ஞாயிறு, 24 நவம்பர், 2019

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”


 டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்போன் டிக்-டாக் செயலி மூலம் பழக்கமாயினர்.
இவர்கள் இருவருக்கும் வயது 25. திருமணமாகி விட்டது.
இவரும் நாட்கள் செல்ல, செல்ல இணைபிரியா தோழிகளாக மாறினர்.
இருவரும் சேர்ந்து டிக்-டாக்கில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
 டிக்-டாக் செயலிக்கு அடிமையானதால் அவர்களின் கணவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது அவரவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும், தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆன்மிகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற பல வீடியோக்களை டிக்-டாக் செயலி மூலம் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இவருக்கும், தேனியை சேர்ந்த சுகந்தி  என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் நட்பு ஏற்பட்டது. சுகந்தியும் தனது நண்பரான செல்வம் என்பவருடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சுகந்திக்கும், மேற்கண்ட 2 இளம்பெண்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்-டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது நண்பர் செல்வத்துடன் சேர்ந்து அந்த 2 இளம்பெண்களின் டிக்-டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலைமாதுகளாக சித்தரித்து டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு விட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் ஒத்தக்கடை போலீசிலும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சுகந்தி மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, சுகந்தியிடம் இருந்த 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

டிக்-டாக் செயலிக்கு அடிமையான 2 இளம்பெண்கள் மற்றும் சுகந்தி ஆகிய 3 பெண்களுமே டிக்-டாக் செயலியால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களது கணவர்களை விட்டு பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மற்றொரு சம்பவமாக மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி டிக்-டாக்கில் பதிவிட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்து, ஆபாசமான வீடியோவாக பதிவிட்டதாக பொள்ளாச்சியை சேர்ந்த பூபதி(28) என்பவரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்துள்ளனர்.வழக்கின்ற்னர்

குடும்பப் பெண்கள், மாணவிகள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேர டிக்-டாக் அடிமைகளாகி தங்களது வாழ்க்கையையே தொலைத்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்மார்ட்போன் வெடிப்பு 

நாம் தவிர்க்க வேண்டியவை !
ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவங்களில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதை பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனம்.

 அதொன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல!
சில குறிப்பிட்ட தவறுகளை தவிர்த்தாலே போதும், ஸ்மார்ட்போன் வெடிப்பு அல்லது ஸ்மார்ட்போன் தீப்பிடிப்பு போன்ற சம்பவங்களை நாம் தவிர்க்கலாம்.
மாறாக அதையெல்லாம் "அடிக்கடி" செய்தால் உங்கள் ஸ்மாட்போன் "டமால்" தான்!


நம்மில் சிலருக்கு ஸ்மார்ட்போன்களை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை தலையணையின் கீழ் வைக்கும் போது, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இண்டர்னெல் டெம்ப்ரேச்சர் அதிகரிக்கும்.
தவிர உங்களின் உடல் எடையும் ஸ்மார்ட்போனின் மீதான தேவையற்ற அழுத்தத்தை செலுத்தும்.
இது வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு வழிவகுக்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய போலியான சார்ஜர்கள் அல்லது பிற நிறுவங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களின் அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டாம்.
 குறிப்பாக உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய கார் சார்ஜிங் அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக பவர் பேங்கைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
அவசரத்திற்கு ஒரு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்து கொண்டால் என்ன? என்று நீங்கள் தெரிந்தே செய்யும் இந்த பிழையானது விபரீதமான முடிவுகளை வழங்கும் என்பதை மறக்க வேண்டாம்!

ஒரு ஸ்மார்ட்போன் சூடாகத் தொடங்கினால் அதை தொடர்ந்து பயன்படுத்த கூடாது, சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
 இருந்தாலும் கூட விடாமல் கேமிங் செய்வோம் அல்லது சாட்டிங் / காலிங் நிகழ்த்துவோம்.
சார்ஜ் தீர்ந்தால் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என்று தெரிந்த நமக்கு, அது சூடாகும் பட்சத்தில் அதற்கு சற்று ஒய்வு கொடுக்க வேண்டும், அதை மீண்டும் சகஜமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை, பாவம்!

என்ன ரூ.30,000 ஆ? பரவாயில்லை இ.எம்.ஐ போட்டாவது இந்த ஸ்மார்ட்போனை வாங்கிட வேண்டும்" என்கிற ஆர்வமானது அந்த ஸ்மார்ட்போனை வாங்கியபின்னர், குறிப்பாக பேட்டரிகளை மாற்றும் போது இருப்பதில்லை.
 "இதுக்கு வேற தனியா செலவு செய்யணுமா" என்று சலித்துக்கொண்டு நிறுவனங்களின் அசல் பேட்டரிகளை வாங்காமல் போலியான மாற்று பேட்டரிகளை வாங்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதென்றால், எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு நடக்கலாம்.

ஸ்மார்ட்போனை கீழே போடுவது என்பது ஒன்றும் பெரிய தவறல்ல.
ஒருவேளை ஏதேனும் கடுமையான சேதங்களை உங்கள் ஸ்மார்ட்போன் சந்தித்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, நிறுவனத்தின் சேவை மையத்திற்கு கொண்டு சென்று அதை சரிபார்க்கவும். ஏனெனில் நம் கண்களுக்கு மேலோட்டமான சேதங்கள் மட்டுமே புலப்படும், உள்ளூர எதாவது சிக்கல்கள் உள்ளதா?
அதன் விளைவாக பேட்டரி வெடிப்பு அல்லது தீப்பிடிப்பு நிகழுமா என்பதை வல்லுநர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதி செய்தபின்னர் அதை தொடர்ந்த்து பயன்படுத்தவும்.

 உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்வது (இது சில பழைய ஸ்மார்ட்போன்களுக்கு தான் பொருந்தும்). 

உங்கள் ஸ்மார்ட்போனை நேரடியாக சூரிய ஒளியில் வைத்திருக்க வேண்டாம், அதேபோல சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து அதை சார்ஜ் செய்ய வேண்டாம். 

உங்கள் ஸ்மார்ட்போனை பவர் ஸ்ட்ரிப் அல்லது எக்ஸ்டென்சன் கார்ட் வழியாக சார்ஜ் செய்வதை தவிர்க்க பாருங்கள். உள்ளூர் பழுதுபார்க்கும் கடைகளில் உங்கள் ஸ்மார்ட்போனை சரிசெய்ய வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சேவை மையங்களுக்கு மட்டுமே செல்லுங்கள். 

உங்கள் ஸ்மார்ட்போனின் மீது தேவையற்ற அழுத்தத்தை செலுத்த வேண்டாம், குறிப்பாக சார்ஜ் செய்யும் போது, அதன் மேல் எந்தவிதமான எடையையும் ஏற்ற வேண்டாம். 

இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டால் போதும்!

 

“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

தமிழக அமைச்சர்களின் ‘அந்தப்புர அந்தரங்கங்கள்’ அம்பலமாகும் நேரம் இது போல!
’ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஜெயகுமார் தொடங்கி, ‘ஆழ்துளை கிணறு அழுக்கு வேட்டி ஸ்பெஷலிஸ்ட்’ விஜயபாஸ்கர் வரை பல மாண்புமிகுக்களின் திரைமறைவு சங்கதிகள் தொடர்ந்து வெளியாகி, மக்களை முகம் சுளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ‘உவ்வே’ வரிசையில் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் இணைந்திருக்கிறார்.
கோவையில் செட்டிலாகியிருக்கும் அந்த வட இந்திய பெண்ணின் பெயர் சோனாலி பிரதீப்.
ஏற்கனவே பாஜக மகளிரணியில் பல ஆண்டுகளாக கும்மியடித்து வந்தவர் இந்த சோனாலி..
செக்கச் சிவந்த மேனி, செழுமையான உடலமைப்பு, கேட்பவரைக் கவர்ந்திழுக்கும் பேச்சு என சோனாலியிடம் ஏகப்பட்டத் தூண்டில்கள் உண்டு.

“அது யாரானாலும் சரி…ஒரு முறை என்னைப் பார்த்துவிட்டால் அப்புறம் சரண்டர்தான்’’ என தன்னைப் பற்றி இவர் பெருமையாக சொல்வதுண்டாம். ஆளை கிறங்கடிக்கும் தோற்றம் கொண்ட இவர் பல அழகிப் போட்டிகளிலும் மகுடம் சூடியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் வேலுமணியை எதேச்சையாக சந்தித்திருக்கிறார் சோனாலி. முதல் சந்திப்பிலேயே அமைச்சரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளீரிட்டிருக்கிறது.
“ஏதாவது தேவைண்ணா காண்டாக்ட் பண்ணுங்க’’ என வேலுமணி சொல்ல, இதற்காகவே காத்திருந்த சோனாலி அந்த நிமிடம் முதல் இன்று வரை தொடர்ந்து அமைச்சருடன் தொடர்பில் இருந்து வருகிறாராம்.

நாளுக்கு நாள் அதிகமான இந்த நெருக்கம், சோனாலியை முதல்வர் எடப்பாடியிடம் அறிமுகம் செய்துவைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட தெம்பில், “டமிள்நாடு கவர்மென்டில் என்ன மேட்டர் ஆனாலும் செஞ்சி தர்றேன். நான் சொன்னா யாரும் தட்டமாட்டாங்க’’ எனப் பலரிடமும் சோனாலி சொல்லி வருவதாகப் பேச்சு.
வேலுமணியுடனான தொடர்பின் அடுத்தக் கட்டமாக அண்மையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் சோனாலி. சூட்டோடு சூடாக கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனுவும் தாக்கல் செய்ய, “இங்க என்னப்பா நடக்குது!’’ என விபரம் புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள்.

“ஆரம்பத்தில் பொது இடங்களில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் அமைச்சரை சந்திச்சி அந்த பொண்ணு போட்டோ எடுத்தபோது நாங்க பெருசா கண்டுக்கலீங்க.
ஆனால் அதற்கப்புறம் கோவைக்கு அமைச்சர் வரும்போதெல்லாம் இந்த பொண்ணும் கரெக்டா வந்திடுதுங்க. ‘மேயர் சீட் எனக்குதான், அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாருண்ணு’ சொல்லுது. இது எங்கே போய் முடியப் போகுதோன்னு தெரியலீங்க’’ எனப் புலம்புகிறார்கள் லோக்கல் அதிமுக புள்ளி ராஜாக்கள்..
 

ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு எஸ்.ஐ.யிடமே  ரூ.1 லட்சம் சுருட்டல்

ராமநாதபுரத்தில் ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு, எஸ்.ஐ.யின் வங்கி கணக்கில் இருந்து ரூ.ஒரு லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராமநாதபுரம் உள்ள தேசிய வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். 

இவரின் செல்போனில் பேசிய மர்ம நபர், உங்களின் வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி கார்டு எண், வங்கி சேமிப்பு கணக்கு எண் போன்ற விபரங்களை கேட்டு வாங்கி கொண்டார். 
சிறிது நேரத்தில் ரூ.99,968 எடுத்ததற்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது. 
அதிர்ச்சியடைந்த எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். 
பின்னர்தான் வேலை பார்க்கும் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
பணத்தை இழந்த கிருஷ்ணமூர்த்தி, இவரை போன்று ஏடிஎம் கார்டு எண்ணை கூறி, பணத்தை இழந்த மற்ற ஒருவரின் புகார் மனுவை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

ராமநாதபுரத்தில் எஸ்.ஐ ஒருவரிடமே பணம் ஏமாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பணத்தை இழந்த எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி, இவரை  போன்று ஏடிஎம் கார்டு எண்ணை கூறி, பணத்தை இழந்த மற்ற ஒருவரின் புகார் மனுவை  விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...