலாக மாற்ற முயற்சி !!

 !


இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப்பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. 
இதன் விளைவாக கடுமையான நட்டமும், பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டதால் பல மாநிலங்களில் இவ்விவசாயம் பரவலாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 
அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய விவசாய முறைகளான ஏர்பூட்டி உழுதல்,பாரம்பரிய விதைகள், உரங்கள் ஆகியவை நீக்கப்பட்டு டிராக்டர்கள் மூலம் உற்பத்தியை அதிகரிக்க, இராசயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் புதிய ரக விதைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 
இது விவசாயத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. 
விவசாய நிலங்கள் இராசயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் நஞ்சாகிப் போகின. 
இதன்பின்னர் உலகமயமாக்கல் மற்றும்புதிய தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் மரபணு தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் மரபணுரீதியாக மாற்றி அமைக்கப்பட்ட விதைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
இவை உலகளவிலான உணவு கார்ப்பரேட்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். 
இவை மறுஉற்பத்தி செய்யாத மலட்டு விதைகள் மட்டுமின்றி அந்தவிதைகளில் சேர்க்கப்படும் பூச்சி கொல்லிகளால் நிலம் மற்றும் மற்ற தாவரங்களும் நஞ்சாகி விடுகின்றன. 
இந்த அடிப்படையில் பி.டி. பருத்தி, தக்காளி, கத்திரிக்காய் மற்றும்சோயா பீன்ஸ் ஆகியவற்றினால் விவசாயிகள் கடும் நட்டத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. 
இந்த வரிசையில் சமீபத்தில் மரபணு கடுகு விதைகளை களப்பரிசோதனையின்றி அறிமுகப்படுத்த மோடி அரசு முயற்சி செய்தது கடுமையான எதிர்ப்புக்குள்ளானதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடி அரசினால் நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், அப்படியே தலைகீழாக பசுமைப்புரட்சி பற்றிவிமர்சனம் செய்யப்பட்டுள்ளது. 
இதுவரை நடந்துள்ள விவசாயத்தின் வெற்றிதான் அதன் பாதிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அதுமட்டுமின்றி, இந்திய விவசாயம் உணவு தானிய விவசாயமாக இருந்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விவசாயம் குறித்த கலப்படமில்லாத பொய்களை கூறியுள்ள ஆய்வறிக்கை, உணவுதானிய விவசாயத்தைக் கைவிட்டு மாற்றாக விவசாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
அந்த மாற்றம் என்பது மரபணு மாற்றுப் பயிர்களை 6 மாதத்திற்குள் அறிமுகப்படுத்துவதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.மிகக் குறைவான இடுபொருள்கள், குறைவான நீர்த்தேவை உடைய தானிய உற்பத்தி எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி நடக்க வேண்டும்; 
அப்போதே உணவுக்கான பற்றாக்குறை தீர்க்கப்படும். அதற்கு ஒரே வழி இன்றை உணவுக்கான விவசாய முறைகளை பெருமளவில் மாற்றி மரபணு விவசாய முறைகளை, அதற்கான அச்சங்களை போக்கி, 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
மரபணு மாற்று முறை பயிர்களே அதிகலாபம்அளிக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ள ஆய்வறிக்கை, இம்முறையால் மட்டுமே விவசாயத்திற்கான சந்தை விரிவடையும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்; 
எனவே மரபணு மாற்று பயிர்களுக்கான பரிசோதனைகளை விரைவு படுத்தப்பட வேண்டும். தற்போதைய மரபணு மாற்று பயிர்களுக்கான மதிப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பிலும் ‘சீர்திருத்தங்கள்’ மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான அச்சங்கள் போக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாயம் குறித்த பார்வை மிகவும்அச்சத்தை தருவதாக உள்ளது. 
அது விவசாயத்தை அழித்து பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான மரபணு மாற்று பயிர்களை நாடு முழுவதும் திணிக்க முயற்சிப்பதாக உள்ளது. 
கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் வீட்டு மாடி, வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து காய்கறிச்செடிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. காய்கறிச்செடிகளுக்கு கடைகளில் உரங்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே எளிய முறையில் உரத்தை தயாரித்து இடலாம்.

நாம் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளின் தோல் கழிவுகளை சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி அதில் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால் உரக்குழி தயாராகி விடும். இதே போல பயன்படுத்தப்பட்ட டீத்தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம் சிறந்த இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரத்தை தயாரிக்கலாம். இக்கழிவு நன்கு வெயிலில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும் போது அவை நன்கு வளரும். சுவையான காய்கனிகள் கிடைக்கும்.

நிலக்கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு, மாட்டுச்சாணம் ஆகியவற்றை தலா ஒரு கிலோ சேகரித்து ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர், கோமியம் சேர்த்துக் கலந்து வாய்ப்பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும். இக்கலவை நொதிக்க 4, 5 நாட்கள் ஆகும். 5 நாட்களுக்குப் பின், ஒரு கோப்பைக் கலவையுடன் 10 கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து ஒரு அடி தள்ளி ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

சூடோமோனாஸ் என்னும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்றுப் பைகளுக்குப் பயன்படுத்தலாம். சூடோமோனாஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது.
===============================================================================================
                                               அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா!

" எனது அரசின்"

ஐந்தாண்டு சாதனைகள்?

இதுதாங்க ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் சாதனை என்று ஒரு லிஸ்ட் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர். காரணம், அப்படியாப்பட்ட டென்ஷன் லிஸ்ட் அது! சிலர் வாட்ஸ் அப்பில் அதிமுகவின் சாதனை (வேதனை)களை பட்டியலிட்டுள்ளனர். அந்த பட்டியலை நீங்களும் படியுங்கள்.
*.வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
*.சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
*.பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
*.அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
*.பஸ் கட்டணம் உயர்தியது.
*.பால் விலையை உயர்த்தியது.
*.மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
*.கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
*.ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
*.தொழில் வளர்ச்சியை முடக்கியது .
*.தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
*.சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
*.கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
*.நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
*.கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
*.சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
*.உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
*.அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
*.தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
*.கொடநாட்டில் வாசம்.
*.பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
*.கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
*.மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
*.இலக்கு வைத்து மது விற்றது.
*.தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
*.ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
*.நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
*.மந்திரிகள் மண் சோறு தின்றது.
*.தாது மணலை கொள்ளையடித்தது
*.ஆவின் ஊழல் .
*.கமல்ஹாசனை கலங்கடித்தது.
*.விஜய்யை வியர்க்க வைத்தது .
*.சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
*.கனிமவளத்தை களவாடியது.
*.அப்துல் கலாமை அவமதித்தது.
*.ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
*.25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
*.முட்டை, பருப்பு ஊழல்.
*.மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
*.லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
*.பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
*.நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
*.ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
*.தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
*.திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
*.பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
*.செவிலியரை சொல்லியடித்தது.
*.உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
*.ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
*.ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
*.செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
*.வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
*.கோவனை கைது செய்தது.
*.பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
*.மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
*.ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
*.விஷன் 2023 போயஸ் தோட்டத்திலேயே முடங்கி வெளியே வராமலே போனது .....
*.மன்னார்குடி வகையறாக்கள் 1000 கோடிகளில் வாங்கி குவிக்கும் மால்கள்,தியேட்டர்கள்.

சனி, 20 பிப்ரவரி, 2016

செய்தீர்களா?

செய்தீர்களா??

2011 சட்டசபை தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக, பல நல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...’ என சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா  கூறியிருக்கிறார்.
அப்படியா?
உண்மையில் சொன்னதை செய்தாரா?
சட்டசபையில் மனமறிந்தே பொய் சொல்லுவதை ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் தான் பார்க்கிறோம்.
விலைவாசியைக் குறைக்க சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும்;
இணையத்தில் ஊக வணிகம் தடை செய்யப்படும் என்றார்.
இரண்டுமே செய்யப்படவில்லை.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று 2011ல் அறிவித்தார் ஜெயலலிதா.  ஜனவரி 2016ல் கரும்பு விலை ரூ.2650 ஆக உயர்த்தப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.   
அம்மா குடிநீர் என்று அறிவித்து, ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்றதுதான் நடந்தது. இத்திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.
ஆனால், எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் மிகுந்த வீடுகள் கட்டித் தரப்படும். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டித் தரப்படும் என்று அறிவித்த 10 ஆயிரம் வீடுகள் கூட கட்டித்தரப்படவில்லை.
இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை. அனைத்து கிராமங்களுக்கும் 4 ஆண்டுகளுக்குள் தடையில்லா 3 ஃபேஸ் மின்சாரம் வழங்கப்படும். 2013ம் ஆண்டுக்குள் ஐந்தாயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம் என்றார்.
 கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.

திமுக ஆட்சிகாலத்தில் திட்டமிடப்பட்ட எண்ணூர் மற்றும் உடன்குடி மின் திட்டங்களும், டெண்டரில் செய்த குளறுபடிகளால் நீதிமன்ற வழக்குகளில் முடங்கியுள்ளன.
ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யாமல், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2012ம் ஆண்டுக்குள், 151 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குப்பையிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
160 கிராமப் பஞ்சாயத்துகளில் 150 கிலோ வாட் பயோ கேஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றார்.
குப்பைகளைக் கூட ஒழுங்காக வாராத அரசு என்று பெயர் வாங்கியதைத் தவிர எதையுமே அதிமுக அரசு செய்யவில்லை.
இத்திட்டங்களின் மூலம், 1,20,000 கோடி கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்தகைய சிறப்புத் திட்டங்களின் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைகுனிவில் இருந்து தமிழகத்தை மீட்டு, நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்றார்.

மார்ச் 2016 அன்று உள்ளபடி, தமிழகத்தின் மொத்த கடன் 2,16,000 கோடி என்று தமிழகத்தின் நிதித் துறை செயலாளரே அறிவித்துள்ளார். இந்தியாவில் கடன் வாங்காத மாநிலமே கிடையாது என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார்.
 இப்படி தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியதைத் தவிர வேறு எந்த சாதனையும் அதிமுக அரசு செய்யவில்லை.விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும்.
குறைந்த விலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் அனைத்து விவசாயப் பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கிற வகையில் நவீன மக்கள் சந்தைகள் அமைக்கப்படும் என்றார்.

1996 - 2001 திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த உழவர் சந்தைகளை மூடியதுதான் ஜெயலலிதாவின் சாதனை. மற்றபடி எந்த சந்தைகளையும் அமைக்கவில்லை.
விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட ஆறு ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். இதனால் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.  பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் பளிச்சிடுகிறது. பால் உற்பத்தி 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
2013 - 2014 புள்ளி விபரத்தின்படி 7.04 மில்லியன் டன்னாக பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கூடவே பால் விலையை கணிசமாக உயர்த்தியது அதிமுக அரசு.

மாணவர்களின் புத்தகச்சுமை குறைக்கப்படும். பள்ளிக் கல்வியின் நடைமுறைக் குறைபாடுகள் நீக்கப்படும் என்றார்.
ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை
. பல்கலைக்கழகங்கள் தனித்தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டங்கள் தீட்டப்பட்டு, பல்கலைக்கழங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என்றார்.
இன்றைய தேதிக்கு தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லை. அனைத்துப பல்கலைக்கழக நியமனங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
துணை வேந்தர் பதவிக்கு 14 கோடி லஞ்சம் பெறப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக நதிகளை நீர்வழிச்சாலை மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல் வெள்ளப்பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி, பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். தமிழக நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை, உலகவங்கி கடன் உதவியோடு அமைக்கப்படும் என்றார்.

நீர்நிலைகளை இணைத்து, வெள்ளப்பெருக்கு நீரை சேமிக்க முயன்ற அதிமுக அரசின் வழியை சமீபத்திய வெள்ளத்தில் ஒட்டுமொத்த மக்களும் பார்த்துவிட்டார்கள்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரண்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் நிறைவு செய்யப்படும் என்றார்.
அரசு ஊழியர்கள் தங்கள் குறைகள் குறித்து பேசுவதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு, கிடைக்காத காரணத்தால், படிப்படியாக பல்வேறு போராட்டங்களில் இறங்கி, இப்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம் என்றார்.ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளும், கடையை காலி செய்து விட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலைமைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

சென்னையை மட்டுமே சார்ந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால், தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் அதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை, போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
சிறுதொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்படும் என்றார்.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு புதிய தொழில் கூட தொடங்கப்படவில்லை.
இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்பட்ட தமிழகம், தொழில் துறையில் அதளபாதாளத்துக்கு வீழ்ந்தது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி, முதலீடுகளை வரவேற்று வந்த நிலையில், தமிழகத்தில் முதல்வரையே சந்திக்க முடியாத ஒரு அவலச் சூழல் நிலவியது.

முதல்வரை சந்திக்க முடியாதது மட்டுமல்ல, அப்படியே சந்தித்தாலும், தொழில் தொடங்க வருபவர்களிடம் 25 சதவகிதிம் கட்சி நிதி என்று கறாராக கேட்டதன் காரணமாக பல்வேறு தொழில் அதிபர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஆட்சி முடியப்போகிற கடைசி கட்டத்தில், முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் 2,42,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நாடகமாடியதைத் தவிர்த்து, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை. 

தொழில் தொடங்க வருபவர்களிடம் 25% கட்சி நிதி என்று கறாராக கேட்டதன் காரணமாக பல்வேறு தொழில் அதிபர்கள் அலறியபடி வேறு மாநிலங்களுக்கு ஓடிவிட்டனர் .வெளிநாடு ,வெளிமாநிலங்கள் தொழிலதிபர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர்களே வேறுமாநிலங்களில் 5000 கோடிகளில் தொழில் தொடங்கியுள்ளதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

ஹரீஸ் ஐபிஎஸ் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர்

  ஒட்ட வேண்டாம்

ஹரீஸ் மரணம் குறித்து, அவருடன் பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி, நேற்று வாட்ஸ் அப்பில் ஒரு வேண்டுகோள்  வில்லங்க அறிக்கை வெளியாகியுள்ள து. அதில்  பல பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அவை வருமாறு: 
"அன்புள்ள ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, நான் தற்கொலை  செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் பேட்ச்மேட். 
எழும்பூரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் மெஸ்சில் அறை எண் 104ல் தங்கி இருந்தார் ஹரீஸ். நானும் வேறு  ஒரு கேடரில் இருப்பதால் உயிர் தப்பினேன் என்றே கூறலாம். 
காரணம் நான் தற்போது உயிருடன் இருப்பதுதான். ஹரீசை பொருத்தவரை அவர் எந்தவிதமான சார்பும்  இல்லாமல் செயல்பட்டார். இது உலகுக்கே தெரியும். காவல்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை அவர் அனுமதித்தது இல்லை. 
ஹரீஸ் அகில இந்திய  சிவில் சர்வீஸ் தேர்வில் 2008ல் அகில இந்திய அளவில் 186வது இடத்தை பிடித்தார். 
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 
அவர் மிகவும் திறமை  வய்ந்தவர். 

ஒரு காலத்தில் காதல் தோல்வியால் மது பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார். ஆனால், அது ஒரு விசயம் அல்ல. 

அது நடந்து முடிந்து  பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்து விட்டார்.
நான்  தற்போது, எழுதியுள்ள இந்த கடிதத்தின் நோக்கமே தமிழகத்தில் அடிமைகளாக ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்க கூடாது என்பதை ஹரீசின் மரணத்தில் இருந்து நாம்  தெரிந்து கொள்ளலாம். காரணம் ஹரீஸ் தனிப்பட்ட முறையிலும், நடத்தையிலும், உறுதியாக இருந்தார். 
ஆனால், இப்படி கடமை உணர்வு தவறாமல் செயல்பட்ட  ஹரீசை அவரது மூத்த அதிகாரிகள் காப்பாற்றவோ, ஆதரிக்கவோ, ஆறுதல் படுத்தவோ இல்லை. 
சரி,  அதை விட்டு விடுவோம். 
இறந்துபோன ஹரீஸ் ெபண்  பித்தனாவோ, மது அடிமையாகவோ சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. ஒருவரது மரணத்துக்குப் பின் அதுபோன்று எதுவும் செய்ய வேண்டாம். 

முத்துக்குமாரசாமி, வருமான வரித்துறைக்கு பயந்தார், 

டிஎஸ்பி விஸ்ணுப் பிரியா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று கதை கட்டியதுபோல,  
இதையும் இழிவு படுத்த வேண்டாம். 
தயவு செய்து இறந்துபோன ஹரீஸ் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்
ஜெயாலலிதா படத்துடன் நிவாரணநிதி அளிக்க வேண்டாம் .அது நேர்மையான அவரை அசிங்கப்படுத்தும் அவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்னைகள்  இருந்தாலும் மூத்த அதிகாரிகள் யாரும் அவருக்கு ஆதரவாக இருக்கவில்ைல. 
இதுவே மெல்ல கொல்லும் விஷம் போல தமிழக காவல்துறை அவருக்கு  அளித்துள்ளது. 
முன்னாள் டிஜிபி ராமானுஜம் தினந்தோறும் விசாரணை என்ற பெயரில் ஹரீசுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். 
ஒருமுறை காவல் துறை ஆய்வுக்  கூட்டத்தில் எனக்கு எஸ்பி பிரமோசன் அளிக்க வேண்டும் என்று ஹரீஸ் கெஞ்சினார். 
ஆனால், அப்போது, டிஜிபியாக இருந்த ராமானுஜம் இதை ஏற்றுக்  கொள்ளவில்லை.  

இன்றைக்கு தமிழக மக்களுக்கு என்னுடைய முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து தற்கொலை செய்து கொண்ட ஹரீஸ் நடத்தை பற்றியோ  அவரது குணத்தை பற்றியோ கொன்று விடாதீர்கள். காரணம் அவர் தற்கொலைக்கு முதுகெலும்பில்லாத மூத்த காவல்துறை அதிகாரிகள் காரணம். 

எனக்கு கிடைத்த  நம்பத்தகுந்த தகவலின்படி அவர் மன இறுக்கத்தை போக்கக்கூடிய மாத்திரைகளை உட்கொண்டதுதான் அவரது மரணத்திற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது. 
எங்களுக்கு விடிவு தேவை. ஹரீஸ் நடத்தையை அசிங்கப்படுத்த வேண்டாம். தமிழக முதல்வர் அவர்களே உங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேவை இல்லை  என கருதினால் குடியரசு தலைவருக்கு தயவு செய்து கடிதம் எழுதுங்கள். 
தயவு செய்து அதிகாரிகளை கொல்வதை நிறுத்த சொல்லுங்கள். 

ஹரீஸ் மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெண் உயர் அதிகாரி மிகவும் கேவலமாக பேசியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.  

தமிழ்நாடு கேடருக்குள் வராத ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது காவல்துறையில் மட்டுமே நடக்கிறது. 
இது தமிழக அதிகாரியான ஹரீசுக்கு மன இறுக்கத்தையும்,  அவமானத்தையும் ஏற்படுத்தியதாக கருதினார். இதுவே அவருடைய தற்கொலைக்கு மற்றொரு காரணம்.  
இவ்வாறு அந்த வாட்ஸ் அப் வில்லங்கச் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.
=====================================================================================
251 ரூபாய் பிரீடம் 251அலை பேசியுடன் மற்ற அலைபேசிகள் ஒரு ஒப்பீடு.
SmartphoneDisplaySoftwareProcessorRAMStorageCameraConnectivityBatteryPrice
Freedom 2514-inch qHDAndroid 5.1 Lollipop1.3GHz quad-core1GB8GB3.2MP rear, 0.3MP front3G, Wi-Fi, Bluetooth, GPS1,450 mAhRs 251
Xolo Era 4G5-inch HDAndroid 5.1 Lollipop1.5GHz quad-core1GB8GB5MP rear, 2MP front4G, LTE, 3G, Wi-Fi, Bluetooth, GPS2,500 mAhRs 4,777
Swipe Konnect 5.15-inch FWVGAAndroid 4.4 KitKat (Upgradable to Android 5.1)1.2 GHz quad-core1GB8GB8MP rear, 3.2MP front3G, Wi-Fi, Bluetooth, GPS3,000 mAhRs 3,999
Spice Xlife 425 3G4-inch WVGAAnroid 5.1 Lollipop1.3 dual core512MB4GB3.2MP rear, 1.3MP front3G, Wi-Fi, Bluetooth, GPS
1,400 mAh3,399

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

"ஸ்பெக்ட்ரம் ஊழல்"

ஒரு இட்டுக்கட்டப்பட்ட பார்ப்பனீயப் புனைவு.

ஐயையோ, 1,76,000 கோடி ரூவா ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்த எடுத்துக்கிட்டு கருணாநிதி ஓடிட்டாரு, உலகத்திலேயே பெரிய ஊழல் இதுதான், பாருங்க, தி.மு.க வும் அதன் தலைவர்களும் எப்படி நாட்டைச் சூறையாடீட்டாங்க, 
ஐயோ, அங்கே வலிக்குது, இங்கே வலிக்குது, குத்துது, கொடையுது, இன்றைக்குக் காலை வரைக்கும் இந்தியப் பார்ப்பனீயமும், முதலாளித்துவ பனியாக்களும், அவர்களால் விளம்பரம் அது இதுவென்று காசு பார்க்கிற "சோ கால்ட்" தேசியத் தொலைக்காட்சிகளும் கூவின கூவலில் ஒட்டு மொத்த தேசமும், ஏன் தி.மு.க தொண்டர்களும் கூட ஒரு கணம் அசந்து வாயைப் பிளந்து விட்டார்கள். 
ஒருவேளை இருக்குமோ???
சிக்கல் எங்கே இருந்து ஆரம்பமாச்சு, COAI என்கிற தொலைத்தொடர்புக் கூட்டமைப்பு (ஏர்டெல், ஏர்செல், ஐடியா, ரிலையன்ஸ், டெலினார், வீடியோகான் மற்றும் வடாபோன் நிறுவனங்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கிற ஒரு தொலைத்தொடர்பு மாபியாக் கும்பல்) இந்தியாவில் இருக்கிறது, 
இந்தக் கும்பலின் மிக முக்கியமான வேலை இந்தியாவின் பணம் காய்க்கும் மரமாகிய தொலைத்தொடர்புத் துறையில் புழங்கும் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அரசியல் லாபிகளின் மூலமாகவும், தொலைதொடர்புத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பல்வேறு பலன்களைக் கொடுத்துத் தனது வசப்படுத்திக் கொள்வது.
பினாமிகளின் பெயரிலும், வெவ்வேறு போலி நிறுவனப் பெயர்களிலும் உரிமம் பெறுவதற்கான பதிவுகளைச் செய்து கொள்வது என்று ஏகபோகமாக ஒரு தேசியச் சுரண்டலாகவே இதைச் செய்து வந்தன. 
தொலைத் தொடர்புத் துறையில் பெரிய அளவில் புரட்சி ஏற்பட்டு அலைபேசி யுகம் துவங்கிய காலம் ஏறத்தாழ பிரமோத் மகாஜனின் காலம். பாரதிய ஜனதாக் கட்சி வழக்கம் போலவே தேசியக் கொள்ளை அடிப்பதின் ஒரு பகுதியாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் செய்தது.
அம்பானிகளும், பார்தி மிட்டல்களும் தங்களுக்குச் சாதகமான ஆர்.எஸ்.எஸ் களவாணிகளுடன் கூட்டுச் சேர்ந்து அலைக்கற்றையைத் தங்களுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக் கொண்டார்கள். 2007 ஆம் ஆண்டு மே மாதம் அலுவலகத்துக்குள் நுழைந்த சில நாட்களிலேயே இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை நான்கைந்து முதலாளிகளின் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்து கொண்டு சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் ஆ.ராஜா.
தொலைத்தொடர்புத் துறையின் ஏகபோக ராஜாக்களான C O A I யின் கூலிகள் தள்ளி வைக்கப்படுகிறார்கள், மிகப்பெரிய அளவில் ஊழலும், தேசியச் சூரையும் நிகழும் துறையின் நுட்பமான செயல்பாடுகளைப் பற்றி மிகுந்த ஆர்வத்தோடும், துணிவோடும் கவனித்துக் காய் நகர்த்துகிறார், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் C O A I க்கு ஆப்படிக்கிறார். 
C O A I ஆ.ராசாவின் சீரமைப்பு நடவடிக்கைகளால் கொஞ்சம் கலவரமடைகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆ.ராசவைக் குறித்து ஒரு புகாரளிக்கிறது. இந்தப் புகார் குறித்து விசாரிக்கச் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் வாகனவதி மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆ.ராசா மூவரும் டிசம்பர் 3, 2007 இல் சந்திக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜியிடம் வாகனவதி தெளிவாகச் சொல்கிறார், C O A I சிண்டிகேட் கூடுதலாக GSM அலைக்கற்றை ஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதாகவும், TRAI யின் புதிய பரிந்துரைகளின் படி அப்படிக் கொடுப்பது சாத்தியமற்றது என்றும் விளக்கமளிக்கிறார், 
தேச நலன்களுக்கு எதிராக, அரசின் கொள்கை முடிவுகளுக்கும் TRAI வழிகாட்டுதலுக்கும் முரணாகச் செயல்பட முடியாது என்கிற செய்தியை அங்கே ஆ.ராசாவும் தயக்கங்கள் இன்றி வெளிப்படுத்தினார்.
அதற்குப் பிறகு ஆ.ராசா, இந்த C O A I கூட்டமைப்பின் ஏகபோக உரிமைகளையும், தேசியக் கொள்ளையையும் கட்டுப்படுத்தப் பல்வேறு துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்கிறார், புதிய பல நிறுவனங்களுக்கு அலைக்கற்றையின் கதவுகளைத் திறந்து போட்டியை உருவாக்கும் மிக எளிய வேலையைத் தான் ஆ.ராசா தொடர்ந்து செய்தார், 
உண்மையில் அப்படியான ஒரு சூழலும் தொலைத் தொடர்புத் துறையில் உருவாக்கப்பட்டது, ஆ.ராசா தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கருத்தை வலியுறுத்துகிறார், 
நவம்பர் 2 - 2007 முதல் டிசம்பர் 26, 2007 வரை நான்கு கடிதங்களையும், விளக்கங்களையும் பிரதமருக்கு அளிக்கிற ஆ.ராசா உறுதியாகவும், தெளிவாகவும் இப்படிச் சொல்கிறார்.
வினோத் ராய் 
"ஏற்கனவே உரிமம் வைத்திருக்கக் கூடிய அலைபேசி நிறுவனங்களின் தேவைகள் போக புதிய நிறுவனங்களுக்கு நம்மால் அலைக்கற்றையைப் பகிர முடியும், அது தொலைத் தொடர்புத் துறையில் மிகச் சிறந்த போட்டியை உருவாக்கும், தரமான சேவை நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். 
ஆகவே, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற முறையைப் பின்பற்றப் போவதாகவும் தெரிவிக்கிறார்.
சொன்னபடியே செய்தும் காட்டுகிறார், பீதியில் உறைந்து நின்றன கூட்டமைப்பு நிறுவனங்கள், தங்கள் பல ஆண்டு கால மேலாதிக்கம் தடுக்கப்படுவதையும், ஏகபோகம் நிலைகுலைவதையும் உணர்ந்து கட்டணக் குறைப்பையும், தரமான சேவை முறைகளையும் குறித்துச் சிந்திக்கின்றன. 
ஒரே ஆண்டில் இந்தியாவின் கடைசிக் குடிமகனும், ஏழை விவசாயியும் பயன்பெறும் வகையில் அலைபேசிக் கட்டணங்கள் குறையத் துவங்கின.
"இன்கமிங்" அழைப்புகளுக்கும் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த நிறுவனங்கள் தடாலடியாக நொடிக்கு ஒரு பைசா என்கிற நிலைக்கும், இரவுகளில் இலவசம் என்கிற ஆடித் தள்ளுபடி நிலைக்கும் தள்ளப்பட்டன, 
திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற சமூக நீதி கண்ட மக்கள் இயக்கம் தேசத்தின் மக்களுக்கான அழுத்தமான தனது பணியைச் செய்து காட்டியது.
அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஐந்து மிக முக்கியமான பகுதிகளை நம்மால் அவதானிக்க முடியும்:
1) முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற முறைமையைப் பின்பற்றியது.
2) பழைய அரசுகள் நிர்ணயம் செய்த அதே கட்டணங்களையே ஆ.ராசாவும் நிர்ணயித்தார்.
3) TRAI வழிகாட்டுதலையும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்தின் நெறிப்படுத்தலையும் ஆ.ராசா புறக்கணித்தார், தான் தோன்றித்தனமாகச் செயல்பட்டார்.
4) அக்டோபர் 1, 2008 என்று கெடு வைக்கப்பட்ட விண்ணப்பம் செய்யும் கடைசி நாளை தன்னிச்சையாக மாற்றினார்.
5) ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற போன்ற பெரு நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்த ஊழலில் ஈடுபட்டார்.
முதல் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தெளிவாக அறிவார், நவம்பர் 2, 2007 ஆம் ஆண்டு இந்த முறைமையைத் தான் பின்பற்றப் போவதாகவும், வெளிப்படையான ஊழலற்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என்கிற உறுதிமொழியை பிரதமருக்கு ஆ.ராசா வழங்கி இருக்கிறார், 
தொலைத்தொடர்புத் துறையின் உள்ளார்ந்த நடவடிக்கைகளில் தான் தலையிட விரும்பவில்லை என்றும், அந்த நேரத்தில் தவறுகள் நிகழ்வதைப் போன்ற எந்த ஒரு சமிக்ஞைகளும் இல்லை என்றும் மன்மோகன் சிங் பின்பு பிப்ரவரி 16, 2011அன்று ஊடகங்களிடம் சொல்கிறார்.
இந்த முறைகளில் இருக்கும் பல்வேறு நன்மைகளைக் குறித்தும், தான் ஏன் இந்த முறைமையைப் பின்பற்றப் போவதாகவும் ஆ.ராசா பல முறை பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் மூலம் விளக்கி இருக்கிறார், பிரதமர் மற்றும் பிற அமைச்சகங்களோடு கூட்டங்களை நடத்தி இருக்கிறார். 
இந்தச் சந்திப்புகளையும், கூட்டங்களையும் சி.பி.ஐ வழக்கில் இருந்து மறைத்திருப்பதையும், சில முக்கியமான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் போக்குக் காட்டுவதையும் தனது இறுதிக் கட்ட வாதங்களின் போது ஆ.ராசா உறுதியாக வைத்தார்.
இரண்டாவதாக, பழைய கட்டணங்கள், ஏன் பழைய கட்டண முறையையே ஆ.ராசா முன்னெடுத்தார், CAG அறிக்கையின் மிக முக்கியமான குற்றச்சாட்டே, "அதிக விலை நிர்ணயம் செய்திருந்தால் நாட்டுக்கு 1,76,000 கோடி லாபம் கிடைத்திருக்கும்", என்பதுதான். 
ஆனால், நாட்டின் தொலைத்தொடர்புக் கொள்கை என்ன சொல்கிறது என்றால்,
"முன்னேற்றமும், வளர்ச்சியும் மட்டுமே தொலைத் தொடர்புத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும், பொருளீட்டல் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட வேண்டும்".
இலவசம், மற்றும் மானியங்களால் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், இன்றைய ஓரளவுக்கான தேசிய வளர்ச்சி விகிதம் என்பது அப்படியான மானியங்களால் தான் உண்டானது என்கிற அடிப்படை உண்மையை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். 
அப்படித்தான் ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயம் செய்தார். 
அதன் பலனாகவே ஒன்பது புதிய நிறுவனங்கள் அலைபேசி சேவை வழங்க இந்தியச் சந்தைக்குள் நுழைந்தன. 
அதன் காரணமாகவே ஒரு கூலித் தொழிலாளியும், ஏழை விவசாயியும் அலைபேசிப் பயன்பாட்டை அறிந்து கொண்டு பயனடைய முடிந்தது.
அதாவது, நாட்டின் இலவச மருத்துவத் திட்டங்களுக்காக ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 2,30,000 கோடி செலவிடப்படுகிறது, இந்தத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மருந்துகளை விற்பனை செய்தாலோ, ஏலம் விட்டாலோ அரசுக்கு குறைந்தது 
ஒரு 1,00,000 கோடி லாபம் கிடைக்கும், வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது, மருத்துவ அமைச்சரைக் கைது செய்யுங்கள், பிரதமரைக் கைது செய்யுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாகச் சொல்வதைப் போலவே ஒரு அறிக்கையை வினோத் ராய் தலைமையிலான தணிக்கைக் குழு வெளியிட்டது.
அதுமட்டுமில்லாமல், முரளி மனோகர் ஜோஷி போன்ற அம்பானிகளுக்கு நெருக்கமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வினோத் ராயைச் சந்தித்தது, அறிக்கையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது போன்ற நுட்பமான பார்ப்பனீய அரசியலும் இதில் கலந்திருக்கிறது. 
ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலராக இருந்த "ஆசீர்வாதம் ஆச்சாரி" மீது ஏற்கனவே சொத்துக் குவிப்புக் குற்றச் சாட்டுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்ததையும், அவர் C O A I கூட்டமைப்பின் முதலாளிகளுக்கு உளவாளியாக இருந்து பல பயன்களை அனுபவித்ததையும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
மூன்றாவதாக, TRAI வழிகாட்டுதல், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சக ஆலோசனைகள் புறக்கணிப்பு என்கிற குற்றச்சாட்டு, ஆதாரமற்றது மட்டுமில்லை சாத்தியம் இல்லாதது, 
நாட்டின் எந்த அமைச்சகமும் பிரதமர் அலுவலக வழிகாட்டுதலையும், நெறிகளையும் கடந்தே வந்தாக வேண்டும், மேலும், எழுத்துப் பூர்வமான தொடர்புகளும், நேரடிக் கூட்டங்களும் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கின் சாதகத் தன்மைக்காக சி.பி.ஐ யால் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றங்கள் பதிவு செய்துள்ளன. TRAI வழிகாட்டுதலின் படியும், அரசின் கொள்கை முடிவுகளின் படியுமே ஆ.ராசா தனது துறையின் முடிவுகளை எடுத்தார் என்பதை இன்றைய குடியரசுத் தலைவரே நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நான்காவதாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளை மாற்றினார் என்கிற குற்றச்சாட்டு, தொலைத் தொடர்புத் துறை போன்ற மிகப்பெரிய அமைச்சகங்களில் எப்போதெல்லாம் சில தகுதியான, வழமையான நிறுவனங்கள் தகவல் தொடர்புகளில் சிக்கல் ஏற்பட்டு வாய்ப்புப் பெறாத நிலை ஏற்படும் போது தேதிகளை மாற்றுவதும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதும் இயல்பான நடைமுறைகள்.
இது அமைச்சகத்தால் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. ஸ்வேன் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது
 அவ்வாறானா ஒரு நிகழ்வாகவே கருதப்பட வேண்டும். மற்றபடி ஸ்வேன் அல்லது யூனிடெக் நிறுவனங்களோடு ஆ.ராசாவுக்கு அலுவலக உறவுகளைத் தாண்டிய எந்த உறவும் இருந்தது என்பதை சி.பி.ஐ இன்று வரை உருப்படியான எந்த ஆதாரங்களைக் கொண்டும் நிரூபிக்கவில்லை.
கடைசியும், மிக முக்கியமானதுமான குற்றச்சாட்டு, அம்பானிகளுக்கும், மிட்டல்களுக்கும் ஆ.ராசா உதவினார் என்கிற முட்டாள்தனமான குற்றச்சாட்டு, இந்த வழக்கையும், ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகளையும் துவக்கியதே இந்த நிறுவனங்கள் தான், மேலும், தொடர்ந்து ஆ.ராசா இந்த நிறுவனங்களின் சிண்டிகேட்டை நான் உடைத்தேன், 
அவர்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலமான முறையற்ற லாபத்தை நான் நிறுத்தினேன், அதன் பலன் இந்த நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் போய்ச் சேர உதவினேன் என்று தெளிவாக ஊடகங்களிலும், நீதிமன்றங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
உண்மையிலேயே இந்த நிறுவனங்களுக்கு அவர் உதவி இருப்பாரேயானால் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. 
ஆக, சுப்பிரமணியம் சாமி போன்ற குருட்டுத்தனமான, யூகங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளை வைக்கும் போலி அறிவு ஜீவிகளின் வாதம் இங்கே லாஜிக்கலாக எந்த முக்கியத்துவமும் பெறவில்லை.
மொதல்ல 1,76,000 கோடின்னு பெரிசா ஊளையிட்டாங்கே, அப்புறமா, 97,410.74 கோடின்னாங்கே, அப்புறம் இல்ல 30,000 கோடின்னாங்கே, அப்புறம் மறுபடி இல்ல, செல்லாது செல்லாது 50,000 கோடின்னு மொதல்ல இருந்து அழிச்சுட்டு ஆரம்பிச்சாங்கே, 
இந்த வழக்கையே சாக்கா வச்சு சி.பி.ஐ ல இருக்குற பலபேரு வெளிநாடுகளுக்கு டூர் அடிச்சு நாட்டு மக்களோட வரிப்பணத்த நாசம் பன்னுனாங்கே, அங்கே சுத்தி, இங்கே சுத்தி எந்த ஆதாரங்களும், கிடைக்காம இப்போ நீதிமன்றத்துல நிக்கிறாங்கே.
நாட்டின் மிகப்பெரிய நம்பகத்தன்மை கொண்ட வணிகரும், சிந்தனையாளருமான டாட்டா திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதினார், அவர் சொன்ன சொற்களே எப்போதும் தி.மு.க வுக்கும், சமூக நீதியின் மீது நம்பிக்கை கொண்ட, உயர்ந்த மானுடக் கொள்கைகள் கொண்ட திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த பரிசு. 
அவர் சொல்கிறார்.
"அலைக்கற்றை விஷயத்தில் ஆ.ராசாவின் கொள்கைகள் சட்ட ரீதியாக மிக வலுவானவை, முற்போக்கானவை, காரணங்களோடு கூடிய மேன்மைக்குரியவை".
மேலும் நீதிமன்றத்திலேயே ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகத் தொடர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கடிதத்தை தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நீங்கள் எழுதினீர்களா என்று கேட்டபோது, சளைக்காமல் சொன்னார்.
"இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பாரபட்சமற்ற, யாருக்கும் சாதகமற்ற முற்போக்கான கொள்கைகள் வேண்டும், தவிர சுயநலக் குழுக்களிடம் மடங்காத நேர்மையும், நெஞ்சுரமும் கொண்டவராக இருக்க வேண்டும். அத்தகைய ஒருவர் இந்த நாட்டின் மிக முக்கியமான தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நீடிக்க வேண்டும் என்று உளமார விரும்பினேன்".
                                                                                             0அறிவழகன் கைவல்யம்.


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...