திங்கள், 22 அக்டோபர், 2018

"பாப்பா" அப்பாவுக்கு என்ன வயசு?

11 மணி ஜெயக்குமார் வயதுதானாம்.
ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல். 
ஆனால் சமீபத்தில் ’எம்.பி. ஒருத்தருக்கு தம்பி பாப்பா பொறந்திருக்குது. அப்போ எம்.பி.யோட அப்பாவுக்கு என்ன வயசுன்னு முடிவு பண்ணிக்கோங்க! 
அந்த குழந்தைக்கு  முறைப்படி சேரவேண்டிய சொத்தை பிரிச்சுக் கொடுத்திடுங்க. இல்லேன்னா ரகசியம் உடைபடும், சொல்லிட்டேன்.’ என்று ஒரு பயோலாஜிகல் அணுகுண்டை கொளுத்திப் போட்டார்.  

வெற்றிவேல் ஒரு அதார் உதார் பேர்வழிதான் என்றாலும் கூட, அவர் சொல்லும் கிசுகிசுக்களெல்லாம் அடுத்த சில வாரங்களில் ஆதாரத்துடன் நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது.
 இதனால் ‘யார் அந்த எம்.பி., தம்பி?’ என்று குழம்பியது தமிழகம். அதிலும்  ஆளும் அ.தி.மு.க. அணிக்குள் ‘இவரா? அவரா? அவருக்கு பொறந்தது பொண்ணுதானேய்யா? 
இவர்தான் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி க்ளீன் பண்ண வெச்சிட்டாரே?’ 
என்று தங்களுக்குள் பல ரகசியங்களை உடைத்துப் பேசி தலையை பிய்த்துக் கொண்டனர். 
இதில் வேடிக்கை "அமைச்சர் ஜெயக்குமாரும் இவர்களுடனேயே சேர்ந்து இருக்கும் தன் பின் பாதி முடியையும்" பிய்த்துக் கொண்டார். 
ஆனால் நேற்று  வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலான அந்த ‘பிறப்புச் சான்றிதழ்’ தமிழக அரசியலை தெறிக்க விட்டிருக்கிறது. 
ஆம் .அந்த பிறப்புச்சான்றே  அமைச்சர் டி.ஜெயக்குமார்  - ஜெ., சிந்து என்கிற பெண்மணிக்கும் ஆண் குழந்தை பிறந்ததற்கானதுதான்.
அதை வாட்ஸ் அப்பில் விண்வெளியிட்டு வைரலாக்கியது தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.
கடந்த ஆகஸ்டு மாதம் 9-ம் தேதியன்று, சென்னை பழைய வண்ணாரபேட்டையில் உள்ள ஜெயம் நர்ஷிங் ஹோமில் இந்த குழந்தை பிறந்துள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையின் மூலமாக வெளிப்படுகின்றன. 
ஜெ., மரணித்த நாளில் இருந்து இதுவரையில் அ.தி.மு.க. மீதான எந்த விமர்சனத்துக்கும் முந்திரி கொட்டையிலும் முந்திரி கொட்டையாக முன்னே வந்து நின்று தாட்பூட் தடால் புடால் என்று பேட்டி தட்டுவதும், தினகரன் ஸ்டாலின் உள்ளிட்டோரை கன்னாபின்னாவென விமர்சனத்தில் கசக்கிப் பிழிவதும் ஜெயக்குமாரின் வாடிக்கை.
 ஊடகங்கள் அனைத்தும் 11 மணி ஜெயக்குமார் என்று கிண்டல் செய்யுமளவு தினசரி ஊடகங்களிடம் யாரைப்பற்றியாவது தாக்கி,கிண்டலடிப்பது ஜெயக்குமார் வாடிக்கை.

ஆனால் இன்று இப்படியொரு விஷயம் வெளிப்பட்டதில் மனிதர் அப்படியே அமுங்கிப்போய் விட்டார்.
ஆக வெற்றிவேல் அன்று சொன்ன ‘தம்பி பாப்பா’ என்பது ஜெயக்குமாரின் குழந்தையைத்தான்! என்கிறார்கள் விமர்சகர்கள். 
சரி, ஜெயக்குமாரின் மகன் எப்போது எம்.பி.யானார்? என்று தினகரன் ஆதரவாளர்களிடம் கேட்டால், ‘அட அது ச்சும்மா சுத்தல்ல விடுறதுக்காக இப்படி பேசியிருக்கார் வெற்றி. 
ஜெயக்குமார் பற்றிய ரகசியத்தின் ஆதாரம் தன் கையில் இருக்குதுங்கிறதை ஜெயக்குமார் மட்டுமே புரிஞ்சுக்கிற மாதிரி இப்படியொரு ட்விஸ்ட்டு வெச்சு வெற்றி பேசினார்.
அதுக்குப் பிறகாவது ஜெயக்குமார் நாவடக்கம் காட்டியிருக்கலாம், ஆனா அவரு என்ன நினைப்பிலோ தன் வேலையை தொடர்ந்துட்டே இருந்தார். 
இப்போ கையுங்களவுமாக சிக்கிட்டார்!
============================================================================================
சாட்சி சொன்ன சாமியார் கொலை?
கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். 
அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். 
இதனையடுத்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 
பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தததால் அவர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
தற்போது அவர் ஜாமினில் உள்ளார். 
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குரியகோஷ் என்ற பாதிரியார் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செயின்ட்பால் கான்வென்ட் பள்ளியின் ஒரு விடுதியில் மர்ம முறையில் இறந்து கிடந்துள்ளார். 
போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
பாதிரியார் குரியகோஷ் பிஷப் பிரான்கோவுக்கு எதிராக போலீசாரிடம் சாட்சியம் அளித்துள்ளார். 
இதனால் அவரது சாவில் மர்மம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 
மேலும் குரியகோஷ் குடும்பத்தினர் அவரது சாவு குறித்து கூறுகையில்; 
குரியகோஷ்சுக்கு சமீப காலமாக கொலை மிரட்டல் இருந்த வந்தது. 
இதனால் அவர் மரணம் குறித்து சந்தேகம் எழுவதாகவும், போலீசார் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார், பிஷப் கைது தொடர்ந்து, தற்போது பாதிரியார் கொலை மேலும் பல யூகங்களை எழுப்பியுள்ளது.

சனி, 20 அக்டோபர், 2018

அய்(யோ அ)ப்பா.

கிருத்துவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியுமா? :அன்புமணி ராமதாஸ்
ஏதோ அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு தவறான ஒப்பீட்டை அன்புமணி சொல்லியுள்ளார்... 

அன்புமணிக்கு கர்தினால் லூர்துசாமியை கண்டிப்பாக தெரிந்திருக்கும்.. 
ஒரு ஆப்பிளை ஆப்பிளோடுத்தான் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்..
கர்தினால் லூர்துசாமி


 ஆப்பிளை எடுத்துக் கொண்டுபோய் தேங்காயுடன் ஒப்பிட முடியாது என்பது அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு தெரியும்.
.. பெண்களை வழிபாட்டுக்காக சபரி மலையில் அனுமதிப்பதா இல்லையா என்பதுதான் கேள்வி.. ஒருவேளை ஏதாவது ஒரு கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் பெண்களை அனுமதிக்காமல் இருந்திருந்தால், அதை குறிப்பிட்டு சொல்லலாம்.. 

ஆனால் அப்படி ஒரு நிலவரம் இருப்பதாக தெரியவில்லை.. மேலும் கிறிஸ்துவ மதத்தின் தலைமைப் பாதிரியார்களாகவும் பிஷப்களாகவே ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள்..ஆனால் எங்காவது ஒரு பெண் அர்ச்சகராக இருக்கிறாரா?பிராமணப்பெண்ணாக இருந்தாலும் கூட.

ஒருவேளை சங்கராச்சாரியார் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருந்தால், அன்புமணி கேட்டது சரியாக இருந்திருக்கும்.. 

மேலும் போப் இருப்பதோ வாத்திகன் எனப்படும் இத்தாலியில் இருக்கும் தனிநாட்டில்..
 அங்கு இந்திய சட்டங்கள் நீதிமன்ற உத்தரவு ,செல்லுபடியாகாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அசல் சங் பரிவார் போன்றே பேசுகிறார்  அன்புமணி.
கடைசியாக, கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். 

கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் மறைந்த கர்தினால் லூர்துசாமி. இவர் கடலூரைச் சேர்ந்த நீங்கள் சங்கம் நடத்தும்  வன்னிய கிருத்துவர்.. 


அன்னிய கிறிஸ்தவ மதத்திலேயே ஒரு வன்னியர் இந்த அளவுக்கு உயர் பதவியில் பொறுப்பில் வந்து விட்டார், 
ஆனால் நீங்கள் வக்காலத்து வாங்கும்  இந்து மதத்தில்  உள்ள கோயில்களில் உங்கள் சாதியைச் சார்ந்த வன்னியர் ஒருவர் அர்ச்சகராக முடியுமா.உங்கள் கட்சியால் ஆக்கத்தான் முடியுமா?சவால் விட  முடியுமா?

அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் அந்நிய நாட்டின் மதத்துக்கு எச்ச.ராசாவைப்  போல் சவால் விடுகிறீர்களே?திடீர் சங்கி புதிய டமிளகம்  கிட்ணாசாமி  கூட இப்படி கேட்கவில்லை,கேட்க மாட்டார்.
மருத்துவக்கல்லூரி ஊழல் தொடர்பாக பாஜகவுக்கு வால் பிடிக்க வேண்டியிருக்கிறது.
அதற்காக இப்படியா?.
சுத்த சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.
சபரிமலை  உண்மைகள் :
1969 வரை பெண்கள் செல்ல எந்த தடையும் இல்லாமல் இருந்தது. 1995 பெண்கள் பதினெட்டாம் படி வழியாக செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டது. மாற்று வழியில் அனுமதிக்கப்பட்டார்கள்..
1991 வரை மாதத்தின் முதல் 5 நாட்கள் இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முறையாக உணவு அளிக்கும் "அன்னபிரசன்னம்" விழாவுக்கு அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் செய்த அபிடவிட்டில் உள்ள தகவல்கள்.
எனவே ஹிந்துத்துவா கும்பல் செய்வது அப்பட்டமான ஏமாற்றுத்தனம், அயோக்கியத்தனம்.
எங்க கிட்ட இருந்து பறித்த அய்யப்பன்  கோயில எங்க எங்ககிட்ட விட்டுட்டு வெளிய போங்கடா பார்ப்பன நம்பூதிரி அயோக்கியர்களா.ன்னு ஐயப்பன் கோயிலுக்கு பூர்வீக உரிமையாளர்களான கேரள சபரிமலை ஆதிவாசி மக்கள் கேட்டிருக்காங்க..

வியாழன், 18 அக்டோபர், 2018

நமக்கு வாய்த்த அடிமைகள்....

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக தலைவர்கள்,அமைச்சர்கள் ஆகியோரை குறிவைத்து நடைபெற்று வரும் சிபிஐ ,வருமானவரி ரெய்டுகள்  குறித்து விரிவாக எடுத்துரைத்தாகவும், அப்போது நீங்க கிளம்பி போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என பிரதமர் உறுதி அளித்ததாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் எடப்பாடியின் டெல்லி சென்று மோடியை சந்தித்த  சில நாட்களிலேயே  அவர் மீதான நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கை  தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றிட ஆணைபிறப்பித்து எடப்பாடி  தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்..
மேலும் ஒரு மாதத்துக்குள் முதல கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இது அழிக்க முடியாத ஆவணங்களை உள்ளடக்கிய வழக்கு என்பதால் இதற்கு நெடுஞ்சாலைத்துறையை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பாவார் எனவும் கூறப்படுகிறது.
இதில் உள்ளபடியே பல அமைச்சர்களுக்கும்,அதிமுகவினருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
ஒரு மாத விசாரணையில் இந்த முறைகேட்டுக்கு  முகாந்திரம் இருப்பதாக ஒரு வேளை சிபிஐ தெரிவித்தால் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய கட்டாயம்  இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.
காரணம் எட்டப்பாடியை மாட்டிவிடும் பதிவுகள் பல உள்ளதாம்.அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் எடுக்காமல் மறைத்து எடப்பாடி மீது வழக்குத்தொடுக்க முகாந்திரமில்லை என்று பூசி மெழுகினாலும் ஆதாரங்கள் அதிகம் உள்ளதாம்.
இதை வைத்து எடப்பாடி மீதான பிடியை இறுக்க முடிவு செய்துள்ள பாஜக, இபிஎஸ் தான் சொல்லுகிறபடியெல்லாம் ஆட வேண்டும் என நினைப்பதாக  கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையன் வசம் போக வேண்டும்  என பாஜக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனை மனதில் கொண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு செங்கோடடையனை நியமிக்க மோடி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே முதல்வராகும் வாய்ப்பை இழந்து விரக்தியில் உள்ள  செங்கோட்டையனும் மகிழ்வுடன் தலையாட்டிவிட்டதாக கூறப்படுகிறது. 

பாஜகவுடன் வரும் தேர்தல்களில் கூட்டணி வைத்து பாஜகவை தமிழகத்தில் முதுகில் இடம் கொடுத்து சுமக்க வேண்டிய நிபந்தனைக்கும் செங்கோட்டையன் சம்மதித்துவிட்டார்.
இந்த நடைமுறைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. 
இதன் மூலம் அதிமுக மீதுள்ள ஊழல் இமேஜை  மாற்ற முடியும் என்றும் பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. 
எது எப்படியோ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தன்னை விட தொண்டர்கள் பலமிக்க அதிமுகவுடன்  இணைந்து சந்திக்க எண்ணி பாஜக போட்ட திட்டம் நிறைவேறுகிறது.
தங்களுக்கேற்ற அடிமைவம்சம் கட்சியில் புதிய அடிமையைத் தேடிய பாஜக அதற்கு பட்டம் சூட்டும் நாள் நெருங்குகிறது.
அதனால்தான் காவி வேட்டிகள் பத்து வரும் சட்டமன்றத்தில் அமர்வார்கள் என்று 
ஆனால் ஏற்கனவே தமிழக மக்கள் மனதில் மக்கள் விரோத ஆட்சியை செய்து வரும் பாஜக,அதிமுக மீதுள்ள கோபம் ஒட்டுமொத்தமாக இருகட்சிகளுக்கும் பாடம் புகட்டுவதாகவே இருக்கும் எனது தெரிகிறது.
=========================================================================================
410 கோடிகளில்  சுற்றுப்பயணம்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ஆகஸ்ட் வரை 55 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் மற்றும் அதற்கான செலவுத்தொகை 393.34 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

2014 ஜூன்  மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் அவர் பூட்டானுக்கு பயணம் செய்தார், இதுவே அவரின் முதல் பயணம். 

அதைத்தொடர்ந்து 2018 ஆகஸ்ட் வரை அமெரிக்கா, மியான்மர், பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர் பிரேசில் என மொத்தம் 55 நாடுகளுக்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த நான்கு ஆண்டுகளில் 44 அரசுமுறை பயணங்கள் சென்றுள்ள பிரதமர் மோடி,  சில நாடுகளுக்கு இருமுறை சென்றுள்ளார் என்பதும், ஆறு பயணங்களுக்கு இந்திய விமானப்படை விமானத்தில் சென்றதால் அதற்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றும், அந்த ஆறு ரசீது இதுவரை கிடைக்கவில்லை.
 எஞ்சிய பயணங்களுக்கான தொகைதான் இந்த  ரூ. 393,34,27,465  என்பது  தெரியவந்துள்ளது. 
ஆறு பயணங்கள் தொகையும் சேர்ந்தால் 410 கோடிகளாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
கடந்த உலக சுற்றுலாதினத்தில் அதிகம் நினைவுகூறப்பட்டவர் இந்திய பிரதமர் மோடிதான்.

புதன், 17 அக்டோபர், 2018

மிடூ முதல் பலி.


 வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மீ டூ விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், எம்.ஜே.அக்பருடன் பணியாற்றிய 10க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணியும் ஒருவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அமைச்சர் அக்பரை விமர்சித்தன. அக்பர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, தன் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்கள் கையாள்வார்கள் என்றும் அதன் பிறகு எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் எம்.ஜே.அக்பர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஜே.அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கபூர் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தில் இந்தியப் பொருளாதாரம்!

ஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி


இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இறக்குமதி குறைவாகவும், ஏற்றுமதி அதிகமாகவும் இருக்க வேண்டும். 
இதுவொரு முக்கியமான அம்சம். 

ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான இந்தியாவின் ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து இருப்பதுடன், இறக்குமதியும் பலமடங்கு உயர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா மொத்தம் 27.95 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்துள்ளது. 

இது சென்ற ஆண்டின் செப்டம்பர் மாத ஏற்றுமதி மதிப்பை விட 2.15 சதவிகிதம் குறைவாகும். அதேநேரம், செப்டம்பர் மாத இறக்குமதி 10.45 சதவிகிதம் அதிகரித்து 41.9 பில்லியன் டாலராக உள்ளது. 
தெளிவாகக் குறிப்பிட வேண்டுமானால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இறக்குமதி 16.16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.இதன்மூலம் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம்- அல்லது வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 6 மாதங்களில் மட்டும் 943.2 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக செப்டம்பரில் மட்டும் 139.8 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 


கடந்த 2017-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இதே பணவீக்கம் 3.14 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலை செப்டம்பர் மாதத்தில் 0.21 சதவிகிதம் குறைந்துள்ளது. 

குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 18.14 சதவிகிதம் குறைந்துள்ளது. 
மேலும், காய்கறிகளின் விலையும் 3.83 சதவிகிதம் சரிந்துள்ளது. 
வெங்காயத்தின் விலை 25.23 சதவிகிதமும், பழங்களின் விலை 7.35 சதவிகிதமும் குறைந்துள்ளது. 

உருளைக்கிழங்கு விலையும் (80.13 சதவிகிதம்), கச்சா பெட்ரோலியத்தின் விலையும் (47.83 சதவிகிதம்) மட்டுமே உயர்ந்துள்ளன.

இவற்றில் எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான பிரிவில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவின் விலை 33.51 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

பெட்ரோல் விலை 17.21 சதவிகிதமும், டீசல் விலை 22.18 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 

உற்பத்திப் பொருட்களுக்கான பிரிவில் சர்க்கரை விலை 12.91 சதவிகிதம் குறைந்துள்ள அதேவேளையில், உலோகங்களின் விலை 12.78 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

எனினும், மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலத்தில் இருந்ததை (3.14 சதவிகிதம்) விடவும் உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் 5.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

திங்கள், 15 அக்டோபர், 2018

ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை ஏன்???


சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமைகளாக இருந்தனர் என்பதை தரவாடு முறை மற்றும் தோள் சீலைப் போராட்டத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் உயர் சாதிப் பெண்களைத் தவிர இடைநிலை பிற சாதிப் பெண்கள் மேலாடை அணியாமல் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். அதுதான் பண்பாடு, மத கலாச்சாரம் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் சட்டம் இருந்தது. அதன் நீட்சிதான் பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பதாகும்.
தரவாடு முறை என்பது நாயர் போன்ற மேல் சாதி சமூகத்தில் திருமணங்கள் நடைபெற்றால், முதல் குழந்தையை நம்பூதிரி பார்ப்பனர்கள் மூலம் பெற வேண்டும் என்பது தான். அதாவது திருமணம் நடந்ததும் முதல் இரவு நம்பூதிரி பார்ப்பனர்கள் உடன் தான்
இன்று இந்து மதக் கலாச்சாரம் என்று பெண்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐயப்பன் கோயிலுக்குச் செல்லக்கூடாது எனச் சிந்திக்கும் , பேசும் , வலியுறுத்தும் நண்பர்கள் அனைவருமே இடைநிலைச் சாதிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

தோள் சீலைப் போராட்டம் 1822 முதல் 1859 வரை
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது.அந்தக் கால கட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது.
இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்தக் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்துச் சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு, நாடார் கிருத்தவப் பெண்களுக்குத் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
போராட்டத்திற்கான காரணம்:
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மிசம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றாண்டுகளில் ஆரியப் பிராமணர்களின் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் , சேரநாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன.
12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாயிற்று. இந்தத் தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு.
உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்துப் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ்வுடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு.
திருவிதாங்கூர் சமசுதானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகக் கடைபிடிக்கப் பட்டன.
உடை அணியும் விதத்தை வைத்தே மக்கள் உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைபெற்றது.
முதல் போராட்டம்:
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறித்தவப் பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவப் பெண்கள் தங்கள் மார்பகங்களைத் துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர், ஆங்கிலேயத் தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாகக் கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேயத் தளபதி கார்னல் நேவால் , பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப் படுகிறது.
இரண்டாம் கட்டப் போராட்டம்:
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதிப் பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மூன்றாம் கட்டப் போராட்டம்:
1858 ம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[2]
இந்தப் பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை.

இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின் கரையில் தொடங்கிய போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறை பரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்துக் கொண்டனர்.
உடை உடுத்த உரிமை:
இப் போராட்டத்தின் விளைவாகவும், ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலை மாதம் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை, மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
மேற்கோள்கள்.
LIBERATION OF THE OPPRESSED, A CONTINUOUS STRUGGLE, A CASE STUDY (Since 1822 A.D.)
முத்துக்கமலம் இணைய இதழில் நெல்லை விவேகநந்தா எழுதிய கட்டுரை
மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்
தோள் சீலைப் போராட்டம்
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
மறுபக்கம் தோள் சீலைப் போராட்டம்
சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை
எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி!
எழுதப்படாத சரித்திரம்
பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை
.
Kalai Arasu அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து....
-திருப்பூர் சுகுணாதேவி

திருட்டுத் திரையங்குகளுக்குத் தடை.

திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


ஒரு திரைப்படத்தை அதன் தயாரிப்பார் மிகுந்த பொருட்செலவில், பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த படத்தை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார்.

ஆனால் அந்த திரைப்படம் வெளியான தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்துவிடுகிறது. இது திரையரங்குகள் மூலம்தான் திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் 10 திரையரங்குகள் திருட்டுத்தனமாக படம்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரையரங்குகளின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றன.



திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்கள் (ஊர், தியேட்டர், படத்தின் பெயர்)

  1. கிருஷ்ணகிரி முருகன் - மனுசனா நீ
  2. கிருஷ்ணகிரி நயன்தாரா - கோலிசோடா டூ
  3. மயிலாடுதுறை கோமதி - ஒரு குப்பைக் கதை
  4. கரூர் எல்லோரா - ஒரு குப்பைக் கதை
  5. ஆரணி சேத்பட் பத்மாவதி - மிஸ்டர் சந்திரமௌலி
  6. கரூர் கவிதாலயா - தொட்ரா
  7. கரூர் கவிதாலயா - ராஜா ரங்குஸ்கி
  8. பெங்களூரு சத்யம் - இமைக்கா நொடிகள்
  9. விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் - சீமராஜா
  10. மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா

மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும்  வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை கியூப் (qube) நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் வெளியாகும் புதிய  திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

எனவே சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

அம்பானிக்கு மோடி கொடுத்த முப்பதாயிரம் கோடிகள்.

ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய், ரிலையன்ஸ் குழுமக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல் ரக’ போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது.
ரபேல் விமானங்களை வாங்குவது காங்கிரஸ் அரசின் முடிவுதான் என்றாலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அதில் ஏராளமான மாற்றங்களை செய்தது.முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவு செய்து- அதில் 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் பெற்றுக் கொள்வது, ஏனைய 108 விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொள்வது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், மோடி அரசோ மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவதென்றும், அவற்றையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்வதென்றும் ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது.
போர் விமானங்களைத் தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இருந்த ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்’ நிறுவனத்தை கழற்றிவிட்டு, அந்த இடத்தில், திடீரென அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைத் திணித்தது.
காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரக விமானத்திற்கு, 1670 கோடி ரூபாயை அள்ளி இறைத்தும் மோடி அரசு தாராளம் காட்டியது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தின.
526 கோடியாக இருந்த, ஒரு விமானத்தின் விலை, 1670 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி? 
அதேபோல எச்ஏஎல் நிறுவனம் இடம்பெற்றிருந்த இடத்தில் ரிலையன்ஸ் எப்படி வந்தது? 

75 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, ஆரம்பித்து 12 நாட்களே ஆன ரிலையன்ஸை, ‘டஸ்ஸால்ட்’ தனது கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டிய தேவை என்ன? 
போர் விமான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 108 விமானங்களை இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று முன்பு ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவது; அவற்றையும் பறக்கும் நிலையிலேயே வாங்கிக் கொள்வது; என்று ஒப்பந்தத்தை மாற்றியது ஏன்? 
இந்தியாவில் ஒரு விமானமும் தயாரிக்கப்படாது எனும்போது, ‘மேக் இன் இந்தியா திட்டம்’ எதற்காக? அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்தது எதற்காக? 
என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.
ஆனால், ஒன்றுக்கும் மோடி அரசு உருப்படியான பதில் அளிப்பதாக இல்லை. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று தப்பிக்கப் பார்த்தது.
ஆனால், இந்திய அரசு கூறியதன் பேரிலேயே ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்தார். 
அவரைத் தொடர்ந்து ‘அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற இந்தியப் பிரதமரின் முன்நிபந்தனையின் பேரில்தான் ரபேல் ஒப்பந்தமே கையெழுத்தானது ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லோய்க் சிகாலன் என்பவரும் உறுதிப்படுத்தினார். 
இதுதொடர்பாக பிரான்சின் ‘மீடியாபார்ட்’ என்ற புலனாய்வு செய்தி நிறுவனம் விரிவான செய்தியை வெளியிட்டது.
அந்தச் செய்தியை வழிமொழிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி வைத்த முன்நிபந்தனை அடிப்படையில், 30 ஆயிரம் கோடி ரூபாயும் ‘டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ்’ கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

உள்ளுக்குள் அதிர்ச்சி இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம்போல அதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார். ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவிகிதம் (ரூ. 3 ஆயிரம் கோடி) மட்டுமே டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினார். 

டஸ்ஸால்ட் நிறுவனமும் அதற்கு ‘ஆமாம்’ போட்டது.
ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6 ஆயிரத்து 600 கோடி முதலீடு பெறப்பட்டதாக அறிவித்தது.
 இது, நிர்மலா சீத்தாராமன் மற்றும் டஸ்ஸால்ட் நிறுவனம் கூறியதைவிட 2 மடங்கு அதிகத் தொகை என்பதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த குழப்பம் தீர்வதற்கு உள்ளாக, ரிலையன்ஸ் நிறுவனனே தனது குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடியை முதலீட்டு பங்காக பெற்றிருப்பதாக கணக்கில் காட்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரபேல் விமானக் கொள்முதல் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி என்ற நிலையில், அதில், 50 சதவிகிதத் தொகையை, அதாவது ரூ. 30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். 
இதன்படி ரூ. 30 ஆயிரம் கோடி நாட்டின் பிற பாதுகாப்பு தளவாட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால், இந்த தொகை முழுவதும் அப்படியே ரிலையன்ஸ் குழுமத்திற்கு போயிருப்பது அவர்கள் அளித்த அறிக்கை மூலமே அம்பலமாகி இருக்கிறது.

"பாப்பா" அப்பாவுக்கு என்ன வயசு?

11 மணி ஜெயக்குமார் வயதுதானாம். ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினகரனின் தளபதி வெற்றிவேல்...