திங்கள், 8 அக்டோபர், 2018

தாமிரபரணி புஷ்கரம் உண்மை என்ன?


144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள்.

ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது அதாவது 144 ஆண்டுகளுக்கு முன்னர்  நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு.
காவிரி,தாமிரபரணி புஷ்காரம் என்பதே வடக்கே கங்கை ,யமுனை நதிகளில் பார்ப்பனர்கள் மட்டும் நடத்திய வழிபாட்டை தமிழகத்திற்கு இறக்குமதி செய்து வலிந்து திணிக்கும் செயல்.
கிட்டத்தட்ட வட மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த  விநாயக சதுர்த்தி,சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கலவரங்களை உண்டாக்கி நீர்நிலைகளில் சுற்றுசுசுழல் கெடுக்கும்படி கரைப்பது போன்ற  மற்றோரு வட இந்துத்துவ நிகழ்வை தமிழகத்தில் கொண்டுவரும் முயற்சிதான் இது.
இதற்கு வரலாறு,உண்மை புரியாமல் மத உணர்வை வைத்து மட்டுமே தமிழர்களில் சிலர் ஜால்றா அடிப்பதுதான் வேதனைத்தரும் கேவல நிகழ்வு.
ஒரு வரலாற்று உண்மை.

வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது.அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான்.

இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான்.
அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889 ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 
1872 பஞ்சத்தை ஒட்டி தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய் சேர்ந்தனர். 
அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி.
1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர்.

1876 பஞ்சம் என்று கூகுள் செய்து பாருங்கள்.

144 வருடங்களுக்கு முன்னால் தண்ணீரே ஓடாத தாமிரபரணியில் புஷ்கர விழா எப்படி நடத்தப்பட்டது?

மேலும் இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில், அதுவரை இந்து கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படாத நாடார் சமூகத்தினர் தமிழகத்தில் பெரும் ஆலய நுழைவுப் போராட்டங்களை, நடத்திய வருடங்களும் கூட.

1872 ல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள்ளும்,
1874 ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும்,
1876 ல் திருத்தங்கல் கோவிலிலும்,
1897 ல் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும்,
1899 ல் சிவகாசி காசி விஸ்வநாதர் கோவிலிலும் ஆலயப் பிரவேசப் பெரும் போராட்டங்களை நாடார்கள் நடத்தினர்.

நாடார்கள் ஆலயம் நுழைவதால் தான் பெரும் பஞ்சங்கள் ஏற்படுகிறது என சனாதனவாதிகள் பிரச்சாரம் செய்த காலமும் இதுதான்.

இதையொட்டியே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள 1899 சிவகாசி கலவரம் நடந்தது.

இந்தக் கலவரத்தையொட்டி அங்கிருந்து வெளியேறிய நாடார்கள் தாங்கள் புதிதாகச் சென்று குடியேறிய ஊர்களில் சிவகாசி நாடார் உறவின்முறை என்று பெயர் வைத்திருப்பார்கள்.

பார்ப்பனிய அடக்குதலுக்கு எதிராக போராடிய சமூகம் நாடார் சமூகம். 
ஆனால் தற்போது பழைய  வரலாறை மறந்த அதன் பெரும்பான்மையான தலைவர்களே இன்று முன்னின்று இல்லாத ஒன்றிற்கு வக்காலத்து வாங்கிச் சொல்கிறார்கள்.
இந்து மத உறவு இருக்க வேண்டியதுதான். ஆனால்  தங்களை சாலையில் செருப்புடனும் ,தங்கள் இனப்பெண்களை மாராப்பு சேலையின்றியும் நடக்க வைத்த பார்ப்பனிய,இந்துதுத்துவாக்கும் துணை போவதும்,தூக்கிப்பிடிப்பதும் இன்றைய நாடார் இனமக்களுக்கு அவமானம்,தலைகுனிவு.
மாராப்பு சேலை போராட்டத்தை தந்தை பெரியார் நடத்தி சிறை சென்றதற்கு அவர்கள் காட்டும் நன்றி இப்படியா இருக்க வேண்டும்.இவர்களுக்காகவா போராடி உரிமைகளைப்பெற்றுத்தந்தோம் என பெரியாரும்,முத்துக்குட்டி என்ற வைகுண்டநாதரும் கோபம் கொள்ளத்தான் செய்வார்கள்.

ஒரு பிரிவினர் நம்பிக்கை என்ற பெயரில் வழிபாடு நடத்துவதில் ஆட்சேபனை யாருக்கும் இல்லை. அதற்கு மத்திய அரசு இவ்வளவு மெனக்கெடுவது அரசியல் நோக்கமின்றி வேறென்ன?

பார்ப்பனர்கள்,பாஜக கட்சியின் அரசியல் நோக்கத்திற்காக எது வேண்டுமானாலும் இட்டுக்கட்டிய பொய்யைப் பரப்புவதும், மக்களை மதஉணர்வை காட்டி  வேறுபடுத்துவதும் சரியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருட்டுத் திரையங்குகளுக்குத் தடை.

திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வ...