திங்கள், 4 ஜனவரி, 2016

எம்ஜிஆரும் நீதிபதி ரே கமிசனும்***

எம்.ஜி.ஆர்.முதல்வாராக இருக்கிறார்.

கேரள அரசு தமிழக அரசிடம் 65 லட்சம் லிட்டர் எரிசாராயத்தை கேட்டது. 
முதலில் 26 லட்சம் லிட்டரும் பின்னர் 7.5 லட்சம் லிட்டரும் அனுப்பிய தமிழக அரசு கையிருப்பு இல்லை என்று அத்துடன் நிறுத்திக்கொண்டது. 
ஆனால் காலவதியான அந்த வாகன அனுமதியை வைத்துக்கொண்டு கேரள கடத்தல் புள்ளிகளால் தமிழக எரிசாராய முதலாளியிடம் இருந்து தொடர்ந்து எரிசாராயத்தை பெறமுடிந்தது. 
அப்படி கடத்தப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் ஒரு கேரள அதிகாரியால் கைப்பற்றப்பட கடத்தல் புள்ளிகள் இதற்காக எம்.ஜி.ஆருக்கு 5 கோடி ரூபாய்கள் ( அன்றைய மதிப்பில் 5 கோடி இன்று எத்தனை கோடி?) குடுத்ததாகத் தெரிவிக்க பரபரப்பு பற்றிக்கொண்டது.
மாட்டிக்கொண்டோம் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் உடனடியாக நீதிபதி கைலாசம் என்பவரின் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். 
குற்றவாளியே கமிஷனை அமைப்பதா என்ற கேள்வியை எழுப்பிய எதிர்கட்சிகள் நடத்திய கடுமையான போராட்டத்தைக் கண்டு நீதிபதி கைலாசம் தான் இந்த கமிஷனுக்கு தலைமையேற்று விசாரிக்க விரும்பவில்லை என்று விலகினார். 
நிலமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு இது குறித்து விசாரிக்க நீதிபதி ரே என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. 
அந்த ரே கமிஷனும் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு பாட்டிலிங்க், பிளாண்டிங் தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரம் அரசின் தலைமைக்கு சென்ற கையூட்டு 5 கோடி என்று சொன்னது. 
என்ன...சொன்ன சமயத்தில் எம்.ஜி.ஆர் இறந்து போனதால் அத்தோடு ரே கமிஷனும் போனது.
குற்றம் உறுதிப்படுத்தப்படாத சர்க்காரியா கமிஷனை இன்று வரை திரும்பத் திரும்ப எழுதி மக்களின் நினைவில் வைக்கும் ஊடகங்கள் ரே கமிஷன் குறித்து மூச்சும் விடாததற்கு காரணம் வேத விற்பன்னர்களின் புத்திசாலித்தனம் என்பதை நான் சொல்லித்தான் என் புத்திசாலி வாசகர்கள் தெரிந்து கொள்வார்களா என்ன?
                                   
 
                                                                                
 
-கிளிமூக்கு அரக்கன்
===================================================================================

சில வினாக்கள்?


கொஞ்சம் நாட்களாக மனதில் ஆடிய சில வினாக்களை அதற்கான பதிலை நாடி தருகிறேன்.ஆனால் இதற்கு சரியான நேர்மையான பதில்கள் வராது.ஏனெனில் செயல்களில் நேர்மை இல்லாததுதான்.ஏதாவது சித்தாந்த ங்கள் என்று கூறி குழப்ப வேண்டுமானால் செய்யலாம்.இப்போதைய நமது கேள்விகளே இவர்கள் நடவடிக்கைகளில் நமக்கு உண்டான குழப்பங்களின்வெளிப்பாடுகள்தான்.மேலும் குழம்ப நம்மால் முடியாது.எனவே இக்கேள்விகளை நமக்கு நாமே வழியில் கேட்டு வைத்துக்கொள்கிறோம் .
இடதுசாரிபக்கம் விரும்பி வரும் இளையத்தலை முறையினரை தங்கள் தவறான வழி காட்டுதலால் அவர்களின் போராட்டக் குணங்களை ஓய்ந்து உடகார வைத்து விடுகிறார்களே இன்றைய மார்சிஸ்ட் கட்சி தலமையினர்.
ஊழலில் ஊற்றுக்கண் என்று கருணாநிதியை வசை பாடி தீண்டத்தகாதவர் போல் பார்க்கும் ஜி.ரா,தா.பா இணை ஊழலில் தண்டனை பெற்று,எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தொழிலாளர்களுக்கு விரோதமான போக்கையே கடை பிடிக்கும் கடைந்தெடுத்த பாசிஸ்ட் ஜெயலலிதா என்றால் காலில் விழாக்குறையாக தொகுதிகளை வாங்கி வெல்ல நினைக்கிறார்களே.

பதவிப்பாசமா?
இனப்பாசமா?
பணப்பாசமா?

தா.பா.தன் மகனுக்கு பல்கலை பணியை வாங்கி விட்டார்.ஜி.ரா எதற்கு காத்திருக்கிறார்?இதுவரை அரசு ஊழியரகள்,ஆசிரியர்கள் ,அமைப்பு சாரா தொழிலாள்ர்கள் அனைவருக்கும் அவர்கள் கோரிக்கையை நிறிவேற்றி வைத்தவர் கருணாநிதி.அவர் ஆட்சிகாலத்தில் நாளொரு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி ஜெயாவால் மக்கள் நலப்பணியாளர்கள்,சாலைப்பணியாளர்கள்,சத்துணவுப்பணியாள்ர்கள் ,போக்கு வரத்துப்பணியாளர்கள்,மாற்றுத்திறனாளிகள் என்று எல்லா தரப்பு தொழிலாளர்களும் ஊதிய உயர்வுக்காக போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி முன் போல் நடத்திய போராட்டங்கள் எத்தனை?,
முதல்வரை சந்தித்து பேசிய நிகழ்வுகள் எத்தனை?

இவை எல்லாம் அறிந்தும் ஜெயலாலிதாவுடன் மக்கள் நல கூட்டணி இணைவது போன்ற நிலை உண்டாகி இருப்பதை பார்த்தால் கருணாநிதி சொல்லியது போல் மக்கள் நலக்கூட்டணியே ஜெயலலிதாவால் உண்டாக்கப்பட்ட ஐந்தாம்படை கூட்டணி என்று தெரிகிறது.
அதிமுக பொதுக்குழுவில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி என்று கூறியதின் உண்மை தெளிவாகிறது.கம்யூனிஸ்ட் தோழர்கள் மாநிலக்குழு சொல்வதை தங்கள் தலையில் ஏற்றாமல் அமைதியாக பகுத்தறிவுடன் அமைதியாக கருணாநிதி,ஜெயலலிதா ஆட்சிக்கால செயல்பாடுகளை அப்போது கட்சியின் செயல்பாடுகளின் வித்தியாசங்களையும் நடு நிலையுடன் சீர் தூக்கி ஆய்ந்து பார்த்தால் தாங்கள் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய முடியும். 
விலை வாசிகலை கூட்டியும் பால்,பேருந்து கட்டணம் போன்றவற்றை கூட்டியு மக்களை வதை படாமல் வைத்த திமுகவா/ஆட்சிக்கு வந்தவுடனே பட்ஜெட் போடாமலே அடிகடி விலைகளை கூட்டி பால்,பேருந்து ,மின் கட்டணங்களை கூட்டி மக்களை வதை செய்யும் ஜெயாவா?


அப்படி ஜெயலலிதா விலைகளை கூட்டிய போது கருணாநிதி விலைவாசியை பொருளாதரத்துக்கு தக்கவாறு கூட்டாமல் தமிழகத்தை கடனில் மூழ்கடித்து விட்டார் சகோதரி ஜெயா கருணாந்தி தவறை சரி செய்கிறார் என்று சொம்படித்தாரே தா.பாண்டியன்.

அரசின் விலைவாசி ஏற்றத்துக்கும்,குளறுபடிகளுக்கும் வக்காலத்து வாங்கும் இவர் ஒரு கம்யூனிஸ்டா? .

2ஜி யையே சொல்லி காலத்தையும் ,திமுகவையும் புறம்தள்ளும் ஜி.ரா,தா.பா.வுக்கு அது ஒரு மதிப்பீட்டிலான தொகை அது கிடைக்காமல் அன்றைய அரசு ஆ.ராசா அமைச்சகம் செய்து விட்டது என்பதுதான் வழக்கு என்றும் ,இன்றைய அலைக்கற்றை ஏலம் 2ஜி மதிப்பீட்டை விட பன்மடங்கு குறைவாகத்தான் வந்துள்ளது என்ற உண்மையும் தெரியாமலா உள்ளது?

நடக்காத வழக்கு 2ஜியை விட நிருபிக்கப்பட்டு நான்காண்டு தண்டனை பெற்ற ஜெயலலிதா ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கு உண்மையானது என்று தெரியாதா?

எல்லாம் தெரிந்தும் தா.பா, ஜி.ராமகிருஷ்ணன் இடது சாரி இயக்கங்களை தமிழ் நாட்டில் குழி தோண்டி புதைக்கிறார்கள்.

இன்றைய ஜெயலலிதா அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் அறிக்கைகளில்,கட்சி பத்திரிகைகள் செய்திகளில்  முந்தைய கருணாநிதி அரசைபற்றி ,அவரைப்பற்றியும் குறை கூறி வரிகள் இல்லாமல் இருக்காது.

ஆனால் கருணாநிதி பற்றிய குறை கூறும் அறிக்கைகளில்,கட்சி பத்திரிகைகள் செய்திகளில்  ஜெயலலிதா பற்றி ஒரு புள்ளி கூட இராது.இதுதான் இன்றைய கம்யுனிஸ்ட் தலைவர்களின் நிலை.

தேர்தலில் இடங்களைப்பெற்று புதைக்குழியில் மறைந்து இருப்பதை விட இயக்க கொள்கைகள் சர்ந்து செயல்பட்டு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது நல்லதல்லவா?

இடதுசாரிகட்சிகளின் இன்றைய தலைவர்களின் தவறான் செயல்பாடுகள்தான் மக்கள் மத்தியில் இன்று கட்சியை மறைத்து வருகிறது.
ஆம் ஆத்மி,தேமுதிக ,போன்ற புதிய கட்சிகள் முக்கிய கட்சிகளாக வலம் வர வைக்கிறது.ஆம் ஆத்மி வளர்சியின் பின் இருப்பது இடதுசாரிய கொள்கைகளை களவாடிய  செயல்பாடுகள்தானே?

தமிழகத்திலும் அவர்கள் வளர்வதற்கு முழுக்காரணம் இன்றைய இடது சாரி கட்சிகளின் தலையின் தவறானசுயநல போக்குதான் 
முந்தைய கம்யூனிஸ்ட் வழிகாட்டி மாஸ்கோ.
இன்றைய தமிழக கம்யூனிஸ்ட் வழிகாட்டி போயஸ் தோட்டம் 
என்று அன்று தோழர் கங்காதரன் சொன்னது இன்று உண்மையெனறாகிவிட்டது.வருத்தங்களுடன் இதை சொல்ல வேண்டியிருக்கிறது.
=================================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...