திங்கள், 5 நவம்பர், 2018

அதிமுகவிற்கு தலைவர் ,


பாஜக நியமிக்கிறது.

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக ஆண்டாண்டு காலமாக சொல்லிக்கொண்டேயிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ,திடீரென கமல்ஹாசன் கட்சி துவங்கிய பின்னரும்  தயங்கிக்கொண்டிருக்க காரண உள்ளது.

சமீப காலமாக ரசிகர்களை ஓரங்கட்டி விட்டு வெளியிலிருந்து ஆட்களை மன்றத்தின் பொறுப்புக்கு பதவி கொடுப்பதும்,ரசிகர்கள் பதவியை எதிர்பார்க்க கூடாது என்றும்,ரசிகர்களை மட்டுமே வைத்து அரசியலில் வெற்றி பெற எண்ணக்கூடாது என்றும் சொல்லி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

காரணம் அவர் பின்னணியில்  சக்தி திட்டமிட்டல்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதோ பின்னணி :
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நினைப்புடன் செயல்பட்டு வரும் பாஜக  எப்படியாவது மீண்டும் மத்திய அரசில் உட்கார்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. 

அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அக்கட்சி தயாராக உள்ளது. மேலும் பாஜகவின் கண்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் மீது உள்ளது.

அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அதிமுகவை தற்போது முழுவதுமாக தனது பிடிக்குள் கொண்டுவந்துவிட்டது பாஜக. 
இந்நிலையில்தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.


தமிழகத்தின் அரசியல் களம்என்பது  கடந்த ஐம்பது ஆண்டுகளாகதி.மு..தி.மு. ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை மட்டுமே நம்பி இருகிறது. 
ஆனால் அந்தக் கட்சிகளின் பெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் இது தான் தகுந்த சமயம் என்று பாஜக தமிழகத்தில் காலூன்ற வலுவாக திட்டமிட்டு காரியத்தில் இறங்கியுள்ளது.
இதற்கு துருப்புச் சீட்டாக அவர்கள் பயன்படுத்த நினைப்பது ரஜினியைத் தான். திமுகவைப் பொறுத்தவரை அதன் தலைவர் ஸ்டாலின்தான் என்பது முடிவாகிவிட்டது, ஆனால் அதிமுக அப்படி இல்லை இபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் என பிரிந்து கிடக்கிறது. 
அங்கு ஒரு ஸ்டாராங்கான தவைவர் இல்லை என்பதுதான் உண்மை.
அந்த இடத்தில்தான் ரஜினியை வைத்து அழகு பார்த்துவிட வேண்டும்என்று பிரம்மப் பிரயத்தனம் செய்துவருகிறது பி.ஜே.பிஇதற்காகஏகப்பட்ட அஸ்திரங்களையும் வீசியபடியே இருக்கிறதுஆனால்,ரஜினியிடமிருந்துதான் உறுதியான பதில் இல்லை.
ஆனாலும் ரஜினியும் சரி... பி.ஜே.பி., .தி.மு.-வும் சரி... இதுவரை இதுகுறித்து  உலா வரும் செய்திகளுக்கு மறுப்பு எதையும்தெரிவிக்கவில்லை.  

 பாஜகவின் அசைன்மெண்ட்டே தமிழகத்தில்தி.மு. கூட்டணிக்கு மாற்றாக வலுவான கூட்டணியைஉருவாக்கவேண்டும் என்பதுதான்.
அதற்கு அவர்களுக்கு ரஜினி வேண்டும்அவர் தலைமையில்ஒருங்கிணைந்த .தி.மு. (தினகரன் உட்பட), பி.ஜே.பிடாக்டர்கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெறும்கூட்டணியை உருவாக்க வேண்டும்இதுதான் பி.ஜே.பி-யின்மெகாபிளான்
இப்படியொரு அணிதான்தமிழகத்தில் பலமான அணியாகஇருக்கும் என்று வெகுவாக  நம்புகின்றனர் டெல்லி பி.ஜே.பி தலைவர்கள்,இந்த கூட்டணியில் தினகரனை இணைக்கும் பணியை சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றை வைத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவில் பாஜக அரசு உள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரை  பாஜக என்ன நினைகிறதோ அதைச்செய்துகொடுப்பதைத் அந்த கட்சிதயாராக உள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையை பாஜக கச்சிதமாக உருவாக்கி வைத்துள்ளது என்றே கூறப்படுகிறது. 
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தை சேர்ந்த, அனைவருக்கும் தெரிந்த முக்கிய பிரமுகர் ஒருவரை பாஜக நியமித்து அதற்கான வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதெல்லாம் நடக்க சத்தியமாக வாய்ப்பு உண்டு….ஆனால் அது ரஜினியின் கைகளில் தான் உள்ளது.
                                                                                                                             ன்றி:சியாநெட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...