வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நினைக்கவே பகீரென்கிறதே!.

நாள் முழுவதும் மின்வெட்டு; அதைத் தாங்க முடியாத ஒருவன் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிடம் சொன்னானாம்: ""ஐயா, ஏழெட்டு மணி நேரமா "பவர்' இல்லை; இருக்க முடியலை''.
மன்மோகன் சிங் சொன்னாராம்: ""எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாகவே "பவர்' இல்லை; இருக்க முடியாமலா போயிருச்சு?''
தலைமையமைச்சரின் நிலைக்கு இன்று இந்திய ரூபாயும் வந்துவிட்டது. அதற்கும் "பவர்' குறைந்துவிட்டது.
அரசின் நிதி தொடர்பான பொருளாதாரத்தை பேரளவுப் பொருளாதாரம் என்று கூறுவார்கள். அது கடந்த இரு வாரங்களுக்குள்ளாக பேரழிவுப் பொருளாதாரமாக காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால் மாறிக் கொண்டிருப்பது இந்தியாவைப் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைமையமைச்சரும் நிதியமைச்சரும் விழுந்து விட்ட ரூபாய்க்கு முட்டுக் கொடுக்க நாள் ஒன்றுக்கு மூன்று தடவை ஆலோசனை நடத்துகிறார்களாம்.
வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கலாம் என்றிருந்தது ஒரு தூரத்துக் கனவு. விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்குள் ரூபாய் 65 மடங்கு விழுந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் எழுபதைத் தொடும் என்று வேறு எதிர்பார்ப்பு!
தங்க இறக்குமதியைத் தடுத்து விட்டால் ரூபாய் கீழ்நோக்கி பாய்வதைத் தடுத்து விடலாம் என்பது ப. சிதம்பரத்தின் கையிலிருக்கும் ஒரே தீர்வு!
தங்க இறக்குமதிக்கு நான்கு விழுக்காடு வரி விதித்தார்;

suran
அடுத்த இரண்டு நாட்களில் ஆறு விழுக்காடாக்கினார்; எட்டாக்கினார்; பத்தாக்கி விட்டார்; பதிற்றுப் பத்தாக்கினாலும், சரிக்குச் சரி வரி விதித்தாலும், காதலியை "என் தங்கமே' என்று கொஞ்சுகிற ஒரு நாட்டில் தங்கத்தின் மீதுள்ள பற்று குறைய முடியுமா?
ஒரு பவுன் ரூ.19,000லிருந்து 24,000 ஆகியதுதான் கண்ட பயன். கெடுபிடிகளுக்குத் தக அது ரூ.30,000ஐத் தொட்டுத் தன் எல்லையை ரூ.35,000 ஆக வரையறுத்துக் கொள்ளும் என்கிறார்கள்!
இனி அடுத்த கட்டமாக வரிவிதிப்பைத் தாண்டி தங்க இறக்குமதியையே தடை செய்து விடலாம் நம்முடைய நிதியமைச்சர். அது ஒன்றும் பிழையில்லை; தங்கம் ஒன்றும் இன்றியமையாப் பொருளில்லை.
நம்முடைய அன்னியச் செலாவணியை தின்பவை தங்கமும், கச்சா எண்ணெயும்தான். கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்க முடியாது. உற்பத்தியிலிருந்து போக்குவரத்து வரை அனைத்திற்கும் அதுவே உந்து விசை.
இதுவரை கச்சா எண்ணெய் 170 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தாற்போல் தங்கம் 60 கோடி டாலருக்கு இறக்குமதி ஆனது.
ஒரு நாடு நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும்போது தங்கத்தின் இறக்குமதிக்கு டாலர் ஒதுக்கீடு என்பது பேதைமையிலெல்லாம் பேதைமை என்பதால் தங்கத்திற்கு நிதியமைச்சர் கொடுத்த நெருக்கடி நேரியதே!
ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று, பொன்னின் மீது கொண்டுள்ள மோகத்தைத் தீய்த்துவிடுங்கள் என்று முத்தம்மாளுக்கு ஞானோபதேசம் செய்யப் புறப்பட்டாரே சிதம்பரம், அது தபோவனத்திலிருந்து கொண்டு தாயுமானவர் பேச வேண்டிய பேச்சு; நிதியமைச்சர் சிதம்பரம் பேசக் கூடாது!
""தங்கம் என்பது தாமிரம், இரும்பு, வெண்கலம், அலுமினியம் போல ஒரு உலோகந்தானே'' என்று மூன்றாங் கிளாஸ் வரையே படித்த முத்தம்மாளுக்கு ஆர்ட்வர்டில் படித்த பெருமிதத்தில் பாடம் எடுத்திருக்கிறார் சிதம்பரம்!
அவள் திரும்ப நிதியமைச்சரிடம், "தங்கம் என்பது உலோகந்தான்; ஆனால் ரூபாய் என்பதும் வெறும் தாள்தானே' என்று கேட்டு விட்டதாகச் சொல்லுகிறார்கள். அதற்கு நிதியமைச்சர் என்ன சொன்னார் என்பது பதிவாகவில்லை!
தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருந்த திரிசங்குவுக்கு "நில்' என்று விசுவாமித்திரர் கட்டளை இட்டது போல, தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய்க்கு "நில்' என்று நிதியமைச்சர் கட்டளை இட்டுத்தான் பார்க்கிறார். அது கேட்டால்தானே!
suran
ஆகவே ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க சிதம்பரம் பன்னாட்டு நிதியத்திடம் இருநூறு டன் தங்கத்தை அடமானம் வைக்கப் போகிறாராம்!
இதைக் கேட்டு விட்டு முத்தியாலுப்பேட்டை முத்தம்மாள் சிரியாய் சிரிக்கிறாள்!
ஒரு அவசரம் ஆத்திரம் என்பது நிதியமைச்சருக்கு மட்டும்தானா? முத்தம்மாளுக்கும் இருக்காதா? முத்தம்மாளுக்கு ஒரு வட்டிக் கடை; நிதியமைச்சருக்கு உலக வங்கி! இவ்வளவுதானே வேறுபாடு!
தாமிரம் போன்றதுதான் தங்கம் என்றாரே நிதியமைச்சர்; தாமிரத்திற்கு உலக வங்கியில் கடன் கொடுக்கிறானா என்று வேறு கேட்டுவிட்டாளாம் அந்த முத்தம்மாள்!
உண்மையான செல்வம் என்பது உற்பத்திப் பொருள்கள்தாம்! அதைப் பிரதிநிதித்துவப் படுத்த வந்தவையே ரூபாய்த் தாளும் தங்கமும்!
தங்கமும் தாமிரமும் ஒன்று என்பது குதிரையும் கழுதையும் ஒன்று என்பது போன்றது!
தங்கத்திற்கு பன்னாட்டு ஏற்புடைமை உண்டு. அதற்குள்ள பல சிறப்புகளும், அதனுடைய கிடைப்பருமையுமே அதற்குக் காரணம்!
லண்டனிலுள்ள மார்கரெட் அதைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக் கொள்கிறாள்; முத்தியால்பேட்டை முத்தம்மாள் அதைக் கழுத்திலும் காதிலும் தொங்க விட்டுக் கொள்கிறாள். அவ்வளவுதான்!
இந்த ரூபாய்த் தாளை எவன் நம்புவான்? நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று எல்லாரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஒரு நெருக்கடியை ஈடுகட்ட வக்கு வகை தெரியாதபோது, அச்சகம்தான் கையிலிருக்கிறதே என்று விருப்பத்திற்கு அச்சடித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்; சோமாலியா நாட்டு ரூபாய்த் தாளைப் போல் நம்முடைய நாட்டு ரூபாய்த் தாளும் ஆகி விடாதா? சோமாலியாவில் சோம்பு வாங்கப் போனால் பலசரக்குக் கடைக்காரன் அமெரிக்க டாலர் வைத்திருக்கிறாயா என்று கேட்கிறானே! அந்த நிலை இந்தியாவுக்கு வந்து விடக் கூடாது என்றாலும், எதற்கும் முத்தம்மாள் எச்சரிக்கையாக இருக்க நினைப்பது குற்றமா?
எப்படியோ, சிதம்பரத்திற்கும் சிக்கல் தீர்ந்தது. கையிருப்பு இல்லாத நிலையில் தங்கம் வாங்குவதற்கு இனி 60 கோடி டாலர் செலவழிக்க வேண்டியதில்லை. ஆகவே முத்தம்மாளின் தங்க மோகத்தால்தான் நாடு முழுகிவிட்டது என்று சிதம்பரம் இனிமேல் சொல்ல முடியாது. புதிய காரணம் கண்டுபிடித்தாக வேண்டும்;

suran
இல்லையென்றால் நம்பத்தக்க விதமாகப் புதியதொன்றைப் படைத்து மொழிய வேண்டும்!
முத்தம்மாளுக்கும் பெரிதாக ஒன்றும் பிரச்னை இல்லை; அவள் மகள் கலியாணத்திற்குத் தேவையான கொஞ்சம் போல தங்கம், இனி வங்களாகுடா கடல் வழியாக வந்துவிடும்!
பொதுவாக நம்முடைய நாட்டின் பொருளாதாரம் கவலை அளிப்பதாகவே உள்ளது. நடப்புக் கணக்கில் பற்றாக்குறை என்பது அதிலுள்ள மிகப்பெரிய ஓட்டை. மீண்டும் நாடு 1991 நிலையை நோக்கி விரைகிறதோ எனறு அஞ்சுபவர்களும் இருக்கிறார்கள்!
பணவீக்கம் மோசமான நோய்; இப்போதையப் பணவீக்கம் பத்து விழுக்காடு; தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க மன்மோகன் அரசால் முடியவில்லை.
பணவீக்கம் முலாயம் சிங் மாதிரி; பயமுறுத்தி முலாயமைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது போல, கடுமையான நடவடிக்கைகளால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மட்டுமீறிய பணவீக்கத்தில் நாட்டில் எந்தப் பொருளும் கிடைக்காது; ஆனால் எல்லோரிடமும் பணம் இருக்கும்! மக்கள் படிப்படியாகப் பண்டமாற்று முறைக்கே போய் விடுவார்கள்!
பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டிலிருந்து குறைந்து இப்போது 4.5 விழுக்காடு ஆகிவிட்டது. இது பத்தாண்டுகளாக இல்லாத நிலை.
தொழில் உற்பத்தி குறைந்து குறைந்து வெறும் "ஒரு' விழுக்காடு ஆகி விட்டது. உற்பத்தியே இந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால் எதை ஏற்றுமதி செய்வது? ஏற்றுவதற்கு இனி மனிதர்களைத் தவிர வேறொன்றும் இருக்காதோ என்பது குறைந்த கவலை அல்லவே!
கார் உற்பத்தி கூட 12 விழுக்காடு விழுந்து விட்டது. இப்போதைய அளவு உற்பத்தி கூட, ஊராட்சித் தலைவர்கள், நகராட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் என்று இவர்களிடமுள்ள "வற்றாத பணப்புழக்கத்தை' நம்பியே நடக்கிறது. இந்தியாவில் "சனநாயகம் தழைத்தோங்குவதன்' பக்கவிளைவு இது!
சுருங்கச் சொன்னால் ஏற்றுமதி குறைந்து விட்டதால் அயல்நாட்டுப் பணத்தின் வரத்துக் குறைந்துவிட்டது;

suran
 இறக்குமதி குறையாததால் டாலரின் தேவை கூடுதலாகி நெருக்கடி உண்டாகிவிட்டது!
பத்து இருபது நாள்களுக்கு முன்னர் அமெரிக்க நாட்டு "பெடரல் ரிசர்வில்' சில வர்த்தக சமிக்ஞைகள் வெளியாயின! பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலைகிற பண முதலைகளை ஈர்க்கும் வண்ணம் அந்தச் சமிக்ஞைகள் அமைந்திருந்தன.
அமெரிக்கப் பொருளாதாரம் தன்னுடைய சோர்வை அகற்றிக் கொண்டு விட்டது. ஆகவே வளரும் நாடுகளிலுள்ள முதலீடுகள் உறிஞ்சப்படுவதும் தொடங்கிவிட்டது.
2003க்கும் 2008க்குமிடையே, வற்றி வறண்டு போயிருந்த இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் சதை போட்டு மினுமினுக்கத் தொடங்கியதற்கு இந்த முதலீடுகளே காரணம்! இந்த காலகட்டத்தில் பொருளாதார அதிசயம் இந்தியாவில் நிகழ்ந்து விட்டதாக தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு அதிசயித்துப் போனார் மன்மோகன் சிங்.
ஆகஸ்ட் 14 ஆம் நாளில் முதலீடுகளை இறுக்கிப் பிடிக்கிற முயற்சியில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குப் பெரும்பணம் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் வண்ணம் நிதித்துறை அதிகாரிகள் சில கட்டளைகள் பிறப்பித்தனர்.
வாத்தியார் ஒரு பிள்ளையை உதைத்தால், அடுத்த பிள்ளையும் அஞ்சுவது போல, இந்திய நிறுவனங்களுக்கு நேர்ந்தது நமக்கும் நேர்ந்து விடுமோ, நம்முடைய கணக்குகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடுமோ என்றஞ்சிய வெளிநாட்டு முதலீடுகள் ஓட்டம் பிடிக்கத் தலைப்பட்டன. 1998ல் மலேசியா நிதி நெருக்கடியில் சிக்கியபோது அன்னிய முதலீடுகளை வெளியேறிவிட முடியாதபடி மூடி வைத்து விட்டனர். ஆசியாக்காரனெல்லாம் ஒரே மாதிரிதான் என்பது வெளிநாட்டுக்காரனின் எண்ணம்!
 இந்த உத்தரவுக் குழப்பத்திற்குப் பிறகு இன்றுவரை ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் இந்தியப் பொருளாதாரத்தின் முன்பற்களில் மூன்று காணாமல் போய்விட்டது.
 சிதம்பரத்தின் வளர்ப்புப் பிள்ளையான பங்குச் சந்தை அடுத்தடுத்த நாள்களில் 1,630 புள்ளிகளை இழந்துவிட்டது. வங்கிப் பங்குகள் வாயைப் பிளந்தது வியப்பல்லவே!
 பதறிப்போன ரிசர்வ் வங்கி, கையிருப்பிலுள்ள டாலரை விற்று, அதற்குப் புழக்கத்தை ஏற்படுத்தி ரூபாயைச் சரிவிலிருந்து மீட்டு விடலாமா என்று முயல்கிறது.
 இது ஒரு சிறு கால ஏற்பாடாகவே இருக்க முடியும்! தொடர்ந்து செய்தால் டாலர் கையிருப்பு குறைந்து இந்திய ரூபாய் மீண்டும் குட்டிக்கரணத்தைத் தொடங்கிவிடும்!
suran
 ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஏற்படுத்திய தொடர் விளைவுகளில் ஒன்றுதான் சிதம்பரம் முத்தம்மாளுக்குத் தங்கம் குறித்து ஞானோபதேசம் செய்ததும், அதற்கு அடுக்கடுக்காக வரி விதித்ததும்!
ஆனால் ஆகஸ்ட் 14-இல் நிதித்துறை பிறப்பித்த உத்தரவைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்திய ரூபாயின் பல்டிகளுக்குக் காரணம் என்பது மிகவும் மேம்போக்காகச் சொல்லப்படுவது!
பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் கிடையாது; தேசபக்தியும் கிடையாது. பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலையும் நாடோடிகள் அவர்கள்! நாம் ஒரு விடுதியில் தங்கி விட்டு ஒட்டுபற்று இல்லாமல் காலி செய்து விட்டு வந்து விடுவது போன்றதுதான் அவர்கள் முதலீடு செய்கிற நாடுகளோடு அவர்களுக்குள்ள உறவும்! எது இலாபகரமானது என்று பார்த்து வருவார்கள்; இங்கே மேய்ந்து முடிந்த பிறகு பச்சை தெரிகிற இன்னொரு நாட்டுக்குப் போய் விடுவார்கள்!
அமெரிக்கா சுணக்கமாக இருந்தபோது இங்கே வந்தார்கள்; சுணக்கம் நீங்கி நிமிர்ந்து விட்டது என்றவுடன் புறப்பட்டு விட்டார்கள்! வளரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகள் சிறந்தவைதானே!
suran
பழ.கருப்பையா.
இந்தியா இயந்திரவியலில், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடு. மேலைநாட்டாரிடம் போய்ச் சப்பான் கற்றுக் கொண்டதுபோல, டெங் ஜியாபிங்கின் சீனாவும் கற்றுக் கொண்டதுபோல, நாமும் அவர்களை அவர்களுடைய முதலீட்டோடும் தொழில்நுட்பத்தோடும் பிடித்துக் கொண்டு வந்து, கன்னத்தில் அரகரா போட்டுக் கொண்டுகூட கற்றுக் கொள்ளலாம்!
அந்த முதலீடும் ஓரளவு நிலையானதாக இருக்கும்!
வர்த்தக முதலீடுகளுக்கு அவர்களின்மீது சாய்ந்திருந்து விட்டு முட்டை உருவி விட்டானே என்று சொல்வதில் பயனில்லை!
அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஒரு சிறு சமிக்ஞை இந்தியாவை மட்டுமா ஆட்டியது? பிரேசிலில் இருந்து இந்தோனேசியா வரை பல நாடுகள் படபடத்துப் போய் விட்டனவே!
ஆனால் இவ்வளவு குறுகிய நாள்களில் மிகவும் பாதிப்படைந்தது இந்தியாதான்! பிடி என்ன நம்முடைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமா இருக்கிறது?
இந்திய ரூபாய் முழுக்கால் அளவுக்கு வேட்டி கட்டியிருந்தது; அது இப்போது முழங்கால் அளவுக்குக் குறைந்து துண்டாகிவிட்டது! இதுவும் குறைந்து கோவணமாகி விடுமோ என்னவோ!
நினைக்கவே பகீரென்கிறதே!
                                                                                                                                  -பழ.கருப்பையா.
நன்றி:தினமணி
                                                                                                                                                 கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உடலையும், மனதையும் நலமாக்கும் இசை!

------------------------------------------------------------------

இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
suran
கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியல்துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 207 நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில் 21 நபர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்த இசையை அரைமணிநேரம் கேட்டனர். இரண்டு வாரங்கள் அவர்கள் தொடர்ந்து இசையை கேட்டனர். அதே எண்ணிக்கையுள்ளவர்கள் இசையை கேட்காமல் வேறு வழிகளில் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இசையை கேட்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தது.
இதேபோல் இசையை கேட்காதவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இசையானது மனதை லேசாக்குவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தினசரி அரைமணி நேரமாவது இசையை கேட்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பைல்கள் காணாமல் போனது உண்மைதான்.
---------------------------------------------------------------------------------------------------------
 நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சில பைல்கள் காணாமல் போனது உண்மைதான் என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
 கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டு வரை மத்திய நிலக்கரி சுரங்க இலாகா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்தது. அப்போது நிலக்கரி சுரங்கங்கள் உரிமம் வழங்கப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
suran
 இதனையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டது தொடர்பாக பல பைல்களை காணவில்லை என்று நிலக்கரி சுரங்க இலாகா அறிவித்துள்ளது.
 இதற்கும் பிரதமர் மன்மோகன் சிங்குதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஊழலை மறைக்க பைல்களை காணாமல்போக செய்திருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.  இந்தநிலையில் பைல்கள் காணாமல் போனது குறித்து சுப்ரீம்கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சில பைல்களை காணவில்லை. அ வைகளை தேடிப்பிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் காணாமல் போன பைல்களை தேடிப்பிடிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க உரிமம்கோரி தனியார் கம்பெனிகள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 173 ஐ காணவில்லை. இவைகளில் 157 விண்ணப்பங்கள் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டவைகளாகும்.
 அந்த விண்ணப்பதாரர்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்படவில்லை என்று மத்திய நிலக்கரி சுரங்க அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக 47 பைல்களை சி.பி.ஐ. கோரியுள்ளது. இதில் 7 பைல்களை காணவில்லை. விசாரணையை முடிக்க சி.பி.ஐ. கேட்கும் 9 பைல்களை தேடிப்பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பைல்கள் காணாததாலும் சி.பி.ஐ. விசாரணைக்கு அந்த பைல்களை கொடுக்க முடியாததாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
 மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பிரமாண பத்திரத்தை நீதிபதி லோதா தலைமையிலான சிறப்பு பெஞ்ச் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.
suran
 காணாமல் போன பைல்களை தேடிப்பிடிப்பதற்காக நிலக்கரி சுரங்க கூடுதல் செயலாளர் தலைமையில் அமைச்சகங்களுக்கான கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கிடையில் நிலக்கரி சுரங்க அதிகாரிகள் சிலர் மீது வழக்கு தொடர்வதில் மத்திய அரசுக்கும் சி.பி.ஐ.க்கும் மோதல் போக்கு உருவாகி உள்ளது.
 நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் நடந்து வருவதால் ஊழலில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெறத்தேவையில்லை என்று சி.பி.ஐ. கூறி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கேரளா கபே....?


கேரளா மக்களும் நாமும் அண்ணன் தம்பி என்று நாம் சொல்லிக் கொண்டு அலைந்தாலும் அவர்கள் மனதில் நம்மை ரொம்ப கீழ்த்தரமாக பாண்டியாக அல்லது  உணர்கிறார்கள்.
‘டாம் 999” படத்தில் முல்லைப்பெரியாறை கேரளாவை அழிக்க வந்த அணை போல் சித்தரித்தார்கள்.இப்போது மெட்ராஸ் கபேயில் ஜான் ஆப்ரஹாம் கேரளாவில் இருந்து மனித குலத்தை ரட்சிக்க புறப்பட்டு இலங்கை சென்று ஈழத்தமிழர்கள்-விடுதலிப்புலிகள் என்ற அரக்கர்களை வதம் செய்து இலங்கையையும்-இந்தியாவையும் காப்பாற்றி விட்டு விடுதலிப்புலிகள் அண்ணல் ராஜீவை கொல்வதை தடுக்க புறப்பட்டு வந்து கொண்டிரூக்கையில் அது கையை மீறி படுகொலையாவதாக கதை முடிக்கிறார்கள்.
இதன் மூலம் சொல்லவரும் கருத்து .
ராஜ பக்ஷே தமிழர்களை கொன்று குவித்தது தவறே இல்லை.அவர்கள் அழிக்கப்பட  அரக்கர்கள் வம்சத்தினர்தான்.பக்ஷே,சோனியா,மன்மோகன் சிங்,மேனன் கூட்டம் ஈழத்தமிழர்கள்-விடுதலிப்புலிகள் மீது தொடுத்த அழித்தொழிப்பு நடவடிக்கை இந்த மெட்ராஸ் கபே மூலம் நியாயப்படுத்தப்படுகிறது.
இப்போது இப்படி ஒரு படம் எடுக்க வெண்டிய அவசியம் ஏன் வந்தது ?அவசியம் என்ன ?
தமிழர்களை,அதுவும் ஈழத் தமிழர்களை கொலைகார கும்பலாக காட்ட வெண்டிய அவசியம் ஏன் ?
பின்னால் மிக -வெளியெ என்று அலைபாயும் மனதினர்.இவர்களை அவர்கள் வீட்டிலேயே சென்று அவமானம் செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் வடிவேலு தரப்பினர் என்ற எண்ணம் மற்ற இந்திய இனத்துக்கு வந்து விட்டுள்ளது.
suran
இலங்கை பிரச்னையில் ஐ.நாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசை தமிழ் நாடே வலியுறுத்திய போது மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில் நிதிஷ் குமார்,முலாயம் சிங்,லாலுபிரசாத் போன்றோர் அப்படி ஒரு தீர்மானம் வேண்டாம் என்று சொல்லியது தமிழர் மனதை விட்டு மறைந்திருக்காது.
இந்தியாவில் தமிழன் தனியே விடப்பட்டுள்ளான்.
அந்த தைரியம் தான் மெட்ராஸ் கபே மூலம் இப்போது வெளியாகிறது.
இப்படத்தின் பின்னணியில் காங்கிரசும்,சிங்கள அரசும் உள்ளது பட்டவர்த்தனம்.
கதை முதல் பணம் வரை வந்த இடம் அதுவாகத்தான் இருக்கும்.
இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டு விட்டால் தமிழன் அதன் பின் தனது இனத்தை பற்றியே பேசும் தகுதியை இழந்து விடுவான்.
சீமான்கள்,நெடுமாறன்,மற்றும் கருணாநிதி,ராமதாஸ் அரசியல் செய்வதில் அர்த்தமே இல்லை.
திடீர் ஈழத் தாய் ஜெயலலிதா என்ன செய்யப்போகிறார்.
ஆணானப்பட்ட கமல்ஹாசன்,விஜய் ளையே ஆட்டி வைத்தவர் ,தடை போட்டவருக்கு இந்த ஜான் ஆப்ரஹாம் படம் எம்மாத்திரம் ?
ஆனால் அவர் தடையை தனது பாணியில் கொண்டுவருவாரா ?அவரின் ஈழத்தாய் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வாரா ?

இதில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பாஸ்கரன் என்ற பெயரில் சித்தரித்து உள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாகிறது. அங்கு அமைதி ஏற்படுத்த இந்தியா அமைதிப்படை அனுப்பி வைக்கிறது.
suran
இந்தியா ‘ரா’ அதிகாரி ஜான் ஆபிரகாமும், கேரளாவில் இருந்து அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு தீவிரவாதிகள் முத்திரை குத்தி அழிக்க முயற்சிக்கின்றனர்.
 ஜான் ஆபிரகாமும் அழிப்பு வேலையில் ஈடுபடுகிறார்.
அப்போது ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய விடுதலைப்புலிகள் தரப்பில் வியூகம் அமைக்கப்படுகிறது. இது இந்திய அரசுக்கு தெரிந்தும் பாதுகாப்பு அளிக்க  தமிழக அரசுக்கு தகவல் சொல்கிறது.
suran
ராஜீவை காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன. அதையும் மீறி அவர் கொல்லப்படுவது போல் கதை முடிகிறது.
சிங்கள ராணுவ படுகொலைகள் எதுவும் இதில் காட்டப்படவில்லை .
 விடுதலைபுலிகளையும், ஈழத்தமிழர்களையும் வில்லனாகவும், கேரளாவை சேர்ந்தவர்களை நல்லவர்களாகவும் சித்தரித்து படம் எடுத்துள்ளனர்suran

  • உண்மையிலேயே ஜான் ஆப்ரஹாம்  யார்..?
  • இலங்கை தூதரகத்தில், மெட்ராஸ் கஃபே 'ஜான் ஆபிரகாமை" சந்திந்த ரசிகர்
  • ஒரு திரைப்பட நடிகருக்கு இலங்கை தூதரக அலுவலகத்தில் அப்படி என்ன முக்கியமான வேலை..?
  • பாகிஸ்தானில் இருந்து வந்தால் மட்டும்தான் தீவிரவாதியா..?
  • இலங்கையுடன் இணைந்து தமிழ் மண்ணில் குட்டையைக் குழப்புவதற்கு பெயர் என்ன..?
உண்மையிலேயே இவன் யார்..?
இலங்கை தூதரகத்தில், மெட்ராஸ் கஃபே ஜான் ஆபிரகாமை சந்திந்த ரசிகர்  
ஒரு திரைப்பட நடிகருக்கு இலங்கை தூதரக அலுவலகத்தில் அப்படி என்ன முக்கியமான வேலை..?
பாகிஸ்தானில் இருந்து வந்தால் மட்டும்தான் தீவிரவாதியா..? 
இலங்கையுடன் இணைந்து தமிழ் மண்ணில் குட்டையைக் குழப்புவதற்கு பெயர் என்ன..?suran

suran

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மணல் ஆ [தர ]ய் வுக் குழு


suran


தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு ஆஷிஷ் குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத் தில் கனிம மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யவும், மணல் கொள்ளை அடித்த நிறுவனங்கள் மீது நடவடிக் கை எடுக்கவும் உத்தரவிட்டதாகவும், அதன் பின்னணியில் அவர் திடீரென அரசால் இட மாற்றம் செய்யப்பட்ட தாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் வேம்பார் பகுதி கடற் கரையில் சுமார் 40 ஹெக்டேர் பரப்பில் சுமார் 2.30 லட்சம் மெட்ரிக் டன் கனிம மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட் டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் வி.வி. மினரல்ஸ் நிறுவ னம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சுரங்கத்துறை கமிஷன ருக்கு இம்மாதம் 6 ம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதை அடுத்து சுரங்கத்துறை ஆணையர் ஆகஸ்ட் 8ம் தேதி தமிழக அரசின் தொழில் துறை முதன்மை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்" தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகைக்கு விடப் பட்ட சில சுரங்கங்களில் விதிமுறை களை மீறி அதிக கனிம மணல் எடுக் கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக வும், இந்த சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், இந்த ஆய்வுப்பணிகள் முடிவது வரை குவாரிகளில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்றும், குவாரி களில் இருந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் தூத்துக்குடி சுரங்கத்துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் கூறி யுள்ளார்.
suran
இதன் அடிப்படையில் தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 6 சட்ட விரோத குவாரிகளில் கனிம மணல் எடுக்கப் படுவதை ஆய்வு செய்வதற்காக வரு வாய்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை அதிகாரி களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக் கப்படவும், குவாரிகளில் சிறப்புக்குழு ஆய்வு செய்து முடிக்கும் வரை குவாரி களை நடத்துவதற்கு தடை விதிப் பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டுமென்றும் குவாரிகளி லிருந்து கனிமங்களை எடுத்துச் செல் லும் வாகனங்களுக்கு அனுமதி தருவதை தூத்துக்குடி கனிமவளத்துறை உதவி இயக்குநர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்த சிறப்புக்குழு குவாரிகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக் கை தர வேணடும் என்றும் உத்தரவிட் டுள்ளது. அந்த குழுவின் தலைவராக வரு வாய்த்துறை செயலாளர் திரு ககன் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கனிம மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த வேண்டுமென்றும், அனுமதிக்கப் பட்ட அளவைக் காட்டிலும் கூடுத லாகவோ, சுற்றுச்சூழல் பாதிக்கும் வகை யிலோ கனிம மணல் அள்ளப்பட்டிருந் தால் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டுமென் றும், நேர்மையும், துணிவும் உள்ள அதி காரிகளை நியமிக்க வேண்டுமென்றும், அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டுமென்றும், பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் தமிழக அரசைக் கோரி யுள்ளார்.
suran
இந்த கோரிக்கையின் பின்னணி குறித்தும், அதன் நியாயம் குறித்தும் விவா திப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
கனிம மணல் எடுக்கப்பட்டு, விசார ணைக்கு உள்ளாகியிருக்கும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். ஆனால் தூத்துக் குடி மாவட்டத்தை விட மிக அதிக அள வில் நீண்ட காலமாக கனிம மணல் கொள் ளை கன்னியாகுமரி மற்றும் திருநெல் வேலி மாவட்டங்களில் நடந்து வருவதும், அதை எதிர்த்து பல நேரங்களில் மக்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கூட ஏற்பட் டதும் அரசுக்குத் தெரியாததல்ல.
குறிப்பாக விசாரணைக்குழு தலைவராக இருக்கும் திரு ககன் சிங் பேடி அவர்கள் குமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் என்பதால் இந்த பிரச்சனை குறித்து அவர் நேரடியாகவே அறிவார். பல நேரங்களில் சில நேர்மையான அதிகாரிகள் நடவடிக் கை எடுக்க முயற்சித்ததும், அவர்கள் கடுமையான மிரட்டலுக்கு உள்ளானதும் அனைவரும் அறிந்த ஒன்று.
எனவே தான் இந்த கொள்ளையின் முழு பரி மாணத்தையும் அறிய வேண்டுமெனில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி நெல்லை, குமரி மாவட்டங்களிலும் ஆய்வு செய்வது தேவை.
1989ல் துவங்கப்பட்ட வி.வி. மின ரல்ஸ் என்ற நிறுவனம் கனிம மணல் கொள்ளையில் பல்லாண்டுகளாக ஈடு பட்டு வந்துள்ளது.
suran
குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரையில் காணப்படும் மணலில் மிக விலை மதிப்புள்ள கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்ட வி.வி.மினரல்ஸ் என்ற நிறு வனம் கோடி கோடியாக கொள்ளை அடிக்க திட்டமிட்டு கனிமக் கொள்ளையில் இறங் கியது.
 இம்மணலில் காணப்படும் கார் னைட், இல்மனைட், சிர்கான், ரூடைல் உள்ளிட்ட கனிமங்கள் அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, ஜெர்மனி, சிங்கப் பூர், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடு களுக்கு ஏற்றுமதியாகிறது.
 ஒரு டன் கார் னைட் மதிப்பு ரூ. 1838.7 கோடி என்றும், 1 டன் இல்மனைட் மதிப்பு ரூ. 1792 கோடி என்றும், ஒரு டன் சிர்கான் மதிப்பு ரூ. 64.5 கோடி என்றும் கூறப்படுகிறது.
ஒரு ஆண் டுக்கு இந்த நிறுவனம்1.5 லட்சம் டன் கார்பனைட், 2.25 லட்சம் டன் இல் மனைட், 12000 டன் சிர்கான், 5000 டன் ரூடைல் கனிமங்களை ஏற்றுமதி செய் துள்ளதாக தெரிகிறது. இதனால் அரசுக்கு 96,120 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. மேலும் தங்கு தடையற்ற மணல் கொள் ளையால் மிகப் பெரிய சுற்றுச் சூழல் பாதிப் பும் ஏற்பட்டு வருகிறது.
துவக்கத்திலிருந்தே இந்த நிறுவனம் நடத்தும் கனிமக் கொள்ளைக்கு கடற்கரை கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரி வித்து வந்தனர். 10.3.2004 ல் குமரி மாவட் டம் மிடாலம்கிராமத்தில் கனிம மணலை எடுக்க தமிழக அரசு கொடுத்த அனுமதி யை 26.5.2004 ல் மத்திய அரசு தடை செய் தது.
suran
இருந்தும் இந்த நிறுவனம் அதை மீறி அடாவடியாக கனிம வளத்தைக் கொள் ளை அடித்து வந்தது.
இதை எதிர்த்து மிடாலம் கிராம மக்கள் போராடிய போது காவல்துறை கனிம கொள்ளைக்கு ஆதர வாக இருந்து 10.6.2004 ல் கிராம மக்கள் மற்றும் மத்திய பொதுத் துறை அதிகாரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்தும், கனிமக் கொள்ளையை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சி அப்போது வலுவான போராட்டங்களில் இறங்கியது. ஆனால் அரசு அதிகாரிகள் கனிமக் கொள் ளையைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதி லாக அதற்கு ஆதரவாகவே செயல்பட்ட னர்.
அரசின் ஆதரவும் கனிம கொள்ளை நடத்தும் நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருந்தது. இந்நிலையில் இந்த கனிம மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி அன்றைய நாகர்கோயில் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. தோழர் பெல்லார்மின், மாவட்டச் செயலாளர் எஸ்.நூர்முகம்மது ஆகியோர் கிராம மக்கள் பிரதிநிதிகளுடன் புதுடில்லி சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர், சுரங்கத்துறை செயலாளர் அப்போது சுற்றுப்புற சூழல் அமைச்சராக இருந்த திரு ராஜா ஆகியோரை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். இருந்தும் அனைவரும் கனிமக் கொள்ளை நடத்தி வந்த நிறுவனத்திற்கே ஆதரவாக இருந்து கொள்ளையைத் தொடர அனுமதித்தனர்.
ஆனால் வலுவான போராட்டம் காரண மாக மிடாலம் கிராமத்தில் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டது.பிற பகுதிகளில் தனது கனிம மணல் கொள்ளையை அந்த நிறுவனம் தொடர்ந் தது. 2006 ல் நெல்லை மாவட்டத்தினை ஒட்டிய குமரி மாவட்ட கடற்கரை கிராமங் களில் நடைபெற்று வந்த கனிம மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் அன்றைய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதை ஒட்டி அன்றைய மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஜோதே நிர்மலா தலைமையில் அதிகாரி கள் குழு அங்கு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அங்கு திருட்டுத் தனமாக நடந்த கனிம மணல் கொள்ளை யைக் கண்டு பிடித்த மாவட்ட வருவாய் அலுவலர் அதைத் தடுத்து நிறுத்திய தோடு, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி களையும் பறிமுதல் செய்தார்.
suran
 உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்த வி.வி. மினரல்ஸ் நிறுவனர் திரு வைகுண்டராஜன் திருமதி ஜோதி நிர்மலா அவர்களை நேரில் சந்தித்து கடும் மிரட் டல் விடுத்தார்.
 அவருக்குக் கடுமையான நெருக்கடிகள் அவரால் தரப்பட்டன. 
அப் போது எதிர் கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர்ஜெயலலிதா
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாகவும், வருவாய் அலுவலர் திருமதி ஜோதி நிர்மலா அவர் களுக்கு எதிராகவும் 20.4.2007ல் பகிரங்க மாக அறிக்கை வெறியிட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்த சூழ்நிலையில் தான் தற் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கையும், உடனடியாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும் சந் தேகங்களைக் கிளப்பியுள்ளது.
 அன்றைய தி.மு.க. அரசு "வி.வி.மின ரல்ஸ் நிறுவனம்எதிர் கட்சி,சாதிய ஆர்ப்பட்டங்க்களை துணை கொண்டும் நீதிமன்றங்களில் திமுக அரசுக்கும்,டாடா வுக்கும் எதிராக செயல் பட்டு தடை வாங்கியதாலும்"
 அன் றைய நடவடிக்கைகள் கைவிட்டது.
எனவே தற்போது தமிழக அரசு ஆய்வுக்குழு போட்டதும், அது வரை கனிம மணல் எடுக்க தடை விதித்துள்ள தும் வரவேற்கத் தகுந்ததே.
ஆனால் மிக அதிகமான கனிம மணல் கொள்ளை நடைபெற்று வரும் குமரி, நெல்லை மாவட் டங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படாதது முழுமையான கனிம மணல் கொள்ளை யை வெளிக் கொண்டு வரவும், அதைத் தடுத்து நிறுத்தவும் உதவாது.

இங்கு ஆய்வு நடைபெற்று வரும் போது அங் கெல்லாம் கனிம மணல் கொள்ளையை அந்த நிறுவனம் தங்கு தடையில்லா மல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரசு நிலத்தை அபகரித்து மணல் கொள்ளை நடத்திய அந்த நிறுவனம் எவ்வித கிரிமினல் நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படவில்லை. மேலும் ஏற் கனவே கனிம மணல்களில் இருந்து பிரித்தெடுக்கப் பட்ட கனிமங்கள் அந்த நிறுவனத்தின் கிட்டங்கிகளில் பல லட்சம் டன் சேமித்து வைக்கப்பட் டுள்ளதாகவும், அரசின் ஆய்வு உத்தர விற்குப் பிறகும் அங்கிருந்து ஏற்றுமதி செய்வது தொடர்வதாகவும், இதைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்iயும் எடுக்கவில்லை என்றும் ஊடகங் களில் செய்திகள் வந்து கொண்டே யிருக்கின்றன.
இத்தகைய கனிம மணல் கொள்ளையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அளவில் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள தாகக் கூறி கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் நடத்தி யுள்ளனர்.
எனவே அரசு இத்தகைய கனிம மணல் கொள்ளை நடக்கும் நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவடைவது வரையிலும் எங்கும் கனிம மணல் எடுப்பதையோ அல்லது ஏற்கனவே பிரித்தெடுத்து கிட் டங்களில் வைக்கப்பட்டுள்ள கனிமங் களை ஏற்றுமதி செய்வதையோ அனு மதிக்காமல் தடை செய்ய வேண்டும்.
இந்த கனிமக் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகை யில் வி.வி.மினரல்ஸ் உட்படவுள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து இழப் பீடு வசூலிக்க வேண்டும்.
suran
நூர்முகம்மது
மேலும் அரசு நிலத்தை சட்ட விரோதமாக வளைத் துப் போட்டு,
சட்ட விரோதமாக கனிம மணல் கொள்ளை நடத்திய நிறுவனங்
களின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து கிரிமினல்
குற்றங்களுக் கான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

இத்தகைய நடவடிக்கை களை எடுப்பதன் மூலமே தற்போதைய
அரசின் மீது ஏற்படும் சந்தேகங்களை களைய இயலும்
 என்பது மட்டுமன்றி இத்தகைய பொதுச் சொத்துக்களைக்
கொள்ளையடிப்போர் யாராக இருந் தாலும்
அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணத்தை பொது மக்கள் மத்தியில் உருவாக்க இயலும்.
முறை கேடுகளை வெளிக்கொண்டூவந்த ஆட்சியரை அகற்றி விட்டு விவி மினரசுக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்ட இன்றைய முதல்வர் அமைத்துள்ள குழு நடவடிக்கைகள்-அறிக்கைகள் என்னவாக இறக்கும் என்பதை கணிக்க முடிகிறது.
குழுவினர் விவி மிரனஸ் முறைகேடாக மணல் அள்ளிய இடங்களை இன்றுவரை ஆய்வு செய்ய மறுப்பதும் -அதற்கு எதிராக மீனவர்கள்,கிராமமக்கள் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதும் நம் சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. 
அரசின் உள்நோக்கத்தையும் புரிய வைக்கிறது.
வெறும்.50 லட்சம் அபராதத்துடன் இவ்விசாரணை மூடப்படும்.
அதுவும் விவி மினரஸ் தனது இடத்தில் அளவுக்கு கொஞ்சம் அதிகமாக மணல் எடுத்து வந்ததாகத்தான் இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

பனை மரங்கள்
------------------------------------

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன.
இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன.

 எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும்  தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது.
suran
தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.

கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான்.
அழிவிலிருந்து காப்பாற்ற பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"குண்டு வெடிப்பு" துண்டா.
----------------------------------------------

1993ல், மும்பை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில், டில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள், உ.பி.,யில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, பானிபட், சோனேபட், லூதியானா மற்றும் ஐதராபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவன் துண்டா.
suran
 இதுதவிர வேறு பல இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாகவும், அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.துண்டாவின் உத்தரவின் பேரில், டில்லியில், 24, அரியானாவில், ஐந்து, உ.பி.,யில், மூன்று குண்டு வெடிப்புகளை, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.டில்லியில், 2010ல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்த போதும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியிருந்தான்.
 ஆனால், சரியான நேரத்தில், இவனது கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டதால், நிகழவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவ முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிமுக்கு நெருக்கமான துண்டாவை கைது செய்ய, 1996ம் ஆண்டே, சர்வதேச போலீஸ் மூலம், எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டது. கைதான அவனிடம் விசாரணை நடத்துவதன் மூலம், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின், பல சதித் திட்டங்கள் அம்பலமாகும்.கடந்த, 1998ல், காஜியாபாத்திலிருந்து வங்கதேசம் சென்று, அங்கிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளான்.
40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவனுமான, அப்துல் கரீம் துண்டா என்ற அப்துல் குவாட்டூஸ், 70, நேற்று கைது செய்யப்பட்டான்.
இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது, நேபாள எல்லையில் சிக்கினான்.

கடந்த, 2008ம் ஆண்டில், பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், 160க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகளின் பட்டியல், பாக்., அரசிடம் அளிக்கப்பட்டது.இந்த பட்டியலில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது, ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், மவுலானா மசூத் ஆசார், 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர்பு குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் உட்பட, 20 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.இந்தப் பட்டியலில், இடம் பெற்றிருந்த நபர்களில் ஒருவனும், மும்பை, ஐதராபாத், டில்லி, ஜலந்தர் மற்றும் ரோதக் என, நாட்டில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ந்த, குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் வெடிகுண்டு நிபுணருமான, அப்துல் கரீம் துண்டா, நேற்று முன் தினம், மதியம், 3:00 மணி அளவில், இந்திய - நேபாள எல்லை அருகே கைது செய்யப்பட்டான்.

டில்லியில் மட்டும், இவன் மீது, 1994 முதல், 1998ம் ஆண்டு வரை, 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பில், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு, வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளித்தவன்.ஒரு கை ஊனமான இவன், யூரியா, நைட்ரிக் ஆசிட், பொட்டாசியம் குளோரைடு மற்றும் சர்க்கரை போன்ற உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் மூலம், வெடி குண்டுகள் தயாரிப்பதிலும், அவற்றை மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் வெடிக்கச் செய்து, அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதிலும் கைதேர்ந்தவன்.
suran
நேபாள எல்லை அருகே கைதான துண்டாவிடம், இந்த ஆண்டு ஜனவரியில், அப்துல் குவாட்டூஸ் என்ற பெயரில் பெற்றிருந்த, பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்தது.

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம், பிகுவா கிராமத்தைச் சேர்ந்த, துண்டா, 40 வயது வரை, தச்சு வேலை, பழைய பொருட்கள் வியாபாரம், ஜவுளி வியாபாரம் என, பல தொழில்களைச் செய்துள்ளான்.
இதன்பின், பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான்.
 துண்டாவின் இளைய சகோதரர் அப்துல் மாலிக் இன்னும், தச்சராகவே உள்ளார்.
துண்டா கைது தொடர்பாக, மாறுபட்ட தகவல்களை போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது, வளைகுடா நாடு ஒன்றில், துண்டா தங்கியிருந்ததாகவும், அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்டதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.மற்றொரு தரப்பினரோ, பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து, 10 நாட்களுக்கு முன், துபாய் சென்ற துண்டா, அங்கிருந்து, நேபாள தலைநகர் காத்மாண்டு வந்ததாகவும், பின், இந்திய - நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

.

புதன், 14 ஆகஸ்ட், 2013

67 ஆண்டுகள் வந்து விட்டோம்.?suran
பகத் சிங்
நாட்டின் 67வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
28 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
இவைதான் ஒன்றுபட்ட இந்தியா.

சுதந்திர போராட்டத்தில் "வெள்ளையனே வெளியேறு' போராட்டம்முக்கிய பங்கு வகித்தது. இது எப்படி உருவானது?
 இரண்டாம் உலகப்போர், 1939ல் பிரிட்டன், ஜெர்மனி இடையேமூண்டது. 1942ல் பிரிட்டன் அரசு, கிரிப்ஸ் என்பவர் தலைமையில் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. இவர்கள் காங்., தலைவர்களைசந்தித்து, உலகப் போரில்பிரிட்டனுக்கு ஆதரவளித்தால், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
தேசத்தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாமல், நடுநிலை வகித்தனர்.இந்நிகழ்வு "கிரிப்ஸ் மிஷன்' என அழைக்கப்பட்டது. 1942 ஜூலை 14ல் காங்கிரஸ், "இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தேவை' என தீர்மானம் நிறைவேற்றியது. இதை ஆங்கிலேயர் ஏற்கவில்லையெனில், "கீழ்படியாமை' போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.
இதற்கு ராஜாஜி உள்ளிட்ட சிலதலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 1942 ஆக.9ல்"வெள்ளையனே வெளியேறு' போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்த 67 ஆண்டுகளில் நம்நாடு, சாதனை, சோதனை,ஏற்றம், இறக்கம் என பல தருணங்களை வரலாற்று பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
ஆனால் இந்த இந்திய விடுதலை லட்சக்கணக்கான மனிதர்களின் ரத்தத்தில் பெறப்பட்ட போதும்.
இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தவர் காந்தி என்று ஏதோ கடையில் தனது காசில் அவர் வாங்கி தந்தது போல் பாடங்கள் படிக்கப்படுகின்றன.
வெள்ளைக்காரன் காந்தியை பார்த்துபயந்துதரவில்லை.அவர் ராட்டையில் நூல் நூற்றத ற்காகவோ -உண்ணா நிலைக்கோ பயம் கொள்ளவில்லை.
பகத் சிங்,வாஞ்சிநாதன்,சுபாஷ் சந்திரபோஸ்,வ.உ.சி.,திலகர் போன்றோர்  வழியில் ஒட்டு மொத்த இந்தியா வும் திரும்பும் அபாயம் அவனுக்கு உரைத்ததால் காந்தியை தனது கையாளாக எடுத்துக்கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப்போ ரை
நகர்த்தி சென்றான்.
suran
ஆயுதப்போராட்டமும்,கம்யு ணிசம் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே காந்தியை கையில் எடுத்து தலைப்பாய் கட்டிவிட்டு சென்றான்.மொத்தத்தில் காந்தி பகத் சிங் தூக்கிற்கும்,சுபாஷ் தலைமறைவுக்கும் முக்கிய காரணம்.இதுதான் இந்திய விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை நிலைகள்.
 * 1947 ஆக., 15ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாசுதந்திர நாடானாது. பிரதமராக நேரு பொறுப்பேற்றார்.
* 1948: ஐதராபாத் சமஸ்தானம், காஷ்மீர் ஆகியவை இ
ந்தியாவுடன் இணைப்பு; ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பதவிகளில் பெண்கள் பங்கேற்பதற்கு அனுமதி
* 1950 ஜன., 26: இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் இந்தியா குடியரசு நாடானது. முதல் ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத் பதவியேற்றார்.
* 1952 : முதல் லோக்சபா தேர்தல்நடந்தது; முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
* 1953: மொழி அடிப்படையில் முதல் மாநிலமாக ஆந்திரா உருவானது.
* 1954 : பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியில் இருந்து, இந்தியாவுடன் புதுச்சேரி இணைப்பு.
* 1955 : "தீண்டாமை ஒரு குற்றம்' என்ற மசோதா நிறைவேற்றம்; இந்துதிருமணச்சட்டம் நிறைவேற்றம்.
* 1956: இந்தியாவின் முதல் அணுஉலை, மகாராஷ்டிராவின் தாராப்பூரில்துவக்கம்; மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு.
* தசம முறையிலான ரூபாய் (காயின்கள்) அறிமுகம்.
* 1959 : ரூர்கேலா இரும்பு ஆலை துவக்கம்
* 1961 : போர்ச்சுகீசியர்கள் ஆட்சி புரிந்த கோவா, இந்தியாவுடன் இணைப்பு.
* 1963: நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக "இந்தி' தேர்வு; குடும்ப கட்டுபாட்டு பிரிவு தொடக்கம்
* 1966 : பஞ்சாப், அரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் உருவாக்கம்.
* 1969 : 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
* 1971 : போரில் பாகிஸ்தான் சரணடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடுஉருவானது.
* 1974: பொக்ரானில் முதன்முறையாக அணுகுண்டு சோதனை.
* 1975 : இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் "ஆர்யபட்டா' ஏவப்பட்டது.
* 1977: சுதந்திரத்துக்குப்பின், காங்., அல்லாத கட்சி சார்பில், மொராஜி தேசாய் பிரதமர் ஆனார்.
suran
* 1981 : நாட்டின் முதல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் "ஆப்பிள்', விண்ணில் ஏவப்பட்டது.
* 1982: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, அண்டார்டிகாவில் கால் பதித்தது.
* 1983: உலககோப்பை கிரிக்கெட்போட்டியில், இந்தியா சாம்பியன்.
* 1984: இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா, முதன்முறையாக விண்வெளிக்குபயணம்.
* 1988: ஓட்டுரிமை வயது 21ல் இருந்து, 18 ஆக குறைப்பு.
* 1990: தரையிலிருந்து, விண்வெளிக்கு சென்று தாக்கும் "ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி.
* 1996: அட்லாண்டிக் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் லியான்டர் பயஸ் வெண்கலம் வென்றார்.
* 1999: பொக்ரானில் மீண்டும் அணுகுண்டு சோதனை. இதன்மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. காஷ்மீரின் கார்கில்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல். இதையடுத்து ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி.
* 2000: இந்திய மக்கள்தொகை 100 கோடியை தொட்டது.
* 2000: பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம் துவக்கம்; உத்தரகண்ட், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாகின.
* 2002: அணுஆயுதங்களை தாங்கிசெல்லும் "அக்னி' ஏவுகணை வெற்றிகர சோதனை.
* 2005 : "தகவல் அறியும் உரிமை' சட்டம் அமல்.
* 2007: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பொறுப்பேற்பு.
* 2008: இந்தியா முதன்முறையாக "சந்திராயன்-1' என்ற விண்கலத்தைநிலவுக்கு அனுப்பியது. இது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா, தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா இச்சாதனையை நிகழ்த்தினார்.
suran
சுதந்திரமாக கொடியேற்ற சுதந்திரம் கிடைப்பதெப்பொ ?

* 2011 : உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 2வது முறைசாம்பியன்; இந்திய மக்கள்தொகை 121 கோடியாக உயர்வு.
* 2012: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 100வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை.
* 2013: ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு அனுமதி.

 சுதந்திரம் அடைந்தபோது நாடு, 565 சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்தன.
இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர்.அனைத்து சமஸ்தானங்களும், இந்தியாவுடன் இணைய வேண்டும் என அரசு அறிவித்தது. அதன்படி பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலியவை உடனடியாக இணைந்தன. மற்றவற்றை இணைக்கும் பொறுப்பு, அப்போதைய உள்துறை அமைச்சர், "இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
 அவரின் முயற்சியால், 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948 மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவிதாங்கூர், ஜூனாகத் போன்றவை இணைய மறுத்தன. பின் ராணுவ நடவடிக்கை மூலம் இவை இணைக்கப்பட்டன.
1956ல் மொழிவாரி அடிப்படையில், மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன்பின், பெரிய நிலப்பரப்பை கொண்ட மாநிலங்கள், தனிமாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

 நாட்டில் தற்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
சமீபத்தில் ஆந்திராவை பிரித்து "தெலுங்கானா' தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அமைதியாக இருந்த மகாராஷ்டிரா (விதர்பா), குஜராத் (சவுராஷ்டிரா), உ.பி., (பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், அவாத் பிரதேசம், பச்சிம் பிரதேசம்), மேற்கு வங்கம் (கூர்க்காலேண்ட்), அசாம் (போடோலேண்ட்), மணிப்பூர் (குகிலேண்ட்), மேகாலயா( கரோலேண்ட்) என தனி மாநிலபிரிவினை கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அருணாசலப் பிரதேசம், அரியானா, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேம், பீகார், சட்டீஸ்கர், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தி, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.
ஆனால் தற்போது ஒரே மொழி பேசும் மாநிலங்களில் கூட, பிரிவினை கோரிக்கை எழுப்பப்படுகிறது.
தற்போது எழுப்பப்படும் தனிமாநில கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு அனுமதித்தால், இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50யை தொட்டு விடும்.
 இந்தியாவில் பெரிய நிலப்பகுதியை கொண்ட, வளர்ச்சியடைந்த மாநிலங்களும் இருக்கின்றன. சிறிய பரப்பளவு கொண்ட வளர்ச்சி பெறாத மாநிலங்களும் இருக்கின்றன. வளர்ச்சி என்பது அம்மாநிலமக்களின் கல்வியறிவு, கலாசாரம், பொருளாதாரம், அங்கு ஆட்சி செய்யும் அரசு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.
 எனவே, மாநில பிரிவினை இந்தியாவுக்கு எந்தளவுக்கு பயன்தரும் ?
suran

ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷக்==============================
மும்பையில் நேற்று முன்தினம் இரவு வெடிவிபத்தில் சிக்கிய நீர்மூழ்கியின் விபரம்:
கட்டுமான நிறுவனம்: அட்மிரால்டி ஷிப்யார்டு(ரஷ்யா)
கட்டும்பணி தொடக்கம்: 16.2.1995.
கடலில் இறக்கம்: 26.6.1997.
கடற்படையில் சேர்ப்பு: 24.12.1997.
வகை:
ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி.
எடை: 2325 டன்.
நீளம்: 238 அடி.
அகலம்: 32 அடி.
பயணத்துக்கு தேவையான ஆழம்: 22 அடி.
என்ஜின்: 2ஙீ3650 எச்.பி டீசல்,எலக்ட்ரிக் மோட்டார்.
* 1,5900 எச்.பி மோட்டார்.
* 1,204 எச்.பி. துணை மோட்டார்கள்.
* 1,130 எச்.பி ஸ்பீடு மோட்டார்.
வேகம்:
கடலுக்கு மேல்: மணிக்கு 19 கி.மீ
கடலுக்குள்: மணிக்கு 31 கி.மீ.
செல்லும் தூரம்:
கடல் மேல் பயணம்: மணிக்கு 13 கி.மீ வேகத்தில் 9,700 கி.மீ தூரம்.
மூழ்கிய நிலையில்: மணிக்கு 5.6 கி.மீ வேகத்தில் 640 கி.மீ தூரம்.
திறன்: தண்ணீருக்குள் 45 நாள்.
மூழ்கும் திறன்: 980 அடி ஆழம்.
ஆயுதங்கள்:
* 9எம்36 ஸ்டெரலா,3 ஏவுகணை.
* 3எம்,54 கிளப்,எஸ் ஏவுகணை.
* தண்ணீருக்குள் பாயும் டைப் 53,65 டார்பிடோ குண்டு
* டெஸ்ட் 71/76 டார்பிடோ.
* 24 டிஎம்,1 கடல் கண்ணிவெடி.


 நீர்மூழ்கி கப்பல்
 நீர்மூழ்கி கப்பல் 19ம் நூற்றாண்டில் முழு வடிவம் பெற்றது.
முதல் உலகப் போரில்(1914,18) ஒரு சில நாடுகளிடம் மட்டுமே நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் இருந்தன. தற்போது பல நாட்டு கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் இடம் பெற்றுள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும், நீளத்தில், அகலத்தில், எடையில் வேறுபட்டவை. அமெரிக்க கடற்படையில் 2 விதமான நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. விரைந்து சென்று தாக்குதல் நடத்தும் யு.எஸ்.எஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் வகை நீர்மூழ்கி கப்பல்கள் 363 அடி நீளமும், 33 அடி அகலமும், 6.900 டன் எடையும் உள்ளது.  யு.எஸ்.எஸ் ஓகியோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் பல வகை ஏவுகணைகளை வீசக்கூடியது. இது 560 அடி நீளமும், 42 அடி அகலமும் 17 ஆயிரம் டன் எடையுள்ளது.
* ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் 70 முதல் 74 மீட்டர் நீளம் உள்ளது. இதன் அகலம் 9.9 மீட்டர். மும்பையில் தற்போது விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷாக் நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்தான். இதில் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் என்ஜின்கள் உள்ளன. கடலுக்கு மேலே பயணிக்கும்போது, டீசலில் நீர்மூழ்கி இயங்கும். கடலுக்கு அடியில் பயணிக்கும் போது பேட்டரி மின்சக்தியில் கப்பல் இயங்கும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் அணுஉலையில் ஆரம்பத்தில் நிரப்பப்படும் எரிபொருள், கப்பலின் ஆயுள் 33 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருளை சப்ளை செய்யும். அதனால் அது நீண்ட நாட்கள் கடலுக்குள் இருக்க முடியும்.
* அமெரிக்க தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 35 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம். ரஷ்ய தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 25 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம்.
* நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் போது, அதன் மேல்பரப்பில் உள்ள தண்ணீர் தொட்டியின் வால்வுகள் திறக்கப்பட்டு கடல் நீர் நிரப்பப்படும். இதன் மூலம் நீர்மூழ்கியின் எடை அதிகரித்து கடலில் மூழ்கும். நீர்மூழ்கியை கடலின் மேல் பரப்புக்கு கொண்டு வர, அதிக அழுத்தம் உள்ள காற்று தண்ணீர் தொட்டிக்குள் செலுத்தப்பட்டு நீர் வெளியேற்றப்படும். அப்போது நீர்மூழ்கியின் எடை குறைந்து மேலே எழும்பும்.
* நீர்மூழ்கி கப்பல் 800 அடி முதல் 900 அடி ஆழம் வரை மூழ்கும். கடலுக்கு மேலே பயணிக்கும் போது மணிக்கு 20 முதல் 24 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலுக்கு அடியில் பயணிக்கும்போது மணிக்கு 50 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் நீர்மூழ்கி செல்லும்.
* நீரில் மூழ்கி பயணிக்கும்போது, வீரர்கள் சுவாசிக்க இயந்திரங்கள் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படும். காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்களும் நீர்மூழ்கியில் உள்ளன.
* டீசல் மற்றும் பேட்டரி சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் 45 நாள் வரையும், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நீண்ட நாட்களுக்கும் நீரில் மூழ்கியிருக்கும் திறன் படைத்தவை.
* வீரர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீர்மூழ்கியின் ஸ்டோர் ரூம்கள், ரெப்ரிஜிரேட்டர்களில் சேமித்து வைத்திருக்க முடியும். சேமித்து வைத்து தயார் செய்யக்கூடிய அனைத்து வகை உணவுகளும் நீர்மூழ்கியில் பணியாற்றுபவர்களுக்கு நான்கு வேளை வழங்கப்படுகிறது. பிரட், சப்பாத்தி, கேக், பிட்சா முட்டை, பால், பருப்பு, காய்கறிகள், பழங்கள், சிக்கன், மட்டன், மீன் என அனைத்து வகை உணவுகளும் வழங்கப்படுகிறது.  24 மணிநேரமும் நீர்மூழ்கி செயல்பட வேண்டும் என்பதால், மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். 6 மணி நேரம் ஷிப்ட் முறையில் அவர்கள் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் அவர்கள் ஓய்வெடுப்பர்.
* கேப்டன் உட்பட 2 உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே நீர்மூழ்கியில் தனி அறை இருக்கும். மற்றவர்களுக்கு ரயிலில் உள்ள பெர்த் அளவுக்குத்தான் படுக்க இடம் இருக்கும். இதன் காரணமாகவே நீர்மூழ்கி கப்பல்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவதில்லை.
* விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அட்மிரல்டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1997ம் ஆண்டு இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டது.
suran
* இக்கப்பலில் இதற்கு முன்பும் ஒருமுறை தீவிபத்து ஏற்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் பணியில் இருந்த போது இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீரர் பலியானார். இந்த விபத்து காரணமாக கப்பலில் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து கப்பலை புதுப்பிக்க ரஷ்யாவை சேர்ந்த ஸ்வெஸ்டோக்கா கப்பல் கட்டும் தளத்துடன் ரூ.450 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த புதுப்பிக்கும் பணிக்கு பிறகு மீண்டும் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் இப்போது பெரும் விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளது.

"தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து தீர விசாரிக்க வேண்டியிருக்கிறது. கப்பலில்  ஓட்டை விழுந்து தண்ணீர்  உள்ளே புகுந்து விட்டது. 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தோம். சதி வேலை காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்."
-என கடற்படை அட்மிரல் டிகே ஜோஷி தெரிவித்துள்ளார் .
67 ஆண்டுகளாகியும் இந்தியா தனது பாதுகாப்பில் இருக்கும் ஓட்டையை இதுவரை அடைக்கவில்லை.
தீவிரவாதிகள் இங்கு வந்து குண்டுகளை வைத்து செல்லும் சுற்றுலாத் தளமாகத்தான் உள்ளது.
பாகிஸ்தான் படையினர் நமது வீரர்கள் தலையை கொய்து கால்பந்து விளையாடும் நிலையிலும்,
சீனா அவ்வப்போது நமது நாட்டில் வந்து நமக்கு செலவு வைக்காமல்.
சாலைகளை போடவும்,கட்டிடங்கள் கட்டி தங்கி செல்லும் வகையில்தான் பாதுகாப்பு உத்திரவாதம் உள்ளது.
அதற்கு காரணம் நமது ராணுவம் அல்ல.
காங்கிரசு ஆட்சியினர்தான் என்பதும் வெட்ககேடான உண்மையாகவும் உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------
suranTies with Pak can't improve if terror acts continue: PM
In a strong message to Pakistan, Prime Minister Manmohan Singh today said anti-India activities emanating from there will have to stop for relations to improve and asserted that all steps will be taken to prevent "dastardly" acts like the recent killing of jawans on the LoC.
Read complete PM speech in E Newspaper of India
Log on www.news24online.com

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மணல் கொள்ளை


suran


மணல் கொள்ளையை ஜெயா அரசு கையாளும் விதம் ரொம்ப நல்லாயிருக்கிறது.மணல் கொள்ளையை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமாரை 6 மணி நேரத்தில் மாற்றி விட்டு தனியாக குழு அமைத்துள்ளார் முதல்வர்.மாவட்ட ஆட்சியரை மாற்ற காரணம் என்ன?அவரையே மேலும் முறைகேடுகளை கண்டறிய வைத்து அறிக்கை கேட்டிருக்கலாமே?
தனியான குழு அவர் விருப்பத்தை எதிரொலித்து தானே அறிக்கை கொடுக்கும்.விசாரணை குழுக்கள்-ஆய்வுக்குழுக்கள் பணியே ஆட்சியாளர் விருப்பத்தை அறிக்கையாக தருவதுதானே?
மாவட்ட ஆட்சியர் நிலையை பார்த்த பின்னரும் நடுநிலை அறிக்கை அக்குழுவினர் தருவார்களா?அப்படி வரும் என்று பொது மக்கள்தான்  எதிர்பார்ப்பார்களா?

படுக்கப்பத்து பகுதியில் வைகுண்ட ராஜன் தம்பிக்கு சொந்தமான பி.எம்.சி. மினரல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்ய அதிகாரிகள் உள்ளே சென்றனர். 
அதை கேள்விப்பட்ட


அந்த பகுதி மீனவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்திற்குள்ளே நுழைய முயன்றார்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் காவலாளிகள் மீனவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால், மீனவர்களுக்கும் அந்த நிறுவனத்தின் காவலாளிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவலாளிகள் அந்நிறுவனத்தின் கேட்டை இழுத்து பூட்டி விட்டனர்.
suran
 மீனவர்கள்” நாங்கள் கொடுத்த மனுக்களால்தான் இந்த முறைகேடுகள் வெளி வந்தன.நாங்கள் இதை பற்றி பல விடயங்களை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் .விவி.நிறுவனத்தை மட்டும் விசாரித்தால் எப்படி உண்மைகள் வெளிவரும்.எங்களையும் விசாரிக்க வேண்டும்.”
என்று வாதம் செய்தனர்.ஆனால் குழுவினர் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர்.
காவல்துறை மூலம் மீனவர்கள் தடுத்து அனுப்பப்பட்டனர்.பின்னர் அவர்களை பார்ப்பதாக குழு அறிவித்தது.
நல்லாயிருக்கிறது அல்லவா குழு விசாரணை.?
டாடா நிறுவனம் கருணாநிதி காலத்தில் அரசு துணையுடன் விவி மினரல்ஸ் கொள்ளையடிக்கும் இடங்களில் டைடானியம் தொழிற்சாலை அமைக்க முயன்றதை வைகுண்டராஜன் அப்போதைய எதிர் கட்சியின் உதவியுடனும்,தனது சாதி அமைப்பு துணையுடனும் நிறுத்தி விட செய்த வல்லமை மிக்கவர்.இவர் முறைகேடுகள் செய்வது பரசியம் ஆனாலும் கூட இவரை அன்றைய கருணாநிதி அரசே ஒன்றும் செய்ய இயலவில்லை என்பது வெட்ககேடான ஒன்று.


2007-08 ஆம் ஆண்டு முதல் 2012-13 ஆம் ஆண்டுவரை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடலோர தனிமங்கள் 15,55,000 டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் ப்பட்டுள்ளது.
இதில் 13,50,000 டன் இல்மனைட் 2,05,000டன் கார்னைட். சராசரியாக ஒரு ஆண் டுக்கு 2,50,000 லட்சம் டன் இந்தியாவின் கனிம வளம் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட் டுள்ளது. இது தவிர ஒரு நாளைக்கு 20 கண்டைனர்களில்இந்த கனி மங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின் றன.
 40 ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே முறைகேடுகள் நடந்திருப்பதாக  கூறியிருப்பது மிகக் குறைவான மதிப்பீடாகும்.
suran
 ஏற்று மதி செய்யப்பட்ட கனிமங்களின் மதிப்புலட்சம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
இது 2ஜி முறைகேட்டால் இழந்த தொகை யில் பாதிக்கும் அதிகமாகும். இத்தகைய முறைகேடுகளை அதிகாரிகளால் அது போல் எந்த நேரமும்இடம் மாறுதல்களால் பழி வாங்கப்படக் கூடிய என்ற ஆபத்து உள்ளது என்கிற நிலையில் இருக் கிற அதிகாரிகளால் விசாரணை செய்து விட முடியாது.

எனவே, ஒரு நீதி விசாரணைக்கு உத்தர விடுவது மட்டுமே இந்த கொள் ளையின் ஒட்டுமொத்த பரிமாணத் தையும் வெளிக்கொண்டுவர உத வும். எனவே, அத்தகைய நீதி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வளவு மணலை கொள்ளையடித்து 5000 கோடிகளுக்கும் மேல் குவித்த விவி நிறுவனம்.இன்னமும் ஏன் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது ?
இப்போதுள்ள பணக்குவியலெ 20 தலை முறைகளுக்கு மேல் காணும்.1000 ரூபாய்தாள்களை தின்று வாழ்ந்தால் கூட 10 தலைமுறைக்கு தாங்கும்.பின் என் இந்த மண்ணாசை.?ஜெயா டிவி -
பொறியியல் கல்லுரி,கலைக்கல்லுரி முதல் பல தொழிகளிலும் ஈடுப்பட்டுள்ளார்.அய்யா வைகுண்டராஜன்.
இனி தனக்கு குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நேர்மையாக தொழில் செய்தால் கூட ஆண்டுக்கு பல கோடிகளை பெட்டியில் சேர்க்கலாம்.
இருந்தும் ஏன் புறம் போக்கு நிலங்களிலும்,அடுத்தவர் பட்டா இடங்களிலும் மணல் அள்ளும் சின்ன அல்லது திருட்டுத்தனம்முறைகேடுகளை ?எதிர்ப்பவர்களை அழிக்கும் வில்லத்தனம்?
அதை விட முக்கியமான கேள்வி அவரின் திருட்டுக்கு அரசு துணை போவது ஏன்?
suran

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...