ஞாயிறு, 31 டிசம்பர், 2017

பாஜக,வின் .பிரமாண்டமான 2ம் பாகம்,

"ஆன்மிக அரசியல்"

 இன்றைய நாளிதழ்களைப் பார்த்தாலே ரஜினி கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பைத் தவிர உலகில் வேறு சம்பவங்களே நடைபெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.

அதிலும் தமிழ் இந்து நாளிதழ் முதல் பக்கத்தில் கடைசி பக்கம் வரை ரஜினி,ரஜினி தான்.வேறு செய்திகளே இல்லாததால் தூக்கி புறம்வைக்க வேண்டியதாயிட்டு.உண்மையில் தூக்கி கடாசினேன்.
30 ஆண்டுகளாக அரசியலை ரஜினி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆணடவன் சொன்னால் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தவரிடம் ஆண்டவன் அரைகுறையாக ஏதோ சொல்லிருக்கலாம் என்றுதான் தெரிகிறது.

கட்சி ஆரம்பிக்கப்போவதாக்வும்,சட்டமனறத்தேர்தலை 234 தொகுதிகளிலும் போர் தொடுக்கவும் போவதாக சொல்லும் ரஜினி அடுத்ததாக சொல்பவைதான் அவரின் குழப்ப மனதை வெளிக்காட்டுகிறது.
தேர்தலை சந்திக்க இருப்பதால் "தான் உடன்பட ரசிகர்கள் அரசியலே பேசக் கூடாது.மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது."இது ரஜினியின் ரசிகர்களுக்கான கட்டளை.



அரசியலே பேசாமல் கட்சி துவக்குவது இந்திய அரசியல் வரலாற்றிலே இது முதல் முறை" என்று சொல்லலாம்.
ஆனால் அப்படி அரசியல் பேசாமலேயே ,ஆன்மிகம் என்று சொல்லி இன்று இந்தியாவையே அலறவைக்கும் அமைப்பும் இருக்கிறது.

அதுபலருக்கும் தெரிந்திருக்கும்.இன்னமும் தெரியாதவர்கள் கடைசி வரிக்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம்.
மக்களுக்கு எதுவுமே செய்யாமல் போராடாமல் சட்டமன்றத்தேர்தலை சந்தித்து முதல்வராகும் ரஜினியின் கொள்கை கீழ்க்கண்ட காதல் திரைப்பட வசனத்தை சார்ந்தே நிற்கிறது.

"முதல்ல  இந்த காமெடியன்,வில்லன் ரோல் எல்லாம்  "?

"அதெல்லாம் வேண்டாம் .ஸ்ட்ரைட்டா  ஹீரோதான்"

அல்லது மக்களிடம் தனக்குள்ள சூப்பர் ஸ்டார் மகிமையை வைத்து "நோகாமல் நொங்கு தின்பது "என்று கூட சொல்லலாம்.
இப்போதுள்ள சிஸ்டம் சரியில்லாமல் இருப்பதால் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக வேறு பயங்காட்டுகிரர் .
இவரது இமயமலை ,பாபா ஆன்மிகம் அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் ரஜினியோ மதம் வேறு ,ஆன்மிகம் வேறு என்று சொல்லி அதிரவைக்கிறார்.

தோசைதான் ஆனால் அரிசி வேறு ,உளுந்து வேறு என்றுதான் இதற்கு பொருளை எடுத்தாள வேண்டும் போல்.
இங்கு தோசைதான்  மதம்.
ஆனால் ரஜினியின் உள் நோக்கமும்,அவரை அரசியலில் இப்படி இறங்க வைப்பதின் ரகசியமும் அவரின் குழப்ப வார்த்தைகளிலேயே தெரிகிறது.


மதமின்றி ஆன்மிகம் இல்லை.
இங்கு இந்து ஆன்மிகத்தில் அரசியல் செய்ய பாஜக,இந்து முன்னணிகள் உள்ளன.
இஸ்லாமிய ஆன்மிகத்துக்கு முஸ்லீம் லீக்,ம.ம.க ,என்று பல,,
கிறித்தவ ஆன்மிகத்துக்கு கிறிஸ்த ஐக்கிய முன்னணி உட்பட பல.

இதில் ரஜினி ஆன்மிக அரசியல் எதுவாக இருக்கும் என்பதை அறிய இமயமலை போய் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டிக்கழித்துப்பார்த்தால் ரஜினி தனது ஆப்த நண்பர் சிரஞ்சீவியின்  பிரஜா சக்தி கட்சி பாணியை கையிலெடுப்பார் என்றே தெரிகிறது.

சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்து ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனது முதல்வர் கனவு முடங்கியதால் காங்கிரசில் கட்சியை இணைத்து விட்டு ஒதுங்கியது போல் நடவடிக்கையைத்  தான் ரஜினியும் எடுப்பார் என்றே கணிக்க முடிகிறது.
இங்கு காங்கிரசுக்குப் பதில்  பாஜக .

இன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் தமிழகத்தில் காலை அல்ல விரலை கூட  பதிக்க இயலா பாஜகவுக்கு  கட்சிகளுக்கு எதிராக கூட இல்லாமல் நோட்டாவுக்கு எதிராக கூட வாக்குகளை பெற இயலா நிலை.

அவர்களுக்கு மாற்று முகம் தேவை.அரசியல் ஆசை,முதல்வர் பதவிமேல் ஆசை உள்ள ரஜினி சரியாவார்.
ஆனால் ரஜினி பாஜகவில் நேரடியாக சேர்ந்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள்.ஆனால் அவர் தேர்தலில் விஜயகாந்த் நிலையடைவார்.

அல்லது அடுத்த கங்கை அமரன்.

காரணம் பாஜகவின் ஆன்மிக அரசியல் அப்படி .
ஆன்மிக அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்,சின் புதிய படைப்பான பாஜகவின் இரண்டாம் பாகம் 2.0  பிரமாண்டமான தயாரிப்புதான் ரஜினி கட்சி .
திரைக்கு வரும் இரண்டாம் பாகங்கள் அனைத்துமே  வெற்றி பெற்றுவதில்லை.

இவ்வளவு நாள் ரஜினி சொல்லாத கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பு (மட்டும்தான்)இப்போது  சொல்ல காரணங்கள் மூன்று.

1.பாஜக தான் தமிழகத்தில்  வளர்வது(முஸ்லீம் லீக் அளவாக மட்டுமே இருக்கும்) கானல் நீர் என்ற உண்மையை உணர்ந்ததது.
நேரடியாக இணையாமல் தனிக்கட்சி ஆரம்பித்து செல்வாக்குடன் சென்று தமிழகத்தில்  ஆன்மிக அரசியல் செய்வது . அதாவதுகாவியாக்குவது.

2.காலா ,2.0 சந்தைப்படுத்தல்.

3. மற்றோரு ரசிகக் கூட்டமான  அதிமுக குழப்பங்களில் ஆதாயம் அடைவது.
==========================================================================================
இணைய கலாய்ப்புகள் 
ஆன்மீக அரசியலுன்னா என்னா? 1)நாட்டுக்கு பிரட்சினை வந்தா முதல்வர் கோயிலில் தியானம் இருந்து தீர்ப்பார் 2)இயற்கை பேரிடர் வந்தால் மக்கள் இலவசமா இமயமலைக்கு பிரார்த்தனைக்கு அனுப்பப்படுவர் 3)ராகுகாலத்தில் மக்கள் வெளிவரக்கூடாது 4) அரசு அலுவலகங்கள் நல்ல நேரம் பார்த்தே திறக்கப்படும்

 அமைச்சரவை பட்டியல்

குடும்ப நலத்துறை - தனுஷ்

கலாச்சாரத் துறை - ஐய்ஸ்வர்ய்யா தனுஷ்.

பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை - அனிருத்.

வீட்டு வாடகை மற்றும் பள்ளிக் கல்வி - லதா ரஜினிகாந்த்.

😷😷😷




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...