சனி, 10 நவம்பர், 2018

கார்ப்பரேட் கிரிமினல்களின் சர்கார்

விரைவாக பண  முதலையாக பாஜகவில் சேருங்கள்.
அல்லது ஏழைத்தாய் மகனின் கடைக்கண் பார்வை படும் இடத்தில் இருங்கள்.
காரணம் இன்றைய வாழ்க்கையே கார்ப்பரேட் குற்றவாளிகள் பக்கம்தான்.மாட்டிக்கொண்டாலும் மோடி அரசின் மூலம் வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக சென்றுவிடலாம்.
 காரணம் மோடி அரசின் மற்றோரு பெயர்தான் கார்ப்பரேட் கிரிமினல்களின் சர்கார்.
பாஜக  மோடிஅரசின்  ரெஃபெல் போர் விமானத்தை விட மிகப்பெரிய விவசாய காப்பீடு  ஊழல்  ஆண்டாண்டு நடக்கிறது.
மகாராஷ்டிராவில்  ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே ரூ 143 கோடிகள் விவசாயிகள் பணம்  ரிலையன்சுக்கு அனாமத்தாக கிடைக்கிறது.இதில்  மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும்  இழப்புதான் .
ஆனால் அது ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு  வருவாய்...

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானது. 
குறிப்பாகப் பிரதமர் பிமா பசல் யோஜனா திட்டம் என்பது ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது. 
குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் நன்றாகச் சம்பாதிக்கும் நோக்கில் இந்தக் காப்பீடு அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2.80 லட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர். 
இதில் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மட்டும் காப்பீடு தொகையாக ரூ.19.20 கோடியைக் காப்பீடு நிறுவனத்திடம் செலுத்துகிறார்கள். 
மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக தலா ரூ.77 கோடி செலுத்துகிறார்கள். 

ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.173 கோடி கிடைக்கிறது.
ஒட்டுமொத்த பயிரும் மழையில்லாமல் கருகிப்போனால் கூட காப்பீடு நிறுவனம் ரூ.30 கோடி மட்டுமே இழப்பீடாகத் தரும். அப்படி இதுவரை நடக்கவில்லை.
அப்படி இழப்பீடு கொடுத்தால் கூட ரிலையன்சுக்கு எந்தவிதமான முதலீடும் செய்யாமல் காப்பீடு நிறுவனம் ரூ.143 கோடி லாபம் வரும்.
 இது ஒரு மாவட்டத்துக்கான பணம், இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதுபோன்றுதான் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து  நடந்து வருகிறது.
அதற்கு ,முன்னர் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் காப்பீட்டுக் கழகத்திற்குத்தான் ஒப்பந்தம்.
ஏழைத்தாயின் மகன்  வந்த பின்னர்தான் பரம ஏழை ரிலையன்ஸ் காட்டில் மழை.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதகளம் செய்து நாடகமாடிய அன்னா கசாரே என்பவர் இப்போது கோமாவில் இருக்கிறார்.
நடக்காத ஊழல்களில் எல்லாம் ஊழித்தாண்டவம் ஆடிய கசாரே ரபேல் ,பணமதிப்பிழப்பு,அமித்சா ,அவர் மகன் ஊழல்களில் வாயே திறவாமல் இருக்க வாயில் என்ன இந்துத்துவா கோமியம் உள்ளதா?
பாஜக தலைவர்களுக்கு கார்ப்பரேட் சாமியார்களின் ஆசி.
தொண்டர்களுக்கோ மாட்டின் மிதி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஊழல் பாஜக ரெட்டிகள்.
ர்நாடகத்தின்  மிகப் பிரபலமான ஊழல் பேர்வழியான ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாகியுள்ளார்.
எடியூரப்பாவுடன் (ஜனார்தன) ரெட்டிகள் .
சுரங்கத் தொழிலில் பல முறைகேடுகளைச் செய்து தொழிலதிபராகவும் முறைகேடுகளை மறைக்க அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்த ரெட்டி சகோதரர்களை அணைத்து ஆதரித்தது பாஜக. கர்நாடகத்தில் அமைந்த முதல் பாஜக ஆட்சியில் முதலமைச்சர் எடியூரப்பா, தன் பதவியில் இருந்தபோதே ஜெயிலுக்குப் போன ’பெருமை’யைப் பெற்ற காலத்தில் அவரோட உள்ளே சென்றவர் அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி.
மூன்று ஆண்டுகள் உள்ளே இருந்துவிட்டு, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது ஏராளமான ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரூ. 18 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி காணாமல் போயுள்ளதாக பெங்களூரு போலீசு தெரிவிக்கிறது. ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்தபோது, ஆம்பியண்ட் குழுமம் என்ற தனியார் நிறுவனத்தை ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக ரூ. 18 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.
அந்தப் பணம், ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிதி நிறுவனமான ஆம்பியண்ட், ரூ. 600 கோடி முதலீட்டாளர்களின் பணத்தை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்நிறுவனத்தை நடத்தி வந்த சையது அகமது ஃபரீத்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஜனார்த்தன ரெட்டியை பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சந்தித்ததாகவும், அவர் உதவுவதாக வாக்குறுதி தந்ததாகவும் கூறினார்.
அதற்கு பிரதிபலனாக ரூ. 18 கோடியை தங்க வர்த்தகரான ரமேஷ் கோத்தாரியிடம் கொடுத்ததாகவும் அவர் நகை செய்பவரிடம்  கொடுத்து அந்தப் பணத்துக்கு ஈடான 57 கிலோ தங்க நகைகள் செய்ததாகவும் ஃபரீத் கூறியுள்ளார்.  தங்க நகைகள் அனைத்தும் ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான அலி கானிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசு கூறுகிறது. இந்த வழக்கில் அலி கான் மற்றும் ஜனார்த்தன ரெட்டியை தேடியபோது அவர்கள் மாயமானது தெரியவந்துள்ளது.
நாடே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500ரூபாய்க்கு அல்லாடிக் கொண்டிருந்த போது தனது மகள் திருமணத்தை 500கோடிகளில் ஆடம்பரமாக நடத்தியகேடி  இந்த ஜனார்தன்.
கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, நாடே ஏடிஎம் மற்றும் வங்கிகள் முன் வரிசையில் நின்றது. 500, 1000-க்காக வரிசையில் நின்ற பலர் மாண்டுபோனார்கள். 
ஆனால், ஜனார்த்தன ரெட்டி ரூ. 500 கோடி செலவில் மிக ஆடம்பரமாக தனது மகளுக்கு திருமணம் செய்தார். அந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
ஊழலை ஒழிக்கப் ’பிறந்த’ அமித் ஷா – மோடி தலைமையிலான பாஜக கர்நாடகாவின் மாபெரும் ஊழல் பேர்வழிகளான ரெட்டி சகோதரர்களுடன் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்களான சோமசேகர் ரெட்டியும் கருணாகர ரெட்டியும் பாஜக வேட்பாளர்களாக இவர்களின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரியை சுற்றியுள்ள தொகுதிகளில் நிறுத்தப்பட்டு வென்றார்கள்.
சட்டப்பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் திடீர் கூட்டணி அமைத்து, பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அமித் ஷாவின் தந்திரம், ரெட்டிக்களின் பணபலம் வெற்றி பெறாதநிலையில் ஆட்சி கனவை இழந்தது பாஜக. இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள ரெட்டி சகோதரர்களே.
சமீபத்தில் நடந்த பெல்லாரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  14 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்திருக்கிறது பாஜக. பாஜகவைக் காட்டிலும் ரெட்டி சகோதரர்களுக்கு இது பெரிய இடி. இந்த நிலைமை வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்கிற அச்சம் ஜனார்த்தன் ரெட்டிக்கு வந்திருக்க வேண்டும்.
வழக்கம்போல, ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டிக் கொண்டு ஓடும் தொழிலதிபர்களை வழியனுப்பி வைக்கும் பாஜக அரசு, தனது நெருங்கிய கூட்டாளியான ஜனார்த்தன ரெட்டியையும் அனுப்பி வைத்திருக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...