செவ்வாய், 19 ஏப்ரல், 2016

100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை ?

தமிழ் நாட்டில் 100% வாக்குப்பதிவுக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும்  தேர்தல் ஆணையம்,ராஜேஷ் லக்கானி தேர்தலை 100% நேர்மையாக நடத்துவதை மட்டும் கண்டு கொள்வதில்லை.

மால்களில் தேர்தல் ஆட்டம் போடுவதை குறைத்து ஆளுங்கட்சியினர் நடத்தும் தேர்தல் விதிமுறைகள் மீறல் அலங்கோல ஆட்டத்தை நிறுத்தி நடத்த தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரினாமுல் காங்கிரசு வெற்றிப்பெறுவது கடினம் என்று தெரிகிறது.தமிழ் நாட்டைப் போல் இல்லாமல் அங்குள்ள தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின்
அத்து மீறல்களை அவ்வப்போது கிள்ளி எறிந்து விடுகிறதாம்.

கிட்டத்தட்ட எல்லா மாவட்ட ஆட்சியர்கள்,காவல்துறை அதிகாரிகள் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியவர்களை  விட்டதாம்.இதற்கெல்லாம் டெல்லியில் அனுமதி கேட்டு காத்திருக்க வில்லையாம்  மே.வங்க தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை வைத்தே இதை அது செய்துள்ளது.
மே .வங்கத்தில் யார் வென்றாலும் அது 90% நேர்மையான வெற்றி என்பதாக  தேர்தல் ஆணையம் செயல்பாடு உள்ளதாம்.

தமிழ் நாட்டில்  100% வாக்கு பதிவுக்கு   மட்டுமே உத்திரவாதத்தை தமிழக தேர்தல் ஆணையம் தனது நடனங்கள் மூலம் தந்து வருகிறது.

 அரசு இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதிலும் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர்களை மிஞ்சும் அடிமைகளாகிவிட்டார்கள் அதிகாரிகள். 
ஊழல் வழக்கில் ஜெயலலிதா  தண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் அ.தி.மு.கவினர் நடத்திய ‘நேர்த்திக் கடன்’களில் கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரடியாகவே பங்கேற்றனர். 
‘அம்மாவின் உத்தரவுப்படி’ என்ற வார்த்தை இல்லாமல் எந்த அதிகாரியும் எதையும் பேசிவிடமுடியாது என்பதே எழுதப்படாத சட்டம். அதனால்தான் ஒரு கலெக்டர் பேட்டியளிக்கும்போது தன்னியல்பாக, “அம்மாவின் உத்தரவுப்படி மழை பெய்தது” என்றார். 

அந்த அதிகாரி உள்பட அத்தனை பேரும் இன்னும் சக்திமிக்க பதவிகளில்தான் உள்ளனர். எவரையும் இடமாற்றம் செய்யவில்லை. மேற்குவங்கத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
ஆனால், தமிழகத்தில் தி.மு.க, பா.ம.க என வரிசையாக பல எதிர்க்கட்சிகள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
ஒரே நபருக்கு ஒன்பது பெயர்களில் தனித் தனி வாக்காளர் அட்டை என அதிமுகவினரின் பரிந்துரையை ஏற்று செயல்படுவதில் தொடங்கி 
 ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் அனைத்திலும் ஆளுந்தரப்பின் விதிமீறல்கள் 200% உள்ள நிலையில், ஓட்டுப்பதிவு 100% என விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துவதும் அதற்காக அதிகாரிகள் டான்ஸ் ஆடுவதும், கடமை தவறும் தங்களின் செயல்பாடுகளை திசை திருப்பும் நடவடிக்கைகளே ஆகும். 


2011 தேர்தல் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த நிலையில், ‘அதிரடி’ அதிகாரிகள் திடீர் குபீர் என வெளிப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.
 ‘மாற்றத்துக்கு வாக்களியுங்கள்’ என்று புதுவகை விழிப்புணர்வு ஊட்டிய அதிகாரிகளும் அப்போது உண்டு. 
ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெறும் 2016 தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல புகார்களை அளித்தும் தேர்தல் ஆணையர் அமைதி காக்கிறார். 
200% விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் 100% வாக்குப்பதிவு என அதிகாரிகள் டான்ஸ் ஆடுகிறார்கள். 

100% வாக்குப்பதிவுக்காக நீங்கள் இப்படியெல்லாம் சிரமப்படவேண்டியதில்லை.
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஒரு பூத்தில் 120% வாக்குப்பதிவு என்கிற சாதனையை உங்களின் கண் முன்னாலேயே நிகழ்த்திக் காட்டியது ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நடக்கும் அ.தி.மு.க. எனவே, 100% வாக்குப்பதிவு நடக்கவேண்டும் என்றால், நீங்கள் வழக்கம்போல விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் மீடியாக்களில்  முகம் காட்டி பேட்டி கொடுங்கள். 
வாக்குப்பதிவு 100 சதவீதத்தைத் தாண்டும் சாதனையை ஆளுந்தரப்பு கச்சிதமாக செய்துமுடித்துவிடும்.       

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

அதிரடி கலைப்பும், தேர்தலும்


1989 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முன்னணியுடன் இடதுசாரிகள் உடன்பாடு கொண்டு போட்டியிட்டது. 

மறுபுறம் தேசிய முன்னணி பாரதிய ஜனதா கட்சியுடனும் உடன்பாடு வைத்திருந்தது. 
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமரானார். 

மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தினார் வி.பி.சிங். 
இதையடுத்து அவரது அரசுக்கு பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. 

அத்வானி தலைமையில் கலக யாத்திரை நடத்தியது பாஜக. 

அதுமட்டுமின்றி இடஒதுக்கீட்டை எதிர்த்து வன்முறை போராட்டங்களை நடத்தியது. இதனால் 1990ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினார். 

இந்நிலையில் சந்திரசேகர் தேசிய முன்னணியை உடைத்தார். 

ராஜீவ் காந்தியின் ஆதரவோடு, சந்திரசேகர் பிரதமரானார்.

குறைந்த காலமே பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை இவர் படைத்தார். ஏழு மாதங்களே பிரதமராக இருந்த இவர் ஒரு பட்ஜெட்டைக் கூட தாக்கல் செய்யவில்லை. 

ராஜீவ் காந்தி ஆதரவை விலக்கிக் கொண்டதால் இவர் பதவி விலகினார்.

அவர் பதவி விலகுவதற்கு முன்னதாக, தமிழக திமுக அரசை, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். 
அதன்படி ஜனவரி, 1991ல் திமுக ஆட்சி ,தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டது. 

இதையடுத்து 1991 மே,ஜூன் மாதங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 

21.5.1991 அன்று தமிழகத்தில் பிரச்சாரத்துக்கு திருப்பெரும்புதூர்  வந்த ராஜீவ் காந்தி மனித வெடி குண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நடந்த இக்கொலையால் எழுந்த அனுதாப அலையால் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 

கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்தியா காங்கிரஸ்(சோசலிஸ்ட்) கட்சியின் ஒற்றை வேட்பாளரான சஞ்சய் ராமசாமியும் வென்றார். 

ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான திமுகதான் காரணம் என்று இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்து வந்தன. 


ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன் இந்தியாவின் பிறபகுதிகளில் நடந்த தேர்தல்களில் தடுமாறிக் கொண்டிருந்த காங்கிரஸ் அனுதாப அலையில் மிதந்து வெற்றி பெற்றது. 
அந்த அனுதாப அலை தமிழகத்தில் அதிமுகவுக்கு உதவியது.தேர்தலுக்கு முன்னதாக, இரு அதிமுகவும் இணைந்த போது அதை விரும்பாத திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உக்கும்சந்த் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகினர். இவர்கள் திமுகவில் இருந்து விலகிய நடிகர் டி.ராஜேந்தர் தொடங்கிய தாயக மறுமலர்ச்சி கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். 


1980களில் வன்னியரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென போராடி வந்த வன்னியர் சங்கம் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.


திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் ஆகியவை கூட்டணியாக நின்று தேர்தலைச் சந்தித்தன.அதிமுக 164 இடங்களையும், காங்கிரஸ் 60 இடங்களையும் பெற்றது. சஞ்சய் ராமசாமியையும் சேர்த்து இக்கூட்டணி 225 இடங்களைக் கைப்பற்றியது. 
திமுக 2,  சிபிஐ 1, சிபிஎம் 1, ஜனதாதளம் 1, பாமக 1, சுயேச்சை 1 ஆகியோர் வெற்றி பெற்றனர். 

ஜெயலலிதா முதல் முறையாக தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதிமுகவின் ஜானகி அணி,ஜெ அணி என்ற இரு பிரிவும் இணைந்த பின் நடந்த முதல் தேர்தல் இதுவாகும். 


இதற்கு முன்னர் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டு ஒட்டு மொத்தமாக தோற்றுப்போனார்.


அதன் பின்னர் ஜெயலலிதாவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இது.

முதல்வரானதும்' ராஜீவ் காந்தி கொலையுண்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தான் வெற்றி பெறவில்லை.தனது தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வென்றேன் " என்று தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின் ஜெயலலிதா தலைக்கனத்துடன் கூறியது இந்திய அளவில்  சர்ச்சையைக் கிளப்பியது. 

ஜெயலலிதாமீது அதிருப்தியை உருவாக்கியது.


அன்றிலிருந்து "ஜெயலலிதா தான் என்ற அகம்பாவமும் ,தான் வெற்றி பெற யாரை வேண்டுமானாலும் பயன் படுத்திக்கொள்வார்,அதன் பின் தூக்கி எறிந்து விடுவார் " என்பதும் அரசியல் உலகிற்கு பளிச்சென்று புலனாகியது.


தன்னை அரசியலில் வளர்த்த எம்ஜிஆரையே "செயல்பட முடியாமல் இருக்கிறார்.எனக்கு போதுமான ஆதரவு உள்ளது.
என்னை முதல்வாராக்குங்கள் "என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியவர்தானே  இந்த ஜெயலலிதா.
==================================================================================

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

அருப்புக்கோட்டை ஜெயலலிதா கூட்டம் , ஒரு நேரலை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளியன்று அருப்புக்கோட்டையில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலை 10 மணி முதலே ஆட்கள் திரட்டிவரப்பட்டனர். 
அவர்கள் கொளுத்தும் வெயிலில் திறந்தவெளியில் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
ரூ. 200 மற்றும் உணவுபொட்டலம், இரண்டு தண்ணீர் பாக்கெட்டுகள், தொப்பியும், விசிறியும் வழங்கப்பட்டது. என  கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து  தெரிந்தது.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலை வழியே வந்ததால் அருப்புக்கோட்டை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாகச் செல்லக்கூடிய பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பொதுமக்கள் தவித்தனர்.
மதுரை-சாத்தூர் நான்குவழிச்சாலையில் உள்ள அணுகுசாலைகள் மூடப்பட்டன. 
இதனால் இருசக்கர- நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியவில்லை.
கூட்டத்திற்கு வந்திருந்த அருப்புக்கோட்டையை அடுத்துள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த சண்முகநாதன் மனைவி சுந்தரி (40) தவறி கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் எஸ்தர் பிரேமா, வெயிலின் கொடுமை தாங்காமல் குறைந்த ரத்தம் அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 
இவர் நடமாடும் மருத்துவக்குழு மூலம் கல்லமநாயக்கன்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் நான்கு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கேயே குளுக்கோஸ் கொடுத்து உட்காரவைக்கப்பட்டனர்.
இது போல் மயக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீருடன் இந்த கூட்டத்தில் குளுகோசும் கொடுக்கப்பட்டது.
மீண்டும் “கட்-அவுட்” கலாச்சாரம் தலை தூக்கியதை அருப்புக்கோட்டையில் காணமுடிந்தது. 
40 அடி முதல் 50 அடி உயரத்தில் முதல்வர் ஜெயலலிதா கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர் படங்களை பார்க்க முடியவில்லை. 
பொதுக்கூட்ட மேடையில் மட்டும் அண்ணா, பெரியார் மற்றும் எம்ஜிஆர் படங்கள் பேருக்கு சிறிய அளவில் இடம் பெற்றிருந்தன.
 ஜெயலலிதாவின் பேச்சை குறிப்பெடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். 
 வேட்பாளர்கள் 11 மணிக்குள் மேடை அருகே வந்துவிடவேண்டும். 
கூட்டம் கேட்க வருபவர்களை  12 மணிக்குள் கூட்டம் இடத்தில் உட்கார வைத்து விட  வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிமுகவினர் கூறினர்.
பொதுக்கூட்ட மேடையின் பின்புறம் ஜெயலலிதாவிற்காக குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிகளை பத்திரிகையாளர்கள் யாரும் படமெடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவை துணியால் மூடி மறைக்கப்பட்டிருந்தன.
 தவிர காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
 மேடை அருகே ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் படமெடுக்க காவல்துறை அனுமதிக்கவில்லை. 
அதுவும் உயரமான பந்தல் போட்டு மறைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு வந்திருந்த ஆண்களில் ஏராளமானோர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடைகளுக்குச் சென்று தங்களது தாகத்தை தணித்துக்கொண்டனர். 
இதனால் அக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலர் சரக்குகளை வாங்கிக்கொண்டு தண்ணீர் பாக்கெட்டுகளுடன் ஆங்காங்கே மர ஓரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று தங்களை உற்சாகப்படுத்திக்கொண்டனர்.
 கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, வழக்கமான ‘படிப்படியாக மதுவிலக்கு’ பல்லவியை அவர்களிடமே பாடினார். 
5 வருடங்களில் மேற்படி 14 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றியும், நடைபெற்று வரும் பணிகள் பற்றியும் அடுக்கிக் கொண்டே போனார். 
வந்திருந்தவர்கள் ஏதும் ஜெயலலிதா பேசுவதி கேட்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டும் ஜெயலலிதா தனது பேச்சை நிறுத்தி கூட்டத்தை பார்க்கும்போது சொல்லிக்கொடுத்தது போல் கைத்ட்டைக்கொண்டுமிருந்தனர்.
அரசு கலைக் கல்லூரிகள் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூரில் அமைக்கப்பட்டுள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை அவர் தெரிவித்தார். 

ஆனால், சிவகாசியில் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. வாடகை கட்டிடத்திலேயே கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
 விருதுநகர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். 

ஆனால், விருதுநகர் ,கோவில்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் இத்திட்டம் குழாய்களே பதிக்கப்படாத போது  திட்டம் துவங்கி நடைபெற்று வருவதாக ஜெயலலிதா கூறினார.

அதற்கும் கூட்டத்துக்கு வந்திருந்த அப்பகுதி மக்களே கைத்தட்டினர்.அதுபற்றி அவர்களிடம் கேட்டபோது "அதெல்லாம் என்ன பேசினார் என்று தெரியாது.அவர் பேசியதை யார் கேட்டார்கள்.எங்களை கூட்டி வந்தவர் ஜெயலலிதா பேச்சை நிறுத்தி கூட்டத்தை பார்க்கும்போதெல்லாம் விடாமல் கைத்தட்ட வேண்டும் என்று சொல்லித்தான் 200 ரூபாய் தந்தார்.
அதை நாங்கள் சரியாக செய்தோம்"

என்றார்.கூலிக்கு மாரடிப்பது என்பது இதுதானோ?

jaya intro 2016 04 15

ஊடகங்கள் திணித்த கறைகள்.

சென்ற 2011 தேர்தலில் திமுகழக ஆட்சிக்கு எதிராக அதிகம் பேசப்பட்டவை ஈழப்படுகொலைகளை கருணாநிதி தடுக்கவில்லை,அறிவிக்கப்பட்ட நான்குமணி நேர மின்வெட்டு,2 ஜி ஊழல்.
இவைகள்தான் திமுகவை எதிர் கட்சித்  தலைவர் பதவியை கூட தட்டிப்பறித்தவை.
இதற்கு முன்னரும் கூட திமுக எதிர்க் கட்சித்தலைவர் பதவியை இழந்திருக்கிறது.4 இடங்கள் மட்டுமே வென்ற காலங்களும் உண்டு.ஏன் திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணாவே திமுக சந்தித்த முதல் தேர்தலில் தோற்றிருக்கிறார்.
ஆனால் அங்கிருந்துதான்  கலைஞர் தனது இன்றையவரையுலுமான வெற்றிக்கணக்கை துவக்கினார்.
ஈழப் போரில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப் பட்ட போது கலைஞர் முதல்வர் அவ்வளவுதான் .இந்திய அரசு,மட்டுமல்ல சர்வ வல்லமை படைத்த அமெரிக்கா ,பிரிட்டன் ஏன் ஐ.நா சபையே அக்கொலைகளை எதிர்த்தும் தடுத்து நிறுத்த முடியாத நிலை வெறும் ஒரு மாநில முதலமைச்சர் எப்படி நிறுத்த முடியும்?
தமிழ் நாடு முதல்வர் கட்டுப்பட்டிலா இந்திய அரசின் வெளிநாட்டு உறவுத்துறை,பாதுகாப்புத்துறை இருக்கிறது.
ஆனாலும் தமிழக மக்கள்  கலைஞர் ஈழப்படுகொலைகளை தடுக்காத துரோகத்தை மட்டுமல்ல ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றும் நம்ம வைக்கப்பட்டார்கள்.அதற்கு கடுமையாக உழைத்தவர்கள் நெடுமாறன்,வைகோ,சீமான் போன்ற ஈழப் போராளிகள்.இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.
ஆனால் அந்த போராளிகள் சாயம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள்களில் முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தை ஈழத்தாய் ஜெயலலிதா இடித்தவுடனே வெளிறி விட்டது.
மின் வெட்டு ஜெயலலிதா ஆட்சிசெய்த ஐந்தாண்டு காலமும் தீர்க்கப்படவே இல்லை.அதிகரித்து கோவை,திருப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பைத்தான் தந்தது.
திமுக ஆரம்பித்த மின் உற்பத்தி திட்டங்கள் சத்தமே இல்லாமல் மூடப்பட்டன.
ஐந்தாண்டுகளாக அதிக விலைக்கு வெளியில் தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஆயிரக்கணக்கான கோடிகள் மின்துறைக்கு இழப்பை ஏற்படுத்தி வைத்ததுடன்.ஆயிரக்கணக்கான கோடிகள் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யவும் வாய்ப்புகள் உருவானது.
வெளியில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி விட்டு தமிழ் நாடு மின் மிகை மாநிலம் என்று ஜெயலலிதா அறிவித்த வேடிக்கைதான் நடந்துள்ளது.
அடுத்து வருவது 2ஜி .அதை பற்றி அய்யா சுப,வீரபாண்டியன்  அவர்கள் சொல்வதை கீழே தருகிறோம்.
தவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் -அது 2ஜி வழக்கு!
தேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள்.
 இப்போது அந்த ‘சீசன்’ தொடங்கியுள்ளது.
2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள். அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள். அடுத்தததாக, அந்தத் தொகை அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் எங்கும் காணப்பட வில்லையே ஏன் என்று கேளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாதவர்கள்தாம் 2ஜி பற்றி நிறையப் பேசிக் கொண்டுள்ளனர்.
பணிவோடு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், 2ஜி குறித்துக் காரசாரமாக மேடைகளில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கே கூட இந்த விளக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி, அந்த உண்மைகளைச் சின்னக் கணக்குகளின் மூலம் நாம் பார்த்து விடுவோம். ஆ. ராசா அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. இன்றிருப்பது போல் அன்று பலரிடம் கைத் தொலைபேசி இல்லை. எனவே 52.75 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விலை போயின. ஒரு மெகா ஹெட்ஸ் 276 கோடிக்குப் போயிற்று. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 14,559 கோடி.
தலைமைத் தணிக்கைக் கணக்காளராக அன்று இருந்த வினோத் ராய் கற்பனையில் ஒரு கணக்குப் போட்டார். அவர் 2008 முதல் 2013 வரை அப்பதவியில் இருந்தார். ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்று இல்லாமல் அலைக்கற்றைகளை ஏலத்துக்கு விட்டிருந்தால் ஒரு மெகா ஹெட்ஸ் 3350 கோடிக்கு விற்பனையாகி இருக்கும் என்பது அவர் கணக்கு. அது அவருடைய கற்பனைக் கணக்கு. அதன்படி பார்த்தால், 1,76,712 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்றாகிறது. போனால் போகிறது என்று 712 கோடியை விட்டுவிட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அந்த 1.76 என்னும் தொகை வந்தது.
இங்கும் கூட இரண்டு செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. வினோத் ராய் கணக்குப் படியும் அது ஊழல் அன்று, அரசுக்கான இழப்புத் தொகை. அவ்வளவே. இரண்டாவது, 1.76 இல் வரப்பெற்ற 14ஆயிரம் கோடியைக் கழிக்க வேண்டும் இல்லையா? அதனைக் கழித்துவிட்டு 1.62 லட்சம் கோடி என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஆ. ராசா, 2011 பிப்ரவரி 2 ஆம் நாள் கைது செய்யப்பாட்டார். அதாவது, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு! 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1.76 லட்சம் கோடி என்ற தொகை எங்கும் குறிக்கப்படவில்லை. தணிக்கையாளரின் கணக்கை சி.பி.அய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கணக்குப் போட்டு 32 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.
தணிக்கையாளர் கூறியது போல், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகள், ஏலத்துக்கே விடப்பட்டன. 2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க வேண்டுமென்றால், 6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க வேண்டும்? ஆனால் 367.2 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. அதாவது ஒரு மெகா ஹெட்ஸ் 297 கோடி ரூபாய். அவ்வளவுதான்.
ஏலத்துக்கு விட்டும், 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மெகா ஹெட்ஸ் 21 கோடி ரூபாய்தான் கூடுதல் விலைக்குப் போயுள்ளது. வினோத் ராய் கணக்குப்படி 3350 கோடிக்கே விற்பனை ஆகியிருந்தால், 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் வந்ததோ வெறும் ஒரு லட்சத்து ஒன்பது ஆயிரம் கோடிதான். அப்படியானால் இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறலாமா? மோடி உட்பட எல்லோரையும் கைது செய்யலாமா?
தலைமைத் தணிக்கைக் கணக்காளர் போன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றபின், அவர்களுக்கு வேறு அரசு பதவிகள் வழங்கக்கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இப்போது ஓய்வு பெற்றபின், வினோத் ராய், இன்னொரு பெரிய பொறுப்பில் (UN panel of external auditors and honorary advisor to the railways) அமர்த்தப்பட்டுள்ளார்.
புரிய வேண்டிய கணக்குகள் இப்போது புரிந்திருக்கும்!
ஆக திட்டமிட்டே  மக்களுக்கான ஆட்சியை நடத்திய திமுக,திமுகத்தலைவர் மீது  அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளார்.
கலைஞர் ,திமுக மீதான குற்றச்சாட்டுகள் என்றால் எட்டுகாலச்செய்திகளாக வெளியிடும் இந்திய ஊடகங்கள் அதற்கு திமுக தரப்பில் இருந்து வரும் விளக்கங்களை மட்டும் வெளியிடுவதில்லை.
இதில் வட மாநில,தமிழக ஊடகங்கள் அனைத்தையும் கலைஞர் எதிர்ப்பு ஒன்றுமட்டுமே இணைக்கிறது.
அதற்கு சாதியியல் மட்டுமே காரணமாக இருக்கிறது.இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட மேல் சாதியினர் கையில் மட்டும்தான் உள்ளது.
தப்பித்தவறி மற்ற இனத்தவர்கள் நடத்தும் புகழ் பெற்ற ஊடகங்களிலும் தலைமை பொறுப்பில் அந்த வகையினரே உள்ளனர்.[உதாரணமாக :தந்தியில் பாண்டே,ஹரிஹரன் ] 
ஆனாலும் மாயாவதி,பாஸ்வான்,இவர்களைப்போல் கலைஞரை இந்த ஊடகங்கள் ஓரங்கட்ட முடியவில்லை.
93 வயதிலும் இவர்களை ஒரு கை பார்த்து வருகிறார்.
கலைஞர் .திமுக இல்லாமல் தமிழ் நாட்டில் அரசியல் இருந்ததில்லை.இனி இருக்கப் போவதும் இல்லை.கலைஞர் தனக்கு சரியான வாரிசை கைகாட்டியுள்ளார்.
===================================================================================

வியாழன், 14 ஏப்ரல், 2016

யாருக்கு (தமிழ்ப்) புத்தாண்டு வாழ்த்துகள்..?
 • இன்று சிலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கு வழங்கினர்.
  எனக்கான தமிழ்ப் புத்தாண்டு "தை"முதல் நாளிலேயே துவங்கி விட்டது. உலகம் சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்கும் ஓராண்டு கணக்கான அறிவியல் ரீதியலும் ,தமிழர் பண்பாட்டு படியும்  தை யே சரி.
  “நித்திரையில் இருக்கும் தமிழா 
  • சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு 
  • அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே” 
   “அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் 
   தரணி ஆண்ட தமிழருக்கு 
   தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” 
  • தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! இது பாவேந்தர் பாடல்.
  ராஜராஜ சோழன் காலத்துக்குப்பின்னர்தான் களப்பிரர் ஆட்சியில் கானாமலாக்கப் பட்டிருந்த பிராமணர்கள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை ராஜக் குருக்களாகி தமிழர்கள் மீது செலுத்தினர்.அப்போதுதான் வர்ணங்கள் அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்து சாதி வேறுபாடுகளை ராஜராஜன் தூக்கிப்பிடித்தான்.
  கீழ்ச்சாதியினராக்கப்பட்டவர்கள் மேட்டுக்குடியினர் தெருக்களை நடக்க கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன.
  அதேபோல்தான் சித்திரை தமிழர்களுக்கு  புத்தாண்டு பிறப்பாக்கப்பட்டது.12 தமிழ் மாதங்களில் தமிழ் பெயர்கள் இல்லை.
  அதை விடக் கொடுமை தமிழர் ஆண்டுகள் 60இல் ஒன்று கூட மருந்துக்கும் தமிழ் இல்லை.அனைத்தும் செத்துப்போன கடவுள் மொழியான சமஸ்கிருதம்தான்.
  அதை விட அசிங்கம்' பரந்தாமன் நாரதரை பெண் உரு கொள்ள செய்து புணர்ந்து அதில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களைத்   தாம் நம் 60 தமிழ் ஆண்டுகளுக்கு பார்ப்பனர்கள் பெருந்தன்மையுடன் இட்டுள்ளார்கள். !
  இப்போது சொல்லுங்கள் துர்முகி புத்தாண்டு வாழ்த்துக்களை பிராமணர்களுக்கு.
 • தமிழர்களுக்கு அல்ல.

 • =====================================================================================

புதன், 13 ஏப்ரல், 2016

திராவிட முன்னேற்றக் கழக

 வேட்பாளர்கள் பட்டியல்.

1. பொன்னேரி (தனி) - டாக்டர் கே.பரிமளம்
2. திருவள்ளூர் - விஜி.ராஜேந்திரன்
3. பூவிருந்தவல்லி (தனி) - இ.பரந்தாமன்
4. ஆவடி - சா.மு.நாசர்
5. மாதவரம் - மாதவரம் எஸ்.சுதர்சனம்
6. திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி
7. ராதாகிருஷ்ணன் நகர் - சிம்லா முத்து சோழன்
8) கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
9) வில்லிவாக்கம் - ப.ரெங்கநாதன்
10) திரு.வி.நகர் (தனி) - தாயகம் கவி (எ) சிவக்குமார்

11) எழும்பூர் - கே.எஸ்.ரவிச்சந்திரன்
12) துறைமுகம் - பி.கே.சேகர்பாபு
13) சேம்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஜெ.அன்பழகன்
14) ஆயிரம் விளக்கு - கு.க.செல்வம்
15) அண்ணா நகர் - எம்.கே.மோகன்
16) விருகம்பாக்கம் - க.தனசேகரன்
17) தைசாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்
18) தியாகராயநகர் - டாக்டர் எஸ்.என்.கனிமொழி
19) வேளச்சேரி - வாகை சந்திரசேகர்
20) சோழிங்கநல்லூர் - எஸ்.அரவிந்த் ரமேஷ்

21) ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்
22) பல்லாவரம் - இ.கருணாநிதி
22) தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா
23) செங்கல்பட்டு - ம.வரலட்சுமி மதுசூதனன்
24) திருப்போரூர் - வெ.விஸ்வநாதன்
25) செய்யூர் (தனி) - டாக்டர் ஆர்.டி.அரசு
26) மதுராந்தகம் (தனி) - நெல்லிக்குப்பம் புகழேந்தி
27) உத்திரமேரூர் - க.சுந்தர்
28) காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன்
29) அரக்கோணம் (தனி) - எஸ்.பவானி
30) காட்பாடி - துரைமுருகன்

31) ராணிப்பேட்டை - ஆர்.காந்தி
32) ஆற்காடு - ஜெ.எல்.ஈஸ்வரப்பன்
33) வேலூர் - ப.கார்த்திகேயன்
34) அணைக்கட்டு - எ.பி.நந்தகுமார்
35) கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) - வி.அமலு
36) குடியாத்தம் - (தனி) க.ராஜமார்த்தாண்டன்
37) ஜோலார்பேட்டை - சி.கவிதா தண்டபாணி
38) திருப்பத்தூர் - ஏ.நல்லதம்பி
39) ஊத்தங்கரை (தனி) - எஸ்.மாலதி நாராயணசாமி
40) பர்கூர் - இ.சி.கோவிந்தராசன்
41) கிருஷ்ணகிரி - டி.செங்குட்டுவன்
42) வேப்பனஹள்ளி - பி.முருகன்
43) தளி - ஒய். பிரகாஷ்
44) பாலக்கோடு - பி.கே.முருகன்
45) பெண்ணாகரம் - பி.என்.பி.இன்பசேகரன்
46) தருமபுரி - தடங்கம் பெ.சுப்பிரமணி
47) பாப்பிரெட்டிபட்டி - டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்
48) அரூர் (தனி) - சா.ராஜேந்திரன்
49) செங்கம் (தனி) - மு.பெ. கிரி
50) திருவண்ணாமலை - ஏ.வ.வேலு

51) கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி
52) போளூர் - கே.வி.சேகரன்
53) ஆரணி - எஸ்.பாபு
54) வந்தவாசி (தனி) - அம்பேத் குமார்
55) செஞ்சி - செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
56) மைலம் - டாக்டர் இரா.மாசிலாமணி
57) திண்டிவனம் (தனி) - பி.சீத்தாபதி சொக்கலிங்கம்
58) வானூர் (தனி) - இரா.மைதிலி ராசேந்திரன்
59) விக்கிரவாண்டி - கு.ராதாமணி
60) திருக்கோவிலூர் - க.பொன்முடி

61) ரிஷிவந்தியம் - வசந்தம் க.கார்த்திகேயன்
62) சங்கராபுரம் - தா.உதயசூரியன்
63) கள்ளக்குறிச்சி (தனி) - பெ.காமராஜ்
64) கெங்கவல்லி (தனி) - ஜெ.ரேகா பிரியதர்ஷினி
65) ஏற்காடு (பழங்குடி) - சி.தமிழ்ச்செல்வன்
66) ஓமலூர் - எஸ்.அம்மாசி
67) எடப்படி - எடப்பாடி பி.ஏ.முருகேசன்
68) சேலம் மேற்கு - சி.பன்னீர்செல்வம்
69) சேலம் வடக்கு - ஆர்.ராஜேந்திரன்
70) சேலம் தெற்கு - எம்.குணசேகரன்
71) வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன்
72) ராசிபுரம் (தனி) - வி.பி.துரைசாமி
73) சேந்தமங்கலம் (பழங்குடி) - கே.பொன்னுசாமி
74) பரமத்தி - வேலூர் - கே.எஸ்.மூர்த்தி
75) திருச்செங்கோடு - பார்.இளங்கோவன்
76) குமாரபாளையம் - பி.யுவராஜ்
77) ஈரோடு மேற்கு - எஸ்.முத்துசாமி
78) மொடக்குறிச்சி - எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம்
79) பெருந்துறை - கே.பி.சாமி (எ) பி.மோகனசுந்தரம்
80) பவானி - குறிஞ்சி சிவகுமார் (எ) சிவக்குமார்

81) அந்தியூர் - ஏ.ஜி.வெங்கடாசலம்
82) பவானிசாகர் (தனி) - ஆர்.சத்தியா
83) கூடலூர் (தனி) - மு.திராவிடமணி
84) குன்னூர் - பா.மு.முபாரக்
85) மேட்டுப்பாளையம் - சு.சுரேந்திரன்
86) அவினாசி (தனி) - சி.ஆனந்தன்
87) திருப்பூர் வடக்கு - மு.பெ.சாமிநாதன்
88) திருப்பூர் தெற்கு - க.செல்வராஜ்
89) பல்லடன் - சு.கிருஷ்ணமூர்த்தி
90) கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன் (எ) பையாக் கவுண்டர்

91) கோயம்புத்தூர் வடக்கு - மீனா லோகு
92) சிங்காநல்லூர் - ந.கார்த்திக்
93) கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன்
94) பொள்ளாச்சி - இரா.தமிழ்மணி
95) வால்பாறை (தனி) - த.பால்பாண்டி
96) உடுமலைப்பேட்டை - மு.க.முத்து
97) மடத்துக்குளம் - இரா.ஜெயராமகிருஷ்ணன்
98) பழனி - இ.பெ.செந்தில்குமார்
99) ஒட்டன்சத்திரம் - அர.சக்கரபாணி
100) ஆத்தூர் - இ.பெரியசாமி

101) நிலக்கோட்டை (தனி) - மு.அன்பழகன்
102) நத்தம் - எம்.ஏ.ஆண்டி அம்பலம்
103) திண்டுக்கல் - ம.பஷீர் அகமது
104) அரவக்குறிச்சி - கே.சி.பானிசாமி
105) குளித்தலை - எ.ராமர்
106) திருவரங்கம் - எம்.பழனியாண்டி
107) திருச்சிராப்பள்ளி மேற்கு - கே.என். நேரு
108) திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
109) லால்குடி - எ.சௌந்தரபாண்டியன்
110) மண்ணச்சநல்லூர் - எஸ்.கணேசன்

111) துறையூர் (தனி) - செ.ஸ்டாலின் குமார்
112) குன்னம் - தங்கதுரைராஜ்
113) அரியலூர் - எஸ்.எஸ்.சிவசங்கர்
114) திட்டக்குடி (தனி) - வெ.கணேசன்
115) விருத்தாசலம் - தங்க ஆனந்தன்
116) நெய்வேலி - சபா.ராஜேந்திரன்
117) கடலூர் - இள.புகழேந்தி
118) குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
119) புவனகிரி - துரை கி.சரவணன்
120) சிதம்பரம் - கே.ஆர்.செந்தில்குமார்
 121) சீர்காழி (தனி) - எஸ்.கிள்ளை ரவீந்திரன்
122) மயிலாடுதுறை - குத்தாலம் க.அன்பழகன்
123) கீழ்வேளூர் (தனி) - உ.மதிவாணன்
124) திருத்துரைப்பூண்டி (தனி) ப.ஆடலரசன்
125) மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
126) திருவாரூர் - கருணாநிதி
127) திருவிடைமருதூர் (தனி) - முனைவர் கோ.வி.செழியன்
128) கும்பகோணம் - க.அன்பழகன்
129) திருவையாறு - துரை.சந்திரசேகரன்
130) தஞ்சாவூர் - டாக்டர் அஞ்சுகம்

131) ஒரத்தநாடு - எஸ்.எஸ்.ராஜ்குமார்
132) பேராவூரணி - என்.அசோக்குமார்
133) கந்தர்வக்கோட்டை (தனி) - டாக்டர் கே.அன்பரசன்
134) விராலிமலை - எம்.பழனியப்பன்
135) புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு
136) திருமயம் - எஸ்.ரகுபதி
137) ஆலங்குடி - டாக்டர் கோ.சதீஷ்
138) திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்
139) சிவகங்கை - மேப்பல் ம.சக்தி (எ) சத்தியநாதன்
140) மானாமதுரை (தனி) - சித்திரைச்செல்வி

141) மேலூர் - அ.பா.ரகுபதி
142) மதுரை கிழக்கு - பெ.மூர்த்தி
143) சோழவந்தான் (தனி) - டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி
144) மதுரை தெற்கு - எம்.பாலச்சந்திரன்
145) மதுரை மையம் - பி.டி.ஆர்.பி.தியாகராசன்
146) மதுரை மேற்கு - கோ.தளபதி
147) திருப்பரங்குன்றம் - மு.மணிமாறன்
148) உசிலம்படி - கே.இளமகிழன்
149) ஆண்டிப்பட்டி - எஸ்.மூக்கையா
150) பெரியகுளம் (தனி) - வி.அன்பழகன்
151) போடிநாயக்கனூர் - எஸ்.லெட்சுமணன்
152) கம்பம் - கம்பம் நா.ராமகிருஷ்ணன்
153) ராஜபாளையம் - எஸ்.தங்கபாண்டியன்
154) சாத்தூர் - வே.சீனிவாசன்
155) விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
156) அரும்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
157) திருச்சுழி - தங்கம் தென்னரசு
158) பரமக்குடி (தனி) - உ.திசைவீரன்
159) திருவாடானை - சுப.த.திவாகரன்
160) விளாத்திகுளம் - சு.பீமராஜ்

161) தூத்துக்குடி - பெ.கீதா ஜீவன்
162) திருச்செந்தூர் - அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
163) கோவில்பட்டி - அ.சுப்பிரமணியன்
164) சங்கரன்கோவில் (தனி) - க.அன்புமணி கணேசன்
165) ஆலங்குளம் - டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா
166) திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லெட்சுமணன்
167) அம்பாசமுத்திரம் - இரா.ஆவுடையப்பன்
168) பாளையங்கோட்டை - டி.பி.எம்.மைதீன்கான்
169) ராதாபுரம் - மு.அப்பாவு
170) கன்னியாகுமரி - எஸ்.ஆஸ்டின்

171) நாகர்கோவில் - என்.சுரேஷ்ராஜன்
172) பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்


 ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞரும், திமுக மகளிர் அணியைச் சேர்ந்தவருமான சிம்லா முத்துச்சோழனை களம் இறக்கியுள்ளது திமுக. 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிம்லா முத்துச்சோழன். 
பரம்பரை திமுககாரர். 
அரசியல்வாதி, சமூக சேவகி, வழக்கறிஞர், இல்லத்தரசி என பல முகம் கொண்டவர் சிம்லா. 
திமுகவில் வட சென்னை மகளிர் சட்ட அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர் தற்போது மாநில திமுக மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். 
கலப்பு மணம் புரிந்தவர் சிம்லா. 
இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். 
இவரது கணவர் இந்து மதம். 
2009ம் ஆண்டு முதல்வர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. 
ஜெயலலிதா படித்தே அதே சர்ச் பார்க் பள்ளியில்தான் இவர் 1999ல் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 
 முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் மருமகள்.ஜெயலலிதாவை வென்று கோட்டைக்குள் வந்தால்  அமைச்சராக அதிக வாய்ப்பு.


=======================================================================================

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...